ஏற்கனவே வீட்டை சுத்தம் செய்து ஒதுக்கிக் கொடுத்து விட்டு சென்று இருப்பதால், அங்கு வீடு சுத்தமாகவே இருந்தது. அதனால் வேறு வழியில்லாமல் பாடங்களை எடுத்துப் புரட்டிப் பார்க்க தொடங்கியிருந்தாள்.
அவ்வப்போது நந்தினியிடம் சந்தேகங்களையும் கேட்டு தீர்த்துக் கொள்வாள். இந்த முறை செமஸ்டர் எக்ஸாம் எழுதப் போவதில்லை என்று சொல்லியிருந்ததால், அடுத்தமுறை அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே இடையில் ஒரு முறை வந்து சென்ற அவளது குடும்பம் மற்றும் சிவா குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து சில பேப்பர்களில் கையெழுத்து வாங்கினர்.
” எதுக்கு கையெழுத்து”, என்று சிவாவிடம் கேட்டாள்.
“நான் உன் சொத்தை எல்லாம் எழுதி வாங்க போறேன்” என்று சிவா சொன்னான்.
“வச்சுக்கோ” என்று சொல்லிவிட்டு கையெழுத்தை போட்டு கொடுத்து அனுப்பினாள்.
ஆனால் அது அவளுடைய படிப்பை தொலைதூரக் கல்வி முறையில் தொடர்வதற்காக என்பது அதன் பிறகுதான் தெரிந்தது..
இன்னும் மூன்று மாதங்களில் அங்கு பரிட்சை வரும் போது இவள் முதல் மற்றும் இரண்டாவது செமஸ்டரை சேர்த்து எழுதிக்கொள்ளலாம் என்று விசாரித்து அவள் தந்தை சொல்லியிருந்ததால் அதற்கான பாடங்களையும் அவ்வப்போது படித்துக்கொண்டிருந்தாள்.
முடிந்தவரை இவளை அங்கு அழைத்துச் செல்வதையே தவிர்த்து இருந்தான்.
ஏனெனில் கண்டிப்பாக அங்கு சென்றால் சில நினைவுகள் வரும்போது அவனிடம் முகம் காட்டுவாள் என்று இவன் அழைத்து செல்ல தயங்கினான்.
அதை புரிந்து கொண்ட பெரியவர்களும், அவள் அவனோடு நன்றாக மனமொத்து இருக்கத் தொடங்கிய பிறகே அழைத்து வந்தால் போதும் என்று கூறி இருந்தனர்.
அவனும் சரி என்று சொல்லியிருந்தான்.
நாட்களும் கிழமைகளும் மாதங்களாக உருண்டு கொண்டிருந்தது, திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் முழுமையாக முடிந்து 10 நாள்களும் தாண்டியிருந்தது.
அன்று காலையிலிருந்தே மிகவும் டென்ஷனாக இருப்பது போல தெரிந்தான் சரண்.
அவன் முகத்தை பார்ப்பதும் பின்பு நகர்வதும் ஆக இருந்தவள், ஒரு நேரத்தில் மனது கேட்காமல் அருகில் சென்று “ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க, ரொம்ப டென்ஷனா இருக்கீங்க” என்று கேட்டதற்கு,
அவளை திரும்பிப் பார்த்தவன், “ஒன்னும் இல்ல இது கேஸ் விஷயம், நீ போ” என்று சாதாரணமாக சொன்னாலும் அவன் குரலில் எப்போதும் இருக்கும் உற்சாகம் இல்லை, என்பதை உணர்ந்தவளுக்கு கொஞ்சம் கஷ்டமாகவே இருந்தது.
ஏன் எனில் நேற்று மாலையில் இருந்தே அப்படி தான் இருக்கிறான் என்பது அவளுக்கு நன்றாகவே தெரிந்தது..
தினமும் மாலை கோர்ட்டில் இருந்து வந்தாலும் தன் வேலைகளை பார்க்கும் முன்பு தன்னை ரெப்பரஷ் செய்து கொண்டு வருபவன் அவளிடம் கொஞ்ச நேரமாவது பேசிக்கொண்டிருந்து,
அவளை தனக்கு பழகுகிறேன் என்று சொல்லி, கண்டிப்பாக கட்டி அணைத்த படியே சுற்றுவான், அல்லது அவள் கன்னத்தில் தொடங்கிய முத்தத்தை இதழில் முடிக்காமல் இடத்தை விட்டு நகர மாட்டான். இப்படி எல்லாம் அவளிடம் ஏதாவது வம்பு செய்து அவளை ஒரு வழியாக்கி கொண்டிருப்பவன், நேற்று மாலையில் இருந்தே சற்று வித்யாசமாக இருப்பதாகவே அவளுக்கு தெரிந்தது.
ஆனாலும் கேஸ் விஷயம் என்று சொல்பவனிடம் எதை சொல்ல என்று அமைதி காத்துக் கொண்டாள்.
ஏதாவது முக்கியமான தீர்ப்பு நாளாக இருக்கலாம், அல்லது கேஸ் பற்றிய ஏதாவது பிரச்சினையாக இருக்கலாம், இதைப் பற்றி என்ன தெரியும் என்ற யோசனையோடு அமர்ந்துக் கொண்டாலும், அவனது டென்ஷனை போக்கும் வழி தெரியாமல் பார்த்துக் கொண்டே இருந்தாள்.
