வளையலைப் பார்த்தபடி நீச்சல் குளத்தின் பக்கம் அமர்ந்திருந்தாள் செம்பருத்தி. “அய்யோ, தங்க வளையலை வேற இந்த மேடம் போட்டு விட்டுட்டாங்களே! நான் என்ன செய்வேன்?” என நினைத்துக்கொண்டிருந்தாள்.
அந்த நேரம் பார்த்து வீட்டில் இருந்து அழைப்பு வந்தது. சம்பூர்ணா அழைத்திருந்தாள்.
“ஹலோ, சொல்லு சம்பு.”
“ஹே, அக்காவுக்கு நார்மல் டெலிவரி ஆகிடுச்சு. பையன் பொறந்துட்டான்,” என உற்சாகத்துடன் கூறினாள்.
“அப்படியா?” என செம்பருத்திக்கு சந்தோஷத்தில் கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது.
“நம்ம வீட்ல பையன் பொறந்துட்டான்” என இன்னும் சந்தோஷம்.
“அய்யோ, நீ வேற! இங்கே அம்மாவை கையிலேயே பிடிக்க முடியல. அவ்ளோ சந்தோஷம் அம்மாவுக்கு. துளசி அக்காவை விழுந்து விழுந்து கவனிக்கிது,” என்றாள் சம்பூர்ணா.
“இருக்கத்தானே செய்யும்.”
“தர்மனை அம்மா இன்னிக்கே டீலில் விட்டுடுச்சு,” என சிரித்துக்கொண்டே கூறினாள் சம்பூர்ணா.
“அப்படியா? சரி, தாமரை எப்படி இருக்கா? அவள்கிட்ட எதுவும் மாற்றம் தெரியுதா?” என செம்பருத்தி கேட்க…
“குழந்தையை வெறிச்சு பார்த்தாள்.”
“அவளையும் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனீங்களா?” என செம்பருத்தி கேட்க…
“ஹே கிறுக்கி, உனக்கு நான் காலையில் இருந்து எத்தனை தடவை தெரியுமா கால் பண்ணேன். நீ எடுக்கவே இல்ல. விடிய காலை நாலு மணிக்கு பிறந்தான். கர்ணன் மாமா, நானும், தர்மன் எல்லாரும் உனக்கு ட்ரை பண்ணோம். டவர் இல்லன்னு வந்து கட் ஆகிடுச்சு,” என்றாள் சம்பூர்ணா.
“அப்படியா?” என அவள் பேசிக்கொண்டிருக்கவே, அவர்கள் காலையில் அனுப்பிய போட்டோ அனைத்தும் “டிங் டிங்” ஒலியுடன் போனை நிரப்பியது.
“சரி, ரோஜா வந்தாளா?”
“ம்ம், வந்துட்டு பார்த்திட்டு உடனே கிளம்பிட்டாங்க அக்கா.”
“சரி சரி, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு,” என செம்பருத்தி பேசிவிட்டு போனை வைக்கப்போக…
“ஹே, எப்போ நீ வரப்போற?” என கேட்டாள் சம்பூர்ணா.
“நாளைக்கு மேடம கேட்டுட்டு வரேன்,” என போனை வைத்தாள் செம்பருத்தி.
மனதில் இன்னும் உற்சாகம் கூடிக் கொண்டிருக்க, மெல்ல எழுந்தவள் வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களை பார்த்தாள். திடீரென “வவ் வவ்” என கத்திக்கொண்டே திங்க் ஓடி வந்தான் அவளை நோக்கி…
“அய்யோ இந்த நாயி!” என நடுக்கம் பரவ வேகமாக ஓடியவள், இந்த முறை அதேபோல நீச்சல் குளத்தில் விழ… தத்தளித்தாள்.
“ஹே, உனக்கு எப்போ பாரு விழறது மட்டும்தான் வேலையா?” என கேட்டுக்கொண்டே வந்தவன், நீச்சல் குளத்தில் குதித்து அவளை காப்பாற்றினான்.
