அவள் புன்னகையுடன் வீட்டுக்குள் நுழைந்ததும் உடனே போன் பறந்தது. மணியம்மை அழைத்தார்.
“அத்தை!!”
“வீட்டுக்குப் போயிட்டியா மா?”
“இப்போ தான் வீட்டுக்குள் வந்தேன். உங்க பையன் வீட்டுட்டுப் போறாப்டி!”
“அப்படியா? சரி, அப்பப்போ போன் பண்ணு. என்னை மறந்திடாத!” என்றார் மணியம்மை.
“கண்டிப்பா,” என்றாள் செம்பருத்தி.
“சரி மா,” என போனை வைத்தார் மணியம்மை.
இதோ, அடுத்து குருசேத்ரன் அழைத்தான்.
“ஹலோ, என்னங்க? என்னாச்சு?”
“யார் கிட்ட பேசிட்டு இருந்த?”
“இது உங்களுக்கே ‘டூ மச்’சா தெரியலையா? இப்போதானே வீட்டுக்கு வந்தேன்,” என செம்பருத்தி தலையில் அடித்துக்கொண்டாள்.
“நீ யார் கிட்ட பேசிட்டு இருந்த? அதை சொல்லு! கேட்ட கேள்விக்கு பதில்,” என்றான்.
“உங்க அம்மா கிட்ட,” என செம்பருத்தி சலித்துக்கொண்டே கூறினாள்.
“சரி!!” என்றவன் ஒரு சில நொடிகள் விட்டு, “கண்டதை சாப்பிடாத. ஹெல்த் கான்ஷியஸா இரு. சுத்தமா இரு. நான் உன்னை பார்க்க ஈவினிங் வரேன். வெளியே போயிட்டு வரலாம்,” என வைத்தான் குருசேத்ரன்.
அவள் பெருமூச்சுடன் போனை வைக்க… “உன் புருஷன் வீட்டுக்கு நீ நடந்தே போயிடலாம். ஆனால், அப்படி இருக்க ஒருத்திக்கு மாமியார் கால் பண்றாங்க. புருஷன் கால் பண்றாப்டி. இவள் கடல் தாண்டி வந்ததைப் போல,” என சம்பூர்ணம் கூற…
செம்பருத்தி அவளை முறைத்துப் பார்க்க… சம்பூர்ணம் வாயைப் பொத்தி சிரித்தபடி, “ஹே, நிஜமா செம்பா! உன்னைப் பார்த்தால் ஏதோ சினிமா ஹீரோயின் போல இருக்கு,” என்றாள்.
“ஹே, உன்னை,” என செம்பருத்தி அவளை அடிக்க வர…
“செம்பருத்தி,” என அழைத்தபடி மொத்த குடும்பமும் ஒன்று சேர்ந்து கொண்டது.
பாரி உற்சாகமாக மகளைப் பார்த்தார்.
சம்பு தன் தந்தையை பார்த்துக்கொண்டே, “அப்பாவுக்கு இப்போ ரோஜா அக்கா மேலே இருக்க பாசம், இப்போ அப்படியே செம்பருத்தி மேலே போயிடுச்சு போலயே!” என்றாள்.
“எனக்கு எல்லாரும் ஒரே போலதான். ஏன்னா எனக்கு என் செல்லப் பொண்ணு தாமரையைத்தான் பிடிக்கும்,” என்றார்.
“நிஜமாவா?” என சம்பூர்ணம் கேட்டுக்கொண்டிருக்க…
“ஆமா, என் தாமரை பொண்ணைத்தான் பிடிக்கும்,” என்றார் பாரி.
“நிஜமாவாப்பா?” என்று ஒரு குரல்…
“ஆமா, தாமரை,” என சம்பூர்ணம் சாதாரணமாக சொல்லிக்கொண்டு திரும்பியவள் சட்டெனத் தன் அக்காவைப் பார்த்தாள். அனைவரின் பார்வையும் ஒரே நேரத்தில் தாமரையின் மீது திரும்ப… பாரிக்கு கண்ணீரே வந்துவிட்டது.
