Advertisement

நீ நான் 26

மேம்..என அவரை அணைத்து அழுதாள் மானசா.

மானூ..இறந்தவங்க உடல் மட்டும் தான் நம்மை விட்டு போகுது. அவங்க ஆன்மா நம்முடன் தான் சில நாட்கள் இருக்கும். தெரியலைன்னாலும் உன்னோட அக்கா இங்க தான் இருப்பா பக்கத்திலே என அந்த மலர்கிரீடத்தை பார்த்தார். ஆனால் இது அவளுக்குரியது இல்லை. அவள் உனக்கு கொடுத்தது என அதை எடுத்து மானசா தலையில் வைத்து விட்டார்.

மலர்க்கீரிடத்தை பார்த்த விகாஸிற்கு கீர்த்தனா நினைவு வாட்டியது. அச்சமயம் மானசா தலையில் அந்த பெண்மணி கிரீடத்தை வைக்கவும் விகாஸிற்கு மானசா கீர்த்து போலவே தெரிந்தாள். கீர்த்துவும் இதே போல் ஆடை அணிந்து பார்த்த விகாஸிற்கு தன் பப்ளிம்மா வந்துட்டா என கண்ணீருடன் அவர்களிடம் ஓடிச் சென்று மானசாவை இழுத்து அணைத்து, “பப்ளிம்மா நீ வந்துட்டியா?” என கதறி அழுதான்.

“நான் உங்க கீர்த்து இல்லை” என்ற குரலில் விகாஸ் அவளை நகர்த்தி தலையை பிடித்தான்.

“பப்ளிம்மா” என தரையில் மண்டியிட்டு கத்தினான். மானசா அவனை கண்ணீருடன் பார்த்தாள்.

“வீட்டுக்கு போகணும்” மானசா சொல்ல, அவளை நிமிர்ந்து பார்த்து, “நீ யாரு? உனக்குள்ள என்னோட கீர்த்துவை பார்த்தேன்” என கத்தினான்.

என்னோட பெயர் மானசா. அவளோட பெற்றோர் பெயர். அக்கா மோனிஷா பற்றி கூறி விட்டு யாரோ ஒரு கும்பல் ஒரு பொண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற போது அந்த பொண்ணை காப்பாற்ற முயன்று இவள் மாட்டியது, விக்ரம் காப்பாற்றியது. அவன் ஆட்கள் இவர்களை பின் தொடர்ந்து வந்து அவளது அப்பா, அக்காவை கொன்றது. மோனிஷா கொலை நடந்தது உங்க கீர்த்துவை நீங்க அடக்கம் செய்து வந்த பின் தான் பாட்டி வீட்ல வச்சு என மானசா அழுதாள்.

நான் வரல. நீ வீட்டுக்கு போ..விகாஸ் சொல்ல, “இவ்வளவு நேரம் இங்க தான இருந்தீங்க? எங்க போறீங்க? நானும் வாரேன்” என மானசா சொல்ல, கோபமான விகாஸ், “பப்புக்கு வாரேன் கம்பெனி குடுக்க வாரியா?” என கேட்க, அவள் மறுநொடியே “சரி” என்றாள்.

மானூ..அந்த பெண்மணி சத்தமிட, மேம் “நாங்க கிளம்புகிறோம்” என கண் ஜாடை காட்டி அவனுடன் சென்றாள்.

“இந்த ஆடையோடவா வரப் போற?” என ஷாப் ஒன்றில் நிறுத்தி, அவனே அவளுக்கு மாடர்ன் ஆடை எடுத்தான். பின் இருவரும் உள்ளே செல்ல, இவர்களை சிக்னலில் பார்த்த பரணியும் அவர்களை பின் தொடர்ந்து வந்திருந்தான்.

விகாஸ் உள்ளே செல்லவும் அவளுடைய பழைய பப் நண்பர்கள் அவனை சூழ்ந்து கொண்டனர். மானசா அவனை பார்த்துக் கொண்டே நின்றிருந்தாள். பரணி தனியே வந்திருந்ததால் அவனை உள்ளே ஆட்கள் விடவில்லை. பொண்ணு யாரும் தனியே சிக்குமா? என பார்த்துக் கொண்டிருந்தான்.

“டார்லிங் யாரு இவ?” என மானசாவை பார்த்து ஒருத்தி கேட்க, “இவரு என்னோட மாமா தான்” என விகாஸ் கையை பிடித்தாள் மானசா.

அவன் கோபமாக அவள் கையை உதறி விட்டு, “வெயிட் பண்ணு வாரேன்” என அவர்களுடன் உள்ளே சென்று குடித்தான்.

அந்த பொண்ணு தனியாக வந்து..ஹே…டியர்..வீ வந்திருக்கான். எப்படியாவது அவனை முழுசா குடிக்க வைத்து விட்டு அவனுடன் நான் சேர்ந்து விட்டால் போதும். அதை வைத்து நானும் பணக்காரி ஆகிடுவேன் என அலைபேசியில் அவள் பேசுவதை கேட்டு கையை முறுக்கிய மானசா அமைதியானாள்.

அவளிடம் வந்த விகாஸ் நண்பன் ஒருவன், “வா..நாம போகலாம்” என அழைத்தான். அவள் அவனை அடிக்க எல்லாரும் அவனை பார்க்க, அவனோ அவளை அடிக்க..மானசா மயங்க வந்தவள் மனதினுள் “மானு உனக்கு ஒன்றுமில்லை.. ஒன்றுமில்லை..” என சுவற்றில் முட்டினாள்.

“பைத்தியம் போலடா இந்த பொண்ணு?” என அவன் சொல்ல, கண்கள் மங்கலான மானசா அந்நிலையிலும் விகாஸை தேடினாள்.

விகாஸை அவர்கள் எண்ணியது போல குடிக்க வைத்து அவள் அவனை தாங்கலாக இழுத்து செல்ல, அவனோ “பப்ளிம்மா..லவ் யூ” என உலறிக் கொண்டே வந்தான். அவனை அவள் ஓரறைக்கு இழுத்து சென்றாள்.

மயங்கிய நிலையில் மானசா, வீ மாமா..என தலையை பிடித்துக் கொண்டு அவனை நோக்கி செல்ல முனைய..ஒருவன் அவளை இழுத்து சென்றான்.

