12

ராதாவை பார்த்துவிட்டு கையை காட்டியவள், அவள் அருகே வந்து நின்றாள்.

“என்ன ராது மேடம் இன்னைக்கு சீக்கிரம் வந்துட்டீங்க போல”, என்று கேட்டாள்.

ராதாவோ “நான் சீக்கிரம் வரல, நீ தான் லேட்டா வந்திருக்க”, என்று சொன்னாள்.

“ம்ஹும் லேட் ஆயிடுச்சா” என்று சொல்லும் போதே ராதா தான் இவள் முகத்தை குறுகுறுவென பார்த்தபடி, “நீ இன்னைக்கு ஒரு வித்தியாசமா இருக்கியே, என்ன விஷயம்” என்று கேட்டாள்.

“வித்தியாசமா இருக்கேனா”, என்று பதில் கேள்வி கேட்டாள்.

“இன்னைக்கு ரொம்ப வித்தியாசமா இருக்க”, என்று சொன்னாள்.

“நைட் சரியா தூங்கல அதுதான்”,என்று சொன்னாள்,

அவளும் “நைட் தூங்கல னா இப்படி இருக்குமா” என்று கேட்டாள்.

அவளோ “இருக்கும், இருக்கும்” என்றாள்.

“இருக்குமா, ஓஹோ, அப்ப என்ன விஷயம் ன்னு தெரிஞ்சுக்கணுமே” என்று அவளை கூர்ந்து பார்க்க,

இவளோ “பேபி முமென்ட்ஸ் எப்படி இருக்கு”, என்று கேட்ட படி அவள் வயிற்றில் கையை வைத்து கேட்டாள்.

அவளோ “அதெல்லாம் உன்ன மாதிரியே தான் இருக்கு, துறுதுறு ன்னு”, என்று சொன்னாள்.

அவர்கள் கேப் வரவும் ஏறி கிளம்பினர்.

எப்போதும் போல பகலில் இரண்டு போன் செய்தவன், மதிய உணவுக்கு பிறகு அவளுக்கு அழைத்து ஈவினிங் விரைவில் வந்து விடுவதாக சொல்லி இருந்தான், “நீ எதுவும் செய்ய வேண்டாம், இன்னைக்கு ஃபுட் நான் ஆர்டர் பண்ண போறேன்”, என்று சொன்னான்.

இவளோ “ஏன் என் சாப்பாடு அவ்வளவு மோசமாவா இருக்கு”, என்று கேட்டாள்.

அவனும் “சாப்பாடு மோசம் இல்லை, இந்த மாதிரி தினம் சாப்பிட்டேனா உடம்பு ஏறிடும், அப்புறம் நான் ஜிம்முக்கு எல்லாம் போயி, வாக்கிங் எல்லாம் போயி, அப்படின்னு உடம்பு குறைக்க ரொம்ப கஷ்டப்படணும், அதனால லைட் பூட் தான்”, என்று சொன்னான்.

இவளோ “நீங்க நார்மலா தான் இருக்கீங்க, அப்படி ஒன்னும் நிறைய சாப்பிட்ட மாதிரியும் தெரியலையே”, என்று சொன்னாள்.

அவனும் “அது அப்படித்தான், அதிகமா சாப்பிட முடியாது, சாப்பிட்டா உடம்பு ஏறிடும், உடம்பு குறைக்க கஷ்டப்படணும், அது எதுக்கு அதனால டயட் கரெக்டா மெயின்டெயின் பண்ணனும்னா, கரெக்டா இருக்கும், ஆனால் சத்தானது தான் சாப்பிடணும் அவ்வளவு தான்”, என்றான்.

“நீங்க சீக்கிரம் வரலைனா” என்று கேட்டாள்.

அவனும் “கண்டிப்பா வந்துருவேன், இன்னைக்கு ஒரு நாளைக்கு தான் நமக்கு சான்ஸ் கிடைச்சிருக்கு திருப்பி கிடைக்காது, எங்க அக்கா நாளைக்கு காலைல அப்பா அம்மாவை பஸ் ஏத்தி விட்டுருவா, அவங்க மத்தியானம் வந்து சேர்ந்திடுவாங்க, சோ நாளைக்கு நைட்டு பேச முடியாது, போன் கால் தான்”, என்றான்.

