Advertisement

மழை 5:
ஆசிரியர் அறையில் பிரகாஷ் சார், “அடுத்து என்ன பண்றது?” 
தாரிக்காவை விசாரித்த ஆசிரியர், “அந்த மூணு பசங்களையும் தனி தனியா ஒரே நேரத்தில் விசாரிப்போம்.. ஸ்ரீராம் பெயர் சொல்ல வேண்டாம்” என்றதும் ‘ஏன்?’ என்பது போல் ஒரு ஆசிரியர் பார்க்கவும், இவர், “இப்போதைக்கு நமக்கு கிடைத்த துருப்பு சீட்டு அவன் தான்.. அவன் பெயரை சொன்னா கண்டிப்பா பசங்க மிரட்டுவாங்க” என்று கூறியவர் ஏதோ யோசிக்கவும் பிரகாஷ் சார், “என்ன யோசிகிறீங்க ரவி?”
“மாலினிக்கு உண்மை தெரியுமோ னு யோசிக்கிறேன்”
“எப்படி சொல்றீங்க?”
“ஏதோ தோனுச்சு”
மற்றொரு சார், “பசங்களுக்கு சப்போர்ட் பண்றவளா இருந்தா ஸ்ரீராம் கிட்ட இங்கு நடந்ததை சொல்லியிருப்பாளே!”
ரவி, “அதுவும் சரி தான்.. ஹ்ம்ம்.. விசாரிப்போம்..  காலேஜ் வந்த ஒரு மாசதுக்குள்ளேயே என்ன திமிர் இவன்களுக்கு.. சும்மா விட கூடாது சார்” என்று கோபமாக சொன்னார்.
கடைசி வகுப்பு இன்ஜினியரிங் கிராபிக்ஸ்.. ஆனால் ஆங்கில ஆசிரியர் வகுப்பினுள்ளே நுழைந்தார். 
நுழைந்ததும், “சிவகுரு, செல்வராஜ் அண்ட் ராகேஷ் கோ டு வொர்க்-ஷாப்” என்றதும் மாலினியை முறைத்துக் கொண்டே செல்வராஜ் வெளியே சென்றான்.
செல்லும் வழியில் செல்வராஜ் மாலினியை திட்டிக் கொண்டே வரவும் ராகேஷ், “செல்வா டென்ஷன் ஆகாதே……..”
செல்வராஜ் முறைக்கவும் சிவகுரு, “மாலினி என்ன சொன்னா னு நமக்கு தெரியாது.. இவங்களா விசாரிக்க கூட நம்மளை கூப்பிட்டிருக்கலாமே”
செல்வராஜ், “அந்த மாலினி என்ன உலக அழகியா? ஏன் டா எல்லோரும் அந்த எட்டப்பிகே சப்போர்ட் பண்றீங்க?” என்று பல்லை கடித்துக் கொண்டு கூறினான்.
ராகேஷ், “செல்வா.. உன் முன்கோபம் தான் உன் எதிரி.. “ செல்வராஜ் ஏதோ சொல்ல வரவும் ராகேஷ், “வெயிட்.. நான் சொல்லி முடிச்சிக்கிறேன்.. குரு சொல்றது தான் கரெக்ட்.. உன் முன்கோபத்தை விட்டுட்டு யோசி.. மாலினி உண்மையை சொல்லிருந்தா உன்னை மட்டும் தான் கூப்பிட்டுருப்பாங்க.. யாரு னு உண்மை தெரியாம தான் நம்ம மூணுபேரையும் கூப்பிட்டிருக்காங்க”
செல்வராஜ், “நீ சொல்றபடியே இருந்தாலும் லாஸ்ட் டூ ரோஸ் னா.. சேகர்(ராஜசேகர்), விமல், பிரான்சிஸ், அமர், வினோத்தை ஏன் கூப்பிடலை? இதுல ஏதோ இருக்கு டா.. எனக்கு என்னவோ அந்த மாலினியை பார்த்தாலே பத்திட்டு வருது”
ராகேஷ் ஒரு மாதிரி பார்க்கவும் செல்வராஜ், “என்ன பார்க்கிற.. நீ எந்த பிரச்சனையில் மாட்டிருந்து யாராச்சும் போட்டு குடுத்தாலும் இதே ரியக்க்ஷன் தான் குடுப்பேன்” என்றான்.
ராகேஷ், “அதையே யோசிக்கலை.. மாலினி என்ன சொன்னானு நமக்கு தெரியாது.. இந்த வாத்தியார்கள் எதுவும் சொல்வான்க.. போட்டு வாங்கலாம்.. உன் கோபத்தில் எதையும் நீயாவே உளறி கொட்டிடாத..  ஜாக்கிரதையா தான் டீல் பண்ணனும்” என்று சொல்லி முடிக்கவும் வொர்க்-ஷாப் வந்தது..
