விருந்தினர்கள் அனைவரும் இரவு உணவை முடித்துவிட்டு விடைபெற்றிருக்க.. குடும்பத்தினர் உணவருந்த அமர்ந்திருந்தனர்.
டைனிங் டேபிளின் இருக்கையில் ஆண்கள் மூவரும் அமர்ந்திருக்க, கீர்த்தனாவும் மகிழினியும் அவர்களுக்குப் பரிமாற.. கலைச்செல்வி வெளியே வைஷ்ணவியை கவனித்துக் கொண்டிருந்தார்.
அதுவரை அந்த வீட்டில் உலவிக் கொண்டிருந்த மனக்கசப்புகள் அத்தனையும் மறைந்து போய், மகிழ் பூக்கள் வீடெங்கும் மணம் பரப்பிக் கொண்டிருந்தன.
மகிழினியின் மனம் நிறைவாய்.. நிம்மதியாய் இருந்தது.
அது அவள் முகத்திலும் தெரிய, அவளை கவனித்துக் கொண்டிருந்த கௌதமிடமும் அதன் பிரதிபலிப்புகள்.
அவர்கள் உண்டு எழுந்ததும்,
“அத்தை நீங்க வந்து சாப்பிடுங்க. வைஷுக்கு நான் ஊட்டுறேன்” என மகிழினி கலைச்செல்வியை அழைக்க,
“வைஷு சாப்டுட்டா மா. ரெண்டு வாய் தான் இருக்கு. நீயும் கீர்த்தனாவும் உக்காருங்க” என்றதும் தனக்கும் கீர்த்தனாவுக்கும் எடுத்து வைத்துக்கொண்டே,
“நீங்க எப்போ வந்தீங்க அண்ணி?” என வினவ,
“கௌதமை ஏர்போர்ட்ல பிக்கப் பண்ணிட்டு ரெண்டு மணிக்கெல்லாம் வந்தாச்சு மகிழ்” என்று புன்னகைத்தாள்.
“சொல்லி இருந்தீங்கன்னா நானும் கூட வந்திருப்பேனே?”
“சர்ப்ரைஸ்ன்னு உன்கிட்ட சொல்ல கூடாதுன்னுட்டான். அவனும் வந்ததுமே எங்கயோ கிளம்பிப் போய்ட்டான். அப்பறம் தான் தெரியுது உன் பிரெண்ட்ஸ பார்த்து பேசிட்டு உன்னையும் கூட்டிட்டு வந்திருக்கான்” என கீர்த்தனா சொல்லவும்,
‘எப்படி அவங்களை எல்லாம் இவருக்கு தெரிஞ்சுது?’ என யோசனையில் இருந்தாள் மகிழினி.
“இன்னொரு சப்பாத்தி வெச்சுக்கோ” என அவள் தட்டில் வைத்த கீர்த்தனா,
“நானே உங்களுக்கு சொல்லணும்னு இருந்தேன். இப்போ ரொம்ப ரிலீஃபா இருக்கு அண்ணி. எதுவும் தப்பா நடக்காதுன்னு தைரியமும் கூடவே ஒரு பாசிட்டிவிட்டிய ஃபீல் பண்ண முடியுது. இல்லைனா இன்னைக்கு நடந்த சம்பவத்துக்கு எல்லாம் என்னால சர்வைவ் பண்ணிருக்கவே முடிஞ்சிருக்காது” என்றாள்.
அந்தப் பயிற்சி தற்போது முடிவடைந்திருக்க.. கடந்த இரண்டு மாதங்களில் அதனால் அவளுக்குள் ஏற்பட்ட மாறுதல்களை மனதாரச் சொன்னாள் மகிழினி.
“இப்பெல்லாம் நிம்மதியா தூக்கம் வருது. ரொம்ப நாளா இப்படி ஒரு ப்ரோக்ராம் தான் தேடிட்டு இருந்தேன். கரெக்ட் டைம்ல நீங்க சஜெஸ்ட் பண்ணிருக்கீங்க. ரொம்ப தேங்க்ஸ் அண்ணி” என,
“உனக்கு ஒரு விசயம் சொல்லவா?” என கீர்த்தனா புருவம் உயர்த்த,
‘என்ன?’ என்பதாய்ப் பார்த்தாள் மகிழினி.
