தன்வியிடம் மௌனம். “உன் அப்பா அந்த இடத்தில சரி தன்வி. மகளுக்காக மட்டும் தான் அவர் யோசிப்பார்” என்றார் மாமியார்.

தன்விக்கு என்ன சொல்ல முடியும்?

“தேசிகன் தொழிலை பத்தி யோசிக்கலை. அந்த ஒரு வருஷம் உன்னை பத்தி மட்டும் தான் யோசிச்சான். நீங்களும் சேர்ந்துட்டீங்க, அதுவே எங்களுக்கு சந்தோஷம். உனக்கு தெரியணும்ன்னு சொன்னேன். இதோட இதை விட்டு, ரெஸ்ட் எடு தன்வி” என்று வைத்திருந்தார் சாவித்திரி.

அதன்பின் தன்வி எவ்வாறு ஓய்வெடுக்க முடியும்?

முன்பென்றால் தேசிகன் தவறுக்கான தண்டனை இது, எனக்கென்ன என்று விட்டிருப்பாள். ஆனால் இப்போது அப்படி விட முடியவில்லை.

ஏதோ அவளை அழுத்தும் பாரத்தை உணர்ந்தவளுக்கு, பார்ட்டிக்கு தயாராகும் எண்ணமே இல்லை.

அவளுக்கான விருந்து என்ற கட்டுடன், ஏனோ தானோவென்று கலந்து கொண்டவள், விருந்து முடியவுமே கணவனை காண வந்துவிட்டாள்.

தேசிகன் அந்த வீட்டில் தான் இருப்பான் என்ற நிச்சயம் அவளுக்கு இருந்தது.

தேசிகனும் அவளை வாசலிலே எதிர்கொள்ள, அங்கேயே அவனை கட்டிக்கொள்ளும் வேகம்.

முரளி இருப்பதால் மிகுந்த கட்டுப்பாட்டுடன் அறைக்கு வந்ததும், கணவனை கட்டியணைத்து கொண்டாள்.

கட்டிலில் தலை சாய்ந்திருந்த இந்த நொடியும், தேசிகனின் நெஞ்சத்தை கேட்டது அவளிதயம்!

“தன்வி” என்று தேசிகன் அழைக்கும் குரல் கேட்டது.

“ஸ்வீட் இருக்கு வா” என்று வெளியே வந்த மனைவிக்கு பிடித்த இனிப்பை கொடுக்க, தன்வி விரும்பியே உண்டாள்.

“உன்னோட வெற்றிக்கு முரளி கொடுத்தது” என்று தேசிகன் சொல்ல,

“அப்படியா?. தேங்க்ஸ் முரளி” என்றாள் தன்வி புன்னகையுடன்.

“அப்புறம் உன் அப்பாவை கடத்தினது யார்ன்னு தெரிஞ்சு போச்சு போல” என்று தேசிகன் கேட்க, முரளியை தான் முறைத்து வைத்தாள் தன்வி.

“அண்ணா எனக்கு வில்லன், அவர் இல்லை. நீங்க தான்” என்றான் முரளி. “ஏதோ இப்போதான் பழசை மறந்து, என்னை பார்த்து சிரிச்சாங்க அண்ணி. அது பொறுக்கலை இல்லை உங்களுக்கு” என்று அவன் கடுப்பாக,

“டேய். உன் அண்ணி எனக்கு தெரியாம எதுவும் செஞ்சு வைக்க கூடாதுன்னு தான் கேட்டேன்” என்றான் தேசிகன்.

“ஏன் இப்போ மட்டும் உங்களுக்கு சொல்லிட்டா செய்வேன்” தன்வி கேள்வி உடனே வர,

“சும்மா தொழில் போட்டிக்கு எல்லாம் நீ தலையிடாத. உன் பெரியப்பா பார்த்துப்பார்” என்றான் தேசிகன்.

“சும்மா தொழில் போட்டியா? நான் சிங்கப்பூர் போன வேலை முடிய கூடாதுன்னு தான் அவரை கடத்தியிருக்காங்க. அதுவும் அப்பாக்கு அப்போ உடம்பு வேற சரியில்லை. கெஸ்ட் அவுஸ்ல ரெஸ்ட் எடுத்துட்டு இருந்தவரை போய்” என்று மகள் பொறும,

“என்னை அடிச்சு என்கிட்ட இருந்து கையெழுத்து வாங்க மட்டும், அவருக்கு உடம்பு நல்லா இருந்ததா?” தேசிகன் நக்கலாக கேட்டான்.

“ஆஹ்ன். அது”

“என் மாமா பொண்ணு கல்யாணத்தை மைண்ட்ல வைச்சுக்கிட்டு, எவ்வளவு கிரிமினலா திட்டம் போட்டிருக்கார்”

“ஏங்க. இப்போ பேச்சு அவரை கடத்தினவங்களை என்ன பண்றதுன்னு தான்”

“அவங்க தான் அவரை ஒண்ணுமே பண்ணலையே. அப்புறம் எதுக்கு ரிவென்ஜ்?”

