“இன்னும் என்ன தூக்கம்?” எனக் கேட்டுக்கொண்டே அவளை எழுப்பி விட்டான் குருசேத்ரன்.
கஷ்டப்பட்டு கண்களை விழித்துப் பார்த்தாள் செம்பருத்தி.“அதுக்குள்ள விடிஞ்சிடுச்சா?” என்னும் ரீதியில் தான் கண்களை தேய்த்தாள்.
“அப்படி என்ன தூக்கம்?”
“நீ எங்கேடா என்னை தூங்க விட்ட? விடிய விடிய…” என மற்ற வார்த்தைகளை அப்படியே முழுங்கிக்கொண்டாள்.
“நான் இருக்கும் போது, ஐ மீன், நான் உன் கூட இருக்கும் போது நீ முழிச்சிருக்கணும்.”
புருவம் சுருக்கி, கோபமாகப் பார்த்தாள்.
“என்னாச்சு?”
“இது உங்களுக்கே நல்லாருக்கா? ரெண்டு நாள் எனக்கு தூக்கமே இல்லை…”
“நானும் தான் முழிச்சிருக்கேன். ஆனா பாரு, நான் எவ்ளோ ஃப்ரெஷாக இருக்கேன். அப்புறம் என்ன? உனக்கு மட்டும்.”
‘நீ தான் மலைக் குரங்கு! நானுமா உன்னை போல,’ என தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள் செம்பருத்தி. எப்படி பார்த்தாலும் அவன் மேல் நல்ல அபிப்பிராயம் வரவே இல்லை. காரணம் இதுவரை தெரியவில்லை.
“மனசுல வச்சு என்னை கரிச்சு கொட்டாத. வாய்விட்டு சொல்லிடு. நான் எதுவும் நினைச்சுக்க மாட்டேன்,” என குருசேத்ரன் சொன்னான்.
“கண்டிப்பா! சொல்றேன். ஆனால் இப்போ எதுவுமே நினைக்கல,” என்றாள் செம்பருத்தி.
“படுக்கை விரிப்பை மடிக்கிறேன்,” என செம்பருத்தி கூற…
“நோ, மடிக்க கூடாது. அது அழுக்காகிடுச்சு.”
செம்பருத்தி அதிர்ச்சியுடன், “என்ன சொல்றீங்க? ஒரு தடவை தானே போர்த்தினோம். பெட்ஷீட்ல புது வாசம் கூட போகலை!” என செம்பருத்தி கேட்க…
“அப்படி உட்காரு,” என படுக்கையைக் காட்டினான்.
“இப்படியே சொல்லுங்க…”
“ப்ச்… உட்காரு,” என்றான் குரு.
“சொல்லுங்க!”
“நம்ம டாய்லெட் அண்ட் பாத்ரூமில் இருக்க ஜெர்ம்ஸ், பாக்டீரியா, வைரசை விட நம்ம பெட்ஷீட்லதான். அதுவும் முக்கியமா பில்லோலதான் நிறைய இருக்கும்.”
செம்பருத்தி அவனைப் புருவம் உயர்த்திப் பார்க்க… “நீ நர்ஸ் தானே! இது கூட தெரியாதா?”
“தெரியுமே,” என செம்பருத்தி வாய்மொழியாக மட்டுமே கூறினாள். உண்மையில் அவளுக்கு இதெல்லாம் தெரியாது.
எள்ளல் புன்னகையுடன் அவளைப் பார்த்தான். செம்பருத்தியின் மனதில், ‘நம்ம வீட்ல டெய்லி புது போர்வைக்கு எங்கே போறது? வீட்ல இருக்க ஆட்கள் எண்ணிக்கைக்கு கிட்ட தட்ட துவைச்சா கூட நம்ம முதுகு பெண்டு கழண்டு போயிடுமே,’ என்னும் ரீதியில் தான் அவளின் எண்ணங்கள் இருந்தது.