அச்சமயம் சரியாக பரணி ஒரு பொண்ணுடன் உள்ளே வந்தான்.

டேய்..என கத்திக் கொண்டே விகாஸ் தோழனை அடித்து விட்டு, பரணி மானசா கன்னத்தை அடித்தான். அவள் வீ மாமா..மாமா என சொல்ல, “வீ மாமாவா?” என அதிர்ந்து கொண்டிருக்க, அங்கிருந்தவர்கள் அவனை அடிக்க வந்தனர். அனைவரையும் சமாளித்து நீரை எடுத்து அவன் தெளிக்க, கண்ணை திறந்து பரணியை பார்த்தாள்.

பரணி..மாமா..மாமா..என கையை விகாஸ் இருக்கும் அறையை காட்டினாள்.

“அவரா?”

ம்ம்..என்று தலையை ஆட்டி அவன் கையை தட்டி விட்டு தட்டி தடுமாறி எழுந்தாள்.

“இருவரையும் பிடிங்கடா” என அவன் சொல்ல, “விக்ரம் அண்ணா” என பயங்கரமாக கத்தினாள் மானசா. அவர்கள் அனைவரும் நகர்ந்து நின்றனர்.

விக்ரம் அண்ணாவா?

“இவ என்னடா வீயோட மாமாவ அண்ணன்னு சொல்றா? இவளை விட்ருங்கடா இல்லை அவர் வந்தாரு நம்மை கொன்றாலும் கொன்றிடுவார்” என்றான் அவன்.

ஹப்பா..என மானசாவுடன் அறைக்கதவை தட்டினான் பரணி.

கதவு திறக்காமல் இருக்க, இப்ப திறக்கலை விக்ரம் சார் வந்து தான் திறக்கணும் என்றவுடன் ஓனரே அங்கு வந்து கதவை திறந்தார்.

விகாஸ் தோழியோ அலைபேசியில் வீடியோ பதிவேற்றம் செய்ய தயார் செய்து விகாஸ் கோர்ட்டை கழற்றி விட்டு, அவனது சட்டை பொத்தானில் கையை வைத்தாள். அதற்குள் கதவு திறக்கப்பட, மானசா வேகமாக தடுமாறியவாறு உள்ளே வந்து அவளை அடிக்கிறேன் என பொத்தென விகாஸ் அருகே படுக்கையில் விழுந்து விட்டாள்.

“மானூ” பரணி பதற, அவரை கார்ல்ல விட்டு வா..

இல்ல நீயும் வா..

“முடியல. சீக்கிரம் விட்டு வா” என சொல்ல, அங்கிருந்தவர்களில் ஒருவன் விகாஸை துக்க, மானசாவை பரணி தூக்கிக் கொண்டு காருக்குள் சென்றான்.

யாருக்கும் தெரியாமல் நெஞ்சை அழுத்தியவாறு பிடித்திருந்த மானசா, பரணி..என்னோட பையின் முதல் ஜிப்பில் இருக்கும் மாத்திரையை எடு. சீக்கிரம் என்றாள்.

“மாத்திரையா? என்ன பண்ணுது மானூ?” பதறினான் பரணி.

“சொல்றதை மட்டும் செய்” என்றதும் அவன் எடுத்து பார்த்து, மாத்திரை ஏதும் இல்லை என்றான்.

இல்லையா? என மானசா முகம் வியர்க்க, கண்ணீருடன் ஹாஸ்பிட்டலுக்கு போ. என்னால முடியல என அழுதாள்.

“காரை எடுத்து என்னாச்சு மானூ?” என கேட்டான்.

போ..முதல்ல என சீட்டில் மெதுவாக சரிந்தாள். பயத்துடன் “மானூ” என அவன் கத்திக் கொண்டே ஹாஸ்பிட்டலில் நிறுத்தினான்.

மானூவை தூக்கி அப்சரா ஹாஸ்பிட்டலுக்கு தான் வந்தான் அவன். அப்சரா இருவரையும் பார்த்து, “நீங்க?” என அவளை பார்த்து, “ஏய்..என்னாச்சு?”

தெரியல. ப்ளீஸ் அவளுக்கு என்னன்னு பாருங்க. எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்றான்.

மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க, திலீப் மகிழன் இரவு டியூட்டி இல்லாமல் வீட்டில் இருந்தனர். ஹார்ட் பேசண்ட் என்றதும் திலீப்பை அழைக்கலாம் என அப்சரா எண்ணி பரணியிடம் சொன்னான்.

அவன் அதிர்ச்சியுடன் மாரடைப்பா? மானூவுக்கா? திலீப் சார் வேண்டாம். அவள் யாருக்கும் தெரியக் கூடாதுன்னு நினைக்கிறா. வேற டாக்டரை வச்சு பாருங்க என அழுதான்.

அவளும் மற்ற மருத்துவர்களும் திலீப்பிற்கு அடுத்த இடத்தில் இருப்பவரிடம் காட்டினார்கள். அவர் சிகிச்சையை முடித்து இது முதல் முறை போல தெரியல என்றார் அவர்.

வாட்?

நீங்க யாரு?

நான் அவளோட முறப்பையன் தான்.

பெரியவங்க இல்லையா?

இல்லை.

ஓ..அவங்க பழைய விவரத்தை கொண்டு வாங்க. முழிச்சவுடன் என்னை பார்த்துட்டு கிளம்புங்க என்று அவர் சென்றார்.

“எல்லாரிடமும் சொல்றது தான் நல்லது” அப்சரா சொல்ல, நோ…ப்ளீஸ் சொல்லீறாதீங்க அவன் கெஞ்சினான்.

அவளோட இரத்த உறவுன்னா அது நான் தான். அவ யாரிடமும் சொல்லாததுக்கு காரணம் ஏதாவது இருக்கும்.

ஆனால் என அப்சரா அவனை பார்த்தாள்.

ப்ளீஸ், அவ விழிக்கட்டும். பேசிட்டு சொல்லலாம்.

ம்ம்..ஓ.கே என அவள் அரை மனதாக ஒத்துக் கொண்டாள்.

சற்று நேரத்தில் மானசா கண் விழிக்க, இருவரும் உள்ளே சென்றனர்.

“மானூ” கண்ணீருடன் பரணி அவளை பார்த்தான்.