“என்ன பண்ணியிருக்கணும்ன்னு சொல்றீங்க நீங்க?” என்று தேசிகனை நெருங்கி அடிக்க, முரளி தடையாக இருந்தான்.

“நான் ஜஸ்ட் சும்மா சொன்னேன்டி. என்ன முரளி”

“சும்மா சொன்னீங்களா இல்லையான்னு எனக்கெப்படி தெரியும்ண்ணா?” என்றான் முரளி அப்பாவியாக.

“டேய் இதென்ன?” என்று தேசிகன் தம்பியின் கழுத்தை பிடித்து வளைத்தான்.

“அவரை எதுக்கு ஹர்ட் பண்றீங்க? விடுங்க” என்று தேசிகன் கையை பற்றி இழுத்துவிட்டாள் தன்வி.

“இது அவனுக்கு வலிச்சிடுச்சா?”

“வலிச்சதே. பாருங்க கழுத்தெல்லாம் சிவந்து போச்சு” என்றான் முரளி.

“டேய்” என்று தேசிகன் தம்பியை அதிர்ந்து பார்க்க,

“எனக்கு உங்ககிட்ட பாதுகாப்பு இல்லை. நான் சதாசிவம் சார்கிட்டே போறேன். போங்க” என்று கிளம்பினான் தம்பிக்காரன்.

“குழிக்கு பயந்து, புதைகுழியில விழ போற. பார்த்துக்கோ” என்று தேசிகன் கத்த,

“தூக்கிவிட எங்க பலசாலி சார் இருக்கார்” என்று முரளியும் பதில் சொல்லிவிட்டு சென்றான்.

“பலசாலியா? யார் அவரா? இது எப்போ இருந்து?” என்று தேசிகன் யோசிக்க, தன்வியோ “என் அப்பா புதைகுழியா” என்று கணவனை கோவமாக பார்த்து கொண்டிருந்தாள்.

“அப்படியா சொன்னேன். இருக்காதுடி” என்று தேசிகன் மறுத்தவன், மனைவியின் கைக்கு சிக்காமல் ஓட, தன்வியும் விடாமல் அவனை துரத்தி பிடித்து, அடி வைத்தாள்.

“சொன்னா மட்டும் உனக்கு கோவம் வருது, உன் அப்பா வளர்ப்பு, புருஷனையே அடிக்கிறது தானா?” என்று வம்பிழுக்க,

“அதென்ன புருஷனையேன்னு ஓர் ராகம்? என் புருஷனை நான் அடிக்கிறது என் உரிமை” என்றாள் தேசிகனின் மனைவி.

“உரிமை எல்லாம் உனக்கு மட்டும் தானா? எனக்கும் என் பொண்டாட்டிகிட்ட அப்படி ஓர் மேட்டர் இருக்கா என்ன?” என்று தேசிகன் கேட்க,

“இல்லாம தான் என்னை கட்டிபிடிச்சுட்டு இருக்கீங்களா?” என்றாள் தன்வி.

இருவரும் அறைக்குள் வந்திருக்க, தன்வி தயங்காமல் அவன் நெஞ்சுக்குள் சாய்ந்து கொண்டாள்.

“அப்போ அந்த மேட்டர் உண்டு சொல்ற?” என்று தேசிகன் உதட்டுக்குள் சிரிக்க, தன்வியோ மேலும் கணவனை ஒட்டி கொண்டாள்.

“என்னடி” என்று தேசிகன் அவளின் முதுகை வருடி கொடுக்க,

“பிடிச்சிருக்கு” என்றாள் தன்வி.

“என்னை தானே” என்று கணவன் கண்ணடிக்க,

“ம்ம். இந்த இடத்தை” என்று அவன் மார்பிலே விரலை வைத்து வருடினாள்.

“உன்னோட இடம் தான். வைச்சுக்கோ, உனக்கே உனக்கு தான்” என்று தாராளமாக விட்டு கொடுத்தான் நல்லவன்.

“அப்படியே எனக்கான இடமும்” என்று இழுக்க, தன்வி நிமிர்ந்து அவன் கன்னத்தையே கடித்து வைத்தாள்.

“ஸ்ஸ். கொடுக்கலைன்னா கொடுக்கலை சொல்லுடி. அதென்ன கடிக்கிறது”

“மேட்டர், இடம்ன்னு பேச தெரியுது இல்லை. அப்போ கடிக்க தான் செய்வேன்”

“அடிப்பாவி அப்போ நீ கவனிச்சுட்டு தான் பதில் சொல்லாம இருந்திருக்க?”

