மனம் மறுபடி சரிகிறதே!

7

தியாகு லலிதா இருவருமே மகிழ்ந்தனர்.. ராஜியின் காதல் என்ற செய்தியில். ராஜி திருமணத்திற்கு சம்மதித்தது என்பது லலிதா தியாகுவிற்கு  அவ்வள்ளவு ரெலீப். தியாகுவிற்கு, ராஜியின் மனம் மாறினால்.. மீண்டும் குடும்பம் தங்களை ஏற்கும் என எண்ணம். மீண்டும் உறவு புதிதாகும் என  திடமாக நம்பினான்.

ராஜி மேல் உண்மையான பாசம் உள்ளவன்.. அத்தோடு தங்களிடம் வளர்ந்த பெண்.. அவளின் வாழ்க்கை இது எல்லாவற்றையும் விட முக்கியம் என்பதால்.. ராஜி விரும்பும் பையன் பற்றி விசாரித்தான். ஒருமுறை நேரில் பார்த்து பேசினான்.. என்ன ட்ரிங்க்ஸ் செய்கிறான்.. என உறுத்தியது. வசதி வாய்ப்பு.. படிப்பு குணம்.. என  எல்லாம் நன்றாக இருந்தது. அதனால் சின்ன குறையாக அந்த ட்ரிங்க்ஸ் பழக்கம் அடிபட்டு போனது. தியாகுவிற்கு சம்மதமே.

ராஜி தினமும் பேசினாள் தியாகு மாமாவோடு. தியாகு, அந்த வாரத்தில் ஒருநாள் தன் வீடு சென்றான். கிருஷ்ணன் வீடு வரவே தாமதமானது. மகன் வீடு வருவது தெரிந்து.. அவனை பார்க்க இஷ்ட்டபடவில்லை என்றார்.

கிருஷ்ணன், தன் பேத்தியிடம் போராடினார் எனலாம்.. திருமணம் செய்துக் கொள்.. என தியாகுவின் திருமணம் முடிந்த பின்,  பலவிதமாக பேத்தியிடம் பேசி பார்த்தார். ராஜி அப்போதெல்லாம் எதற்கும் ஒத்துக்கொள்ளவில்லை. இப்போதுதான் விரும்புகிறேன் என சொல்லுகிறாள். கிருஷ்ணன் அதில் மகிழ்ந்தார். ஆனால், விசாரித்தவரை.. அந்த பையன் வேறு பிரிவு எனவும் மீண்டும் கிருஷ்ணன் முரண்பட்டார்.

இரவு ஒருவழியாக தந்தை வீடு வர.. தியாகு, தன் தந்தை அக்காவிடம்.. ராஜி சார்ப்பாக பேசினான். கிருஷ்ணன் திடமாகவே மறுத்தார்.. “டேய்.. அவளை உனக்குத்தான் கட்டிக் கொடுப்பதாக எண்ணம். இப்போதும் அந்த பெண்ணை விட்டு வா.. கட்டிக்கோ ராஜியை. ஆனால், நீ வந்து அவளுக்கு வேறு இடம் பார்க்காதே.. அவன் நல்லவன்னு  செர்டிபிகேட் கொடுக்காதே.. போடா” எனதான் துரத்தினார்.

வீடு மீண்டும் போர்களமானது. அடிக்கடி தியாகு வந்து பேசினான்.. அம்மாவிடம் அண்ணனிடம் என எல்லோரிடமும். ஆனால், கிர்ஷ்ணன் ஒத்துக் கொள்ளவில்லை.. ‘நீ ஒருவன் இப்படி குடும்பத்திலிருந்து போனதே போதும்.. அடுத்தவர்களும் அந்த வழி வேண்டாம். அதிலும், என் பேத்திக்கு அந்த வழி வேண்டாம்’ என திடமாக மறுத்தார். 

ராஜி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.. தியாகுவிடம் பேசிக் கொண்டிருந்தாள்.. எப்படியும் அவன் பார்த்துக் கொள்வான் என இருந்தாள்.

ஆனால் ராஜிக்கு, கிருஷ்ணன் வேறு இடம் பார்த்தார். தொழில்முறை குடும்பம் ஊரில் நல்ல குடும்பம் என சொல்லும்படி.. ராஜி விரும்பிய உயிர் இல்லாமல்.. அவள் விரும்பியபடி எல்லா வசதிகளையும் கொண்ட மாப்பிள்ளையை பார்த்தார். 

குடும்பமே, கிருஷ்ணன் சொன்னபடி கேட்டது. ராஜி அழுது சலித்து.. இதுதான் வாழ்க்கை என ஏற்றுக் கொள்ளும்படி குடும்பம் அவளை மீண்டும் நிறுத்தியது. பாவம் ராஜி மீண்டும் காதலில் தோற்று போனாள்.