மூவரும் ஒரே நேரத்தில் தனி தனியாக விசாரிக்கப்பட்டார்கள்.
ரவி சார் சிவகுருவை விசாரித்தார். (அவர் ஆங்கிலத்தில் விசாரித்ததை தமிழில் சொல்கிறேன்)
சார்,”உன் பெயரென்ன?”
“சிவகுரு”
“எங்கிருந்து வர?”
“அடையார்”
“நான் ஒரு வார்த்தை கேள்வியா கேட்கிறேன்?”
“இல்லை சார்”
“இப்போ இங்கே வந்ததிற்கான காரணம் தெரியுமா?”
“தெரியும் சார்”
“என்ன காரணம்?”
“விசாரணை”
“எதற்கு?”
“யாரோ பிரியா மேமை திட்டிட்டாங்க”
“பாண்டியன் சார் கிட்ட இப்படியா பேசுவ? அழகான இங்கிலீஷ் ல பேசுவியே”
“பாண்டியன் சார் கிட்ட அவர் இங்கிலீஷில் பதில் சொல்வேன்.. உங்க கிட்ட உங்க இங்கிலீஷில் பதில் சொல்றேன்”
ரவி சார் முறைத்துக் கொண்டே, “யார் யார் எப்படி எப்படி பேசுறாங்களோ அப்படி தான் பேசுவீங்களோ சார்”
“முடிந்தவரை”
“அப்போ பிரியா மம் திட்டினதும்.. அவகளை போல் பதிலுக்கு திட்டியது நீ தானே”
என்னோவோ சிவகுருவை மடக்கிவிட்ட உணர்வுடன் கெத்தாக பார்த்துக் கொண்டிருந்த ரவி சார் நொடி பொழுதில் சிவகுருவிடம் இருந்து வந்த பதிலில் சிறிது திணறி தான் போனார். 
“அவங்க பேசினது போலவே பேசுறதுக்கு அவங்க என்னிடம் கேள்வி கேட்கவில்லை.. ஸோ நான் திட்டலை” 
“அதை நான் எப்படி நம்புறது?”
“நான் நம்ப சொல்லலையே”
ரவி சார் தன் கோபத்தை அடக்கிக் கொண்டு நிதானமாக, “ஓகே.. நாளைக்கு உன் அப்பாவை கூட்டிட்டு வந்து சேர்மன் பாரு”
“எதுக்கு?”
“…” சார் முறைத்துக் கொண்டு நின்றார்.
“நான் தான் சொன்னேன் னு உங்க கிட்ட ப்ரூஃப் இருக்கா சார்?”
“நீ பேசுறதில் இருந்தே தெரிதே”
“நீங்க கேட்டதுக்கு தான் பதில் சொன்னேன்”
“மரியாதை கொடுத்து பேசவே தெரியாதா உனக்கு?”
“…”
“என்ன பதிலே காணும்”
“நான் எதாச்சும் சொல்ல.. நீங்க மரியாதையுடன் பேச தெரியாதா னு கேட்பீங்க.. தேவையா எனக்கு”
ரவி சார் பல்லை கடித்துக் கொண்டு, “திமிர்.. உடம்பு முழுவதும் திமிர்”
சிறு மௌனம் நிலவியது, பிறகு சிவகுரு, “சார் நான் அதை சொல்லலை.. தட்ஸ் ஆல்”
“சரி.. நீ சொல்லலைனே வச்சிக்குவோம்…………”
“நிஜமாவே நான் சொல்லலை”
“சரி.. அப்போ யாரு சொன்னது?”
“எனக்கு தெரியாது”
“பொய் சொல்லாதே”
“நிஜமா எனக்கு தெரியாது”
“யார் சொன்னது னு சொல்லு உன்னை விட்டுறேன்”
“எனக்கு தெரியாது”
“என்ன டா தெரியாது தெரியாது னு சொல்லிட்டு இருக்க.. நீ தான் சொன்னனு ஒத்துக்கோ இல்லை யாரு னு சொல்லு”
“நான் சொல்லலை.. யார் சொன்னானு எனக்கு தெரியாது”
“அது எப்படி டா தெரியாம போகும்.. மூணுபேரும் அடுத்தடுத்து தானே உட்கார்ந்திருந்தீங்க”
“வேற யாரும் சொல்லிருக்கலாமே”
“உங்க மூணுபேர்ல தான் யாரோ சொல்லிருக்கீங்கனு உறுதியா தெரியும்.. நீ சொல்லலைனா செல்வராஜ் இல்லை ராகேஷ்.. யார் சொன்னா?”