“பொண்ணு!” எனப் பாசமாக அழைத்தார். நான்கு வருடங்கள் ஜடம் போல இருந்தவள் இன்றுதான் பேசுகிறாள். செல்வி தனது மகளை அணைத்துக்கொண்டு அழுதார்.
“அக்கா, நீ சரியாயிட்ட,” என செம்பருத்தி உற்சாகத்துடன் கூற…
சம்பூர்ணம் கண்களைத் துடைத்துக்கொண்டே, “நான் இப்போவே ரோஜா அக்காகிட்ட சொல்றேன்,” என வேகமாக போன் செய்தாள்.
செம்பருத்தி இன்னொரு பக்கம், “நான் துளசி அக்காவை வரச் சொல்றேன்,” எனக் கர்ணனுக்கு அழைத்தாள். அனைவரும் உற்சாகமாக இருக்க…
செல்வி தன் மகளின் நெற்றியில் திருநீற்றைப் பூசி விட்டு, “என் மகளும் நல்ல சேதி சொல்லிக்க… புதுவரவு வீட்டுக்கு வந்த நேரம், என் பொண்ணு சரியாயிட்டா சாமி,” என நெற்றியில் திருநீற்றைப் பூசினார்.
தாமரையின் முகம் சட்டென மாறி, வயிற்றை வருடியது. “‘என்னோட குழந்தை எங்கே மா?’ என கேட்டாலே பார்க்கலாம்.”
அனைவரின் பார்வையும் ஒரே நேரத்தில் தாமரையின் மீது படிய… செல்வி சட்டெனத் தாமரையை உள்ளே அழைத்துச் சென்றுவிட்டார்.
“செம்பா, செம்பா! அக்காவுக்கு குழந்தையா? எப்படி செம்பா? இப்போ தாமரை அக்கா சொல்லிட்டுப் போகுது,” என சம்பூர்ணம் கேட்க…
“இதை அப்புறமா பேசிக்கலாம். அம்மா கிட்டப் போய் கேட்டு வைக்காத,” எனக் கூறினாள் செம்பருத்தி.
அவசர அவசரமாக வீட்டுக்கு வந்து சேர்ந்தாள் ரோஜா. அவள் வேகமாகச் சென்று தாமரையை அணைத்துக்கொண்டாள்.
“ஹே, என்னாச்சு உனக்கு?” என தாமரை பிரித்து விட்டு கேட்க…
“ஒண்ணுமில்லை கா!” எனக் கண்களைத் துடைத்தாள் ரோஜா.
“எனக்கு எதுவுமே ஞாபகம் வர மாட்டிக்குது. செம்பருத்திக்குக் கல்யாணம் ஆகிடுச்சா? சம்பூர்ணம் காலேஜ் முடிச்சுட்டா? தர்மன் எங்கே? துளசி அக்காவோட புருஷன் அர்ஜுனன் தான? இது யாரு?” என அனைவர் முன்னும் கேட்டாள் தாமரை.
துளசி தயக்கத்துடன் கர்ணனைப் பார்க்க, “நான் எதையும் நினைச்சுக்கல. நீ ஃப்ரீயா இரு,” என்று விட்டு மகனைக் கொஞ்சியபடி மாமனார் அருகில் அமர்ந்துகொண்டான்.
ரோஜா அவளைத் தனியாக அழைத்துக்கொண்டு சென்றவள். “அக்கா, உனக்கு எதுவும் ஞாபகம் வருதா? வேற எதுவும் நினைப்பு இருக்கா?” எனக் கேட்டாள்.
தாமரை தீவிரமாக யோசித்தவளுக்கு, “என் குழந்தை?” எனத் தலை சுற்றியது.
செம்பருத்தி நேராக ரோஜாவின் பக்கம் சென்றவள், “அக்கா, இப்போ நான் ஒண்ணும் சின்ன பொண்ணு இல்லை. தாமரை அக்காவுக்கு என்ன பிரச்சினை? எனக்குத் தெரிஞ்சாகணும்,” எனக் கேட்டாள்.
ரோஜா ஒரு பெருமூச்சு விட்டு, “விஷ்வ விகாஸ் ஸ்கூல் தெரியுமா?”
“ம்ம்… தெரியும். ஈரோட்டில் தானே இருக்கு?”
