பாடல் – 16

      வீட்டிற்க்கு வந்தவுடன் இனியாவை இறக்கி விட்ட விஷ்வா “எனக்கு வெளிய கொஞ்சம் வேலை இருக்கு அதை முடிச்சிட்டு கொஞ்ச நேரத்துல வரேன், நீ அதுக்குள்ள திங்ஸ் எல்லாம் பேக் பண்ணி கிளம்பி இரு” என்று சொல்ல எப்போதடா அங்கிருந்து செல்வோம் என்ற மன நிலையில் இருந்த இனியாவும் வேகமாக தன் தலையை ஆட்டிவிட்டு உள்ளே சென்று விட்டாள். 

    உள்ளே செல்பவளையே சிறிது நேரம் பார்த்திருந்தவன் மனமோ ‘ எதோ பிரச்சனை இருக்கு என்னனு சொல்ல மாட்டேங்குறா, மொதல்ல அத சரி பண்ணிட்டு அதுக்கு அப்பறம் நம்ம மனசுல இருக்கறத சொல்லலாம் ‘ என்ற எண்ணத்துடன் அங்கிருந்து சென்றான்.

     சிறிது நேரம் கழித்து வெளியே கடைக்கு வந்த இனியா அவர்கள் வீட்டு முக்கை கடந்தவுடன் அவள் முன் வந்து நின்றான் அஜித். 

    அவனை பார்த்ததும் பயந்து வீட்டிற்க்கு செல்ல அவள் திரும்ப, அவள் இவ்வாறு செய்வாள் என்று முன்பே கணித்தவன் அவள் கைகளை பிடித்துவிட்டான். 

    சுற்றி யாரும் இல்லாததால் அவளுக்கு உதவிக்கு யாரையும் அழைக்கவும் வழி இல்லாது போயிற்று.

     அவன் தன் கைகளை பிடித்ததும் “ஒழுக்கமா கைய எடுக்கரையா இல்ல கத்தி எல்லாரையும் கூப்படவா” என்று சொல்லியபடி அவன் கைகளை தட்டிவிட இனியா எடுத்த முயற்சிகள் யாவும் பயணில்லாமல் போனது, சிறிது நேரம் அவள் செய்வதை அமைதியாக பார்த்திருந்த அஜித் “இந்நேரத்துக்கு நீ என்ன கத்தினாலும் இங்க யாரும் வர மாட்டாங்க, அது தெரிஞ்சுதான இப்போ உன்ன பாக்க வந்தேன்” என்றவன் தொடர்ந்து  “நீ என்ன பண்ணாலும் இந்த தடவ உன்ன விட மாட்டேன்” என்று சொல்ல “உனக்கு என்னதான் வேணும் எதுக்காக என்ன இப்படி டார்ச்சர் பண்ற” என்றாள் இனியா, ஒன்றும் செய்ய முடியாத எரிச்சல் கலந்த குரலில். 

      அவள் அவ்வாறு சொல்லியதும் “உனக்கே தெரியும் எனக்கு என்ன வேணும்னு, நா கேக்கரத எனக்கு கொடுத்தா உன்ன விட்ருவேன்” என்று சொன்னவன் கண்களில் அவள் கழுத்தில் இருந்த தாலி தெரிய தன் இன்னொரு கையால் அதை அவன் தொடப்போக அவன் கைகளை தட்டி விட்டாள் இனியா. 

     “அட இது என்ன தாலி, அப்போ உனக்கு கல்யாணம் ஆகிருச்சா? அதுவும் என்ன கூப்புடாம? நம்ம என்ன அப்படியா பழகி இருக்கோம்?” என்று சொன்னபடி தன் தாடையில் கை வைத்து சில வினாடி எதோ யோசித்தவன், அப்போ உன்னோட பக்கத்துல நின்னுட்டு இருந்தது உன் புருஷனா? அச்சச்சோ மொகத்த பாக்கறதுக்குள்ள அவர கூட்டிட்டு போயிட்டியே” என்று அவன் சொல்ல “அது உனக்கு தேவ இல்லாத விஷயம்” என்றாள் இனியா,அவனிடம் இருந்து தப்பிக்க ஒரு வழி யோசித்தவளாய்

      “சரி இப்போ எதுக்கு அவன பத்தி,நா கேட்டது எப்போ தர” என்றவன் வேறு எதோ சொல்ல வர அதற்குள் அவன் பின்னால் பார்த்த இனியா “என்னங்க இங்க பாருங்க” என்று கத்த, அவளின் கத்தலில் ஒரு வினாடி அதிர்ந்து தன் பிடியை அஜித் தளர்த்திய வினாடியில் அவன் கைகளை கடித்துவிட்டு ஓடி விட்டாள்.

