தன்வி காரை விட்டு இறங்கவும், ஆரத்தியுடன் பெரியம்மா தயாராக இருந்தார். “எனக்கெதுக்கு ஆரத்தி எல்லாம்?” தன்வி உடனே மறுக்க,
“விருந்தாளிக்கு ஆரத்தி எடுக்கிறது எங்க வழக்கம். பேசாம நில்லு” என்று அந்த முரட்டு பெரியம்மா அதட்டியதுடன், ஆரத்தி எடுத்தே அவளை வீட்டுக்குள் விட்டார்.
தன்விக்கு அவர்கள் உள்குத்து புரிந்தும், தானே எதுவும் பேசிவிட கூடாது என்று அமைதியாகிவிட்டாள்.
“பாட்டியை பார்க்கலாமா?” என்று கேட்க.
“அவங்க இப்போதான் தூங்க ஆரம்பிச்சாங்க” என்றவர்கள், “உன் ரூம்ல போய் முகம், கை கால் கழுவிட்டு வா. சாப்பிடலாம்” என்றார் பெரியம்மா.
“என் ரூமா?” என்று அவள் முகம் சுருக்க,
“முன்ன நீ இருந்த ரூம் தான்” என்றார் பெரியம்மா.
“இல்லை இருக்கட்டும்” என்று தன்வி மறுத்துவிட, அவளை சாப்பிட அழைத்தனர்.
“உங்க ஆபிஸ்ல தான் சாப்பிட்டேன்” என்று தன்வி சொல்ல, அவளுக்கு குடிக்க கொண்டு வந்தனர்.
இதுவரை அவள் தேசிகனை கேட்காதது, பார்வையால் கூட தேடாதது அவர்களுக்கு வருத்தமே!
தேசிகன் தெளிவாக சொல்லிவிட்டான் தான். தன்வி கழுத்திலும் அவனின் மாங்கல்யம் இருப்பதற்கான அடையாளம் இல்லை. ஆனாலும் எதிர்பார்ப்பு தந்த ஏமாற்றத்தில் முகம் சுருங்கி போனது.
ஓர் கனமான அமைதி அங்கு நிலவ, யாருக்கும் என்ன பேச என்று தெரியவில்லை. தன்விக்கு அவர்களின் மௌனம் தான் அங்கு வந்தது தவறோ என்று எண்ண வைத்துவிட்டது.
அவளின் முகத்தை பார்த்தவாறே வீட்டுக்குள் வந்த தேசிகன், “வாங்க. வாங்க” என்று அவளை வரவேற்றான்.
தன்விக்கு அவனை பார்த்து புன்னகைக்க கூட தோன்றவில்லை. எல்லாம் இவனால தான்!
அவளிடம் சட்டென வெளிப்பட்ட கோவத்தில், தேசிகன் புருவம் உயர்த்தியதுடன், என்ன என்று கேள்வி கேட்டான்.
“நான் இங்க வந்தது இவங்களுக்கு பிடிக்கலைன்னா ஏன் என்னை இங்க கூட்டிட்டு வரணும்?” என்று அவனிடம் பெண் கேட்க,
“நீ தான் யாரோ வீட்டுக்கு வந்தது போல இருக்க? ரூமுக்கு போக சொன்னா போக மாட்டேங்கிற, சாப்பிட சொன்னா சாப்பிட மாட்டேங்கிற, குடிக்க கொடுத்தா வாங்கி கீழே வைக்கிற, பாட்டியை பத்தி மட்டும் கேட்டுட்டு, என் மருமகனை ஏன்னு கூட கேட்க மாட்டேங்கிற, என்ன நினைச்சிட்டிருக்க நீ?” என்று பெரியம்மா படபடவென பொரிய, தன்வி தான் அவரின் பேச்சில் மூச்சு வாங்கியதுடன் என்ன இது என்று தேசிகனை பார்த்தாள்.
“அத்தை. அவங்க”
“நீ பேசாம இரு மருமகனே, அவளுக்கு ஏத்துக்கிட்டு வராத சொல்லிப்புட்டேன்”
“உங்க மருமகனை நான் ஏன் கேட்கணும்? கேட்க மாட்டேன்” என்று தன்வி கடுப்பானாள்.
“ஏன்? ஏன் கேட்க மாட்ட? உனக்காக, நீ வேணும்ன்னு தானே அவன் ஒரு மாசம் ஜெயில்ல இருந்தான்”
“நான் அவரை இருக்க சொல்லலை. எல்லாம் என்னையே ஏன் கேட்கிறீங்க? நான் தான் சொல்லிட்டேனே, எனக்கு அவர் வேண்டவும் வேண்டாம். நான் பாட்டியை பார்க்க போறேன்” என்று தானே அவர் அறை கதவை திறந்து உள்ளே நுழைந்து விட்டாள்.
