அத்தியாயம்-21

“என்ன பண்ணேன்?”

“நீ செம்பருத்தியை மேரேஜ் பண்ணிருக்கியாமே?” என்றாள் சுப்ரியா.

குருசேத்ரன், ஸ்ரீராமை முறைத்துப் பார்க்க, “பாஸ், நான் சொல்லல பாஸ்!!” என்றான் சத்தியம் செய்வது போல தலையில் கை வைத்து கொண்டே.

“அவன் சொல்லல!!”

“அவனா?” என ஸ்ரீராம் நினைத்தான். ஆனால் கேட்கவா முடியும்?

“செம்பருத்தி சொன்னாளா?” என குரு பார்த்தான்.

“அவள் சொல்லல!! எனக்கு தெரிய வந்தது.”

“நானே உன்னை இன்வைட் பண்ணிருப்பேன். கிராண்டா ரிசப்ஷன் வைக்க போறேன்.”

“அவளை இஷ்டப்பட்டு தானே கல்யாணம் பண்ணிக்கிட்ட நீ? பாவம்டா அவள்? நீ என்ன தான்டா உன்னோட மனசுல நினைச்சிட்டு இருக்க? சொன்னால் தானே தெரியும்.”

“நீ பண்ணத்திலேயே உருப்படியான விஷயம். அவளை என் கண்ணில் காட்டினது தான்.”

“ஆன்ட்டியை பார்த்துக்கவா அவளை கட்டிக்கிட்ட?” என அதிர்ச்சியுடன் கேட்டாள் சுப்ரியா.

“எனக்காக கல்யாணம் பண்ணேன். அவள் என்கிட்ட இருக்க வேண்டியவ! அதான் கல்யாணம் பண்ணேன். இப்போ அவள் என் கட்டுப்பாட்டில்.. எனக்கு சொந்தமாகிட்டா” என்றான் கர்வம் குறையாமல்.

சுப்ரியா பெருமூச்சுடன் தன் நண்பனை பார்த்து, “அந்த IED ப்ராப்ளம் என்னாச்சு?”

“லுக், எனக்கு எதுவும் இல்ல. அதை நான் சரி செஞ்சுகிட்டேன். இப்போ நான் நார்மலா தான் இருக்கேன். என்னை அப்நார்மலா மாத்திடாத” என்றவன் எழுந்து கொண்டு, “இப்போ நீ கிளம்பலாம்” என்றான்.

“அவள் கிட்ட ஹார்சா நடந்துக்காதடா! பாவம் அவள் சின்ன பொண்ணு!!” என சுப்ரியா கூறினாள்.

“அவள் என் பொண்டாட்டி! சோ, அவளை எப்படி பார்த்துக்கணும்னு எனக்கு தெரியும். நீ கிளம்பு. அண்ட் ரிசப்ஷனுக்கு இன்வைட் பண்றேன், வா” என கூறிவிட்டு எழுந்தான்.

சுப்ரியா எதுவும் பேசாமல் பெரு மூச்சுடன் வெளியே செல்ல..

“ஒருநிமிடம்..”

அவள் மெல்ல திரும்பி பார்த்தாள்.

“இந்த IED பத்தி அவள் கிட்ட சொல்லி வைக்காத! முதல்ல நீ அவள் கூட பேசாத!” என சொல்லி அனுப்பினான்.

‘இவனுக்கு இன்னும் பைத்தியம் தெளியல’ என நினைத்து கொண்டே சென்றாள் சுப்ரியா.

மெல்ல சுழல் நாற்காலியில் சாய்ந்தவன் வேகமாக எழுந்து வீட்டுக்கு புறப்பட்டான். ‘செம்பருத்தி! செம்பருத்தி’ என வந்ததில் சுப்ரியா சொன்னதும் அவளின் நினைவு வர, உடனே கிளம்பி விட்டான் அவளை பார்க்க.

அவள் தானே அவனது stress buster. வீட்டுக்கு வந்ததும் ஒரு வாடை!

