Advertisement
நீ நான் 25
முக்தா யாருக்கும் தெரியாமல் வினித் அறைக்குள் செல்ல, அவன் அங்கே இல்லை. அவள் யோசனையுடன் பார்க்க, கதவின் பின் நின்று அவள் தேடுவதை ரசித்து பார்த்தான்.
மாமா, “என்ன விளையாட்டு? ஏற்கனவே நடந்ததை எண்ணி பயமா இருக்கு. அண்ணாவுக்கு பிரச்சனை ஏதும் இருக்காதுல்ல?”
“இங்க வந்தது உன் அண்ணாவை பற்றி கேட்கவா?”
முக்தா சினமுடன் திரும்பிக் கொண்டாள்.
ஓய், “திரும்பிட்டா என்ன அர்த்தம்?” அவன் கேட்க, அவளிடமிருந்து சத்தமே இல்லை.
“முகி” வினித் அவளை திருப்பினான். முக்தா கண்ணீருடன் நின்று கொண்டிருந்தாள்.
“மேடம் வளந்துட்டேன்னு பந்தாவா பேசிய நியாபகம்” என வினித் கேலியுடன் அவளை நோக்கினான்.
ஆமா, “சொன்னேன். நீங்க எதுக்கு அந்தாளு முன்னாடி போனீங்க? அவன் எப்படி பேசுகிறான்? நான் எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா? நீங்க மூவருமே எனக்கு முக்கியமானவங்க. உங்களுக்கு ஏதாவது ஆனால்” என முக்தா அழுதாள்.
“அச்சோ! என்னோட அழகு குட்டிம்மா அழுகாச்சி குட்டிம்மாவா எப்ப மாறினா?” என முக்தாவை கொஞ்சிக் கொண்டே கண்ணீரை துடைத்தான் வினித்.
“போங்க மாமா..நீங்க என்ன சொன்னாலும் எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா?” என அழுதாள்.
அவளது நெற்றி முட்டி, அவனால் எங்களை ஏதும் செய்ய முடியாது குட்டிம்மா. அழாதடா என அவளது கன்னத்தில் முத்தமிட்டான்.
“எனக்கு இது பத்தாதே!” முக்தா சொல்ல, விழிகளை இறக்கி அவளை பார்த்தான்.
மாமா..என கொஞ்சலாக அழைத்து அவனிடமிருந்து விலகி, அவனது பொருட்களை உருட்ட பதறினான் வினித். அவள் காகிதம் ஒன்றை கொடுத்து, “எழுதி தாங்க மாமா” என்றாள்.
“எழுதணுமா?” தாடையை தேய்த்தான்.
அவனது மீசையை பிடித்து இழுத்து, “ஆசை தான் போங்க” என வெட்கமுடன் திரும்பி, “இனி அவனால் ஆபத்து வராதுன்னு சொன்னீங்கல்ல? எழுதி கொடுங்க” என்றதும் வினித் சிரித்தான்.
“எழுதி கொடுக்கப் போறீங்களா? இல்லையா?” முக்தா கோபமாக அவனை பார்த்தாள்.
பால்கனிக்கு அழைத்து சென்ற வினித், அவளை பின்னிருந்து கட்டிக் கொண்டு அந்த ஸ்டாரை பாரேன். அது தனியா தான இருக்கு.
ஆமா அழகாவும் இருக்கு.
அது போல் நானும் ஆக வாய்ப்பிருக்கு என வினித் சொல்ல, முக்தா கண்கலங்கி அவனை பார்த்தாள்.
வினித் அவளை பார்த்து, இவன் நாம மோதும் அளவிற்கு சாதாரணமான ஆள் இல்லை. அவன் அஜய்யை பார்த்ததை எண்ணினாலே பயமா தான் இருக்கு. திவ்யா இப்படி இறந்து போவான்னு நினைக்கலை. ஏற்கனவே பொண்ணு மேல பாசமாக இருப்பவன் அவளை கொன்னவனை சும்மா விட மாட்டான்.
நம்மல்ல யாரோ தான் இதை செஞ்சிருப்பானுகளோன்னு சந்தேகமா இருக்கு.
மாமா, “இப்படியெல்லாம் பேசாத” என கண்ணீர் முக்தாவிற்கு முட்டிக் கொண்டு வந்தது.
அஜய் சிறு வயதிலிருந்து என் தோழன்னா..மத்தவங்க என்னோட பள்ளியிலிருந்து தோழர்கள். அவங்களுக்கு ஒன்று என்றால் நான் முன் நிற்க தான் செய்வேன் முகி. அதனால எனக்கு என்ன வேண்டுமானாலும் ஆக வாய்ப்பிருக்கு.
ப்ளீஸ் மாமா, “இப்படி பேசாதீங்க” என முக்தா அழவும் வினித் கண்ணீருடன், கவலைப்படாத முகி. முடிந்தவரை நான் இந்த பிரச்சனையில இருந்து உயிரோட வர முயற்சி செய்கிறேன்.
“முயற்சியா? மாமா..நீங்க இல்லாம நானும் இருக்க மாட்டேன்” என அவள் சொல்லவும் அவள் இதழ்களில் மென் முத்தத்தை பதித்து விட்டு, எனக்கு ஏதும் ஆகாது. ஆனாலும் என்னோட அழகு குட்டிம்மா ஸ்ட்ராங்கா இருக்கணும்.
“மாமா” என வினித்தை அணைத்து முக்தா அழுதாள்.
“கண்டிப்பாக உன்னோட மாமாவுக்கு ஏதும் ஆகாது” என்ற குரலில் இருவரும் அஜய்யை பார்த்தனர். அஜய் தூங்க முடியாமல் புரண்டு கொண்டிருந்த சமயம் பால்கனி வந்து இவர்களது பேச்சை கவனித்து இருப்பான்.
அண்ணா, “எனக்கு நீயும் முக்கியம் தான்” என முக்தா அழுதாள்.
