“அங்கே மேலே இருக்கிற ரூம் ரொம்ப பெருசா இருக்கு. கலர் பிடிக்கல. அப்புறம் தூக்கமே வர மாட்டேங்குது. எங்க வீட்டையே அடக்கலாம். என் பக்கத்தில் என்னோட தங்கச்சி சம்பு படுத்துப்பா. இன்னொரு பக்கம் தாமரை அக்கா இருக்கும். அப்படி தூங்கிட்டு இப்போ, தனியா இருக்கிற போல ஒரு ஃபீலிங். வீடு இத்தனை பெரிசா இருக்கு. ஆனால், ஆனாலும் எனக்கு நீங்க கொடுத்த ரூம், அதாவது பக்கத்து ரூம், பிடிச்சிருக்கு. அங்கே நான் தூங்கிக்கவா? ஷிஃப்ட் பண்ணிட்டு வந்திடவா?”
மணியம்மைக்கு அவளின் நிலை நன்றாக புரிந்தது. கூடவே சிரிப்பும் சேர்ந்து வர, அதை அடக்கிக் கொண்டவர், “கண்டிப்பா வந்திடு,” என்றார்.
“ஹை ஜாலி,” என செம்பருத்தி உற்சாகமாகக் கூற,
“இதை அப்படியே குரு கிட்ட போன் பண்ணி சொல்லிடு.”
“ஹாங்? என்ன சொல்றீங்க?” என செம்பருத்தியின் முகத்தில் பயம் அப்பட்டமாகத் தெரிந்தது.
“ஆமா! உன்னோட ரூம் தான் அவனோட ரூம். அண்ட் அவனோட ரூம் தான் உன்னோடதும் கூட. அதனால நீ கீழே வந்துட்டா அவனும் கீழே வந்து தானே ஆகணும்?”
“அய்யோ, வேணாம்,” என ருத்தி கூறிவிட, வாய் விட்டுச் சிரித்தார் மணியம்மை.
“உங்களுக்கு என்னை பார்த்தால் சிரிப்பா இருக்கா?” என செம்பருத்தி சிணுங்கினாள்.
“ஆனா என்கிட்ட ஒரு வழி இருக்கு.”
“நீங்க உங்க பையன் கிட்ட கோர்த்து விடுற வழியை மட்டும் போட்டு கொடுக்காதீங்க.”
“ஹே, இல்லடி. நிஜமா இது ஒரு நல்ல வழி.”
“என்ன வழி?” என முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு கேட்டாள்.
“குரு அதிகமா ஏறி இறங்க மாட்டான். ஆனால் நீ வீட்டிலேயே இருக்க. அதனால நீ என்ன பண்ற? காலையில் உன்னோட ரூம்ல இருந்து கீழே வந்தால் சாயங்காலம் வரை பக்கத்து ரூமை யூஸ் பண்ணிக்கோ.”
“அப்போ நைட்டு?” என செம்பருத்தி கேட்க,
“ஏன்டிமா, நீ என் கூட தூங்கவா உன்னை என் பையனுக்கு கல்யாணம் பண்ணிட்டு வந்தேன்?” என மணியம்மை பார்த்தார்.
“நீங்க பண்ணதுலேயே பெரிய தப்பு, அந்த மலைகுரங்க பெத்து போட்டது தான்,” என நினைத்துக் கொண்டாள்.
“செம்பருத்தி!!”
“மேடம்!!” என தன்னிலைக்கு வந்தாள்.
“நான் வேணும்னா ரூம பெயிண்ட் பண்ண சொல்லவா? உனக்கு எந்த கலர் பிடிக்கும்?”
“எங்களை மாதிரி ஆளுங்களுக்கு ரெண்டு கலர் தான். நாங்க எங்க வீட்டுக்கு நீலப் பொடி கலக்கி சுண்ணாம்பு அடிப்போம், கரை கட்டுவோம். மஞ்ச கலர் அடிப்போம். அவ்வளவு தான். பெருசா கலர் பத்தி தெரியாது.”
