12

வார்த்தைகளில்
கற்றுதருவதை விட
பார்வையால்
அதிகம் சொல்லி
தருகிறாய்.,

உன் பார்வைக்கு
அகராதி
படைக்க தொடங்கி
இருக்கிறேன்.,

அப்படி எல்லாம்
பார்க்காதே.,
அகராதியின் பாகங்கள்
அதிகரிக்கிறது…

    அவனது சீண்டல்களில் சிலிர்த்துப் போய் இருந்தவள் மெதுவாக திரும்ப,  எதிர்ப்புறத்தில் இருந்து தன்னிலை இழந்து வரும் லாரி தான் அவள் கண்ணுக்கு தெரிந்தது.

    இவள் அதிர்ச்சியை பார்த்து விட்டு “என்ன மது” என்று கேட்கும் போதே,

     “பார்த்து பார்த்து” என்று கத்தவும், திரும்பி பார்த்தவள்,

   கடைசி நொடியில் சுதாரித்த சரண் லேசாக வண்டியை ஒடித்து திருப்ப, அந்த லாரி காரில் முழுதாக மோதாமல் இருந்தாலும், மது அமர்ந்திருந்த பக்கத்தில் இடித்து விட்டது,

இடித்த வேகத்தில் வண்டியை சுத்த விட, லாரியோ அருகில் இருந்த பள்ளத்தில் இறங்கியது.,

    எதிர்புறம் இருந்து லாரி கண்ட்ரோல் இல்லாமல் இந்த பக்கம் வருவதை பார்க்கும் போதே ஆளாளுக்கு பின் பக்கமாக ஓடிவந்தது.

    மது அமர்ந்திருந்த பக்கத்தில் காரை இடித்ததால், சுத்தி  பின்புறம் வந்த காரின் மீது தட்டினாலும், அருகிலிருந்த போஸ்டில் இடித்ததில் மது இருந்த பக்கம் நல்ல அடி வாங்கியது,

        லாரி வேகமாக வந்து மோதியதில் மது இருந்த பக்கத்தில் மோதிய உடனே இருவருக்கும் உண்டான ஏர்பேக் ஓபன் ஆகி இருந்தாலும், மதுவோ அதிர்ச்சியோடு சரணை பார்த்தபடியே மயங்கி இருந்தாள்.

     அதற்குள் அக்கம் பக்கத்தில் அனைவரும் ஓடி வந்து உதவி செய்ய வந்தனர்.

    முதலில் காரிலிருந்து அவன் இறங்கி இருந்தான், பின்பு மதுவின் பக்கம் காரை கதவை திறந்து அவளை “வெளியே வா மது”, என்று  கையை இழுக்க பார்க்கும் போது தான் அவள் மயங்கி இருந்தது தெரிந்தது.

      அதிர்ச்சியில் மயக்கமாக இருக்கும், என்று அருகில் இருந்தவர்கள் சொல்லிக் கொண்டிருக்கும் போது தான் வேறு எங்கும் அடிபடாமல் இருவருக்குமே சிறுசிறு காயங்களோடு தப்பித்து இருந்தனர்.

அவளை வெளியே இழுக்கும் போது தான் பார்த்தால் மதுவின் கால் கார் இடித்த பாகத்தில் மாட்டி இருந்தது தெரிந்தது.

அவள் மயங்கி இருப்பதை உணர்ந்தவன், மற்றவர்களிடம் சொல்லி மெதுவாக எடுக்கும் போது, அதற்குள் அருகில் இருந்த போலீஸ் வந்துவிட,

  அவனைப் பார்த்தவுடன் “சார் என்ன எப்படி  நடந்தது?” பதட்டத்தோடு கேட்டனர்.

      நடந்த விபத்தை லேசாக சொல்லியவன், வேறு எதுவும் சொல்லாமல் “ஹாஸ்பிடல் போக மட்டும் ஹெல்ப் பண்ணுங்க” என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

   அதற்குள் ஆம்புலன்ஸ் வர மயக்கத்தில் இருந்தவளை ஆம்புலன்ஸில் ஏற்றி கொண்டு சரண் ம் ஹாஸ்பிடல் போய் சேர்ந்தான்.