“எனக்கு தெரியாது”
பொண்ணுங்களை சுலபமாக மிரட்டிய ரவி சார் சிவகுருவிடம் திணறத் தான் செய்தார். செய்வது அறியாது, “வெளியே காத்திரு.. திரும்ப கூப்பிடுறேன்” என்றார்.
சிவகுருவை விசாரித்த அதே நேரத்தில் செல்வராஜ் சந்தித்த கேள்விகள் இதோ:
சார், “நீ தானே சொன்ன?”
“நான் சொல்லலை சார்”
“நீ தான் சொன்ன னு தெரியும் உண்மையை ஒத்துக்கோ”
“என்ன ப்ரூஃப் சார்?”
“உன் கிளாஸ்மேட் தான் சொன்னது”
“நான் தான் சொன்னேன்னா எதுக்கு சார் சிவகுரு, ராகேஷ் விசாரிச்சுட்டு இருக்கீங்க?”
பதில் சொல்ல முடியாமல் திணறிய ஆசிரியர் தன்னை சமாளித்துக் கொண்டு, “நீ தான் சொன்னங்கிறதை உறுதி பண்றதுக்கு”
“நான் சொல்லலை..”
“நீ தான் சொன்னன்னு மத்தவங்க சொல்றாங்களே”
“யாரு?”
“அது உன்னிடம் சொல்ல வேண்டியது இல்லை”
“..”
“என்ன?”
“நான் சொல்லலை.. நீங்க நம்புறதா இல்லை.. அதுக்கு நான் ஒன்னும் செய்ய முடியாது சார்”
இந்த ஆசிரியரும் செய்வதறியாது, “வெளியே காத்திரு.. திரும்ப கூப்பிடுறேன்” என்றார்.
பிரகாஷ் சாரை திணறடிச்ச ராகேஷின் பதில்கள் இதோ:
சார், “விசாரித்ததில் எங்களுக்கு உண்மை தெரிஞ்சிருச்சு……….”
“அதான் உங்களுக்கே தெரிஞ்சிருச்சே அப்பறம் என்னிடம் என்ன சார் கேட்க போறீங்க?”
“கேட்கலை.. உண்மையை ஒத்துக்க சொல்றேன்”
“எந்த உண்மையை?”
“நீ தான் சொன்னது என்ற உண்மையை”
“அது உண்மை இல்லையே..”
“உன் கிளாஸ்மேட் தான் அப்படி சொன்னாங்க”
“யாரு?”
“அதை உன்னிடம் சொல்ல தேவையில்லை”
ராகேஷ் சிறு புன்னகையுடன், “சார்.. யார் சொன்னதுன்னு உங்களுக்கு தெரியாது.. தெரியாதனால தான் எங்க மூணுபேரையும் விசாரிச்சுட்டு இருக்கீங்க.. “
“உங்க மூணுபேரில் யாரோ தான் சொன்னது என்பது உறுதியான செய்தி” 
“ஸோ மூணுபேரையும் ஒரே நேரத்தில் தனியா விசாரிச்சு போட்டு வாங்க பார்க்குறீங்க” என்று சிரிக்கவும் 
பிரகாஷ் சார், “என்னடா முடியாது னு சொல்ல வரியா?”
“…”
“யாருன்னு சொல்லலைனா மூணுபேருக்கும் சேர்த்து பனிஷ்மென்ட் கிடைக்கும்”
“மிரட்டுறீங்களா சார்..”
“உண்மையை சொல்லைனா என்ன நடக்கும் னு சொல்றேன்”
“..”
“யாருன்னு சொன்னால் அவனுக்கு மட்டும் தான் பனிஷ்மென்ட்”
“தெரியாது”
“ராகேஷ்.. நீ சொல்லலைனு எனக்கு தெரியும்.. உனக்கு அது யாருன்னு தெரியும்.. சொல்லு”
“சொல்ல மாட்டேன் சார்”
சிவகுரு, செல்வராஜ் மற்றும் ராகேஷ் வொர்க்-ஷாப் வெளியே நின்று கொண்டிருக்க ஆசிரியர்கள் அடுத்து என்ன செய்வதென்று ஆலோசித்துக் கொண்டிருந்தனர்.
பிரகாஷ், “என்ன ரவி பண்றது?”