கிருஷ்ணன் மீண்டும் வென்றார்.. தியாகுவை குடும்பத்தில் சேர்க்காமல் இந்த திருமணத்தை சிறப்பாக செய்தார்.

!@!@!@!@!@!@!@!@!@!@

இன்று,

மறுநாள் காலையில் ஜனனனியை எதிர்பார்த்து காத்திருந்தாள் லலிதா. பெண்ணவள் வரவில்லை மதியத்தை நேரம் தொட்டும். ஏன் இன்னமும் வரவில்லை.. காரணம் இதென  அழைத்தும் சொல்லவில்லை.. கணவர் இன்னமும் கொண்டுவந்து விடவில்லை என மனதில் போராட்டத்தோடு, சமையலை முடித்தாள்.

சாமான்களை இங்கும் அங்குமாக எடுத்து வைத்தாள். ஆனால், மனதிற்குள் யோசனை ஓடிக் கொண்டே இருந்தது. நாளையிலிருந்து வேலை.. மீண்டும் ஒருவாரம் நிற்காமல் ஓட வேண்டும்.. மனது சலித்துக் கொண்டது. வீடு கட்ட ஆரம்பிக்கலாம் என தியாகு இடம் வாங்கி போட்டிருந்த இடத்தில் முடிவு செய்திருந்தனர். 

ஆனால், அதற்குள் ஏதேதோ நடந்துவிட்டது. இதே இந்த வாடகை வீடு. இத்தோடு இரண்டு வருடத்தில் இது மூன்றாவது வீடு. முன்போல மனிதர்கள் இல்லை.. என எண்ணிக் கொண்டே அமர்ந்தாள். மீண்டும் ஒரு எண்ணம் அப்படியும் சொல்ல முடியாது. தன்னோடு வீடு பார்க்க அலைந்த தோழிகளை நினைத்தால் மனது லேசானது. ம்.. இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என.

இந்த ரெண்டு வருடத்தில் தோழிகள்தான் அவளின் பலமாக மாறி நின்றனர். ஜனனியை விடுமுறையில் தங்கள் வீட்டிற்கு அழைத்து செல்லுவது.. பார்த்துக் கொள்வது.. எனக்கு தேவையான நேரத்தில் வந்து நிற்பது.. என எல்லாம் அவர்கள்தான். எங்களின் பிரிவில்  முதலில் அதிர்ந்ததும் அவர்கள்தான். நானும் அவனும் வாழ்ந்த வாழ்க்கையை சிலாகித்து நிறைய பேசியதும் அவர்களாகவே இருந்ததால், அந்த அதிர்ச்சி.  தைரியமாக இரு.. என சொல்லி தேற்றினர்தான். அந்த வார்த்தைகளை கேட்க்கும் போதுதான் இருக்கும் தைரியமெல்லாம் விடைபெற்று எங்கோ சென்றிடும். ‘என்ன இருந்தாலும் அவன் இல்லையே.. காதலை இழந்துவிட்டு என்ன தைரியம்’ என தோன்றுகிறது. என் பவீனங்களை தோழிகளிடம் கூட காட்ட பிடிக்கவில்லை.. புன்னகையோடு அவர்களை கடக்க வேண்டி இருக்கிறது.

தன்னக்கென டீ போட்டு அதை பருகிக் கொண்டே.. துணிகளை மடித்துக் கொண்டிருந்தாள். தன் கணவனின் உடை என எதுவுமே இதில் இல்லை.. என பெண்ணின் மனது எண்ணியது. ‘ம்.. இதெல்லாம் மாறாது. நான் அவனின் நினைவுகளை மறப்பது என்பது ஆகாத காரியம்.. இரவு கதவினை தாழிடும் போதும்.. விடுமுறை தினங்களில் இப்படி சும்மா அமர்ந்திருக்கும் போதும்.. பிள்ளைகள் அம்மா அம்மா என எனை மட்டுமே இந்த வீட்டில் அழைக்கும் போதும்.. மனது அவனை எண்ணிக் கொண்டே இருக்கிறது. இந்த உலகிற்கு நாங்கள் பிரிந்துவிட்டோம்.. ஆனால், எந்த தெய்வமாவது ‘இல்லை’ என சொல்லாதா..’ என மேலே அண்ணார்ந்து விட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தாள் லலிதா.

தனிமையில்.. எப்போதும் இழந்த காதல்தான் உற்ற துணை போல. லலிதாவிற்கும் அதே நிலைதான்.

காலையில் ஒருபாடு அலுவலகத்தில் உறங்கி எழுந்துதான் வீடு வந்தான் தியாகு. காலை உணவு வேளை  முடிந்திருந்தது. தியாகு வரவும், வள்ளி “சாப்பிடுப்பா.. வா கறி எடுத்து எவ்வளவு நேரம் காத்திருப்பது.. வா.. ராஜி மாமாக்கு இட்லி வை.. வா வா..” என சொல்லிக் கொண்டே சக்கர நாற்காலியை தள்ளிக் கொண்டே டைனிங் டேபிளில் வந்தார் அன்னை வள்ளி.

