நித்யா தனக்குள் யோசித்து கொண்டு இருக்க, கதவு தட்டும் சத்தம் கேட்டு தன்னிலை அடைந்தாள். பெரு மூச்சுடன் எழுந்து சென்றவள் கதவை திறக்க, அஸ்வின் அங்கு நின்றிருந்தான்.
“ அப்பா உன்னை கூப்பிட சொன்னாரு” என்றவன் வேறு எதுவும் பேசாமல் செல்ல,
அவன் கையை பிடித்து நிறுத்தியவள் “அஷு…. என் மேல கோபமா” என்க,
அவள் கையை எடுத்துவிட்டவன் “நான் யாருங்க உங்க மேல கோபப்பட” என்று கேட்க,
அவனை கண்கள் கலங்க பார்த்தவள் “நீ கூட என்ன புரிஞ்சுக்கலையா அஷு”,
“புரிஞ்சுகிட்டதனாலதான் விலகி இருக்கேன். நீ என்னை உண்மையான பிரண்டா நினைச்சிருந்தா பிரச்சனை என்னன்னு என்கிட்ட சொல்லியிருப்ப. அப்படி இல்லன்னு சொல்லாம சொல்லிட்ட. சொல்லி இருந்தேனா, நான் என்னால ஆனத பார்த்துருப்பேன். இப்படி பிரிஞ்சு இருந்திருக்க வேண்டி இருக்காது” என்க,
“அஷு ப்ளீஸ் இப்படி ஃபார்முலா பேசாத. எனக்கு கஷ்டமா இருக்கு”.
“நான் சாதாரணமா பேசற அளவுக்கு நமக்குள்ள என்னங்க இருக்கு. நல்ல நண்பனா நினைச்சிருந்தா மூச்சு முட்டற விஷயத்தை என்கிட்ட ஷேர்பண்ணியிருப்பீங்க” என்றவன் அவளது அடிபட்ட பார்வையை கருத்தில் கொள்ளாது சென்று விட்டான்.
செல்லும் நண்பனை கவலையாக பார்த்தவள் ‘உன்கிட்ட எதை எப்படி சொல்றதுன்னு எனக்கு தெரியல அஷு. ஆனா கண்டிப்பா இனி எல்லாம் மாறும்” என்று தனக்குள் சொல்லி கொண்டவள் கீழே செல்ல, அங்கு ஹாலில் அனைவரும் அமர்ந்திருந்தனர்.
அவர்களை பார்த்து புருவம் சுருக்கியவள் மீனாவிடம் என்னவென்று கேட்க, அவளும் கண்களாலேயே அங்கிருந்த பத்திரிக்கையை காட்ட, புரிந்தது என்பது போல் தலையை ஆட்டியவள் அமைதியாக நின்று கொண்டாள்.
மருமகள் வந்ததை கவனித்த சீனி “பத்திரிக்கை எல்லாம் வந்துருச்சுமா. நாளைக்கு குலதெய்வம் கோயிலுக்கு போகணும். எல்லாரும் போய் படச்சிட்டு வந்துரலாம். உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே”,
“எனக்கென்ன பிரச்சனை வர போகுது மாமா. போயிட்டு வந்திடலாம்”
“சரி எல்லாரும் சீக்கிரம் சாப்பிட்டு படுங்க. காலைல சீக்கிரம் எழுந்துக்கணும்” என்றுவிட்டு செல்ல, மற்றவர்களும் எழுந்து கொண்டனர்.
இரவு உணவு உண்டபின் அறைக்குள் வந்த ஸ்ரீயை கண்ட தீரனுக்கு எரிச்சல்தான் வந்தது. ஏனென்றால் அவள் மீனா அறையில் தங்கி கொள்ள கேட்ட தகவல் அவனிடம் வந்திருந்தது.
‘அப்படி நான் என்ன பண்ணிடுவேன்னு அங்க போறேன்னு சொல்றா’ என்ற கடுப்பில் இருந்தவன், அவள் அறையின் உள்ளே வந்தவுடன் “கண்டவங்க ரூம்க்கு எதுக்கு வந்த?” என்று அழுத்தமாக கேட்க .
