ரமேஷ் அவனது திருமணத்திலும் அதை தொடர்ந்து நடைபெற்ற சடங்குகளிலும் முழு மனதாக ஈடுபடவில்லை..
அவனின் நினைவு முழுவதும் நண்பனிடம் மட்டுமே இருந்தது..
ரமேஷ் திருமண மண்டபத்திலிருந்து திருமணச் சடங்குகள் அனைத்தும் முடித்து புதுமண தம்பதிகளாக வீட்டுக்கு வந்து அங்கேயும் பால்,பழம் உண்டு ஏனைய சடங்குகளையும் முடித்து அவர்களுக்குகென சற்று தனிமை கிடைத்ததும் புது மனைவியிடம் சற்று வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு நண்பன் இருக்கும் இடத்திற்கு வந்தான்..
அப்போதுதான் ராகவும் சவுந்தலாவிடம் கத்தி பேசிவிட்டு கைபேசியை வைத்ததும் ராமேஷின் தவறிய அழைப்பை பார்த்து அவனுக்கு அழைப்பு விடுத்தான்…
இம்முறை நண்பன் அழைத்த அழைப்பை ரமேஷ் ஏற்காமல் நேரடியாக ராகவை தேடி அவன் இருந்த இடத்திற்கு வந்து அவனது அருகில் இருந்தான்..
ரமேஷ் வந்தது தெரிந்தும் அவனை திரும்பி பார்க்காமல் புது மாப்பிள்ளைக்கு வாழ்த்து சொல்லாமல் அவனது யோசனையிலேயே இருந்தான்..
இவ்வளவு தூரம் அவனை தேடி வந்தும் அவன் திரும்பி பார்க்காமல் இருந்த கோபத்தில் ரமேஷ் ராகவின் முதுகில் இரண்டு அடி போட்டு அவனை தன் பக்கம் திருப்பினான்..
அடி சற்று வலித்ததும் ராகவோ முகத்தை சுழித்து ரமேஷின் பக்கம் திரும்பி ” ம்ச் என்னடா?.. அதுதான் நீ வந்தது தெரியுது இல்ல அப்ப என்ன – க்கு அடிக்கிற நாயே?..” என்று புது மாப்பிள்ளைக்கு தூய தமிழில் அர்ச்சனை பண்ணினான் ராகவ்..
” தெரிஞ்சுதான் நான் வந்த உடனே துரை எழுந்து ஓடிவந்து கட்டிப்பிடிச்சு வாழ்த்து சொன்னீங்களோ? வாத்தியாரே..” என்று ரமேஷ் நண்பன் திருமணத்திற்கு வரவில்லை.. என்ற சோகத்தை வெளிகாட்டாமல் நண்பனை வெறுப்பேற்றினான்..
” அட போடா நாயே..! நான் இருக்கிற நிலைக்கு இப்ப எதையுமே என்னால யோசிக்க முடியல.. எப்ப இரவு வரும் புண்பட்ட நெஞ்சை சரக்கு போட்டு சரிப்பண்ணலாம்னு காத்துட்டு
இருக்கேன்..
டேய் மச்சான் உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?.. அந்த வரதன் என்னை பழிவாங்கிட்டான் மச்சான்.. வெறும் பிஸ்கோத்து காசு ஐந்து லட்சத்திற்காக அவனோட அந்த வாயாடி பொண்ணை என் தலையில கட்டிட்டான் மச்சான்..
உனக்கு தெரியாது இல்ல. சொல்லுறேன் கேளு. அவளை பத்தி. ஆள் பார்க்கத்தான் ஒல்லிக்குச்சி ஆனா அவளோட வாய் இருக்கே மச்சான் வாய்.. அப்பப்பா காலேஜ்லயே நான் ஒரு வாத்தியார் என்று நினைவே இல்லாமல் எப்படி வாய் பேசுவானு தெரியுமா உனக்கு?. ஏன் அன்னிக்கு நீயே கோயில்ல பார்த்திருப்பதானே நான் லேசா ஒரு சின்ன அடி அடிச்சதுக்கு அவ வாயால என்ன வார்த்தை எல்லாம் வந்துச்சு.. என்ன பேச்சு எல்லாம் பேசுனா?..நீயே பார்த்த தானே மச்சான்..
