வீட்டிற்கு வந்தாலும் குளித்து முடித்து ஒரு அரை மணி நேரம் படுத்து உறங்குவதோடு சரி, மீண்டும் கிளம்பி அலுவலகம் செல்லும் படியாகவே இருந்தது,

    இப்படியாகவே அந்த ஒரு வாரமும் செல்ல,  மீட்டிங் முடிந்த அன்று மாலை சீக்கிரமாகவே வீட்டிற்கு வந்தவன், ஹாலில் படுத்து விட்டான்,

இவளும் அலுவலகம் விட்டு வந்தவுடன், அவன் தூங்குவதை பார்த்து விட்டு பக்கத்து வீட்டிற்கு சென்று கதிரவன் அம்மாவிடம் “அத்த எப்போ வந்தாங்க, ஏதாவது சாப்டீங்களா”, என்று கேட்டு விட்டு, “நீங்க டீ  குடிச்சீங்களா, இல்ல போட போறேன், உங்களுக்கு சேர்த்து போடவா”, என்று கேட்டாள்.

   நாங்க இப்போ தான் குடிச்சோம், அவன் தான் சரியா சாப்பிடல, டல்லா இருந்தான்”,என்றார்.

    “நான் பாத்துக்குறேன்” என்று சொல்லி விட்டு வீட்டிற்கு வந்தவள், வரும் போதும் “நைட் சாப்பாடு சேர்த்து செய்யவா” என்று கேட்டாள்.

அவனின் அம்மா தான், “இல்லம்மா நானே சேர்த்து இட்லி வைக்கிறேன்”, என்று சொன்னார்.

   “அப்ப நான் சட்னி வச்சிடுறேன், நீங்க செய்ய வேண்டாம்”, என்று சொல்லி விட்டு வீட்டிற்கு வந்தவள், அவனுக்கு பிடித்த வெங்காய சட்னியை தயார் செய்து வைத்தாள்.

அவர்களுக்கும் கொடுத்து விட்டு, அங்கிருந்து இட்லியை எடுத்து வந்து வீட்டில் வைத்தாள். அவன் நன்றாக தூங்கி இருக்க அப்போது தான் மெதுவாக எழுப்பியவள், “சாப்பிட்டு தூங்குங்க” என்று சொன்னாள்.

முழித்தாலும் ஹாலிலே படுத்திருந்தவன், அவளை பார்த்துக்கொண்டே “செம கால் வலிடா”, என்று சொன்னான்.

  “சொல்லி இருக்க வேண்டியது தானே” என்றாள்.

   “இருந்த தூக்கத்தில் எங்க சொல்ல” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே,

இவள்  அவனுடைய காலுக்கு தைலம் போட்டு, காலை தடவி விட்டு, பிடித்து விட,

      தற்செயலாக ‘இட்லி பொடியை கொடுத்தால் அவன் கூட கொஞ்சம் சாப்பிடுவானே’ என்று பின் பால்கனி வழியாக கதிரவனின் அம்மா வந்தவர் பார்த்தது,

    இவள் அவனுக்கு காலில் தைலம் தேய்த்து பிடித்து விட்டுக் கொண்டிருப்பதை தான், வந்த சத்தம் தெரியாமல் மெதுவாக திரும்பிச் சென்றவர்,

அவன் அப்பாவிடம் அதை சொல்லிக் கொண்டிருந்தார்.

     அவரும் அதை தான் சொல்லிக் கொண்டிருந்தார், “இத்தனை நாள் நாம் அருகில் இல்லை, அருகில் இருக்கும் போதும், அவன் நம்மிடம் எதுவும் சொல்வதில்லை, பார்த்தியா, என்ன தான் இருந்தாலும் அவனுக்கு என்று ஒருத்தி வந்ததுக்கப்புறம் தான், அவனுடைய வலி, வேலையோட கஷ்டம் எல்லாம் தெரியுது, நம்ம பக்கத்துல இருந்தாலும் நம்மகிட்ட அவன் எதுவும் சொல்றதில்லை”, என்று சொன்னார்.

    “ஏன் நம்மிடம் சொல்லாமல் இருந்தான்,  சொல்லி இருக்க வேண்டியது தானே” என்று அவனுடைய அம்மா கேட்டார்.

   அவரோ “அப்படி இல்ல, அவனோட கஷ்டத்தையோ, அவனோட வலியோ நம்ம கிட்ட சொல்லாத காரணம்,  நம்ம அம்மா அப்பா கஷ்டப்படக்கூடாது, என்கிற அவனுடைய எண்ணம் மற்றபடி சொல்லக்கூடாது எல்லாம் இல்ல”, என்று சொன்னவர்,

“என்ன தான் இருந்தாலும் அவனுக்கு அவ தானே எல்லாம், எனக்கு உன் ட்ட இருக்குற உரிமை வேற யாரிடமும் வாரது தானே, அப்படி தான் இதுவும், நீ ரொம்ப யோசிக்காதே”,என்றார்.

     “அப்படி தான் போல” என்று சொல்லி விட்டு “இட்லி பொடியை கொடுக்கணுமே, எப்படி கொடுக்க”, என்று கேட்டார்,

   “மருமகளுக்கு போன் பண்ணு”, என்று சொன்னார்.