“கெளதம் தான் உன்னை இதுல ஜாயின் பண்ண வெச்சது” என்றாள் ரகசியமாய்.
‘இது வேறையா’
“நீ ரொம்ப ஸ்ட்ரெஸா இருக்கன்னு அவன் தான் பார்க்க சொல்லியிருந்தான். எனக்கு ரெபரென்ஸ் கிடைச்சதும் சஜெஸ்ட் பண்ணுனேன். அவன் சொன்னா, எங்க நீ பண்ண மாட்டயோன்னு என்னை சொல்லச் சொல்லி கடைசில உன்னை மானிட்டர் பண்ண என்னையும் சேர வெச்சுட்டான்” என்று அவள் சொல்லி முடிக்கவும், கெளதம் அவர்கள் அருகே வரவும் சரியாய் இருந்தது.
மகிழினி அவனை முறைத்துப் பார்க்க,
‘இவ ஏதோ பத்தவெச்சுட்டா போல’ என அவன் தன் அக்காவைப் பார்த்தான்.
வேலை முடிந்ததென அவள் சிரித்தவாறு விலகிக்கொண்டாள்.
“கொஞ்சம் பேசணும். மேல வாங்க” என்றுவிட்டு மேல் அறைக்குச் சென்ற மகிழினியைப் பார்த்தது பார்த்தவாறு நின்ற கௌதமின் தோளைத் தட்டிய விஜய்,
“அதான் பாசமா கூப்பிடுறாங்கல்ல போங்க மச்சான்” என,
“பாசமா கூப்பிட்ட மாதிரி தெரியலையே மாமா. அக்கா ஏதோ ஆப்படிச்சுட்டான்னு நினைக்குறேன்” என்றான் குழப்பமாய்.
“அவளுக்கு இதே வேலைதான். சரி ஒன்னும் பிரச்சனை இல்லை. நேரா மேல போ.. என்ன நடந்துச்சுன்னு கேளு. முடிஞ்சா பேசிப் புரிய வை. இல்லையா.. என்னை மன்னிச்சிடுன்னு சொல்லி பட்டுன்னு கால்ல விழுந்திடு.. சிம்பிள்” என்றான் விஜய்.
“ஹ்ம்ம்…” என முதலில் அவன் கூறியதை தீவிரமாய் கேட்டிருந்த கெளதம் அவன் கடைசியில் கூறியதைக் கேட்டு முறைக்க,
“இப்படி முறைச்சிட்டு இருந்தா வாழ்க்கை முடிஞ்சு போய்டும்டா” என்று முடிப்பதற்குள்,
“கெளதம்ம்…”
மேலிருந்து மகிழினியின் குரல் ஒலிக்கவும்,
“வரேன் மகிழ்” என்று இரண்டு இரண்டு படிகளாய்த் தாவியவனையே பார்த்திருந்தான் விஜய். இரண்டு நொடிகள் அப்படிப் பார்த்திருப்பான். அதற்குள்,
“விஜய்…” என்ற கீர்த்தனாவின் குரலில் திடுக்கிட்டு திரும்ப,
“அங்க என்ன வேடிக்கை? வைஷுவை தூங்க வைங்க” என்றாள். உடனே சரியென தலையசைத்து,
“அவனை விட நம்ம நிலைமை தான் மோசமா இருக்கு” என முணுமுணுத்து நகர்ந்தான்.
மேலே வந்த கெளதம் மகிழினியைப் பார்க்க,
யன்னலின் அருகே சுவரோடு சாய்ந்தவாறு கைகளை கட்டிக்கொண்டு அவன் வருகைக்காகவே காத்திருந்தவளாய் நின்றிருக்க,
‘பார்வையே சரியில்லை’ என அவன் உள்ளே வரவும்,
“கதவை சாத்திட்டு வாங்க” என்றாள் அழுத்தமாய்.
‘பேச்சும் சரியில்லை’ என நினைத்தவன் கதவைத் தாழிட்டு வந்து கட்டிலின் ஒருபுறம் அமர்ந்துவிட்டுப் பார்க்க, அவள் அப்போதும் அவ்விடம் விட்டு நகராது இருந்தாள்.