மாமா..என அவள் சொல்லும் போதே அப்சராவை பார்த்து, “நீங்களா? என வாசலை பார்த்தவாறு யார்கிட்டையும் சொல்லீட்டீங்களா?” என பயத்துடன் கேட்டாள்.

சொல்லலை மானூ. நீ சொல்லலைன்னா காரணம் இருக்கும்ன்னு சொல்ல வேணாம்ன்னு சொல்லீட்டேன். உனக்கு எப்படி? என கண்களை மூடி அழுதான்.

மா..மா..ப்ளீஸ் யாரிடமும் சொல்ல வேண்டாம்.

“ஏன் சொல்லாம இருக்க? மோனூவுக்கு தெரியுமா?”

ம்ம்..தெரியும் என்றாள் கண்ணீருடன்.

“இதற்கு முன் இது போல் இருந்திருக்கா?” அப்சரா கேட்டாள்.

ம்ம்..முதல் முறை என்னோட காதல்..என அழுதாள்.

காதலா? என பரணி அவளை அதிர்ந்து பார்த்தான்.

ம்ம்..நான் காதலித்தவர் வேற பொண்ணுக்கு முத்தம் கொடுப்பதை பார்த்த போது வந்தது. அக்கா அப்போது உடன் இருந்தாள். அப்புறம்..இடையிடையே பெயின் இருக்கும். நான் யாரிடமும் சொல்லலை. அக்காவிடமும் சொல்லவில்லை.

அப்சராவின் கையை பிடித்து, ப்ளீஸ் யாரிடமும் சொல்லீறாதீங்க.

கண்டிப்பாக ஒருவருக்காவது தெரியணும். நீயே சொல்லு யார்கிட்ட சொல்லலாம்.விக்ரம் சார்கிட்ட..

நோ..நோ..என பதறி அழ ஆரம்பித்தாள் மானசா.

ஹே..கூல்..கூல்..பதறாத.. நீயே சொல்லு?

சற்று நேரம் அமைதியாக சிந்தித்தாள். பின் ரம்யா அக்காகிட்ட சொல்லுங்க. ஆனால் அவங்க யாரிடமும் சொல்லக் கூடாது. என்னை பரிதாபமாக பார்க்கக் கூடாது.

நான் அவங்களிடம் பேசுகிறேன். நாளை அதிகாலையிலே மீட் பண்ணலாம்..

நீ ஓய்வெடுக்கணும். அதிகமாக சிந்திக்கக் கூடாது. அப்புறம் ஆயில் புட் சாப்பிடக் கூடாது என அப்சரா சொல்ல, அவளை பார்த்து மானசா புன்னகைத்தாள்.

“இப்ப வலிக்குதா மானூ?” என சோகமாக பரணி கேட்க, “இப்படியே சோககீதம் வாசிச்ச எல்லாருக்கும் தெரிஞ்சிடும்” என அவனை திட்டினாள்.

“உன்னோட காதல் யாருன்னு சொல்லு?” அவரை நான் உன்னுடன் சேர்த்து வைக்கிறேன்.

விரக்தியுடன் அவனை பார்த்து, “வேண்டாம்” என அவர்களை பார்த்து பிராமிஸ் பண்ணுங்க என இருவரிடமும் சத்தியம் வாங்கினாள்.

அய்யோ, வீ மாமா எங்க? மானசா பதற, மாமாவா? என அவன் கேட்க, நான் அவங்க வீட்ல எல்லாரையும் மாமான்னு தான் சொல்வேன். பரணி சந்தேகமாக அவளை பார்த்தான்.

டேய், “எங்கடா?”

வெளிய கார்ல்ல தான். போதையில தூக்கிட்டார்.

ம்ம்..நாங்க போகலாமா?

டாக்டரை மீட் பண்ணீட்டு போகலாம்.

ஆனால் இனி இங்கே என்னால வர முடியாது. திலீப் மாமாவும், மகிழ் அண்ணாவும் இங்க தான இருப்பாங்க.. அதனால ..

அதனால நீ எங்களோட முகப்பேர் ஹாஸ்பிட்டலில் டிரீட்மென்ட் எடுக்குற. புரியுதா? நாளைக்கே வரணும். நான் ரம்யாவிடம் பேசுகிறேன் என்றாள் அப்சரா.

ம்ம்..ஆனால் சுவா அண்ணி..அவங்கள..ஏதாவது பிளானை பார்க்கலாம்.

டாக்டரை பார்த்துட்டு ரெஸ்ட் எடு. நான் காலை ரம்யாவை பார்க்கும் இடத்தை சொல்கிறேன். வா..அவளை பார்த்துட்டு ஹாஸ்பிட்டலுக்கு போயிறலாம்.

மூவரும் ஹார்ட் சர்ஜன் அறைக்கு சென்றனர்.

உங்க ஹார்ட் வீக்கா இருக்கு. ஸ்கேன் பண்ணீட்டோம். அதிர்ச்சியான எதையும் பார்க்காதீங்க என அப்சரா கூறிய அனைத்தையும் அவரும் கூறினார்.

டாக்டர், நம்மளோட முகப்பேர் ஹாஸ்பிட்டல்ல வச்சு இவங்களுக்கு ட்ரீட்மென்ட் பண்ணிடலாம் அப்சரா சொல்ல, திலீப் டாக்டரோட சேர்ந்து நானும் பார்க்கிறேன்.

நோ..டாக்டர். அவருக்கு எதுவும் தெரிய வேண்டாம். இந்த பொண்ணு பற்றி எதுவும் இப்பொழுதைக்கு தெரிய வேண்டாம். பின் சொல்லிக்கலாம்

சார், ஒத்துக்கணுமே!

அப்பாகிட்ட நான் பேசுகிறேன்.

“அப்படின்னா ஓ.கே மேம்” என ஸ்கேன் ரிப்போர்ட்டை அவளிடம் கொடுத்தார்.

அப்சரா அதை வாங்கி, இது என்னிடம் இருக்கட்டும். வாங்க போகலாம்..தேங்க்ஸ் டாக்டர் என கிளம்பினார்கள்.

காரில் ஏறிய மானசா வீயை திரும்பி பார்த்தாள். அவன் பின் சீட்டில் படுத்து இருந்தான்.

மானூ, “வீட்டுக்கு போகலாமா?”