ரவி, “தமா துண்டு சைசுல இருந்துட்டு என்ன பேச்சு பேசுறான் சார்.. உச்சந் தலையில் இருந்து உள்ளங் கால் வரை திமிர்”
பிரகாஷ், “இவனாவது பரவா இல்லை ரவி.. ராகேஷ் ‘எங்களிடம் போட்டு வாங்க முடியாது.. நானும் சொல்ல மாட்டேன்.. உன்னால் முடிந்ததை பார்த்துக்கோ’ னு தெனாவெட்டா நிற்கிறான்”
மற்றொரு ஆசிரியர், “செல்வராஜ்யும் அதே தான்.. ‘நான் சொல்றதை நீங்க நம்பலை.. அதுக்கு நான் ஒன்னும் செய்ய முடியாது.. உங்களால் முடிந்ததை பார்த்துகோங்க’ னு தெனாவெட்டா நிற்கிறான்”
இவர்களை விசாரித்து, ஆசிரியர்கள் தங்களுக்குள் ஆலோசித்து ஒருமுடிவு எடுப்பதற்குள் கல்லூரி முடியும் நேரமே வந்துவிட்டது. இறுதியில், கடைசி இரண்டு வரிசையில் இருக்கும் மற்ற மாணவர்களிடம் அடுத்த நாள் விசாரிக்க வேண்டும் என்ற முடிவிற்கு வந்தனர்.
சிவகுரு, செல்வராஜ், ராகேஷ் வகுப்பறைக்கு வந்த பொழுது கடைசி இரு வரிசையை சேர்ந்த மாணவர்கள் மட்டும் இருந்தனர். இவர்களின் வரவிற்காக காத்துக் கொண்டிருந்தனர். 
விசாரணை பற்றிய விவரங்களை சொல்லி முடித்த பின் ராகேஷ் மற்ற மாணவர்களிடம், “டேய்.. நாளைக்கு உங்களிடம் கேட்கலாம்.. என்ன கேட்டாலும் ‘தெரியாது’ னு மட்டும் சொல்லுங்க.. ‘நீ தான் சொன்னது னு தெரியும்.. பரென்ட்ஸ் கூட்டிட்டு வா.. சேர்மன் மீட் பண்ணனும்.. சஸ்பென்ஷன்.. அது இது னு மிரட்டினாலும்.. நீங்க சொல்ல…………”
மற்றவர்கள், “தெரியாது” என்று கோரஸாக கூறினர். 
செல்வராஜ் கோபமாக, “அந்த மாலினியை……”
ராகேஷ், “செல்வா நம்மளை மிரட்டினது போல் அவளையும் மிரட்டிருப்பாங்க.. பயத்தில் நம்ம பெயரை உளறியிருக்கலாம்”
சிவகுரு சிறு குழப்பத்துடன், “மாலினி பயப்படுற ஆள் இல்லை டா.. ஆனா……..”
ராகேஷ் சிவகுருவை ஒருமாதிரி பார்க்கவும் சிவகுரு, “அவ என் ஸ்கூல் மேட் டா.. அதை வைத்து சொன்னேன்”
ஒரு மாணவன், “ஸ்கூல் மேட்-டா.. சொல்லவே இல்லையே மச்சான்.. வீடு எங்க னு தெரியுமா? எத்தனை வர்ஷம் டா ஒன்னா படிச்சீங்க” என்று சிறிது வழியவும்,
செல்வராஜ் கடுப்புடன், “இப்ப ரொம்ப முக்கியம்.. உன் ஜொள்ளு பாக்டரியை மூடு”
செல்வராஜ் சிறிதும் குறையாத கோபத்துடன் இருப்பதை பார்த்த ராஜசேகர், “என்ன செல்வா?”
செல்வராஜ், “அவளை நினைச்சாலே கோபம் தலைக்கு மேல ஏறுது டா.. அழகு என்ற திமிர்.. ஸ்ரீராம் கிட்ட திமிரா பேசலையா.. அவளை.. அவளை.. கண்டிப்பா எதாச்சும் செய்யணும் டா….”
‘மாலினி அப்படி இல்லை’ என்று சொல்ல வந்த சிவகுரு செல்வராஜின் கோபத்தை பார்த்து, ‘இப்ப எது சொன்னாலும் இவன் மூளையை எட்டாது.. அப்பறமா பேசிக்கலாம்’ என்று அமைதி காத்தான்.
வாசல் பக்கம் நிழலாடுவதை உணர்ந்து மாணவர்கள் திரும்பி பார்க்க, அங்கே சிறு பயத்துடன் பிருந்தாவும் கோபமும் எரிச்சலுமாக மாலினியும் நின்று கொண்டிருந்தனர். 
