அந்த வாரம் முழுதுமே ஓய்வெடுப்பது, நண்பர்களுடன் அவுட்டிங் செல்வது, குடும்பத்துடன் நேரம் செலவழிப்பது என்று இருந்தாள்.
ராஜேந்திரன் அதன் பின் இரண்டொரு முறை அவளிடம் தேசிகன் பற்றி பேச முயன்று, மகளின் உறுதியான முடிவில் பின் வாங்கிவிட்டார்.
சுதாவிற்கு தேசிகன் குடும்பம் மேல் சிறிது விருப்பம் தான். ஆனால் மகள் வளர்ந்துவிட்டாள், இனியும் தான் என்ன சொல்வது, கேட்டால் சொல்லலாம் என்று அமைதியாக இருந்து கொண்டார்.
சதாசிவம் மட்டுமே மிகவும் உற்சாகமாக சுற்றி கொண்டிருந்தவர், குடும்பத்துடன் அதிக நேரங்களை பகிர்ந்து கொண்டார்.
படம் பார்க்க, பீச் அவுஸ் போல் எல்லாம் சென்று வந்தனர். ஸ்ருதி குடும்பமும் சென்னையிலே இருக்க, ராஜேந்திரன் மகன்களையும் வர வைத்து, அந்த வார இறுதியில் எல்லாம் ஒன்று கூடி விருந்து உண்டனர்.
“நெக்ஸ்ட் என்ன பிளான் தன்வி?” என்று ராஜேந்திரனின் மகன்கள் கேட்டனர்.
“கம்பெனிக்கு தான். நாளையில் இருந்து தன்வி நம்ம ஆபிஸ்க்கு வர போறா” என்று தந்தை அறிவிக்க,
“ஆமாண்ணா” என்று தன்வியும் சொல்ல, அதற்கொரு கொண்டாட்டம்.
SR குரூப்ஸ் அவர்கள் கம்பெனி. சில தொழில்களை உள்ளடக்கியது SR.
ராஜேந்திரன் மகன்கள், ஸ்ருதி ஆளுக்கொரு தொழில் பார்க்க, இப்போது தன்வியும் அவர்களுடன் இணைந்தாள்.
“தன்வி நம்ம புட் ப்ரொடக்ட்ஸ் பார்க்கட்டும்” என்று ராஜேந்திரன் சொல்ல, சதாசிவம் அண்ணன் முடிவை ஏற்று கொண்டார்.
ராஜேந்திரன் கட்டுப்பாட்டில் இருந்த தொழில் இப்போது தன்வி பொறுப்பு.
மறுநாளில் இருந்து தன்வி அலுவலகம் செல்ல ஆரம்பித்தாள். நாட்கள் அவளுக்கு வேகமாகவே சென்றது. அதிக சவால்கள் உள்ள தொழில். எல்லா வகையான மசாலும் தயாரித்து விற்றனர்.
மசாலாவிற்கான மூல பொருட்கள் கொள்முதல் முதல் கொண்டு, அதை தாயரித்து, மசாலா தூளாக மார்க்கெட்டில் கொண்டு சேர்ப்பது வரை எல்லாம் அதிக கவனம் எடுத்து செய்தனர்.
ராஜேந்திரனின் அடித்தளம் மிகவும் வலுவாகவே இருக்க, தன்விக்கு சமாளிக்க முடிந்தது. அனுபவமிக்க ஆட்களும் துணையாக நின்றனர்.
அடிக்கடி பெரியப்பாவிடம் கலந்தாலோசிக்கவும் செய்தாள். ராஜேந்திரன் அவர் பதவிக்கான பொறுப்பில் இருந்தாலும், மகளுக்கு எல்லாம் கற்று கொடுத்தார்.
“கஷ்டமா இருந்தா சொல்லு தன்வி. அப்பா உதவிக்கு வரேன்” என்று சதாசிவம் கேட்க,
“மசாலா பொருட்களை அனுப்பாததுக்கு காரணம் தெரிஞ்சுக்கலாமா?”
“அதான் அக்ரீமெண்ட் முடிஞ்சு போச்சு இல்லை”
“அக்ரீமெண்ட் மறுபடியும் போட்டுக்கலாம்”
“நாங்க கலந்து பேசி தான் பதில் சொல்ல முடியும்”
பெரியப்பாவிற்காக பொறுமையாக பேசி கொண்டிருந்தவளை அதிகமே சோதித்தான் எதிரில் இருந்தவன்.
“எங்களுக்கு ஸ்டாக் இல்லை. நீங்க கலந்து பேசிட்டு வர வரைக்கும் நாங்க காத்திட்டு இருக்க முடியாது”
“அது உங்க பிரச்சனை மேடம்”
“ஹலோ. என்ன உங்களை விட்டா வேற கம்பெனி இல்லைன்னு நினைச்சிட்டு இருக்கீங்களா?”
“அப்போ அங்கேயே வாங்கிக்கோங்க போங்க” என்று போனை வைத்துவிட்டான்.
தன்வி நம்ப முடியாமல் போனை வெறித்து பார்த்தவள், பெரியப்பாவிற்கு அழைத்து பொரிந்து தள்ளிவிட்டாள்.
“தன்வி. ரிலாக்ஸ், தொழில்ன்னா அப்படி இப்படி தான் இருக்கும்” ராஜேந்திரன் சாதாரணமாக சொல்ல,
“அவன் மரியாதை இல்லாம பேசுறான் பெரியப்பா. அவன்கிட்ட அப்படியென்ன பிஸ்னஸ் பண்ணனும்?”
“எனக்கு வேண்டியவங்க தன்வி”
“அதனால் தான் நானும் உங்ககிட்ட கேட்டுட்டு இருக்கேன் பெரியப்பா”
“சரி. எனக்கு கொஞ்சம் டைம் கொடு. நான் பேசிட்டு வரேன்” என்று வைத்தார் அவர்.
தன்வி உடனே அந்த கம்பெனி பற்றி ஆராய்ந்தாள். கிடைத்தது அவளுக்கான பதில்.
ஆம் அது தேசிகன் குடும்பத்தை சார்ந்த நிறுவனம். இந்த ஒரு வருடமாக தான் உள்ளே வந்திருக்கின்றனர்.
சில மசாலா பொருட்கள் அவர்களிடம் இருந்து தான் அதிகளவில் கொள்முதல் செய்கின்றனர். இப்படி சொல்லாமல், கொள்ளாமல் நிறுத்தினால் நிச்சயம் எங்கள் கம்பெனி பாதிக்கப்படும் என்று தெரிந்தே செய்திருக்கிறார்கள்.
தன்வியின் கோவம் எல்லை கடந்தது. உடனே போன் எடுத்து தேசிகனுக்கு அழைத்தாள். அவனின் எண் மட்டுமில்லை, அவனின் குடும்பத்தார் பலரின் போன் நம்பர்கள் இவளிடம் இருக்கிறது.
“எஸ் தேசிகன்” என்றான் எடுத்ததும்.
“உங்க வேலையை காமிக்கிறீங்க இல்லை” தன்வி கோவத்தில் வெடிக்க,