“நானும் அப்படி தான். எங்க வீடும் உங்க வீட்டை போல தான் இருக்கும். இப்போவும் இருக்கு. ஊர்ல எங்க அம்மா அப்பா வீடு இருக்கு. இது என் மாமனார், குருவோட அப்பாவுக்கு கொடுத்த வீடு. நம்ம குடும்பத்தில் எல்லாருமே கட்டுமான வேலை தான்,” என்றார்.
“ஒரு டவுட்டை கிளியர் பண்ண முடியுமா?”
“சொல்லு செம்பருத்தி!”
“நீங்க எவ்வளவு பேசுறீங்க? ஆனா உங்க பையன் எப்படி கடப்பாரை கம்பி முழுங்கின போல இருக்கார்? எப்படி இப்படி ஒரு பையனை பெத்து வச்சிருக்கீங்க?”
“அடி ராஸ்கல், என் பையனை பழிக்கிறயா? இரு, அவன் வரட்டும். சொல்றேன் பாரு,” என சிரித்துக் கொண்டே காதை திருகினார்.
“ப்ளீஸ் அத்தை, அப்படி மட்டும் சொல்லிடாதீங்க.”
“பார்ரா! இப்போ மட்டும் அத்தை திக்காம வந்திடுச்சு.”
“அது அதிர்ச்சி!!” என்றாள் சிரித்துக் கொண்டே.
அந்த நாள் அப்படியே ஓடிவிட, இரவு அவர்களின் வீட்டில் வீடியோ கால் பேசினாள். குரு என்பவன் அருகில் இல்லாத வரை அனைத்தும் நன்றாக சென்றது. இரவு அவன் வரும்போது உறங்கி இருந்தாள்.
அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது. தடபுடலாக விருந்து தயாராகி கொண்டிருக்க, அறையில் அவன் இருக்கிறான் என தெரிந்ததும் நெஞ்சம் பக் பக்கென்று அடித்துக் கொண்டது. ஆனால் ஸ்ரீராம் வெளியே காத்திருக்க, “அப்பாடி அவனுக்கு வேலை இருக்கு, சந்தோசம்,” எனக் குளித்து முடித்து சென்றாள்.
சாந்தாவுடன் இன்னொரு ஆளும் இருந்தார். சமையல்காரர் போலும். அவர்களுடன் செம்பருத்தியும் சேர்ந்து கொண்டாள். அனைத்து அசைவ உணவும் இப்பொழுது அடுக்கி வைக்கப்பட்டிருக்க,
செம்பருத்தியின் வீட்டில் இருந்து காரில் வந்து இறங்கினார்கள். அதையும் குரு ஏற்பாடு செய்திருந்தான்.
செம்பருத்தி உற்சாகத்துடன் போய் அழைக்க, வேகமாக வந்த மணியம்மை, “டேய் ஸ்ரீராம், அந்த லேப் டாப்ப கொஞ்சம் மூடி வச்சிட்டு அவனை கொஞ்சம் விடு. டேய், எழுந்திரு. அவங்க எல்லாம் வந்துட்டாங்க, போய் வெல்கம் பண்ணனும்,” எனக் கூறினார்.
“ம்ம், போறேன்,” என்றவன் அனைவரையும் உள்ளே அழைக்க சென்றான்.
“ஹே, புது டிரஸ்?” என செம்பருத்தி ஆச்சரியத்துடன் பார்த்தாள்.
“எல்லாருக்கும் மாமா எடுத்து கொடுத்தாரு. குட்டி பையனுக்கு கூட புது டிரஸ் தான். பார்த்தியா?” என உடையைக் காட்டிக் கொண்டு நின்றாள் சம்பூர்ணம்.
“இதெல்லாம் எப்போ நடந்தது?” என ஆச்சரியமாக செம்பருத்தி கேட்க,
“நேத்து சாயங்காலம் வந்தாரு. எங்களை காரில் கூட்டிட்டு போய் எடுத்து கொடுத்தாரு,” என்றாள்.
தர்மன் செம்பருத்தியின் கையை பிடித்து, “அக்கா, ப்ளீஸ். எப்படியாவது மாமா கிட்ட சொல்லி என்னை ஜூனியரா சேர்த்துக்க சொல்லேன். எனக்கு கேட்க தயக்கமா இருக்கு. அவர் கிட்ட நிறைய கத்துக்கலாம்,” என்றான்.