“ஹம் பாட்டி வீட்டுக்கு போகணும்” என அவள் சொல்லிக் கொண்டே அவனை பார்த்தாள். அவளை ஓரக்கண்ணால் பார்த்து விட்டு வீயை பார்த்தான் பரணி.

இருவரும் வீட்டிற்கு வந்தனர்.

தாத்தா கார் சத்தம் கேட்டு வெளியே வந்தார்.

வீ குடித்து கார் ஓட்டி வந்திருக்கானோ என பார்க்க, பரணியையும் மானசாவையும் பார்த்து, “வீ எங்கம்மா?” என கேட்டார். அவள் பின்னே பார்த்தாள்.

அவர் அவனை இழுத்து தோளில் போட, தாத்தா..நானும் உதவுகிறேன் என மானசா அவர் அருகே செல்ல, பரணி வீயை பிடித்துக் கொண்டு, தாத்தா விடுங்க..என அவளது ஷூ தரையில் இழுபட அவனை இழுத்து உள்ளே வந்தான்.

பாட்டி அவன் அறையை திறக்க, அவனை படுக்கையில் போட்டு விட்டு சாவியை தாத்தாவிடம் கொடுத்தான் பரணி.

மாமா, “நீ எதுல்ல போவ?” என மானசா கேட்க, இப்பவாது என்னோட நம்பர் வாங்கிக்கோ. ப்ளீஸ் என்றான் கண்ணீருடன்.

“மாமா” என அழுத்தமாக கூறி, அவன் அலைபேசியை பிடுங்கி எண்ணை கொடுத்தாள்.

“எதுக்குப்பா அழுற?”

ஒன்றுமில்லை தாத்தா. எனக்கு சின்ன விபத்து. மாமா பயந்துட்டாங்க. அதான்.

விபத்தா? எங்க? என்னாச்சு? பாட்டி பதறிக் கொண்டு அவளை சுற்றி சுற்றி பார்க்க, அவள் கண்கள் கலங்கியது.

“நீங்க மானூவை நல்லா பார்த்துக்கோங்க” என நிற்க முடியாமல் வெளியே ஓடினான்.

“மாமா” மானசா சத்தம் கொடுக்க, கண்ணை துடைத்து அவளை பார்த்தான்.

பார்த்து போ..என்றாள்.

ம்ம்…என்று வெளியேறினான்.

தாத்தா இருவரையும் ஒரு மாதிரி பார்த்தார். ஏதும் கேட்கவில்லை.

மானசா அலைபேசியில் மேசேஜ் வந்தது. மானு ஏதும் செய்தால் உடனே என்னை அழைத்து விடு. உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன். நீயாவது சந்தோசமாக வாழணும் என பரணி அனுப்பி இருந்தான்.

“சரி மாமா” என பதில் அனுப்பி விட்டு படுத்துக் கொண்டாள்.

விடியற்காலை பொழுது புலர்ந்தது. ரம்யாவிற்கு அழைப்பு வர, அழைப்பை ஏற்று அப்சரா சொன்னதை கேட்டு பதறி விட்டாள்.

“நான் இப்பவே அவளை பார்க்கணும்” ரம்யா அழ, அவ உன்னிடம் மட்டும் தான் சொல்ல சொன்னாள். அவளும் உன்னை பார்க்கணும்ன்னு சொன்னா..என அவர்கள் பேசியதை அப்சரா கூறினாள்.

“எப்பன்னு சொல்லு? நான் இப்பவே தயாராகுகிறேன்” என்றாள் ரம்யா கண்ணீருடன்.

ரம்யா, “யாருக்கும் தெரியாமல் வரணும்” என்று நேரத்தை சொல்லி விட்டு பரணி, மானசாவிடம் விசயத்தை சொன்னாள். மானசா தூக்கத்திலே பேசினாள்.

“வந்துருவேல்ல? ரம்யா அழுதாள்” என்று அப்சரா கூறியவுடன் தூக்கம் களைந்து எழுந்து அமர்ந்தாள்.

“கண்டிப்பா வாரேன்” என்றாள்.

மானசா வீட்டிலிருந்து கிளம்ப, விகாஸ் அவளையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

“இவன் வர மாட்டான்” என எண்ணிய மானசா பரணிக்கு ஒரு செய்தியை அனுப்பி விட்டு கிளம்பினாள். அவள் சென்று விட்டால் என்றதும் கேரேஜூல் இருந்த பைக்கை எடுத்து ஹெல்மெட்டை அணிந்து விகாஸ் கிளம்பினான்.

பாட்டி வீட்டுத் தெருவின் முற்றத்தில் பரணி மானசாவுக்காக காத்திருந்தான். அவனுடன் அவள் செல்லும் போது தான் விகாஸ் கிளம்பினான். மானசாவின் ஆடையை வைத்து அவர்களை பின் தொடர்ந்தான். அவர்களும் ஹெல்மெட் அணிந்திருந்தனர்.

“எவனோட போறா? எங்க போறா? இது காலேஜ் போகும் வழியில்லையே!” விகாஸ் சிந்தித்தான்.

ரம்யா முன்னதாகவே வந்திருந்தாள். பாலத்தில் சந்திக்க ஏற்பாடு செய்திருந்தனர். பரணி பைக் பாலத்தில் நிற்க, விகாஸ் பைக்கை நிறுத்தி விட்டு மறைந்து கொண்டான்.

ஹெல்மேட்டை கழற்றியவுடன் பரணியை பார்த்து, “நேற்று தான இவனிடம் தொந்தரவு பண்ணாதன்னு அழுதா? இப்ப இவனோட இங்கே யாரை பார்க்க வந்திருக்கா?” என பார்த்தவனுக்கு ரம்யாவை பார்த்ததும் அதிர்ச்சி.

பாப்ஸ், “நீயா?” என மனதில் எண்ணும் போதே ரம்யா அழுது கொண்டே மானசாவை அணைக்கவும் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவ்விடம் வந்த காரிலிருந்து அப்சரா இறங்குவதை பார்த்து மேலும் அதிர்ந்தான்.

“மச்சானோட வுட்பீயா? என்ன நடக்குது?” என கண்ணை கசக்கி விகாஸ் பார்த்தான்.

அப்சரா ஸ்கேன் ரிப்போர்ட்டை ரம்யாவிடம் கொடுத்தாள்.

கண்ணை துடைத்து அவள் ரிப்போர்ட்டை பார்த்து, “வா போகலாம்” என மானசா கையை பிடித்தாள்.

