குருசேத்ரன், “எல்லாமே ரொம்ப பெர்ஃபெக்ட்டா சரியா இருக்கணும்” என போனில் பேசிக்கொண்டிருந்தான். அந்த நேரம், சுப்ரியாவின் கார் நேர்த்தியாக உள்ளே நுழைந்தது. அந்த இடத்தைப் பார்த்து செம்பருத்தி அதிர்ந்து போனாள்.
“வாட் ஹேப்பன்? உன்னோட ரியாக்ஷன் ஏன் இப்படி இருக்கு?” என சுப்ரியா கேட்க, “வீடு ரொம்பப் பெருசா இருக்கு மேடம். நான் டி.வி-யில்தான் பார்த்திருக்கேன்” என்றாள் செம்பருத்தி.
“பாஸ், சுப்ரியா மேம் வந்திருக்காங்க. அண்ட் கூடவே நம்ம மேடமப் பார்த்துக்க நியூ நர்சும் கூட்டிட்டு வந்திருக்காங்க” என்றான் ஸ்ரீராம்.
“ம்ம், தத்தியா இல்லாம இருந்தா சரி” எனச் சொல்லிக்கொண்டே போனை நோண்டினான் குரு.
மணியம்மை வெறுப்புடன் காபியைப் பார்த்தார். சர்க்கரை இல்லாத காபி. ‘என்னை டார்ச்சர் பண்றானே’ என மனதுக்குள் ஓடியது. சாந்தா தன் முதலாளியம்மாவைப் பாவமாகப் பார்த்தார். வேறு என்ன செய்ய முடியும்? குரு என்பவன் முன் குரலை உயர்த்தி கூட பேச முடியாது.
“அம்மாஆஆஆ!” என்று வெளியே யாரோ கத்தும் சத்தம் கேட்க, “என்னாச்சு?” எனக் கேட்டுக்கொண்டே வெளியே சென்றான் குரு.
மணியம்மை சுற்றிலும் பார்த்துக்கொண்டே, “ஹே சாந்தா, கொஞ்சம் மட்டும் சர்க்கரை போடுடி! வாயில் வைக்க முடியல. சர்க்கரை இல்லாத காபிதான் இதயத்துக்கு நல்லதாம், உயிரை எடுக்கிறான் அந்தப் பையன்!” என அழாத குறையாகக் கெஞ்சினார்.
“மேடம், மேலே கேமரா இருக்கு. நான் சுகரை போட்டா மாட்டிப்பேன், ப்ளீஸ்” என கெஞ்சினார் சாந்தா.
‘இவனை அடக்க என்னதான் வழி?’ என யோசித்துக்கொண்டே கண்களை இறுக்கி மூடி, சிரப் குடிப்பதுபோல காபியைக் குடித்து முடித்தார்.
“வவ் வெவ்” என நாய் குறைக்க ஆரம்பித்தது. அதுவும் விடாமல் செம்பருத்தியைப் பார்த்துக் குறைத்தது. செம்பருத்தி முகமெல்லாம் வியர்க்க, கண்களில் நீருடன் சுப்ரியாவின் பின்னால் நின்றிருந்தாள்.
“திங்க்! கீப் குயட் யூ ராஸ்கல்” எனக் குரல் கேட்க, திங்க் சட்டென வாயை மூடிக்கொண்டது. திங்க் என்பது குருசேத்ரன் வளர்க்கும் ஆசை நாய். அது ஜெர்மன் ஷெப்பர்ட் வகையைச் சேர்ந்தது. எப்பொழுதும் தனது எஜமானுக்கு விசுவாசமாக இருப்பதால் ‘திங்க்’ எனப் பெயரிட்டான் குரு.
“உன்னோட இடத்துக்கு போ! நீ கத்துறது இட்ஸ் டூ இரிட்டேட்டிங்” எனத் திட்டியவன், அப்படியே சுப்ரியாவைப் பார்த்தான்.
“முடியல டா!!” என சுப்ரியா கூற, அவளுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் செம்பருத்தியைப் பார்த்தான்.
“ஐயோ, நடந்த கலவரத்தில் சொல்ல மறந்துட்டேன். இவங்க செம்பருத்தி, என்னோட ஹாஸ்பிடல் ஸ்டாஃப்” என்று சுப்ரியா கூறி முடித்தாள்.