சாவித்திரி அங்கிருக்க, தன்வி அமைதியாக அவரின் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள். பாட்டி ஓய்ந்து போய் இருந்தார். வயதின் தளர்வு அவரிடம் இன்னும் அதிகமாகவே தென்பட்டது.
“இந்தா குடி” என்று சாவித்திரி அவளுக்கு தண்ணீர் கொடுத்தார்.
மறுக்காமல் வாங்கி குடித்த பெண்ணின் கையை தட்டி கொடுத்தவர், அவளுக்கான அமைதியை கொடுத்தார்.
‘தேசிகனை வேண்டாம் என்று சொல்லிவிட்ட பின், நான் இங்கு வந்திருக்கவே கூடாது. என்னோட தவறு தான் இது’
தன்வி இதற்கு முன் இந்த வீட்டில் இருந்த இடம் வேறு. இப்போது இருக்கும் அவளுக்கான இடம் வேறு.
இரண்டையும் பெண் அன்றும் ஏற்றுக்கொள்ள வில்லை, இன்றும் ஏற்று கொள்ள தயாரில்லை.
ஆனாலும் தேசிகன் குடும்பத்தாருக்கும், இவளுக்கும் ஏதோ விட்ட குறை, தொட்ட குறை என்பது போல், மெல்லிய கயிறு ஒன்று இணைத்து கொண்டே தான் இருக்கிறது.
தேசிகன் கட்டிய தாலி கயிறு தான் அது என்பது அவனின் குடும்பத்தார் எண்ணம். ஆனால் தன்விக்கு அப்படி சிறிதும் இல்லை.
கடத்தி வந்திருக்கிறார்கள் என்ற நினைப்பில்லாமல், இவர்களுடன் விளையாட்டாக இருந்த அந்த நாட்களில், அவள் வைத்துவிட்ட சிறு பாசம், எதார்த்தமாக பழகும் இவர்களின் குணம் பெண்ணுக்கு பிடித்துவிட்டது. பாட்டியின் அக்கறை, அன்பு இவர்களுக்கிடையே கூடுதல் பாலம்.
இதோ இன்றும் அவருக்காக தானே வந்தாள்! அவரின் உடல்நிலை ஆராய்ந்தவள், தன்னை நிதானத்திற்கு கொண்டு வந்தாள்.
சாவித்திரியை பெண் திரும்பி பார்க்க, அதுவரை அவளையே பார்த்திருந்தவர் மெலிதாக புன்னகைத்தார்.
தன்விக்கு அவரின் புன்னகை ஆச்சரியம். “என் மகன் செஞ்சது தப்புன்னு எனக்கு நல்லா தெரியும்” என்றார் சாவித்திரி.
“உன்னை போல அன்னைக்கு நான் தைரியமா தெளிவா இருந்திருந்தா இன்னைக்கு தேசிகன் உனக்கு இதை பண்ணியிருக்க மாட்டான்” என்று மொத்தமாக முடித்துவிட, தன்வி தான் பேச முடியாது போனாள்.
தேசிகன் பிறந்தே இருக்க மாட்டான் என்று சொல்கிறாரே!
சாவித்திரி அறையை விட்டு வெளியேற, வாசலில் தேசிகன் முகம் முழுதும் சிவந்து போய்.
அம்மாவின் பேச்சை கேட்ட கோவம் அவ்வளவு வெளிப்பட்டது அவனிடம்.
நேரே தன்வியிடம் வந்து அவளின் கை பிடித்து எழுப்பிவிட்டவன், “என்னடி பிரச்சனை உனக்கு?” என்று அவளிடம் அடிக்குரலில் சீறினான்.
“உனக்கு நான் வேணாம்ன்னா போடி. அதையே எந்நேரமும் தண்டோரா போட்டுக்கிட்டே இருக்க?”
“என்கிட்ட தான் சொல்லிட்ட இல்லை, திரும்ப என் வீட்டாளுங்க முன்னாடியும் சொல்லணுமா?
“அப்படியென்ன திமிர் உனக்கு? என்னை இந்தளவு கீழிறக்கிட்டே இருக்க?”
“நீ பெரிய உலக அழகின்னு எல்லாம் உன் கழுத்துல நான் தாலி கட்டலை. ஆனா அது தான் நான் பண்ண தப்பு, உனக்கு தாலி கட்டி என் கழுத்தை நானே இறுக்கிக்கிட்டேன். மூச்சு முட்டுதுடி உன்னால”
“தேசிகன் ரிலாக்ஸ் ஆகுங்க. ப்ளீஸ்” என்றாள் தன்வி.
“என்ன, என்ன ரிலாக்ஸ் ஆகணும்? இந்த வீட்டுக்கு பெரியவன் நான். என்னமோ நான் பெரிய பருப்புன்னு அவங்களுக்கு நினைப்பு. ஆனா உன்கிட்ட நான் எப்படி இருக்கேன் பாரு?”