அவளோ “நான் மட்டும் ஆசைப்பட்டா இங்க வந்தேன். மூத்த மருமகளா நின்னு கல்யாண வேலை பார்க்கணும்னு சொல்லி கூட்டிட்டு வந்தா. இங்க இருக்காம. உங்க பக்கத்து வீட்டுகாரன் கூடவா போய் இருக்க முடியும். அப்படி போய் இருந்தா ஊரு உலகம் என்ன சொல்லும்” என்று சொல்ல,
அவள் சொன்னதில் முகம் அறுவருப்பாக மாற “என்னடி பேசற” என்று கோபமாக கேட்க,
அவளோ “சும்மா…சும்மா என்னைய எதாவது சொல்லிட்டே இருக்காதீங்க. எனக்கு தூக்கம் வருது. நான் தூங்க போறேன்” என்றவள் தன் பேக்கில் இருந்த ஒரு பெட் சீட்டை எடுத்து விரித்து படுத்துவிட்டாள். தீரனோ அவளை உருத்து பார்த்து கொண்டிருந்தான். அதையெல்லாம் அவள் ஏன் கண்டு கொள்ள போகிறாள்.
“ம்கூம்…ஏன் வந்தியாம்? ஏன்? எனக்கு என்ன இங்க வந்து கீழ படுக்கணும்னு வேண்டுதலா என்ன. வேற வழி இல்லாமதான் வந்தேன். கண்டவங்க ரூம்ல, கண்டவங்ககூடதான் நான் இன்னைக்கு தங்கணும்னு என் தலைல எழுதி இருக்கு. அதுக்கு நான் என்ன பண்ண முடியும். எல்லாம் அந்த சூனியம் புடிச்ச விதியால. அதுக்கு மட்டும் உருவம் இருந்தது ஓட ஓட விரட்டி இருப்பேன்” என்று புளு புளுத்து கொண்டே அவள் படுத்திருக்க,
அதில் கடுப்பானவள் “நான் என் கஷ்டத்தை சொல்றது டிஸ்டர்பா இருக்காமா. இதோ அமைதியாகறேன். இப்போ பாருடா வெண்ண என் அமைதிய என்று தனக்குள் சொல்லி கொண்டவள்,
“ம்க்கும்…. சரி…சரி…நான் அமைதியாகறேன். அதுக்கு முன்னாடி ஒரு டவுட் அதைமட்டும் கிளியர் பண்ணிடுங்க” என்றவள் மேலும் “ஆமா…. உங்களுக்கு தூக்கத்துல உருளற பழக்கம் எல்லாம் இல்லையே”என்று நக்கலாக கேட்க,
அவனோ அவளை புரியாமல் பார்த்தான். இப்போ எதுக்கு தேவையில்லாம இதெல்லாம் கேட்கிறாள் என்று,
“என்ன முழிக்கறீங்க. இருக்கா…இல்லையா… ஏன் கேட்கிறன்னா, நீங்க பாட்டுக்கு உருண்டு வந்து என் மேல விழுந்துட்டீங்கன்னா, நான் நசுங்கிடுவேன்ல. நீங்க வேற இருநூறு கிலோ அரிசி மூட்டை மாதிரி இருக்கீங்க. என் உசுரு எனக்கு முக்கியம்ல” என்று சொல்ல,
அவளை தீயாக முறைத்தவன் “என்னடி நக்கலா” என்க,
அவளோ “நக்கலும் இல்ல. விக்கலும் இல்ல. கேட்டதுக்கு பதில்……” என்று மேலும் என்ன பேசியிருப்பாளோ அவள் முகத்தில் தலையணை வந்து விழ,
“இல்லைனா…. இல்லைனு சொல்லுங்க. ஆமானா ஆமான்னு சொல்லுங்க. இது என்ன சின்ன புள்ளதனமா அப்புறம் இன்னொரு டவுட்டு. நாளைக்கு நீங்க கோயிலுக்கு வரீங்களா”
“ரொம்ப முக்கியமா அது”
“இல்ல பொது அறிவை வளர்த்துக்கலாம்னுதான்”.
“இருக்கற அறிவை வளரு போதும்”
“நாலு நல்ல விஷயம்…….”
“ஷிட்…. கொஞ்சம் அமைதியா இருந்து தொலடி. சில்லு வண்டாட்டம்…”
“ம்கூம்…நான் கேட்டதுக்கு பதில் சொல்லாம. நீங்கதான் தேவையில்லாம என்ன பேச வைக்குறீங்க. நான் பேசறது கேட்க அவ்ளோ நல்லாவா இருக்கு”
“ச்சை….” என்று படுத்திருந்தவன் எழுந்து “இப்போ உனக்கு என்னடி தெரியணும் வர்றன்னா இல்லையான்னுதானே? அப்பா வர சொல்லி இருக்காரு. அதனால கண்டிப்பா வருவேன் போதுமா. இனி தயவு செஞ்சு உன் திருவாய திறக்காத. உன் குரலை கேட்டா காதுக்குள்ள கொய்னு சத்தம் கேட்குது”.