நடுக்கத்துடன், “நாய் நாய்!” எனக் கையை காட்டினாள்.
“திங்க், உன்னை வெளியே போன்னு சொன்னேன்,” என அதிகாரமாக கையை காட்டினான்.
“வவ்” என கத்திக்கொண்டு நாய் பின்வாங்கி இடது பக்கமாக ஓடியது.
“ஆர் யூ ஓகே?” என அவனது பிடி அவள் மேல் இறுகி இருந்தது.
“ஹான், ஓகே!” என மெல்ல எழுந்து நின்றவள் கால் நடுக்கத்தில் கீழே விழுந்தாள்.
குருசேத்ரன் நின்று கொண்டு அவளை பார்த்தான்.
“பாவி! உன்னாலதான்டா நான் தண்ணியில விழுந்தேன். இப்போ கீழேயும் விழுந்துட்டேன்,” என செம்பருத்தி வலியில் நினைத்தாள்.
குருசேத்ரன் எதுவும் பேசாமல் கையை கட்டிக்கொண்டு பார்க்க…
எழ முயற்சி செய்தாள். கால் வலி பின்னி எடுக்க… “ஹா” என முனகிக்கொண்டே அவனை பார்த்தாள்.
“ஹெல்ப் வேணுமா?”
“இல்ல வேணாம்.”
“அப்போ ஓகே, ஜாலியா இருக்க போல… நான் கிளம்புறேன்,” என அவன் நகர்ந்தான்.
“ஹலோ, ஹெல்ப் வேணும்,” என செம்பருத்தி கூற…
“என்கிட்ட போன்லயா பேசுற?”
“பின்ன, ‘குரு சித்ரவதை’ அப்டின்னு கூப்பிடவா?”
“இல்ல, எப்பவும் போல ‘மலைக்குரங்கு’ அப்டின்னு கூப்பிடு!” என்றவன் சட்டென திரும்பி, “இப்போ என்ன சொன்ன? ‘குரு சித்ரவதையா’? அப்போ இங்கேயே கடடி!” என்றுவிட்டு முன்னால் நடந்தான்.
“அய்யோ சார்! உங்க பேர் எனக்கு மறந்திடுச்சு. ஹான், நியாபகம் வந்திடுச்சு பாஸ், எனக்கு ஞாபகம் வந்திருச்சு… குருசேத்ரன் சார்.”
அவன் அவளைக் கண்டுகொள்ளாமல் சென்றேவிட்டான்.
“பாவி! பாவி!!” என முனகிய செம்பருத்தி மெல்ல இரண்டு கைகளையும் தரையில் ஊன்றி எழுந்து கொள்ள முயற்சி செய்தாள். “விண்ணென்று” வலி காலில்…
“கையை கொடு!” என நீட்டினான்.
“தேவையில்லா…”
“அப்போ போகவா?” என குரு நகர…
கையை நீட்டினாள்.
“ம்ம், அது!” என்றான்.
“மெதுவா, ப்ளீஸ்,” என செம்பருத்தி கூற, அவளை தூக்கி தோள் மேல் போட்டுக்கொண்டான்.
“என்ன பண்றீங்க?” என செம்பருத்தி திடுக்கிட்டு காலை ஆட்டினாள்.
“தூக்கிட்டு இருக்கறது தொடுதல்ல வராதா?” என பிடித்தத்தில் இறுக்கம் கொடுத்தான். “அய்யோ!!” என சிணுங்கினாள்.
“வலிக்குதா?” என கேட்டான்.
“ஆமா, சார்!” என அவள் முகம் சுருங்கிப் போனது.
அவளது அறையில் உள்ள ஷோபாவில் அமர வைத்தவன், “Take care,” என உடலை வளைத்து கூறியவன் வெளியே சென்றான்.
மெல்ல ஈர உடையில் இருந்து கஷ்டப்பட்டு நைட்டிக்கு மாறினாள். ஒரே ஒரு நைட்டிதான் வைத்திருப்பாள். பீரியட்ஸ் வந்தால் அறைக்குள் மட்டும் அந்த நைட்டியை போட்டுக்கொள்வாள். வெளியே செல்லும்போது சுடிதார் தான் எப்பொழுதும். இப்பொழுது முடியவில்லை.
