அத்தியாயம்-13

“இனிமே நான் ரொம்ப ரிலாக்ஸா ஃபீல் பண்ணுவேன், தேங்க்ஸ் சுப்ரியா,” என்று கூறியவன், “ஆமா, உனக்கு எதுக்கு தேங்க்ஸ் சொல்லணும்? நீ வேலை செஞ்சதுக்குதான் பணத்தோட சேர்த்து டொனேஷனும் உன்னோட ஹாஸ்பிடலுக்கு அனுப்புறேன்,” என்றான், அந்தக் கர்வம் குறையாமல்.

“ஓவரா பேசுற,” என்று சுப்ரியா முறைத்துப் பார்க்க…

“நீ பண்றது, நீ பண்ணதிலேயே உருப்படியான காரியம் இது ஒண்ணு மட்டும்தான். பரவாயில்ல, ஏதோ காலேஜ்ல தூங்காம படிச்சிருக்க. எங்க அம்மா இப்போ ஹெல்த்தி ஆயிட்டாங்க. எனக்கு ஆபீஸ்ல முக்கியமான ப்ராஜெக்ட் மீட்டிங் இருக்கு, ஸ்ரீராம் புறப்படலாம்,” என்று இரண்டு எட்டுகள் வைத்தவன், சுப்ரியாவை பார்த்து, “இன்னிக்கு உன்னோட நர்ஸை வேக்கெட் பண்ணி கூட்டிட்டு போயிடு,” என்றான்.

‘எனக்கு இங்கே இருக்க ரொம்ப ஆசை, பாரு! எல்லாம் பணத்திமிர். இங்கிருந்து போனால் தான்டா எனக்கே நிம்மதி. ஆனால் மேடம் பாவம்,’ என நினைத்துக்கொண்டவள், உற்சாக மனநிலையில் திரும்பி மணியம்மையைப் பார்த்தாள்.

அவரின் முகம் வாடியிருக்க, ஆனால் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.

“மேடம், ஆர் யூ ஓகே?” என அருகில் நெருங்கி கைகளைப் பிடித்தாள்.

“ஹான், எனக்கென்ன மா! நான் நல்லா இருக்கேன். மா, நீ கிளம்பு. உனக்கு எல்லாரும் வெயிட் பண்றாங்க பாரு,” எனக் கூறினார் மணியம்மை.

உடனே சுப்ரியா, “சரி, செம்பருத்தி பேக் பண்ணுடா! நீ ஹாஸ்பிடல் வரியா? இல்லை வீட்டுக்கு போறியா?” எனக் கேட்டாள்.

“எனக்கு எதுவா இருந்தாலும் ஓகே மேடம். நிறைய பொருள் கொண்டு வரல. பேக் மட்டும்தான் கொண்டு வந்தேன். இதோ மேடம், வரேன்,” என்றவள், வேகமாக வெளியே வந்தாள். ‘எல்லாம் அவளின் விருப்பத்தின் பேரில் நடக்கிறது. ஆனால், அது தான் இல்லையே… அவன் நினைக்க வேண்டும், அவள் இங்கிருந்து செல்லவும் அவனது அனுமதி வேண்டும்.’

சாந்தா வருத்தத்துடன் மணியம்மையைப் பார்த்தார். நன்றாகவே தெரியும், இங்கிருந்து செம்பருத்தி செல்வதில் துளிகூட விருப்பம் இல்லை, அதற்காக என்ன செய்ய முடியும்? செம்பருத்தி வேலை செய்ய வந்தாள். மணியம்மையை நன்றாகவே பார்த்துக் கொண்டாள். வந்த வேலையும் முடிந்தது, இப்பொழுது கிளம்புகிறாள் அவ்வளவே.

“ஓகே மேடம், பார்ப்போம். கண்டிப்பா நடுவில் உங்களை பார்க்க வரேன்,” என மணியம்மையின் கையைப் பிடித்துக் கூறினாள்.

“போயிட்டு வாம்மா,” எனக்கூறி அனுப்பினார்.

“பாய் ஆண்டி, எனக்கு மெடிக்கல் கான்பரன்ஸ் இருக்கு, ஒரு மாசம் கழிச்சுதான் வருவேன். அதான் உங்களைப் பார்த்திட்டு போலாம்னு வந்தேன். அது கூடவே நீங்க இப்போ completely alright,” எனக் கூறி சுப்ரியாவும் புறப்பட்டாள்.