பிராமிஸ்டா. யாருக்கும் ஏதும் ஆகாது. இதுக்கு மேல எந்த இழப்பையும் தாங்க யாருக்கும் இங்கு சக்தியில்லைன்னு நன்றாக தெரியும் என்று அஜய் வினித்தை பார்த்தான். வினித் கண்கலங்க அஜய்யை பார்த்தான்.
“போ தூங்கு. குட் நைட்” என அஜய் சொல்ல, வினித்தை பார்த்துக் கொண்டே முக்தா சென்றாள்.
“நான் உன்னிடம் பேசணும்ன்னு நினைக்கிறேன் வினு” என அவன் படுக்கையில் அமர்ந்து பேசி சென்றான்.
ரோஹித் அறைக்கு வந்த மனீஷா அவனிடம் ஏதும் பேசாமல் படுக்கையில் திரும்பி படுத்துக் கொண்டாள். இருவரும் அறைக்குள் மொழி அறிய கொஞ்சம் நெருங்கி தான் இருந்தனர்.
“மன்னூ செல்லூ” ரோஹித் அழைக்க, அவள் கோபமாக அவனை பார்த்தாள்.
“கோபமா?”
“பார்த்தால் எப்படி தெரியுது?”
கோபம் மாதிரி தான்..
ஆமா, ரொம்ப கோபம் தான். அவனுக யாருன்னு கூட கேட்காமல் போயிட்டீங்க. நான் எப்படி அழுதேன் தெரியுமா?
“எதுக்கு அழுத?” நான் உன்னோட புருசன் மட்டும் தான. காதலனாக இருந்தால் தான அதிகமாக வலிக்கும். நான் செத்தால் வேறொருவனை கல்யாணம் பண்ணிக்கோ.
ஐ டோட் அன்டர்ஸ்டான்டு..
அவன் ஆங்கிலத்தில் கூற, பதறி போய் அவனை அடித்து அழுதாள் மனீஷா.
ஆமா, நீ புருசன் தான். “காதல் இல்லைன்னா வலிக்காதா?”
சரி, என்னோட இடத்துல யாரோ ஒருத்தனை வச்சி சொல்லு. தாலி கட்டின்னா உனக்கு அவன் மீது இந்த அளவு பாசம் இருக்குமா? உன்னோட அலாவை மறந்து அவனுக்காக இந்த அளவு துடிப்பாயா? சொல்லு? எனக் கேட்டான்.
மனீஷாவிற்கு புரியத் தொடங்கியது. அவள் மனம் ரோஹித் பக்கம் சாய்வதை உணர்ந்தாள்.
சொல்லு மன்னூ? ஒரு வேலை நாளைக்கே நான் செத்துட்டா என அவளை பார்த்தான். அவள் கண்ணீருடன், “வேண்டாம்” என அழுதாள்.
அப்ப சொல்லு?
ம்ம்…எனக்கு புரியுது. எனக்கு உங்களை ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு. அதுக்காக என்னோட அலாவை மறந்துட்டேன்னு இல்லை.
பெருமூச்சுடன் ரோஹித் அவளை பார்த்து, “ஓ.கே படுத்துக்கோ” என படுத்தான்.
என்னால அலாவை மறக்க முடியாது.
“ம்ம், நல்லா தெரியுது” என அவன் பதில் கோபமாக வந்தது.
“நான் என்னோட அலாவை மறக்கணும்ன்னு நினைக்கிறீங்களா?”
“இல்லை” என அவன் கண்களை மூட, “என்ன நினைக்கிறீங்க?”
“அது உனக்கு தேவையில்லை. எனக்கு டயர்டா இருக்கு” என கண்களை மூடி தூங்கினான். அவளால் தூங்க முடியவில்லை. அரசன் மீதுள்ள காதலையும் விட முடியாமல் ரோஹித்தையும் விட முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தாள் மனீஷா.
விடியற்காலை பொழுது அனைவரையும் இனிதே வரவேற்க, கண்களை பிரித்தான் ரோஹித். அவன் மார்பில் முகத்தை புதைத்து ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த தன் மனைவியை பார்த்தான். அவள் அவளோட அலாவை மறக்க முடியாது என சொன்னது அவனுக்குள் வலியை ஏற்படுத்தியது. ஆழ்ந்து மூச்செடுத்து விட்டு அவளை மெதுவாக நகர்த்தினான். “ஷா டிஸ்டர்ப் பண்ணாதடி” என மனீஷா தூக்கத்தில் பேசிக் கொண்டே நகர்ந்து தூங்கினாள்.
“ஷாவா? யாராக இருக்கும்?” என ரோஹித் சிந்தனையுடன் எழுந்து தயாராகி வந்தான். அவனுக்காக காத்திருந்தாள் மனீஷா.
“எப்ப எழுந்தீங்க?” என கொட்டாவியை கைகளால் மறைத்தவாறு கேட்டாள்.
அவளை பார்த்த ரோஹித், உன்னோட பொருட்களை எடுத்து வைத்து தயாராகி வா.
“எங்க?”
பாட்டி அறையில. சோட்டுவுடனும் அவங்களுடனும் தங்கிக்கோ.
“என்ன?” வேகமாக எழுந்தாள்.
சொல்ல வேண்டியதை சொல்லி விட்டேன் என்பது போல் அவன் தலையை வாரிக் கொண்டிருந்தான். அவன் முன் வந்த மனீஷா, நான் இங்கேயே இருக்கேன்.
எனக்கு இரவு வேலை இருக்கும். லேப் யூஸ் பண்ணுவேன். அறையில் வெளிச்சமாக இருக்கும். உன்னால தூங்க முடியாது.
இல்லங்க. நான் தூங்குவேன்..
இருக்கட்டும். எடுத்து வச்சுட்டு தயாராகி வா. நான் பாட்டிகிட்ட பேசணும் என அவன் சென்று விட்டான்.
