அவன் கோர்ட்டுக்கு செல்லும் போது, எப்படியும் வேலைக்கு என்று வருபவர்களும் கோர்ட்டுக்கு சென்று விடுவார்கள் என்று தெரியும், அதனால் அவளுக்கு வீட்டிற்கு வேலைக்கு ஆள் பார்க்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
அதை பின்னர் யோசிப்போம் , என்ற நிலையில் அன்று கிளம்பி சென்றவனுக்கு எந்த டாக்டரை பார்க்கலாம் என்று யோசனையோடு அங்கிருந்த தெரிந்த ஒருவரிடம் கேட்டு டாக்டர் இடம் பேசி இன்னும் இரண்டு நாளில் அவரை சென்று பார்ப்பதற்கான நாளாக அனுமதி வாங்கிக் கொண்டான்.
அன்று மாலை அவளிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, “வீட்டுக்கு சொன்னியா” என்று கேட்டான்.
“இல்ல சொல்லல” என்று சொன்னாள்.
“இப்போ எதுவும் சொல்லாத, முதலில் நம்ம டாக்டர் பார்த்துப்போம், டாக்டர் பார்த்ததுக்கு அப்புறம் சொல்லிக்கலாம், சரியா”, என்று சொல்ல தலையாட்டி கொண்டவள், எப்போதும் போல வீட்டிற்குள் சுற்றி வந்தாள்.
இருவருக்கும் எப்போதும் போல நேரம் சென்றாலும், வேலைகள் இருந்தாலும், இருவரின் மனதிலும் கற்பனைகள் இருக்கத்தான் செய்தது.
இவளுக்கு எந்த விதமான மசக்கையின் அறிகுறியும் இல்லாமல் இருந்தது.
இரண்டு நாள் கழித்து மருத்துவரிடம் சென்ற போது இவளுக்கு தான் அத்தனை சந்தேகங்கள் இருந்தது.
அவள் கேட்க கேட்க இவனோ அவளையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
அவர்கள் கர்ப்பத்தை உறுதி செய்தவுடன், “டாக்டர் எனக்கு எந்த சிம்டம்ஸும் தெரியல, அதனால பேபி ஏதும் பாதிக்குமா, எதுக்காக அப்படி எந்த சிம்டம்ஸ்மே இல்லாம இருக்கு, எல்லாருக்கும் என்னவோ எல்லாம் சாப்பிடணும் போல இருக்குனு சொல்லுவாங்களாம், சிலர் மயக்கம் வருதுன்னு சொல்லுவாங்க, தூக்கம் வருதும்பாங்களாம், சிலர் வாமீட் பண்ணுவாங்களாம், சிலர் வித்தியாசமா சாப்பிடணும்னு ஆசைப்படுவாங்களாம், எனக்கு ஏன் எதுவும் இல்லை”, என்று கேட்டாள்.
மருத்துவரோ சிரித்துக் கொண்டே “இப்பதானே ஆரம்பிச்சிருக்கு, கரெக்ட்டா 40 நாள் கூட ஆகலை, அதனால கூட சிம்டம்ஸ் எதுவும் தெரியாம இருக்கலாம், வெயிட் பண்ணி பார்ப்போம், அப்படியே சிம்டம்ஸ் இல்லாட்டி கூட சந்தோஷப்படுங்க, நீங்க நார்மலா இருக்கலாம், நல்ல சாப்பிடலாம், நல்ல ரெஸ்ட் எடுக்கலாம், ஆனா இந்த மாதிரி சிம்டம்ஸ் எல்லாம் இருக்கிறவங்களுக்கு, வாமிட் பண்ணினா ஒழுங்கா சாப்பிட முடியாது, தூக்கம் வந்துச்சுன்னா எப்பவும் தூங்கிட்டே தான் இருப்பாங்க, அப்பவும் ஒழுங்கான ஃபுட் எடுத்துக்க முடியாது, சில புட் சாப்பிடணும் போல அதிகமான ஆசை இருந்துச்சுன்னா, அந்த மாதிரி ஃபுட் மட்டும் தான் சாப்பிடுவாங்க, மத்த ஃபுட் இறங்காது, உங்களுக்கு அந்த மாதிரி இல்ல, அப்படி ன்னு நீங்க ஹாப்பியா இருங்க, வித்தியாசமா எதுவும் சாப்பிடணும் தோணுச்சுன்னா, சொல்லுங்க, ஆனா ஜங்க் ஃபுட் எதுவும் சாப்பிடாதீங்க”, என்று சொன்னார்.