குரு உள்ளே செல்ல, அவனைத் தொடர்ந்து அனைவரும் ஹாலுக்குள் நுழைந்தார்கள். குருசேத்ரன் சோபாவில் அமர்ந்திருக்க, அவனுக்கு எதிரில் சுப்ரியா மற்றும் செம்பருத்தி இருவரும் இருந்தார்கள்.
சுப்ரியா பேச வர, “நீ இரு, நான் பேசிக்கிறேன்” என ஆரம்பித்தான். ‘ஐயோ, என்னத்தைப் பேசப் போறானோ தெரியலையே?’ எனக் கைகளை பிசைந்தபடி அவள் செம்பருத்தியைப் பார்த்தாள்.
“எப்போ பாஸ் அவுட்?” எனக் குருசேத்ரன் கேட்க, “மேம்” என செம்பருத்தி திடுக்கிட்டுப் பார்த்தாள்.
“ஹே, ஜஸ்ட் ரிலாக்ஸ்! என் ஆண்ட்டியோட சன் இவர். சும்மா கேட்பார், ஆன்சர் பண்ணு” என மெல்லக் கூறினாள்.
“4 இயர்ஸ் பேக்!” என்றாள் செம்பருத்தி.
“எக்ஸ்பிளைன் யுவர் எக்ஸ்பீரியன்ஸ்?” என்றவன் பார்வை அவளைத் தீவிரமாக அளவிட்டது.
“எனக்கு த்ரீ இயர்ஸ் எக்ஸ்பீரியன்ஸ். என்னோட சர்வீஸ்ல, பீடியாட்ரிக் அண்ட் கைனோவில் டூ இயர்ஸ் ஒர்க் பண்ணேன். லாஸ்ட் இயர் டயாபடிக் ஹாஸ்பிடல்ல வேலை செஞ்சேன்” என்றாள் செம்பருத்தி.
“தென், ஒரு தீவிரமான சர்க்கரை நோயாளியை எப்படி ஹேண்டில் பண்ணுவீங்க?” எனக் கேட்டான் குரு.
“பார்டன்!!”
“அதாவது, சர்க்கரை கிரேவிங்ஸ் அதிகமா இருக்க பேசண்ட்டை எப்படி ஹேண்டில் பண்ணுவீங்க?” எனக் குருசேத்ரன் அவளைப் பார்த்தான்.
“சிம்பிள். சர்க்கரை கொடுத்து ஹேண்டில் பண்ணுவேன்” என்றாள்.
“வாட்? யூ இடியட்!!” எனக் குருசேத்ரன் எழுந்து கத்தினான்.
“ஐயோ, செம்பருத்தி?” என சுப்ரியா கொதித்து எழுந்தாள்.
“சார், நான் சொல்ல வர்றத..” என செம்பருத்தி ஆரம்பிக்க, “சுப்ரியா, யூ ஆர் எ லூசர். உன்னை விட உன்னோட ஹாஸ்பிடல் நர்ஸ் தத்தி மூட்டை” எனக் கோபத்தில் பொங்கினான். அவனது கத்தலில் சமையலறையில் இருந்து மணியம்மை மற்றும் சாந்தா இருவரும் ஓடி வந்தார்கள். ஸ்ரீராம் அங்கே அருகில் இருக்கும் தூணைக் கட்டிக்கொண்டு நின்றிருந்தான்.
செம்பருத்தியின் கண்களில் நீர் கோர்க்க, “சுகர் ஃப்ரீ ஸ்வீட்னர் பத்தி சொன்னேன். ஸ்டீவியா, மாங்க் ஃப்ரூட் மாதிரி ட்ரை பண்ணுவேன்னு சொல்ல வந்தேன்” என்றாள் மெல்லிய குரலில்.
“கம் அகைன்!” எனக் குருசேத்ரன் கர்ஜித்தான்.
கண்களில் நீர் வழிய, “நேச்சுரல் ஸ்வீட்னர் கொடுப்பேன்” என்றாள்.
சுப்ரியா கோபத்துடன், “குரு, யூ ஆர் லூசர். டோன்ட் கிராஸ் யுவர் லிமிட். என்னோட நர்ஸை தேவையில்லாம பேசிட்ட! ஆண்ட்டிக்காக மட்டும்தான் எல்லாத்தையும் பொறுத்துகிட்டேன். அவ்ளோ அக்கறை இருக்கவன் நீயே பார்த்துக்கோடா! வா செம்பருத்தி நம்ம போலாம். ஆண்ட்டி, என்னை தப்பா எடுத்துக்காதீங்க” என்று முன்னால் நடந்தாள்.