மனீஷா மனசாட்சியோ, “இது உனக்கு நல்லது தான மனூ. எதுக்கு வருத்தப்படுற?” அவன் இனி உன்னை தொட்டு பேச மாட்டான்.
“அவரு கஷ்டப்படுவாரே!”
அவரா? யார் அவன்? உன்னோட புருசன் மட்டும் தான். உன்னோட அலா தான் உனக்கு எல்லாமே. நீ அவரை தான காதலிக்கிற. அவர் இறந்தாலும் உன்னோட காதலன். உனக்காக அவனும் அவன் குடும்பமும் உயிரையே விட்டது என நினைவு வரவும், மனீஷாவும் அவள் பொருட்களை பெட்டியில் அடுக்கி வைத்து குளித்து தயாராகி வந்தாள்.
பாட்டியிடம் எதையோ பேசி அவரை சமாதானப்படுத்தினாலும் அவருக்கு பேரனின் எண்ணம் புரிந்தது. உடன் இருக்கும் போது இல்லாத உணர்வு பிரிந்திருந்தால் வர வாய்ப்பிருக்கு என அவரும் எண்ணிக் கொண்டு சம்மதித்தார்.
தியாவோ கோபமாக மனீஷாவிடம் பேச வந்தாள். அவளை நிறுத்திய ரோஹித் மனீஷாவை பாட்டி அறையில் விட்டு உணவை முடித்து கிளம்பினான்.
பாட்டி அனைவரையும் நிறுத்தி அந்த ஷெட்டியிடம் கவனமாக இருக்க சொல்லி அறிவுரை வழங்கினார்.
ரோஹித் நீ வினு, யுகி கூட போ. நான் பாட்டிகிட்ட பேசிட்டு வாரேன் என அவர்களை அனுப்பி விட்டு ராக வீரனையும் அழைத்துக் கொண்டு அவரறைக்கு சென்று, அவன் அம்மா உயிரோடு இருப்பதை கூறினான் அஜய்.
காதம்பரி மட்டும் இதில் சம்பந்தப்பட்டு இருக்க மாட்டான்னு தோணுது அங்கிள்.
மாம்..ரத்தன் ஷெட்டி கிட்ட கூட இருக்கலாம். ஆனால் கண்டிப்பாக சென்னையில தான் இருக்காங்க. யாரும் செல்ல முடியாத இடம்ன்னு நினைக்கிறேன். எதுவாக இருக்கும்?
ஷெட்டி வீட்ல இருப்பாங்களோ? ராகவீரன் யோசனையுடன் பேசினார்.
இருக்காது. சும்மா இடம் மாத்த மாட்டாங்க. கடத்திய போது எங்க வச்சிருந்தாங்களோ அங்க தான் இருப்பா என்ற ராணியம்மாவின் கூற்றை ராகவீரன் ஏற்றுக் கொண்டார்.
அங்கிள், உங்களுக்கு தெரிந்த அது போலான இடம் இருக்கா?
ம்ம்..சரியா தெரியல. காதம்பரி அவ வீட்டுக்குள்ள தான் யாரையும் விட மாட்டா. வேறெங்க? என சிந்தித்தார்.
சரி அங்கிள், “பார்க்கலாம்” என்று அஜய் கம்பெனிக்கு கிளம்பி விட்டான்.
அதிகாலையிலே எழுந்த விகாஸ் வெளியே வந்தான். பாட்டி சோபாவில் அமர்ந்திருந்தார். அவரை பார்த்து அவர் அருகே சென்று அமர்ந்தான்.
அச்சமயம் கதவை திறந்து, ப்ளூ கலர் டாப்பும் பேண்டும், உச்சியில் குதிரைவால் போட்டு வெளியே வந்தாள் மானசா.
ஹாய் பாட்டி, “குட் மார்னிங்” என சொல்ல, அவருக்கும் அவளுக்கு சொன்னார். அருகே இருந்த விகாஸை பார்த்து அலட்டிக் கொள்ளாமல் மடமடவென மாடி ஏறினாள்.
“இவ காலங்காத்தால எங்க போறா?” என மனதில் எண்ணியவாறு பாட்டியை பார்த்தான். அவர் அவனுக்கு காபி எடுத்து வர அடுக்கலைக்குள் சென்றார். அவர் வந்து பார்த்த போது விகாஸ் அங்கு இல்லை. அவன் மானசாவை கவனிக்க சென்றிருந்தான்.
மொட்டை மாடிக்கு சென்ற மானசா கதிரவனை பார்த்து, சூரிய நமஸ்காரம் செய்து விட்டு போர்வையை விரித்து உடலை வளைத்து நெளித்து யோகா செய்தாள். விகாஸ் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள் முடித்து விட்டு அவன் பக்கம் வரவே கீழே வேகமாக ஓடினான். தாத்தா அவனை பார்த்து, “என்னாச்சு இவனுக்கு?” கேட்டுக் கொண்டே பாட்டியின் அமிர்த தேனீரை பருகிக் கொண்டிருந்தார்.
நல்லவன் போல அவர் பக்கம் அமர்ந்து அலைபேசியில் எதையோ பார்ப்பது போல நடித்தான். அவன் பின்னே வந்த மானசாவை பார்த்து தாத்தா பாட்டியை பார்த்தார்.
“குட் மார்னிங் கர்னல் சார்” என சல்யூட் செய்தாள். அவரும் புன்னகையுடன் சல்யூட் செய்து அவளுக்கு குட் மார்னிங் சொல்லி அமரச் சொன்னார்
சற்று நேரம் கழித்து வாரேன் தாத்தா. அறைக்கு சென்று குளித்து டாப்பும், ஸ்கர்ட்டுமாக மானசா வெளியே வந்து அடுக்கலைக்குள் நுழைந்து தேனீர் தயார் செய்து இரு கோப்பையுடன் அறைக்கு சென்றாள். விகாஸ் அவளை கவனிப்பதை பார்த்து, “வீ எதுக்கு மானுகுட்டியை இப்படி பாக்குற?” தாத்தா கேட்டார்.