திறந்திருந்த அறைக்குள் அனுமதி இல்லாமல் நுழைந்தான் குரு. அறையில் மட்டுமல்ல, அவளின் வாழ்க்கையிலும் தான்.
“அய்யோ, உங்களை யார் வரச்சொன்னது?”
“அய்யோ!” என அங்கிருக்கும் தலையணையை கட்டிக்கொண்டு அமர்ந்தாள் செம்பருத்தி.
“என்னாச்சு? உனக்கு? எதுக்கு different-ஆக behave பண்ற?” என கேட்டவன் அவளின் முன் வாலினி ஸ்ப்ரேவை வைத்தான்.
“தேங்க்ஸ், வெளியே போங்க!” என தலையை குனிந்துகொண்டே கூறினாள்.
“சரி,” என்றான். மெல்ல எழுந்தவள், “அய்யோ அம்மா!” என்று கத்தினாள். உடையில் வழிந்த நீரால் டைல்ஸ் வழுக்கிவிட…
அழுகையே வந்தது அவளுக்கு.
“இதுதான் இயற்கை அசரீரி போல… இது குருபெயர்சி போல…”
“என்ன கத்தின சத்தம் கேட்டதே?” என்று உள்ளே நுழைந்தான் குரு.
கீழே விழுந்து கிடந்தவளை பார்த்து சிரிப்பு தோன்ற… அடக்கிக்கொண்டவன் அவளை மெல்ல தூக்கி படுக்கையில் கிடத்தினான்.
“சரியா போயிடும், அழாத. உன் மூஞ்சி சகிக்காது. இப்போ அதைவிட சகிக்கல.”
அவனை முறைத்து பார்த்தாள் செம்பருத்தி.
“எங்கே வலிக்குது?”
“குதிகால் தரையில் வைக்க முடியல, வலி பின்னி எடுக்குது.”
“வேற?”
“அது, தொடை,” என்றவள் சட்டென வாய் மூடிக்கொண்டாள். “இவன்கிட்ட வாய் தவறி சொல்லிட்டேனே,” என பதட்டத்தில் அமர்ந்திருந்தாள்.
“சரி, காட்டு!”
“ஹாங்!!”
“குதிகால் காட்டுன்னு சொன்னேன். நீ என்ன நினைச்ச?”
“ஹா, முடியலையே! வலிக்குது,” என அழுதாள்.
வெளியே சென்றவன் முதலுதவி பெட்டியை எடுத்து வந்து ஸ்ப்ரே அடித்து பேண்டேஜ் ஒட்டிவிட்டான்.
அவளின் காலை அழுத்திப் பிடித்தான். மெல்ல நெளிந்தாள். “என்ன பண்றீங்க?”
“ஹான், கலவை கலக்கறேன்.”
“இல்ல, அது பார்த்தேன்,” என்று சமாளித்தாள்.
“ம்ம், அடுத்து காட்டு…”
“ஹான், அது அங்கே எல்லாம் வேணாம்.”
“அப்புறம் மறுபடியும் விழுந்திடாத!”
“இல்ல, வேணாம், போதும்.”
“என்னை டாக்டரா நினைச்சுக்க! காட்டு பார்ப்போம்.”
“இல்ல, போதும்.”
“சரி, பெயின்கில்லர் மாத்திரை இருக்கா?”
“இல்லையே!”
முறைத்துப் பார்த்தான் குரு.
“மேடம்மோட மாத்திரை பாக்ஸ்ல இருக்கு. எடுத்திட்டு வர்றீங்களா?” என தலையை குனிந்துகொண்டே கேட்டாள்.
“ம்ம், அவ்ளோதான! நீ செட்டுலா?” என அவளின் முகத்தை பார்த்தான் குருசேத்ரன்.
“ஹான், தேங்க்ஸ்!”