மணியம்மை அவர்களை வழியனுப்பி வைத்துவிட்டு உள்ளே வர, “மேடம் நீங்க ஓகே தானே!” என சாந்தா அழைப்புறும் விழிகளில் கேட்டார்.

“எனக்கென்ன நான் நல்லா இருக்கேன். கொஞ்ச நேரம் தூங்குறேன் சாந்தா. சாப்பிடுற நேரம் வந்தால் எழுப்பு,” என்று விட்டுச் சென்றார்.

“அம்மா!” என உற்சாகமாக உள்ளே நுழைந்தாள் செம்பருத்தி.

“என்னடி, ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் போன? இன்னைக்கே வந்துட்ட,” என செல்வி கேட்டுக்கொண்டே வந்தார்.

“ஹே, பொண்ணு வீட்டுக்கு வந்துருக்கு. எப்போ வந்தன்னு கேட்காம எதுக்கு வந்தேன்னு கேட்கிற?” என கோபத்தில் பேசினார் பாரி.

“விடுங்கப்பா,” என்றவள், சிரித்துக்கொண்டே, “இனி நான் வீட்ல இருந்துதான் வேலைக்கு போக போறேன். ஹாஸ்பிடல் வந்துட்டேன். இனி அங்கே போக தேவை இல்லை. டெய்லி வீட்டுக்கு வந்துடுவேன்,” என்றாள் செம்பருத்தி உற்சாகமாக.

“அப்படியா தங்கம்?” என பாரி கேட்க,

“ஆமாப்பா! இனி ஜாலி! ஆமா, அக்கா எங்கே? தாமரை எங்கே?” என சுற்றிலும் பார்த்தாள் செம்பருத்தி.

“துளசி குழந்தையோட தடுப்பூசி போட போயிருக்கா. தாமரை பொண்ணு வீட்லேயே இருக்காளே, அதான் சம்பு, துளசி கூட தாமரையும் அழைச்சிட்டு போயிருக்கு. பால்வாடிக்குத்தான் போயிருக்காங்க, இப்போ வந்துடுவாங்க,” என்றார் பாரி.

“சரிப்பா,” என உடையை மாற்றிக்கொண்டு வந்தாள் செம்பருத்தி.

“ஹே, செம்பருத்தி வந்து சாப்பிடு! அப்பாவுக்கும் போட்டுக்கொடு. நான் ரேசனுக்கு போயிட்டு வந்துடுறேன்,” என செல்வி புறப்பட்டார்.

“இதோ மா,” என அவளின் அன்றாட வாழ்க்கையில் சென்று கொண்டிருந்தாள் செம்பருத்தி.

“ஹே, உன்னோட போன் கொடு,” என சம்பூர்ணம் வந்து நின்றாள்.

“எதுக்கு போன்?”

“இன்னிக்கு கடைசி நாள் டி! அதனால காலேஜ்ல ஃபோட்டோ எடுப்பேன் ஃபிரெண்ட்ஸ் கூட… அதுக்குத்தான் போன்.”

“உன்னோட போன் எங்கே?” என செம்பருத்தி கேட்க,

“உன் தம்பிக்காரன் வாங்கிட்டு போயிட்டான். ‘நம்பர் கொடுடா அப்படின்னு’ கூட கேட்டேன். அந்த நாய் அப்படியே தூக்கிட்டு போயிடுச்சு. இப்போ பட்டன் செட்டுதான் வச்சிருக்கேன். அதில் எப்படி ஃபோட்டோ பிடிக்க முடியும்? அதான் சரி, உன்னோட போனை கொடு!” என சம்பூர்ணம் கேட்க,

“என்கிட்ட சிம் மட்டும்தான் இருக்கு.”

“ஹே, புது போன் அதுவும் Samsung வச்சிருந்தியே, எங்கேடி?” என சம்பூர்ணம் அதிர்ச்சியுடன் பார்த்தாள்.

“அதை நான் அந்த வீட்லேயே வச்சுட்டு வந்துட்டேன்.”

“எதுக்குடி வச்சுட்டு வந்த?” என சம்பூர்ணம் குதித்தாள்.