மணியம்மை குருசேத்ரனின் கைகளைப் பிடித்து, “ரொம்ப சந்தோசமா இருக்கு. உங்க அப்பா என் பிறந்த வீட்டை ஒரு பொருட்டா மதிக்கவே மாட்டாரு. ஆனால் நீ? எனக்கு பெருமையா இருக்குடா!” என்று மெச்சிக் கொண்டார்.
பாரி தயக்கத்துடன் வெளியே நின்றிருக்க, குரு அவரை உள்ளே அழைத்து வந்தார். “இது உங்க பொண்ணோட வீடு! இப்படி நீங்க தயங்கி நிக்க கூடாது,” என அழைத்து வந்தான். வீடு முழுவதையும் சுற்றிக் காட்டினாள் செம்பருத்தி.
“அய்யோ, திங்க் ரொம்ப கியூட்டா இருக்கான்,” என்று சம்பூர்ணம், தர்மன் இருவரும் கொஞ்சினார்கள்.
“அப்டியா? நீங்க வேணும்னா ‘டிரை பண்ணி பாருங்க,” என்று விட்டு உள்ளே சென்றான் குரு.
“செம்பா, இங்கே வாயேன்,” என அவர்கள் பின்பக்கம் அழைக்க,
“என்னாச்சு?” எனக் கேட்டுக் கொண்டே வந்தாள் செம்பருத்தி.
“அக்கா, திங்க் கியூட்டா இருக்கான்ல,” என தர்மன் கூற,
“அவனை பிடி,” என பயந்து நடுங்கியவள் ஓட்டம் எடுத்தாள்.
“மாமா சொன்னது சரி தான்,” என சம்பூர்ணம் சிரித்துக் கொண்டிருக்க,
அதீத பயத்தில் மயங்கியே விழுந்தாள்.
“என்னாச்சு? என்னடா பண்றீங்க?” என செல்வி வந்து எழுப்பிவிட்டார்.
ரோஜா இருவரையும் முறைத்து பார்க்க, “ஐயோ ரோஜா அக்கா,” என வாயை மூடிக்கொண்டு அமைதியாகி விட்டார்கள் இருவரும்.
குரு நமட்டு சிரிப்புடன் சுற்றிக் கொண்டிருந்தான். அனைவரும் விருந்து சாப்பிட்டார்கள். செம்பருத்தி அனைவருக்கும் பரிமாறினாள். திருப்தியாக சாப்பிட்டார்கள்.
அனைவரின் மனதிலும் குருசேத்ரன் என்றால் 100-க்கு 101 மார்க் கொடுப்பார்கள் என்பதை விட, கொடுக்க வைக்க உருவாக்கினான்.
சம்மந்தி என செல்வி மணியம்மையின் பக்கம் சென்றார். குரு அனைவரையும் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க.. “நாளைக்கு விருந்துக்கு வந்துடுங்க. வருவீங்க தானே!! மாப்ளை நீங்க செம்பருத்தி மூணு பேரும் கண்டிப்பா வரணும்.” என்றார்.
“சாந்தா, நாளைக்கு லீவு போட்டுக்க,” என மணியம்மை அவரின் கையில் சமைத்த உணவுகளை போட்டுக் கொடுத்தவர், பணமும் கொடுத்தார்.
“மா! மட்டன் சாப்பிடல தானே!!” என மேஜையின் பக்கம் வந்தான் குரு.
“சாப்பிடலடா! போதுமா?” என மணியம்மை கூற,
“சாப்பிட கூடாது,” என அவருக்கு உணவுகளை போட்டுக் கொடுத்தான். மூவரும் ஒன்றாக சாப்பிட்டார்கள்.
“குரு!!”
“ம்ம் என்றான் ஒற்றை பதிலுடன்”
அது ஶ்ரீராம வர சொல்றியா? என மணியம்மை சொல்லி கொண்டிருக்கும் போதே அங்கு வந்தான் ஶ்ரீராம்.
குருசேத்ரன் முறைத்து பார்க்க, வீட்ல விஷேசம். அவன் சாப்பிட கூடாதா? என ஏக்கத்துடன் கேட்டார் மணியம்மை..
என்னமோ பண்ணுங்க என வேகமாக கை கழுவி விட்டு அவன் மேலே சென்றான்..