“என்ன இது?” என கர்சீப் கொண்டு முகத்தை மூடி கொண்டவன் முகத்தில் கோபம் அப்பிக் கொள்ள..

“என்ன ஸ்மெல் இது?” என கர்ஜனையுடன் வந்தான்.

“அது கருவாடு ஸ்மெல்டா!!” சாந்தா வீட்ல செஞ்சு எடுத்திட்டு வந்தா! இங்கே செம்பருத்திக்கு சாப்பிடனும்னு தோணுச்சா, அதான் பொரியல் பண்ணியிருக்காங்க. நான் சின்ன வயசில சாப்பிட்டது. இப்போ தான் சாப்பிட போறேன். வாசனையே நல்லாருக்குள்ள?” என கூறினார் மணியம்மை.

செம்பருத்தி சிரித்து கொண்டே, “என்னங்க உங்களுக்கும் வேணுமா?” என கேட்டு கொண்டே உணவு மேஜையில் உணவுகளை அடுக்கினாள்.

சாந்தா சிரித்து கொண்டே, “சும்மா சொல்ல கூடாது. செம்பருத்தி பக்குவமா சமைக்கிறா” என்றார் அவர் பங்குக்கு.

“ஹே, மேலே வா! ஒரு ஃபைல் தேடனும்.”

“சாப்பிட்டு போலாமே வாங்க!” என செம்பருத்தி அழைக்க.

“இப்போவேவா?” என செம்பருத்தி கேட்டாள்.

“ப்ச் வா!” என அதட்டி கொண்டே அவன் முன்னால் சென்று விட. “சொல்லுங்க” என செம்பருத்தி இயல்பாக கேட்டாள்.

“ச்சீ! என்ன வேலை பண்ணி வச்சிருக்க?” என்றவன் நெற்றியை தேய்த்து கொண்டு, “யாரை கேட்டு டி இதை பண்ண? இடியட்.. உன்னை!!” என பற்களை கடித்தான் குரு.

அவளின் கண்களில் இருந்து நீர் கொட்ட. வேகமாக மூச்சுடன் குருசேத்ரன் அவளின் அருகில் வந்து, “ஒழுங்கா போய் அதை வெளியே வீசு! உனக்கு பத்து நிமிஷம் டைம். அவ்ளோ தான்! உன்னோட ஹாபிட் எவ்வளவு மட்டம்? ச்சீ!!” என முகத்தை சுருக்கினான்.

“இப்போவே போறேன்” என வேகமாக கீழே சென்றவள். செய்த அனைத்து உணவுகளையும் ஒரு கேரியரில் மாற்றினாள்.

“செம்பருத்தி என்னாச்சு?” என சாந்தா மற்றும் மணியம்மை இருவரும் கேட்க.

“இல்ல ஒண்ணுமில்ல!!” வீட்டுக்கு செஞ்சு கொடுக்க தோணுச்சு. “பிளீஸ் அத்தை, எனக்கு வீட்டு நியாபகம் வந்திடுச்சு. நான் போயிட்டு வரேன்” என்று அனைத்தையும் பேக் செய்தவள். “அக்கா நீங்க அவருக்கு புதுசா சமைங்க, நான் வந்துடுவேன்” என்று உணவை வீணாக்க கூடாது என மொத்தத்தையும் எடுத்து கொண்டு வெளியே ஓடினாள் செம்பருத்தி.

கண்களில் மளமளவென கண்ணீர் சரிந்தது. இப்படி அவளை யாருமே பேசியது இல்லை. வேதனை நெஞ்சை அடைத்தது. நேராக தெரு முனைக்கு சென்றவள், அங்கேயே நின்றாள். திக்கு தெரியாத காட்டில் விட்டது போல தோன்றியது.

“ஏன்மா பசிக்குதுங்க சாப்பாடு வாங்கி கொடுக்கிறீங்களா” என கையில் குழந்தையை வைத்து கொண்டு வடநாட்டு பெண் கேட்டாள்.

அவளை வர வைத்து மொத்த உணவையும் பரிமாறினாள். கண்களில் நீர் திரையிட, அந்த பெண் நன்றி சொன்னாள்.