“ஐயோ, சுப்ரியா! ப்ளீஸ்மா, அந்தப் பொண்ணை இங்கேயே விட்டுட்டுப் போ! ஏதோ இனிப்பு சாப்பிடலாம்னு சொல்லுச்சே” என மணியம்மை தடுத்தார்.
“அம்மா!!” எனக் குருசேத்ரன் கத்த, “இல்ல ஆன்டி, எனக்குப் பயமா இருக்கு. என் முன்னாடியே இப்படி நடந்துகிறான். நான் இல்லன்னா? இந்தப் பொண்ணு என்னை நம்பி வந்திருக்கா! இவனோட கோபம் சரி இல்ல” என்றாள் சுப்ரியா.
குரு அவர்கள் யாரையும் கண்டுகொள்ளாமல், “ஸ்ரீராம், கார் எடு! சைட் பார்க்கப் போகணும்” என்று புறப்பட்டான்.
மணியம்மை சுப்ரியாவிடம், “என்னோட மனசப் புரிஞ்சது இந்தப் பொண்ணுதான். ப்ளீஸ் சுப்ரியா! அவன் கடக்கறான், பிஸ்னஸ் பைத்தியம். நீ ஒண்ணும் கவலைப்பட வேண்டாம்! நான் பார்த்துக்கிறேன்” என உறுதியளித்தார்.
“டோன்ட் பேனிக், செம்பருத்தி! அவன் ஒரு சைக்கோ! நீ ஆன்டி கூடதான இருக்கப் போற? உனக்கு ஓகே தான! நீ விருப்பப்பட்டால் ஒர்க்கை கண்டினியூ பண்ணலாம்” என்றாள்.
இங்கு வேலை செய்ய ஒரு சதவீதம் கூட அவளுக்கு விருப்பம் இல்லை. ஆனால், செம்பருத்திக்கு இப்போதைக்கு வேறு வழி இல்லை. அதனால் ஒத்துக்கொண்டாள்.
“எதுவா இருந்தாலும் எனக்கு கால் பண்ணு, என்னோட பர்சனல் நம்பர் இது” என சுப்ரியா கொடுக்க, “ஓகே மேம்” என வாங்கிக்கொண்டவள், “கேஸ் டீடைல்ஸ் எக்ஸ்பிளைன் பண்ணுங்க மேம்” என்று கேட்டாள்.
“இவங்களுக்கு டைப் 2 சர்க்கரை நோய். உணவுக் கட்டுப்பாடு ரொம்ப அவசியம். கிட்னி கொஞ்சம் வீக். ஆனால் ரிமூவ் பண்ற ரிஸ்க்ல இல்ல இவங்க. பிரசர் இப்போ தான் ஆரம்பம். ரிலாக்ஸாக இருக்க வேணும். கொலஸ்டிரால் இருக்கு. சரியான டயட் தேவை. பட், சுகர் மட்டும் கண்ட்ரோல்ல இருக்க மாட்டிக்கிது. மாத்திரைகள் எப்போ போடணும்னு டைம் டேபிள்ல இருக்கு, அதை ஃபாலோ பண்ணிக்கோங்க. இந்த ஆறு மாசம் செக் பண்ணிட்டு ஃபர்தரா அவங்களோட சன் முடிவெடுப்பார்” என்றாள் சுப்ரியா.
“ஓகே மேம்”
“ஹே செம்பருத்தி” என சுப்ரியா அழைக்க, “என்னை யாருமே இப்படி திட்டினது இல்ல மேம். இட்ஸ் ஹர்ட்டிங் மீ” என வாய் விட்டே கூறி அழுதாள்.
“ஹே ஹே, கூல்டா, ஒண்ணுமில்ல. அவன் கொஞ்சம் சிடுமூஞ்சி கேரக்டர். நீ கவலைப்படாத. இப்போ நான் அவனைப் பார்க்கத்தான் போறேன். ஆன்டி ரொம்ப ஸ்வீட்” என்றாள் ஆறுதலாக.
“ம்ம்.. மேம்” என செம்பருத்தி கூற, “ஓகே, டேக் கேர். எதுவா இருந்தாலும் போன் பண்ணு” எனப் புறப்பட்டாள்.
முதல் நாள் இப்படி கொடுமையாக இருக்கும் என்று அவள் கனவில் கூட எதிர்பார்க்கவில்லை.
மணியம்மை குஷியாக இருந்தார். செம்பருத்தி உள்ளே வந்ததும் கையைப் பிடித்து அருகில் அமர வைத்துக்கொண்டார்.
