“ஹலோ கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு ஏமாத்துனீங்கன்னு வைங்களேன், அப்புறம் நடக்கிறதே வேற ஒழுங்கா கூட்டிட்டு போங்க”, என்றாள்.

      “நான் கூட்டிட்டு போறேன், ஆனா நான் சொல்ற மாதிரி என் கூட வருவியா”, என்று கேட்டான்.

    அதன் பிறகு அவன் சில விஷயங்களை பேசிக் கொண்டே இருக்க,  அவனை தன்னில் இருந்து தள்ளி வைத்து பார்த்தவள்,  அந்த லேசான வெளிச்சத்திலும் அவனை பார்த்தவள்,

   “ஐயோ உண்மையிலேயே நீங்க இந்த டீன் ஏஜ் பசங்க சொல்லுவாங்க தெரியுமா,  இப்படி அப்படி எல்லாம் அந்த மாதிரியே பேசுறீங்க தெரியுமா”, என்று சொன்னாள்.

       இவனும்  “உன்னை மறக்கணும்னு ட்ரை பண்ணி மறக்க முடியாமல் ஆனதுக்கு அப்புறம் நான் ஒழுங்காக உன்கிட்ட ப்ரொபோஸ் பண்ணி இருந்தா, இப்படி எல்லாம் இருந்திருப்பேன்ல அப்படின்னு,  அடிக்கடி நினைச்சு பார்த்த விஷயங்கள் இதெல்லாம்,  சோ எனக்கு அதெல்லாம் இப்ப நிறைவேறணும்”, என்று சொன்னான்.

சிரித்துக் கொண்டே “வந்து தொலைக்கிறேன்”, என்றாள்.

    “அப்படி ஒன்னும் நீ சலிச்சுகிட்டு வர வேண்டாம்” என்றான்.

   “அப்ப கல்யாணத்துக்கு அப்புறம் போய்க்குவோமா” என்று இவள் கேட்டான்.

    “நோ நோ கல்யாணத்துக்கு முன்னாடியே போகணும்” என்று சொன்னான்.

     அவனின் ஆசைகளை நினைத்து சிரித்தவளுக்கும் முகத்தில் தோன்றிய வெட்கம் அந்த இருட்டில் அவனுக்கு சரியாக தெரியவில்லை.

  ஆனால் அவள் பேச்சு தயங்கி தயங்கி வருவதை கண்டு அதை உணர்ந்தவன்,

     “ரொம்ப எல்லாம் வெட்கப்படாதே, வெட்கப்படுவதற்கெல்லாம் இங்க ஒண்ணுமே கிடையாது, ஆப்டர் மேரேஜ் நானா அது நீ,  நீனா அது நான், அவ்வளவு தான் ஒரே வார்த்தையில் இதுதான்,

    நமக்குள்ள எந்த ஒளிவு மறைவும் கிடையாது நான் என்னோட ஆசைகள், என்னோட எண்ணங்களை சொல்ற மாதிரி,  நீயும் சொல்லு, கடவுள்  எல்லாரையும் ஒன்றும் போல தான் படைச்சிருக்கான்,  எல்லாருக்குமே ஆசைகள் இருக்கும்,  என்ன வேணும் நாம எப்படி இருக்கணும் அப்படிங்கிற ஒரு ஃபீல், எல்லாமே இருக்கும்,

     ஆனா இங்க நிறைய பேர் அதை வெளியே சொல்றதில்ல,  அதுதான் பிரச்சனையே, வெளியே சொல்வது மீன்ஸ் அடுத்தவங்க கிட்ட போய் சொல்ல கூடாது,  அவங்க அவங்க வாழ்க்கை துணையிட்ட சொல்லிக்கிட்டா பிரச்சினையே கிடையாது.

  ஆனால் ஒருத்தருக்கு ஒருத்தர் மனசு விட்டு பேசிக்காம,  தன்னுடைய ஆசைகள் எண்ணங்களை சொல்லிக்காம, இருக்க போய் தான் இங்க இவ்வளவு பிரச்சனை, நமக்குள்ள அது வரக்கூடாது”, என்று சொன்னவன்,

   மீண்டும் அவளை தன்னோடு சேர்த்து அணைக்க முயற்சி செய்ய,

    “நீங்க என்ன எப்ப பார்த்தாலும் இப்படியே பிடிக்கிறீங்க”, என்று அவனை தள்ளிக் கொண்டு நகர பார்த்தவளை இழுத்து சேர்த்து அணைத்துக் கொண்டவன்.,

“அம்மா தாயே அட்லீஸ்ட் இப்படி பிடிக்க மட்டும் பெர்மிஷன் கொடு” என்று சொல்லவும்,

    ” குடுத்துட்டேனா, நீங்க என்ன பண்ணுவீங்கன்னு எனக்கு தெரியும், தள்ளிப் போங்க” என்று சொன்னாள்.

     “வேற ஒன்னும் பண்ண மாட்டேன், பயப்படாத”, என்று சொன்னான்.

