நிம்மதியாக உறங்கலாம் என அவளைத் தேடி வந்தான் குரு. ஆனால் ஒரே நொடியில் மொத்தமாகக் கூறு போட்டுவிட்டாள். இனி எப்படித் தூக்கம் வரும்? ஒரு பெரு மூச்சுடன் தனக்கு எதிரில் இருப்பவளைப் பார்த்தவன், “நீ நினைக்கிற போல எதுவும் இல்லை. தேவையில்லாமல் கற்பனை பண்ணிக்காத.”
“என்னை இதை நம்ப சொல்றீங்களா? எனக்குத் தெரியும்.”
“என்ன தெரியும் உனக்கு?” என குரு கோவமாகப் பார்த்தவன், தனக்குத் தானே கோபத்தைக் கட்டுப்படுத்த முயற்சி செய்து, “நீ சொல்ற போல ஒண்ணும் இல்லைடி!”
“அப்படித்தான் எனக்கு நல்லா தெரியும். நீங்க மட்டும் இல்ல. இந்த சமுதாயமே அப்படித்தான் இருக்கு. அவங்களுக்கு ஒரு விஷயத்துல பயன் இருந்தா மட்டும்தான் இங்கே பெண் அப்படின்ற ஒரு இனமே தோன்றணும். ஆடு, மாடு, கோழி எல்லாத்துலயும் பயன் வருது, அதனால பெட்டைக்குட்டி வேணும் அப்படின்னு எதிர்பார்ப்பாங்க. இதுவே நாய் அப்புறம் இந்த பெண் பிள்ளைகள், இதுல எல்லாம் ஆண்பிள்ளை பொறக்கணும்னுதான் நினைப்பாங்க. ‘ஓசியில் சோறு போட்டு வளர்த்த இங்கே யாருக்கும் விருப்பமும் இல்ல, அதை விரும்பறதும் இல்ல’,” என்றாள் செம்பருத்தி.
குருசேத்ரன் அவளின் முகத்தைப் பார்த்து, “நீ ஓவரா திங்க் பண்ணாதடி! நீ ரொம்ப டூ மச்சாகப் போற!” என்றான்.
“இப்போ கூட உன்னோட தேவைக்காக என்னை கட்டாயப்படுத்தி எப்படி வேணாலும் வளைக்கலாம்னுதானே இங்கே உட்கார வச்சிருக்க? இதுல இருந்தே தெரியலையா?” என்றவள் விரக்தியுடன் சிரித்துக்கொண்டு, “இதையெல்லாம் நான் எதுக்கு உன்கிட்ட சொல்லணும். என்னமோ நடந்துட்டு போகுது, எனக்கு என்ன?” என்றாள் செம்பருத்தி.
குருசேத்ரனுக்கு இப்பொழுது அவளை எப்படி கையாள்வது என சுத்தமாகத் தெரியவில்லை. அவன் மேலேயே அவனுக்கு கோபம் வர வேகமாக எழுந்து சென்றுவிட்டான்.
செம்பருத்தி எதையும் கண்டுகொள்ளாமல் ‘இதுவும் கடந்து போகும்’ என்ற நம்பிக்கையுடன் இருந்தாள். அவனது குணம் தெரிந்துவிட்டது. யாரிடமும் முறையிட்டு பேசி என்ன பயன் கிடைக்கப்போகிறது? என்ன வந்துவிடப் போகிறது. நடக்கிறது நடக்கட்டும், ஆனால் திருப்பிக் கேட்கும் இடத்தில் வாயை மூடிக்கொண்டு இருக்கக் கூடாது என உறுதியாக இருந்தாள்.
அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிய… குருசேத்ரன் தீவிர சிந்தனையுடன் உணவு மேஜையில் அமர்ந்திருக்க, அங்கே ஒரு ஜீவன் எதைப் பற்றியும் கண்டுகொள்ளாமல் சாப்பிட்டுக்கொண்டிருந்தது. வேறு யார், நம் செம்பருத்திதான்.
“பாஸ்!” என அழைத்துக்கொண்டே வந்தான் ஸ்ரீராம்.
வந்ததும் ஒரு முறைப்பு பதிலாகக் கிடைத்தது அவனுக்கு.
“ஸ்ரீராம், வாயேன் சாப்பிடலாம்,” என மணியம்மை எழுந்தார்.
“நீங்க சாப்பிடுங்க,” என நேராக குருசேத்ரன் அருகில் சென்றவன், “பாஸ், சாரி ஃபார் தி டிஸ்டர்ப்பென்ஸ். சிவராமன் சாரும் அவங்க மிஸ்சும் இங்கே வர்றாங்களாம். உங்களைப் பார்க்கணுமாம் அண்ட் செம்பருத்தி மேடம் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணணுமாம்,” என்றான்.