“மானு..குட்டியா..?” கோபமாக தாத்தாவை பார்த்தான்.
ஆமா, இதுல என்ன?
அவ யாருன்னு விசாரிக்காம வீட்டுக்குள்ள விட்ருக்கீங்க. அவ கூட சுவா இருக்கா என அறியாத சிறுவன் போல கேட்டான்.
மானு ரொம்ப நல்லப் பொண்ணு. சுவா உன்னோட தங்கச்சின்னு உனக்கு நினைவு வந்திருச்சா? கீர்த்து போன பின் அவள் யாரிடமும் பேசவேயில்லை. மானுகுட்டி தான் பார்த்துக்கிட்டா. மானுக்கு அடிபட்டு ஹாஸ்பிட்டல் வந்த போது தான் சுவா உன்னோட அம்மாகிட்டவே பேசி அழுதாள். கீர்த்து நம்மை விட்டு போனது நமக்கு..உனக்கு பெரிய இழப்புன்னா..மானுவும் சும்மா இல்லை. அவளோட தந்தை, அக்காவை இழந்திருக்கா..அந்த வலியை கூட மனசுல வச்சிட்டு நம்ம சுவாவை பார்த்துக்கிட்டா..என பாட்டி அழுது கொண்டே பேரனை பார்த்தார். அவன் கூறிய கீர்த்துவை எண்ணி தான் இப்பொழுதும் அழுதான் விகாஸ்.
கதவு திறக்கும் சத்தம் கேட்டு கண்களை துடைத்துக் கொண்டனர்.
அண்ணி..வாங்க, “நாம வெளிய போயிட்டு வரலாம்” என கேட்டுக் கொண்டே எதையோ தேடினாள் மானசா. சுவாதியிடம் சத்தமே இல்லை.
இதோ..கிடைச்சிருச்சு. இப்படி தான் அண்ணி எங்காவது வச்சுட்டு தேடிட்டே இருப்பேன். யாராவது எடுத்து கொடுக்கணும் என அவளது பர்ஸ்ஸை எடுத்தாள்.
“எங்க?” சுவாதி குரல் நலிந்து ஒலித்தது. விகாஸ் அமைதியாக இருந்தான்.
“இப்ப கூட உன்னோட தங்கையை பார்க்க உனக்கு தோணலையா?” பாட்டி கேட்க, பதில் கூறாமல் எழுந்தான்.
எங்க போகலாம்? என சிந்திப்பது போல ஓரக்கண்ணால் மானசா சுவாதியை பார்த்தாள்.
“கீர்த்து” என சுவாதி சொல்ல, அனைவரும் அதிர்ந்தனர். விகாஸ் கண்ணீருடன் அறையை பார்க்க மானசா மட்டும் தான் தெரிந்தாள்.
அண்ணி, “கீர்த்து தூங்குறா? அவள எதுக்கு தொந்தரவு செய்யணும்?” என மானசா கண்ணில் பட்டென கண்ணீர் வடிந்து விட்டது.
“உன்னோட வீட்டுக்கு?” சுவாதி சொல்ல, “என்னோட வீடா? எனக்கு இப்ப வீடில்லையே! அதை விக்க ஏற்பாடு பண்ணீட்டேன். வேற சொல்லுங்க?”
“அண்ணா” அவள் சொல்லவும் விகாஸ் எழுந்தான். மானசா அவனை பார்த்தாள். அவன் உள்ளே சென்று விட்டான்.
அண்ணி, “நானே உங்களை கூட்டிட்டு போறேன். பூங்கா போகலாம். ஜாலியா விளையாடலாம்” என கண்ணை துடைத்தாள் மானசா.
ம்ம்..
எழுந்திருங்க போகலாம் என மணியை பார்த்தாள். எட்டாகி இருந்தது. இருவரும் வெளியே வந்தனர். பேருந்தில் சுவாதியை மானசா அழைத்து செல்வதை பார்த்து விகாஸ் அவர்களை பின் தொடர்ந்தான். தாத்தாவும் பாட்டியும் புன்னகைத்துக் கொண்டனர்.
பூங்கா வரவும் உள்ளே சென்றனர். விகாஸூம் பின்னே வந்தான். மானசா அவனை திரும்பி பார்க்க, சுவாதி அசையவும் இல்லை மானசா கையை விடவும் இல்லை. இறுக்கமாக பிடித்திருந்தாள்.
“வாங்க. ஊஞ்சலில் அமரலாம்” என சுவாதியை அமர வைத்து மானசா ஆட்டினாள். விகாஸ் தூரமாக அமர்ந்து சுவாதியை பார்த்துக் கொண்டிருந்தான்.
மானசாவின் யோசனையில் அவள் கண்கள் கலங்கியது. அமைதியாக ஆட்டி விட்டாள். அவளது அலைபேசி அழைக்க, விகாஸ் அவளை பார்க்க, வழிந்த கண்ணீரை துடைத்து அலைபேசியை பார்த்து, “ம்ம்..சொல்லு?” என்றாள்.
“எங்க இருக்க?” அந்த பக்கம் குரல் கேட்க, பார்க்ல்ல.
“நீ ஓ.கே தான? இன்று காலேஜ் வருவேல்ல?” ஆணின் குரல்.
ஓ.கே தான். வருவேன்..அவள் சொல்லி முடிக்க, அவன் பின் வந்த ஒருவன் மானசா கண்களை மூடினான். அவன் கைகளில் அவளது கண்ணீரின் ஈரம்.
யாரு? என அவள் கேட்க, “நான் தான்” என கையை எடுத்தான்.
அவனை பார்த்து, இப்ப இங்க எப்படி வந்த?
“என்ன இது? இதான் ஓ.கேவா?” என அவள் கண்ணீர் ஈரத்தை காட்டி கேட்டான்.