தீரன் பேசி முடிக்கும் போது படுத்திருந்தவள் பட்டென்று எழுந்து, அவனை மேலும் கீழும் எகத்தாளமாக பார்த்துவிட்டு மீண்டும் படுத்துக்கொண்டாள்.
அவள் பார்வையில் இருந்ததை கண்டு கொண்டவன் பல்லை நற நறவென கடித்து “இப்ப எதுக்குடி எந்திரிச்சு இப்படி பார்த்த”.
“இல்ல அப்பா சொல்ற எல்லாத்தையும் கேக்குற நல்ல பையன் மாதிரிதான் நடிக்கிறீங்க. இப்படியே அவர் சொல்ற எல்லாத்தையும் கேட்டா, நான் ஏன் இங்க படுக்க போறேன்” என்று இரண்டாம் பாதியை முணு முணுப்பாக சொல்ல,
“நான் என்னடி நடிச்சேன்”.
“அது உங்களுக்கே தெரியும்.என்று விட்டு “ஆஆஆ….குட் நைட் தூக்கம் வருது” என்று கொட்டாவிவிட்டு தூங்க ஆரம்பித்துவிட,
“என்னடி நடிக்கறேன் சொல்லு…. சொல்லுடி…. உன்கிட்டதான் கேட்கறேன்” என்றவன் குரலுக்கு அவளிடம் மெல்லிய குறட்டை சத்தம்தான் பதிலாக வந்தது”.
“ச்ச…. என்று அங்கிருந்த பூஜாடியை தள்ளிவிட்டு உடைத்தவன், அதன்பின் தூங்க முடியாமல், அந்த நேரத்தில் காரை எடுத்து கொண்டு வெளியே கிளம்பிவிட்டான்.
அவன் செல்வதை பால்கனியில் நின்று வெறித்து பார்த்தவள் ‘யாருகிட்ட இருந்து தப்பிச்சு போக ட்ரை பண்றீங்க. என்கிட்ட இருந்தா. இல்லை உங்ககிட்ட இருந்தேவா’ என்றவள் மனதில் தீரன் தன் காதலி என்று சொன்ன பெண்ணை சந்தித்த நிகழ்வு படம் போல் ஓட துவங்கியது.
ஸ்ரீ மதுரையில் தன் நண்பன் திருமணத்திற்கு சென்றவள், அங்கு இருக்கும் தன் மற்றொரு தோழி பிரியாவை பார்க்க சென்றிருந்தாள். அங்கு அந்த தீரன் காதலி என்று சொன்ன பெண்ணும் வந்திருந்தாள். அவளை கண்டு முகம் இறுகியவள் அமைதியாக இருக்க, வந்த பெண்ணோ பிரியாவிடம் நெடுநாள் பழக்கம் போல் நன்றாக பேசி கொண்டு இருந்தாள்.
அவர்கள் பேசி கொண்டதில் அவள் தெரிந்து கொண்ட விஷயம். அவள் தாயிக்கு நுரையீரல் பாதிப்பு இருக்கிறது. அவரை பார்க்கும் மருத்துவர் பிரியா. அவள் சகோதரி இறந்திருக்கிறாள் என்பதும். அக்காவை நினைத்து அந்த கல்லூரி பெண் வருந்துகிறாள் என்பதும் . இருவர் பேசுவதையும் கேட்டவள் அதற்கு மேல் அங்கு அமர முடியாமல் எழுந்து கொள்ள,
பிரியா அவளை பார்க்க “நான் அங்க வெளிய இருக்க கார்டன்ல இருக்கேன். நீ ப்ரி ஆனதும் கால்பண்ணு” என்றுவிட்டு விறு விறுவென சென்றுவிட்டாள்.
கார்டனில் இருக்கும் பெஞ்சில் அமர்ந்தவள் தலையில் கையை வைத்து கொண்டு இருக்க, சற்று நேரம் கடந்து ஒரு அழுத்தமான குரல் அவள் காதில் விழுந்தது.
அதில் அதிர்ந்து போனவள் நிமிர்ந்து பார்க்க, அவள் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் அங்கு நின்று அந்த பெண்ணிடம் பேசி கொண்டிருந்தான் தீரன்.
அப்போது அங்கு வந்த பிரியா ஸ்ரீயை அழைக்க அவள் கவனம் முழுவதும் தீரனிலேயே இருந்தது.