நான் எப்படி காலத்துக்கும் அவளோட வாழந்து அவளை சமாளிக்க போறேன்.. ஏற்கனவே வீட்ல அம்மாவும் என்கூட பிறந்த பிறப்பும் எங்க மூணு ஆம்பளையும் வச்சு படுத்துற பாடு போதாதுனு அதுக இரண்டையும் மிஞ்சிகிற அளவுக்கு இந்த ராட்சசியோட வாய் அமைஞ்சிருக்கு.. ஆனா ஒன்னு மச்சான்.
வீட்ல இனி என்டர்டைன்மெண்ட் ஜாலியா இருக்கும்.. இனி சனி, ஞாயிறு நல்லா பொழுதுபோகும் மச்சான் . அவ என்னோட வாய் பேசி வம்பு இழுத்தா?. நான் அவளை சகுந்தலாவோட கோர்த்துவிடுவேன்.. அவங்க ரெண்டு பேரும் நல்லா மல்லு கட்டி சண்டை போடட்டும் நான் அதை பார்த்து ஜாலியா என்ஜாய் பண்ணுவேன்.. ” என்று இன்னும் என்னென்னவெல்லாம் ராகவ் பேச இருந்தானோ..
பேச்சை நிறுத்துமாறு கைநீட்டி தடுத்த ரமேஷ்.. தலையை சொரிந்து கொண்டு நண்பன் என்ன பேசுகிறான் என்பதே புரியாமல் விழித்திருந்தான்..
” டேய் மச்சான். உன் புராண கதையை நிறுத்து.. நீ இப்போ வரைக்கும் என்ன சொன்னேன்னு ஒரு மண்ணும் எனக்கு புரியல மச்சான்.. டேய் மச்சான் அடிக்காத கொஞ்சம் பொறுமையா விளக்கமா சொன்னா தானடா எனக்கும் புரியும்.. நீ இவ்வளவு நேரம் மூச்சுவிடாமல் யாரைப் பற்றி சொல்லிட்டு இருந்த?. சம்பந்தமே இல்லாம.. என் மச்சான கல்யாணத்துக்கு வரலையே என்ன ஆச்சோ ஏதாச்சோனு நான் பரிதவிச்சு ஓடி வந்தா நீ ஏதோ உளறிட்டு இருக்க..” என்றான் ராமேஷ் சற்று கடுப்பாக..
” நீ இப்படி சம்பந்தமே இல்லாம உளறிட்டு இருப்பதை பார்த்தால் ஏதோ பெரிய சம்பவம் தான் நடந்திருக்குன்னு தெரியுது.. ஆனா என்னனு தெரியல மச்சான்.. தயவுசெய்து வாயை திறந்து என்னன்னு சொல்லிட்டு அப்புறம் ஒப்பாரி வைடா.. கொஞ்சம் சீக்கிரமா சொல்லுடா மச்சான். நான் இன்னைக்கு புது மாப்பிள்ளை டா.. தெரியும் தானே அடுத்த சமாச்சாரம் என்னன்னு இன்னும் ஒரு முத்தம் குடுத்து கூட பர்ஸ்ட் நைட்டுக்கு ஒத்திகை பார்க்கல மச்சான்.. உன்னை காணோமேனு தேடி ஓடி வந்துட்டேன். உன் மேல அவ்வளவு பாசம் மச்சான்… ” என்று விட்டால் அழுது விடுவேன் என்னும் நிலையில் நண்பனின் சோகத்தின் காரணத்தை விசாரித்தான்..
” டேய் மச்சான் உனக்கு விஷயமே தெரியாது இல்ல. இன்னைக்கு நீ மட்டும் புது மாப்பிள்ளை இல்ல மச்சான்.. நானும் புது மாப்பிள்ளை தான் மச்சான்..” என்று சொல்லி முடிக்கும் முன்பு அவன் சொல்லிய தானும் புது மாப்பிள்ளை என்ற பேச்சைக் கேட்டு ரமேஷ் சத்தமாக சிரித்து விட்டான்.. சிரிப்பை அடக்க பெரும்பாடு பட்டு முடியாமல் வயிற்றை பிடித்துக்கொண்டு கடல் மண்ணில் உருண்டு புரண்டு சிரித்தான்..
அதில் கோபம் கொண்ட ராகவ் அவனை இழுத்து போட்டு முதுகில் ரெண்டு அடி மொத்தி எடுத்தான்..