“அதான் இங்க இவ்வளவு இடம் இருக்கில்ல. ஏன் பல்லிக்கு துணையா அங்க நின்னுட்டு இருக்க..”
“பேசாம இருந்திருங்க. ஏற்கனவே செம கோபத்துல இருக்கேன்” என விரல் நீட்டி எச்சரிக்க,
“கோபமா இருக்கியா? நீ மெடிடேஷன் பண்ணுறியா இல்லையா?” என்றதில்,
வேகமாய் அவன் அருகில் வந்தவள் தலையணையால் நான்கு அடி வைத்துவிட்டு,
“எப்படி.. எப்படி… நீங்க சொன்னா நான் கேட்க மாட்டேன்னு லைவ்ல என்னைக் கண்காணிக்க அண்ணியையும் உள்ள இழுத்து விட்டிருக்கீங்க.. எதுக்கு இந்த வேலை உங்களுக்கு?” என மீண்டும் கைகள் அதன் வேலையத் தொடர,
அப்போது தான் புரிந்தது அவனுக்கு.
“ஹேய்! மகிழ்.. இதெல்லாம் அவளா நெனச்சிட்டு சொல்லியிருக்கா. நான் உனக்கு க்ளாஸ் பார்க்க சொன்னது உண்மைதான். ஆனா அவளை மானிட்டர் எல்லாம் பண்ண சொல்லலை” என்றவன்,
“உண்மை என்னனா, விஜய் மாமா தான் கீர்த்துக்கு கோபம் அதிகமா வருதுன்னு அவளுக்கே தெரியாம அவளை ஜாயின் பண்ண வெச்சது” என்று விளக்கவும்,
கீர்த்தனாவை நினைத்து பாவமாய் இருந்தது மகிழினிக்கு.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என கௌதமும், விஜய்யும் இதிலும் கைகோர்த்திருக்க அது இறுதி வரை இவர்களுக்கு தெரியாமலே போனது.
அவள் யோசித்துக் கொண்டு நிற்க, அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய கெளதம் அவள் கையைப் பற்றி இழுத்ததில் நிலை தடுமாறி அவன் மேல் வந்து விழுந்தாள்.
பின்னிருந்து அணைத்தவன் பிடியில் இருந்து அவள் எழ முற்பட, அது முடியாது போகவும்
“விடுங்க” என்றாள்.
“விடுற ஐடியாவே இல்லை”
“ப்ச்..” என பக்கவாட்டில் திரும்பி முறைக்க,
“போகணும்னா போ. முறைக்காத” என அவன் கைகளை விலக்கிக் கொள்ளவும் அதில் ஏதோ உணர்ந்தவளாய் அப்படியே எழாதிருக்க,
“எந்திரிக்க வேண்டியது தானே?” என்றான் கெளதம்.
“எனக்கு ஐடியா இல்லை” என்றவள் தன் ஒரு கையை அவன் கழுத்தை சுற்றிப் போட்டுக்கொண்டு அவன் மடியில் நன்றாய் அமர்ந்தவாறு அவனையே குறுகுறுவென பார்க்க,
அவன் குளித்துவிட்டு டீ ஷர்ட் டிராக்கிற்கு மாறி தன் ஈர தலையைக் கோதியபடி வரவும்,
ஓரக்கண்ணால் அவனைப் பார்த்துவிட்டு தீவிர பாவனையில் தன் கையிலிருந்த புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருந்தாள்.
‘கீழ அங்க அத்தனை பேர் முன்னாடி என் கெளதம்.. என் கௌதம்ன்னு முந்நூறு பக்கத்துக்கு டயலாக் அடிச்சிட்டு, ஒரு முத்தம் கேட்டா முடியாதுங்கறா பாரு’ என நினைத்தவனாய் அவள் பக்கமே பார்வையைத் திருப்பாது கதவை சாற்றிவிட்டு வெளியே சென்றுவிட,
‘என்ன போய்ட்டாரு.. கோபமோ?’ என ஏமாற்றமாய்ப் பார்த்தவள் புத்தகத்தைப் போட்டுவிட்டு வேகமாய் வந்து கதவைத் திறக்கவும்.. கெளதம் மீண்டும் உள்ளே வரவும் சரியாய் இருந்தது.