குரு அவளின் சிந்தையை கலைக்கும் விதமாக… “ஹே, உன்கிட்ட இன்னொரு விஷயம் முக்கியமா… ஹே, உன்னைத்தான். உன்னோட கவனம் எங்கே இருக்கு?” என சொடக்குப் போட்டான்.
“இதுக்கு முன்னாடி நான் சேத்துல பிரண்டு கிட்டு இருக்கேனா?” என கோபத்துடன் கேட்டாள் செம்பருத்தி.
“நான் சொல்றத முழுசா கேளுடி,” எனப் பொறுமையாகவே கூறினான்.
“சொல்லுங்க.”
“குட். நீ என்ன பண்ற?டெய்லி ‘பெட் சீட்’ மாத்திடு. நீ இந்த ரூம்ல எந்த வேலையும் செய்ய கூடாது. அண்ட் மதியம் லஞ்ச் எடுத்திட்டு, ஆபிஸ் வா. ரெண்டு பேரும் சேர்ந்து..”
”சேர்ந்து?” என அவள் அதிர்ச்சியுடன் பார்க்க, ”சேர்ந்து சாப்பிடலாம்.”
”மார்னிங் அண்ட் ஆஃப்டர்நூன் இனி நீ என் கூட தான் சாப்பிடணும். இது ஆர்டர்” என்று விட்டு நடந்தான்.
அவள் அதே இடத்தில் அமர்ந்திருக்க, அருகில் வந்தவன் ”என்னாச்சு?” என கேட்டான்.
”ஒண்ணுமில்ல” என தலையை குனிந்து கொண்டு கூறினாள்.
”உன்கிட்ட சாப்பிட வர சொன்னேன்” என குருசேத்ரன் கூற, ”ம்ம்” என முன்னால் நடந்தாள்.
பொதுவாக மனைவி தான் கணவனுக்கு பரிமாறுவாள். இங்கே கணவன் பரிமாறினான். ஆம், குருசேத்ரன் அவளுக்கு பரிமாறி கொண்டே, ”சாப்பிடு” என்றான்.
”ம்ம்” என மெல்ல சாப்பிட்டாள்.
”செம்பருத்தி, மீன் உனக்கு பொறிக்கவா மா!!”
”இன்னிக்கு மீன் எடுத்தீங்களா?” என சாப்பிட்டு கொண்டே கேட்டான் குரு.
”அக்கா எனக்கு வேணும்” என செம்பருத்தி கூற, ”இல்ல தம்பி, நேத்து வச்சது” என சாந்தா கூறி விட, ”நோஓஓஓ!! அதெல்லாம் சாப்பிட கூடாது. அவளுக்கு ‘புட் பாய்சன்’ ஆகிடும், வேணாம்” என்றான் குரு.
”இல்ல, நான் எங்க வீட்ல சாப்பிட்டிருக்கேன். எனக்கு ஒன்னும் ஆனதில்லை” என்றாள் மெல்லிய குரலில்.
”இனி கூடாது, ‘தட்ஸ் இட்’. எப்பவும் காலையில லைட்டா சாப்பிடணும். புரியுதா!” என்றவன் அவளை சாப்பிட வைத்து அதிகாரம் செய்தான்.
மணியம்மை அங்கு வர, செம்பருத்தி எழுந்தாள்.
”ஹே! உட்காரு!” என்றவன், ”மா, இங்கே உட்காருங்க” என அவன் தன் அம்மாவுக்கும் அதே போல ரூல் போட்டு சாப்பிட வைத்தான்.
செம்பருத்திக்கு உடல் அலுப்பு அதிகமாக இருக்க, அதையெல்லாம் யோசிக்கும் அளவுக்கு இல்லை. குருசேத்ரன் சென்றதும், கொஞ்ச நேரம் மணியம்மையிடம் பேசியவள், ஷோபாவில் சாய்ந்து உறங்கியே விட்டாள்.
இதோ போன் பறந்தது.
”சொல்லு டா!!”
