அத்தியாயம்-10

“மே ஐ கம் இன் சார்!!” என சொல்லிக்கொண்டே கதவை தட்டினாள் செம்பருத்தி.

“உள்ளே வாங்க!!”

“சார்,” என அவன் முன்னால் டிபன் கேரியரை வைத்தாள் செம்பருத்தி.

“ஃபுல்-டைம் குக்கரா மாறிட்டீங்களா, மேடம்? இப்போ நான் உங்களை எப்படி கூப்பிட? நர்ஸா? இல்ல, குக்கா? சாரி, அந்த டேர்ம், செஃப்,” என யோசிப்பது போல பாவனை செய்தான் குரு.

அவனை முறைத்து பார்த்தவள், “நான் நர்ஸ் தான். அண்ட், இது உங்க மம்மி கொடுத்து விட்டாங்க. என்னை கொடுக்கச் சொல்லி… அதான் எடுத்திட்டு வந்தேன். கொடுத்துட்டேன், கிளம்புறேன்,” என கதவைத் திறந்தாள் செம்பருத்தி.

“நில்லு! இதை ரிட்டர்ன் எடுத்திட்டு போயிடு!”

“என்னாச்சு?” என புருவம் சுருக்கியபடி பார்த்தாள் செம்பருத்தி.

“உன்னை நம்பி எப்படி நான் இதை சாப்பிடுறது? எதுவும் கலந்து கொண்டு வந்திருந்தால்…”

“ஹலோ, உங்க அம்மாதான் சமைச்சாங்க! சாப்பிட்டுப் பாருங்க,” என்றாள் பற்களை கடித்துக்கொண்டு.

“ம்ம், ஐ நோ, அந்த வாசனையே சொல்லுது என் மம்மி சமைச்சதுன்னு.”

“ஆப்டர் வாட்?” என அவனைப் பார்த்தாள் செம்பருத்தி.

“எனக்கு உன்மேல் நம்பிக்கை இல்ல. நேத்தே என்னை ‘மலைக்குரங்கு’ அப்டின்னு திட்டின. இன்னைக்கு கேரியர் எடுத்திட்டு வந்திருக்க? ‘சம் திங் இஸ் ஃபிஷி’…”

“மீன் குழம்பு இல்ல, பிரியாணி கறிக்குழம்பு தான்,” என்றாள் செம்பருத்தி.

“யூ இடியட்! ‘ஃபிஷி’ மீன்ஸ், ‘மிஸ்டரி,’ மர்மம் போல…”

“இந்த அளவுக்கு என்னை யாரும் அவமானப்படுத்தினது இல்ல,” என செம்பருத்தி மூக்கை விடைத்துக்கொண்டு பார்த்தாள்.

“என்னை ‘மலைக்குரங்கு’ அப்டின்னு யாரும் திட்டினதில்லை… சோ, கிளம்பிடு,” என்றான்.

“சோ சாரி, சத்தியமா நான் உங்களை சொல்லல, நம்புங்க. அண்ட், மேடம் உங்களுக்கு ஆசையா சமைச்சிருக்காங்க, சாப்பிடுங்க, இல்லன்னா வருத்தப்படுவாங்க,” என்றாள் செம்பருத்தி.

“எனக்கு உன் மேலே துளிக்கூட நம்பிக்கை இல்லை.”

அவனை முறைத்து பார்த்தாள்.

“நீ சாப்பிட்டுக் காட்டு! அண்ட் என் கண்ணு முன்னாடி அரை மணி நேரம் உட்கார்ந்துரு. உனக்கு எதுவுமே ஆகலைன்னா நான் சாப்பிடுறேன்,” என்றான் குரு.

“மலைக்குரங்கு இல்லடா நீ! நீ ஒரு மனித குரங்கு,” என முனகிக்கொண்டாள் செம்பருத்தி.

“எடுத்திட்டு கிளம்பு!” என அவன் லேப்-டாப்பை ஆன் செய்தான்.

“ஆல்ரெடி டேஸ்ட் பார்க்க ரெண்டு பிளேட் பிரியாணி சாப்பிடுட்டேன். நீங்க சாப்பிடுங்களேன், ப்ளீஸ்.”

