எப்போதும் போல அவளை அணைத்து பிடிக்க முயன்றவனிடம் தள்ளிப் போய் படுங்க, எனக்கு இன்னைக்கு ரொம்ப டிஸ்டர்பன்ஸா இருக்கு”, என்று சொன்னாள்.
“ஏன் எதுவும் பண்ணுதா”, என்றான் .
“அது வேற ஒன்னும் இல்ல, டயர்ட்னஸ் இது அப்படித்தான்”, என்று சொல்லிவிட்டு அமைதியாக படுத்திருந்தாள்.
அவனும் ‘ஏதோ கோவத்துல இருக்கா, இப்போதைக்கு நம்மிடம் எதுவும் சொல்ல மாட்டா’, என்று யோசித்துக் கொண்டிருந்தவன் அப்படியே தூக்கத்திற்கு சென்றான்.
அவன் தூங்கும் வரை காத்திருந்தவள், மெதுவாக எழுந்து நைட் லேம் வெளிச்சத்திலேயே மாடி ஹாலுக்கு வந்து சேர்ந்தாள்,
‘பக்கத்துலேயே கைய போட்டு படுத்தா, நான் எப்படி எந்திரிச்சு வர்றது, அப்படி நான் எந்திரிச்சா நீங்க கண்டுபிடிச்சிட மாட்டீங்களா’ என்று யோசித்தவள்.,
அதன்படியே கீழே மெதுவாக இறங்கி வந்து கிச்சனுக்கு சென்று ஐஸ்கிரீமை எடுத்துக் கொண்டு வந்தாள்.
பின்பு மாடி படிக்கு அருகில் உள்ள சிறிய இடத்தில் உள்ள லைட்டை மட்டும் போட்டுக் கொண்டு அங்கேயே அமர்ந்து விட்டாள்.
ஐஸ்கிரீம் டப்பாவை மெதுவாகத் திறந்தபடி, ‘நான் எழுந்து வந்ததை கண்டுபிடிச்சி இருப்பாங்களா, ஒருவேளை கண்டுபிடிக்கலைன்னா’ என்று யோசித்தாள்.
‘கண்டுபிடிக்கலைனா, நான் ஐஸ்கிரீம் ஃபுல்லா சாப்பிட வேண்டியது தான், பேபிக்கு எதுவும் செய்யுமோ’, என்று யோசித்தவள்,
‘இல்ல இல்ல ஒன்னும் செய்யாது, நான் தானே சாப்பிட போறேன்’, என்று யோசித்துக் கொண்டவள், இவள் ‘லைட் போட்டு வந்ததை யாரும் கண்டுபிடித்து இருப்பார்களா’ என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது,
மாடிப்படியின் பக்கமும் மாடி ஹால் லைட்டும் எரிந்து கொண்டு தான் இருந்தது,
கிச்சனில் சற்று நேரம் விளக்கு எரியவிட்டாள் பின்பு ஆஃப் பண்ணிவிட்டு ஐஸ்கிரீமை மட்டும் எடுத்துக்கொண்டு வெளியே வந்து அமர்ந்து விட்டாள்.
‘இந்த பக்கி என்ன ஐஸ்கிரீம் வாங்கி இருக்குன்னு தெரியலையே’ என்று பார்த்து விட்டு கடவுளிடம் பிரார்த்தனையும் வைத்தாள்,
“கடவுளே பேபிக்கு எதுவும் செய்யக்கூடாது, நான் சாப்பிட போறேன், ரொம்ப சாப்பிட மாட்டேன் கொஞ்சமா சாப்பிடும் டைம் ல யாரையாவது எழுப்பி வெளியே அனுப்பிவிடு”, என்று சொல்லிவிட்டு “முக்கியமா சிவாவை எழுப்பி விட்றாத, அவன் எந்திரிச்சு வந்தா சாப்பிடு சாப்பிடு ன்னு உட்கார்ந்து இருப்பான்”, என்று நினைத்தவள் மெதுவாக இரண்டு வாய் எடுத்து சாப்பிட்டிருந்தாள்,
அதன் ருசி அவளை இழுக்க மேலும் இரண்டு வாய் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே, யாரும் வருகிறார்களா என்று பார்த்துக் கொண்டாள்.
