சிக்கி இருப்பது தெரிந்தும்
விடுபட விரும்பாத
ஒரே இடம், அன்பு சங்கிலி
மட்டும் தான்,
முதல் வருட திருமண நாளை கொண்டாட ஊருக்கு வந்திருந்தனர்.
இப்போது அவளுக்கு மூன்று மாதம் நடந்து கொண்டிருந்தது, அதன் பிறகு இரண்டு நாள் விடுப்பு என்பதால் அங்கே இருந்து விட்டு செல்வதாக முடிவு செய்து இருந்தனர்.
இவளுக்கு மசக்கை போன்ற எந்தவித பிரச்சனையும் இல்லாமல் நன்றாகவே உணவு உட்கொண்டு கொண்டிருந்தாள்.,
அன்று தான் சிவாவோடு மதிய உணவிற்கு பிறகு அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தார்கள்.
சரண் மாடிக்கு செல்வதாக அவன் அம்மாவிடம் சொல்லி விட்டு மாடிக்கு செல்ல போனான்.
அவரோ “மது நீ கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம் இல்ல”, என்று சொன்னார்.
“தூக்கம் வரல அத்தை” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.
சரணும் அவன் அம்மாவிடம், “ரெண்டு பேரும் கதை பேச ஆரம்பித்தால் இப்பதிக்கு எந்திரிக்க மாட்டாங்க, அவன் வேற அவகிட்ட ரொம்ப நாளா கதை பேசாம இருக்கான், இப்ப உட்கார்ந்து பேசினா தான் அவனுக்கு நிம்மதியா இருக்கும், இவளுக்கும் ஊரில் உள்ள கதையை எல்லாம் கேட்டா தான் நிம்மதியா இருக்கும், ரெண்டு பேரும் பேசி முடிக்கட்டும்மா விட்டுருங்க”, என்று சொன்னவன்,
“ஏதாவது ஸ்னாக்ஸ் மாதிரி ஃப்ரூட்ஸ் எடுத்து கட் பண்ணி பக்கத்துல வச்சிட்டு போங்க, அவ சாப்பிட்டுட்டு இருப்பா”, என்று சொல்லிவிட்டு மாடிக்கு சென்று விட்டான்.
அவன் அம்மாவும் அவன் சொன்னது போலவே மாதுளம் பழத்தை உதிர்த்து ஒரு கிண்ணத்தில் போட்டு ஸ்பூன் போட்டு அவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு பக்கத்தில் வைத்து விட்டு,
“அப்பப்போ இதை எடுத்து சாப்பிட்டே உட்கார்ந்து பேசிட்டு இரு மது”, என்று சொல்லி விட்டு செல்ல போக,
“சிவாவோ, ஏன் எனக்கு எதுவும் தர மாட்டீங்களா” என்று கேட்டான்.
“நீ தானடா அந்த பிள்ளையை நீ வளர்க்க போறேன்னு சொன்ன, அப்ப ஆரோக்கியமா பெத்து தரணும்ல”, என்றார்.
“அப்ப சரி தான்” என்று சொன்னவன், “நான் வேணா ஜூஸ் போட்டுக் கொண்டு வரட்டா” என்று மதுவிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.
“நீ மீதி கதை சொல்லுடா”, என்று அவள் கதை கேட்டுக் கொண்டிருப்பதை பார்த்தவர்,
‘சரிதான் சரண் சொன்னது போல தான்’ என்று நினைத்துக் கொண்டவர் சற்று நேரம் ஓய்வு எடுப்பதற்காக அவர் அறைக்குள் சென்று விட்டார்.
இவன் நட்புக்களின் கதை அனைத்தையும் பேசிவிட்டு, “எக்ஸாம் எப்படியாவது கிளியர் பண்ணிடுவேன்னு நினைக்கிறேன், மது எனக்காக பிரேயர் பண்ணிக்கோ”, என்றான்.