    மதுவின் காலை காரில் இருந்து மெதுவாக எடுத்துக் கொண்டிருக்கும் போதே தனது டிரைவருக்கு அழைத்து சொன்னான்.

      சிறிது நேரத்திற்குள் டிரைவரும் வந்து சேர்ந்தவர்,  “சார்” என்று பதட்டத்துடன் அருகில் வந்து நிற்பதை பார்த்த சரண்,

     “காரை சர்வீஸ் சென்டர் க்கு அனுப்பிருங்க, அதுக்கு என்ன பார்மாலிட்டிஸ் உண்டோ அது படி செய்ங்க,

      இருக்குற லக்கேஜ் எடுத்துட்டு வீட்டுக்கு போயிருங்க”, என்று சொல்லிவிட்டு,

      “எங்க வீட்டுக்கு போன் பண்ணி வர முடியாது, சின்ன பிரச்சனை ன்னு  சொல்லி அவங்கள வேணா இங்க கிளம்பி வாங்க ன்னு சொல்லி வர சொல்லுங்க, ஆக்சிடென்ட் பற்றி சொல்ல வேண்டாம்”, என்று சொன்னான்.

     “சரி” என்று தலையசைத்து போக அதற்குள் போலீஸ் வந்து எப்படி லாரி வந்துச்சு என்று விசாரிக்க தொடங்கியிருந்தனர்.

    ஏனெனில் 24 நாட்களுக்கு முன்பு தான் முக்கியமான கேஸ் ஒன்றுக்கு தீர்ப்பு வழங்கியிருந்தான். சற்று நேர்மையாக நடந்து கொள்பவன் என்பதால் அவனிடம் எந்த காரியமும் நடக்காது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான், ஒருவேளை அப்படியும் இருக்குமோ, என்று போலீஸ் விசாரணை  துவங்கினர்.

      அவனுக்கோ எதைப்பற்றியும். நினைப்பு இல்லை, எல்லோரிடமும் பதிலளித்துக் கொண்டிருந்தாலும், அவன் எண்ணம் முழுவதும் மதுவிடம் மட்டும் தான் இருந்தது, இருவருக்கும் சிறு சிறு காயங்கள் இரத்தம்  வந்திருந்தாலும் யாரிடம் என்ன பதில் சொன்னான் என்பது அவனது சூழ்நிலை அவனுக்கு ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தது.

அவனால் ஒரு நிலையில் தெளிவாக இருக்க முடியாமல் இருந்ததால் அதை உணர்ந்து வீட்டிற்கு அழைத்து டிரைவரை சொல்ல சொல்லி இருந்தான். அவனால் அவர்களிடம் பேச முடியாது என்பதை உணர்ந்து.

   மருத்துவமனையில் சேர்ந்த பிறகு, முதலுதவி சிகிச்சை அளிக்க தொடங்கி இருந்த போது அவனோ மதுவிற்கு சிகிச்சை நடக்கும் இடத்திற்கே சென்று விட்டான்,

     அவனது பதவி தெரிந்தவர்கள் எதுவும் சொல்ல முடியாமல் “சார் நீங்க வெளியே இருங்க, நாங்க காலுக்கு ட்ரீட்மெண்ட் பண்ணனும்”, என்று சொல்லும் போதே,

      “அவளுக்கு மயக்கம் தெளியுதா ன்னு பாருங்க, என்ன ஆச்சு என்னன்னு கொஞ்சம் பாத்து சொல்லுங்க”, என்று அதையே கேட்டுக் கொண்டிருந்தான்.

உடன் இருந்தவர்களுக்கு தான் என்ன சொல்வது என்று தெரியவில்லை, அனைவருக்குமே தெரியும் திருமணமாகி சில மாதங்கள் தான் ஆகிறது என்பது.