”மா, அவள் வெளியே தூங்குறா! ரூம்ல படுக்க வைங்க” என ‘cctv footage’ வழியே பார்த்து கொண்டே கூறினான்.
”டேய், அசந்து தூங்குறா! இனி அவள் கிட்ட சொல்லிடுறேன். இந்த ஒரு தடவை விட்டுடு, ப்ளீஸ்” என்றார் மணியம்மை.
”’ஐ ஹேட் எக்ஸ்கியூசஸ்’” என்று சொல்லி போனை கட் செய்தான்.
“அவங்க வீட்ல இருக்க போலவே செம்பருத்தி இருப்பது ஏனோ அவனுக்கு பிடிக்கவில்லை. தனக்கு ஏற்றது போல அவள் மாற வேண்டும் என நினைக்கிறான். கொஞ்சம் கூட டிசிப்ளின் இல்லை,” என முனகிக்கொண்டான். அதைவிட, நேற்று திங்க் செய்த வேலையை அவனால் கொஞ்சம் கூட ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.
“டேய், இது உனக்கே அநியாயமா தெரியலையா? கல்யாணம் ஆகி ஒரு நிமிஷம் கூட அவளை சும்மா விடாமல் ஒரு வழி பண்ணிட்டே இருக்கே? உனக்கு இருக்க உணர்வுகள் போலத்தானே அந்த திங்க்குக்கு இருக்கும்? கொஞ்சம் திங்க் பண்ணு குருச்சேத்ரன்.”
சட்டென ஏதோ நினைவு வந்ததை போல் போனை எடுத்தவன், “ஶ்ரீராம், உள்ளே வா,” என அழைத்தான்.
“சொல்லுங்க, பாஸ்!”
“பெட் கிளினிக் பார்த்து சொல்லு.”
“ஓகே பாஸ்,” என்ற ஶ்ரீராம் மறுபடியும் திரும்பி, “என்னாச்சு பாஸ்? திங்க் ஓகே தானே?” என கேட்டான்.
“அவனுக்கு ஃபேமிலி பிளானிங் பண்ணனும். அதுக்கு தான் ஏற்பாடு பண்ணிடு,” என்று விட்டு அவன் வேலையைத் தொடர்ந்தான்.
ஶ்ரீராம் விட்டால் போதுமென ஓடிவிட்டான். “எதற்கு வம்பு? இன்னும் கொஞ்ச நேரத்தில் ‘நீயும் பண்ணிக்கோ’ என சொல்லிவிட்டால் என்ன செய்வது? நானே இன்னும் கல்யாணம் ஆகாத கன்னி பையன். வெறும் கையோட சுத்திட்டு திரியுறேன்,” என்னும் நிலைதான் அவனுக்கு.
”மேடம், சமைச்சுட்டேன். செம்பருத்தி..” என சாந்தா அழைக்க, மெல்ல கண்களை விழித்தவள். வேகமாக புறப்பட்டாள். அவளுக்காக கார் காத்திருக்க, கேரியருடன் நேராக ‘MG கான்ஸ்ட்ரக்ஷனை’ நோக்கி சென்றாள்.
”மேடம், எங்கே போகணும்? யாரை பார்க்க வந்திருக்கீங்க?”
”’MG கன்ஸ்ட்ரக்ஷன்’” என அவள் சொல்ல, லிஃப்டின் கதவுகள் திறக்க குருசேத்ரன் வந்தான்.
”இருங்க கேட்டு சொல்றேன்” என வரவேற்பு பெண் போனில் அழைக்க, ”கம், கம், மிஸ்சஸ் குருசேத்ரன்” என ஆளுமையுடன் அழைத்தான் குருசேத்ரன்.
வரவேற்பு பெண் போனுடன் திரும்பி பார்க்க, குருசேத்ரன் ஆளுமையையுடன் ”மிஸ்சஸ் குருசேத்ரன்” என அழுத்தி சொல்லிவிட்டு சென்றான்.
வரவேற்பு பெண் அதிர்ச்சியுடன் தலையாட்டி வணக்கம் வைத்தாள்.