அடியை வாங்கியதும் சற்று விலகி எழுந்து கொண்டவன் ” டேய் மச்சான் இன்றைய நாளுக்கான மிகப்பெரிய ஜோக் இப்ப நீ சொன்னது தான் மச்சான்.. என்னால சிரிப்ப அடக்க முடியல.. உனக்கே தெரியும் எங்க அம்மா ரெண்டு வருஷத்துக்கு முன்ன பொண்ணு பாக்க ஆரம்பிச்சது இப்பதான் கல்யாணம் முடிஞ்சிருக்கு.. உனக்கு உங்க அம்மா இன்னும் பொண்ணு பார்க்கவே ஆரம்பிக்கல அப்புறம் எப்படி மச்சான் கல்யாணம் நடக்கும்.. நம்ம எல்லாம் 90 கிட்ஸ் டா. அந்த கடவுள் நமக்கு அவ்வளவு சீக்கிரத்தில் எல்லாம் கல்யாணத்த பண்ணி வச்சிர மாட்டான்.” என்று நண்பனை இன்னும் கேலி பேசினான் ரமேஷ்..
” டேய் எழவு எடுத்தவனே கொஞ்சம் நான் சொல்றது வாயை மூடிட்டு கேளுடா ம—-. அந்த குட்டி பிசாசு. ராட்சசி ஐந்து நாள் காலேஜ்க்கு வரல நானும் ஒரு தொல்லை தொலைஞ்சது என்று நினைத்து நிம்மதியா தினமும் காலேஜுக்கு போனோமா பாடம் எடுத்தோமானு வந்தேன்.. இந்த கடவுளுக்கு என் மேல கொஞ்சமும் கருணை இல்லடா மாச்சான்.. இந்த ஐந்து நாள் எனக்கு நிம்மதியை கொடுத்த கடவுள் ஆய்சுக்கும் அந்த குட்டி பிசாசு கிட்ட என்ன மாட்டிவிட்டுட்டானே.. ஏண்டா எருமை மண்டபத்துக்கு அட்ரஸ் கொடுத்தியே அந்த மண்டபத்தில் இரண்டு தளம் இருக்கு. இன்னைக்கு இரண்டு கல்யாணம் நடக்குது. அதுல கீழ தான் உன்னோட கல்யாணம்னு தெளிவா சொன்னியா?.. இப்ப நான் ஒரு குட்டி பிசாசுக்கு 5 லட்சத்துக்கு விலை போய் காலத்துக்கும் அடிமையா கிடக்க வேண்டியது ஆகிடுச்சி.. நான் எப்ப அவளுக்கு இந்த கடனை ஐந்து லட்சத்தையும் கொடுத்து நிம்மதியா? மூச்சு விடுறது..” என்று சொல்லி கொண்டே அன்று நடந்தது அனைத்தையும் கூறி அவன் புது மாப்பிள்ளை ஆகிய கதையையும் கூறினான்..
நண்பன் கூறிய அனைத்தையும் கேட்ட ரமேஷ் வாயில் கைவைத்தபடி நண்பனின் முகத்தையே கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்..
” டேய் கழுத என்னை சைட் அடிச்சது போதும் இப்ப சொல்லு என்ன பண்றது எப்படி இதுல இருந்து நான் தப்பிக்கிறது.? ” என்றான் ராகவ்.
” ஏன்டா கிறுக்கு பயலே தப்பிக்க போற.? அதான் அற்புதமான ஒரு வாழ்க்கை கிடைச்சிருக்கு அதை சந்தோசமா உனக்கு ஏற்ற மாதிரி அந்த புள்ளையோட வாழ வேண்டியதுதானே.. நமக்கெல்லாம் கல்யாணம் நடக்கிறதே பெரிய விஷயம். அதுவும் இன்னைக்கு நமக்கு இரண்டு பேருக்குமே ஒரே நாள்ல கல்யாணம் நடந்து இருக்கு. அது எவ்வளவு பெரிய சந்தோஷமான விஷயம். அதை என்ஜாய் பண்ணனுமே தவிர இப்படி லூசு மாதிரி கடற்கரையோரம் இருந்து புலம்பிகிட்டு இருக்க கூடாது..