“உன்னோட தேங்க்ஸ் வேணாம், ஒரு உண்மை வேணும்.”
“என்ன?” என மிரட்சியுடன் பார்த்தாள் செம்பருத்தி.
“நேத்து நைட்டு ‘மலைக்குரங்கு’ அப்டின்னு சொன்னியே! அது என்னைத்தானே!!”
“இல்லையே!”
“எனக்கு உண்மை வேணும்!”
“நிஜமாத்தான் உங்களை இல்ல, சத்யம்.”
“அப்படியா?”
“ஆமா சார்! ஹா, வலிக்குது! குட் நைட்டு சார்.”
“சரி, உண்மைய சொல்லு!”
“உண்மை… அது உண்மையத்தான் சொன்னேன்.”
“பக்கா!!” எனக் கேட்டுக்கொண்டே அருகில் வந்து படுக்கையில் அமர்ந்தான்.
“என்ன பண்றீங்க?”
“சொல்லு! உண்மையா பொய்யா?”
“ஆமாம்,” என அவள் சொல்லி முடிக்கவில்லை. உதட்டை கவ்வியிருந்தான்.
இதயம் வேகமாக துடிக்க, அவனை அதிர்ந்து பார்த்தவள். கண்கள் அப்பட்ட அதிர்ச்சியை வெளிப்படுத்த படுக்கையில் அவளை சரித்து மொத்தமாக சரிந்திருந்தான் அவள் மேல்…
நெஞ்சுகூடு வேகமாக ஏறி இறங்க… தாங்கள் என்ன நிலையில் இருக்கிறோம் என யோசிக்கவே சில கணங்கள் பிடித்தது அவளுக்கு. முத்த சத்தம் வேறு எல்லை கடந்து சென்றது. அறையில் எக்கோ அடித்தது. முடியை கிளிப் கவ்வி கொள்வது போல உதட்டை கவ்வியிருந்தான்.
அவன் கைகள் கழுத்துக்கு செல்ல… “சார், ப்ளீஸ்! நீங்க நினைக்கிற பொண்ணு நான் இல்ல… விடுங்க,” என கண்களில் நீர் கொட்ட கூறினாள் செம்பருத்தி.
மெல்ல விலகியவன், விட்ட இடத்தில் இருந்து கீழ் உதட்டை கவ்வி முத்தமிட்டுவிட்டு சென்றான் போதை தலைக்கேற… தேன் குடித்த வண்டு போல…
“என்ன வேலை செய்துகொண்டிருக்கிறோம்? எதற்கு முத்தம் கொடுத்துட்டு போறான்?” “அய்யோ” என்று இருந்தது அவளுக்கு. “இங்கிருந்து சென்றால் என்ன?” என தோன்றியது. தனது நிலையை எண்ணி நொந்துகொண்டவள், இனி தூங்குவாளா? என்ன? கண்ணை குத்தினால் கூட தூக்கம் வரவில்லை.
இரண்டு கைகளையும் பார்த்தாள். முத்தமிடும்போது இரண்டு கையையும் பின்பக்கம் பிடித்திருந்தான் என இப்பொழுதுதான் நினைவுக்கு வந்தது.
“ஏற்கனவே வீட்டில் பெரிய இடத்தில் காதல் செய்து விபத்தில் சிக்கி நிலை குலைந்து வாழ்க்கையையே தொலைத்து சுயம் மறந்து இருக்கிறாள் தாமரை. அடுத்து நானா?” என நினைக்கையில் உள்ளம் கனத்துப்போனது. கையில் இருக்கும் வளையலை வேகமாக கழட்டி தலையணை அடியில் வைத்தாள் செம்பருத்தி.
“சீக்கிரம் இங்கிருந்து சென்றுவிட வேண்டும்,” என நினைத்துக்கொண்டே அவள் படுத்திருக்க…
குருசேத்ரன் என்ன நினைவில் இருக்கான்? இது மணியம்மைக்கு தெரியவந்தால் என்ன நடக்கும்?