“ஐயோ மேடம்” என அவள் எழுந்து நிற்க முயற்சி செய்ய, “என்னமா எழுந்து நிக்கிற? நான் ஒண்ணும் உன்னோட பாஸ் சுப்ரியா இல்ல. அண்ட் அந்த கடன்காரன் இல்ல. என்னைப் பார்த்து நீ பயப்பட வேணாம்” என்றார் மணியம்மை.
இதைக் கேட்டதும் செம்பருத்திக்குச் சிரிப்பு வந்துவிட, மணியம்மை அவளின் கையைப் பிடித்துக்கொண்டு, “சொல்லு, எப்படி இனிப்பு சாப்பிட?” எனக் கேட்டார்.
செம்பருத்தி வாய்விட்டுச் சிரிக்க, “உன்னோட சிரிப்பு தெய்வீகமா இருக்கு” என கூறினார் மணியம்மை.
“போதும் மேம், ஐஸ் வச்சது. சுகர் ஃப்ரீ ஸ்வீட்னர் இருக்கு. ஒரு நாளைக்கு மூணு வேளை கூட நீங்க சாப்பிடலாம்” என கூற, “ஐயோ, ராசாத்தி!! உன்னோட பேர் என்னடி?” என மணியம்மை கேட்க, “செம்பருத்தி” என்றாள்.
“உனக்கு ஏத்த பேர் தான். இப்போ எனக்குப் பால்ல நல்ல டிகாஷன் போட்டு சர்க்கரை போட்டு டீ ஸ்ட்ராங்கா குடிக்கணும்” என மணியம்மை கூற, “நோ நோ, பால் வேணாம். பிளாக் காபி, பிளாக் டீ ஓகேமா, ப்ளீஸ்” என செம்பருத்தி கூற, “நோவா செம்பா?” என மணியம்மை சோகமாகக் கேட்க, “நோ மீன்ஸ் நோ மேம். பால் வேணாம். அண்ட் சுப்ரியா மேடம் கிட்ட எழுதி வாங்கிட்டேன். பார்மசியிலிருந்து சுகர் ஃப்ரீ ஸ்வீட்னர் வந்திடும், அதை நீங்க சாப்பிடலாம்” என்றாள்.
“ஓகே, எதுவுமே இல்லாததுக்கு இப்போ இது ஓகே. எனக்காக இனிப்பு கொண்டு வந்திருக்கும் இனிப்பு தேவதைமா நீ” என்றார்.
செம்பருத்தி அழகாகச் சிரித்தாள். சாந்தாவும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார். நன்றாகவே பொழுது போனது மூவருக்கும்.
இங்கே குருசேத்ரனின் முன் கோபமாக அமர்ந்திருந்தாள் சுப்ரியா. அவன் எதுவும் பேசாமல் கோப்புகளைப் புரட்டிக்கொண்டிருக்க, “டேய் ராஸ்கல், என் கூட இருக்கவங்க எல்லாரும் தத்தி மூட்டை அப்டின்னா நீ யாருடா? நீ எந்த ரகத்துல சேர்வ? சொல்லு” எனப் பற்களைக் கடித்துக்கொண்டு கேட்டாள்.
குரு எதுவும் பேசாமல் பார்த்தான்.
“நானும் உன்னை சின்ன வயசுல இருந்து பார்த்துட்டேன். உனக்குக் கோபம் வந்தால் நீ எல்லாத்தையும் மறந்துடுற? இது ரொம்ப ரொம்ப டேஞ்சர். தப்பு பண்ணா கோவம் வரும். நீ உளறிட்டு இருக்காம போய் உன்னோட பேசண்ட்டை அட்டெண்ட் பண்ணு” என்றான் குரு.
“எதுக்கும் நீ டாக்டர் நித்யா சைக்காட்ரிஸ்ட்ட போய் மீட் பண்ணு, அப்பாயின்மென்ட் போட்டுட்டேன்” என்றுவிட்டு எழுந்தாள்.
“ஹே, என்னோட அம்மாவைக் கேர் பண்ண?”
சுப்ரியா முறைத்துக்கொண்டே, “யாரும் வரமாட்டாங்க” என நடந்தாள்.
“இன்னிக்கு வந்தாளே, அவள் தான் என் அம்மாவைப் பார்த்துக்கணும்” என்றான் குரு.
சுப்ரியா ஆச்சரியத்துடன் திரும்பி, “என்ன சொன்ன?” எனக் கேட்டாள்.