மாலினியை பார்த்ததும் செல்வராஜின் BP  ஏறியது. எங்கே மாலினியை அடித்து விடுவானோ என்ற பயத்தில் ராகேஷ் அவன் கையை பற்றிக் கொண்டு நிற்க செல்வராஜ் மாலினியை முறைத்துக் கொண்டே சிவகுருவிடம், “வந்துடா டா உன் ஸ்கூல் மேட் எட்டபி” 
மாலினி செல்வராஜை முறைத்துக் கொண்டே பிருந்தாவிடம், “என்னடி நின்னுட்டு இருக்க? துஷ்டனை கண்டா தூர விலகு னு தெரியாது.. சீக்கிரம் போய் உன் டிப்பன் பாக்ஸ் எடுத்துட்டு வா” என்று கடுமையான குரலில் கூறினாள்.
பிருந்தா உள்ளே செல்ல கால் எடுத்து வைக்கும் முன் செல்வராஜ் தன் கையை உதறிவிட்டு அவர்கள் அருகே கோபமாக வந்தான். மாலினியிடம் கோபமாக, “ஏய் துஷ்டன் னு யாரை சொல்ற?”
செல்வராஜின் கோபத்தை கண்டு பிருந்தா நடுங்க மாலினியோ சிறிதும் பயமின்றி, “உனக்கே தெரியும்”
“என்னடி திமிரா?”
“உன்னை போல் எல்லோரையும் நினைக்காதே”
“ஏய்” என்று செல்வராஜ் கை ஓங்க, ராஜசேகரும் சிவகுருவும் அவனை தடுத்து நிறுத்தினர்.
மாலினி, “நாலு வருஷம் ஒன்னா படிக்க  போறோம் சண்டை வேண்டாமே என்ற எண்ணத்தில் தான் அமைதியா இருக்கிறேன்” என்று செல்வராஜிடம் சொன்னவள் சிவகுருவிடம், “சிவா உன் பிரெண்டிடம் சொல்லு.. அவனது காட்டுமிராண்டி தனத்துக்கு பயபடுற ஆள் நான் இல்லை னு” என்று சொன்னவள் வேகமாக வெளியே சென்றாள். பிருந்தாவும் சென்றாள்.
“திமிர் பிடிச்சவளே.. வெளிய வாடி..” என்ற செல்வராஜின் மிரட்டல் அவர்களை தொடரவும் பிருந்தா, “மாலு” என்று தயக்கத்துடன் அழைத்தாள்.
மாலினி, “குரைக்கிற நாய் கடிக்காதுடி.. விடு பார்த்துக்கலாம்..” என்று சொன்னவள் தனக்கு தானே, “சை பேசாம போட்டு குடுத்துருக்கணும்” என்று முணுமுணுத்தாள்.
பிருந்தா, “மாலு.. டிப்பன் பாக்ஸ் எடுக்கவே இல்லையே.. நீ கன்டீன் போ.. நான் எடுத்துட்டு வரேன்”
மாலினி, “தனியாவா?”
“அவனுக்கு உன் மேல் தான் கோபம்.. என்னை ஒன்னும் செய்ய மாட்டான்” என்று தைரியமாக சொல்லிவிட்டு வகுப்பறை நோக்கி சென்றவளின் இதயம் வகுப்பறை நெருங்கவும், பயத்தில் வேகமாக அடிக்கத் தொடங்கியது.
வகுப்பறையில் செல்வராஜை ராகேஷ் திட்டிக் கொண்டிருந்தான், “அறிவு இருக்கா டா உனக்கு.. ஏற்கனவே ஒரு பிரச்சனை  முடிந்த பாடு இல்லை அதுக்குள்ள அவளை அடிக்க கை ஓங்குற….”
செல்வராஜ், “அவ பேசுன பேச்சுக்கு மூடிட்டு இருக்க சொல்றியா?…..(ஏதோ கெட்ட வார்த்தை சொல்ல நினைத்தவன் வாயை இறுக மூடினான்)
ராகேஷ், “நீ பேசினதுக்கு அவ பதிலுக்கு பேசினா……..”
செல்வராஜ், “எல்லோரும் அந்த எட்டபிக்கே சப்போர்ட் பண்ணுங்க டா” என்று கத்திவிட்டு வெளியே சென்றான். 
புயல் போல் தன் எதிரே வந்த செல்வராஜை கண்ட பிருந்தாவின் கால்கள் அசைய மறுத்தது. வாசலில் அதிர்ச்சியுடன் நின்ற பிருந்தாவிடம் ராகேஷ், “என்ன பிருந்தா?” என்று வினவியதும் தான் அவளுது மூளைக்கு சுய-உணர்வு எட்டியது.