“ஶ்ரீராம் வா வா!!” என மணியம்மை புன்னகையுடன் அழைக்க..
“மேடம் அது வந்து பாஸ்” என்று தயங்கினான்.
“அவன் கடக்கறான் நீ இப்போ வரியா இல்லையா?” என மணியம்மை மிரட்ட.. புன்னகையுடன் வந்து அமர்ந்தான் ஶ்ரீராம்.
“அப்பா எப்டி இருக்காரு? அம்மாவுக்கு சாப்பாடு போட்டு தரேன். வீட்டுக்கு கொண்டு போ! அண்ணன் வந்தானா?” என மணியம்மை விசாரித்தபடி உணவை பரிமாறினார்.
“எல்லாரும் நல்லாருக்கோம் போதும்.. நீங்க அதிகமா வைக்கிறீங்க!!” என ஶ்ரீராம் சினுங்க..
“சாப்பிடு டா வளரும் பையன்” என ஆசையுடன் பரிமாறி உணவை போட்டு கொடுத்தார்.
“போதும்.”
“எடுத்திட்டு போடா!!” என மிரட்டலாக அனுப்பினார்.
ஶ்ரீராம் சிரித்துக்கொண்டே எழுந்தான்.
மணியம்மை சிரித்துப் பேசிக் கொண்டே ஸ்டடி ரூமை பார்த்தவர். “டேய் ஒன்னும் தூங்க போகலையா?” என அதட்டினார்.
“ம்ம், போறேன்,” என நோண்டிக் கொண்டிருந்தான் லேப் டாப்பை.
இங்கே செம்பருத்தி அவனை ஒருமுறை பார்த்தவள், “எது எப்படியோ, இத்தனை பண்றதெல்லாம் நிஜமாவே என்னை பிடிச்சதுக்காகவா? இல்ல இவரோட அம்மாவுக்காகவா? அப்படின்னு கேட்டு தெரிஞ்சுக்கணும்,” என நினைத்தாள் செம்பருத்தி. அதனால் அவன் வருகைக்காக காத்திருந்தாள் செம்பருத்தி. நன்றி சொல்ல வேண்டும், தன் குடும்பத்துக்காக எவ்வளவு செய்திருக்கிறான் என நினைத்துக் கொண்டிருந்தாள்.
இதோ படுக்கைக்கு வந்தான் குருசேத்ரன். “உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்,” என செம்பருத்தி புடவையின் நுனியை சுற்றிக் கொண்டே நிற்க,
“ம்ம், என்ன?” என உடலை சோம்பல் முறித்துக் கொண்டே கேட்டான்.
“அது, இன்னிக்கு என்னோட வீட்ல எல்லாரும் ‘ஹேப்பி!”
“அப்டியா?”
“ஆமா!! ஆனால் எனக்கு உங்க கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்.”
“என்ன?” என்று அவளை நோக்கினான்.
“எப்படி என்னை கல்யாணம் பண்ணீங்க? நீங்க உங்களோட தகுதிக்கு ஏற்ப கட்டிக்கலாம்ல? என்னை எதுக்கு கட்டிக்கிட்டீங்க?” என செம்பருத்தி அவனைப் பார்த்தாள்.
“என்ன சொன்ன? மறுபடியும் சொல்லு?”
“அது, என்னை எதுக்கு கல்யாணம் பண்ணீங்க? அப், அப்படின்னு கேட்டேன்.”
“குட் கொஸ்ட்டின்? இப்போவே பதில் சொல்லணுமா? இல்ல,” என அருகில் நெருங்கினான்.
அவளின் முகம் குப்பென்று வியர்க்க, “இப், இப்போவே சொல்லுங்களேன்.”
“ம்ம், சொல்லிட்டா போச்சு!!” என்றவன் இதோ அவளிடம் ஒட்டி நின்றான்.
அவள் தள்ளி நிற்க முயற்சி செய்ய, முன்னால் இழுத்தான் அவனை நோக்கி. “சிவில் இன்ஜினீயரிங் படிச்ச பொண்ணை, பெரிய பணக்கார பொண்ணை ஏன் கட்டிக்கல நீங்க? அது தானே உன்னோட கேள்வி?”