சிரித்துக் கொண்டே “சரி நீங்க இன்னைக்கு நைட்டு ஆர்டர் பண்ணிடுவீங்க, நாளைக்கு காலைல” என்று கேட்டாள்.

“உன் கை சாப்பாடு தான், சாப்பிட்டு தான் கிளம்புவேன்”, என்று சொன்னான்.

சிரித்துக் கொண்டே “வந்து சேருங்க” என்று சொல்லி விட்டு போனை வைக்கும் போதே ராதா இவளை நோக்கி வருவது தெரிந்தது.

‘வந்துட்டயா வந்துட்டயா, அங்கிருந்தே மோப்பம் பிடித்து வராயா’ என்று யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு,

அவள் அருகில் வரவும், “என்ன மேடம் வாங்க உட்காருங்க, அங்கேயும், இங்கேயும் நடக்குறீங்களே, என்ன விஷயம் காலையில வாக்கிங் போகலையா”, என்று கேட்டாள்.

அவளோ இவளை பார்த்த படியே “ஆமா யார்கிட்ட போன்ல வளவளன்னு பேசிகிட்டு இருக்க, அப்பவே இருந்து நானும் உன்னைய பார்த்துட்டே இருக்கேன், உன் முகம் நிறைந்த சிரிப்பா இருக்கு, பேசிக்கிட்டே இருக்க”, என்று கேட்டாள்.

இவளோ அவளைப் பார்த்து கண்ணடித்து, “சஸ்பென்ஸ்” என்றாள்.

“அடிப்பாவி, எங்கிருந்து கால், ஜெர்மன் காலா”, என்றாள்.

“இருக்கலாம்”, என்றாள்.

அவளோ “அடிப்பாவி நெஜமாவே ஜெர்மன் ல ஆள் பார்த்து வச்சிட்டு வந்துட்டியா”, என்று கேட்டாள்.

“சீ லூசு பார்க்கல”, என்று சொன்னாள்.

“அப்ப இங்கே யா”, என்றாள்.

“நீ ஏன் இவ்வளவு அவசரப்படுத்துற, நானே அவசரப்படல, நீ எதுக்கு அவசரபடுற”, என்று சொன்னாள்.

“இல்ல, எனக்கு என்னவோ உன்கிட்ட ஒரு வித்தியாசம் தெரியுது, நீ போன் அடிக்கடி நோன்டுற, எப்ப பார்த்தாலும் அடிக்கடி போன் பேசுற” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவளுக்கு மெசேஜ் வந்து கொண்டிருந்தது.

இவளோ ” மறுபடி மெசேஜ் பண்ண ஆரம்பிச்சிடுவானே” என்று நினைத்துக் கொண்டே

“உன் புருஷன் என்ன செய்தான்னு போய் பாத்துட்டு வா”, என்றாள்.

“ஓஹோ, நான் கேட்கும் போதெல்லாம் இப்படியே டைவர்ட் பண்ணி விடுற இல்ல, நானே இதை கண்டுபிடிக்கிறேன்”, என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

“கண்டுபிடி, அவனை கண்டுபிடி”,என்று சொன்னாள்.

இவளோ நந்தன் அருகில் போய் அமர்ந்து விட்டு கொஞ்சம் தண்ணீரை எடுத்து அருந்தி விட்டு அவனை பார்க்க, “என்ன” என்று கேட்டான்.

இவளோ “இல்ல, எனக்கு உங்க தங்கச்சியை பார்க்க கொஞ்சம் சந்தேகமாகவே இருக்கு”, என்று சொன்னாள்.

“என்ன சந்தேகம்” என்றான்.

“இல்ல இப்பல்லாம் எப்பவும் போனோடு தான் இருக்கா, ரொம்ப சந்தோஷமா இருக்கிற மாதிரி ஃபீல் ஆகுது, முகத்தை பாருங்க எப்பவும் ஒரு சிரிப்பு இருந்துட்டே இருக்கு, இல்ல னா போனை பார்த்து சிரிச்சிட்டு இருக்கா, என்னன்னு தெரியணும்”, என்று இவள் சொல்லவும்.,

அவன் பார்க்கும் போதும் இவள் போனை பார்த்து சிரித்துக் கொண்டு தான் இருந்தார்.

“அதுக்கு என்ன இப்போ” என்று அவன் கேட்கும் போது,

“ஒருவேளை லவ் எதுவும்” என்று சொன்னாள்.

