“மது ரொம்ப மூடாதே,  ஏசி நார்மலா தான் இருக்கு, லைட்டா ஆ சில்னஸ் வர மாதிரி தான்  போட்டு இருக்கேன்”,என்று சொல்லிக்கொண்டே அவள் அருகில் படுத்து அவளிடம் பேச தொடங்கியவன், அவளுடைய உம் சத்தத்தை மட்டும் கேட்டுக் கொண்டிருந்தான்,

    பின்பு அவள் மேல் கையை போட்டு தன்னோடு சேர்த்து அணைத்துக் கொள்ளவும்,

     “நீங்க சொன்னீங்க”, என்று சொல்லவும்,

     “ஆமா சொன்னேன், உன் பெர்மிஷன் இல்லாமல்  எதுவும் நடக்காது, தைரியமாக தூங்கு”, என்று சொன்னவன் சற்று நேரத்தில் தூங்கி விட இவளுக்கு தான் தூக்கம் வருவேனா என்றது,

‘தன் மேல் இருக்கும் அவன் கையை எடுத்து விட்டால், நன்றாக இருக்கும்’ என்று தோன்ற அவனின் பிடியோ அழுத்தமாக இருந்தது.

    அமைதியாக கண்ணை மூடி நம்பர்ஸ் ஐ எண்ணத் தொடங்கிவள் எப்போது தூங்கினாள் என்று தெரியாமல் நன்றாக தூங்கி இருந்தாள்.

      காலையில் கன்னத்தில் ஏதோ ஒரு குறுகுறுப்பு ஏற்பட கனவு போல என்று நினைத்து கன்னத்தை தடவிக் கொண்டே தூக்கத்தில் திரும்பி படுத்தாள்.

    அவனும் அவள் மறு  கன்னத்தில் முத்தம் கொடுப்பது போல அருகில் வந்து மெதுவாக மது என்று அழைக்க, அவளது மீசையின் உரசல் அவளுக்கு கன்னத்தில் கூச்சம் காட்டிக்கொண்டிருந்தது.

சற்று நேரத்தில் கூச்சம் அதிகமாக இருக்க கண்ணை விழித்தவள், கனவு என்று நினைத்து இருக்க, அங்கு அவன் அவளை எழுப்ப முயற்சி செய்து கொண்டிருந்தான்.

    வேக வேகமாக எழுந்தவள்,  “ஏன்” என்று கேட்டாள்.

     “மணி ஆறு ஆக போகுது, இன்னும் கொஞ்ச நேரத்தில் யாராவது வந்து கதவைத் தட்டுவாங்க , அது தான் எழுப்பினேன்”,என்று சொன்னான்.

“ஏன் இந்த கையை எடுத்து தட்டி  எழுப்பக் கூடாதா”,என்று அவன் கையை தட்டி கேட்டாள்.

அவனும் “அப்படி எடுக்கலைன்னா, நீ என்ன பண்ணுற ன்னு பார்க்கனும், அதனால தான் எடுக்கல, உன்னோட  அருகாமை என்னை திரும்பி கூட படுக்க விடலை” என்று சொன்ன படி பேசிக்கொண்டிருந்தவன், அவள் காதுக்குள் பேசத் தொடங்கவும்,

    “கேடி” என்று சொல்லி அவனை தள்ளி விட்டு எழுந்து குளிக்க சென்றாள்.

குளித்து முடித்தவள், மீண்டும் அதே டி ஷர்ட் போட்டு கொண்டு வந்து நின்றாள்.

      அவனுக்கு சிரிப்பு தான் வந்தது. “அழுக்கு டிரஸ் எடுத்து மெஷினில் போடு,  நானும்  குளிச்சிட்டு வந்து ஆன் பண்ணிக்கலாம்”,  என்று சொன்னான்.

     “கீழே தானே மிஷின் இருக்கு” என்றாள்.

“இல்ல தனியா மாடியில ஒன்னு உண்டு, நீ போடு இங்கே துணி சேர்த்து வைக்க வேண்டாம்”, என்றான்.

    அனைத்தையும் எடுத்துக் கொண்டு போய் போட்டு விட்டு வந்தாள்.

   அவன் குளிக்கச் சென்ற உடன், இவள் உடை மாற்றியிருந்தாள்.

   அவன் குளித்து முடித்து வந்து  எப்போதும் போல அவனே மெஷினை ஆன் செய்து விட்டு கிளம்ப தொடங்கினான்.

இவள் தலையில் ஈரத்துணியுடன் இருப்பதை பார்த்து, “மது தலையை காய வை” என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே,

வெளியே மது என்று அவள் அத்தையின் அழைக்கும் குரல் கேட்டது.

அமைதியாக வெளியே செல்ல,  அவர்களும் நமட்டு சிரிப்போடு இவளைப் பார்க்க எதுவும் சொல்லாமல் குனிந்து கொண்டாள்.