எழுடா மச்சான். உன்னை நான் உன் வீட்டில் விட்டுடு நான் எங்க வீட்டுக்கு போறேன்..என் பொண்டாட்டி என்னை ரொம்ப தேடப்போறா மச்சான்.. முதல் நாளே அவகிட்ட என்னை ரொம்ப சிக்க வச்சிராத டா .. அப்புறம் என் சாபம் உன்னை சும்மா விடாது.. எனக்கு இன்னைக்கு பஸ்ட் நைட் நடந்தே ஆகணும்.. ” என்று நண்பனுக்கு கை கொடுத்து அவனையும் தூக்கி விட்டு அவனும் எழுந்து பைக் அருகே சென்றான் ரமேஷ்..
” டேய் ரமேஷ் அவ சும்மாவே அந்த பேச்சு பேசுவாடா காலேஜ்ல. இப்ப அவளுக்கு நான் அடிமை மாதிரி ஆகிட்டேனே. அவங்க அப்ப காசு கொடுத்து என்ன விலைக்கு வாங்கிட்டான்.. இனி அவ என்ன பேச்சு பேச போறாளோ தெரியல.. ” என்றான் ராகவ்..
” அடச்சீ நிப்பாட்டு மச்சான். உன் நடிப்பு தாங்க முடியல.. அந்த புள்ள வாய் பேசினாலும் நல்ல குணமான பிள்ளை மாதிரி தெரியுது.. நீ அந்த புள்ளைய போட்டு பாடா படுத்தி உன் வாழ்க்கை கெடுக்காமல் இருந்தால் அதுவே போதும்.. அப்புறம் உங்க அம்மா இன்னைக்கு என்ன குண்டு வெடிக்கப் போகுதோ தெரியல. உங்க வீட்ல என்ன நடந்தாலும் என்ன இழுத்துவிட்டு மாட்டி விடாத மச்சான்.. எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. இப்ப நீ சொல்லித்தான் எனக்கு உன்னோட கல்யாண சமாச்சாரமே தெரியும்.. ” என்று சவுந்தலாவின் வாய் பற்றி தெரிந்த படியால் சற்று நடுங்கிதான் போனான் ரமேஷ்..
சகுந்தலா யார் மீதாவது கோபம் கொண்டு திட்ட வேண்டும் என்று வாய் திறந்தால் அவரது வாயில் என்ன வருகிறது என்பது அவருக்கே தெரியாது.. கேட்க அருகில் பொறுமையாக யாரும் நிற்கவே மாட்டார்கள்.. [ கூவம் கொப்பளிக்கும் ]
அதனால் அவரை சுற்றி உள்ளவர்கள் யாரும் அவரிடம் அதிகமான பேச்சுவார்த்தையோ வம்போ வைத்து கொள்ள மாட்டார்கள்..
” ஆமாண்டா மச்சான் அம்மாவுக்கு எனக்கு கல்யாணம் நடந்தது எப்படி தெரிஞ்சதுனு தெரியல. இப்ப எனக்கு கால் பண்ணி நீ அம்மாக்கு சொல்லாம கல்யாணம் பண்ணிட்டியா?. என்று கேட்டாங்கடா. நானும் இப்ப ஏதாவது பேச போய் அங்க ரொம்ப சத்தம் போடுவாங்கன்னு நினைச்சு வீட்டுக்கு போய் ஆறுதலா பேசிக் கொள்ளலாம்னு நினைத்து இல்லனு சொல்லிட்டேன் மச்சான்..” என்றான் ராகவ்..
திருமண மண்டபத்தில் இருந்து அவன் வெளியேறியதும்.. அங்கு நடந்த எதுவும் அவனுக்கு தெரியவில்லை.. அவளும் இன்றே உடனடியாக அவனது வீட்டுக்கு வருவாள் என்று அவன் நினைக்கவும் இல்லை..
ஒரு வழியாக ரமேஷ் அங்கிருந்து ராகவை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு செல்ல போகும் வழியில்.. அவனுக்கு தற்போது வீட்டிற்கு செல்ல விருப்பம் இல்லை என்றும் அருகில் இருக்கும் பாருக்கு செல்லுமாறும் கூறினான்..
” டேய் மச்சான் உனக்கும் இன்னைக்கு தான் கல்யாணம் முடிஞ்சு இருக்கு வேணாம் டா சொல்றதை கேளு வா வீட்டுக்கு போவோம்.. ” என்றான் ரமேஷ்..