எப்படி எப்படி சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தவர், அத்தோடு அவளுக்கான சத்து மாத்திரைகளை மட்டும் வழங்கினார்.
‘இன்னும் ஒரு மாதம் சென்ற பிறகு தான் மற்ற மருத்துவ பரிசோதனைகள் எல்லாம் செய்து மருந்துகள் மாற்ற வேண்டுமா, என்று பார்க்க வேண்டும், அதற்கு பிறகு ரத்த பரிசோதனை எல்லாம் செய்த பிறகு தான் பார்க்க முடியும். இப்போது எதுவும் தேவையில்லை இன்னும் ஒரு மாதத்திற்கு இந்த சத்தான மாத்திரைகளையும் மருந்துகளையும் மட்டும் உட்கொண்டு நல்ல உணவை எடுத்துக் கொண்டு வந்தால் போதும்’ என்று சொன்னவர், இருவரையும் வாழ்த்தி வழி அனுப்பினார்.
வீட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு ஸ்வீட் வாங்கி கொடுத்தவன்,
அவர்களிடம் “உங்களால் இடையில் வந்து இவளுக்கு ஜூஸ் எதுவும் செய்து கொடுக்க முடியுமா, இல்லையென்றால் அதற்கு என்று ஒரு ஆள் ஏற்பாடு செய்ய வேண்டும், நீங்களே ஆள் பாருங்கள்”, என்று சொன்னான்.
சமையல் உதவி செய்யும் பெண்மணி தான், “நான் வந்து பார்த்துக்கொள்கிறேன் ஐயா, இடையில் ஒரு நேரம் வந்து ஜூஸ் எடுத்துக் கொடுத்து விட்டு, அதற்கு இடையில் நேரம் இருந்தால் சத்தான உணவாக ஏதாவது மாலை வேலைக்கு அவர்களுக்கு செய்து கொடுக்கிறேன்”, என்று சொல்லி உணவு முறைகளை பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னார்.
அவனும் சரி என சம்மதித்தான்,
அது மட்டுமல்லாமல் அந்த பெண்மணியிடம், “உங்களால் முடியவில்லை என்றால் உடனே சொல்லி விடுங்கள், அதோடு அப்படி முடியவில்லை என்று உங்களுக்கு தோணும் போது, ஒரு ஆளை பார்த்து விடுங்கள்”, என்று சொன்னான்.
அவர்களும் “சரி ஐயா” என்று சொல்லிவிட்டு விடை பெற்றனர்.
அதன் பிறகு இவர்கள் வீட்டிற்கு அழைத்து சொன்னான் சரண்,
இருவீட்டினரும் அவன் சொல்லிய சற்று நேரத்தில் எல்லாம் போன் செய்து அவளை விசாரிக்க, அவளுக்கு தான் அவர்களிடம் பேசுவதற்கு கூச்சமாக இருந்தது.
ஆனாலும் அனைவரிடமும் நல்லபடியாக பேசி விட்டே அழைப்பை துண்டித்தவள், அவன் வேலை முடித்து வந்து ஹாலில் உள்ள சோபாவில் அமர, அங்கு சென்று இவளும் அமர்ந்தவள், அவன் மடியில் தலை சாய்த்து, அவன் கையை எடுத்து தன் கன்னத்தின் அடியில் வைத்து அழுத்திக் கொண்டவள், அக் கையை அத்தனை இறுக்கமாக பிடித்திருந்தாள்.
அவனும் ‘இவள் என்னை யோசிக்கிறாள் என்று தெரியவில்லையே, எதைப் பற்றி பேச போகிறாளோ’ என்று யோசனையோடு, ‘ஆனால் ஏதோ கேட்க தயங்கி வந்து நிற்கிறாள்’ என்று மட்டுமே அவனுக்கு புரிந்தது.
“என்னாச்சு மது, ஏன்” என்று கேட்டான்.