“என்ன, ரெண்டு பிளேட் முழங்கினயா? பிளேட்ட சாப்பிட முடியுமா என்ன?” என்று குரு பார்த்தான்.

“மொக்கை காமெடி கேள்விப்பட்டிருக்கேன். அதுக்கும் மேலே ஒரு பிளேட் காமெடி, ஹக் ஹக் ஹா, சிரிப்பு வருது. காமெடி, காமெடி, மனித குரங்கு பண்ற காமெடி,” என தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள் செம்பருத்தி.

“கிளம்பு!”

செம்பருத்தி அவனை முறைத்து பார்த்தவள், “சரிங்க சார், நான் சாப்பிடுறேன்,” என அவனுக்கு எதிரில் டிபன் கேரியர் ஓப்பன் செய்யப் போக, “நோ நோ… டைனிங் அங்கே இருக்கு. எடுத்திட்டுப் போய் சர்வ் பண்ணு, நான் வரேன்,” எனச் சொல்லி போனை எடுத்துக்கொண்டு சென்றான்.

“தலைவாழை இலை வேற இவனுக்கு கேடு!!” என நினைத்துக்கொண்டவள் இனிப்பில் இருந்து ஆரம்பித்தாள்.

“எனக்கு ஸ்வீட் பிடிக்காது, வைக்காத,” என கூறினான் குரு.

“ஹாங், சரி சார்,” என்றவள் அனைத்தையும் பரிமாறினாள்.

குருசேத்ரன் தனது அன்னைக்கு அழைத்தான்.

“தங்கம், சாப்டியா?” என மணியம்மை கேட்க, “இனிமேதான் சாப்பிடப் போறேன் மா! அண்ட் நீங்க மட்டன் சாப்பிடாதீங்க மா! அதை ரிமைண்ட் பண்ணத்தான் கால் பண்ணேன். இப்போதான் ஹெல்தியா இருக்கீங்க,” என்றான் குருசேத்ரன்.

“இல்லடா தங்கம், சாப்பிட மாட்டேன்,” என மணியம்மை கூற, “மீன் எண்ணெய் இல்லாம, அவன்ல வச்சு சாப்பிடுங்க.”

“சரி கண்ணு!”

“மா, அகைன் சொல்றேன்,” என அனைத்தையும் கூறிவிட்டு போனை வைத்தான்.

உணவுகள் அனைத்தும் பரிமாறப்பட்டிருக்க அவள் பக்கத்தில் கொஞ்சம் மட்டுமே இருந்தது.

நீண்ட நாட்கள் கழித்து தனது தாயின் கைப்பக்குவத்தில் சாப்பிடப் போகிறான். உள்ளுக்குள் ஒரு இனம் புரியா உணர்வு, எதையும் பேசாமல் அமர்ந்தான். அமைதியாக சாப்பிட்டான்.

ஒரு பருக்கைக்கூட வீணாக்கவில்லை. அனைத்தையும் சாப்பிட்டான்.

அவன் வாய் வளர்த்து வம்பு செய்வான் என நினைத்த செம்பருத்திக்கு ஆச்சரியம்தான்.

“சார், எப்படி இருக்கு?” எனக் கேட்டாள் செம்பருத்தி.

“ம்ம்,” என ஒற்றை பதிலுடன் முடித்துக்கொண்டான்.

“வாயை திறந்து சொன்னா முத்துப்பல்லு கீழே கொட்டிடுமா?” என சலித்துக்கொண்டவள் நேராக கேரியரை அடுக்கி பையில் அடைத்துக்கொண்டு புறப்பட்டாள்.

“என்ன சொன்னான்? எப்படி இருக்குன்னு சொன்னானா?” என மணியம்மை குடைந்து எடுத்தார்.

“ம்ம் அப்டின்னு சொன்னாரு. இவரை நீங்க பெத்தீங்களா, செஞ்சீங்களா மேடம்? ‘ரட்சகன்’ படம் பார்க்கும் போது இவரு பிறந்தாரா மேடம்?” என செம்பருத்தி கேட்க, “எதுக்கு டி அப்படி கேட்கிற?”