தோழியை அழைத்து அழைத்து பார்த்து கடுப்பானவள் அவள் பார்வை சென்ற இடத்திற்கு தன் பார்வையையும் திருப்ப அங்கு நின்றிருந்தவனை கண்டு புருவம் சுருக்கியவள் “ஹே…. நித்தி அது உன் ஹஸ்பண்ட்தானே. உன் பின்னாடியே வந்துட்டாரா. இரு நான் போய் அவர்ட்ட பேசிட்டு வரேன்” என்றவளை தடுத்த ஸ்ரீ.
“பிரியா எனக்கு நீ ஒரு ஹெல்ப் பண்ணனும்” என்க,
தோழியை குழப்பமாக பார்த்தவள் அவள் முகத்தில் இருக்கும் தீவிரத்தை கண்டு என்னவென்று கேட்க, அவள் சொன்ன விஷயத்தை கேட்டு திகைத்தாலும் “என்னடி எதுவும் பிரச்சனையா”.
“அதெல்லாம் ஒன்னும் இல்ல. உன்னால முடியுமா? முடியாதா?”.
“உடனே கோபப்பட ஆரம்பிச்சுடுவியே. சரி ஓகே” என்று தன் சம்மதத்தை தெரிவித்தாள்.
சொன்னது போலவே அனைத்து தகவலையும் திரட்டியவள். அடுத்த நாளே ஸ்ரீயை வர சொல்லி, தான் தெரிந்து கொண்ட விஷயங்கள் அனைத்தையும் சொல்ல துவங்கினாள்.
சந்தியா தீரன் காதலித்த பெண்ணின் பெயர். ஆம். காதலித்த பெண்தான். இப்போது அவள் உயிரோடு இல்லை. அவள் தங்கை வினுஷா. அவளைதான் அன்று ஹோட்டலில் ஸ்ரீ பார்த்தது.
சந்தியா ஒரு விபத்தில் இறந்துவிட, அவள் நினைவாக இருந்தவன் எப்போதும் இருப்பதை விட, அதிகமாக தனக்குள் இறுகி போனான். வீட்டில் முதலிலேயே அவன் அதிகம் பேசுவது இல்லை. சந்தியா இறந்த பின்பு மேலும் தன் பேச்சை குறைத்து கொண்டான்.
அவன் பெற்றோரும் தொழிலில் இறங்கியதால் உண்டான மாற்றம் என்று நினைத்து பெரிதாக கண்டு கொள்ளவில்லை.
ஒரு பிஸ்னஸ் மீட்டிங் முடித்துவிட்டு, அவர்களுடன் லன்ச் சாப்பிட சென்ற தீரன் அங்கு சர்வண்ட்டாக வினுஷாவை பார்த்து அதிர்ந்து போய் “காலேஜ் போகாம இங்க என்ன பண்ற” என்று கேட்டான்.
வினுஷா அக்காவுடன் தீரனை சந்தித்து இருப்பதால் அவளுக்கு அவனை நன்றாக தெரியும்.
அக்காவே இல்லை. இவனிடம் என்ன சொல்வது என்று வினு முதலில் அமைதியாக நின்றிருந்தாள்.
அவள் அமைதியை புரிந்து கொண்டவன் “என்னை அண்ணனா நினைச்சு சொல்லும்மா” என்க,
அவளும் வேறு வழி இல்லாமல் தன் குடும்ப சூழ்நிலையை சொன்னவள் தாயின் மருத்துவ செலவிற்காக இங்கு வேலை செய்வதாகவும் சொல்ல,
அன்றிலிருந்து அவர்கள் குடும்பத்தை தீரன்தான் பார்த்து கொள்கிறான். அவன் உதவியை முதலில் வேண்டாம் என்று வினுஷா மறுக்க,
அவனோ “நல்லா படுச்சு நீ ஒரு வேலைக்கு போற வரை, என்கிட்ட கடனா வாங்கிக்கோ. அப்புறம் உன்னால முடியும் போது திருப்பி கொடு” என்று சொல்ல, கல்லூரியின் இறுதி ஆண்டில் இருந்த வினுவும் வேறு வழி இல்லாமல் சம்மதித்துவிட்டாள். என்று அனைத்தையும் சொன்ன பிரியா.
“நீ அவங்கள பார்த்ததா சொன்ன நாள் சந்தியாவோட நினைவு நாள்” என்று சொல்ல, ஸ்ரீ அதிர்ந்து போனாள்.
“லவ் பண்ற பொண்ணுங்கள போர் அடிச்சிடுசுனு விட்டுட்டு போகற இந்த காலத்துல. அந்த பொண்ணு இறந்த அப்புறமும் அவ குடும்பத்தை பார்த்துக்கறாருன்னா, அந்த பொண்ண எவ்ளோ லவ் பண்ணி இருக்கணும்.