அவளோ ஒன்றுமில்லை என்று தலையாட்டியவள், பின்பு மெதுவாக “கொஞ்சம் பயமாவே இருக்கு”, என்று சொன்னாள்.
அவனும் அவள் தலையை கோதி கொடுத்தபடி, “அதெல்லாம் ஒன்னும் இல்ல, எல்லாம் நார்மலா இருக்கும், பயப்படாத நீ எதையும் பத்தி யோசிக்காமல் இரு, ஒழுங்கா ஜூஸ் குடி, வேற எதுவும் வேணும்னா சொல்லு, நான் வாங்கி தரேன்”, என்று சொன்னான்.
“இல்ல இப்போதைக்கு எதுவும் வேண்டாம்”, என்று சாதாரணமாக சொல்லிக் கொண்டிருந்தாள்.
அதிலிருந்து இரண்டு நாட்களுக்குள் இரு வீட்டினரும் வந்து அவளைப் பார்த்துவிட்டு, இரண்டு நாள் தங்கி விட்டே சென்றனர்.
சிவா தான் “மது இனிமேல் உன்னை எங்கேயும் கூட்டிட்டு போக மாட்டேன், நீ இவனோடவே போ, இவன் கூட சுத்திக்கோ”, என்று சொல்லி விட்டு,
“பாப்பாவோ ,பையனோ, எனக்கு குடுத்தறனும், இனிமேல் நாங்க ரெண்டு பேரும் தான் ஃபிரண்ட்ஸ், நாங்க ரெண்டு பேரு தான் ஊர் சுத்துவோம்”, என்று சொன்னான்.
கையில் கிடைத்த பொருளைத் தூக்கி அவன் மீது வீச, அவனும் கேட்ச் பிடித்த படி, “ஹலோ நீ ப்ரண்ட் தான், ஆனா இப்போ நீ என்கூட வெளியே எல்லாம் சுத்த முடியாது சரிதானே, அதனால பையனோ பெண்ணு பெற்று கைல கொடுத்துடுங்க, எல்லாத்துக்குமே நான் பாத்துக்குவேன்”, என்று சொன்னான்.
“நல்ல யோசிச்சு சொல்லு சிவா”, என்று சிவாவை பார்த்து சரண் சொன்னான்.
சிவாவும் “ஆமா இதில் யோசிப்பதற்கு என்ன இருக்கு”, என்று கேட்டான்.
அவனையே பார்த்துக் கொண்டிருந்த மதுவோ, “நெஜமா தானே சொல்ற, இத நான் நம்ப முடியாது, நீ எழுதிக் கொடு”, என்று கேட்டாள்.
“ஓய் நீ என்ன, உன் புருஷனை மாதிரி ஆதாரம் கேட்குற, அதெல்லாம் தர முடியாது, நான் சொல்றேன் இல்ல, நான் வளர்த்துப்பேன்”, என்று சொன்னான்.
அவனை காலை வரும் விதமாக மதுவும், “முதல்ல வேலைக்கு போடா, அப்புறமா பிள்ளையை வளர்க்கிறத பத்தி பார்க்கலாம், இவர் வளர்ப்பாராம், நீயே இன்னும் எங்க அத்தை மாமா சம்பாத்தியத்தில் தான் உட்கார்ந்து சாப்பிட்டு இருக்க, முதல்ல வேலைக்கு போ, அப்புறம் பிள்ளை வளர்க்கலாம்”, என்று சொன்னாள்.
“நீ பிள்ளைய தா, அதுக்கப்புறம் நான் வேலைக்கு போறேன், எனக்கு அந்த குட்டி பிள்ளை என்கிட்ட வந்ததுக்கப்புறம் தான் எனக்கு வேலை கிடைக்கும் ன்னு தோணுது”, என்று சொல்ல,
சரணும் “சரிடா பொறக்கட்டும், பொறந்ததுக்கப்புறம் தர்றேன்”, என்று சொன்னான்.
அங்கு ஒரு குழந்தையின் வரவை ஆவலுடன் எதிர்நோக்கும் குடும்பத்தினரின் அன்பு தான் அதிகரித்திருந்தது.
வாழ்க்கையின் அழகு என்பது.. நீ எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறாய் என்பதில் இல்லை.. உன்னால் மற்றவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதில் இருக்கிறது.