“இல்ல மேடம், அதுல நாகார்ஜுன் சாருக்கு கோபம் வந்துட்டே இருக்கும். இங்கே குருசேத்ரன் சார் எப்போவும் ‘குருசேத்திர போர்’ல இருக்க போல நடந்துக்கிறார். அதான் கேட்டேன்,” என்றாள்.

“என் பையன் ‘இந்தியன்’ படம் ரிலீஸ் டைம்ல பிறந்தான்.”

உடனே செம்பருத்தி சிரிக்க, “எதுக்கு டி சிரிக்கிற?”

“இல்ல மேடம், ‘தாத்தா வராரூ, கதற விடப் போறாரு’,” என சிரித்தாள்.

“செஞ்சது எப்படி இருக்குன்னு கேட்டு வரச் சொன்னா! ‘தாத்தா வராறா?’” என அவளின் காதைப் பிடிக்க வந்தார் மணியம்மை.

“மேடம், மேடம், இன்னைக்கு பர்த்டே பேபி மேடம்,” என அவள் அங்கும் இங்கும் ஓடினாள். கலகலவென இருந்தது வீடு.

சாந்தா அவர்களைப் பார்த்து சிரித்துக்கொண்டே, “குரு தம்பி முன்னாடி பாடினால் தெரியும். பாடுறியா செம்பருத்தி?” என அவர் பங்குக்கு பேச, “எனக்கென்ன பயம்! ‘தாத்தா வராரூ, கதற விடப் போறாரு’,” என அவள் பாடிக்கொண்டிருக்க, “அய்யோ, வந்துட்டானே குரு!” என நினைத்த மணியம்மை அப்படியே சோபாவில் அமர்ந்துகொள்ள, சாந்தா எதையும் கண்டு கொள்ளாமல் கிச்சன் சென்றுவிட்டாள்.

“கொஞ்சம் தள்ளிப் போய் ஆடு,” என்று குரல் கேட்க, செம்பருத்தி ஷாக் ஆகி திரும்பிப் பார்த்தாள். குருசேத்ரன் அவளைக் கடந்து மாடியேறி சென்றுவிட்டான்.

அவளின் கலவர முகத்தைப் பார்த்து சாந்தா மற்றும் மணியம்மை இருவரும் வாயை பொத்திக்கொண்டு சிரித்தார்கள்.

“என்ன மேடம்!! நீங்க சொல்லவே இல்ல! எதுக்கு ரெண்டு பேரும் இப்போ சிரிக்கிறீங்க?” என அவர்கள் இருவரையும் சிரிக்க வேண்டாம் என்று கெஞ்சினாள்.

அவர்கள் வயிறு வலிக்க சிரிக்க, சாந்தா செம்பருத்தியின் முன்னால் வந்து, “நான் இங்கே வேலையில் சேர்ந்து ஆறு வருஷம் ஆகப் போகுது. இந்த ஆறு வருசத்துல இன்னைக்கு தான் மேடம் சந்தோஷமா இருந்திருக்காங்க, அவங்களோட பிறந்தநாளில்,” என்றார்.

செம்பருத்தி கனிவான பார்வையுடன் மணியம்மையைப் பார்த்தாள்.

“ஆமா செம்பா!!” என்றார்.

“இன்னும் மூணு மாசம் தான் இருக்கு. அதுக்கு பிறகு நீ வர மாட்டல்ல! நாங்க உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவோம். அதுவும் என்னை விட மேடம்தான்மா உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவாங்க,” என்றுவிட்டு பாத்திரம் கழுவச் சென்றார் சாந்தா.

மணியம்மையின் முகம் மாறிப் போக, செம்பருத்தி அவருக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, “கவலைப்படாதீங்க மேடம். நான் அடிக்கடி உங்களை வந்து பார்த்திட்டு போறேன்,” என்றாள்.

“சரி மா,” என மணியம்மை கூறியபடி அவரது அறைக்கு சென்றார்.

