அவனும் சிரித்தபடி “ப்ரொபோஸ் பண்ணி இருந்தா என்ன பண்ணி இருப்ப, ஒன்னு பிரச்சினை பண்ணி இருப்ப,  இல்லாட்டி ரெண்டு வீட்டுக்கு இடையிலும் சண்டை இழுத்து விட்டு இருப்ப, அதைத்தானே செஞ்சிருப்பே”, என்று கேட்டான்.

     “நான் சண்டை இழுக்காத அளவுக்கு, நோ சொல்லாத அளவுக்கு என்கிட்ட சொல்லி இருக்கணும்”, என்றாள்.

     “எப்படி சொல்லணும்” என்று கேட்டான்.

       “தெரியலையே, அப்பவே சொல்லி இருந்தீங்கன்னா, கொஞ்ச நாள் லவ் பண்ணி இருக்கலாம் இல்ல”, என்று சொன்னாள்.

     “நீ கண்டிப்பா லவ் பண்ணி இருக்க மாட்ட, நீ கண்டிப்பா சம்மதிச்சிருக்கவும் மாட்ட, அப்புறம் எப்படி லவ் பண்றது”, என்று கேட்டான்.

“ஏன் இப்போ கூட நான் கல்யாணத்துக்கு சம்மதிக்கவே இல்ல, ஆனா என்னை சம்மதிக்க வச்சீங்க இல்ல,  அப்புறம் கல்யாணம் பண்ணி வச்சாச்சி, இப்போ உங்க மேல இப்படி சாய்ந்து உட்கார்ந்து பேசுற அளவுக்கு கொண்டு வந்து இருக்கீங்க இல்ல, இத அப்பவே செஞ்சி இருக்கலாம் இல்ல”, என்று கேட்டாள்.

     “அம்மாடியோ கல்யாணத்துக்கு முன்னாடி உன்ன மட்டும் நான் ஹக் பண்ணி இருந்தேன், ஒன்னு கொலை கேஸ்ல நீ உள்ள போய் இருந்திருப்ப, இல்ல னா, என்னை வேற கேஸ்ல உள்ள தூக்கி வைத்திருப்ப”, என்றான்.

     “புத்தி போறத பாரு, எப்ப பார்த்தாலும் ரூல்ஸ் லா ன்னு சொல்லிட்டு”, என்று சொன்னவள்  சிரித்தபடி அவனே பார்த்துக் கொண்டே

   “ஆமா நீங்க லவ் பண்ணது யாருக்கெல்லாம் தெரியும்” என்று கேட்டாள்.

“யாருக்கும் தெரியாது” என்று சொன்னான்.

    அவளோ, “அப்படின்னு நீங்க நெனச்சிட்டு இருக்கீங்க, உங்க வீட்ல அத்தனை பேருக்கும் தெரிஞ்சிருக்கு”, என்று சொன்னாள்.

     “இது எப்ப தெரியும் உனக்கு”, என்று கேட்டான்.

         “கொஞ்ச நாளைக்கு முன்னாடி தெரியும், எனக்கு  தெரியும் ன்னு வேற யாருக்கும் தெரியாது”, என்றாள்.

   “அப்ப எங்க அம்மா தெரிஞ்சு தான் உன்னை கேட்கணும் ன்னு சொன்னாங்களா”, என்று கேட்டான்.

    சிரித்துக் கொண்டே அவனை பார்த்துக் கொண்டிருந்தவள், “ஆனாலும் லவ் வந்தால் பைத்தியம் ஆயிடுவாங்க இல்ல, நீங்களும் அப்படித்தான் ஜட்ஜா  இருந்தாலும் ஊருக்குத்தான், வீட்ல லூசு குட்டி தானே நீங்க “, என்றாள்.

     “யாரைப் பார்த்து லூசுன்னு சொல்லுற”, என்று கேட்டான்.

    “உங்களை தான், அப்புறம் எதுக்கு பேப்பர்ல புக்குல எல்லாம் மது மது ன்னு எழுதி வச்சீங்களாம்”, என்றாள்.

