“தெரியுதே” என்று சொன்னாள்.
” இசை” என்று மெதுவாக அழைக்க,
இவளும் “ம்ம் என்ன” என்றாள்.
“பேபி மூவ்மெண்ட்ஸ் எல்லாம் புடிச்சிருக்கா”, என்று கேட்டான்,
“சில சமயம் நல்ல மூவ் ஆகும் போது, என் கை பிடித்து வச்சு காமிப்பா, நல்ல மூவ் ஆகும், இன்னிக்கு ஈவினிங் வந்த அப்போ கூட நான் கேட்டுட்டு இருந்தேன், சில சவுண்ட் நம்ம குரல் இதுக்கெல்லாம் சம்டைம்ஸ் ரெஸ்பான்ஸ் பண்ணுது ன்னு சொன்னா, அவளோட குரல் பேபிக்கு நல்லா தெரியும் போல”, என்றாள்.
இவனும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் “இசை உன்கிட்ட ஒன்னு கேட்கட்டுமா”, என்றான்.
“கேளுங்க” என்று சொன்னாள்.
‘நீ மட்டும் சரின்னு சொல்லேன்”, என்றான்.
“சரி” என்றாள்.
“நான் எதுக்கு கேட்டேனே தெரியாம சரின்னு சொல்லிட்ட”, என்றவன் சிரிக்கவும்,
“நீங்க தானே, நீ மட்டும் சரின்னு சொல்லு ன்னு சொன்னீங்க, நான் அதுக்கு தான் சரின்னு சொன்னேன்”, என்றாள்.
சிரிப்பை அடக்க முடியாமல், லேசாக சிரித்த படியே “எதுக்கு சொன்னேன் னா, நீ மட்டும் சரின்னு சொன்னா, இன்னும் ஒரு ஆறு ஏழு மாசத்துல நீயும் அதே மாதிரி பேபி மூமெண்ட்ஸ் பார்க்கலாம், உன் குரல் பேபிக்கு தெரியும்”, என்று சிரித்த படியே அவளை பார்த்து கண்ணடித்து சொன்னான்.
இவளோ ஏதோ சொல்லுகிறான் என்று கேட்டு இருந்தவள், அர்த்தம் புரிந்த உடன் வாயில் வைத்திருந்த உணவோடு புறை ஏறி விட, அவன் தான் தலையில் தட்டி தண்ணீரை கொடுத்து, “என்ன ஆச்சு”, என்றான்.
அவளோ தன்னை சரி செய்து கொண்டு “அடேய் கேடி போலீஸ், நீ சரியில்ல மேன், இடத்தை காலி பண்ணுங்க, உங்க சாப்பாடெல்லாம் எடுத்துட்டு நீங்க வீட்டுக்கு போங்க”, என்று சொன்னாள்.
“ஏய் நான் சும்மா தான் சொன்னேன்” என்று சிரித்துக் கொண்டே சொன்னான்.
இவளோ “சீரியஸ்லி இப்படிலாம் பேசாதீங்க”, என்று சொன்னாள்.
“ஓய் நீ தப்பா அர்த்தம் புரிஞ்சா எப்படி” என்று சிரிப்புடன் சொன்னவன்,
“நாளைக்கு ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம், உனக்கு ஓகேவா, உனக்கு ஓகேனா”என்று அவளை பார்த்து கண் சிம்ட்டியவன் “நான் சொன்னது இந்த அர்த்தம் தான்”, என்றான்.
அவள் அமைதியாக அவனையே பார்த்துக் கொண்டிருக்கவும்,
“நான் எங்க வீட்ல ஓபன் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டேன், நாளைக்கு ஈவினிங் வீட்ல சொல்லிடுவேன்” என்று சொன்னான்.
“சொல்ல போறீங்களா, ஐயோ நாளானைக்கு காலையில உங்க அம்மா என்னை பார்க்கும் போது கொலவெறியோட பார்ப்பாங்க”, என்று சொன்னாள்.
“யாருன்னு சொல்ல போறது இல்ல, பட் நான் லவ் பண்றேன், ஆறு வருஷமா லவ் பண்றேன், அந்த பொண்ண தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு, சொல்ல போறேன்”, என்று சொன்னான்.