ஊருக்கு எப்ப வந்தீங்க?
நேற்று இரவு தான்..என கையை ஓர் பக்கம் காட்ட, அங்கே அவள் வயதையொத்த சில பசங்களும் பெண்களும் நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஊஞ்சலை விட்டு வாயில் கை வைத்து கண்ணீருடன் எல்லாரையும் பார்த்தாள் மானசா.
மானு..என ஒரு பொண்ணு முதலில் ஓடி வந்தாள். அவர்களை பார்த்ததும் கண்ணீர் பொலபொலவென கொட்டி விட்டது மானசாவிற்கு.
இப்ப தானடி எல்லாம் சரியானது. அதுக்குள்ள..என ரோஸ் மானசாவை கண்ணீருடன் அணைத்தாள்.
மனதில் அடக்கி வைத்திருந்த அழுகையை மானசா கொட்டித் தீர்த்தாள். விகாஸிற்கு அவர் தாத்தா சொன்ன அவள் அப்பா, அக்கா நினைவிற்கு வந்தனர்.
சாரிடி, உனக்கு உடன் இருக்க வேண்டிய நேரம் எங்களால இருக்க முடியல என மற்றொரு பொண்ணும் அவளை அணைக்க, அனைவரும் ஆறுதலாக பேச, கண்ணீரை துடைத்து சுவாதியை பார்த்தாள் மானசா.
சுவாதி மானசாவையும் மற்றவர்களை பார்த்துக் கொண்டிருந்தாள்.
ரோஜர்..இவங்க விக்ரம் காதலிக்கிற பொண்ணு. அவனோட தங்கை இறந்த பின் இப்படி தான் இருக்காங்க. யாரிடமும் பேச கூட மாட்டேங்கிறாங்க. என்னிடம் தான் எப்பவாது பேசுவாங்க..
சைக்காட்டிஸ்ட்ட காட்டலாம்ல்ல?
அவங்க அண்ணாவும் சைக்காட்டிஸ்ட் தான். பிரச்சனை விக்ரமும் இவங்க பிரதரும் தான். இப்ப இதை பற்றி பேச வேண்டாம்.
அண்ணி..இவங்க எல்லாரும் நம்ம ப்ரெண்ட்ஸ் என அனைவரையும் மானசா அறிமுகப்படுத்த, சுவாதி அனைவரையும் பார்த்தாள். அவளுக்கு எல்லாரும் கை கொடுத்தனர். அவள் பேசவில்லை என்றாலும் எல்லாரையும் நன்றாக கவனித்தாள்.
“நாங்க கிளம்புறோம்” என சுவாதியை இறக்கி விட்டாள் மானசா. “அண்ணி போகலாமா?” என மானசா கேட்க, ம்ம்..என்றாள் சுவாதி.
ஓ.கே பைடா..காலேஜ்ல்ல மீட் பண்ணலாம்.
ஹே, நாங்க டிராப் பண்றோம்.
நோ டா. ஏற்கனவே விக்ரம் அண்ணியை தப்பா பேசியதில் தான் பிரச்சனையே தொடங்கியது. நான் பார்த்து அழைச்சிட்டு போறேன் என அவள் நகர, “இரு மானு” என ஆட்டோ ஒன்றை பிடித்து விட்டு அவர்களை ரோஜர் அனுப்பி வைத்தான்.
அவர்கள் செல்லவும் விகாஸூம் சென்றான்.
வீட்டிற்கு வந்து சுவாதியை விட்டு லேசான ஒப்பனை போட்டு தயாராகி வர மணி ஒன்பதை தாண்டி இருந்தது.
பாட்டி, அண்ணிக்கு சாப்பிட கொடுங்க..என இரு இட்லியை எடுத்து தட்டில் போட்டு சாம்பார், சட்னியை போட்டு உணவை முடித்து கிளம்பினாள் மானசா.
அவளை பற்றி அறிந்து கொள்ள எண்ணி விகாஸ் அவள் வரும் முன்னே வெளியே சென்று காரை எடுத்து ஆபிஸ் போவதாக சொல்லி..யோசனையுடன் காரை பஸ் ஸ்டாப்பிற்கு கொஞ்சம் தள்ளி காரை நிறுத்தி, அவள் வருகிறாளா? என பார்த்தான்.
அவள் வருவதை கண்டு, இன்னும் வர எவ்வளவு நேரமாக்குவீங்க? என வேண்டுமென்றே சத்தமிட்டான். அவள் அவனை கடந்து பஸ் ஸ்டாப்பில் நிற்க, பைக்கில் பரணி வந்து நின்றான். அவனை விகாஸிற்கு தெரியாதுல்ல? பசங்களுடன் நல்லா பழகுவா போல என அவன் மனதில் மானசா பற்றி தவறான எண்ணம் பிறந்தது.
மானு, வா காலேஜ் போகலாம்.
நான் வரலை. பஸ்ஸில் வந்துக்கிறேன் என்றாள் சிடுசிடுவென. அருகே நின்று கொண்டிருந்த அனைவரும் இருவரையும் பார்த்தனர்.
ப்ளீஸ்..என கெஞ்சியவாறு மானசா கையை பிடித்தான். அவன் கன்னத்தை பழுக்க வைத்தாள் அவள்.
பைக்கை நிறுத்தி சட்டென மண்டியிட்டு அழுதான்.
சாரி மனூ..மோனூ என்னை காதலிப்பான்னு எனக்கு தெரியாது. நான் அவளை தான் பார்த்தேன்னு எனக்கு தெரியாது. உங்களோட பிரச்சனையும் தெரியாது. அந்த விக்ரமுடன் நீ பேசுவது மட்டும் தான் தெரியும். பிரச்சனைன்னு தெரிஞ்சா..
கிழிச்சிருப்பேல்ல என கனலாய் அவள் கண்கள் தகித்தது.
கெல்ப்..