        “ஐயோ இது எப்போ பண்ணுனேன்”, என்று கேட்டான்.

     “இதுகூட தெரியாத அளவுக்கு எழுதி வச்சிருக்கீங்க, அதுதான் அத்தை பார்த்து இருக்காங்க, அத்தை போய் கல்யாணத்துக்கு கேட்கலாமா அப்படின்னு பேச ஆரம்பிக்கும் போதே, மாமாவும் சொல்லி இருக்காங்க, நானும் ஒரு நாள் அவன் பேப்பர்ல மதுன்னு எழுதி இருந்ததை பார்த்தேன் ன்னு , இது போதுமா”,  என்று சொல்லி சிரித்துக் கொண்டிருந்தவளை தன்னோடு சேர்த்து பிடித்துக் கொண்டவன்,

     “நான் யாருக்கும் தெரியாது நினைச்சேன் மது”, என்று சொன்னவன், “உங்க வீட்டுக்கு தெரியுமா”, என்று கேட்டான்.

    “கொஞ்ச நாளைக்கு முன்னாடி ரீசண்டா தான் எங்க அம்மாவுக்கும் தெரியும் போல, எங்க அம்மாக்கு தெரிஞ்சுச்சுன்னா கண்டிப்பா எங்க அம்மா, எங்க அப்பா கிட்ட சொல்லி இருப்பாங்க”, என்று சொன்னாள்.

      “உனக்கு எப்படி தெரியும்” என்று கேட்டாள்.

    “எனக்கு எப்படியோ தெரியும்,ஆனா எனக்கு தெரியும் என்கிறது வீட்டில் உள்ள யாருக்கும் தெரியாது, சிவா உட்பட”, என்று சொல்லி அவனோடு சிரித்து பேசிக்கொண்டே இருந்தாள்.

     “நீங்க மட்டும் என்கிட்ட சொல்ற விதமா சொல்லி இருந்தீங்கன்னா, கொஞ்ச நாள் ஜாலியா லவ் பண்ணிட்டு இருந்து இருக்கலாம், இப்போ இப்படி உட்கார்ந்து பேசுறத, அப்போ யாருக்கும் தெரியாம உட்கார்ந்து பேசி இருக்கலாம்”, என்று சொன்னாள்,

    “நல்லா இருந்திருக்கும் இல்ல” என்று இவன் கேட்டான்.

இவளோ அவனை பார்த்தபடியே சிரித்தவள், “நல்லா தான் இருந்திருக்கும், ஆனா நீங்க தான் சொல்லலையே, மிஸ் பண்ணிட்டீங்க, என்ன பண்ண, இப்ப வேணா ஒன்னு பண்ணலாமா, நான் எங்க அம்மா வீட்டுக்கு போய்டுறேன், ஒரு மாசம் அம்மா வீட்ல இருக்கேன்,  நீங்களும் ஒரு பத்து நாள் லீவ் போடுங்க, யாருக்கும் தெரியாம ரகசியமா நாம கதை பேசலாம்”, என்று சொன்னாள்.

    “அதுக்கு ஏன் அம்மா வீட்டுக்கு போகணும், இந்த ரூம்லயே இருக்கலாம், இங்க இருந்து இப்படி கதை பேசலாம்”, என்று சொல்லி அவளை கிண்டல் செய்து கொண்டிருந்தவன்,  அதன் பிறகு அவளோடு காதல் சொல்லியிருந்தால் என்னவெல்லாம் பேசி இருப்பான் என்று சொல்ல, பதிலுக்கு அவளும் பேசி சிரித்துக் கொண்டிருந்தனர்.

அதன் பிறகு தங்கள் அறைக்கு சென்றவர்கள் அதன் பிறகான நேரத்தை அவர்களுக்கானதாக மாற்றிக் கொண்டனர்.

   அவர்கள் இருப்பிடத்திற்கு சென்ற பிறகும் இருவருக்குமான புரிதலும், நெருக்கமும் அதிகரித்தது போல தான் தோன்றியது.