மாலை இருக்கும் மணியம்மையின் அறைக்குள் சென்றான் குருசேத்ரன்.

“மா!!” என குரு மெல்ல அழைத்தான்.

“குரு, சொல்லு தங்கம்,” என புத்தகத்தை மூடி வைத்துவிட்டு தன் மகனைப் பார்த்தார்.

“என்னாச்சு? இன்னைக்கு புக் படிக்கிறீங்க?” என கேட்டபடி அருகில் வந்தான்.

“சும்மா தோணுச்சு!” என்றவர் வேறு எதுவும் பேசவில்லை.

“இன்னைக்கு எல்லாமே சூப்பரா இருந்துச்சு. நான் என்னோட யங் மம்மியை இன்னைக்கு பார்த்தேன்,” என்றுவிட்டு எழுந்தான் குரு.

“குருசேத்திரா!” என எழுந்தார் மணியம்மை.

“ம்ம்,” என திரும்பியவன் மெல்ல தன் அன்னையின் கையைப் பிடித்தான்.

“மேடம்,” என கதவு தட்டப்பட்டது. செம்பருத்திதான் உள்ளே வந்தாள்.

“சொல்லு மா,” என கண்ணீரைத் துடைத்துக்கொண்டு மணியம்மை பார்க்க, “கொஞ்சம் வெளியே வாங்க மேடம்,” என செம்பருத்தி புன்னகையுடன் அழைக்க, “என்னமா என்ன விஷயம்?” என கண்ணாடியை மூக்குக்கு தள்ளிக்கொண்டே அவர் வெளியே வர, அவரின் பின்னால் குருசேத்ரன் வந்தான்.

“மணியா! கினிமணி,” என அழைத்தார்கள் நால்வர்.

“சரசு!! கண்ணகி!! சிவகாமி!! எப்படி டி இருக்கீங்க?” என வேகமாக நடந்து தன் நட்புகள் அருகில் சென்றார் மணியம்மை. மூவரின் முகத்திலும் அத்தனை சந்தோஷம். கண்களில் கண்ணீர்கூட வழிந்தது.

“எப்படி வந்தீங்க?” என மணியம்மை கேட்க, “இந்த பொண்ணு, செம்பருத்தி தான் காரணம். நாங்க இங்கே வர…” என கண்ணகி கூற, மணியம்மை நன்றியுடன் பார்த்தார்.

“நீங்க பேசுங்க, ரொம்ப நாள் கழிச்சு பார்க்கிறீங்க. நம்ம அப்புறம் பேசலாம் மேடம்,” என செம்பருத்தி அவர்களுக்காக சாப்பிட எடுத்து வந்தாள்.

மணியம்மை தன் மகனை காட்டி பெருமையாக பேசினார். இன்று அவருக்கு மறக்கமுடியாத பிறந்தநாள் என்று கூறலாம்.

அனைவரும் ஒன்றாக சாப்பிட்டு, கதைகள் பேசி, சிரித்து இரண்டு மணி நேரம் இருந்துவிட்டு புறப்பட்டார்கள்.

மணியம்மை வெளியே சென்று வழியனுப்பி வைத்தவர், “செம்பருத்தி!” என ஏலம் விட்டுக்கொண்டே வந்தார்.

“மேடம், எதுக்கு இத்தனை வேகமா நடக்குறீங்க?” என அவள் சொல்ல, அதற்குள் அவளின் கையைப் பிடித்து வந்து சோபாவில் அமர வைத்து கூடவே அமர்ந்துகொண்டார்.

“என்னாச்சு? ஓவர் எமோஷனல் ஆகக்கூடாது மேடம்,” என செம்பருத்தி கூற, “இல்ல, இது சந்தோஷம்! அதுக்கு காரணம் நீ தான், நீ மட்டும் தான்,” என்றவர் தனது கையில் இருந்து வளையலை கழட்டி அவளின் கையில் போட்டுவிட, செம்பருத்தி “வேண்டாம்,” என கையை உருவ முயற்சி செய்ய… கடைசியில் ஜெயித்தது என்னவோ மணியம்மைதான்.

தொடரும்…