   அவன் சில விஷயங்களை பேச,  இவளோ அவனை கையில் கிள்ளி வைக்க தொடங்கியிருந்தாள்.

   “அப்பாடி பேச்ச பாரு, என்ன பேச்சு” என்றாள்.

    அவனும் இப்ப தானே சொன்னேன்,  உன்கிட்ட மட்டும் தான் என்னால இதெல்லாம் பேச முடியும்,  மத்தவங்க ட்ட போய் இதெல்லாம் பேச முடியுமா நானு”, என்று சொன்னான்.

     “ஓஹோ வெளியே போய் பேசுற ஐடியா வேற இருக்கா  உங்களுக்கு”, என்று கேட்டாள்.

சிரித்துக் கொண்டே “நீ தானே  நான் பேசுறத பார்த்து கிண்டல் பண்ணின”,என்றவன்.

    “என் செல்லுல கொஞ்சம்  சாங்ஸ் வச்சிருக்கேன் கேட்கலாமா, ரெண்டு பேரும்” என்று சொன்னவன்.

     இருவரும் ஆளுக்கு ஒரு ஹியர்பார்ட்டை மாட்டிக் கொண்டு பாடல் கேட்க தொடங்கினர்,

   முதலில் இரண்டு பாடல்கள் கூட ஓரளவு ஓகே என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டவள், அதற்குப் பிறகு வந்த பாடல்களைப் பார்த்து “அய்யய்யோ நீங்க நிச்சயமா எஸ் பி யே கிடையாது, மிட் நைட் மசாலா சாங்ஸ் வச்சிருக்கீங்க”, என்று சொன்னாள்.

அவனும் “ஓய் இது ஸ்பாட்டிபைவ் ல உன்னோட இசை என்கிற பேர்ல தான் பதிஞ்சு வச்சிருக்கேன்” என்று சொன்னவன். “இசை ன்ற பேரில் மெயில் ஐடி கூட வைச்சிருக்கேன்”, என்றான்.

அவனை திரும்பி பார்த்தவள், “ஐயோ சாமி நீங்க என்ன என்ன கோல்மால் எல்லாம் பண்ணி வச்சிருக்கீங்க” என்றாள்.

“பின்ன இந்த பாட்டு எல்லாம் நான் கேட்கிறேன் எல்லாருக்கும் தெரியிற மாதிரியா வைக்க முடியும், மனுஷனுக்கு அந்தந்த வயசுக்குரிய ஃபீலிங்ஸ் எல்லாம் அந்தந்த வயசுல வரணும், அப்பதான் நார்மலா இருக்கிறோம் ன்னு அர்த்தம், என்றவன், “நீ இதுக்கு எல்லாம் வெட்கப்பட்டா அப்புறம் எப்படி” என்று கேட்டான்.

இவளோ மீண்டும் குரல்வாட “நாளைக்கு உங்க அம்மா போயிட்டு வந்ததுக்கப்புறம் இதை எல்லாம் சொல்லுங்க”, என்றாள்.

“நாளைக்கு அவங்க போகவே மாட்டாங்க, ஓகேவா, நான் போகவும் விடமாட்டேன் சரியா”, என்று சொல்லி அவளோடு பாடல் கேட்க தொடங்கினான்,

சற்று நேரத்தில் அவள் தலை தன் தோளில் சாயும் போதே, இன்னும் இறுக்கமாக அணைத்தவன், அவள் தலை மீது தன் கன்னத்தை வைத்து சாய்ந்திருந்தான், சற்று நேரத்தில் அவளுடைய மூச்சுக்காற்று சீராக இருப்பதை கண்டவன்,

“இந்த பாட்டுக்கு தூங்கிட்டா, மெலோடி பாட்டு போட்டு இருந்தா, இதுக்கு முன்னாடியே தூங்கி இருப்பா போலையே”, என்று நினைத்தான்,

பின்பு அவனே நினைத்துக் கொண்டான், ‘மனதில் எவ்வளவு நேரம் இதையெல்லாம், யோசித்து அழுத்தமாக உணர்ந்தாளோ, இப்போது நம்மிடம் பேசவும் எல்லாம் குறைந்தது போன்ற எண்ணம் வந்திருக்கும், அதுதான் தூக்கம் வந்துவிட்டது போல’ என்று நினைத்தவன்,

அவள் தலையிலேயே கன்னத்தை சாய்த்து இருக்க, சற்று நேரத்தில் அடுத்த பாட்டில் விழிப்பு வந்தவள் அவனிடமிருந்து நகர்ந்து தள்ளி அமரும் போது, “ஏன் என்ன ஆச்சு”,என்றான்.

“இல்ல தூக்கம் வருது, நீங்களும் போய் தூங்குங்க”, என்று சொல்லி விட்டு ஹியர்பார்ட் எடுத்து வைத்தாள்.,

அவனும் எடுத்து விட்டு “சரி சொல்லு, அதுக்குள்ள தூங்கனுமா”, என்று கேட்டான்.

