இரவு பன்னிரண்டு மணி இருக்கும். மெல்ல பாத்ரூம் எழுந்து சென்று வந்தாள் செம்பருத்தி. அவளுக்கு யூரின் சென்சேஷன் அதிகமாக இருந்தது. அவள் முகத்தைத் துடைத்துக்கொண்டு வெளியே வர சட்டென அதிர்ந்தாள்.
“இவன் எதுக்கு இங்கே வந்திருக்கான்?” என மனதுக்குள் ஓட, எதுவும் பேசாமல் கதவைத் திறந்தவள், “வெளியே போ!” என நின்றாள்.
“நான் எதுக்கு போகணும்? இது என் வீடு!”
“அப்போ நான் போறேன்” என அவள் அடுத்த அடி எடுத்து வைக்க, “நீ என் பொண்டாட்டி! என்னோட ப்ராப்பர்ட்டி. சோ டைம் வேஸ்ட் பண்ணாத! வா! எனக்கு காலையில் இருந்து ஒரே ஸ்ட்ரெஸ்” என அவளின் அருகில் வந்து தூக்கிக்கொண்டான்.
“ஹே, மரியாதையா போயிடு! ஒழுங்கா வெளியே போயிடு” என செம்பருத்தி துள்ளினாள்.
“இப்போ என்ன பண்ணலாம்னு இருக்க? அதைச் சொல்லு நான் விடறேன்,” என்றான் அவளின் கன்னத்தில் முத்தமிட்டுக்கொண்டே.
“என்னை நீ தொடக் கூடாது.”
“ஹெக் ஹேய்! சான்ஸே இல்லை… என்னால முடியாது. வா சீக்கிரம்” என செம்பருத்தியின் கீழ் உதட்டை மெல்ல பிடித்து இழுத்தான்.
“நீ எப்போதும் தொடாத இடத்துக்கு போயிடுவேன்,” என அவள் மிரட்ட, “நீ எங்கே போறதா இருந்தாலும் என்னோட பெர்மிஷன் உனக்கு வேணும். சோ டைம் வேஸ்ட் பண்ணாம…” என முத்தமிட ஆரம்பித்தான்.
அவள் அடிக்க கை ஓங்கிட, “ஓ, அடிக்கிறியா? இப்போ அடங்கி போவ!” என்றவன் அவளின் முன்னால் போனை நீட்டினான்.
“நான் எதையும் பார்க்க விரும்பல…”
“அய்யோ, பாரு செல்லம்!” என போனை நீட்டினான்.
செம்பருத்தி கோபத்துடன் வேறு புறம் திரும்பிக்கொள்ள, “சரி, நீ பார்க்க வேணாம். கேளு,” என்றவன் படிக்க ஆரம்பித்தான்.
“தர்மன்… சன் ஆஃப் பாரி வேந்தன். பிரதர் ஆஃப் செம்பருத்தி,” என்றான் குருசேத்ரன்.
அவள் அதிர்ந்து திரும்பிப் பார்க்க, “ம்… பார்த்துக்கோ” என போனை நீட்டினான்.
அதில் செம்பருத்தியின் தம்பி, குருசேத்ரனின் கம்பெனி நடத்திய கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆகி இருந்தான்.
“என்ன பண்ணப் போற?” என செம்பருத்தி கேட்க, “அதை நீதான் சொல்லணும்” எனப் புன்னகையுடன் பார்த்தான்.
செம்பருத்தியின் கண்களில் நீர் கோர்த்துக்கொள்ள அமர்ந்திருந்தாள்.
“ம்… அவனுக்கு நான் நினைச்சாதான் வேலையே?”
“இங்கே MG கன்ஸ்ட்ரக்சன் மட்டும் தான் இருக்கா என்ன?” என அவள் கண்ணீரைத் துடைத்தாள்.
“ஆனால் நான் நினைச்சாதான் உன்னோட தம்பிக்கு வேலையே! ஒரு போன் பண்ணா போதும், அவனை எங்கேயும் எடுத்துக்க மாட்டாங்க. என்னால முடியும், பண்ணவா? உன்னோட பாசமலர் பாவம் இல்லையா? இல்லைன்னு சொல்லு. நான்…” என எழுந்தான் குருசேத்ரன்.
“இப்போ உனக்கு என்ன வேணும்?” என செம்பருத்தி அவனைப் பார்த்தாள்.
“நீயே இனிஷியேட் எடுத்து முத்தம் கொடுக்கணும். எல்லாமே பண்ணணும்!” எனக் கைகளை முறுக்கி சோம்பல் முறித்தான்.
“ப்ளீஸ், என்னால முடியாது!”