அவனின் பேச்சை எங்கே கேட்டான் ராகவ்.. ” போடா வென்று. நீ ஆசைப்பட்டு உன் அம்மா பார்த்த பொண்ணு கல்யாணம் கட்டி இன்னைக்கு சந்தோசமா ஃபர்ஸ்ட் நைட் கொண்டாட போற. நீ சந்தோசமா வாழ்க்கையை அனுபவிக்கனும் மச்சான்..
அதனால நீ குடிக்கவேணாம்.. என்ன அங்க இறக்கி விடு. இல்லன்னா குதிச்சிடுவேன் மச்சான்.. உனக்கு எது வசதி எனக்கு கை கால் உடைய வேண்டுமா?.. இல்ல நான் ஒரு சின்ன பெக் போட்டு நல்லபடியா வீட்டுக்கு போய் சேரணுமா?.. உனக்கே தெரியும் நான் சொன்னா செஞ்சிருவேன்னு அதனால யோசிச்சு முடிவெடு மச்சான்.. என் அம்மாக்கு எப்படி இந்த விஷயம் தெரிஞ்சதுன்னு எனக்கு தெரியல. அந்த பேயை சமாளிக்க வேணாமா?..
எனக்கு நாலு வார்த்த எடுத்து பேசுறதுக்கு கொஞ்சம் தைரியம் வேணும் மச்சான்.. நான் ரொம்ப நொறுங்கி போயிட்டேன் டா .. நான் குடிச்சு முடிச்சதும் என்னை பத்திரமா அழைச்சிட்டு போய் என் வீட்டு பக்கத்துல என்னை விட்டுடு நீ உடனே போயிடு. அவ்வளவுதான் இந்த நண்பனுக்காக இதை கூட பண்ண மாட்டியா?. மச்சான்..” என்று அவன் தினமும் குடிக்கும் ஓர் பெக் அடிக்க ஆயிரம் காரணம் சொன்னான்..
ரமேஷும் அவன் தினமும் குடிக்கும் ஒரு பெக் தானே என்று நினைத்து சாதாரணமாக பார் முன்பு நிறுத்தினான்..
ஆனால் பார் உள்ளே போனதும் அவனது கட்டுப்பாடெல்லாம் தளர்ந்து ஒன்று மூன்றாகி மூன்று நான்காகியது.. சும்மாவே அவ்வளவு உளறி கொட்டியவன்.. ரமேஷ் காதை முடும் அளவிற்கு மோசமாக நிலாவையும் வரதனையும் திட்டி பேசினான்..
இதற்கு இடையில் ரமேசின் அம்மா மற்றும் மனைவியிடம் இருந்தும் மாறி மாறி ரமேசுக்கு அழைப்பு வந்த படி இருந்தது..
இதைப் பார்த்து அவனுக்கு இன்று வீட்டில் நடக்க போகும் திட்டையும் நினைத்து சற்று கவலை கொண்டபடியே அதட்டி உருட்டி கைத்தாங்களாக ராகவை அழைத்து வந்து பைக்கில் ஒழுங்காக அமரவைத்து வீட்டுக்கு அருகே அழைத்து வந்துவிட்டான்.. இருந்தாலும் நண்பனை அப்படியே விட்டு செல்ல விரும்பாமல் பைகில் இருந்து இறக்கி கை தாங்கலாக ஏதேதோ தள்ளாடியபடி உளறிகொண்டு நடந்தவனை பிடித்துக் கொண்டு அவனது வீட்டு முற்றத்திற்கு வந்தான்..
ராகவை அழைத்து வந்ததும் யாரேனும் இருக்கிறார்களா? என்று சுற்றி பார்த்த ராமேசின் கண்ணில் அதுவரையும் சகுந்தலா பிடித்து தள்ளி விட்டதும் எழுந்து நின்ற அதே இடத்தில் இன்னமும் நின்றாள் நிலா..
அவளை பார்த்ததும் அன்று கோவிலில் அவளை பார்த்ததை வைத்து நண்பன் சொன்ன அவனது புது மனைவி என தெரிந்து கொண்ட ரமேஷ். அவளின் அருகே அவனை அழைத்துச் சென்று.