ஆனால் அதன் ருசி அவளை இழுக்க, மெய்மறந்து இன்னும் ஒரு ஐந்து நிமிடம் மெது மெதுவாக ஒவ்வொரு வாயாக எடுத்து ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் அதே நேரத்தில்,
மாடியில் தற்செயலாக திரும்பிப் படுத்தவன், அவளைக் காணாது ‘என்ன ஆச்சு கோச்சுட்டு எந்திரிச்சு போயிட்டாளா’ என்று நினைத்தவன் ‘வெளியே ஹாலில் இருக்காளோ’ என்று யோசனையோடு வெளியே வந்து பார்க்க,
மாடி ஹாலில் லைட் எரிந்தது, ‘எங்க போயிருப்பா’ என்று மொட்டை மாடி பகுதிக்கு போக சென்றவன், அங்கு கதவு பூட்டி இருப்பதை பார்த்தவன்,
‘எப்படி போனா, எங்க போனா’ என்று யோசனையோடு மெதுவாக கீழ இறங்கி வந்தான்.
அவளோ அமைதியாக அமர்ந்து ரசித்து ஐஸ்கிரீமை சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்த்தவன்,
வேகமாக வந்து “என்ன செஞ்சுகிட்டு இருக்க”, என்று அவளிடம் இருந்து ஐஸ்கிரீமை வாங்க முற்படும் போது,
இவளோ அவனிடமிருந்து ஐஸ்கிரீமை பறித்து தன்னோடு சேர்த்து வைத்துக் கொண்டாள்.
“இப்ப என்ன போய் படுத்து தூங்குங்க, காலையில ஊருக்கு போகனும் இல்ல”, என்றாள்.
“நீ என்ன பண்ணிட்டு இருக்கன்னு தெரியுதா “,என்று சத்தமாக கேட்கவும்,
“உடம்பு முடியாம ஆயிடுச்சுன்னா, என்ன பண்ணுவ”, என்று அவன் கேட்கும் போதே.,
அவளோ “உங்க வேலை எது உண்டோ அத பாத்துக்கோங்க, என் வேலையை எனக்கு பார்க்க தெரியும்”, என்று சொன்னாள்.
டென்ஷன் ஆனவன் “ஐஸ்கிரீம் எப்படி வந்துச்சு” என்று சத்தமாக கேட்டான் .
அந்த சத்தத்திலேயே வேகமாக வெளியே வந்த சரணின் அம்மாவோ, “என்னடா பண்ணிட்டு இருக்க, இங்க இந்த நேரத்துல”, என்று கேட்டார் .
“எனக்கு முன்னாடியே இவ வந்து உக்காந்து இருக்கா, உங்களுக்கு தெரியலையா, கீழே எந்த சத்தமும் கேட்கலையா, யாரும் வந்தா கூட தெரியாத அளவுக்கு தூங்குறீங்க”, என்று சொன்னான்.
“ஐயோ நீங்க யாராவது தண்ணி குடிக்க வந்து இருப்பீங்கன்னு நினைச்சேன் டா, எனக்கு எப்படி தெரியும் இவ வந்தா ன்னு”, என்று சொல்லி விட்டு, “மது இங்க என்ன பண்ற”, என்று கேட்டார் .
“ஐஸ்கிரீம் சாப்பிட”, என்று சரண் சொன்னான்.
“இந்த நேரத்திலயா ஐஸ்கிரீம் எது”, என்று கேட்டார் .
சத்தமே இல்லாமல் அடுத்த வாயை வைக்கப் போக, வேகமாக சரண் வந்து அவள் கையைப் பிடித்து, “மது ஐஸ்கிரீம் சாப்பிடக்கூடாது, சளி பிடிச்சிருச்சுன்னா டேப்லெட் எதுவும் போட முடியாது, புரிஞ்சுக்கோ., உன் ஹெல்த்த நீயே ஸ்பாயில் பண்ணாத”, என்று சத்தம் போட்டவன் அவளிடம் இருந்து வலுக்கட்டாயமாக ஐஸ்கிரீமை பறிக்க முற்பட்டான்.
அவளோ “எனக்கு புடிச்சிருக்கு ,நான் சாப்பிடுறேன். உங்களுக்கு என்ன”, என்று சொல்லிவிட்டு அவன் கையில் இருந்து புடுங்க முற்பட்டாள்.