“நீ ஏதாவது சொல்லி சமாளிச்சிருக்க வேண்டியதுதானே!”
“என்ன பாஸ், எதுவும் பிரச்னையா? எல்லாமே ஓகேதானே!”
குருசேத்ரன் பற்களைக் கடித்துக்கொண்டே எழுந்தவன், “என்கிட்ட கேள்வி கேட்கிற அளவுக்கு வந்துட்ட ராஸ்கல். அந்த அளவுக்கு ஃப்ரீயா நான் விட்டிருக்கேன்னுதானே அர்த்தம்.”
“பாஸ்…” என ஸ்ரீராம் அமைதியாகிப் போனான்.
“டேய், எதுக்குடா அவனை திட்டுற?” என பரிந்து பேச மணியம்மை வந்தார்.
“இப்படியே பேசிட்டு இருப்பீங்க, அந்த சுகர் ஃப்ரீ விஷயம் கட் ஆகிடும். பரவாயில்லையா?” என மிரட்டினான்.
கப்பென வாயை மூடிக்கொண்டார் மணியம்மை.
குருசேத்ரன் கோவமாக முன்னால் செல்ல, அவன் பின்னால் வால் போலச் சென்றான் ஸ்ரீராம்.
“என்னடி, உன் புருஷன் என்னை திட்டுறான். எனக்காக சப்போர்ட் பண்ணியா நீ?”
“நான் என்ன மேடம் பண்ணட்டும்? அப்படி ஒரு தவப்புதல்வனை பெத்து வச்சிருக்கீங்க!”
“ம்… எனக்கு இது தேவைதான்,” என மணியம்மை சாப்பிட, “பின்ன துப்பாக்கி குண்டு என் பக்கம் குறி திரும்பிடுச்சுன்னா நான் என்ன பண்றது? சொல்லுங்க,” என மிகவும் இயல்பாகப் பேசுவது போலக் காட்டிக்கொண்டாள் செம்பருத்தி.
“ம்… ஜாடிக்கு ஏத்த மூடிதான்,” என சிரித்துக்கொண்டே சாப்பிட்டார் மணியம்மை.
செம்பருத்தி மெல்ல எழுந்து நடந்தவள். அசரிக்கையுடன் படுக்கையறை சென்றாள்.
“என்னம்மா ஆச்சு?” என மணியம்மை கேட்க, “ஒண்ணுமில்லை மேடம்!”
“ஹே, அடி வாங்க போறடி!”
“சாரி அத்தை, சும்மா,” எனக் கண் சிமிட்டிப் பழிப்புக்காட்டிக்கொண்டே சென்றுவிட்டாள் செம்பருத்தி. அடுத்த ஒரு மணி நேரத்தில் அவளின் முன் நின்றான் குரு.
செம்பருத்தி ஒய்யாரமாக சேரில் அமர்ந்திருந்தாள்.
“ப்ளீஸ், இந்த ஒரு ஹெல்ப் பண்ணு! அவங்க முன்னாடி எப்போவும் போல இரு,” எனக் கெஞ்சினான்.
“அப்படியா? அதுக்கு கொஞ்சம் செல்வாகுமே, பரவாயில்லையா?”
“என்ன?” என குருசேத்ரன் கேட்க, “இனி என் முன்னாடி வந்திடாத!”
“அது எப்படி முடியும்?” என குரு முகத்தில் கோபம் பரவியது.
“அப்போ நீயே உன் கிளைன்ட்க்கு கருவாடு சமைச்சுக் கொடு!”
“ஹே, இல்லை இல்லை, ப்ளீஸ்…” எனக் கெஞ்சினான் குருசேத்ரன்.
செம்பருத்தி அவனை சிரித்துக்கொண்டே பார்த்தவள். “இனி என்னோட வழியில் நீ வரவே கூடாது. என் தம்பியை வச்சு என்னை பிளாக்மெயில் பண்றது? இதையெல்லாம் இனிமே பண்ண மாட்டேன்னு சொல்லு, நான் உன்னோட டீலுக்கு வரேன்.”
குருசேத்ரன் எதுவும் பேசாமல் அமைதியாக நிற்க, “இதுக்கு நீ ஒத்துக்கலை, அப்புறம் நான் இந்த ரூமை விட்டு வெளியே வர மாட்டேன். அண்ட் அவங்களை வெல்கம் பண்ண மாட்டேன். முக்கியமா பேசவும் மாட்டேன், எப்படி வசதி?” எனக் கேட்டாள் செம்பருத்தி.
வேறு வழியே இல்லை அவனுக்கு. செம்பருத்திக்கு மிகவும் உற்சாகமாக இருந்தது. அவன் ஒத்துக்கொண்டான்.
“ஓகே!”