“ஹலோ மணி 12 ஆக போகுது, நம்ம ரெண்டு பேரும் சாப்பிட்டு, கதை பேசி பாட்டு கேட்டுன்னு, இப்போ டைம் 12 ஆக போகுது, போங்க போய் தூங்குங்க”, என்றாள்.

சரி என்று எழுந்தவன் நைட் லேம் வெளிச்சத்திலேயே பால்கனி கதவு வரை வந்தான், அவளும் அவனோடு பின் வர,

வேகமாக திரும்பியவன் அவளை இறுக்கமாக அனைத்து தன்னோடு சேர்த்து கொண்டவன், பின்பு அவள் காதருகே வந்து “காலையில சாப்பாடும் வேணும், சாப்பாடு செய்யாம விட்றாத” என்று சொல்லி விட்டு “நாளை காலைல சொல்றேன், எதுக்கும் மத்தியான சாப்பாடு சேர்த்து செஞ்சு வை, ஒருவேளை வீட்டுக்கு வந்தேன்னா, இந்த வழியா வந்து, இந்த பால்கனி கதவை திறந்து உன் வீட்டுக்குள் வந்து சாப்பிட்டு போயிறேன்”, என்று சொன்னாள்,

சிரித்தவள், “அதுக்குள்ள உங்க அம்மா அப்பா வந்திடுவாங்க”, என்று சொன்னாள்.

“இல்லை, அக்கா கிட்ட சொல்லிடுவேன், வந்ததே வந்துட்டாங்க கூட ஒரு நாள் அவங்க உன் கூடயே இருக்கட்டும் ன்னு, சொல்லியிருவேன்” என்று சொன்னாள்.

“ஏன்” என்று கேட்டாள்.

“நாளைக்கும் இதே மாதிரி என் கூட” என்றான்.

இவளோ சிரித்தபடி, அவன் முகம் பார்க்க, அவள் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டவன், “நானே வாயை கொடுத்து மாட்டிக்கிட்டேன் போலயே., நெற்றியை தவிர வேற எங்கேயும் பண்ண முடியலையே”, என்று சொல்லிவிட்டு மீண்டும் ஒரு முத்தத்தை வைத்தவன்,

“நீ எப்ப கொடுப்ப” என்று கேட்டான்.

“கல்யாணத்துக்கு அப்புறம் கொடுப்பேன்” என்று சொன்னவள், அவனை தள்ளி நிறுத்தினாள்.

“கிளம்புங்க, அந்த பக்கம் போய் கதவு பூட்டுங்க”, என்று சொன்னாள்.

“கதவு பூட்டனுமா என்ன”, என்றான்.

“ஹலோ பூட்ட மறந்துட்டீங்கனா, மாட்டிப்பீங்க”, என்று சொன்னாள்.

“அதுவும் சரிதான்” என்று சொல்லி பூட்டி விட்டு, அவன் வீட்டிற்குள் சென்றான்.

அவளும் தன் வீட்டிற்குள் வந்து கதவை எல்லாம் பூட்டிவிட்டு அறைக்குள் படுத்தவளுக்கு, அன்று படுத்த உடனே நிம்மதியான தூக்கம் தழுவியது.

மறுநாள் அவன் சொன்னது போலவே, இவள் முன்பு வைத்தே அவன் அக்காவிற்கு ஃபோன் செய்து “என்ன விஷயம்”, என்று கேட்டான்.

அவளும் உளறிவிட, இவன் அப்படியே நிறுத்த சொன்னான்,

” என்னுடைய பெர்மிஷன் இல்லாமல் பார்க்க கூடாது, யாரைக் கேட்டு பாக்குறீங்க” என்று சத்தம் போட்டவன், “வந்ததே வந்துட்டாங்க, கூட ஒரு நாள் அவங்க அங்கே இருக்கட்டும், அதற்கு மறுநாள் அனுப்பி வை, அனுப்பி வைக்கும் போது எனக்கு போன் பண்ணு”, என்று சொல்லி விட்டு வைத்தான்,

காலை உணவை இவள் வீட்டிலே உண்டு விட்டு, “மதிய உணவுக்கு வந்தால் எடுத்து சாப்பிட்டு விடுவேன் இல்லை னா வைச்சிரு, நான் நைட் சாப்பிடுவேன்”, என்று சொல்லிவிட்டே கிளம்பி சென்றான்.

எப்போதும் போல இருவரும் லிப்டில் ஒன்றாக வந்தாலும், அன்று இருவர் முகமும் நிறைவாக இருந்ததை ஒருவரை ஒருவர் உணர்ந்தனர்.

எப்போதும் போல சிரித்தபடி கேப் நிற்கும் இடத்திற்கு வந்தவள், முதல் நாள் நடந்த சம்பவங்களை மனதிற்குள் அசை போட்டுக் கொண்டாள், முகம் இன்னும் நிறைவாக இருந்தது.