அவளின் கையில் காசு கொடுத்து அனுப்பினாள் செம்பருத்தி.

“என்னடா ஆச்சு?” என மணியம்மை மேலே வர.

“ஒண்ணுமில்ல!!”

“செம்பருத்தி அவங்க வீட்டுக்கு கிளம்பிட்டா!!” என மணியம்மை சொன்னதும். அவ்வளவு தான், சர்வமும் ஆட்டம் கண்டு கோபம் தலைக்கு ஏறியது. ‘என்னை கேட்காமல் எப்படி அவள் செல்லலாம்’ என தோன்ற. வேகமாக படி இறங்கியவன். வெளியே செல்ல.

“என்னடா நடக்குது இங்கே? அவள் வேகமா கிளம்பி போயிட்டா! நீயும் கிளம்பி போற? என்ன தான் நினைச்சிட்டு இருக்கீங்க?” என மணியம்மை கேட்க.

“வரேன் அமைதியா இருங்க” என அவளுக்கு அழைத்தான்.

போன் எடுக்கவில்லை அவள்.

“பிக் அப் மை கால்! பிக் அப்! பிக் அப்!” என சொல்லி கொண்டே சென்றான்.

காரில் ஏறியதும் வேகமாக ஓட்டினான். அங்கே, ‘போனை எடுடி! யூ ப்ளடி’ என கோபம் பொங்கியது.

காரை வளைக்கும் போது தான் செம்பருத்தி நடந்து வருவது தெரிய. சட்டென பிரேக் போட்டு காரை நிறுத்தினான். அவளின் முகத்தை பார்த்ததும் குற்ற உணர்வு தொற்றிக் கொள்ள. அவளின் வாடிய முகம் உள்ளுக்குள் வேதனையை கொடுத்தது. காலில் செருப்பு கூட இல்லை. அவ்வளவு கடுமையாக அவன் வார்த்தை வெளிவர சென்று விட்டாள். அவளது வீட்டுக்கு செல்லவில்லை என்ற ஒரு விஷயம் தான் அவனுக்கு நிம்மதியை கொடுத்தது.

“செம்பருத்தி” என அழைத்து கொண்டே காரை அவள் முன் நிறுத்தினான்.

அவனை பார்த்ததும் கண்ணீர் கொட்ட, வேகமாக துடைத்தவள், அவனை கண்டு கொள்ளாமல் நடந்தாள்.

“ஹே, வாடி!!” என கையை பிடித்து இழுத்தான்.

“எனக்கு கால் இருக்கு! விடுங்க”

“ப்ச் வா!! செப்பல் கூட போடல, கால் வலிக்கும். அண்ட் ஜெர்ம்ஸ் ஒட்டிக்கும். அன்ஹைஜீனிக். வாடி!!”

“எனக்கு எந்த கவலையும் இல்ல. எப்படி வந்தேனோ அப்படி போக தெரியும்.” என செம்பருத்தி அவனது கையை தட்டி விட்டு நடக்க.

ஒரு பெருமூச்சை விட்டவன், “இப்போ வரல, தூக்கிட்டு போவேன்” என வந்தான் நெருங்கி.

எதுவும் பேசாமல் காரில் ஏறினாள். அதாவது பின் சீட்டில்.

வீட்டுக்கு சென்றதும் மணியம்மை துருவி துருவி கேட்டார்.

“இல்லத்தை! அது வந்து, போற வழியில் ஒரு பொண்ணு சாப்பாடு கேட்டது. கொடுத்துட்டேன். இவர் வந்து கூட்டிட்டு வந்துட்டார்.”

“அப்படியா” என மணியம்மை அடுத்து பேச வர.

“பேசி முடிச்சிட்டீங்களா?”

“என்னடா? ஏன் என்னோட மருமக கூட நான் பேச கூடாதா?” என மணியம்மை முறைத்து கொண்டே கேட்டார்.

