அலெக்சா மூலம் கே ஜே ஜேசுதாசின் குரல் உருகி வழிந்து கொண்டிருக்க, அறை முழுவதும் ஒரு அமைதி பரவி இருப்பது போல தோன்றியது யாழினிக்கு.,
இடைப்பட்ட நாட்களில் எதிர்த்த வீட்டு ஆன்ட்டி , பாட்டி என எல்லோரும் நன்றாக பழகுவது போல தான், கதிரவனின் அம்மா அப்பாவும் இவளோடு நன்றாக பழகினர்.
ஆனால் உண்மை தெரியும் போது எப்படி நடந்து கொள்வார்கள் என்று இவளுக்கு யோசனையாக இருந்தது, தன் மனதை ஒருநிலைப்படுத்தவே பாடல்களை ஒலிக்க விட்டாள்.
ஜேசுதாஸின் ஹிட்ஸ் என்று சொல்லி இருக்க, அலெக்சா அவரின் பாடல்களை ஒலிக்க விட்டுக் கொண்டிருந்தது.
அதில் வந்த இப்பாடலை சற்று நேரம் அமைதியோடு கேட்டவள், பெருமூச்சோடு தன் வேலைகளை செய்து கொண்டிருந்தாள்.
அன்றும் எப்போதும் போல அலுவலகம் கிளம்பி வெளியே வரும் போது லிப்டிற்குள் நுழைய, கதிரவனும் லிப்டிற்குள் ஏறினான், லிப்ட் கதவு மூடும் வரை அமைதியாக இருந்தவன், கதவு மூடியவுடன் நெருங்கி நிற்க வந்தான்.
இவளோ அவனை முறைத்து பார்த்தபடி தள்ளி நின்றாள், “இசை நீ இப்படி எல்லாம் பண்ணாத, நான் பாதி நேரம் யூனிஃபார்ம் ல தான் சுத்துவேன், வீட்டில் இருக்கும் போது மட்டும் தான் நார்மல் டிரஸ்,
நீ இப்படி யூனிபார்ம் போட்டா, என்கிட்ட பக்கத்துல வரக்கூடாது, அதுக்குன்னு ஒரு மரியாதை இருக்குன்னு சொல்லிட்டே இருந்தா எப்படி, நான் தள்ளியே தான் நிக்கணும் தெரியுமா”, என்று சொன்னான்.
இவளோ “வீட்ல யூனிஃபார்மா போடுவீங்க”, என்று கேட்டாள்.
“அது இல்ல இசை, ஆனால் கல்யாணம் ஆன பின்பு ஆபிஸ் கிளம்பும் போது இப்படி கிஸ் பண்ண” என்று சொல்லி பக்கத்தில் வரவும் பட்டென்று நகன்றவள்,
“தொலைத்துவிடுவேன், அன்னைக்கு ஏதோ நெற்றியில பண்ணுனீங்க, நானும் டென்ஷன் ல இருந்ததால சரின்னு விட்டேன், அது என்ன எப்ப பார்த்தாலும் பக்கத்தில் வருவது”, என்று கேட்டாள்.
“ஏய் இப்பவும் நெத்தியில தான் கிஸ் பண்ணுவேன்”,என்றான்.
“ஒன்னும் வேண்டாம்”, என்று சொன்னாள்.
அவனும் “நீ என்ன ரொம்ப மிரட்டுற தெரியுமா”, என்றான்.
இவளோ அவனை திரும்பி பார்த்தபடி, திரும்பி கொண்டாள்.
அதற்குள் லிப்ட் கதவு திறந்து விட , “போன் பண்றேன்”, என்று முனங்கி விட்டே சென்றான்.
அவளும் “போயிட்டு இதை வச்சே இன்னைக்கு முழுக்க போன்ல வச்சு செய்யுமே இந்த எஸ் பி ” என்று நினைத்துக் கொண்டே எப்போதும் வரும் இடத்திற்கு சென்றாள்,
அங்கு ராதாவிற்கு நன்றாக வயிறு தெரிய தொடங்கி இருந்தது, புதிய ப்ரக்னன்சி குர்தி போட்டிருந்தாள், அவளிடம் கிண்டலோடு, “பார்ரா புதுசு புதுசா டிரஸ் வருது போல” என்று சொன்னாள்.