“டி..டிப்..டிப்பன் பாக்ஸ்” என்று தந்தியடித்தாள்.
ராகேஷ் ராஜசேகரிடம் கண்ணசைக்க அவன் பிருந்தாவின் இடத்தில் இருந்து அவளது டிபன் பாக்ஸ் எடுத்து தந்தான்.
அதை வாங்கிய பிறகும் அவள் செல்லாமல் நிற்கவும், ‘என்ன?’ என்பது போல் ராகேஷ் பார்க்க அவள், “சேகர் உன்னிடம் கொஞ்சம் தனியா பேசணும்” என்று தணிந்த குரலில் கூறினாள்.
ராஜசேகர், “இங்கேயே சொல்லு.. யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க” என்று கூறவும் ஒரு மாணவன், “டேய்.. பர்சனல்லா பேசலாம்.. எங்களை வச்சுட்டு எப்படி” என்று கிண்டலடிக்கவும் ராஜசேகர் அவனை முறைத்தான்.
அந்த மாணவன் என்ன சொல்லவருகிறான் என்பதை யோசிக்கும் நிலையில் பிருந்தா இல்லை. அவளது வீடும் ராஜசேகரின் வீடும் ஒரே தெருவில் இருந்ததால் அவனிடம் பேசலாம் என்று நினைத்தாள். 
ராஜசேகர், “பயப்படாம சொல்லு” என்றதும் பிருந்தா, “மாலினி நல்ல பொண்ணு.. செல்வராஜ்…..” என்று அவள் தயங்கவும், ராஜசேகர், “மாலினியை ஒன்றும் செய்ய மாட்டான்.. நீ பயபடாம போ”
“இல்லை.. யாரு சொன்னது னு மாலினிக்கு தெரியும் என்பதே இப்ப தான் எனக்கே தெரியும்.. அவ எங்களிடமே சொல்லாத போது கண்டிப்பா சார் கிட்ட சொல்லிருக்க மாட்டா னு புரிஞ்சிக்க ட்ரை பண்ணுங்க.. Staff ரூம் ல என்ன நடந்துதுனா……….” என்று நடந்ததை கூறி முடித்தவள் வெளியே ஒரு ஆசிரியர் இருந்ததால் தான் அதை மாலினி ஸ்ரீராமிடம் சொல்லவில்லை என்றும் கூறினாள்.
“சரி நீ கிளம்பு.. நாங்க செல்வா கிட்ட சொல்றோம்” என்று கூறி பிருந்தாவை அனுப்பி வைத்தான்.
தன் தோழியை செல்வராஜின் கோபத்தில் இருந்து காப்பாற்றி விட்ட நிம்மதியுடன் பிருந்தா கன்டீன் நோக்கி கிளம்பினாள். ஆனால் அவளுக்கு தெரியாது, தற்பொழுது மாலினி வேறொரு பிரச்சனையில் இருக்கிறாள் என்பது.
ராஜசேகர் ஏதோ சொல்ல வரவும் ராகேஷ், “சேகர் வெளிய போய் பேசிக்கலாம்” என்று கூறவும் அனைவரும் கிளம்பினர்.
செல்லும் வழியில் ஒரு மாணவன், “அது என்னடா மச்சான் பச்சி உன்னிடம் மட்டும் தனியா பேசணும் சொல்லுச்சு?” என்று கிண்டலாக கூற,
மற்றொருவன், “அதானே! இத்தனை பேர் நின்னுட்டு இருக்கோம்.. உன்னை………”
ராஜசேகர், “டேய்.. அவ வீடும் எங்க வீடும் ஒரே தெருல இருக்குது.. ஸோ………………..”
“அட பாவிகளா….” என்று முதலில் பேசியவன் கூறவும் அனைவரும் ‘என்ன’ என்பது போல் அவனை பார்க்கவும் அவன் சிவகுருவை பார்த்து, “இவன் என்னடானா மாலினி ஸ்கூல் மேட் னு சொல்றான்.. நீ என்னடானா ஒரே தெரு னு சொல்ற..”
இரண்டாவதாக பேசியவன், “அதுல உனக்கு என்னடா கஷ்டம்?”
சிவகுரு சிரித்துக் கொண்டே, “கஷ்டம் இல்லை டா பொறாமை” என்றான்.
முதலாவதாக பேசியவன் சிவகுருவை முறைக்கவும் மற்றவர்கள் சிரித்தனர். 
முதலாவதாக பேசியவன் இரண்டு நிமிடங்கள் கழித்து சிவகுருவிடம், “மாலினி நம்பர் இருக்கா டா?” என்று மெதுவாக கேட்டான்.