      அவர்களோ வேறு எதுவும் கேட்காமல் சிரித்துக் கொண்டே அவளது தலையை துவட்டி விட்டவர்,  “கோயிலுக்கு போனா ரெண்டு பேரும் கோவிலுக்கு சீக்கிரம் போய்ட்டு வாங்க,  தம்பி எங்கே”, என்று கேட்டார் .

‘கிளம்பிட்டு இருக்காங்க”, என்று மட்டும் சொன்னாள்.

     அவளுக்கு அவர்கள் தலை உலர்த்தி முடித்து பின்னல் போட்டு கொண்டு இருக்கும் போதே,  அவன் மாடியிலிருந்து இறங்கி கீழே சென்று விட்டான்.

     அறைக்கு வரும் போது அறை சுத்தமாக இருந்தது. அப்போது தான் அவளுக்கு தோன்றியது படுக்கையை கூட உதராமல் வெளியே சென்று விட்டோம் என்று.,

ஆனால் அனைத்தையும் அவன் சுத்தம் செய்து விட்டு போவதை பார்க்கும் போதே, “அப்பாடா நம்மள வேலை செய்ய யாரும் கட்டாயப்படுத்த மாட்டார்கள்” என்று மட்டுமே மனதிற்குள் தோன்றியது.

  அதன் பிறகு புதிதாக திருமணமான வீட்டில் நடக்கும் நடைமுறைகளும் விருந்து உபசாரங்கள்,  கோவில் செல்லுதலும் நடந்துகொண்டிருந்தது.

    மதுவோ அவள் வீட்டில் இருப்பதைப் போல தான் இங்கேயும் இருந்தாள், ஆனால் ஒன்றே ஒன்று இரவு தூங்கும் போது அவன் கைப்பிடிக்குள் தூங்குவது மட்டும் அவளுக்கு வித்தியாசமாக இருந்தது.

அது மட்டுமல்லாமல் கிடைக்கும் சில நிமிடங்களில் கூட அவனிடமிருந்து ஒரு அணைப்பும்,  ஒரு முத்தமும் அவளுக்கு கிடைப்பது தவறவில்லை, அதை தான் என்ன செய்வது என்று தெரியாமல் அவள் முழித்துக் கொண்டிருக்க,  அவனோ சைக்கிள் கேப்பில் லாரி ஓட்டுபவனாக இருந்தான்.

  கிடைக்கும் சிறிய நேரத்தில் கூட கன்னத்தில் அழுத்தமான முத்திரையை பதித்து சென்றான்.

   இன்னும் இரண்டு நாட்களில் அவன் வேலை செய்யும் ஊருக்கு போக வேண்டும் என்று சொன்னவுடன் திருதிருவென்று முழித்தபடி அமர்ந்திருந்தவளை பார்த்தவர்கள் அவ்வப்போது  அறிவுரை சொன்னார்கள்.

அவனோ எதுவும் சொல்லாமல் அவளிடம் சென்று அமர்ந்ததும் “என்ன ஆச்சு, அங்கேயும்  வீட்டுக்கு தானே போகனும் ன்னு சொன்னாங்க,  அதுக்கு இப்படி யோசிக்கிற”, என்று கேட்டான்.

    “இல்ல அங்க போனா யாரும் இருக்க மாட்டாங்க, தனியா போர் அடிக்குமே” என்றாள்.

    “கல்யாணத்தன்னிக்கு உனக்கு காமிச்சு கொடுத்தேன் இல்ல, டிரைவர் , ஆபிஸ்  ஓஏ, வீட்டு வேலை பாக்க வர்றவங்க அப்படி ன்னு  சொல்லி சொன்னேன் இல்ல,  அவங்க வந்து கோர்ட்டில் தான் ஒர்க் பண்றாங்க,  காலையிலேயே வீட்டுக்கு வந்திடுவாங்க, வீட்டுக்கு வந்து தேவையானதெல்லாம் பார்த்து கொடுத்திடுவாங்க பயப்படாத, எப்ப நீ போன் பண்ணி கூப்பிட்டாலும் வந்துருவாங்க, அவங்க போன் நம்பர் உனக்கு தருவேன், அதுமட்டுமில்லாம காலையில் வந்தவங்க எல்லாம் செய்வாங்க நீ சமை பண்ணா உனக்கு ஹெல்ப் பண்ணி தருவாங்க, இல்ல உனக்கு சமைக்க முடியாதுனா, அவங்களை சமைச்சு வச்சிட்டு போயிடுவாங்க, பயப்படாதே இது வரைக்கும்  வீட்டுல அங்க என்ன வேலை செஞ்சுட்டு இருக்காங்களோ அப்படி கண்டிநியூ பண்ணுவாங்க, நீ இங்க இருக்கிற மாதிரியே வந்து இருக்கலாம், சரியா “, என்றவன்.

“உன்னோட பாட புக்ஸ்  தூக்கிட்டு கிளம்பி வா, அங்க வந்து படி” என்று சொன்னான்.

“எனது படிக்கனுமா”, என்றவள் மனதில்  திட்டம் உருவானது,

“என்ன என்னது படிக்கணுமா கேட்கிற, கண்டிப்பாக படிக்கிற”, என்று சொன்னான்.