அவரும் அழைத்து சொல்லவும், “நானே வந்து எடுத்துக்கிறேன் அத்தை” என்று சொன்னவள்,

அவனிடம் “ஹீட்டர் போட்டு இருக்கேன், ஹாட் வாட்டர் ல குளிச்சிட்டு வாங்க, இட்லி இருக்குது, வெங்காய சட்னி வச்சிருக்கேன், அத்தை பொடி வச்சிருக்காங்க, போய் எடுத்துட்டு வரேன் சாப்பிடுங்க”, என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

     அவனும் சிரித்தபடி “நாளைக்கு ரெஸ்ட், நீ நாளைக்கு லீவு போடுறியா” என்று கேட்டான்.

     அவள் சிரித்துக் கொண்டே இருக்க, “ஏன் லீவ் போட மாட்டியா”, என்று கேட்டான்.

“போடுறேன்” என்று சொன்னாள்.

“வெளியே எங்கேயாவது போயிட்டு வருவோமா”, என்று கேட்டான்.

  “இல்ல அலைய வேண்டாம், நீங்க ரெஸ்ட் எடுங்க, நம்ம வீக்என்ட்ல போலாம், உங்களுக்கு டைம் இருந்தா”, என்று சொல்லி, அவனை அலைய விடாமல் செய்தாள்.

    அவன் கேட்டது போலவே மறுநாள் விடுப்பு எடுத்தவள், அன்று முழுவதும் நேரத்தை அவனுடனே செலவிட்டாள்,

    அவன் வீட்டில் இருக்க, அவளும் லீவு போட்டு இருந்ததால், பெரியவர்களும் இந்த பக்கம் வராமல், நாங்களும் காஞ்சிபுரம் போயிட்டு, உங்க அக்காவை பார்த்துட்டு வாரோம்”,  என்று சொல்லி அவர்கள் இருவரும் வீட்டில் இருப்பதை தெரிந்து கொண்டு அவர்களும் கிளம்பிவிட்டனர்.

“இவனோ நைட் 12 மணி வரை உட்கார்ந்து பேசுவோமா”, என்று பழைய விஷயங்களை பேசி அவளை சீண்டி கொண்டே இருந்தவன்,

    பின்பு அவளோடு கிடைத்த நேரத்தை தனக்காக மாற்றிக் கொண்டான்.

காஞ்சிபுரத்திலிருந்து அவர்கள் திரும்பி வந்தவுடன், அவர்கள் தான், ‘இவனுக்கு ட்ரான்ஸ்பர் கிடைச்சுச்சுன்னா என்ன பண்ண’ என்று பேசிக் கொண்டிருந்தனர்.

அன்று நந்தனும் ராதாவும் குழந்தையை எடுத்துக் கொண்டு இங்கே வந்திருக்க, அவர்களுடைய பேச்சு எல்லாம் “மூன்று வருடத்திற்கு ஒரு தடவை டிரான்ஸ்பர் ஆகும், இப்பதான் ட்ரான்ஸ்பர் ஆகி வந்திருக்கிறதுனால இன்னும் ரெண்டு வருஷம் இங்க இருந்து விடுவான்,

   ஆனா இவன் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்டா இருப்பானா, நேர்மையா இருக்கறதுனால, எங்கேயும் மாத்தி போட்ற கூடாது, மாற்றி போட்டா கஷ்டம் தான்”, என்று பேசிக் கொண்டிருந்தனர்.

இவளும் ட்ரான்ஸ்பர் என்று வந்தால் என்ன செய்வது என்பதை பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் போது, ராதாவை பார்க்க,

   ராதாவோ “உங்க டீம் லிட்ட சொல்லி, ஒர்க் ப்ரம் ஹோம் வாங்கிக்கோ, தமிழ்நாட்டுல இருந்தா, வெளியூரா இருந்தா வேலைய விட்டுட்டு போ, என்ன பண்ண”, என்று சொன்னாள்.

கதிரவனின் அம்மாவும் “நானும் அதை தான் நினைச்சேன்” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

இவளும் அவர்கள் சொல்வதற்கெல்லாம் மௌனமாக தலையை அசைத்துக் கொண்டாள். சரி என்றும் சொல்லவில்லை வேண்டாம் என்றும் சொல்லவில்லை.

வாழ்க்கை அதன் போக்கில் போகத் தொடங்கியிருந்தது.

   அன்று காலையில் இருவரும் சேர்ந்து தான் அலுவலகம் கிளம்பி இருந்தாலும்,  மதியம் போல் தான் அவள் அவனிடம் பேச வேண்டும் என்று அழைப்பு விடுத்தாள்.

அழைப்பு எடுக்கப்படாமல் இருந்தது, இவளுடைய இரண்டு கால்,  நான்கு மெசேஜ்களுக்குப் பிறகு,

  அவனிடமிருந்து “ஒரே ஒரு மெசேஜ், கொஞ்சம் வேலை டைட் முடிச்சுட்டு கூப்பிடுறேன்” என்று மட்டும் இருந்தது.

இவளும் ‘சரி’ என்று நினைத்துக் கொண்டாள்.

ஆனால் ஏனோ அந்த நேரத்தில் உடனே பேச முடியாதற்கான கோபமும் சேர்ந்தே வந்தது .