“ம்ம்… அந்த ஸ்கூல் சேர்பெர்சன் சத்யமூர்த்தியோட தம்பி விஷ்வ விகாஸ்… அவரும் அக்காவும்…” என நிறுத்தினாள் ரோஜா.
செம்பருத்தி அதிர்ச்சியுடன், “அக்கா ‘குழந்தை’ன்னு சொல்றா?” எனக் கேட்க…
“ம்ம்… அக்கா மாசமா இருந்தாள். நீ அப்போ நர்சிங் படிச்சிட்டு இருந்த!”
“அக்கா, இதை சும்மா விடக்கூடாது. நான் இப்போவே அவர் கிட்ட சொல்றேன். குருசேத்ரன் ஹெல்ப் பண்ணுவார்,” என செம்பருத்தி பதட்டத்துடன் போனை எடுக்க…
“உன்னோட புருஷனும் அந்த சத்யமூர்த்தியும் ரொம்ப க்ளோஸ். விஷ்வ விகாஸ் ஸ்கூலோட எட்டு பிரான்ச்சையும் மொத்தமா கன்ஸ்ட்ரக்ஷன் பண்ணது உன்னோட ஹஸ்பண்டுதான். அதனால நீ எதையும் சொல்ல வேண்டாம். விஷயத்தைக் காம்ப்ளிகேட் பண்ணாத. அந்தப் பிரச்சினையை நான் பார்த்துப்பேன்,” என்றாள் ரோஜா. (ரோஜா, தாமரை, சத்யமூர்த்தி, விஷ்வ விகாஸ் நால்வருக்கும் தனியாக கதை உள்ளது).
“இப்போ அக்காவை எப்படி சரி பண்றது?” என செம்பருத்தி பதட்டத்துடன் கேட்டாள்.
“இதை நம்ம கேட்க முடியாது. இதுக்கு மனநல மருத்துவமனைதான் போகணும், செம்பா.”
“ஓகே கா! பார்த்துக்கலாம்,” என்றவள் சட்டென, “அப்போ அந்த சத்யமூர்த்தி என்னோட கல்யாணத்துக்கு வந்தாரா? ரிசப்ஷனுக்கு?” என்று பதட்டத்துடன் கேட்டாள்.
“இல்லை, வரல!”
“அப்பாடி,” என்றவள். “உனக்கு எப்படி கா இது தெரியும்?”
“நான் சத்யமூர்த்தி ஸ்கூலில் தான் ஒர்க் பண்றேன்,” என்றாள் ரோஜா.
செம்பருத்தி அடுத்து பேச வர… ரோஜா அதைத் தடுத்து, “நீ இப்போதைக்கு எனக்கு ஒரு ஹெல்ப் மட்டும் பண்ணு. தாமரையை ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போ! அதுவும் அம்மாவுக்குத் தெரியாம…”
“என்னாச்சு? ஏன் அம்மாவுக்குத் தெரியக் கூடாது?”
“ப்ச்! சொல்றதை மட்டும் கேளு,” என ரோஜா அத்தனை விவரங்களையும் தெளிவாகக் கூறினாள். செம்பருத்திக்கு அதுவும் சரியாகப் பட்டது.
“அக்கா, ஹாஸ்பிடல் விவரம்?” என செம்பருத்தி கேட்க… “ஆர்.எஸ்.புரம். டாக்டர் நேம் நித்யா. அவங்களோட கிளினிக் விவரத்தை உனக்கு வாட்ஸ்அப் பண்றேன்,” என அனுப்பி விட்டாள்.
இங்கே சுப்ரியாவின் முன் நின்றிருந்தான் தீட்சண்யன்.
“என்னாச்சுடா உனக்கு? எதுக்கு இப்படி வந்து நிக்கிற?” என சுப்ரியா கேட்க…
“அவன் என்னைத் தோற்கடிக்கத்தான் பிரியா கல்யாணம் பண்ணிருக்கான். உனக்கு நான் முக்கியமா தெரியல, அப்படி தானே?”