சிவகுரு, “அவ என் ஸ்கூல் மேட் னு தான் சொன்னேன்.. கிளாஸ் மேட் னு சொல்லலை.. ரெண்டு பேரும் வேற வேற வகுப்பு”
“கவுத்துடியே டா” 
இரண்டாவதாக பேசியவன், “நம்பர் கிடைத்தால் மட்டும் என்ன செஞ்சுர போற? அதுக்குலாம் முக ராசி வேணும் டா”
“எங்க எனக்கு செட் ஆகிருமோ னு பொறமை டா உனக்கு”
“பொறாமை பட்டுடாலும்.. போ டா..” 
இப்படி கேலியும் கிண்டலுமாக சில நொடிகள் சென்றது. கல்லூரி அருகே இருந்த பிஸ்ஸா-கார்னர் போனார்கள். ஆர்டர் குடுத்துவிட்டு தீவிரமாக பேச ஆரம்பித்தார்கள்.
சிவகுரு, “மாலினி நம்ம பெயரை சொல்லலை.. அப்பறம் எப்படி நம்ம மூணுபேர்ல யாரோ னு உறுதியா சொல்றாங்க?”
ராகேஷ், “நானும் அதை தான் யோசிச்சுட்டு இருக்கேன்”
குழுவில் ஒருவன், “ஆஷா.. அமுதா”
ராகேஷ், “அமுதா இல்லை டா.. சக்திவேல் மூலம் விசாரிச்சாச்சு”
ராஜசேகர், “ஆஷா கண்டிப்பா இருக்காது…”
சிவகுரு ராஜசேகருக்கு  மட்டும் கேட்கும் குரலில், “உன் ஆளோட பிரென்ட்னதும் சப்போர்ட்டா” என்றதும் ராஜசேகர் அவனை முறைத்தான், பிறகு மற்றவர்களிடம்,
“சார் மிரட்டினதும் ஆஷா அழ ஆரம்பிச்சுருப்பா.. ஸோ மேலே மிரட்டிருக்க மாட்டங்க.. அது மட்டுமில்லை அவளுக்கு எங்கிருந்து சத்தம் வந்ததுனே தெரியாதுன்னு சொன்னாள்”
மாலினியின் நம்பர் கேட்டவன், “ஆஷாவும் உன்னிடம் வந்து சொன்னாளா?”
ராஜசேகர், “என்னிடம் சொல்லலை.. ஜெனிஷாவிடம் சொல்லிட்டு இருந்தா.. அது என்ன ஆஷாவும்?”
“பிருந்தா மாதிரி இவளும் தனியா கூப்பிட்டு பேசினாளோனு கேட்டேன்”
“பிருந்தா செல்வா கோபத்தை பார்த்து பயத்தில் இருந்தா.. அந்த நேரத்தில் ஒரே தெருவில் இருக்குற என்னிடம் பேசுறது அவளுக்கு கொஞ்சம் கம்ஃபர்ட்டபில்லா பீல் பண்ணிருப்பா.. அதான் என்னிடம் பேசினா.. இது ஓட்டுற நேரம் இல்லை.. பேச்சை திசை திருப்பாதே.. லெட்ஸ் பீ சீரியஸ்” என்று கறாராக கூறி முடித்தான்.
அதன் பிறகு கிண்டலுக்கு இடம் கொடுக்காமல் அனைவரும் தீவிரமாக சிந்திக்க தொடங்கினர். ஆனால் என்ன யோசித்தும் அவர்களுக்கு விடை கிடைக்கவில்லை. இதற்கிடையில் ராகேஷ் செல்வராஜை கைபேசியில் அழைத்து அவனை பிஸ்ஸா-கார்னர் வர சொன்னான்.
 
மாலினி கன்டீன் சென்று கொண்டிருந்த பொழுது வழியில் சீனியர் மாணவன் கிருஷ்ணன் மாலினியை அழைத்தான்.
கிருஷ்ணன், “புரிஞ்சுகோ மாலினி….”
“எதை புரிஞ்சுக்கணும்?”
“என் அன்பை.. நான் எவளோ சின்சியரா உன்னை ல…………….”
“ஸ்டாப் இட்.. ஆல்ரெடி என் முடிவை சொல்லிட்டேன்.. “
“மாலினி நீ இல்லாம என்னால் வாழ முடியாது”
“சினிமா வசனத்தை பேசி டோன்ட் வேஸ்ட் மை டைம்”
“இது வசனம் இல்லை மாலினி…. ட்ரை டு…………………..”