உண்மையாவே உன் ஹஸ்பண்ட் சூப்பர்டி” என்க,
அவளை வலி நிறைந்த பார்வை பார்த்தவள் “அப்புறம் எதுக்குடி அந்த பொண்ண அவர் லவ்வர்னு என்கிட்ட சொல்லணும்”
“மே பி அவர்கிட்ட இருந்து உன்னை விலக்கி வைக்கறதுக்கா கூட இருக்கலாம். உனக்கே தெரியும் உங்க மேரேஜ் திடிர்னு நடந்தது. அவர் லவ்வர மறக்க முடியாம இருக்கவர அவங்க அப்பா கார்னர்பண்ணி உங்க கல்யாணத்தை நடத்தியிருக்கலாம். சோ….என்ன பொருத்தவரை அவர் கெட்டவரா தோணல”.
“ஏன்டி. உனக்கு நான் பிரண்டா, அவர் பிரண்டாடி இப்படி கொடி பிடிக்கற”.
“அப்படி இல்லடி செல்லம். நீ பிரச்சனைக்குள்ள இருக்க. அதான் வேற எதுவும் யோசிக்க முடியல. நான் வெளி ஆளு. வெளில இருந்து பார்க்கறேன் அதான் பிரச்சனை என்னன்னு தெரியுது. இதுக்காக நீ என் உயிர் தோழி இல்லன்னு ஆகிடுமா”.
“என்னமோ போடி. கல்யாணம் பண்ணிட்டு நான் படுற பாடு இருக்கே. ஹாப்பா…. முடியில்ல…. நீ கல்யாணம் எல்லாம் பண்ணிக்காதடி பிரச்சனை அதிகம்”.
“இதோடா….. இவ மட்டும் நல்ல பையனா பார்த்து கல்யாணம் செய்து கஜ…கஜா…பண்ணுவாளாம். நான் கல்யாணமே பண்ண கூடாதாம் என்னங்கடா நியாயம் இது”
“ஏய்…. நான் கஜ…கஜா..
பண்ணுனேன்னு உனக்கு தெரியுமாடி”
“அப்போ நடக்கலையா? அந்த கவலைலதான் என்ன கல்யாணம் பண்ண வேண்டாம்னு சொல்றியா. கவலை படாத செல்லம். கிணத்து தண்ணி எங்க போக போகுது”.
“ச்சி….. பேட் கேர்ள். என்னடி பேசற. நான் எதுக்கு சொன்னேன். நீ எதுக்கு சொல்ற. சரியா காஜிடி நீ”.
“ஆமா…ஆமா…நாங்க காஜி. இவங்க கல்யாணம் பண்ணிட்டு பூஜபண்ண போறாங்க போடி” என்று தோழிகள் இருவரும் கலகலப்பாக பேசி கொள்ள,
ஸ்ரீ தோழியை அணைத்து கொண்டு “தேங்ஸ்டி…” என்க,
“தேங்ஸ் எல்லாம் வேண்டாம். பிரியாணி வாங்கி குடு”,
“கண்ணீரோடு சிரித்தவள். கண்டிப்பா. உனக்கு இல்லாததா” என்றவள் மீண்டும் அவளை அணைத்து நன்றி சொல்லிவிட்டு திருச்சி கிளம்பிவிட்டாள்.
அதன்பின்தான் ஸ்ரீக்கு கணவன் மீது இருந்த கோபம் கொஞ்சம் குறைந்தது. இருந்தாலும் அவனிடம் செல்ல ஏதோ தயக்கம். அவனாக வந்து கூப்பிடட்டும் என்று நினைத்தவள் தந்தையோடு தங்கிவிட்டாள்.
அதையெல்லாம் நினைத்து பார்த்தவள். அப்படியே பால்கனியில் இருந்த சேரில் அமர்ந்து, கணவனுக்காக காத்திருக்க துவங்கினாள்.
வெகுநேரம் கடந்து தீரனின் கார் உள்ளே நுழைய அதை பார்த்தவள் ‘ஹப்பாடா வந்தாச்சு. போய் படுப்போம். இனி எதுவும் வம்பு பண்ண வேண்டாம். மீதிய நாளைக்கு பார்த்துக்கலாம். இப்போ தூக்கம் வருது. போய் தூங்கிடுவோம்.’ என்றுவிட்டு போய் படுத்தவள் அவன் வந்து படுக்கும் சத்தம் கேட்ட பின்பே அமைதியாக தூங்க துவங்கினாள்.
தீரன் ஸ்ரீயை புரிந்து கொள்வானா, அடுத்தடுத்த எபியில் பார்க்கலாம்.