தீட்சண்யன் ஒரு பெருமூச்சு விட்டபடி, “அவன் எங்க அப்பா இடத்தை பிடிப்பேன்னு என்கிட்ட சேலஞ்ச் பண்ணான். நானும் அவன்கிட்ட சேலஞ்ச் பண்ணேன். நான் சேலஞ்ச் பண்ண ஒரு வாரத்தில் கல்யாணம் பண்ணிட்டான். அவன் ஜெயிச்சுட்டான், நான் தோத்துப்போய்ட்டேனாம். அதுக்கு மீசைய…” என நிறுத்தியவன்.
“அந்தப் பொண்ணை அவன் இஷ்டப்பட்டு கல்யாணம் பண்ணிக்கல! அவன் ஒரு பைத்தியம். உன்னோட ஹாஸ்பிடல் நர்ஸ் தானே அந்தப் பொண்ணு. நீ அந்தப் பொண்ணுக்கு துரோகம் பண்ணிட்ட! நான் போய் அந்தப் பொண்ணுகிட்ட சொல்ல முடியாது. நீயே அந்தப் பொண்ணை எச்சரிக்கை பண்ணிடு. இதை சொல்லத்தான் நான் வந்தேன்,” என்றவன் அங்கிருந்து நகர…
சுப்ரியாவின் முகம் சட்டென மாற, வேகமாக குருசேத்ரனைப் பார்க்க புறப்பட்டாள்.
“டாக்டர், அக்காவுக்கு எப்படி இருக்கு?” என செம்பருத்தி நித்யாவிடம் கேட்டாள்.
“எடுத்ததும் ஸ்டார்ட் பண்ண முடியாது மா! இனி நீங்க இங்கே வர வேண்டாம். அவங்களுக்கு இதுவே அழுத்தமா இருக்கும். ஐ மீன், கிளினிக் சொன்னேன். எங்க வீட்டுக்கு வாங்க. அங்கேயும் அட்டென்ட் பண்ணுவேன். பேஷண்ட் ஃபீலிங் இல்லாமல் இருக்கும்,” என கூறினார் நித்யா.
“கண்டிப்பா டாக்டர்,” என செம்பருத்தி கூறிக்கொண்டே மேஜையில் இருக்கும் குருசேத்ரனது கார்டைப் பார்த்தாள்.
“டாக்டர், உங்களுக்கு குருசேத்ரனை தெரியுமா?” என புன்னகையுடன் கேட்டாள்.
“ம்ம்… தெரியுமே!” என புன்னகையுடன் மருந்து சீட்டை நீட்டினாள் நித்யா.
“எதுவும் கன்ஸ்ட்ரக்ஷன் பண்றீங்களா?” என ஆர்வமாக செம்பருத்தி கேட்க…
“இல்லை, பேஷண்ட் டீடெயில்ஸ் சொல்ல மாட்டோம்.”
செம்பருத்தி சட்டென, “என்ன சொல்றீங்க?” என கேட்க…
“நீங்க யாரு?”
“நான் அவரோட மனைவி,” என செம்பருத்தி கூற…
“சீரியஸ்லி!!” என நித்யாவின் முகம் மாறியது.
“எதுவும் பிரச்சினையா?” என செம்பருத்தி கேட்க…
“சாரி டூ சே திஸ்… அவரு IED பிரச்சினையில் பாதிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், சரியா கவுன்சிலிங் வரல… வந்த ஒரே நாளில் கிளம்பிட்டார். சுப்ரியாதான் கூட்டிட்டு வந்தாங்க,” என்றாள் நித்யா.
“தெரியும், நான் அவங்க ஹாஸ்பிடலில் தான் ஒர்க் பண்ணேன்,” என செம்பருத்தி கூறினாள்.
“செம்பருத்தி, கிளம்பலாமா?” என தாமரை கேட்க…
“உங்க… உங்க நேம் செம்பருத்தியா? நீங்க இத்தனை நாளாக அவர் கூடவா இருந்தீங்க? உங்களை அவர் எதுவும் அடிச்சு… ஹராஸ் பண்ணிருக்காரா?”
“என்ன டாக்டர் ஆச்சு? ஏன் அப்படி கேட்கிறீங்க?” என செம்பருத்தி பார்த்தாள்.
“சாரி டூ சே திஸ்… நீங்களே பாருங்க,” என வீடியோவை காட்டினாள் நித்யா.