அக்கா ப்ளீஸ், யாருக்கும் ஏதும் சொல்லக்கூடாது. பிராமிஸ் பண்ணுங்க என மானசா கையை நீட்ட, ரம்யா அவள் கை மீது கை வைத்து, “எந்த ட்ரீட்மெண்ட்டா இருந்தாலும் நீ ஒத்துக்கணும்” என ரம்யா மானசாவிடம் கையை நீட்டினாள்.

மானசா ரம்யா கையில் அடித்து, “தேங்க்ஸ்க்கா” என அழுதாள்.

இவர்களை பார்த்துக் கொண்டிருந்த பரணி, “உயிருக்கு பெரிய பிரச்சனை ஆகாதுல்ல?” என கண்கலங்கி கேட்டான்.

சொல்ல முடியாது. உடனே ட்ரீட்மெண்ட் செய்திடலாம் அப்சரா சொல்ல, நோ..அக்கா மேரேஜ் முடிந்த மூன்றாவது நாள் பார்த்துக்கலாம்.

“என்ன பார்க்கப் போறீங்க?” என்ற குரலில் அனைவரும் ஸ்தம்பித்து விக்ரமை பார்த்தனர்.

“எல்லாரும் இங்க என்ன பண்றீங்க?” என்ற விக்ரம் தூரம் நின்று கொண்டிருந்த விகாஸை பார்த்துக் கொண்டே கேட்டான்.

“நீங்க எப்படி இங்க?” அப்சரா கேட்க, அவளது தடுமாற்ற பேச்சில் அவளை உற்று பார்த்தான் விக்ரம்.

“நீ எதுக்கு வந்த?” மானசா கோபமாக கேட்டாள்.

“யாரும் வராத இடத்துல தனியா எதுக்கு பேசிட்டு இருக்கீங்க?”

“நான் கேட்டதுக்கு பதில் சொல்லு?” மானசா கேட்க, பரணியை பார்த்து விட்டு மானசாவை பார்த்தான். அவள் அமைதியானாள்.

“கேட்கிறேன்ல்ல சொல்லு?” என பரணி கன்னத்தில் அறைந்தான் விக்ரம் சீற்றமுடன்.

விக்ரம், “மாமாவ எதுக்கு அடிக்கிற? நான் தான் பேச வரச் சொன்னேன்”.

“இவனிடம் நீ என்ன பேசப் போற?” கோபமாக கத்தினான்.

மாமாவிடம் நான் என்ன வேண்டுமானாலும் பேசுவேன்..

“பேசுவியா?” என மானசாவை கேட்டுக் கொண்டே பரணியை அடித்தான்.

அண்ணா, அவர் பிரச்சனை ஏதும் பண்ணலை. பயப்பட தேவையில்லை ரம்யா சொல்ல, “வாயை மூடுங்க. யாருமில்லாமல் தனியா இங்க வந்து என்ன பண்றீங்க? அதுவும் இவனுடன்” என சீறினான்.

விக்ரம் நெஞ்சில் கை வைத்த மானசா, “எந்த பிரச்சனையும் இல்லை அண்ணா. நீ பயப்படும் அளவு மாமா டேஞ்சர் இல்லை” என்று அமைதியாக பேசினாள். மற்றவர்கள் அவளை வித்தியாசமாக பார்த்தனர். இவ்வளவு மென்மையாக மானசா பேசி பரணியே பார்த்திருக்க மாட்டான். இதில் அவள் அண்ணா போடவும், “நம்ம கதை அவ்வளவு தான்” என எண்ணி வேகமாக ரம்யா பின் மறைந்து நின்றான்.

விக்ரம் மனம் இளகி அமர்ந்தான். தூரத்தில் இருந்து பார்க்க விகாஸிற்கு தவறாக தெரிந்தது. விக்ரம் அவள் கையை எடுத்து விட்டு மண்டியிட்டு, “என்னை மன்னிக்க மாட்டாயா?” என கெஞ்சினான். அதிர்ச்சியுடன் மற்றவர்கள் இவனை பார்க்க, விகாஸ் உள்ளம் கொதித்தது. அவனுக்கு வழக்கம் போல் இவர்கள் பேசும் எதுவும் கேட்கவில்லை. அழுவது கெஞ்சுவது மட்டுமே தெரிந்தது.

முடியாது. நீ கிளம்பு. பிரபசர் சொன்ன ஒரு விசயத்தில் இருந்த டவுட்டை கிளியர் பண்ண தான் இவங்களை பார்க்க வந்தேன். மாமாவுக்கும் தெரியலையாம்..

“அதுக்கு இந்த இடமா கிடைத்தது? பேசிட்டு சீக்கிரம் கிளம்புங்க” என விக்ரம் செல்ல, அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் மானசா.

“மானூ” ரம்யா அவளை உலுக்கி, ஹாஸ்பிட்டல் கிளம்பலாமா? என அவளை பார்த்துக் கொண்டே கேட்க, “ம்ம்..போகலாம்” என கிளம்பினர்.

விகாஸ் இவர்களின் பைக் நிற்கும் இடத்தில் தான் நின்றிருந்தான்.

“கார்ல்ல வா” என மானசாவை அழைக்க, அங்க மூச்சு முட்டும்க்கா. நீங்க வாங்க. “நான் பரணியோட வாரேன்” என பைக் அருகே செல்ல, “நிஜமாக தான் விக்ரமை அண்ணன்னு அழைத்தாயா? அவரு உனக்கு அண்ணா தானா? லவ் இல்லையா?” பரணி கேட்டான்.

“லூசாடா நீ? சுவா அண்ணி அவரை எவ்வளவு காதலிக்கிறாங்க.. இப்படியெல்லாம் பேசி பிரச்சனை பண்ணீடாத. விக்ரமை பார்த்த நாளிலிருந்து அவன் எனக்கு அண்ணன் தான்” என மனதில் “எனக்கு எல்லாமே அவன் தான்” என எண்ண, அவள் கண்ணீர் தரையில் சொட்டியது.

விகாஸ் அவர்களை பின் தொடர, “பரணி, நம்மை யாரோ பாலோ பண்றாங்க” மானசா சொல்ல, அவனும் கவனித்து விகாஸை சிக்னலில் மாட்டி விட்டு சென்று விட்டான். இவர்களுக்கு முன்னதாகவே ஹாஸ்பிட்டலுக்கு சென்றனர் ரம்யாவும் அப்சராவும்.