“அம்மா ஐஸ்கிரீம் ஏது”, என்று கேட்டான்.
“ஏதுடா நான் வாங்கலையே”, என்று சொல்ல, ‘இவ ஆர்டர் போட்டு வாங்கி இருப்பாளோ’ என்று யோசித்தவன் அவள் செல்லை தேட அவளோ சத்தமே இல்லாமல் அமைதியாக இருந்திருந்தாள்.
“விளையாடாத மது”, என்று அவன் சத்தமாக பேசிக் கொண்டிருக்கும் போதே,
திடீர் யோசனையாக “சிவாவ வாங்கிட்டு வரச் சொன்னியா”, என்று சத்தம் போட்டான்.
“சிவாவை எழுப்புறேன்”, என்றான்.
“அவன எதுக்கு எழுப்ப போறீங்க”, என்று அவன் கை பிடித்து நிறுத்தியவள்.,
“ஐஸ்கிரீம் கேட்டது நான், அவனை எதுக்கு இப்ப கூப்பிடனும்”, என்று சொல்லிவிட்டு ஐஸ்கிரீம் டப்பாவை அவன் கையில் கொடுத்து விட்டு பேசாமல் மாடியை பார்த்து ஏற தொடங்கினாள்.
“ஏன்டா அவ கிட்ட எதுவும் சத்தம் போட்டியா, ஏதாவது சொன்னியா, ஏன் ஒரு மாதிரி இருக்கா”, என்று சரண் அம்மா கேட்டார்.
“எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல”, என்று சொன்னான்.
“டேய் அவ இங்க இருந்தா என்னால கண்ட்ரோல் பண்ண முடியாது பாத்துக்கோ., இவ ஐஸ்கிரீம் சாப்பிடக்கூடாதுன்னு நீ சொல்ற, அவ எல்லா சேட்டையும் பண்ணுவா”, என்று சொன்னார்.
“நான் நாளைக்கு அவளை கூட்டிட்டு போறேன் மா, ஒன்பது மாசம் ஆன பிறகு கூட்டிட்டு வர்றேன் பொறுங்க, நீங்க சொன்னீங்க ன்னு, நான் இங்க விட்டுட்டு போன இவன் இஷ்டத்துக்கு இருப்பா, கண்ட்ரோலா இருக்க மாட்டா, நான் கூட்டிட்டு போயிட்டு அப்புறமா கொண்டு வந்து விடுறேன்”, என்று சொன்னான்.
“அதே தான்,மது அம்மா கிட்ட சொல்லலாம்டா”, என்று சொன்னார்.
“மிட்நைட் சொல்லுவீங்களா, காலைல சொல்லுங்க”, என்று சொன்னான்.
“காலையில நீ சீக்கிரம் கிளம்பனுமே”, என்று கேட்டார் .
“கொஞ்சம் மெதுவா போய்க் கொள்கிறேன்”, என்று சொன்னான்.
அவள் மாடியில் ஹாலை கடக்கும் போது கையை மடக்கி வைத்து கொண்டு “யெஸ்” என்றவள்.
“மகனே விட்டுட்டா போற, இப்ப பாருடி தன்னால கூட்டிட்டு போவ”, என்று சொல்லிவிட்டு அவன் வருவதற்கு முன் மேலே பிளாஸ்க் ல் வைத்திருந்த வெண்ணீர் எடுத்து குடித்து விட்டு, “பாப்பு குட்டி சாரிடா” என்று வயிற்றில் இருக்கும் குழந்தையிடம் ஒரு சாரி கேட்டுவிட்டு அவன் வருவதற்கு முன்பே கண்ணை மூடி படுத்துக் கொண்டாள்.
அறைக்கு வந்தவன் கதவை பூட்டி விட்டு, அருகில் படுத்தவன் அவளை தன்னோடு சேர்த்து பிடித்துக் கொண்டான்.
“இப்ப எப்படி போறேன்னு பார்க்கிறேன்”, என்று சொன்னான்.
எதுவுமே சொல்லாமல் படுத்திருந்தவள் அவனிடம் பதில் எதுவும் பேசவில்லை,