“ஹே, அவங்க எனக்கு பேச மட்டும்தான் கொடுத்தாங்க. அது காஸ்ட்லி போன். அதான் கொடுத்திட்டு வந்துட்டேன். நம்ம காசு போட்டு வாங்கலை இல்லையா?” என்றாள் செம்பருத்தி.

சம்பூர்ணம் முறைத்துப்பார்த்துவிட்டு சோகத்துடன் அமர்ந்து கொண்டாள்.

“ஹே, சம்பு, எனக்கு எப்படிடி தெரியும் தர்மன் உன்னோட போனை வாங்கிட்டு போயிருப்பான்னு?” என சமாதானம் செய்ய முற்பட்டாள் செம்பருத்தி.

“உன்னை நம்பிதான் நான் இருந்தேன். எல்லாம் இந்த அம்மாவால வந்தது. நான் கஷ்டப்பட்டு பார்ட் டைம் வேலை பார்த்து வாங்கினேன். வந்தவன் அம்மாவை தாஜா பண்ணி பிடுங்கிட்டு போயிட்டான்,” என அமர்ந்தாள் சோகமாக.

“விடு சம்பு, அதான் அக்கா சொல்றாளே, எப்படி அடுத்தவங்க போனை எடுத்திட்டு வர முடியும்? என்ன கண்ணு நீ?” என்றார் பாரி.

“போங்கப்பா,” என அவள் சோகத்துடன் வெளியே சென்றாள்.

“ஹே, சம்பு, வா வா. என்னோட போன் எடுத்திட்டு போ! உன்னோட போன்ல சிம் மாத்தி போட்டுக்கோ. வா, நீ காலேஜுக்கு எடுத்திட்டு போ,” என்றாள் துளசி.

“இல்ல கா, வேணாம். மாமா வீடியோ கால் பண்ணுவார் தம்பியை பார்க்க… எனக்கு பிரச்னை இல்லை. என்னோட ஃப்ரெண்ட்ஸ் போன்ல பிக் எடுத்து மெயிலுக்கு செண்ட் பண்ணுகிறேன்,” எனக் கடந்துவிட்டாள்.

“அக்கா, நான் என்னக்கா பண்ணேன்? இந்த சம்பு இப்படி பேசிட்டு போறா,” என செம்பருத்தி கேட்க,

“விடு, அவள்கிட்ட நான் அப்புறம் பேசி என்னோட போனை கொடுக்கிறேன்,” என்று விட்டு துளசி உள்ளே சென்றாள்.

“என்னைக்கு உனக்கு லாஸ்ட் டே?” என செம்பருத்தி கேட்க,

“போன் வாங்கி கொடுக்க போறியா என்ன? ஒண்ணும் வேணாம். போ!” என சம்பூர்ணம் தட்டை எடுத்துக்கொள்ள,

அவளின் தட்டில் ஆம்லெட் போட்டவள், “நாளைக்கே நான் உனக்கு வாங்கி தரேன்,” என கூறினாள் செம்பருத்தி.

“ஹே, samsung வாங்க போறியா?” என்று கண்களை விரித்துப்பார்த்தாள் சம்பூர்ணம்.

“ஹே, அவ்ளோ காசுக்கு நான் எங்கே போவேன். வேற ஏதாவது ஒரு போன், ஒரு 10000 இல்லன்னா 11000 வாங்கலாம்னு…”

“அதுல கேமரா நல்லா இருக்காது. சாம்சங் மாதிரி எனக்கு ஃபோட்டோ கிடைக்காதே!” என சம்பூர்ணம் கூற,

“உனக்கு வேணுமா வேணாமா? என்னால முடிஞ்சதைத்தான் வாங்கி கொடுக்க முடியும்,” என செம்பருத்தி பார்த்தாள்.

“சரி, ஓகே!” என சம்பு முகத்தைச் சுழிக்க,

“போடி, உனக்கு எதுவும் இல்லை,” என செம்பருத்தி முறைத்துக்கொண்டே கூற,

“இல்ல செம்பருத்தி அக்கா! எனக்கு ஓகே,” என சம்பூர்ணம் அடுத்த நாளுக்காக காத்திருக்க,

செம்பருத்தி இரவு ஒன்பது மணிக்கு புறப்பட்டுக்கொண்டிருந்தாள்.

