இவ்ளோ அவனைப் பார்த்து ஒரு பார்வையை வித்தியாசமாக வீசிவிட்டு, சிவாவிடம் திரும்பி “டேய் உங்க அண்ணன் பேசுறார் ன்னு நம்பாதடா, நீ சின்ன பையனாவே இருக்குற ன்னு அவருக்கு ஒரே பொறாமையா இருக்கு, அதனால இப்ப நீ குண்டாயிட்ட தொப்பெல்லாம் போட்டுச்சின்னா, அவருக்கு அண்ணன் மாதிரி ஆயிருவேன்னு நினைக்கிறாரு, அதனால கேர்ஃபுல்லா இரு, அண்ணன் சாப்பிட சொல்றாரு அப்படின்னு சொல்லி எல்லாம் சாப்பிட்றாத, அதே மாதிரி உங்க அம்மா அப்பா சொல்றாங்க ன்னு , நம்பிறாதே, காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு, சோ என்ன பண்ணுவாங்க புள்ள குண்டா இருந்தாலும், நீ நல்லா தான்டா இருக்கேன்னு சொல்லுவாங்க, ஒல்லியா இருந்தாலும் அழகா தான் டா இருக்கேம்பாங்க, படிச்சாலும் ஓகே ம்பாங்க, படிக்காட்டிலும் ஓகே ம்பாங்கா., வேலைக்கு போனாலும் ஓகே ம்பாங்கா போகலை ன்னாலும் ஓகேமாங்க, ஆனா உனக்கு ன்னு ஒருத்தி வருவா பாத்தியா, அவ வேலைக்கு போயிட்டு இருந்தா உன்னை மதிக்க கூட மாட்டா, அதையும் ஞாபகம் வச்சுக்கோ, நான் உன் நல்லதுக்கு தான் சொல்லுவேன், நீ குண்டா இருந்தா ஒரு பொண்ணும் உன்னை திரும்பி பார்க்க மாட்டா டா”,என்று பரிதாபமாக அவனைப் பார்த்து சொன்னாள்.
அவன் தான், “ஆத்தி நான் கூட ரெண்டு வட சாப்பிட்டேன்னா, என்னை இப்படி எல்லாம் கலாய்ச்சிட்டு இருக்க”, என்று கேட்டான்.
“நீ ரெண்டு வடை சாப்பிடுவதில் பிரச்சனை இல்ல., உனக்கு தொப்பை போட்டு நீ குண்டானா தான் பிரச்சனை”, என்று சொன்னாள்.
“தாயே நான் நாளையிலிருந்து வாக்கிங் போறேன், ஜாக்கிங் போறேன், எக்சைஸ் பண்றேன் , என் உடம்ப ஃபிட்டா வச்சுக்கறேன்”, என்று சொன்னான்.
பதிலுக்கு மதுவும் “அதோட சேர்த்து எக்ஸாமுக்கும் படிக்கிற , அதையும் பாரு” என்று சொன்னாள்.
இவனும் அவளிடம் “ஆமா நீ எப்ப எக்ஸாம் எழுத போற”, என்று கேட்டான்.
“இனிமேல் எழுதினா என்ன? எழுதாட்டி என்ன?” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.
“ஓய் என்ன வேலைக்கு போக சொல்லுற, நீ வேலைக்கு போகலையா”, என்று கேட்டான்,
“போலாம் போலாம், கொஞ்ச நாள் கழிச்சு போகலாம்”, என்று சொன்னாள்.
“படி”,என்று சொன்னான்.
“நான் ஒரே தடவை ல அத்தனை எக்ஸாமும் எழுதி கிளியர் பண்ணிடுவேன்”, என்று சொன்னாள்.
“இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு” என்றான்.
“நம்புனாதாண்டா, எக்ஸ்ட்ரா வடை தருவாங்களாம் அத்தை”, என்று சொன்னாள்.
“சரி சரி நம்புறேன், நம்புறேன்”, என்று சொன்னான்.
சிரித்துக் கொண்டே அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க, அதை பார்த்து விட்டு சரண் தான், “ரெண்டு பேரும் எப்பவும் லொட லொட ன்னு பேசிட்டே இருக்கணுமா”, என்று கேட்டான்.
“பொறாமை பிடிச்ச மனுஷன்” என்று சொல்லி சிவாவிடம் முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.
பேச்சும் சிரிப்புமாக நேரம் கடந்து செல்ல,
இரவு உணவிற்கு பிறகு மாடிக்கு தங்கள் அறைக்கு சென்றவர்கள், அவன் அறைக்குள் செல்ல, இவளோ மொட்டை மாடியை நோக்கி சென்றாள்.
மொட்டை மாடியில் இருந்து அறைக்குள் வராதவளை கண்டவன்,
அறையிலிருந்து வெளிப்பக்கமாக உள்ள மொட்டைமாடி பகுதியில் வந்து நின்றவன், “என்ன ஆச்சு, இங்க வந்து நின்னுட்ட”,என்று கேட்டான்.
கைப்பிடி சுவரில் சாய்ந்த படி அவனை திரும்பிப் பார்த்தவள், அவனையே பார்த்துக் கொண்டிருக்க.,
அவன் தான் “என்ன ஆச்சு, எதுக்கு இந்த பார்வை, இப்படி பார்ப்பதற்கு அர்த்தம் என்னவோ”, என்று கேட்டான்.
“உங்ககிட்ட சில விஷயங்கள் கேட்கணுமே” என்றாள்.
“என்ன கேட்கணும்” என்றான்.