ராஜி புன்னகையோடு எழுந்து வந்தாள்.. தன் பாட்டி சொல்லியது போல.. மாமாவிற்கு எல்லாம் எடுத்து வைத்து பரிமாறினாள். தியாகு உண்டான். வள்ளி நடுநடுவே “பிள்ளை முட்டை கூட சாப்பிடுவதில்லை.. என்ன வளர்ப்போ.. எப்படி உடம்பு தேறும்.. ராஜியை பழக்கிவிட சொல்லியிருக்கேன்” என ஜனனியை பற்றி சொன்னார்.

தியாகு அலட்டாமல் “ம்.. பிள்ளையா யாரு” என்றான்.

வள்ளி “உன் பொண்ணுதான் டா.. ஜனனிக்குதான் சொல்றேன்.. மாடியிலேயே சாப்பிடுறா.. தனியா சைவம் சமைக்க சொல்லியிருக்கா ராஜி.. நம்ம பிள்ளையை இப்படிதான் வளர்ப்பியா” என்றார்.

தியாகு “யாரு பிள்ளை” என்றான் மீண்டும் நிதானமாக.

வள்ளி “என்ன டா..” என்றார் அதட்டலாக.

“அவ எங்க பிள்ளை.. சொல்ல போனால் உனக்கு பிடிக்காத  லலிதாவோட பொண்ணு.. அவ. திடீர்ன்னு உறவு கொண்டாடாதீங்க.. எனக்கே ஒன்னும் புரியலை. அப்புறம், என் பெண்ணை இங்கே, என்னை பார்க்கவும் அனுப்பமாட்டாள் அவள்” என்றான் கோவமாக.

ராஜி “மாமா என்ன இது பாட்டிகிட்ட போய்.. அவங்க எதோ பாசத்தில் சொல்றாங்க. அவதான் காலையில் ஹாலில் வந்து படித்தாள்.. பாட்டி கூட பேசிக்கொண்டே பூ பறித்தாள்.. சுற்றிக் கொண்டே இருந்தால் வீட்டை. பாட்டிக்கு ரொம்ப பிடிச்சு போச்சு.. அதான் நம்ம கூடவே இருந்திருக்க வேண்டிய பிள்ளை என பேசுறாங்க” என்றாள் விளக்கமாக.

தியாகு “ம்.. இப்போது நான் சந்தோஷப்படணும்..” என்றான் கோவமாகவே. பின் “என் பொண்ணு மீது என்ன திடீர் பாசம். அவளை மாற்றுகிறேன்.. பழக்குகிறேன்னு ஏதாவது செய்தீங்க..” என்றவன் எழுந்தான் கைகழுவ.. திரும்பி “இங்கே இருக்கமாட்டேன் பார்த்துக்கோங்க” என்றான்.

ராஜி “மாமா.. வயசானவங்க கிட்ட போய்..” என்றாள் கோவமாக.

தியாகு கைகழுவி வந்தான்.. அன்னையை பார்த்து “ஒதுக்கிதானே வைச்சிருந்தாங்க.. உண்மைதானே.. இவங்க செய்யாததை சொல்லலையே..” என்றான், கோவமாக.

வள்ளி “போடா.. ஊரில் இல்லாத பிள்ளை பெத்து வச்சிருக்கான்.. எப்படியோ போ.. பார்த்துகிறேன்.. எப்படின்னு” என்றவர்.. தன் நாற்காலியை தள்ளிக் கொண்டே தன் அறைக்கு விரைந்தார்.

தியாகு “பாரு பாரு நல்லா பாரு..” என்றவன் ஹாலில் வந்து அமர்ந்தான்.

மனது ஏனோ சாந்தமாகவில்லை.. அப்படியே சோபாவில் சாய்ந்து கண்மூடிக் கொண்டான்.

ராஜி “மாமா” என்றழைத்தாள்.

தியாகு “எதுவும் பேசாத” என்றான் கட்டளையாக.

ராஜி, நொடி நேரம் நின்றாள் கண்திறப்பானோ என.. திறக்கவில்லை எனவும்.. தன் மாமாவின் அருகே அமர்ந்து அவனின் தோளில் தட்டிக் கொடுத்தாள்.

தியாகு “அந்தபக்கம் போ ராஜி” என்றான்.

இப்போது பிரபாவதி உள்ளே நுழைய சரியாக இருக்க.. தியாகுவின் குரல்.. ராஜி அசௌகர்யாமாக நிற்பது என.. எல்லாம் கண்டவர்.. “ராஜி டீ போடுறீயா” என கேட்டபடியே உள்ளே சோபாவில் அமர்ந்தார்.

தியாகு ஏதும் பேசவில்லை.

ராஜி உள்ளே சென்றாள்.