“அப்போ ஓகே, போறேன்” என குரு எழுந்திருக்க, “உனக்கு நான் என்ன பண்ணேன்? என்னோட வேலைக்காகத்தானே வந்தேன். என் வேலைய முடிச்சிட்டு போய்ட்டேன். நீங்களா வந்தீங்க, பொண்ணு கேட்டு கட்டிட்டு போனீங்க? என்னை வேலைக்காரி மாதிரி ட்ரீட் பண்ற? உனக்கு பைத்தியமா?”
“தேவையில்லாத பேசாத! வந்து கிஸ் பண்ணு, வா!” என மோகத்துடன் பார்த்தான். முகத்தைத் திருப்பிக்கொண்டாள் செம்பருத்தி.
“நீ இல்லாம தூக்கமே வரமாட்டேங்குது, அதான் வந்துட்டேன்,” என அணைத்துக்கொண்டான் இறுக்கமாக.
குரு சிரித்துக்கொண்டே, “இது வரைக்கும் நீ எனக்கு கிஸ் பண்ணதே இல்லைதானே?”
“எல்லாம் என் தலையெழுத்து” என நினைத்தவள், அருகில் நெருங்கினாள் தயக்கத்துடன்.
“ம்… கம்” என மோகத்துடன், தவிப்புடன், ஏக்கத்துடன் பார்த்தான். மெல்ல உதட்டை வைத்தாள். அவன் கவ்விக்கொண்டான். மெல்ல மெல்ல முத்தங்கள் மிகவும் மெதுவாக, பொறுமையாக, ரசித்து, ருசித்து, அனுபவித்து கொடுத்தான் அவன்.
செம்பருத்தியின் தயக்கம் அவனுக்குப் புரிந்து போக, “ஒன்னும் பண்ண மாட்டேன், ஒன்லி கட்டிங் மட்டும் போதும்.”
“என்ன?” என செம்பருத்தி புரியாமல் கேட்க, “அதாவது இப்படியே ஒட்டி உரசிகிட்டே இருக்கணும் விடிய விடிய… இப்போ நான் சொல்றது புரியுதா?” என குருசேத்ரன் கூற,
“ச்ச, அப்போ நைட்டு முழுக்க இவன் கூட இருக்கணுமா?” என நொந்துகொண்டாள் செம்பருத்தி.
அவளைத் தடவிக்கொண்டே இருந்தான் விடிய விடிய.
இரவெல்லாம் யூரின் சென்சேஷன் காரணமாக பாத்ரூமுக்கு நடந்தாள். “எனக்கு இதை மட்டும் கொஞ்சம் கொடு,” என்று உதட்டில் முத்தமிட்டுக் கவ்விப் பிடித்தான்.
மாங்காட்டில் இருக்கும் திராட்சைக் கனியை.
இருவரும் உறங்க அதிகாலை நான்கு மணியானது. கண்கள் இரண்டும் சிவந்து போக எழுந்தான் குரு.
“இனி பிளாக்மெயில் பண்ண மாட்டியே?” என செம்பருத்தி கேட்க, “பண்ண மாட்டேன். ஆனா டெய்லி வருவேன்” எனச் சென்றுவிட்டான் குரு.
குருசேத்ரன் அரக்கப் பறக்க கிளம்பி கீழே வந்தவன் உணவு மேஜையில் அமர, சாந்தா உணவுகளை எடுத்து வைத்தார்.
“அவளை வரச் சொல்லுங்க! என் கூடவே சாப்பிடட்டும்,” என குரு கூறிக்கொண்டே காத்திருக்க, “இதோ தம்பி,” என சாந்தா அவளை அழைத்து வந்தார்.
குரு உணவுகளை சாப்பிட்டுக்கொண்டே, “இன்னிக்கு ஆபீஸ் வாயேன்.”
“இல்லை, எனக்கு வர முடியாது. டயர்டா இருக்கு, தூங்கணும்,” என்றாள் செம்பருத்தி.
“ஓ அதுவும் சரிதான். அப்போ நாளைக்கு வந்திடு!”
“நாளைக்கு எதுக்கு?” என்பதைப் போல செம்பருத்தி பார்க்க, “நாளைக்குதான் உன்னோட தம்பி இன்டெர்ன்ஷிப்புக்கு ஆபீஸ் வந்து ஜாயின் பண்றான். அதான் உன்னை கூப்பிட்டேன்,” என்றவன் தெனாவெட்டாக, “நீதான் வர மாட்டேன்னு சொல்லிட்ட… இட்ஸ் ஓகே, எனக்கு என்ன பண்ணணும்னு தெரியும்,” என குரு உணவில் கவனம் செலுத்தினான்.