“ஃபைல் தேடனும். அப்புறம் பேசுங்க” என அவள் தோளில் கைகளை போட்டபடி கூட்டி சென்றான் குரு.

“கைய எடுங்க!! என்னை விடுங்க” என கண்களில் நீர் கோர்க்க அவள் கூற.

“முடியாது” என அறைக்குள் நுழைந்து கதவை சாத்தினான்.

“உனக்கு எதுவும் புரியுதா சாந்தா?”

“தெரியலையே மேடம்” என அவர் சமையலில் பிசியாக இருந்தார்.

“கைய எடுங்க!!” என வேகமாக தள்ளி விட்டாள்.

“ஐ நீட் யூ பேட்லி. இப்போவே” என வேகமாக அவளை நெருங்கி முத்தமிட்டான். கண்களில் நீர் கொட்டியது. அப்படியே அவளை தூக்கி கொண்டு குளிக்க சென்றான்.

மலரானவள் முகம் கொஞ்சம் கூட மலரவே இல்லை. கழுத்தில் முத்தமிட்டான்.

அவளோ அப்படியே ஜடம் போல இருந்தாள். மனதுக்குள் முதல் முறையாக ‘தெரியாம கல்யாணம் பண்ணிட்டோமோ’ என தோன்றியது.

“ஹே! ப்ச் பாரு டி!” அவன் பக்கம் திருப்பியவன் அவளின் முகத்தை நிமிர்த்த, தலை தாழ்ந்து இருந்தாள்.

இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக என்பது போல அவளிடம் காதை பிடித்து, “சாரி! நான் ஏதோ கோபத்தில் பண்ணிட்டேன்” என்றான்.

அவள் வாய்விட்டு அழுதே விட்டாள்.

“பிளீஸ் அழாத! எனக்கு ஹேண்டில் பண்ண தெரியல! எனக்கு இதெல்லாம் தெரியாது.” என வாய்விட்டே கூறினான்.

அவன் மார்பில் அடித்தாள். அடித்த கைகளை பிடித்து முத்தமிட்டவன், “நான் இதுவரைக்கும் யார் கிட்டயும் அதை கேட்டதில்லை.”

“எதை?”

“சாரி!!” என்றான் குருசேத்ரன்.

செம்பருத்தி அவனை விழிவிரித்து பார்க்க.. “உன்கிட்ட தான் கேட்டிருக்கேன். அதுக்கு காரணமும் நீ தான்.”

அவள் முகத்தை திருப்பி கொள்ள..

உதட்டில் முத்தமிட்டு, “நீ நல்லவேளை வீட்டுக்கு போகல! அது தான் என்னோட கோபத்தை கட்டு படுத்துச்சு.”

“போயிருந்தால் என்ன பண்ணிருப்பீங்க?” என கேட்டாள்.

“அதுக்குள்ள வந்து தூக்கியிருப்பேன்.” என்றான் வில்லத்தனமாக.

“ஹாங்! எங்க வீட்டுக்கு நான் போக கூடாதா?”

“போலாமே, என் கூட தான் நீ போகணும். உன்னை நான் எங்கேயும் தனியா விட மாட்டேன்.”

“அப்போ நான் எப்படி எங்க வீட்ல இருக்கவங்களை பார்க்க?”

“இங்கே வந்து பார்க்கட்டும். நீ போகாத!! ஐ.. ஐ மீன் இப்போதைக்கு வேணாம். எனக்கு ஒர்க் முடிஞ்சதும் அடிக்கடி போலாம்.” என்றான்.

“அப்போ வேலைக்கு போறேன்.”

“இப்போ பேபி வேணும் எனக்கு.” என முற்று புள்ளி வைத்தான்.

செம்பருத்தி எதுவும் பேசாமல் வெளியே செல்ல முயல..

“என்னடி!! எப்போவும் போல இரு!!” என இடையை பற்றினான்.

“நீங்க சொன்ன வார்த்தை என்னை ரொம்ப ஹர்ட் பண்ணிடுச்சு” என அவள் உடையை எடுத்தாள்.

குருசேத்ரன்..?

தொடரும்…