அவளோ “அடியே பழைய குர்தி, எதுவுமே பத்த மாட்டேங்குது, நானே ப்ரக்னன்சி டைம் டிரஸா தேடி தேடி வாங்கி போட்டுகிட்டு இருக்கேன், உனக்கு புதுசு புதுசா போடுறேன் ன்னு வருத்தம் வேற”, என்றாள்.
“உனக்கு மட்டும் உன் புருஷன் புதுசு புதுசா டிரஸ் வாங்கி கொடுக்கிறான், இதெல்லாம் ரொம்ப மோசம் தெரியுமா”, என்று சொல்லிக் கொண்டிருந்தாள்,
“ஹலோ மேடம் உனக்கும் அலைன்ஸ் பாக்குறாங்க, நீங்க தான் மேடம் எல்லா அலைன்ஸையும் வேண்டாம் வேண்டாம் ன்னு சொல்லுற”என்றாள்.
“நான் பழைய டிரஸை ஏ போட்டுகிறேன்” என்று சொன்னாள்.
“அது தானே பார்த்தேன், நீ எங்க சம்மதிக்க போற”, என்றாள்.
“எப்போ தோணுதோ அப்போ சம்மதிப்பேன்” என்றாள்.
“எப்போ, இன்னும் எத்தனை வருஷம் கழிச்சு”, என்றாள்.
“சொல்லுறேன் சொல்லுறேன்”, என்று சொல்லிவிட்டு அவளோடு சேர்த்து அரட்டை கொண்டிருந்தாள்.
அவளும் “ஆமா இப்பல்லாம் என்னடி, எப்ப பார்த்தாலும் போன நோண்டிட்டே சுத்துற”, என்று கேட்டாள்.
“நான் போன் நோண்டிட்டே இருக்கேன் ன்னு நீ பார்த்தியா”, என்று சொன்னவள், “இப்ப எல்லாம் புக் படிக்க ஆரம்பித்து இருக்கேன், செல் ல தான் படிக்கேன்”, என்று சொன்னாள்.
“அதே தான் சொன்னேன், அடிக்கடி படிக்காத கூடிய சீக்கிரம் கண்ணாடி போட்டுருவ, பாத்துக்கோ”, என்று சொன்னாள்.
“அதெல்லாம் போட மாட்டேன், என் கண் ஷார்ப்”, என்றாள்,
“இந்த சிஸ்டம் முன்னாடியே இருக்குறதுக்கே நாம என்னைக்கு கண்ணாடி போட போறோம்னு தெரியல, இதுல போனையும் சேர்த்து நோண்டிட்டு இருந்தா சீக்கிரம் கண்ணாடி தான்”, என்றாள்.
“ரொம்பெல்லாம் பார்க்கல, போன்ல எப்பவாவது படிக்கிறேன், மத்தபடி புக் தான் இப்ப எல்லாம் வாங்குறேன் தெரியுமா”, என்று சொல்லிய உடனே,
” நான் பார்க்கவே இல்லை” என்றாள்.
“புக்கை பார்த்தால் சாமி கண்ணை குத்திரும் ன்னு நம்புற ஆள் தானே நீயி” என்று சொல்லிவிட்டு, அவள் முறைக்கவும் வேறு பேச்சுக்கு தாவினாள்.
“அடுத்த மாசத்திலிருந்து மழை காலம் ஆரம்பிக்குமே, உனக்கு எப்ப வளைகாப்பு பண்றது ன்னு பேசி இருக்காங்க” என்றாள்.
“அடுத்த மாசம் தான் வளைகாப்பு முடிஞ்சி உடனே ஊருக்கு போகனும் அப்படின்னு சொல்லி இருக்காங்க, நானும் நந்தனும் இங்க வச்சு வளைகாப்பு அன்ட் டெலிவரி பார்த்துக்கலாம் அப்படின்னு சொல்லிட்டு இருக்கோம், என்ன பண்ண போறாங்கன்னு தெரியல”, என்றாள்.