பாரி வெளியே காத்திருந்தார், மகளை பஸ் ஸ்டாப் கொண்டு சென்று விட்டு வர.

“ஹே, சம்பு, நாளைக்கு ஒன்பது மணிக்கு ரெடியா இரு. நான் டியூட்டி முடிச்சிட்டு வரேன். நம்ம போய் வாங்கிட்டு வந்திடுவோம்,” என்றாள் செம்பருத்தி.

“சரி, ஓகே. எதுவும் தீனி வாங்கிட்டு வா!” என சொல்லிக்கொண்டே படுக்கையை விரித்தாள் சம்பூர்ணம்.

துளசி கர்ணனுக்கு வீடியோ கால் காட்டி கொண்டிருந்தாள்.

“கண்ணு?” என பாரி அழைக்க,

“இதோபா,” என குட்டி குழந்தைக்கு முத்தமிட்டவள், “பாய் மாமா,” என கர்ணனுக்கு கை காட்டி விட்டு, “சித்தி போயிட்டு வரேன்டா,” என மீண்டும் முத்தமிட்டு வெளியே வந்தாள்.

“கண்ணு வா,” என எக்செல் ஸ்டார்ட் செய்தார் பாரி.

“அப்பா, நான் ஓட்டுறேன், நீங்க பின்னாடி உட்காருங்க,” என தந்தையை வைத்து ஓட்டினாள்.

“கண்ணு, எல்லாமே எடுத்து வச்சுகிட்டியா?”

“ம்ம் பா, எல்லாமே ரெடி! ஒண்ணும் பிரச்னை இல்லை.”

“ஹாஸ்பத்ரி போயிட்டு உன் ஃபிரெண்ட் செல்லில் இருந்து ஒரு போன் போடு தங்கம்.”

“சரிங்கப்பா,” என சிரித்துக்கொண்டே கூறினாள் செம்பருத்தி.

“என்ன கண்ணு சிரிக்கிற?”

“சும்மாதான் பா! ஹான், சீக்கிரமே புது வண்டி வாங்கணும் பா!” என செம்பருத்தி கூற,

“எல்லாரும் போற போல ஒரு வண்டி வாங்கணும்,” என்றார் பாரி.

“அதுக்கென்ன, நம்ம கார் வாங்கலாம். செகண்ட் ஹேண்டில் கார் வாங்கிட்டா எல்லாரும் போகலாம்,” என கூறினாள்.

“கண்டிப்பா வாங்கலாம். ஆனால் நான் காரு வாங்கறதுக்குள் என் பேரன் வாங்கிடுவான்,” என சிரித்துக்கொண்டே கூறினார் பாரி.

“கார் வேணாம் பா! நம்ம சொந்த வீடு வாங்கணும். தர்மனுக்கு வீடே இல்ல,” என பேசிக்கொண்டே வந்தார்கள். இதோ இறங்கிக்கொண்டாள்.

பேருந்து வரவே, பாரி அவளை கைகாட்டி ஏற்றி விட்டு, “கண்ணு போயிட்டு போன் பண்ணு,” என கூறினார்.

“சரிப்பா, வீட்டுக்கு போங்க,” என கையசைத்துவிட்டு அமர்ந்து கொண்டாள்.

இரவு டியூட்டி தூக்கத்திலேயே முடிந்து போனது. அரைத் தூக்கத்துடன் வீட்டுக்கு வந்த செம்பருத்தி, “சம்பு, புறப்படு போலாம்,” என அழைக்க,

“ஹே, உன்னோட வளையல், உன்னோட போன் இந்தா,” என சம்பூர்ணம் கொடுக்க,

“ஹான், அங்கே வை,” என உடை மாற்றச் சென்றவள், வேகமாக வெளியே வந்து, “என்ன இது? எப்படி இது இங்கே வந்தது?” என செம்பருத்தி அதிர்ச்சியுடன் கேட்க,

“உன்னோட மாமியார் கொடுத்திட்டு போனாங்க,” என்றாள் சம்பூர்ணம்.

செம்பருத்தி அதிர்ச்சியுடன் நின்றாள்.

அவளுக்கு வலது பக்கம் பூ, பழம், புடவை என அனைத்தும் நிரம்பிய தாம்பூலத் தட்டு இருந்தது.

தொடரும்…