இப்பொழுது எல்லாம் மது இவனோடு சாதாரணமாக பேசினாலும், அவளை அவனால் புரிந்து கொள்ள முடிந்த அளவுக்கு அவளும் அவனை புரிந்து கொள்ள தொடங்கி இருந்தாள்.

இருவருக்குமான வாழ்க்கை மிகவும் சந்தோஷத்தையும் நிம்மதியும் கொடுக்கும் விதமாக மாறி இருப்பதாக இருவரும் உணர்ந்தனர். சில நேரங்களில் இருவருக்குமான வாக்குவாதங்களும் இருக்கத்தான் செய்யும்., ஒருவர் கோபப்பட்டாலும் மற்றவர் விட்டுக் கொடுக்கும் கலையை கற்று இருந்தனர்., நிச்சயமாக அதில் மட்டும் இருவரும் போட்டி போடவில்லை, ஒருவர் கோபமாக இருந்தால் ஒருவர் இறங்கி செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர்.

   வீட்டில் உள்ளவர்களுக்கும் அவர்கள் இருவரும் நல்லபடியாக இருப்பது சந்தோஷத்தையே கொடுத்தது,

     இவள் தான் அவனிடம் எப்போதும் போல சிவா உடன் சேர்ந்து எதையாவது செய்து விட்டு பஞ்சாயத்திற்கு நிற்பது பழையபடி வழக்கமாக்கி வைத்திருந்தாள். போனில் இவள் ஏதாவது சொல்ல, அவன் ஏதாவது செய்ய, அந்த விஷயம் இவனுக்கு தெரிய வர, பின்பு இவள் தான் அதை செய்ய வைத்தால் என்று தெரிந்த பிறகு, இவளும் அவன் முன் திட்டு வாங்குவதும் சகஜமாக தான் இருந்தது.

    ஆனால் முன்பெல்லாம் பயந்தவள், இப்போதெல்லாம் கேட்டால், “ஆமா பண்ணுனேன், இப்ப என்ன” என்று சொல்லி விட்டு போய்க்கொண்டே இருந்தாள்.

    “நான் எதுக்கு சொல்றேன்னு புரியுதா, இல்லையா”, என்று இவன் கேட்டான் .

   “வயசு பசங்க அப்படித்தான் இருப்பாங்க, வயசானவங்க போங்க, போய் வேலையை பார்த்துட்டு இருங்க”, என்று இவனை வயதானவர் டிக்கெட்டில் சேர்க்க முயற்சி செய்தாள்.

    அவனும் “ஹலோ மேடம் எனக்கு 30 வயசு கூட இன்னும் பிறக்கலை”, என்றான்.

     “அதுக்கு என்ன பண்ண முடியும், அந்த பையனுக்கு 23 வயசு தான் ஆகுது, உங்களுக்கு 29 வயசு, நீங்க  பொறுப்பான வேலைல வந்து இருக்கீங்க, அவன் சின்ன பையன்,  சின்ன பையனை எல்லாம் அப்படி  சொல்லிக்கிட்டே இருக்க கூடாது”, என்று சிவாவிற்காக பேசினாள்.

    “ஓஹோ அப்ப மேடம் நீங்க என்ன சின்ன பொண்ணா”, என்று கேட்டான்.

        “இல்லையா பின்ன, வயசான நீங்க ஏமாத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டிங்களாகும்”, என்று சொல்லி அவனை கலாய்த்து பிரச்சனையை திசை மாற்றி விடுவாள்.

நினைவுகளை சேகரியுங்கள் பிரச்சனைகளையும் மனக்கவலைகளையும் சேர்க்காதீர்கள்..
அன்பை சேகரியுங்கள் ஆணவத்தை சேர்க்காதீர்கள்.. இயல்வதை சேகரியுங்கள் இயலாமையை சேர்க்காதீர்கள்..
முயல்வதை சேகரியுங்கள் முயலாமையை சேர்க்காதீர்கள்..
பாசத்தை சேகரியுங்கள் பகைமையை சேர்க்காதீர்கள்.!