காலையில் எப்போதும் டிரைவர் வந்து காரை எடுத்து வெளியே விட்டுவிட்டு காத்திருக்கும் நேரத்தில், வீட்டில் வேலை செய்பவர்கள் கோர்ட்க்கு கிளம்பினர்.
இவளை கதவைப் பூட்டிக் கொள்ள சொல்லிவிட்டு, அவளது பாதுகாப்பை உறுதிப்படுத்தி விட்டு எப்போதும் வெளியே செல்பவன் அன்றும் அது போலவே வந்தான்.
எப்போதும் வெளியே கிளம்பும் முன் அவளை இழுத்து தன் கைக்குள் வைத்துக் கொண்டு, நெற்றியில் அல்லது கன்னத்தில் ஒரு முத்தம் இட்டு விட்டு வெளியே செல்வான்.
இன்றும் அது போலவே அருகில் வந்தவன், “டென்ஷன் வேற ஒன்னும் இல்ல , ஓகே ரொம்ப யோசிக்காதே என் முகத்தை முகத்தை பார்த்து, நீயா யோசிச்சிட்டு இருக்காதே, சில நேரம் எனக்கு அப்படித்தான் இருக்கும் சரியா”, என்று சொல்லிவிட்டு கிளம்ப போனவன் நெற்றியில் எப்போதும் போல முத்தம் கொடுத்தாலும், அதில் உயிர்ப்பு இல்லாதது போல தோன்றியது.
அங்கிருந்து நகரப் போனவனின் கை பிடித்தவள், அவன் கழுத்தில் கையைப் போட்டு தன் அருகே இழுத்து அவன் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் வைத்து “ஜஸ்ட் ரிலாக்ஸ்” என்று சொல்லவும்.
அவன் லேசான சிரிப்போடு அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்.
“என்ன” என்று கேட்டாள்.
“ஒரு கன்னத்தில் மட்டும் தானா, இந்தக் கன்னத்தில் கிடையாதா”,என்று கேட்டான்.
“தந்துட்டா போச்சு” என்று சொல்லி மறு கன்னத்திலும் அழுத்தமாக இதழ் பதித்தவளை மீண்டும் தன் கைக்குள் கொண்டு வந்தவன்,
அவள் கன்னத்தை பிடித்து தன் முகம் பார்க்க வைத்தவன், அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டே “தேறிட்ட பொண்டாட்டி” என்று சொன்ன வண்ணம் அவள் இதழில் அழுத்தமாக ஒரு முத்தம் கொடுத்து விட்டு கிளம்பினான்.
மீண்டும் ஒருமுறை சட்டை எதுவும் கசங்கியிருக்கிறதா என்றும் மட்டும் பார்த்து விட்டு அவன் நகர போக,
இவ்வளோ “அது எல்லாம் ஒன்னும் கசங்களை, நான் ஒன்னும் சட்டையெல்லாம் கசக்களை” என்று சொல்லியபடி அவன் பின்னே நின்று சிரித்துக் கொண்டிருந்தாள்.
அவளை கண்ணாடியில் பார்த்தவன் சிரித்துக்கொண்டே கிளம்பினான்.
வாசல் வரை சென்றவன் அவளை திரும்பி பார்த்து “என் பொண்டாட்டி எனக்கு கொடுத்த பஸ்ட் கிஸ்” என்று சொல்லி அவளை பார்த்து கண் சிமிட்டி விட்டு, அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொல்லி விட்டு சென்றான்.
செல்லும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள். “அப்பாடா என்ன டென்ஷன் ல இருக்காங்க” என்று சொல்லிக் கதவை சாத்திக்கொண்டு உள்ளே வந்தவளுக்கு சிரிப்பு தான் வந்தது.
தான் இந்த அளவுக்கு மாறிப் போவேன், என்று யாராவது மூன்று மாதத்திற்கு முன்பு சொல்லியிருந்தால் நிச்சயம் கல்லை விட்டு அடித்திருப்பாள்.
பின்பு தன்னை தானே ஆய்வு செய்து கொண்டிருந்தாள்.
‘நான் எப்படி இப்படி மாறிப் போனேன்’ என்று நினைத்துக் கொண்டவள், ‘ஏன் அவங்க முகம் டல்லா இருந்தா, நான் பீல் பண்றேன்’, என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
‘எல்லாரும் சொல்றது மாதிரி, இது இந்த மஞ்சக் கயிறு மேஜிக் போல, எல்லாரும் சொல்வாங்க இல்ல, அது இதுதானா’ என்று யோசித்தவள், ‘இருக்கும் இருக்கும்’ என்று நினைத்துக் கொண்டாள்.
அதன்பிறகு புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டிருந்தவளுக்கு நேரம் போவது தெரியாமல் இருந்தது.
அவன் மதியம் போன் செய்து “சாப்பாடு கொடுத்து விட்டுருடா, நான் இன்னைக்கு வர முடியாது, ஈவினிங் தான் வருவேன்”, என்று சொன்னான்.
“சரி” என்று சொல்லிவிட்டு “இப்போ ஓகேவா இருக்கீங்களா” என்று கேட்டாள்.
“ஓகே ஓகே சாயந்தரம் வரேன்” என்று சொல்லிவிட்டு அவளிடம் சில விஷயங்களை பேசியபடியே இணைப்பை துண்டித்தான்.
அதற்குள் கோர்ட்டில் இருந்து ஆட்கள் வர அவனுக்கு தேவையான உணவை மட்டும் பார்த்து எடுத்து வைத்துக் கொடுத்து அனுப்ப ஆட்கள் எடுத்துக் கொண்டு சென்றனர்.