“என்ன?” எனக் காதைத் தேய்த்துக்கொண்டே கேட்டாள்.
“ஓகே, இனி உன் பக்கம் வரல, போதுமா?” எனப் பற்களைக் கடித்தபடி கூறினான்.
“ஓகே, இப்போ வெளியே போ!” என அவனை வெளியே தள்ளி கதவை சாத்தியவளுக்கு உள்ளுக்குள் உற்சாகம் பொங்கியது.
“ஹே, அவங்க வந்துடுவாங்க! என்னடி பண்ற?”
“ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வரேன், போடா!” என்றாள்.
“ஹே, ஒரு நிமிஷம்!”
“என்ன?”
“அவங்க முன்னாடி என்னை ‘டா’ சொல்லாத!” என குரு சொன்னான்.
“அப்போ இதுக்காகவே சொல்லப் போறேன். போடா!” எனச் சிரித்துக்கொண்டே குளிக்கச் சென்றாள்.
குருசேத்ரன் அங்கும் இங்கும் நடக்க, “கொஞ்ச நேரம் உட்காரு குரு,” என மணியம்மை இருக்கையைக் காட்ட, “இன்னிக்கு வாக்கிங் போனீங்களா?” எனக் கோபத்துடன் கேட்டான்.
“அது காலையிலேயே போய்ட்டேனே?” என மணியம்மை கூற, “பொய் சொல்றீங்க!” என குருசேத்ரன் பேச வர, “எதுக்கு இப்போ மிரட்டிட்டு இருக்கீங்க. உங்க அதிகாரம் இங்கே வேணாம்,” என்று மிரட்டிக் கூறினாள் செம்பருத்தி.
இப்பொழுதுதான் அவனுக்கு மூச்சே வந்தது. ஒரு பெருமூச்சுடன் ஷோபாவில் அமர்ந்தான்.
“குரு!”
“ம்…”
“இன்னைக்கு ஒருநாள் மட்டும் கருவாடு சாப்பிடவா? குழம்பில் மட்டும்டா! ப்ளீஸ்டா!” என மணியம்மை கேட்க, “இன்னைக்கு மட்டும் தான்! இனி நோ எக்ஸ்கியூசஸ்,” என குருசேத்ரன் சொல்ல, “அப்பாடி, என் தங்கமடா நீ,” எனக் கிச்சன் பக்கம் சென்றார் மணியம்மை.
செம்பருத்தி எங்கிருக்கிறாள் என மெல்லப் பார்த்தவன் அவள் இருக்கும் பக்கம் சென்றான்.
“உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்!”
“உனக்கும் எனக்கும் என்ன பேச்சு வேண்டி கிடக்கு? நம்ம டீலிங் தான் முடிஞ்சு போச்சே, அப்புறம் என்ன? இனி என்னோட ரூம் பக்கம் வந்திடாத!”
“வந்தா என்னடி பண்ணுவ?” என விளையாட்டாகத்தான் கூறினான் குரு.
ஆனால் உண்மையாகவே அவளுக்குத் தலை சுற்ற, “ஹே ஹே,” என நெஞ்சில் சாய்த்துக்கொண்டவன். வேகமாக பதட்டத்துடன், “மா, சுப்ரியாவுக்கு கால் பண்ணுங்க, ஹாஸ்பிடல் போலாம்,” என குதித்தான்.
“டேய், இது வெறும் மசக்க மயக்கம்தான்டா! நீ நினைக்கிற போல ஒண்ணுமில்லை… அவளை இங்கே தூக்கிட்டு வா! சுப்ரியா வீட்டுக்கு வரட்டும்,” என மணியம்மை கொஞ்சம் ஆறுதல்படுத்தினார்.
இதோ சுப்ரியா வந்து பார்த்தவள், “எப்படி இருக்கு?” எனக் கேட்டாள்.
“மார்னிங் சிக்னஸ் ரொம்ப அதிகமா இருக்கு, படுக்கையை விட்டு எழுந்துக்கத் தோணல. கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு,” என செம்பருத்தி கூற, “அப்போ நாளைக்கு ஹாஸ்பிடல் கூட்டிட்டு வா குரு,” என்று விட்டு சுப்ரியா புறப்பட்டாள்.
மணியம்மை அவளை அழைத்துச் சென்று சாப்பிட வைத்தார். “அத்தை, ரொம்பவே பசியாக இருக்கே? எவ்வளவு சாப்பிடணும்? நான் மூணு வேளை மட்டும் தான் சாப்பிடுறேன்.”
“ஹே, பசிச்சா உடனே சாப்பிடணும்டி! உன்னை வச்சுக்கிட்டு…” என சலித்துக்கொண்டே பார்த்தார் மணியம்மை.
“மேடம்..! என்ன மேடம்..?” என செம்பருத்தி அழைக்க, “குரு…?”