“இதுக்கு நான் படிச்ச  பிறகு கல்யாணத்தை பண்ணி இருந்திருக்கலாம்”,என்று சொன்னாள்.

அவனும் சிரித்தபடி “நீ இதை பஃஸ்ட்டே என் கிட்ட கேட்டு இருந்திருக்கலாம்”, என்றான் .

“இப்போது நான் தான் கேட்டேன்  இல்ல, என்னைய விட்டுட்டு  போங்க”என்றாள்.

அவனோ “ஓஹோ அப்படியா  கொஞ்சம் கொஞ்சமா படிக்கலாம், இப்ப என்ன போச்சு” என்று சொல்லிக் கொண்டிருந்தான்,

     “நீங்க மாத்தி பேசுறீங்க ன்னு சொன்னா, நீ கல்யாணத்துக்கு முன்னாடி கேட்கல ன்னு சொல்லுவீங்க, அப்படி தானே”, என்றாள்.

அவன் சிரித்தபடியே அவள் தலையை ஆட்டி வைத்தான். இவளோ அவன் கையை தள்ளி விட்டு கொண்டிருந்தாள்.

   ‘அண்ணா எப்படி மாற்றி வச்சிருக்காங்க’ என்று நினைத்துக்கொண்டே  அவர்களை கடந்து செல்ல,

   இவளோ சிவாவை பார்த்து “டேய் மெதுவா டா” என்றாள்.

“என்னது மெதுவா” என்று கேட்டபடி வந்து நிற்க,

   “எல்லாம் உன்னால தாண்டா” என்று சொன்னாள்.

“பழையபடி முருங்க மரம் ஏறுறாளே”, என்று சிவா நினைக்கத் தொடங்கும் போதே,

“என்ன ஆச்சு திடீர்னு” என்று சரண் நினைக்க,

   “உன்ன” என்று சொல்லியவள் உன்ன அடிக்க  எந்த கம்பும் பக்கத்தில் இல்ல,  தூக்கி வீச திங்க்ஸ் எதுவும் வசமா இங்கே  இல்ல”, என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே,

“எங்க முடிஞ்சா அடி பார்ப்போம்” என்று அவளுக்கு வாகாக  நிற்க,

இவ்வளவு சுத்தி தேடியவள், சரண் கையை பிடித்து அவன் முதுகில் அடி வைக்க தொடங்கினாள்,

“ஏய் என்ன வச்சி, என் தம்பிய அடிக்கிற”, என்று சொல்லி அவன் கையை உருவினான்.

“நீ அடிக்க மாட்டியா, எங்க அண்ணாவ விட்டே அடிக்கிற”, என்று கேட்டான்.

“எருமைய அடிச்சா, என் கைதான் வலிக்கும் டா,  அதுக்கு தான், உங்க  அவர் கைய வைச்சு அடிக்கிறேன்”, என்றாள்.

 “அப்ப எங்க அண்ணன் கை வலிக்காதா”,என்றான்.

“அதெல்லாம் உங்க அண்ணன் கை தாங்கும்,  இரண்டும்  எருமையா இருந்தா” என்று சொல்லி விட்டு நகர்ந்து விட்டாள்.

“ஏய் நில்லு ” என்று சொல்லும் போதை அங்கிருந்து ஓடி இருந்தாள்.

    “அண்ணே  உன்னை பார்த்து எருமை ன்னு சொல்லிட்டு போறா” என்றான்.

     அவனோ “சத்தம் போடாதடா” என்று சொல்லி அவன் தோளில் கையை போட்டு பிடித்தபடி சிரித்துக்கொண்டிருந்தான்.

   அவளோ கிச்சனில் சென்று சிவாவின் அம்மாவிடம் “அத்தை,  நான் கண்டிப்பா போயே ஆகணுமா” என்று கேட்டுக் கொண்டிருந்தாள்.

அவரோ “இன்னும் சின்னப் புள்ளை இல்லடா, அது உனக்கு சமையல் தான் ஒர் அளவுக்கு அம்மா ஒரு மாசத்துல  சொல்லிக்கொடுத்து இருக்கா இல்ல, நீ என்ன ஓரளவுக்கு செய்ற தானே, அப்புறம் என்ன தெரியாததை  போன் பண்ணி கேளு, சொல்லி தரேன்,  அப்படி இல்லாட்டி அங்கே உள்ளவங்களே சமைச்சு வச்சிட்டு போய்டுவாங்க,  நீ ஒன்னும் செய்ய வேண்டாம்” என்று சொன்னார் .

   அவரிடமும் மெதுவாக தலை அசைத்து கொண்டவள், வேறு எதுவும் சொல்லாமல் அவர் வேலை செய்வதையே பார்த்து  கொண்டிருந்தாள்.

நீ செய்யும் ஒரு சில செயல்கள்

விரைவாய் செய்து முடிக்கப்பட

வேண்டியவை அல்ல.. நிறைவாய்

செய்து முடிக்கப்பட வேண்டியவை..!