     அவள் ஓடிய நேரம் அந்த வழியில் சற்று தூரத்தில் ஒரு பெண் வந்துகொண்டு இருக்க இனியாவை துரத்தி பிடிக்காமல் போனது அஜித்துக்கு. 

    மீண்டும் அவளை தவறவிட்ட எரிச்சலில் அருகில் இருந்த தன் பைக்கை எட்டி உதைத்தவன், பாக்கெட்டில் இருந்து ஒரு சிகரெட்டை பற்ற வைத்து புகைப்பிடிக்க ஆரம்பித்தான். 

     இங்க தன் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்க்கு வந்து கொண்டிருந்த விஷ்வாவின் கண்களில் பட்டான் அஜித். அவர்கள் தெருவோரத்தில் அவன் நின்றிருக்க அவனை பார்த்ததும் இனியா பயந்தது நினைவிற்கு வர, வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு அவனிடம் சென்ற விஷ்வா “நீங்க” என்று இழுக்க “அது தெரிஞ்சு நீ என்னய்யா பண்ண போற” என்றான் அஜித், இனியா தப்பிய எரிச்சலில் அவனை சரியாக கூட பார்க்காமல். 

     “சரி, எனக்கு எது தெரியனுமோ அத கேக்கறேன்” என்றவன் “உனக்கு இனியாவ தெரியுமா?” என்று நேரடியாக கேட்க, இனியா என்ற பெயரை கேட்டதும் அவனை சட்டென்று நிமிர்ந்து பார்த்த அஜித் “நீ யாரு” என்றான் யோசனையாக தன் கைகளில் இருந்த சிகரெட்டை காலில் போட்டு மிதித்தபடி

     ” நா யாரா இருந்தா உனக்கு என்ன, கேட்டதுக்கு பதில் சொல்லு?” என்று விஷ்வா சொல்ல “எனக்கு அவள தெரிஞ்சா உனக்கு என்ன தெரியாட்டி உனக்கு என்ன?” என்றான் அஜித் தன் எரிச்சலை சிறிதும் மறைக்காமல்

     அவனிடம் அவ்வாறு சொல்லிய பிறகே ஒருவேளை இவன் இனியாவின் கணவனாக இருக்குமோ என்ற யோசனை வர அவனை நிமிர்ந்து பார்த்த அஜித் “ஆமா நீங்கதான் இனியாவோட ஹஸ்பண்டா” என்று கேட்க மீண்டும் “அது உனக்கு தேவை இல்லைனு சொல்லிட்டேன்” என்றான் விஷ்வா

     அவன் கூறியது மேலும் எரிச்சலை கூட்டினாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாதா அஜித் ‘ ஏய் இனியா என்னவா  ஏமாத்திட்டு போற இரு டி உனக்கு இருக்கு ‘ என்று நினைத்தபடி தன் எதிரே நின்றவனை பார்த்து ” சார் நீங்கதான அவ ஹஸ்பண்ட்னு நினைக்கரேன், உங்க கிட்ட நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து இத சொல்லலாம்னுதான் இனியா என்ன இங்க வர சொன்னா, ஆனா கடைசி நேரத்துல அவனால  வர முடியல அந்த எரிச்சல்லதான் உங்க கிட்ட அப்படி பேசிட்டேன் மன்னிசிக்கோங்க” என்று சொல்ல விஷ்வாவின் முகத்தில் ஒரு சிறிய குழப்பம் தெரிந்தது. 

     அவன் குழப்பத்தை தனக்கு சாதகமாக உபயோக படுத்திக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தவன் “நாங்க என்ன சொல்ல போறோம்னு தான யோசிச்சிட்டு இருக்கீங்க? நானே சொல்லிடறேன், உங்களுக்கு அது கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும் ஆனாலும் எங்கனால இத இன்னும் எவ்வளோ நாளைக்கு மறைக்க முடியும்னு தெரியல” என்றவன் தொடர்ந்து “நானும் இனியாவும் உயிருக்கு உயிரா காதலிக்கிறோம் சார், அவ காலேஜ் படிக்கும் போதே லவ் பண்ணிட்டு இருந்தோம் ஆனா அவ வீட்டுல இது தெரிஞ்சதும் அவள ஃபோர்ஸ் பண்ணி உங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க, அதுக்கு அப்பறம் நாங்க ரெண்டு பேரும் பேசிக்க கூட இல்ல, ஆனா இன்னைக்கு காலைல எனக்கு கால் பண்ணி என்ன மறக்க முடியலைனு சொல்லி இனியா ஒரே அழுக சார், அதான் என்ன ஆனாலும் சரி உங்க கிட்ட எங்க காதல் விஷயத்த சொல்லி எங்கள சேர்த்து வைக்க சொல்லலாம்னு முடிவு பண்ணிட்டோம்” என்று முகத்தை பாவம் போல வைத்துக்கொண்டு அஜித் தன் வாய்க்கு வந்த கதையை சொல்ல, அவன் சொல்லி முடித்ததும் அவன் கன்னத்தில் சுர் என்று வழி பிடித்தது. ஆம் விஷ்வா அவனை அறைந்திருந்தான். அவன் தன்னை அறைந்ததும் ஒரு வினாடி ஒன்றும் புரியாமல் நின்றவன் மறு நொடி என்னடா என் மேலயே கை வக்கறையா என்றபடி விஷ்வாவை அடிக்க கை ஓங்க அந்த கைகளை பிடித்து பின்னால் திருகினான் மற்றவன். 