ஹாஸ்பிட்டலுக்கு வந்த மானசாவிற்கு ஒரு வாரத்தில் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யணும். அவங்க ஹார்ட் ரொம்ப பலவீனமாக உள்ளது என ஸ்கேன் எடுத்த மருத்துவர் சொல்ல, ஒரு வாரத்திற்கு பின் தான் நான் வருவேன் என அவள் பிடிவாதம் செய்தாள்.

மானூ..சொன்னா கேளு. உன்னோட உயிரை விட உனக்கு என்ன முக்கியமா போச்சு? பரணி சினமுடன் கேட்டான்.

என்னோட விக்ரம்- சுவாதி அண்ணி திருமணம்.

“வாட்?” ரம்யா அவளை முறைத்தாள்.

அக்கா, ப்ளீஸ்..எனக்கு இப்ப இருப்பது விக்ரம் அண்ணா மட்டும் தான். அவர் வாழ்க்கை சந்தோசமாக அமையட்டும்.

“விக்ரம் அண்ணா உனக்கு ஜஸ்ட் உதவ வந்தவர் தான? அதுக்கு ஏன் இருவரும் இப்படி பாசமழையை கொட்டுறீங்க?” எரிச்சலுடன் கேட்டாள்.

“அக்கா, உங்களுக்கு பொறாமையா இருக்கா?” மானசா புன்னகைக்க, “இல்லையே!” என ரம்யா அவளை முறைத்தாள்.

நல்லா தெரியுது..என மானசா புன்னகைத்தாள்.

சார், “எதுக்கும் எப்பொழுதும் தயாராக இருக்கணும்” என அப்சரா சொல்லி இருவரையும் வெளியே அழைத்து வந்தாள். “ரம்யா ரிப்போர்ட் நீ வச்சுக்கிறியா?” அப்சரா கேட்க, “அண்ணி நானே வச்சுக்கிறேன்” என்றாள் அப்சரா.

“சாப்பிட வெளிய போகலாமா?” அப்சரா கேட்க, “வெளிய எதுக்கு? வாங்க பாட்டி வீட்டுக்கு போகலாம்” மானசா அழைத்தாள்.

“அங்கேயா? நான் வரலைப்பா” அப்சரா சொல்ல, “தாத்தாவை பார்த்தால் உங்களுக்கு பயம் தான?”

“இல்லை” என அவசரமாக தடுத்த அப்சரா, நேகனை மேரேஜ் பண்ண பின் தான் வரணும். அது தான் குடும்பத்து வழக்கம்.

“ஓ..மேரேஜா? எப்ப? அண்ணா பேசுனாங்களா?” மானசா கேலியாக கேட்க, ரம்யாவோ..இனி நான் உன்னுடன் தான் தங்கப் போறேன் என்றாள்.

அக்கா, வீ மாமா ஏற்கனவே என்னை பின் தொடர்ந்துகிட்டே இருக்காரு. இதுல திடீர்ன்னு நீங்களும் பாட்டி வீட்டுக்கு வந்தால் சந்தேகம் வரும்ல்ல?

வந்தால் வருது. நாம அங்க வச்சு பேச்சை குறைச்சுக்கலாம் என்றாள் ரம்யா.

வேல் ஆன்ட்டி, கோவிச்சுக்கப் போறாங்க..

அவங்கள நான் பார்த்துக்கிறேன். யூ நோ வொரிம்மா..பேசி விட்டு அவர்கள் சென்றனர்.

மானூ..வா, நானே உன்னை அழைச்சிட்டு போறேன்..பரணி கேட்க, “மாமா..பீச் போகலாமா?” என மானசா கேட்டாள். அவளை பைக்கில் அழைத்து சென்றான்.

மாமா, நான் தனியே இருக்கணும்.

ம்ம்..என அவன் தள்ளி அமர்ந்து அவளை பார்த்தான். மானசா மணல் மேட்டில் அமர்ந்து எல்லை முடியாத கடலை வெறித்துக் கொண்டிருந்தாள்.

தற்செயலாக வந்த விகாஸ் இருவரையும் பார்த்தான். மானசா அவளது பழைய நினைவிலிருந்தாள்.

அவள் முன் கையை கட்டிக் கொண்டு விகாஸ் நிற்க, அவளோ இவ்வுலகிலே இல்லை. பரணி அவர்களிடம் வந்தான்.

அவனை ஒரு பார்வை பார்த்து, “நீ கிளம்பு. இவளிடம் பேசணும்” என்றான்.

“என்ன பேசணும்? என் முன்னே பேசுங்க..”

“முடியாது” என விகாஸ் மானசா தோளில் கை வைக்க, நினைவுகளில் இருந்து வெளியே வந்த மானசா விகாஸை பார்த்து திகைத்து எழுந்தாள்.

“வா..என்னுடன்” என விகாஸ் அவள் கையை பிடிக்க, பரணி விகாஸ் கையை பிடித்தான்.

மாமா, நான் பேசிட்டு வாரேன்.

நான் தான் சொல்றேன்ல்ல. நாங்க ஒரே வீட்ல தான இருக்கோம். நான் அழைச்சிட்டு போறேன் விகாஸ் கூற, பரணி மானசாவை பார்த்தான்.

மாமா, கிளம்புங்க. நாங்க போய்க்கிறோம் என்றாள்.

பரணி இருவரையும் திரும்பி பார்த்துக் கொண்டே சென்றான். மானசா வருத்தமாக போகும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

மானசா கையை விட்டு, “வா..என்னோடு” என யாருமில்லா இடத்திற்கு அழைத்து சென்றான்.

“நீ எதுக்காக எங்க குடும்பத்துக்குள்ள வந்திருக்க? மாம்ஸ் உன்னோட அண்ணனா? சொல்லு?” என கேட்க, அவனையே இமைக்காது பார்த்துக் கொண்டிருந்த மானசா..”ஐ லவ் யூ மாமா” என்றாள்.

“வாட்?” என சீற்றமுடன் அவளை பார்த்தான்.

ம்ம்..வீ மாமா உன்னை தான்…நான் காதலிக்கிறேன்.