அப்போது தான் அங்கிருந்த பெண் மருத்துவர் “அவங்களுக்கு அதிர்ச்சியில் வந்த மயக்கமா இருக்கும் சார், நேர்ல ஒரு லாரி வந்து மோத வருவதைப் பார்க்கும் போது யாரா இருந்தாலும் அந்த ஷாக் இருக்கத்தான் செய்யும், அவங்களுக்கு பல்ஸ் எல்லாமே நல்லா இருக்கு, நீங்க பயப்பட ஒண்ணுமே இல்ல அதிர்ச்சி மயக்கம்  தான், கொஞ்ச நேரத்துல தெளிஞ்சி விடுவாங்க பாருங்க, அவங்க மயக்கத்தில் இருக்கும் போதே காலுக்கான ட்ரீட்மெண்ட் செய்யனும், சின்ன சின்ன காயத்துக்கான ட்ரீட்மென்ட் முடித்துவிடலாம்”, என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

அவனும் அமைதியாக சம்மதித்தாலும், அவளைப் பற்றிய  கவலைகளே அதிகமாக இருந்தது.

      அவனுக்குரிய மருத்துவத்தை செய்து முடித்திருந்தனர்.

    தலையில் சிறிய காயமும், கையில் சிறிய காயம் இருந்தது. மதுவிற்கு காலில் ரத்த காயம் எதுவும் இல்லாவிட்டாலும் கால் பிசகி இருந்தது.

        நல்ல வேளையாக எலும்புமுறிவு எதுவும் ஏற்படவில்லை, பேக் ஒன்றை அவள் கால் பக்கத்தில் வைத்திருந்தாள்,

     அவன் தான் சொல்லிக் கொண்டிருந்தான், “டிக்கியில் போடாமல் ஏன்  காலுக்கு அடியில் வச்சிருக்க” என்று கேட்டான்,

    சிரித்துக்கொண்டே, “அது எனக்கு கால் வைக்க” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

     நல்லவேளையாக அங்கு அவளுடைய பேக்  இருக்க போய் காலில் அதிகமான காயம் எதுவும் இல்லாமல் எலும்பு முறிவு எதுவும் இல்லாமல் தப்பித்து இருந்தாள்.

     ஆனாலும் வசமாக சிக்கி இருந்ததால், எடுக்கும் போது காலில் எந்த வீக்கமும் எதுவும் இல்லாமல் ரத்தக்காயம் இல்லாமல் வெளியே வந்தது.

      அதையெல்லாம் நினைத்துக் கொண்டே வெளியே அமர்ந்திருந்தவன்,  அவளுக்கு மயக்கம் தெளிந்து விட்டால் போதும் என்ற நிலையில் தான் இருந்தான்.

    ஏனெனில் மயக்கம் மட்டும் இன்னும் தெளியவே இல்லை,

      கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரங்கள் கடந்து இருக்க,  வீட்டில் உள்ளவர்களும் அருகில் வந்துவிட்டதாக அவனது டிரைவர் சொல்லிக்கொண்டிருந்தார்.

       “சார் வந்த பிறகு நானே கூட்டிட்டு வரேன்” என்று சொன்னான்.

” சரி ” என்று மட்டும் சொல்லி இருந்தான்.

    மருத்துவர்களுக்கு சற்று யோசனையாக தான் இருந்தது, இத்தனை நேரம் ஆகியும் மயக்கம் தெளியாமல் எப்படி இருக்கும் என்று யோசித்தவர்கள்,

    ‘சரி எதற்கும் ட்ரிப்ஸ் போட்டு தேவையான மருந்தை ஏற்றுவோம், மயக்கம் தெளிவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்று பார்ப்போம்’ என்று யோசனையோடு மற்ற அடுத்தடுத்த மருத்துவ உதவிகளை செய்து கொண்டிருந்தனர்.

        அவளோ ஆழ்ந்த நித்திரையில் இருப்பவள் போல இருந்தாள்.

    அதற்குள் வீட்டினர் வந்து சேர்ந்தனர். “என்ன ஆச்சு” என்று எல்லோரும் பதட்டத்தோடு கேட்டனர்.

     “ஒண்ணுமில்ல சின்ன ஆக்சிடன்ட்” என்று சொன்னவன், “லேசான அடி தான் வேற ஒன்னும் இல்ல”, என்று சொல்லிவிட்டான்.