” எம்மா தங்கச்சி என்ன நடந்தாலும் நீ தான் சமாளிச்சு இவனை பொறுப்பா பார்த்துக் கொள்ளனும்.. இந்த குடியை நீயே நிறுத்திடு. உன் புருஷனை உன்கிட்ட ஒப்படைச்சிட்டேன் மா.. இனி நீயே பார்த்துக்கோ நான் போறேன் வீட்டுக்கு.. ” என்று கூறி அங்கிருந்து வெளியேறி விட்டான்..
நிலா நினைத்தால் ஒரு நிமிடம் அவர்கள் அனைவரையும் உதறி தள்ளிவிட்டு அங்கிருந்து சென்று இருக்கலாம்.. ஆனால் அதன் பின் அவளுக்கு இன்னொரு திருமணமோ வாழ்க்கையோ இல்லை என்பது ஓர் விஷயம் என்றால்.. அவள் தேடி வந்த சொந்தம் அனைத்தும் இங்கே இருக்கவும் அதை விட்டு செல்ல விரும்பாமல் கணவன் வந்து அழைக்கும் வரை அங்கே நின்றாள்..
ஆனால் அவனும் நிதானம் இல்லாமல் குடிபோதையில் வந்திருப்பதால் அவன் எங்கே அவளை விட்டினுள் அழைத்துச் செல்லப் போகிறான். என்று நினைத்து ராகவ் கீழே விழுந்து விடாமல் அவனை ஒரு கையில் அணைத்து பிடித்தவாறு அங்கே நின்றாள்..
அப்போதுதான் அவளை நிமிர்ந்து பார்த்த ராகவ் ” ஏய் குட்டி பிசாசு நீ இங்கயே வந்துட்டியா?. என்னை தொல்லை பண்ணுறதுக்கு.. ஏண்டி என் உசுர எடுக்கிற? நான் நிம்மதியா இருக்கிறது உனக்கு பிடிக்கவே இல்லையா?. ” என்று அவளைக் திட்டிக் கொண்டிருந்தான் ராகவ்..
மகனின் சத்தத்தை கேட்டு சகுந்தலா மற்றும் அவர் குடும்பத்தில் அனைவரும் அங்கே வந்துவிட்டார்கள்.. அதனை தொடர்ந்து சாரதாவும் வந்துவிட்டார்..
வெளியே வந்த சகுந்தலா நேராக நிலாவின் அருகே சென்று அவளின் அணைப்பிலிருந்த மகனை விடுவித்து தன்னருகே அழைத்து கீழே இருக்க வைத்து குமரனை தண்ணீர் எடுத்து வருமாறு கூறிவிட்டு தண்ணீர் வந்ததும் அவனது தலையில் ஊற்றி சற்று அவனது போதையை தெளிய வைத்தாள்..
போதை தெளிந்த கோபத்தில் தண்ணீர் பக்கெட்டை தட்டி விட்டு எழுந்து நின்றான் ராகவ்..
” ஏம்மா உனக்கு இப்ப என்ன பிரச்சனை..?.. ” என்றான் அக்ரோசமாக..
” எவளோ ஒருத்தி வந்து இங்க நின்னு நீ தாலி கட்டி கல்யாணம் பண்ணிட்டியாம்னு சொல்லி கூத்தடிக்கிறா?. நீ என்னடா காலைல போனவன் இப்பதான் ஆடி அசஞ்சி தள்ளாடிட்டு வர..” என்று அவனுக்கு அம்மா என்று நிரூபிக்கும் படி ஹய் பிச்சில் கத்தினார் சகுந்தலா..
” எம்மா நீயும் சரி இங்க உள்ளவங்களும் சரி நல்லா கேட்டுக்கோ, இவ எவளோ ஒருத்தி இல்ல. நான் தொட்டு தாலி கட்டுன என் பொண்டாட்டி.. உன்ன சமாளிக்கிறதுக்காக ஆறுதலா சொல்லிக்குவோம்னு நினைத்து நான் கல்யாணம் பண்ணலை என்று சும்மாதான் சொன்னேன்.. இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல. இல்லன்னா நான் அப்பவே வந்து உண்மையைச் சொல்லி இருப்பேன்.. இனி நானும் என் பொண்டாட்டியும் இங்கதான் இருப்போம்.. ” என்று விட்டு போதை ஓரளவிற்கு தெளிந்ததும் ” வாடி உள்ள.” என்று அவளது கையை பிடித்து அவனது அறைக்கு அழைத்துச் சென்றான்..