செம்பருத்தி அவனை கோபத்துடன் பார்த்தவள், “வரேன், நாளைக்கு வரேன்,” என உணவைப் பிசைந்தாள்.
குருசேத்ரன் ஆபீஸ் சென்றதும் வீட்டில் நடக்கும் நிகழ்வுகளை சிசிடிவி காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தான். “24 மணி நேரமும் அவளைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. காரணம் தெரியவில்லை. அவள் வெறுக்கிறாளா? அதனால் இருக்குமா? இருக்கலாம்,” என்று எண்ணிக்கொண்டான்.
“எதுக்கு வர்றாங்க?” என குரு கேட்டான். சூழல் நாற்காலியில் சாய்ந்துகொண்டே.
ஸ்ரீராம் என்ன சொல்வது எனத் தெரியாமல் நின்றுகொண்டிருந்தான்.
குரு தூக்கக் கலக்கத்துடன் எதிரில் இருப்பவனைப் பார்த்தான்.
“பாஸ், அவங்க எதுக்கு வர்றாங்கன்னு எனக்கு எப்படி பாஸ் தெரியும்?”
“என்னையவே கேள்வி கேட்கிறியா?”
“இல்லை… இல்லவே இல்லை பாஸ்!” என்றான் ஸ்ரீராம்.
“ஓகே, வரட்டும். எப்போவும் போல வெல்கம் பண்ணிட்டு அவங்கள ஹோட்டல்ல தங்க வச்சிடு! இந்த முறை சைட் விசிட் போவாங்க போல… பார்த்துக்கலாம். எல்லாமே சரியா இருக்கணும்,” என சொல்லிக்கொண்டே எழுந்தான்.
“ஓகே பாஸ், நீங்க சொன்னது போலவே செஞ்சுடுறேன்.”
“சரி, பார்த்துக்கோ. நான் வீட்டுக்கு போறேன்,” எனப் புறப்பட்டான்.
செம்பருத்தி சோபாவில் அமர்ந்தபடி டிவி பார்த்துக்கொண்டிருந்தாள்.
குருசேத்ரன் அவளைப் பார்த்துக்கொண்டே நேராக மேலே ஏறினான்.
“என்ன, இந்த நேரத்தில் வந்திருக்கான். எதுக்கு அவன் கண்ணுல முழிக்கணும்,” என நினைத்தவள் வேகமாக அவளது அறைக்குள் சென்று தாள் போட்டுக்கொண்டாள்.
இதோ அவளின் போன் சிணுங்கியது. சம்பூர்ணம் தான் அழைத்திருந்தாள்.
“என்ன சம்பு?”
“ஹே, அழகி குட்டி போட்டிருக்கு,” என சம்பூர்ணம் உற்சாகமாகக் கூற,
“ம்…” என்றாள்.
“ஹே, அழகியோட புருஷன் யாரு தெரியுமா?”
“யாரு?” என அவள் கேட்டுக்கொண்டிருக்கும்போதே கதவைத் தட்டினான் குரு.
“வந்துட்டானா? கடன்காரன்,” என தனக்குத் தானே திட்டிக்கொண்டவள், எதுவும் பேசாமல் கதவைத் திறந்தாள்.
“அக்கா, லைன்ல இருக்கியா?” என சம்பூர்ணம் கேட்க, “ம்… சொல்லு சம்பு!”
“டூ மச்சாகப் பேசுற!” எனப் பற்களைக் கடித்தான் குரு.
அவனது கையை எடுத்து உள்ளங்கையில் வைத்தவள், “இப்போ சொல்லுங்க, அன்னிக்கு அவசர அவசரமா ஆபீஸ் வேலை இருக்குன்னு கிளம்பினீங்களே! திங்கை கூட்டிக்கிட்டு. அன்னைக்கு உங்களுக்கு வேலையே இல்லைதானே? திங்க் அழகி கூட அப்படி இருந்தது உங்களுக்குப் பிடிக்கலை, அதனாலதானே கூட்டிப் போனீங்க? உங்க அம்மா மேலே சத்தியம் பண்ணுங்க பார்க்கலாம்,” என்றாள் செம்பருத்தி.
வெடுக்கென குரு கையை எடுத்துக்கொள்ள, செம்பருத்தி வாய்விட்டுச் சிரித்தாள்.
“தேவையில்லாம கற்பனை பண்ணிக்காத! அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை,” என குரு கூறினான்.
“அப்படியா? நம்பிட்டேன். அன்னிக்கு நீங்க அப்படி நினைக்க மாட்டீங்கன்னு நான் நினைச்சேன். ஆனால் இன்னைக்குதான் தெரியுது. நீங்க அன்னிக்கு அப்படி நினைச்சதுல தப்பில்ல,” என்றாள் செம்பருத்தி.