அவன் ராதாவை திரும்பி பார்த்து விட்டு, மீண்டும் யாழினி பார்க்க அவளோ போனை வைத்து விட்டு கம்ப்யூட்டரில் ஆழ்ந்திருந்தாள்.

இவனோ “இருக்காது வாய்ப்பில்லை” என்றான்.

“எனக்கு என்னவோ சந்தேகமா இருக்கு”, என்று மீண்டும் சொன்னவள், “கூடிய சீக்கிரம் கண்டுபிடிக்கிறேன், உங்க தங்கச்சி என் கிட்ட எதுவோ மறைக்கிறா, கண்டுபிடிச்சு காட்டுறேன்”, என்று சொன்னாள்.

அவனும் “அவ மறைக்கணும்னு நினைச்சானா, யாராலும் கண்டுபிடிக்க முடியாது, அது தெரியுமா”, என்று சொன்னான்.

“எப்படி சொல்றீங்க”, என்று கேட்டாள்.

“அவ ஸ்கூல் லைஃப்ல நிறைய வம்பு பண்ணுவா., பண்ணிட்டு ஒண்ணுமே செய்ய தெரியாத மாதிரி உட்கார்ந்துக்குவா, யாருன்னு யாராலையும் கண்டுபிடிக்க முடியாது, அவளா வந்து ஆமா நான் தான் இதை பண்ணுனேன்னு, சொன்னா மட்டும் தெரியும், இல்லன்னா யாராலும் கண்டுபிடிக்க முடியாது”, என்று சொன்னான்.

“ஓஹோ அப்ப இன்னும் கூர்மையா பாக்கணும், உங்க தங்கச்சிய”, என்றாள்.

“நீ என் தங்கச்சிய அப்புறமா பார்க்கலாம், முதல்ல வேலைய பாரு”, என்று சொன்னான்.

“ஏன் உங்க தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி வைக்கிற ஐடியாவே இல்லையா, கண்டுபிடிச்சா அட்லீஸ்ட் சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைக்கலாம் இல்ல”, என்று சொன்னாள்.

அவனும் “அப்படின்னா அவளே வந்து சொல்லுவா., சொல்லாமல் இருக்க மாட்டா”, என்றான்.

“பார்ரா, என்ன புரிதல்”, என்று சொல்லிவிட்டு எழுந்து மெதுவாக அவளிடத்திற்கு சென்றாள்.

அன்று மாலை வீட்டிற்கு சென்று அவள் எப்போதும் போல மற்ற வேலைகளை முடித்து வைக்க, நந்தனும் ராதாவும் வந்துவிட்டே சென்றனர்.

அவர்கள் வந்த உடனே இவள் பரிதிக்கு மெசேஜ் மட்டும் போட்டு போனை தூர வைத்து விட்டாள், சற்று நேரம் அவர்கள் இருந்து விட்டு கிளம்பும் போது தான் இவள் அவர்கள் கிளம்பியாச்சு என்று மெசேஜ் செய்தாள்.

அவர்கள் சென்ற அரை மணி நேரத்திற்குள்ளாக இவன் வந்துவிட்டான்.

இவன் ஆர்டர் செய்த உணவுகளும் வர, அவன் வீட்டின் வழியாகவே வாங்கிக் கொண்டு இவள் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.

பின்பு இருவரும் பேசியபடி சாப்பிட துவங்கும் போது, “ஆமா ஏன் ராதா வயிறுல கைய வச்சு பார்த்துட்டு இருந்த”,என்று கேட்டான்.

“நீங்க எப்ப பார்த்தீங்க, எனக்கு முன்னாடியே நீங்க கிளம்பிட்டீங்க இல்ல”, என்று கேட்டாள்.

அவனும் “இல்ல முன்பே கிளம்பினேன் தான், அந்த பக்கம் வந்து ஒரு சின்ன வேலை இருந்துச்சு, அதை முடிக்கலாம் ன்னு யூ டன் போட்டு திரும்பி வரும் போது பார்த்தேன்”, என்றான்.

“பேபி மூமென்ட்ஸ் பத்தி கேட்டுகிட்டு இருந்தேன்”, என்று சொன்னாள்.

“பேபி மூமென்ட்ஸ் எல்லாம் நீ பாக்குறியா, உனக்கு தெரியுதா”,என்று இவன் கேட்டான்.