அவளும் மறு பேச்சு பேசாமல் அவன் மீண்டும் வளது கால் எடுத்து வைத்து வீட்டுக்குள்ளே சென்றாள்..
திருமண அலைச்சலால் காலையிலிருந்து எதுவும் சாப்பிடாமல் இருந்த ராகவிற்கும், நிலாவிற்கும் வயிறு பசி வந்தது..
அவனே அறையை விட்டு வெளியேறி வந்து சமையலறையில் இருந்த பாத்திரங்களை உருட்டி குறைவான அளவு இருந்த சோற்றை வைத்து மீன் குழம்பை விட்டு அந்த உணவு தட்டை எடுத்துக் கொண்டு அறைக்குள்ளே வந்தான்..
சேர்த்து எடுத்து வந்த மறு தட்டில் பாதி உணவை எடுத்துவைத்து.. மற்ற உணவு தட்டை மேசையில் வைத்து விட்டு அவளை சாப்பிடும் படி அழைத்தான்..
அவளும் மறு பேச்சு பேசாமல் வயிறு பசி தாங்காமல் அந்த உணவை கால் வயிறு உண்டு விட்டு பக்கத்தில் அவன் கை கழுவி வைத்த தட்டையும் எடுத்துக் கொண்டு சமையலறையில் இரு தட்டையும் கழுவி வைத்து விட்டு மீண்டும் யாரையும் பார்க்காமல் உள்ளே வந்து விட்டாள் நிலா.
அவள் அறைக்குள் வரவும் ராகவ் வேட்டியில் இருந்து லுங்கிக்கு மாறினான்.. சார்ட் கழட்டி விட்டு மேலே பெனியனுடன் அவனுக்கென்று இருந்த ஒரு பாயையும் தலையனையும் எடுத்து ஒரு ஓரமாக விரித்து அவன் படுத்து விட்டான்..
இனி என்ன செய்வது என்று தெரியாமல் அவளின் நகைகளை கழட்டி பத்திரமாக பெட்டியில் வைத்துவிட்டு புடவை மாற்ற வேறு வழி இல்லாமல் அதே புடவையில் அறையின் ஓர் மூலையில் சுவற்றில் சாய்ந்து அமர்த்திருந்தாள் நிலா…
பல கஷ்டங்களை கடந்து வந்த போதும் அவள் இதுவரையும் அழுததில்லை. இன்று அவளுக்கு ஏற்பட்ட துக்கம் அவளை அறியாமலே கண்ணீராக வெளிபட்டுவிட்டது..
அறையில் புதிதாக ஒரு பெண் இருப்பதும் அவள் அழுவது சிறு வெளிச்சத்தில் அவள் உடல் குலுங்குவதை வைத்து தெரிந்துகொண்டு படுக்கையில் இருந்து எழுந்த ராகவ்
” ஏய் இது என்ன எழவு வீடா ஒப்பாரி வச்சிட்டு இருக்க. வாய மூடுடி.. மனுசனை கொஞ்சம் கூட நிம்மதியா தூங்க விடுறது இல்ல.. ” என்றான் எரிச்சல் மிகுதியில்..
முதலிரவு அறை பேருக்குத்தான் இன்று திருமணம் ஆகிய அவர்களுக்கு முதல் இரவு.. ஆனால் அறை என்னவோ சாதாரணமாகத்தான் இருந்தது..
அழுத சத்தம் வெளியே கேட்கவில்லை என்றாலும் அவள் அழுகையை நிருத்தவே அவன் திட்டினான்..
” நீ ஏண்டி அழுற? நான் தான் இனி உன்னை கட்டிக்கிட்டு தினமும் அழ வேண்டி இருக்கும் போல இருக்கு.. அதுதான் உங்க அப்பன் காரியத்தை பிளான் பண்ணி முடிச்சிட்டானே.. ” என்றான் ராகவ்..
” யோவ் வாய மூடிட்டு நீ பேசாம தூங்க வேண்டியது தானே.. யாரும் உன்னை பிடித்து வைத்திருக்கிறாங்களா என்ன?.. அந்த ஆள் பத்தியும் அந்த ஆளோட துரோகத்தை பத்தியும் என்கிட்ட இனி பேசாத வாத்தி. அப்புறம் அம்புட்டு தான் உனக்கு மரியாதை.. ” என்று இவ்வளவு நேரமும் அமைதியாக சோகமாக அழுது கொண்டிருந்தவள் இவள் தானா என்று நினைக்கும் படி சீறி விழுந்தாள் நிலா..