“உனக்கு என்னடா, கிளியர் பண்ணிடலாம்”, என்று சொன்னாள்.
“ஆனா நான் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் மது, எனக்கு ஹெல்ப் பண்ணுவியா”, என்று கேட்டான்.
“என்ன விஷயம்”, என்றாள்.
அவனும் சுற்று முற்றும் யாரும் இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு மாடிப்படியில் பாதி தூரம் சென்று சரண் அறைக் கதவு பூட்டியிருக்கிறதா, இல்லை மாடி ஹாலில் இருக்கிறானா, என்பதை பார்த்துவிட்டு வந்தான்.
கீழே வந்தவுடன், “என்ன விஷயம் ஏன் உங்க அண்ணன் இருக்காரா இல்லையான்னு மேல வரைக்கும் போய் பாத்துட்டு வர்ற”, என்று கேட்டாள்.
“அண்ணன் தூங்க போயிட்டா பிரச்சனை இல்ல, ஒரு வேளை ஹால்ல இருந்தா ன்னு வை, நம்ம பேசுறது நல்லாவே கேட்கும், அதனால தான் போய் எட்டி பார்த்துட்டு வந்தேன்”, என்று சொன்னாள்.
“அப்படி என்னடா விஷயம்” என்று இவளும் மெதுவாக கேட்டாள்.
அவனோ, “எனக்கு ஹெல்ப் பண்ணுவியா, மாட்டியா”, என்று கேட்டான்.
அவன் மெதுவாக அவளிடம் “மது நான் நந்தினிய லவ் பண்றேன்”, என்று சொன்னான்.
அதிர்ச்சியாக அவனையே கண்ணை விழித்து பார்த்தவள் சற்று நேரம் கழித்து, இவள் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு “நந்தினி ட்ட சொல்லிட்டியா” என்று கேட்டாள் .
“அதுதான் சொல்ல முடியல, அவ கிட்ட பேசணும்னு போனா, ஒன்னு அவ உன்ன பத்தி பேசுவா, இல்லை எக்ஸாம் பத்தி பேசுவா, அதுக்கப்புறம் எப்படி அவகிட்ட போய் சொல்றது”, என்று சொன்னான்.
“கஷ்டம் தான் டா”, என்று சொன்னவள், “டேய் நல்ல யோசிச்சுகிட்டியா, நந்தினி தான”, என்று கேட்டாள்.
“எனக்கு என்னவோ புடிச்சிருக்கு மது”, என்று சொன்னான்.
“சரி இப்ப நான் என்ன பண்ணனும்”, என்று கேட்டாள்.
“ப்ளீஸ் எப்படியாவது நந்தினி கிட்ட பேசி பர்மிஷன் வாங்கேன்”, என்றான்.
“அவ கிட்ட இத பத்தி கேட்க கொஞ்சம் பயமா தான் இருக்கு, பட் உனக்காக நான் பேசுறேன்”, என்று சொன்னவள்,
மெதுவாக “டேய் சிவா நான் போய் அவகிட்ட சொல்லுற ன்னு வையேன், ஓகே சொன்னா பிரச்சனை இல்ல டா, ஒருவேளை ஓகே சொல்லாமல் வீட்ல யார்கிட்டயும் சொல்லி கொடுத்துட்டா என்னடா பண்றது”, என்று கேட்டாள்.
“வீட்ல சொல்லி கொடுத்துருவாளா”, என்று கேட்டான்.
“சில நேரம் மாட்டி கொடுத்து விடக்கூடாதுடா அதுதான் பயம்., நம்ம எல்லாத்தையும் யோசிக்கணும் இல்ல”, என்றாள்.
“ஆமா இல்ல” என்று இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
பின்பு இருவரும் ஒரு உடன்படிக்கைக்கு வந்து முடிவு செய்து கொண்டனர்.