அவன் சட்டையை பிடித்து அவனை எழ வைத்த மானசா, “அவ உன்னை எவ்வளவு காதலித்தால் தெரியுமா? நான் உன்னிடம் ஏன் சொல்லவில்லை தெரியுமா?”
உன்னோட குடும்பம் பற்றி எனக்கு முன்பே தெரியும். அதனால் தான் நான் காட்டிக் கொள்ளவில்லை. அவள் காதல் உன் வீட்டிற்கு தெரிந்தால் என் அம்மா பட்ட அவமானம் மீண்டும் என் அக்காவுக்கு திரும்பும். அதனால் தான் அவளை உன்னிடமிருந்து விலக்கி வைத்தேன். எனக்கு உன் மீது மாமா என்ற உணர்வு கூட இல்லை. நீயும் வேண்டாம் உன் கௌரவம் பிடிச்ச குடும்பமும் வேண்டாம்ன்னு தான் விலகி இருந்தேன்.
“நீ காதலிச்ச பொண்ணை உனக்கு அடையாளம் தெரியலையா? இருவரையும் பார்த்திருக்க? பேசி இருக்க? ஒரு வித்தியாசம் கூடவா உனக்கு தெரியல. அவ செத்த பிறகு வந்து அவளை தான் காதலிக்கிறேன். உனக்கும் பாதுகாப்பாக இருப்பேன்னு சொல்றது முறையா?” என கதறி அழுதாள்.
இல்ல மானூ..உன்னை கொலை செய்ய யாரோ இருக்காங்கன்னு..
ஆமா, செத்தாலும் சாவானே தவிர உன் வீட்டிற்கு பாதுகாப்பு கேட்டு வந்து நிற்க மாட்டேன். போ..போ..என அவனை ஆக்ரோசமாக அடித்து அழுதாள்.
அங்கிருந்த பொண்ணு அவளை தடுத்து பிடித்து, அந்த பொண்ணு சொல்றால்ல “போ” என பரணியை திட்டினாள்.
ப்ளீஸ் மானு. என்னை மன்னிச்சிட்டேன்னு மட்டும் சொல்லு..
முடியாதுடா. போ..என எகிறிக் கொண்டு அவனை அடிக்க வந்தான். அனைவரும் அவளை பிடித்து வைத்து பரணியை திட்டி அனுப்பினார்கள். அவன் செல்ல முடியாமல் எதிரே நின்று ஏக்கமுடன் அவளை பார்த்துக் கொண்டிருந்தான். விகாஸீற்கு இவர்கள் பேச்சு தெரியாது. அவன் மீது கோபமாக மானசா இருக்கிறால் என்று மட்டும் புரிந்தது அவனுக்கு.
பேருந்து வரவும் மானசா முகத்தை நன்றாக துடைத்து விட்டு ஏற சென்றாள். ஒரு பெண் அவளிடம் கையை நீட்டினாள்.
“அக்கா” என பேருந்தில் ஏறி செல்வதை பார்த்த விகாஸ், அக்காவா? என சிந்தனையுடன் அவளை பின் தொடர்ந்தான்.
ஒரு ஸ்டாப்பில் பேருந்து நிற்க, ரம்யா கீழே இறங்கி “பை மானு..ஈவ்னிங் பார்க்கலாம்” என எதிரே இருந்த அவளது மருத்துவ கல்லூரிக்கு சிக்னலை கடந்து சென்றாள்.
பாப்ஸ்ஸா? என விகாஸ் மீண்டும் மானசாவை பின் தொடர்ந்தான். அவள் சட்டக் கல்லூரியில் இறங்குவதை பார்த்து, “லாயருக்கு படிக்கிறாளா?” என பார்த்தான். பார்க்கில் பார்த்த அவளது தோழி, தோழர்கள் வந்து அவளை அழைத்து செல்ல, அவள் புன்னகையுடன் சென்றாள்.
அவள் கண்ணில் படும் வரை விகாஸ் அவளை பார்க்க எண்ணி பார்த்துக் கொண்டிருந்தான். அவள் மறையும் சமயத்தில் ஓர் அடி பின்னே வந்த மானசா விகாஸை பார்த்து கண்ணடித்து புன்னகைத்து செல்ல, நான் பின் தொடர்ந்ததை பார்த்துட்டாளா? என வாயில் கை வைத்து பார்த்தான் விகாஸ்.
“அப்படின்னா முதல்ல இருந்து நான் அவளை பின் தொடருகிறேன்னு தெரிந்து தான் அந்த பையனிடம் சண்டை போடுவது போல நடித்தால் போல..ச்சே..இவளை இப்படியே விடக் கூடாது” என மானசாவை தவறாக எண்ணிக் கொண்டு கிளம்பினான்.
மாலை நேரம் சரியாக சட்டக்கல்லூரிக்கு வந்து மறைந்து நின்றான். நண்பர்களிடம் கையசைத்து விட்டு மானசா வந்து கொண்டிருந்தாள்.
“மானூ” பரணி அழைத்து “ஐ அம் சாரி” என்றான்.
பெருமூச்சுடன் உனக்கு என்னடா பிரச்சனை?
மன்னிச்சுறேன் ப்ளீஸ் அவன் சொல்லிக் கொண்டிருக்க, காரில் வந்து கொண்டிருந்த ரோஜர் பரணியை பார்த்து நிறுத்தினான்.
கோபமாக இறங்கிய ரோஜர் பரணியை ஓங்கி வயிற்றிலே குத்தினான்.
ரோ..வேண்டாம்டா என அவனை தடுக்க முயன்றாள் மானூ. அவன் கேட்காமல் மீண்டும் அவனை அடிக்க கல்லூரியே அவர்களை பார்த்துக் கொண்டிருந்தனர்.
மறுபடியும் அவன் அடிக்க வரும் போது மானசா இடையே வந்தாள். ரோஜர் கையை இறக்கி, இதுக்கு தான் எங்க யாருடனாவது வான்னு சொன்னேன் கோபமாக ரோஜர் கத்தினான்.