ச்சே..உனக்கு தெரியாதா? என்னோட கீர்த்துவை தவிர எந்த பொண்ணுக்கும் என மனதில் இடமில்லை.

தெரியும்.

“தெரிந்தும்மா? ஒரு வேலை நேற்று என்னுடன் ஒன்றாக இருந்ததால் பிடிக்குதுன்னு சொல்றீயா?” விகாஸ் கேட்க, அவள் கண்கலங்க அவனை பார்த்தாள்.

“நீ உடம்புக்காக வரலைன்னா எதுக்கு நேற்று என்னுடன் வந்த? நாம சேர்ந்து தான இருந்தோம்”. அவள் அமைதியாக அவனை பார்த்தாள்.

“அப்படின்னா என்னோட பப்ளிம்மாவை அந்த ராமை வைத்து நீ தான் எல்லாமே செய்தாயா? என்னோட உயிரை பிரிச்சது நீ தானா?” என மானசாவின் கழுத்தை விகாஸ் பிடித்தான்.

“விடுங்க” என கத்தி அவனை வேகமாக தள்ளி, இல்ல..நான் யாரையும் எதுவும் செய்யலை. எனக்கு உங்களை பிடிக்கும். சொன்னேன். உங்க மனசுல அவங்க தான் இருக்காங்க. நீங்க அவங்கள மறக்க மாட்டீங்கன்னு தெரியும்.

“அப்புறம் எதுக்கு லவ் பண்றேன்னு சொன்ன? பணத்துக்காகவா?” என பணத்தை எடுத்து அவளிடம் நீட்டினாள். “மானசாவிற்கு இதயம் இப்படியே வெடிச்சிறக் கூடாதா?” என்ற எண்ணம் மேலிட்டது.

“வேண்டாம்” என கண்ணீருடன் அவள் சொல்ல, “நடிக்காத. சுவாவிற்கு உதவுவது போல நடித்து பணம் வாங்க தான எங்க குடும்பத்துக்குள்ளவே வந்த? சொல்லு?” அவன் உலுக்க, அவள் பதில் பேசாது கண்ணீருடன் நின்றாள்.

“அழுது டிராமா பண்ணாத” விகாஸ் சீற, அவள் பேசவேயில்லை. அவனுக்கு கோபம் வெறியானது.

அவள் கையை பிடித்து இழுத்து அவனது காரில் மானசாவை சாய்த்து, “உனக்கு என்னோட உடம்பு தான வேணும்” என ஆக்ரோசமாக மானசாவின் இதழ்களில் வன்மத்தை கக்கினான் விகாஸ். அவள் கண்ணீருடன் அசையாது அவன் கண்களையே பார்த்தாள்.

அவள் மனம் இறுக லேசான வலி ஏற்பட்டது. பரணி இதை பார்த்து விகாஸை இழுத்து ஓங்கி அறைந்து விட்டு மானசாவை பார்த்து பதறினான்.

பரணி அடித்ததில் கோபமாக மானசாவை தள்ளி விட்டு விகாஸ் காரில் விரைந்தான்.

மானசா நெஞ்சில் கை வைத்து அழுத்த, “வலிக்குதா மானூ?” என கண்ணீருடன் அவன் பாக்கெட்டில் வைத்திருந்த அவளது மாத்திரையை கொடுத்து அவன் பைக்கில் தண்ணீரை எடுத்து அவளுக்கு புகட்டினான். அவன் மடியில் சாய்ந்து மெதுவாக கண்களை மூடினாள் மானசா.

அச்சமயம் காரிலிருந்து ரோஜரும் அவன் நண்பர்களும் இறங்கி பரணியிடம் கோபமாக வந்தனர். அவன் அழுது கொண்டே மானசாவை மடியில் வைத்திருக்க, அவன் கையை இறுக பற்றியவாறு கண்களை மூடி தூங்கினாள்.

“என்னாச்சுடா இவளுக்கு?” அவன் பதறி கேட்க, அவளுக்கு கொடுத்த பிராமிஸால் அவன் சொல்லாமல் இருந்தான்.

“அவளை விட்டு நகருடா” ரோஜர் அவனை அடிக்க, பரணியோ அவன் அடிக்கவும் அழுகை அதிகமானது. அனைவரும் அதிர்ந்து அவனை பார்த்தனர்.

என்ன சொல்லுடா? ரோஜர் அவனை உலுக்க, கண்ணீருடன் அவன் விசயத்தை சொல்லி விட்டான். அனைவரும் பதட்டமாக..ட்ரீட்மென்ட்..என கேட்க, ப்ளட் கொடுத்திருக்கோம். ஹார்ட் கிடைக்கவும் செய்யலாம்ன்னு டாக்டர் சொன்னாங்க.

ஆனால் மானூ இரு வாரம் கழித்து தான் பண்ணுவேன் என்று அவள் சொன்ன காரணத்தை சொல்லி விட்டு ரோஜர் தோளில் பரணி சாய்ந்தான். அனைவருக்கும் இடியே தலையில் இறங்கியது போல இருந்தது.

யாரிடமும் நீங்க சொல்லாதீங்க..என பரணி மானசாவை தூக்கி ரோஜர் காரில் போட்டு, “அவளை வீட்ல பத்திரமா விட்ருங்க” என சொல்லி அனுப்பி வைத்தான்.

ஊரை சுற்றி விட்டு விகாஸ் வீட்டிற்கு வந்தான். அவன் தாத்தா முகம் கவலையுடன் இருந்தது. அவன் கோபத்தை தவிர்த்து, தாத்தா அருகே வந்து அமர்ந்தான்.

“எங்க போயிட்டு வர்ற? கம்பெனிக்கு போகலையாமே!”

என்னிடம் மட்டும் தான் இந்த கேள்வி? என மானசா அறையை பார்த்தான்.

விகாஸ் பார்ப்பதை கவனித்த தாத்தா, மானு குட்டிக்கு உடம்பு சரியில்லை என்றதும் தணிந்த அவன் கோபம் பெருக்கெடுத்தது.

“குட்டியா? என்ன தாத்தா? அவ யாருன்னே தெரியலை. எல்லாரும் அவளுக்கு இடம் அதிகமா கொடுக்குறீங்க. அவளுக்கு உடம்பு தான சரியில்லை செத்தா போயிட்டா” என விகாஸ் கேட்க, சினமான தாத்தா அவனை அடித்தார்.

