“சரி நீ எதுவும் ஆர்டர் செய்யாதே, எதுவும் வாங்காதே, நீ கைல வெச்சிருக்க தண்ணீர் எதுவும் இருந்தா குடி, வெளியே இருந்து எதையும் வாங்கி குடிக்கவோ, சாப்பிடவோ செஞ்சிறாதே”, என்றான்.
“ஹலோ இதுக்கு தான் காபி ஷாப் போக சொன்னீங்களா”,என்றாள்.
“சொல்றது மட்டும் செய் இசை” என்றான்.
“சரி சரி, ஓகே நீங்க டென்ஷன் ஆகாதீங்க” என்று சொல்லிக் கொண்டே அமர்ந்திருக்க,
அவளை லைனில் வைத்துக் கொண்டே நந்தனை அழைத்தவன், “எங்க இருக்கீங்க” என்று கேட்டான்.
“ஏர்போர்ட் பக்கத்துல போயிட்டேன்”,என்றான்.
“சீக்கிரம் போங்க, அவளை லைனில் வைத்துக் கொண்டே, “எந்த காபி ஷாப்” என்று கேட்டான்.
இவளும் தன் முன்னிருந்த மெனு கார்டை பார்த்துவிட்டு காபி ஷாப் பெயரை சொன்னாள்.
“சரி நீங்க அங்க போயிருங்க” என்று நந்தனிடம் சொன்னான்.
நந்தனோ “பாப்பா நீ அங்கே என்ன செய்ற”, என்று கேட்டான்.
கதிரவனோ, “அவ மீன் புடிச்சிட்டு இருக்கா, நீங்க போய் தூண்டில் போடுவதற்கு ஹெல்ப் பண்ணுங்க”, என்று கோபமாக சொன்னான்.
நந்தனோ ‘இவர் ஏன் இப்படி கோபப்படுகிறார்’ என்று யோசித்து விட்டு, ‘ஏதோ பிரச்சனை போலவே’ என்று நினைத்துக் கொண்டான்.
“இசை நீ அங்க இருந்து நகராதே, நான் ஏற்கனவே சொல்லி இருக்கேன், இப்போ பக்கத்துல இருக்குற போலீஸ் ஸ்டேஷனில் இருந்து யாராவது வருவாங்க, அவங்க உள்ள வந்து உன்கிட்ட பேசி, நான் உன் ட்ட பேசுனதுக்கு அப்புறம் நீ அங்க இருந்து கிளம்புனா போதும்”, என்று சொன்னான்.
“சரி”,என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.
” நந்தன் நீங்க போனா கூட, நீங்களும் போய் ஒரு டேபிளில் உட்காருங்க, நீங்க அவ பக்கத்துல போகக்கூடாது”, என்று சொன்னான்.
“சரி” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவள் முன் ஒரு காபி கப் வந்து வைக்கப்பட்டது,
இவளோ அவர்களை லைனில் வைத்துக் கொண்டே, “நான் காபி ஆர்டர் செய்யவில்லையே”, என்று சொன்னாள்.
கடையில் வேலையில் இருப்பவரோ”இல்ல உங்க கூட ரெண்டு பேர் வந்தாங்க இல்ல, அவங்க தான் ஆர்டர் பண்ணாங்க, உங்களுக்கு காபி கொடுக்க சொன்னங்க”, என்று சொன்னான்.
அந்த பக்கம் நந்தனும் கதிரவனும் அமைதியாகி, இவர்கள் பேசுவதையே கேட்டுக் கொண்டிருந்தனர்,
இவளும் “சரி வச்சிட்டு போங்க” என்று சொல்லி விட்டு, அவன் அந்த பக்கம் நகர அவனை திரும்பிப் பார்த்தபடியே
கதிரவனிடம் “என்ன பண்ண”என்று கேட்டாள்.
“என்ன ஆச்சு” என்று கேட்டான்.
இவள் கையில் போன் இல்லாததால், இவள் பேசுவது யாருக்கும் தெரியவில்லை, மாஸ்க் போட்டிருந்ததால் இவளுடைய சத்தம் வெளியே கேட்கவும் இல்லை.