இருவரும் மோதியிருக்க அவளைப் பிடித்து நிறுத்தியவன்,
“இவ்வளவு வேகமா எங்க போற?” என,
“நீங்க ஏன் திரும்ப வந்தீங்க?” என்றாள்.
“ஈர டவலை எடுக்காம போய்ட்டேன். அதை எடுக்க வந்தேன்” என்றதில்,
கட்டிலின் ஒரு ஓரத்தில் கிடந்த அதை வேகமாய் எடுத்துக் கொடுத்தவள், சமாளிப்பாய்ப் புன்னகைத்து உள்ளே சென்றுவிட்டாள்.
இதழோரம் அரும்பிய புன்னகையோடு அமைதியாய் கீழே வந்தான் கெளதம்.
‘அப்போ போனவன் இப்பத்தான் வர்றான். அடி பலமோ?’ எனப் பார்த்திருந்த விஜய்யோ,
“என்ன மச்சா, கால்ல விழுந்துட்டியா?” என்று கேட்க,
“ப்ச்.. இல்லை மாமா” என வெகு இயல்பாய்த் தோள்களைக் குலுக்கியவன்,
“உங்களை கோர்த்து விட்டுட்டேன்” என்று கண்ணடிக்க,
‘அடப்பாவி’ எனப் பார்த்திருந்தான் விஜய்.
சத்யமூர்த்தியும் கீர்த்தனாவும் அவர்களருகில் வந்தமர, சில நிமிடங்கள் கலகலப்பான உரையாடல்களில் கழிந்தது.
கிச்சனில் மீதமிருந்த வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு வந்த கலைச்செல்வி,
“கீர்த்தனா.. சீக்கிரம் தூங்குங்க. நாளைக்கு காலைல நேரமே கிளம்பணும்ல” என்றதில் சபை கலைய,
வேகமாய் பாலைக் காய்ச்சி எடுத்துச் சென்றாள் கீர்த்தனா. அவள் சென்றதும் கெளதம் சமையல் அறையின் உள்ளே வர,
சற்றுமுன் அவன் நினைத்தது வேறு தற்போது இங்கு நடப்பது வேறாகிட, தன் நெஞ்சில் கைவைத்து நீவி விட்டுக்கொண்டான் கெளதம்.
“என்னாச்சு கெளதம்?” என அவளும் ஒன்றும் தெரியாதது போல் எழ,
“நான் போய் அப்பா ரூம்ல படுத்துக்கறேன். நீ வேணா அம்மாவோட இங்க படுத்துக்கறையா?” என்றதில் மகிழினி வேகமாய்த் தலையசைக்க,
“அப்படியே போட்டேன்னு வை” என அவள் தலையில் கொட்டச் சென்றவன்,
“பேசாம படுத்திடு” என்று அவளை முறைத்துவிட்டுத் திரும்பிப்படுத்தான்.
அதில் பொங்கி வந்த சிரிப்பை அடக்கப் போராடிய மகிழினிக்கு டேபிளின் மீதிருந்த அவளது நாட்குறிப்பு பார்வையில் படவும், அதைக் கையில் எடுத்தாள்.
அவள் கைக்கு வந்த பின் அவளது நாட்குறிப்பின் பக்கங்கள் யாவும் பேனா மையால் சிரிக்கத் துவங்கின.
அவள் மனம் இன்றைய நாளின் சம்பவங்களை எல்லாம் மெல்ல ஒன்றன்பின் ஒன்றாக அசைபோட்டது. அவளுக்காக கெளதம் எடுத்த முயற்சிகள் அத்தனையும் கண்முன் வந்து போக, இதழோரம் அரும்பிய புன்னகையோடு எதையோ எழுத்திக் கொண்டிருந்தாள்.
கொஞ்சம் யோசித்தவளுக்கு அவன் எப்படி அவளது தோழிகளைச் சந்தித்திருப்பான் என்ற கேள்விக்கும் விடை கிட்டியிருந்தது.