“நீங்க யாரையாவது லவ் பண்ணி இருக்கீங்களா”, என்று கேட்டாள்.
அதிர்ச்சியாக முழித்தவன், “இல்லையே அப்படிலாம் இல்லையே”, என்று சொன்னான்.
“பொய் சொல்லக்கூடாது, உண்மைய சொல்லுங்க” என்று சொன்னாள்.
“ஏன் யாரும் எதுவும் சொன்னாங்களா”, என்று கேட்டான்.
“நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க, அப்புறமா சொல்றேன்”, என்று சொன்னாள்.
அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன், “என்ன விஷயம் மது” என்றவன் தன்னை நோக்கி கையை நீட்டவும்,
அருகில் வந்தவளை கையை கோர்த்துக் கொண்டான்.
“உட்கார்ந்து பேசுவோமா” என்று கேட்டாள்.
அவன் சுவரில் சாய்ந்தமர இவளோ அவன் மீது சாய்ந்து அமர்ந்தாள்.
“சொல்லுங்க மேடம் என்ன கொஸ்டின் கேட்கணும்”, என்று கேட்டான்.
“அந்த லவ் விஷயம்”, என்றாள்.
“யாரு உன் ட்ட இந்த மாதிரி சொல்லுறது”, என்றான்.
அவனை பார்த்தவள், “வாய திறந்தா வர்றது எல்லாம் பொய்”, என்று நகர்ந்து செல்ல போனவளை,
அவசரமாக சேர்த்து பிடித்தவன்,
“என்ன ன்னு சொன்னா தானே தெரியும், சொல்லு”, என்றான்.
“ஓய், விட்டா நீயே போய் கம்ப்ளைன்ட் பண்ணுவ போல”, என்றவன்,
“அடுத்தவங்க திங்க்ஸ் என்ன எடுத்தேன், என்ன பொய் சொன்னேன் ன்னு சொல்லு”, என்றான்.
“நீங்க லவ் பண்ணது பற்றி கேட்டதுக்கு இப்ப வரைக்கும் பதில் வரலை, அடுத்தவங்க திங்க்ஸ் என்ன எடுத்து வைச்சிருக்கீங்க ன்னு நீங்க தான் சொல்லனும்”,என்றாள்.
அவனிடம் இருந்து பதில் இல்லை என்ற உடன், அவன் கைவிரல்களோடு கை விரலை கோர்த்து கொண்டவள்,
“ஏன் என்கிட்ட சொல்லல”, என்று தலையை மட்டும் அவனை நோக்கி திருப்பி அவன் முகத்தை பார்த்து கேட்டாள்.
சற்று நேரம் அமைதியாக இருந்தவன், விளக்கு வெளிச்சம் நிலா வெளிச்சம் என வானத்தில் இருந்தாலும், அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன்.
“யார் சொன்னா” என்றான்.
“கேள்விப்பட்டேன்” என்று சொன்னாள்.
“எப்ப தெரியும்”, என்று கேட்டான்.
“இப்போ கொஞ்சம் முன்னாடி தான் தெரியும், சொல்லுங்க ஏன் என்கிட்ட சொல்லல”, என்று கேட்டாள்.
அவனும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான், “சொன்ன என்ன செஞ்சிருப்ப, ஏற்கனவே என்னை பார்த்தா தல தெரிக்க ஓடுவ, நான் மட்டும் சொல்லி இருந்தேன் னா, அதுக்கப்புறம் என்னை திரும்பி கூட பார்த்து இருக்க மாட்ட, அப்படித்தானே”, என்றான்.
“நீங்க ஏன் உங்கள பார்த்தா தலை தெரிக்க ஓடற அளவுக்கு நடந்துக்கிட்டீங்க”, என்று கேட்டாள்.
“அது ஏதோ பொசசிவ், கொஞ்சம் பொறாமை கூட இருந்துச்சு வையேன், நீ சிவா கிட்ட பேசுற அளவுக்கு என்கிட்ட பேச மாட்ட, வந்தா அவங்களோட மட்டும் தான் பேசுவ, இல்லாட்டி அவன் உங்க வீட்டுக்கு வருவான், என்னால அப்படி உங்க வீட்டுக்கு ப்ரீயா வர முடியாது, அது மட்டும் இல்லாம அம்மா அப்பா கிட்ட நீ நல்லாவே பேசுவ, எல்லார்ட்டையும் பேசுற நீ, என்கிட்ட ப்ரீயா பேச மாட்டேங்கிற ன்னு ஒரு சின்ன ஒரு கோபம், அப்போப்போ உன்கிட்ட பேசுறதுக்கு வாய்ப்பு கிடைக்காதான்னு யோசிட்டு தான் உன்ன அதிட்டி பேசுற மாதிரி பேச ஆரம்பிச்சேன்,
மத்தவங்க ட்ட எல்லாம் பதிலுக்கு பதில் பேசுற நீ, என்கிட்ட மட்டும் பேசாம ஓடிடுவ, நான் எதிர்பார்த்தது நீ என்கிட்ட ஏதாவது பேசுவ வாய் வளர்க்கலாம் அப்படிங்கற நினைப்புல தான் பேசுவேன், ஆனால் நீ பேச மாட்ட”,என்று சொன்னான்.
அவனையே நிமிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தவள், லேசான சிரிப்போடு அவனிடம், “நீங்க ஏன் என்கிட்ட சொல்லல, ஏன் ப்ரொபோஸ் பண்ணல”, என்று கேட்டாள்.