அதனை தொடர்ந்து படுக்கையில் இருந்து எழுந்து அவளுக்கு சற்றே இடைவெளி விட்டு அமர்ந்து மெதுவாகவும் அழுத்தமாகவும் பேசினான்..
” உங்ககிட்ட கை நீட்டி காசு வாங்கினா நான் உங்களுக்கு அடிமையா?.. பெரிய அதிகாரம் பண்ணி உன்னை என் தலையில் கட்டி விட்டு போறான் அந்த ஆளு.. உனக்கு நான் வேணுமா?. ஏன்டா இந்த கல்யாணம் பண்ணினோம்னு நீ வருத்த படுவடி அப்போ நீயே என்னை வேணாம்னு சொல்லி ஓடணும்.. இல்லன்னா ஓட வைக்கிறேன்.. ” என்றான்.. இனி வரும் எதிர் கால வாழ்க்கையில் என்ன நடக்கும் என்று தெரியாமல் பேசிவிட்டான்..
அவளும் பொறுத்து அமைதியாக தான் இருந்தால். ஆனால் காலையிலிருந்து நடந்த அனைத்து சம்பவங்களும் அத்தோடு சேர்ந்து சகுந்தலா மற்றும் ராகவின் பேச்சும் தற்பொழுது அவளது பொறுமையை பறக்க வைத்திருந்தது..
பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்து விட்டாள் பாவை..
இதற்கு முதல் எப்படியோ ஆனால் இனி அவள் ஒழுங்காக அவனிடம் மரியாதையாக தான் நடந்து கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தாள்..
மரியாதை என்பது ஒருவர் மட்டும் கொடுக்கும் விஷயம் இல்லை.. எதிரில் இருப்பவரும் மரியாதை கொடுத்தால் தான் அதற்கு சரிசமமாக மற்றவரும் மரியாதை கொடுக்க முடியும்..
ஆனால் அது எங்கே நடந்தது.. [ நாம நடக்கத்தான் விட்டுவிடுவோமா என்ன?.]
” டேய் நீ வாத்தின்னா பெரிய இவனா? நீ எருமை என்று சொன்னா நான் எருமை கிடானு சொல்லுவேன் டா..
நீ திட்டினா நானும் திட்டுவேன்..
நீ அடிச்சா நானும் அடிப்பேன்..
நீ அன்பா இருந்தா அந்த அன்பை 100% நானும் தருவேன்..
பார்க்கலாம் யாரு ஓடுறா யார் பின்னாடி ஓடி வாரங்கனு..
நான் நீ முகம் பார்க்கும் கண்ணாடி மாதிரி. நீ செய்வதை அச்சு பிசகாமல் அது காட்டுவது போன்று. நானும் நீ செய்வதை பேசுவதை அப்படியே செய்வேன், பேசுவேன்.. ” என்றாள் நிமிர்வுடன் அவள் அனைத்திலும் புதியவள்..
” சரியான வாயாடி.. குட்டிபிசாசு கிட்ட வந்து மாட்டிகிட்டேன் போலயே..! இனி நானா?.. அவளான்னு பார்க்கிறேன். வாடி நாளைக்கு காலேஜ் வரணும் தானே அங்க ஆப்பு வைக்கிறேன்.. ” என்று மனதில் திட்டியப்படி அறையை விட்டு வெளியேறினான். அவன் ஆண் என்கிற திமிர் மொத்தமும் அவனுக்கே சொந்தம் என்று நினைப்புடன் வாழ்பவன்..
பாட்டி மற்றும் தந்தையின் பேச்சை தட்டாமல் அவர் காட்டிய மணவாளனை திருமணம் செய்து மனிதர்கள் வாழும் வீடு என்று நினைத்து மருமகளாக அவ் வீட்டினுள் காலடி எடுத்து வைத்தாள் பிறைநிலா ..
குள்ளநரிகளும்,சந்தர்ப்பத்திற்காக மாறும் பச்சோந்திகளும் வாழும் அடர்ந்த காடு என்று தெரிந்தால் அவளின் நிலை என்ன ஆகுமோ?..