ஸ்ரீராமன், “எனி ப்ராப்ளம் மாலினி?”
மாலினி மனதினுள், ‘இவன்க தொல்லை தாங்கலையே’ என்று கூறிக் கொண்டாள்.
கிருஷ்ணன், “யாரு டா நீ.. தேவை இல்லாம என் லைனில் கிராஸ் பண்ணிடே இருக்க!”
“தேவையோட தான் கிராஸ் பண்றேன்”
“டேய்.. என் லைனில் வராதே.. அது உனக்கு நல்லதில்லை”
“வந்தா என்ன செய்வ?”
“எதுவும் செய்வேன்”
“உன் மிரட்டலை வேற எங்கயாது வச்சிக்கோ”
“எனக்கும் மாலினிக்கும் நடுவில் வர நீ யாரு டா?”
“அவ பிரெண்ட்”
“நான் அவ லவர்”
“அதை அவ சொல்லட்டும்”
“என்ன விட்டா பேசிட்டே போற………….” என்று கிருஷ்ணன் ஸ்ரீராமனை அடிக்க ஆரம்பிக்க ஸ்ரீராமனும் அவனை அடிக்க ஆரம்பித்தான்.
மாலினியின் நிலைமையோ பரிதாபமாக இருந்தது. அவளுக்கு கிருஷ்ணனின் பேச்சும் பிடிக்கவில்லை, ஸ்ரீராமன் தன் மீது உரிமை எடுப்பதும் பிடிக்கவில்லை. தனக்காக தனக்கு பிடிக்காத இருவரும் அடித்துக் கொள்வதை தடுக்க வழியில்லாமல் நின்று கொண்டிருந்தாள்.
சற்று தொலைவில் ஷங்கரும் புழாவும் செல்வது தெரிந்தது. மாலினி “ஷங்கர்.. ஷங்கர்” என்று கத்தி அழைத்தாள். ஷங்கரும் புழாவும் அவசரமாக ஓடி வந்தனர். கிருஷ்ணனையும்  ஸ்ரீராமனையும் பிரித்தனர்.  கிருஷ்ணனும் ஸ்ரீராமனும் சண்டைக் கோழியாக முறைத்துக் கொண்டு நின்றனர்.
மாலினி கிருஷ்ணனிடம், “கிருஷ்ணன்.. ஸ்ரீராம் அடித்ததிற்காக நான் மன்னிப்பு கேட்டுகிறேன்.. இந்த பிரச்னையை இத்தோடு விட்டுருங்க.. மன்னிப்பு கேட்டதினால் மனக்கோட்டை கட்ட வேண்டாம்.. இப்பொழுதும் சொல்றேன்.. தேவை இல்லாத எண்ணங்களை வளர்த்துக்காதீங்க.. ஸ்பை ஸ்குவார்ட் யாரும் வரதுக்குள்ளே கிளம்புங்க” என்றாள்.
கிருஷ்ணன் ஸ்ரீராமனை முறைத்துக் கொண்டே மாலினியிடம், “உனக்காக போறேன்” என்று சொல்லிவிட்டு சென்றான்.
ஸ்ரீராமன், “ஏன் மாலினி சாரி கேட்ட?” என்று சிறு கோபத்துடன் கேட்க, மாலினி அவனை முறைத்தாள்.
மாலினி, “நீ ஏன் சண்டை போட்ட?”
“உனக்கு தானே உதவி பண்ணேன்”
“நான் உன்னிடம் கேட்டேனா?”
“மாலினி..”
“தேவை இல்லாமல் என் விஷயத்தில் தலையிடாதே..”
“நீ என்ன அவனை லவ் பண்றியா?”
“வாட்?”
“..”
“நானே சமாளிச்சிருப்பேன்.. உன்னால் பிரச்சனை பெருசா தான் ஆகும்.. நான் இப்ப சாரி கேட்கலைனா சீனியர் ஜூனியர் பிரச்சனையா கூட மாறிருக்க வாய்ப்பு இருக்குது……..” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஸ்பை ஸ்குவார்டை சேர்ந்த ஒருவர் வந்தார்.
“உங்களை சேர்மன் கூப்பிடுறார்” என்றார்.
மாலினி மனதினுள், ‘அடுத்த என்குயரி யா!’ என்று நொந்துக் கொண்டாள்.
நால்வரும் சேர்மன் அறையை நோக்கி சென்றனர். அவர்கள் கூடவே ஸ்பை ஸ்குவார்டை சேர்ந்தவரும் வரவும் யாரும் எதுவும் பேசாமல் அமைதியாக சென்றனர்.
மழை தொடரும்….

Advertisement