நந்தனோ “யார் பாப்பா உன் கூட வந்தவங்க” என்று கேட்டான்.
“என் மாமன்க ரெண்டு பேரு வந்து இருக்காங்க, அவங்க தான் நிக்கிறானுங்க”, என்று சொன்னவன். “இசை அந்த காபி குடித்து விடாதே” என்றான்.
இவளும் “சரி” என்று சொல்லி விட்டு காபியை கலக்குவது போலவே கலக்கிக் கொண்டிருந்தாள்.
“அதை எவ்வளவு நேரம் தான் கலக்குற மாதிரி நடிக்கிறது, சீக்கிரம் யாராவது வந்து சேருங்க” என்று பேச அதைக் கேட்ட இருவரும் “இதோ வந்துகிட்டே இருக்கோம்” என்று சொன்னார்கள்.
அப்போது அவன் தான், “அந்த காபியை கொஞ்சம் ஸ்மெல் பண்ணி பாரேன் இசை”, என்று சொன்னான்.
“ஏன்” என்று கேட்டான்.
“நீ ஸ்மெல் பண்ணி பாரு, சொல்றேன்”, என்றான்.
இவளும் பார்த்து விட்டு “காபி ஸ்மெல்லே வரலையே” என்றாள்.
“அது காஃபி ல ஸ்மல் வராது, அப்படி தான் இருக்கும், டேஸ்ட் எதுவும் பண்ணிராத” என்று சொன்னான்.
அருகில் வந்தவன், “மேடம் வேற ஏதும் வேணுமா, நீங்க காபி இன்னும் குடிக்கலையே”, என்று கேட்டான்.
இவளும் அவனை திரும்பி பார்த்தவள், “காபிக்கு சுகர் பத்தல, அதனால எக்ஸ்ட்ரா சுகர் கொண்டு வாங்க”, என்று சொன்னாள்.
அவனோ திருதிருவென முழித்துக் கொண்டே சுகர் எடுக்க சென்றான்.
கதிரவனும் “இசை உன் பக்கத்துல வசமா, உன் கைக்கு அடிக்கிற மாதிரி ஏதாவது இருக்கா” என்று கேட்டான்.
இவளோ சுற்றி பார்த்து வேடிக்கை பார்ப்பது போலவே அங்குமிங்கும் பார்த்து விட்டு, “என் டிராலிக்கு பக்கத்துல, அந்த பக்கம் ஒரு பூ ஜாடி வச்சிருக்காங்க, அதில் ஸ்டாண்ட் இருக்கு, மரஸ்டாண்டு அதை வேணா தூக்கி அடிக்கலாம், ஆனா வெயிட் எவ்வளவு இருக்கும் ன்னு தெரியலையே”, என்றாள்.
“அதைத்தவிர வேற ஏதாவது இருக்கான்னு பாரு”, என்று சொன்னான்.
இவளும் சுற்றி முற்றி பார்க்க தொடங்கினாள்.
“அடிக்கிற அளவுக்கு ஒர்த்தா எதுவும் இல்ல, பார்க்கலாம்”, என்றாள்.
“உன் பக்கத்துல வேற யாரும் வந்தாங்கன்னா, கேர்ஃபுல்லா ஹேண்டில் பண்ணு, யோசிக்கவே யோசிக்காத கையில எது கிடைச்சாலும் எடுத்து அடிச்சுரு”,என்றான்.
“அய்யய்யோ, நான் கொலை கேஸ்ல உள்ள போறதுக்கா”, என்று இவள் கேட்டாள்.
அவனும் “அடியே என் மண்டையை உடைக்க தெரிஞ்சது இல்ல, அதே மாதிரி பக்கத்துல எவன் வந்தாலும் மண்டையை உடைச்சிரு”, என்று சொன்னான்.
“ஐயோ அதெல்லாம் காலேஜ் படிக்கும் போது, சும்மா இருங்க”, என்றான்.
நந்தனோ “பாப்பா என்ன பாப்பா”, என்றான்.