“அவ நேத்தே வாறேன்னு சொன்னாடா, அப்புறம் தான் சொன்னா நாளைக்கு தானே உனக்கு வெட்டிங் டே, நாளைக்கு வரேன் அப்படின்னு சொல்லி இருந்தா, சோ இன்னைக்கு ஈவினிங் அவ வருவதற்கான வாய்ப்புகள் இருக்கு, வந்தானா நான் பேசுறேன், ஆனா கொஞ்சம் கொஞ்சமா தான் சொல்லுவேன், அவசரப்பட்டு முடிவுக்கு வரக்கூடாது, டக்குனு சொல்ல போக ஏதும் பிரச்சனையாகிருச்சி ன்னு வை, மறுபடியும் ரெண்டு பேரையும் உங்க அண்ணன் பஞ்சாயத்து பண்ணி நிக்க வச்சுருவாரு, ஞாபகம் வச்சுக்கோ”, என்று சொன்னாள்.
“அய்யய்யோ உன் புருஷனுக்கு இன்னும் பயப்படுறியா”, என்று கேட்டான்.
“டேய் மத்த விஷயத்துல எல்லாம் நார்மலா தான்டா இருப்பாரு, இந்த மாதிரி பஞ்சாயத்து ன்னு வந்தா, மனுஷன் டெரர் பீசா மாறிபோயிருவாரு, நோ அந்த ரிஸ்க் நான் எடுக்க மாட்டேன்”, என்று சொன்னாள்.
“அடிப்பாவி இன்னும் பயப்புடுறியா”, என்று கேட்டான்.
“இது சாதாரண பயம் இல்ல, ரொம்ப பயம் டா”, என்று சொன்னவள், “அந்த மனுஷன் கிட்ட திட்டு வாங்கி முடியாதுடா, எப்ப பாரு இதையே சொல்லிக் கம்பேர் செய்து எனக்கு திட்டு விழும், இது தேவையா”, என்று சொன்னவள்.
“கவலைப்படாதே நான் பாத்துக்குறேன் எல்லாத்தையும்” என்று சொல்லி விட்டு,
“டேய் சீரியஸா தானே சொல்ற, உண்மையிலேயே உனக்கு அவள பிடிச்சிருக்கு இல்ல”, என்று கேட்டாள்.
அவனும் “நிஜமா எனக்கு அவளை பிடிச்சிருக்கு, ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு போதுமா, அது மட்டும் இல்லாம அவ ஒரு பிரண்ட்லியான கேரக்டர், இப்ப அவளும் கவர்மெண்ட் ஜாப் போயிட்டா னா, ரெண்டு பேரும் ஏர்ன் பண்ணா ஃபேமிலி சூப்பரா இருக்கும்ல”, என்று சொன்னான்.
“டேய் நீ நல்ல பிளான் பண்ற டா, ஆனா பாரேன் உங்க அண்ணன் சரியான பேக்கு, ஒரு வேலை பார்க்கிற பொண்ண பாத்து கல்யாணம் பண்ணி இருக்கலாம்ல, படிக்கிற படிப்பையும் கெடுத்து, கல்யாணம் பண்ணிட்டு உட்கார்ந்துட்டு இருக்காரு”, என்று சொன்னாள்.
“ஹலோ உங்க பேமிலிக்கு அவன் ஒருத்தன் சம்பாதிக்குறதே போதும், நாங்க எல்லாம் சாதாரண கவர்மெண்ட் ஜாப் போகிறோம், எங்களுக்கு நாங்க ரெண்டு பேரும் சம்பாதிச்சா தான் செட் ஆகும்”, என்று சொன்னான்.
“அடேய் இப்படி போகுதா விஷயம்”, என்று அவனை கிண்டல் அடித்துக் கொண்டிருந்தவள், “ரொம்ப தாண்டா யோசிக்கிற நீனு”, என்று சொன்னபடி மாதுளம் பழம் வைத்திருந்த கிண்ணத்தை எடுத்து பழத்தை சாப்பிட தொடங்கினாள்,