அவர்களோடு இறுதியாய் எடுத்துக்கொண்ட ஒரே ஒரு புகைப்படம் மட்டும் அவளிடம் இருக்க, அதை ஒருநாள் கௌதமிடம் காண்பித்து, அவளே தான் அவர்களைப் பற்றியும் அவனிடம் பகிர்ந்திருந்தாள்.
அதில் யாராவது ஒருத்தரை இணைய வழியாக தொடர்பு கொண்டு மற்றவர்களை ஒருங்கிணைத்திருக்க வேண்டும் என்று நினைத்தாள்.
தன் யூகத்தை அவனிடமும் பகிர்ந்து,
“அப்படித் தானே?” எனக் கேட்க,
‘கண்டுபிடிச்சுட்டாளா! ஒரு முத்தத்துக்கும் இன்னைக்கு வழியில்லாம போய்டுச்சு’ என நினைத்தவன் ஒரு தலையசைப்பை மட்டும் அளித்து,
“தூங்கலையா மகிழ்.. டைம் ஆச்சு” என்றான்.
அதில் நேரத்தைப் பார்த்தவள்,
“டென் மினிட்ஸ்” என்று தன் நாட்குறிப்பை வைத்துவிட்டு குளியலறைக்குள் சென்று வர,
அவள் வெளியே வந்த போது அது அவன் கைகளில் தவழ்ந்து கொண்டிருந்தது.
எதையோ தெரிந்துகொண்டவன் போல் கெளதம் அவளைப் பார்த்து உதடுமடித்து புன்னகைத்தான்.
எதையோ என்ன.. அவளது மனதின் இரகசியப் பெட்டகங்களைத் திறக்கும் சாவியாய் நாட்குறிப்பு இருக்க.. அதைத் திறந்து பல பொக்கிஷங்களை அள்ளிக் கொண்டிருந்தான்.
அவன் கண்களில் தெரிந்த குறுகுறுப்பால், ‘ஐயோ’ என்றிருந்தது அவளுக்கு.
“கொஞ்ச நேரம் முன்னாடி என்ன சொன்ன?” என்றான்.
“என்ன சொன்னேன்?” என பதிலுக்கு அவனிடமே கேட்க,
“என்னமோ எங்க அம்மா நியாபகமா இருக்குற மாதிரி கதைவிட்ட.. ஆனா நீ பக்கம் பக்கமா எழுதியிருக்கறத பார்த்தா அப்படித் தெரியலையே?” என புருவம் உயர்த்த,
‘எதையெல்லாம் படிச்சாருன்னு தெரியலையே’ என அவள் விழிக்கும் போதே,
“அதுவும் நைட்ல எங்கம்மாவை பக்கத்துல வெச்சுட்டு தான் நெறையா எழுதிருப்ப போல.. அவன் என் முதல்வரி.. முடிவிலி..” என ஒன்றிரண்டை வாசித்துக் காட்ட,
“டைரி எழுதுறதே ஒருநாள் யாராவது எடுத்துப் படிக்கத்தானே. நான் இப்போ படிக்கிறேன். இதுல இருக்குறதை எல்லாம் நீ என்கிட்ட சொல்லணும்னு எதிர்பார்த்தா அது இப்போதைக்கு நடக்காது. நானா தெரிஞ்சுக்கிட்டா தான் உண்டு” என்று மேலும் சில பக்கங்களைப் புரட்ட,
“ப்ச்.. படிக்காதீங்க.. குடுங்க அதை” என மகிழினி வேகமாய் அவன் கைகளில் இருந்து வாங்க முயல, அதுவோ அவர்களை விட்டு தூர தள்ளிச்சென்று விழுந்திருந்தது.
அவள் அவன் மேல் விழுந்திருக்க, இம்முறை அவள் எழ முயற்சிக்கவில்லை.
முயற்சித்தாலும் இனி அவனிடம் அது நடவாத காரியம் என்று புரிந்திருக்க.. நாணத்தில் முகம் சிவக்க.. மாலையென அவன் மார்பில் கிடந்தாள்.
மலர்த்தோட்டமாய் மஞ்சம் விரிந்திருந்தது.
கீழே கிடந்த அவளது நாட்குறிப்பின் பக்கங்கள் காற்றில் படபடத்து ஓரிடத்தில் நின்றது.