   அவன் திருகியதில் வலி தாங்காத அஜித் “என்ன விடு” என்று பல்லை கடித்துக்கொண்டு சொல்ல “உண்மைய சொல்லு உன்ன விடறேன்” என்றான் விஷ்வா. “இப்போதான சொன்னேன்” என்று மற்றவன் சொல்ல “நா கேட்டது உண்மைய, நீ மொதல் வார்த்த சொல்றப்போவே அது பொய்யினு எனக்கு தெரிஞ்சுபோச்சு, சரி அப்படி என்னதான் சொல்ற பக்கலாம்னுதான் அமைதியா இருந்தேன்” என்று அவன் கைகளை மேலும் அழுத்தியபடி விஷ்வா சொல்ல “இதான் உண்மை, அப்படி நம்பாட்டி போய் இனியா கிட்டயே அஜித்னா யாருனு தெரியுமானு கேளு” என்று வலியில் தன் பற்களை கடித்தபடி அஜித் சொல்ல “கேக்க தான் போறேன், ஆனா நீ என்ன பிரச்சனை கொடுத்தைனு கேட்டு அதுக்கு அப்பறம் உன்ன வச்சிக்கரேன்” என்று சொன்ன விஷ்வா அவன் கைகளை விட, விட்டால் போதும் என்ற அஜித் தன் பைக்கை எடுத்துக்கொண்டு அங்கிருந்து பறந்துவிட்டான்.

     “அவன் செல்வதை பார்த்துக்கொண்டு இருந்தவன், சிறிது நேரம் கழித்து வீட்டிற்க்கு செல்ல, அங்கு எங்கேயும் இனியா தென்படவில்லை, அவள் அத்தையிடம் கேட்க “அவ உள்ள பேக் பண்ணிட்டு ரெஸ்ட் எடுக்கறேன்னு சொல்லிட்டு போனா பா” என்ற பதில் கிடைத்தது. 

     “சரிங்க சித்தி, நா பாத்துக்கறேன் என்று சொன்னவன் தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு செல்ல அங்கு ஒருக்களித்து படுத்துக்கொண்டு இருந்தாள் இனியா, படுத்திருந்தவள் கண்களில் கண்ணீர் கோடுகள் தெரிய “இனியும் நீயா சொல்லுவீனு காத்திருந்தா இந்த ஜென்மத்தில பதில் கிடைக்காது” என்று மனதில் எண்ணியபடி, தான் வாங்கி வந்திருந்ததை தன் பாக்கில் பத்திரமாக வைத்துவிட்டு அவளை எழுப்பி கிளம்ப சொன்னான். 

    காலையில் கிளம்ப சொல்லி விஜயா எவ்வளோ சொல்லியும் அந்த அந்தி மாலையில் அவளை கூப்பிட்டு கிளம்பிவிட்டான் விஷ்வா. அங்கிருந்து கிளம்பியவன் நேராக சென்றது ஒரு விடுதிக்கு(ரிசார்ட்) . அவனை குழப்பமாக இனியா நோக்க,  நம்ம கல்யாணத்துக்கு அப்பறம் எங்கேயும் உன்ன கூட்டிட்டு போக முடியலையா அதான் இப்போ கொஞ்சம் டைம் கிடைச்சதும் இங்க வரலாம்னு புக் பண்ணிட்டேன் அதுவும் நாளைக்கு நாள் கொஞ்சம் ஸ்பெஷல் வேற  என்று அவன் சொல்ல, அவளுக்கு இருந்த மனநிலையில் தன் தலையை மட்டும் ஆட்டிவிட்டு வேறு ஒன்றும் அவள் கேட்கவில்லை. 

     அவள் செயல்களை கவனித்துக்கொண்டு இருந்த விஷ்வாவுக்கோ அவள் பிரச்சனை என்னவென்று தெரிந்துகொள்ளும் எண்ணம் இன்னும் ஸ்திரம் பெற்றது.   அதற்கு முக்கிய காரணம் மறுநாள் தன் பிறந்தநாள் என்பது கூட அவளுக்கு நியாபகம் வராதது.