இல்லடா, நான் பார்த்துக்கிறேன்.
“என்ன பார்க்கப் போற? இதை சொல்லி தான் இப்ப யாருமில்லாமல் நிக்குற?” கோபமாக பேச, அனைவரும் வேடிக்கை பார்ப்பதை பார்த்து, ப்ளீஸ் ரோ அவன விட்ரு..
மற்ற நண்பர்களும் வந்தனர். அவனை அழைச்சிட்டு போங்கடா என மானசா சொல்ல, யாரும் நகரவில்லை. ரோஸ் மானசாவிடம் வந்து, நீ சொல்றத கேட்க முடியாது மானு..என பரணி பக்கம் திரும்பினாள்.
உனக்கு என்னடா வேணும்? அவளோட மாமாவா நீ இருக்கலாம். அவ பெற்றோர் கஷ்டப்படும் போது உன் தாத்தாவும் தான பேசினார். இப்ப என்னவாம் அவருக்கு? எல்லாரும் சேர்ந்து அவளை மறுபடியும் அநாதையாக்கீட்டீங்க.
போ..காலேஜ்ல்ல வச்சி பார்த்தாலும் நீ அவளிடம் பேசக் கூடாது. அவள விட்ரு என ரோஸ் கெஞ்சினாள்.
இவன் கிட்ட என்ன ரோஸ் கெஞ்சுற? என கேட்க, பரணியின் நண்பர்களும் வந்தனர். பரணி இவர்களின் சீனியர்.
ஏய், “என்னடா பண்றீங்க?” பரணி தோழன் ஒருவன் கேட்க, வாய்ப்பேச்சு இரு பட்டாளங்களுக்கும் சண்டையானது.
“நிறுத்துங்க” என தலையை பிடித்து அழுது கொண்டே அமர்ந்தாள் மானசா.
மானூ..பரணி அழைக்க, ப்ளீஸ்..என் முன் வராத..உன்னை பார்த்தாலே அக்கா உன்னை காதலித்தது தான் எனக்கு நினைவு வருது. அவ உன்னிடம் காதலை சொல்லாமல் இருக்க நானும் ஒரு காரணம்..என்னால ஆரம்பித்த பிரச்சனையால தான் என் குடும்பத்தையே இழந்துட்டேன். யாரும் யாரையும் குற்றம் சாட்டாதீங்க..
அவளை பார்க்க வந்த விக்ரம், அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தான். “வா” என விக்ரம் மானசா கையை பிடித்து இழுக்க, விகாஸ் அதிர்ந்து விக்ரமை பார்த்தான்.
சார், “அவ என்ன பண்ணா?”
“செட் அப்” கத்தினான் விக்ரம்.
உன்னோட நான் செத்தாலும் வர மாட்டேன் என மானசா சத்தமாக கத்தினாள்.
என்னை டென்சன் ஆக்குற?
“உனக்கு டென்சனா? மனுசனுக்கு தான் டென்சன் ஆகும்? உனக்கெல்லாம் ஆகுமா? சுவா அண்ணியை எந்த நிலைமைக்கு கொண்டு வந்துட்ட?”
என்ன? எப்ப பாரு சுவாதி பத்தியே பேசுற?
ஆமா, எனக்கு இப்ப அவங்கள விட யாரும் முக்கியமில்லை..உனக்கு காதலிக்கும் தகுதி கூட இல்லை ஆக்ரோசமாக கத்தினாள். கண்ணீர் நிற்காமல் வந்தது.
சரி..எனக்கு இல்லை. நீ வா..
முடியாது. நான் என் அண்ணியை பார்க்கணும்..என விக்ரம் கையை தட்டி விட்டு ரோ..இவனை போகச் சொல்லு என்றான்.
மானூ..நீ அவரோட பாதுகாப்பா இருக்கிறது தான் முக்கியம்..
பாதுகாப்பா? இனி அது எனக்கு தேவையில்லை. எனக்கு யாரும் வேண்டாம் என கத்தி அழுதாள்.
விக்ரம் கண்ணீருடன் அவளை பார்க்க, “ஏன்டா இப்படி பண்ண? இதுக்கு நீ செத்தே போயிருக்கலாம்” என விக்ரம் தோளில் சாய்ந்து அழுதாள்.
விக்ரம் கண்ணீருடன் தூரமாக நிற்கும் விகாஸ் காரை பார்த்து விட்டான்.
மானசாவை நகர்த்தி அவளது கண்ணீரை துடைத்து விட, “அண்ணியை வந்து பாருடா” என கேட்டாள்.
விக்ரம் பழையவாறு, “எல்லாத்துக்கும் அவள் தான் காரணம்” என்றவுடன் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் மானசா.
தூங்கிறவனை மன்னிக்கலாம்.. முழிச்சிக்கிட்டே மத்தவங்கல்ல கஷ்டப்படுத்துறவன.. ச்சே..உன்னிடம் பேசுறதே காத்துல பேசுறது போல தான். எந்த பலனும் கிடைக்காது. இனி என்னை பார்க்க வந்த அந்த நிமிசமே நானும் செத்து போயிருவேன் என மானசா சொல்ல, அவள் நண்பர்கள் கோபமாக அவளை பார்க்க, ரோஸ் அவளை அடித்திருந்தாள்.
என்ன பேசுறடி?
“இவனை போக சொல்லு இல்ல இப்படி தான் பேசுவேன்” என மானசா சொல்ல, விக்ரம் கண்ணீருடன் உறைந்து நின்றான்.
“விகாஸ் விக்ரமிடம் வர எண்ணினாலும் இவள் எந்த ரகம் புரியலையே!” என குழம்பினான்.
“மாம்ஸ் கிட்ட இவ்வளவு உரிமையா பேசுறா? யாராக இருக்கும்?” என சிந்தித்தான்.