“அதெல்லாம் லவ் ஸ்டார்ட் ஆவதற்கு முன்னாடியே, அவர் மண்டைய நான் தான் அடிச்சு உடைச்சேன், அவருக்கு லெப்ட் சைடு புருவத்தில் பாரு ஒரு தழும்பு இருக்கும்”,என்று சொன்னாள்.
“இந்த வேலையெல்லாம் பார்த்துட்டு தான், நீ லவ் பண்ணிட்டு இருக்கியா”, என்று கேட்டான்.
“யா அஃப்கோர்ஸ்”, என்றாள்,
நந்தன் கதிரவனிடம் “ஆனாலும் எஸ்.பி சார், உங்க தைரியத்தை பாராட்டியே ஆகணும், அடிச்சி மண்டையை உடைத்தற்கு அப்புறமா கூட, அவ தான் வேணும்னு நினைக்கிறீங்க பாத்தீங்களா”, என்றான்.
“சார் குடும்ப லைஃப்ல இதெல்லாம் சகஜம் சார், நான் என்ன கல்யாணத்துக்கு முன்னாடி அடி வாங்கிட்டேன், நீங்க கல்யாணத்துக்கு அப்புறம் அடி வாங்குவீங்க அவ்வளவு தானே வித்தியாசம்”, என்று சொன்னான்.
இவளோ “ஆமா உங்க ரெண்டு பேருக்கும் இப்ப இது தான் ரொம்ப முக்கியம், நான் இங்க தனியா உட்கார்ந்து இருக்கேன், கண்ணுக்கு முன்னாடி ஒரு கப் காஃபி வேற வச்சிட்டு உட்கார்ந்துட்டு இருக்கேன், சீக்கிரம் வந்து சேருங்க, யாரு எப்ப அடி வாங்கலாம் ன்னு பேசிட்டு இருக்கீங்க, நீங்க வரலைன்னா இப்ப ரெண்டு பேரையும் நான் அடிப்பேன்”, என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.
அதே நேரம் கதிரவன் “இதே டென்ஷன் மூட் ல இரு இப்ப யாரு பக்கத்துல வந்தாலும், பளிச் ன்னு வச்சிரு”, என்று சொல்லிக் கொண்டிருந்தான்.
இவளும் “நான் பார்த்துக்கிறேன், தைரியமா இருங்க, நீங்க வந்து சேருங்க”, என்று சொல்லிக் கொண்டு சுற்றிப் பார்க்க அடுத்த டேபிளில் ஒரு கண்ணாடி பாட்டிலில் தண்ணீர் இருப்பதை பார்த்தாள்,
சுகர் எடுத்துக் கொண்டு அவன் வரவும், “எனக்கு அந்த தண்ணி வேணும்” என்றாள்.
“நான் வேற தண்ணி கொண்டு வர்றேன்” என்று சொன்னான்.
“ஓ கொண்டு வாங்க, ஆனா டம்ளர் வேண்டாம், இதே மாதிரி பாட்டில்ல வேணும்”, என்று சொன்னாள்.
அவனும் “சரி” என்று சென்றான்.
அங்கு கேட்டுக் கொண்டிருந்த நந்தனும், கதிரவனும், “பாட்டிலா” என்றனர்.
“ஆமா, அது கண்ணாடி பாட்டில்” என்று சொன்னாள்.
“ரைட் நீ வேலைய பாரு, நாங்க வந்துட்டே இருக்கோம்” என்று சொல்லும் போதே நந்தன் அருகில் வந்து விட்டதாக சொல்லி கபேயைத் தேடிக் கொண்டிருப்பதாக சொன்னான்.
அவள் அடையாளம் சொல்ல, சரியாக உள்ளே வந்தவன் அவளைப் பார்த்துக் கொண்டே இரண்டு டேபிள் தள்ளி அமர்ந்தான்.
அப்போது அங்கு அமர்ந்திருந்த இருவரில் ஒருவன் இவள் அருகே வரவும், தண்ணீர் பாட்டிலை கொண்டு வந்து அந்த சர்வர் வைப்பதற்கும் சரியாக இருந்தது.