இவளோ “இங்க வச்சு பாருங்களேன், அப்ப தான் நல்லா இருக்கும், இங்க உள்ள பிரண்ட்ஸ் எல்லாத்தையும் கூப்பிடலாம், அங்க போனா அங்கேயே இருக்கிற மாதிரி இருக்கும், வளைகாப்பு பண்ணிட்டு நீ அப்படியே அங்க அம்மா வீட்டுக்கு போயிடுவ, இதுவே இங்க இருந்து பாருங்க, உங்க அம்மா வ இங்கே வரச்சொல்லிரலாம்”, என்றாள்.
“உங்க அண்ணன் கூட டெலிவரிக்கு அம்மா வீட்டுக்கு அனுப்ப மாட்டேன்னு தான் சொல்லிட்டு இருக்காரு, என்ன பண்ணனும் தெரியல”, என்று சொன்னாள்.
“பார்றா உன் புருஷன் மூளை கொஞ்சம் வேலை பார்க்குது போல, அவன் போ சொன்னா போ, அதுக்கப்புறம் உங்க அம்மா வீட்டுக்கு கிளம்பு”, என்று சொன்னாள்.
“ஓஹோ எதுக்கு திடீர் ன்னு என்னை எங்க அம்மா வீட்டுக்கு விரட்டுத” என்று கேட்டாள்,
உன்னை விரட்டவே இல்லடி அம்மா வீட்டில் இருந்துக்கோ இல்லை இங்கேயே இருந்துக்கோ, உன்ன யாரு விரட்டுதா”, என்று சொன்னாள்.
“இல்லை நீ ஏன் திடீர்னு போ ன்னு னா போ அப்படின்னு சொல்ற, இதுல வேற உங்க அண்ணன் போ ன்னு சொல்லுவாரு அப்படின்னு வேற கான்ஃபிடன்ட்டா சொல்ற, என்ன விஷயம்” என்றாள்.
இவளோ “உனக்கு தெரியாதா”, என்று சொல்லி “ராகேஷ் இருக்காங்க இல்ல அவனுடைய டீம்ல இருக்காளே அந்த ஏஞ்சல், அவ உன் புருஷனை சைட் அடிச்சிட்டு இருக்கா, அவ கூட தான் கடலை போட்டுட்டு இருக்கான் உன் புருஷன், நீ நம்பலனா இன்னைக்கு பாரு அவ வந்து இங்க பேச வருவா, இல்லாட்டி இவன் போய் அங்க பேச போவான், என்ன நடக்குது மட்டும் பாரு”,என்று சொன்னாள்.
“அடிப்பாவி இது தெரிஞ்சுமா, இத்தனை நாள் நீ என்கிட்ட சொல்லல”, என்று சொன்னாள்.
“ஹலோ உன் புருஷனை கண்காணிக்க வேண்டியது உன் வேல, நான் எதுக்கு கண்காணிக்கணும், கூட ஒரு அண்ணி கிடைச்சா ஓகே செய்ய வேண்டியது தான்”, என்றாள்.
“அடிப்பாவி எருமை, செய்வடி,செய்வ” என்று சொன்னாள்.
இவளோ சிரித்துக் கொண்டே, “சும்மா சொன்னேன் டி, ஏஞ்சல் தான் இவன்ட்ட வழிஞ்சிட்டு இருக்கா, அவன் அவளை பார்த்து வழிய மாட்டான்”, என்று சொன்னாள்.
“இரு இன்னைக்கு உங்க அண்ணனுக்கு இருக்கு, என்றாள்.
“பாவம் பொழச்சி போகட்டும் விடு, உன் புருஷன் பாவம் ன்னு தோணலையா உனக்கு”, என்று கேட்டாள்.
“தோணவே இல்ல” என்று அவள் சொல்லவும்,
இனி உன் பாடு, அவன் பாடு எனக்கு என்ன போச்சு”, என்று சொன்னாள்.
“இன்னைக்கு என்ன நடக்கு ன்னு மட்டும் பாரு, ஒரு கச்சேரி இருக்கு”,என்றாள்.
“அப்போ இன்னைக்கு எனக்கு டைம் பாஸ் இருக்கு”, என்று சொல்லவும்,
“திமிரு புடிச்சவளே” என்று சொல்லி அவள் தோளில் தட்டி விட்டாள், சற்று நேரத்தில் அலுவலகம் வந்து இறங்கினர்.