“ஏற்கனவே ஒரு பிள்ளையை தவற விட்டது போதாதா? என்ன பேச்சு பேசுற?” சீற்றமுடன் கடிந்தார்.

ஆமா, “என்ன பேசிட்டோம்? அவள் என்ன தான் எல்லாரையும் ஏமாற்றினாலும் உயிராயிற்றே..சாரி தாத்தா” என எழுந்தான்.

“நீ வீட்டுக்கு கிளம்பு” என்றார் அவர்.

வீட்டுக்கா? இது என்னது?

உன்னோட பெற்றோர் பற்றிய எண்ணமே உனக்கு இல்லையா? உன்னோட அம்மாவுக்கு காலையில இருந்து உடம்பு சரியில்லை. போ..பார்த்துட்டு வா..

அவன் அமைதியாக இருந்தான். அவனை கோபமாக முறைத்து விட்டு அவர் எழுந்தார்.

மானசா அறையிலிருந்த பாட்டி, “பிள்ள கண்ணை முழிச்சிட்டா” என்றார்.

மாலை அஸ்தமனம் மானசாவிற்கு புத்துணர்ச்சி அளிக்க கண் விழித்தாள்.

தாத்தா அறைக்கு செல்ல, விகாஸ் பின்னாலேயே சென்றான்.

ஏன்டா, “இவ்வளவு சோர்வா தெரியுற? சூப் எடுத்துட்டு வரவா?” பாட்டி கேட்க, அவரை அணைத்த மானசா, “பாட்டி இன்று மட்டும் என் பக்கத்துல்லயே இருக்கீங்களா?”

என்னம்மா பண்ணுது? தாத்தா கேட்டுக் கொண்டே உள்ளே வந்தார். அவர் பின் வந்த விகாஸை பார்த்து விட்டு, “தாத்தா விக்ரம் அண்ணாவை வரச் சொல்றீங்களா? அவரை பார்க்கணும் போல இருக்கு” என்றாள்.

அவள் எதையும் கூறி விடுவாளோ என அவன் பயத்தில் விழித்தான்.

அவனை பார்த்து புன்னகைத்த மானசா, மாமா நீங்களும் இங்கேயே இருங்களேன்..

“நான் என் மாம்மை பார்க்க போகணும்” என அவன் நகர, தாத்தாவும் பாட்டியும் இருவரையும் மாறி மாறி பார்த்தனர்.

“போயிட்டு தங்கி உன்னோட அம்மாவை பார்த்துக்கோ” தாத்தா சொல்ல, “ஆன்ட்டி தனியா ஃபீல் பண்றாங்களா தாத்தா?”

ஃபீவர்ம்மா அவங்களுக்கு..

“ஓ என சுவாதியை பார்த்து, அண்ணி நீங்களும் மாமாவோட ஆன்ட்டியை பார்க்க போகலாம்ல்ல?” எனக் கேட்டாள். சுவாதியோ அவர்களது குடும்ப புகைப்படத்தை பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்.

பாட்டி, “ஒரு நிமிசம்” என அவரிடமிருந்து எழ, நெஞ்சில் ஏதோ காலியானது போல மானசாவிற்கு தோன்ற அனீச்சையாக அவள் கைகள் நெஞ்சில் சென்றது. முகம் மாறியது.

“என்னம்மா? எதுவும் பண்ணுதா? எதுக்கு திடீர்ன்னு மயக்கம் வந்திருச்சு? அதுவும் இவ்வளவு நேரம் கழித்து விழிச்சிருக்க?” தாத்தா சந்தேகமாக மானசாவிடம் கேட்க, “மயக்கமா?” என விகாஸ் அவளை அதிர்ந்து பார்த்தான்.

தாத்தா, தூங்க முடியாமல் இருந்தால் நான் மாத்திரை எடுத்துப்பேன். டாக்டர் அறிவுரைபடி தான். இன்று பதட்டத்தில் விட்டமின் மாத்திரைக்கு பதில் தூக்க மாத்திரையை போட்டுட்டேன் என விகாஸை பார்த்தாள்.

“விட்டமின் மாத்திரை எதுக்கு?”

எனக்கு கெல்த் பிராபிளம் இருந்தது. அதனால மருத்துவர் எடுத்துக்க அறிவுறுத்தினார். உடல் வீக்கா இருந்தா எடுத்துப்பேன்.

“மாத்திரை எதையும் அதிகம் எடுத்துக்காதம்மா” தாத்தா சொல்ல, விகாஸ் அவளை பார்த்துக் கொண்டிருந்தாலும் அவனின் வன்மையான முத்தம் அவன் எண்ணத்தில் உதித்தது. கைகள் தானாக அவள் இதழ்களுக்கு சென்றது.

“முகத்துல்ல எங்கேயும் அடிபடலை. உதட்டுல்ல மட்டும் காயம் இருக்கு?” பாட்டி கேட்க, விகாஸ் திகைத்து அவர்களை பார்த்தான்.

முன்னோக்கி விழும் போது என்னோட ப்ரெண்டு என்னை பிடிக்க வந்தான். அவன் கையை பிடிக்க, கல்லில் உதடு இடித்தது. அதான் காயமாகிடுச்சு பாட்டி என காய்ந்த அவள் உதட்டை ஈரமாக்கினாள். அவளை பார்த்துக் கொண்டிருந்தவன் பார்வை அவள் இதழ்களை அடையவும் தலையை கோதி பார்வையை வேறு பக்கம் திருப்பினான். அவள் அவனை விரக்தி பார்வையுடன் பார்த்தாள்.

தாத்தா இருவரையும் கவனித்துக் கொண்டிருந்தார். உதட்டு காயம் அடிபடல. விகாஸ் தான் செய்திருக்கான் என புரியவும் “வீ வா போகலாம்” என அவனை தனியே அழைத்து சென்று கேட்டார்.

“சாரி தாத்தா” என அவன் விலக எண்ணும் போது, பேரன்னு பார்க்கமாட்டேன். விருப்பமில்லாத பொண்ணை இனி தொட நினைச்சா சுட்டு தள்ளீட்டு போய்கிட்டே இருப்பேன் என உறுமினார்.

சரி தாத்தா. “இனி நடக்காது” என மானசா அறையை அங்கிருந்தே பார்த்து விட்டு கிளம்பினான்.

Advertisement