சார்..கிளம்புங்க என ரோஸ் சொல்ல, தாத்தா வீட்டுக்கு தான நான் டிராப் பண்றேன்.
இல்ல..நான் கிளாஸூக்கு போகணும்.
கிளாஸூக்கா? மத்தவணுகள பிடிச்சிட்டோம். அந்த லூசுப்பய ஜான் வெளிய தான் இருக்கான். எங்கிருந்து வருவான்னு தெரியாது. நீ விளையாடுறியா? விக்ரம் கோபமாக கேட்டான்.
மானூ..பேசாத என்றான் பரணி.
நீ எதுக்குடா உள்ள வர்ற? விக்ரம் அவனிடம் எகிறினான்.
வந்து தொலைக்கிறேன். என்னை யாரும் நிம்மதியா இருக்க விடவே மாட்டேங்கிறீங்க? மானசா கத்தி விட்டு, உன்னை மன்னிச்சிட்டேன். என்னை தொந்தரவு பண்ணாத என்று பரணியிடம் சொல்லி விக்ரம் பைக் அருகே சென்று நின்றாள்.
விகாஸ் இவர்களை பார்ப்பதை விக்ரம் மீண்டும் பார்க்க, இம்முறை விகாஸூம் விக்ரம் பார்ப்பதை கவனித்தான்.
“வர்றீயா? இல்லையா? எனக்கு நேரமாகுது” மானசா சொல்ல, விகாஸ் மானசாவை பின் தொடர்கிறான் என விக்ரமிற்கு நன்றாக புரிந்தது. அவனே தெரிஞ்சுக்கட்டும். என்னுடன் அவளை பார்த்ததால் அவளுக்கும் ஏதும் ஒன்று என்றால் பாதுகாப்பு தருவான் என மனதில் எண்ணியவாறு அவன் மானசாவை காரில் ஏற்றி நாட்டியப் பள்ளியில் நிறுத்தினான்.
கைக்கடிகாரத்தை பார்த்து விட்டு நேரமாகிடுச்சு என மானசா ஓட, விக்ரம் அவளை பார்த்து விட்டு கொஞ்சம் தள்ளி இருந்த மரத்தை பார்த்து புன்னகைத்தவன் மனதில் வெற்றிடம் புகுந்து கொண்டது.
எனக்காக யாரும் வெயிட் பண்ண வேண்டாம். நான் போய்ப்பேன் என மானசா உரக்க சொல்லி விட்டு சென்றாள். விக்ரம் வெளியேறுவதை விகாஸ் பார்த்தாலும் காரிலிருந்து இறங்கவில்லை. விக்ரமும் காரினுள் இருந்த விகாஸை பார்த்துக் கொண்டே அவனை கடந்து பைக்கில் சென்றான்.
உள்ளே சென்ற மானசா அவள் அணிந்திருந்த ஆடையை மாற்றி விட்டு சுடிதாரில் பரதநாட்டியத்திற்கு அணியுமாறு துப்பட்டாவை போட்டுக் கொண்டு காலில் சலங்கையுடன் வந்து ஒரு பெண்மணியுடன் பேசிக் கொண்டிருந்தாள்.
சிறுவ, சிறுமியர் வந்தவுடன் அவர்களுக்கு பரதம் கற்றுக் கொடுக்கத் தொடங்கினாள். விகாஸ் அவளை ஆச்சர்யமாக பார்த்தான்.
விடியல் மறைந்து கதிரவன் தன் மனைவியை காணச் செல்லும் நேரம் அவள் பரத வகுப்பை முடித்து விட்டு வெளியே வந்து விக்ரம் பார்த்துக் கொண்டிருந்த மரத்தின் கீழேயுள்ள இருக்கையில் அவளது கல்லூரி பையை வைத்து விட்டு அமர்ந்து தலையில் வைத்தாள்.
மரத்தின் இலைகள் காற்றில் அவள் மீது பூவாய் விழ, அதை பார்த்த அவள் கண்ணீர் பெருகியது. முகத்தை மூடி அழுதாள். அவளருகே ஓர் பெண் வந்து..அழாத மான்குட்டி என சொல்வது போல எண்ணி அந்த உருவத்தின் கையை பிடிக்க கையை நீட்டினாள். விகாஸ் புரியாமல் அவளை பார்த்துக் கொண்டிருந்தான். பின் அங்கு யாருமில்லை என்பதை உணர்ந்து மீண்டும் அழுதாள்.
அம்மரத்தின் பூக்கள் விழ, அதை ஒவ்வொன்றாக எடுத்து அம்மரத்திலிருந்து விழுந்து கிடந்த செடிக்காம்பு ஒன்றை எடுத்து வளைத்து பூக்களை ஒவ்வொன்றாக கட்டினாள்.
அது மலர்க்கீரிடமாக உருவாகியது. அதை எடுத்து அவளது பையை நிமிர்த்தி அதன் மேல் வைத்தாள். என்னால உங்களை காப்பாற்ற முடியாமல் போச்சு என மீண்டும் ஒரு மூச்சாய் அழுதாள். பின் அவளது பையிலிருந்து ப்ளூபெரி கேக் ஒன்றை எடுத்து..அதன் முன் வைத்து விட்டு அவளும் அழுது கொண்டே சாப்பிட்டாள்.
சுற்றி பார்த்தாள். இருட்டி இருந்தது..ஏம்மா..எனக்கு மட்டும் இப்படி நடக்குது? யாருமில்லாமல் நான் எப்படிம்மா இருக்கிறது? என்னையும் கூட்டிட்டு போயிருக்கலாம்ல்ல..எல்லாரும் என்னை விட்டு போயிட்டீங்க. என்னை பற்றி நீங்க யாருமே சிந்திக்கலையா? என மீண்டும் அழுதாள்.
அவள் தோளில் கை ஒன்றுபட்டது. நிமிர்ந்து பார்த்தாள். அவளிடம் பேசிக் கொண்டிருந்த பெண்மணி அவளை பார்த்தார்.