“ஏன் சொல்லணும்? எனக்கு என் வீட்டுக்காரரோட இருக்கணும். அவ்வளவு தான்”

“எனக்கும் தாண்டி என் பொண்டாட்டியோட இருக்கணும். அப்படியே ஒட்டிக்கிட்டு, உரசிகிட்டு, உருண்டுகிட்டு”

“போதும். போதும்”

“என்ன போதும்? இப்படி முத்தம் கொடுத்துக்கிட்டு இருக்கணும்ன்றதும் சொல்லணும்” என்றவன் தன்வி முகத்தை மறைக்கும் முன், கன்னங்களை பற்றி இதழ்களை பிடித்து கொண்டான்.

“இந்த மூணு வாரமும் என்னோட ஜோடியை ரொம்ப மிஸ் பண்ணேன்” என்றான் மனைவியின் கீழ் உதட்டை வருடி கொண்டே.

தன்விக்கும் அடிக்கடி கணவனின் முத்தம் நினைவிற்கு வந்து, அவளை இம்சித்திருந்தது.

“ஏங்க, ஏங்க தான் ஆசை கூடுது” என்றவன், திரும்ப இதழ்களை எடுத்து கொண்டான். அவனுடையதும் மனைவியிடம் பகிர்ந்து கொண்டான்.

இந்த முறை அவனின் கைகள் கன்னங்களில் இருந்து விடைபெற்று அவளின் இடையை சரணைடைந்திருந்தது.

தன்வி கண்களை பெரிதாக விரித்து கணவனை பார்க்க, அவளின் நெற்றி முட்டிய தேசிகன், “எனக்கு பிடிச்ச இடம். எனக்கே கொடுத்துடு” என்று தன் இரு கைகளுக்குள் அவளின் இடையை அடக்கி கொண்டான்.

பிடிக்குமா? அடக்கேடி!

“உன்னோட இருக்கும் போதெல்லாம் நான் அதை பார்க்காம விட்டதில்லை. அப்படியே பிடிச்சு நெறிச்சுடலாமான்னு கூட சில நேரம் தோணும்” என்றவன், இப்போது அதை செய்ய,

“ஸ்ஸ்” என்றாள் தன்வி.

“வலிக்குதுன்னு விட்டுடுவேன்” என்றவன், சிவந்த இடையை விரல்களால் வருடி கொண்டிருந்தான்.

பார்ட்டிக்காக அவள் கட்டிய புடவை தேசிகனுக்கு சாதகமாக போனது. “முழுசா பார்க்கணும்ன்னு டெம்ப்ட் ஆகுது தன்வி”

தன்வி தடுமாறி கணவனிடம் இருந்து விலக முயன்றாள். “உன்னோட இடுப்பை மட்டும் தாண்டி” என்றவன், இடை சேலையை விலக்க முயல,

“ஏங்க? என், என்ன இது” என்று தன்வி அவனை தடுக்க பார்க்க,

“முழுசா பார்க்க முடியலைடி” என்ற தேசிகனின் ஆர்வம், படபடப்பு தன்விக்கு அச்சத்தை கொடுத்தது.

“அப், அப்படி பார்க்க முடியாதுங்க” என்று பெண் தவிக்க,

“ஏன்? ஏன் பார்க்க முடியாது? ப்ளீஸ்டி” என்ற தேசிகன் அனல் மூச்சு காற்று பெண்ணை மேலும் சோதித்தது.

“நான் வேறெங்கையும் பார்க்க மாட்டேன். அது மட்டும் வேணும்” என்றவன், தன்வியின் முந்தானையை விலக்கிவிட, தன்விக்கு உடல் மொத்தமும் நடுங்கி போனது.

தேசிகனையே வேகமாக அணைத்து கொள்ள, “ஹேய். என்ன பண்ற தன்வி?” என்ற தேசிகன் கட்டுப்படுத்த முடியாமல் அவளின் இதழ்களிடம் தனக்கான பொறுமையை தேடினான்.

ஆனால் அவன் கரங்களோ அதற்கான வாய்ப்பை கொடுக்காமல், மனைவியின் இடை வளைவை அளந்து, அவனை மேலும் ஏற்றிவிட்டது.

“என்னை கவுக்கவே இந்த இடுப்பை வைச்சிருக்கியா” என்றவன், தன் சூடான இதழை அவளின் இடையில் புதைத்தான்.

தன்வி கரங்கள் அவனின் தலை முடியை இறுக்கிவிட, மனைவியுடன் கட்டிலில் சரிந்தவனின் கண்கள் ரசித்த இடையை, அவனின் உதடுகள் ஸ்பரிசிக்க ஆரம்பித்தது.

தேசிகன் கவனம் முழுக்க அவளின் இடையிலே நின்று போக, பெண் தவித்து போனாள்.

“ஏங்க போதும். ப்ளீஸ்” என்று அவனை விலக்க பார்க்க,

“கொஞ்ச நேரம்” என்று அதிக நேரமே எடுத்து அவளை திணறடித்துவிட்டான்.