”பிளீஸ், கைய எடுங்க” என செம்பருத்தி நெளிய, ”அப்போ ஹிப்பை பிடிக்கவா?” என கொண்டு சென்றான்.
”வேணாம் சாமி, தோல் மேலேயே கைய வச்சுக்கோங்க” என கூனி குறுகி நடந்தாள் செம்பருத்தி.
அவர்கள் ஆபிசுக்குள் நுழைந்ததும், அனைவரின் கண்களும் ஒரு நொடி பார்த்து விட்டு தலையை குனிந்து கொண்டது. ‘ஹிட்லரின் மனைவி இந்த பெண்ணா?’ என்று தான் ஓடி கொண்டிருந்தது.
காசிப் கூட பேச முடியாது, அவனது கழுகு பார்வையில் அகப்பட்டால் வேலையில்லா திண்டாட்டம் தான்.
அறைக்குள் நுழைந்ததும், ஸ்க்ரீனை மூடியவன் அவசரமாக அவளை களைந்தான்.
”என்ன பண்றீங்க? இது ஆபீஸ்?”
”சோ வாட்?” என்றவன் ஒரு ஆட்டம் உல்லாசமாக முடித்து, அவளை மடியில் அமர வைத்து கொண்டான்.
செம்பருத்தி வெட்கத்தை மறைக்க முடியாமல் திண்டாடினாள்.
”பீட் மி!!”
அவள் அதிர்ச்சியுடன் பார்க்க, குருசேத்ரன் புன்னகையுடன் ”அதில்ல.. இது” என உணவை காட்டினான்.
அனைத்தையும் ஊட்டி விட்டாள். இடையில் போன் பேசினான். லேப் டாப் நோண்டினான். ஆனால் மடியில் மலரானவள் இருந்தாள். நேருவின் பாக்கெட்டில் இருக்கும் ரோஜா செண்டை போல.. மன்னவன் மடியில் மலரவள் இருக்க வேண்டும்.
”நீ சாப்பிடு” என மேற்பார்வையுடன் அமர்ந்தான் அவள் முன்.
ஒரு விரலை தூக்கி கொண்டு சாப்பிட்டாள்.
”ப்ச்.. கூடாது. என்ன இது?” என மிரட்டினான்.
”சாரி” என அவள் கூற, ”சாரி வேணாம். கிஸ் கொடு” என உதட்டை கவ்வி, அதன் பின் விடுவித்தான்.
செல்வதற்கு முன் இன்னொரு முறை அவளை சாதித்து கொண்டான்.
”இனி லஞ்ச் கொடுக்க வரமாட்டேன்” என கிறக்கத்தில் கூறினாள்.
”நான் வீட்டுக்கு வரேன்” என அவன் தலையை கோதியபடி கூற, அவனை முறைத்து பார்த்தாள்.
”உன்னோட கோபம் என்னை..” என்று கீழ் உதட்டை கடித்துக்கொண்டு பார்த்தான்.
”போதும், நான் வீட்டுக்கு போறேன்” என சிரித்து கொண்டே புறப்பட்டாள்.
இப்படியே ஒருமாதம் ஓடியிருந்தது. அப்ராடில் இருந்து வந்து சேர்ந்தாள் சுப்ரியா.
வந்ததும் அவள் காதுகளில் விழுந்த செய்தி குருசேத்ரனின் திருமண விசயம் தான். அதுவும் அவன் கட்டி கொண்ட பெண் செம்பருத்தி என்பது இன்னும் பேரதிர்ச்சி.
”என்ன பண்ண நினைக்கிறான் இவன்?” என நேராக அவனை பார்க்க சென்றாள் சுப்ரியா.
”பாஸ், சுப்ரியா மேடம் வந்திருக்காங்க” என ஶ்ரீராம் கூற, ”என்னடா பண்ணி வச்சிருக்க?” என கேட்டு கொண்டே உள்ளே நுழைந்தாள் சுப்ரியா.