“வீட்டில் சம்மதிப்பாங்களா”
என்று கேட்டாள்.
“கண்டிப்பா சம்மதிப்பாங்க, அவங்களா கேக்கணும், அவங்க யாரு பொண்ணுன்னு கேட்கும் போது, நான் உன்னை கை காட்டுறேன், அதுக்குள்ள நீயும் வீட்ல மெதுவா பேசி வைச்சிரு”, என்று சொன்னான்.
“இன்னைக்கு ராதா டவுட் பண்ணி கேட்டா, நான் உனக்கு சொல்றேன்னு சொல்லி இருக்கேன், வேற ஒன்னும் சொல்லல”, என்று சொன்னாள்.
“சரி அடுத்த வாரம் ரெண்டு பேரும் பைக் ரைட் போறோம்” என்று சொன்னான்.
இவள் அவனை பார்த்து விட்டு “நிஜமாவா” என்று கேட்டாள்.
“ஆமா இப்பவே உங்க வீட்ல சொல்லி வை, ஏதாவது ஒரு காரணம் சொல்லு ஃபிரண்ட் வீட்டுக்கு போறேன்னு சொல்லிரு, அல்லது பிரண்டு ஊரிலிருந்து வந்திருக்கா அவளை பார்க்க போறேன், ஒருநாள் ஃபுல்லா அவ கூட டைம் ஸ்பென்ட் பண்ண போறேன், அப்படிங்கற மாதிரி சொல்லிட்டு கிளம்பிடு, போயிடலாம்”, என்று சொன்னான்.
இவளோ அவனையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்க,
“சீரியஸாக சொல்றேன் மா, சீக்கிரம் போயிட்டு வரணும்”, என்று சொன்னான்.
இவளோ அவனை பார்த்து, “நீங்க கேடி பையனாவே மாறிக்கிட்டு இருக்கீங்க, எனக்கு ப்ராமிஸ் பண்ணி குடுங்க, என்னை வெளியே கூட்டிட்டு போகும் போது குட் பாயா இருப்பேன் ன்னு ப்ராமிஸ் பண்ணி குடுங்க”, என்று கேட்டாள்.,
“ஏய் என்ன” என்று அவனும் சிரித்த படி கேட்டான்.
“சீரியஸ் ஆ நீங்க இப்ப எல்லாம் ரொம்ப பேட் பாய் ஆயிட்டே இருக்கீங்க”, என்றவள்.
“இதெல்லாம் கம்பேர் பண்ணும் போது யூனிஃபாம்ல நீங்க குட் பாய் அப்டின்னு சொல்லலாம் போல இருக்கு”, என்று சொன்னாள்.
அவனும் சிரித்துக் கொண்டே, “நான் ரொம்ப ரொம்ப குட்பாயா இருப்பேன், உன்னை வெளியே கூட்டிட்டு போகும் போது, சரியா”, என்று கேட்டான்.
இவளும் “நம்பி வர்றேன்” என்று சொன்னாள்.
இருவரும் சிரித்துக் கொண்டே அடுத்த வாரம் எந்த நாள் கிளம்பலாம் என்பதை பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.
முதல் நாள் போலவே இன்றும் கிட்டத்தட்ட 12 மணி வரை அரட்டை அடித்து, பாட்டு கேட்டு என்று இருவரும் அவர்களுக்கு கிடைத்த நேரத்தை கை கோர்த்த படியே தரையில் கால் நீட்டி அமர்ந்திருந்தனர்.
அதன் பிறகு அவளை பேசியே வெட்கப் பட வைத்து விட்டே விடைபெற்றான்,
அப்போதும் அவளை தன்னோடு சேர்த்து பிடித்தவன், முதல் நாள் போலவே அவளை அணைத்து அவள் தலையில் கன்னம் சாய்த்து நின்றான்,
பின்பு அவளை நிமிர்த்தி அவள் நெற்றியில் முத்தமிட்டவன், சீக்கிரம், சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கிறோம், ரொம்ப நாள் எல்லாம் தள்ளிப் போடக்கூடாது,
“அப்புறம் வீட்ல யாருன்னு சொல்லுறதுக்கு முன்னாடி வீட்ல இப்படி ஒரு லவ் இருக்கு, அப்படிங்கிறதை மட்டும் லைட்டா சொல்லி வச்சு ஹன்ட் கொடுத்துடலாம் சரியா”, என்று சொன்னான்.