“தேசிகன்”
“பேரை சொல்லாத. கொன்னுடுவேன். முதல்ல எங்கடி என் தாலி. கழட்டி வீசி எறிஞ்சுட்டியா என்ன?” என்று அவளின் மெல்லிய சங்கிலியை வெளியே இழுத்து பார்த்தவன், அதில் மாங்கல்யம் இல்லாததில் அவளின் கையை விட்டு தள்ளி நின்றுவிட்டான்.
“அம்மா என்னை வெறுத்துட்டாங்க. நீ என்னை வேண்டாம் சொல்லிட்ட. நிச்சயம் என் வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லை தான்”
“என்ன பேச்சு இது? நான் உங்களுக்கு யாருமே இல்லை, என்னாச்சு உங்களுக்கு?” தன்வி அவனை கோபத்துடன் அதட்டினாள்.
“உனக்கு நான் யாரும் இல்லை தான். ஆனா எனக்கு? ஒரு வருஷம் உன்னை என் பொண்டாட்டியா எனக்குள்ளே உருப்போட்டு வைச்சிருக்கேன். எனக்கு நானே என்ன பதில் சொல்லுவேன்?”
“அதெல்லாம் நீங்க ஏன் செய்றீங்க?”
“நீ எனக்கு தாலி கட்டியிருந்தா தெரிஞ்சிருக்கும் ஏன் அப்படி செஞ்சேன்னு”
“ச்சீ, என்ன பேச்சு இது?”
“ஹேய் என்ன ச்சீ? கட்டிப்பாரு எனக்கு?”
“உங்களுக்கு என்னமோ ஆச்சு”
“ஆகிட்டு போகுது. இப்போ என் குடும்பத்துக்கு நான் என்ன பதில் சொல்லட்டும்”
“உண்மையை சொல்லிட்டு, மூவ் ஆன் பண்ணுங்க. அதான் மாமா பொண்ணு இருக்காங்க இல்லை”
“தன்வி” கோவத்தில் அவள் கையை பிடித்து தன்னருகில் இழுத்துவிட்டான்.
“உனக்கு இருக்க அதே தன்மானம் என் மாமா பொண்ணுக்கும் இருக்கும். நீ வேணாம் சொன்னா அவ என்னை ஏத்துக்கணுமா? அப்படி ஒரு வாய்ப்பை நான் யாருக்கும் கொடுக்க மாட்டேன். உனக்கு நான் வேணாம்ன்னா, யாருக்குமே நான் வேணாம் தான்”
“அவரை கூப்பிடாத. உன்னை என் கண்ணுல காட்டின அவர்மேல செம கடுப்புல இருக்கேன்”
“நீங்க பண்ணதுக்கு அவர் மேல பழியா?”
“எனக்குள்ள குற்ற உணர்ச்சியை கொடுத்தார் இல்லை. அதனால தான் இந்த மகாராணிக்கு தாலி கட்டினேன்”
“அதை நான் அவர் உண்டியல்லே போட்டுட்டேன்”
“தன்வி. ப்ளீஸ். என்னை விடு. மேல பேசாத”
“நான் விட்டுட்டேன். நீங்க தான் அப்படியே நிக்கிறீங்க”
“போதும் நிறுத்தி தொலைடி” தேசிகன் அவனின் தலையை பிடித்து கொண்டான்.
“ஹேய். ரிலாக்ஸ்” என்று அவன் தோளை தொட, தேசிகனோ அவளை அப்படியே இழுத்து அணைத்து கொண்டான்.
ஜென்டிலான அணைப்பு அவளுக்கு பழக்கம். ஆனால் இவனோ நெருக்கமாக அல்லவா அணைத்திருக்கிறான்.
தேசிகனை விலக்க பார்க்க, ம்ஹூம். என்னமோ இவளுக்குள் இன்னமும் ஒண்டினான்.
ஆறுதலுக்கு அணைச்சிருக்கிற மாதிரி தெரியலையே!
தன்வி அவன் தலை முடியை பிடித்திழுத்து அவன் முகத்தை விலக்க, “என்ன பொண்ணு நீ. பொண்டாட்டியா தான் எனக்காக நீ இல்லை. ஒரு ஆறுதலுக்கு கூட கட்டி பிடிக்க விட மாட்டேங்கிற? ரொம்ப கொடுமைக்காரி நீ?” என்று அவளை குற்றம் சாட்டினான்.
“வாட்” என்றபடி அவனை விலக்கி தள்ளினாள்.
“ஆரம்பிச்சுட்டா” என்று சலித்து கொண்டவன், “அம்மா என்னை இப்படி பேசத்தான் நீதான் காரணம். எனக்காக ஒரு வாய்ப்பு கொடுத்திருந்தா குறைஞ்சா போயிருப்ப”
“ஓஹ் காட் உங்களோட எனக்கு முடியல”
“மனசு வைச்சா எல்லாம் முடியும்” என்றான் தேசிகன்.
“நான் பாட்டிக்காக மட்டும் தான் இங்க வந்தேன்” என்று மிகவும் அழுத்தமாக சொல்ல,