இவளோ “நானே ராதா கிட்ட சொல்லிறவா, எப்படி சொல்ல”, என்று கேட்டாள்.
“நீ பைக் ரைட் போய்ட்டு வந்ததுக்கு அப்புறம் சொல்லு, இப்ப சொல்லாத, இப்ப சொன்னா, ராதா கண்டிப்பா உன்ன வெளியே விடாது”, என்று சொன்னான்.
சரி என்று சொல்லி தலையாட்டிக் கொண்டவளை பார்க்கும் போது மீண்டும் அவனுக்குள் எண்ணங்கள் வேறாக தோன்ற, அவசரமாக அவள் நெற்றியில் முத்தமிட்டவன், “பய் இனி அடுத்து எப்ப டைம் கிடைக்கோ அப்போ இதே மாதிரி ஒரு மீட் பண்ணலாம்”, என்று சொல்லி விட்டு அந்தப் பக்கமாக சென்று கதவை பூட்டினான்.
மறுநாள் எப்போதும் போல கழிந்தது, ஆனால் முகத்தில் யோசனையோடு வலம் வந்தவளை கண்ட ராதா தான் “ஏன்டி நேத்திக்கு அவ்வளவு ஹேப்பியா இருந்த, இன்னைக்கு ஏதோ யோசித்துக்கொண்டே சுத்துற”, என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே,
நந்தன் தான் “கண்ணு வச்சல்ல நேத்தே” என்று சொன்னான்.
“உங்க தங்கச்சிய, நாங்க தான் கண்ணு வைக்கிறோம், போவீங்களா, நேத்து ஹாப்பியா இருந்தா, இன்னைக்கு யோசனையோடு இருக்காளே ன்னு யோசிச்சேன்”, என்று சொன்னாள்.
இவளோ “அதெல்லாம் ஒரு யோசனையும் இல்லை, என் கூட காலேஜ்ல படிச்ச பிரண்டு நெக்ஸ்ட் வீக் இங்க வாரா, அவளுக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு, காலையில அவள போய் ஸ்டேஷன்ல பிக்கப் பண்றதுல இருந்து, அவ கூட சுத்த வேண்டியது இருக்கு, இங்க பிஜில ஒரு ரூம் ஃபிரண்ட் இருக்கா, அவ கூட வீட்டுக்கு வரியா ன்னு கேட்டேன், இல்ல அவளை பார்த்துட்டு அங்கேயே குளிச்சிட்டு அப்படியே கிளம்பலாம், எனக்கு ஒரு முக்கியமான வேலை என் கூட வா ன்னு கூப்பிட்டா, அது தான் அவள் கூட போயிட்டு வரலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன், ஒரு நாள் லீவு போடணும், எங்க டீம் லீட் தான் லீவு தாராரோ, என்னவோ”, என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே
நந்தன் எப்போதும் போல அவள் தலையில் தட்டியவன், “போய் தொல” என்றான்.
ராதா தான் “எந்த ப்ரண்ட், எங்க படிச்சா, எப்போ பழக்கம், எந்த ஊரு”, என்பதை பற்றி கேட்டுக் கொண்டிருந்தாள்.
இவளும் கல்லூரி கால நட்பை சொல்லி, கல்லூரியில் ஹாஸ்டலில் இருந்த தோழி ஒருத்தியின் பெயரை சொன்னவள், இப்போது வேலை விஷயமாக சென்னை வருவதாக சொல்லிக் கொண்டிருந்தாள்,
அதை அப்படியே ஏற்ற ராதாவும் “சரி பத்திரமாக போயிட்டு வந்துடுவ இல்ல, இல்லனா நான் கூட வரவா”, என்று கேட்டாள்.