Advertisement

நீ நான் 2

அஜய், தியாவை சமாதானப்படுத்தி விட்டு ராணியம்மாவும் வினித்தும் வெளியே வந்தனர். முக்தா கண்கலங்க அவர்களை கடந்து செல்ல, ரோஹித் அவள் பின்னாலே ஓடினான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அவர்களை பின் தொடர்ந்தனர்.

டேய், பக்கத்துல்ல வந்த மண்டைய உடைச்சிருவேன் என்று ரோஹித்தை அடிக்க கல்லை எடுத்தாள் முக்தா.

வேண்டாம் முகி. எனக்கு மட்டும் அடிபட்டது உன்னை அப்பா சும்மா விட மாட்டார்.

ஆமா ஆமா..அதையும் நான் பார்த்துக்கிறேன் என அவள் கண்ணீரை துடைத்துக் கொண்டே அவன் எதிர்பார்க்காத நேரம் கல்லை தூக்கி எறிய, ரோஹித் அருகே வந்த கல் வினித் மீது பட்டு அவன் தலையில் இரத்தம் வழிந்தது.

அச்சோ..சாரி சாரி என்று முக்தா அவனிடம் ஓடி வந்தாள்.

முகி, “என்ன பண்ணீட்ட?” ராணியம்மா கோபமாக, “நீங்க எதுக்கு இவன் பக்கத்துல்ல வந்தீங்க?” என முக்தா அவனது தாடையை பிடித்து அவன் தலையில் சோதிக்க, ராணியம்மா கொடுத்த சத்தத்தில் அங்கிருந்த பணியாட்கள் ஓடி வந்தனர்.

அவர் மருந்தை எடுத்து வர பணிக்க, ஒரு பெண்மணி ஓடி வந்து கொடுத்தார்.

இங்க வாங்க என வினித்தை முக்தா அமர வைத்து தன் அண்ணனை முறைத்துக் கொண்டே அவனுக்கு மருந்திட்டாள். ராணியம்மாவும் அவர்கள் அருகே அமர்ந்திருந்தனர்.

எல்லாரும் வெளியே வந்து வேடிக்கை பார்க்க, “அடியேய் என்ன பண்ற?” அவள் அம்மா அவளிடம் வந்தார்.

தியாவும் அஜய்யும் வினித்தை பார்த்து பதட்டமுடன் நெருங்கினார்கள்.

மா..சும்மா இரு. மருந்து போடுறேன்ல்ல. தொந்தரவு பண்ணாத முக்தா சொல்ல, வினித் விழித்து அவளை பார்க்க, ராணியம்மா புன்னகைத்தார்.

வினு, “இரத்தம் வர என்னடா செஞ்ச? நீ என்ன சின்னப்பையனா?” தியா திட்ட, தியூ..என கொஞ்சலாக முக்தா அவளை அழைத்து, நான் தான்..சாரி தியூ என்றாள்.

வினு மட்டும் தான் எப்போதும் தியாவை தியூவென அழைப்பான். இப்பொழுது இவள் அழைக்கவும் அவளை வித்தியாசமாக பார்த்தான்.

“எதுக்கு உன்னோட அண்ணனை அடிக்க வந்த?” ராணியம்மா முக்தாவை அளந்தவாறு கேட்க, வினித் அவளையே பார்ப்பதை கண்டு பதறி நகர்ந்து அமர்ந்து, “அவனுக்கு காதல் தோல்வின்னா நான் என்ன செய்றது?” ஓவரா பேசுறான். அதான் அடித்தேன்.

ஆனால்..என விழிகளை உயர்த்தி வினித்தை பார்த்தாள். சாரி..நான் தெரியாமல் தான் செய்துட்டேன்.

“என்ன சொன்னான் டி?” அவள் அம்மா கேட்க, மா..அது வந்து..என தயங்கினாள்.

ம்ம்..ம்ம்..சொல்லு சொல்லு. இவ்வளவு நேரம் பேசினேல்ல. சொல்லு என ரோஹித் அவளையும் வினித்தையும் பார்த்தான்.

“சொல்லுடி?” அவள் அம்மா மேலும் சத்தமிட, அவள் பாவமாக ராணியம்மாவை பார்த்தாள்.

“என்ன?” அவர் புருவத்தை உயர்த்த அவள் வினித்தை பார்த்தாள்.

அவர் யோசனையுடன், எல்லாரும் கிளம்புங்க. நான் பேசிக்கிறேன் என்றார். அனைவரும் கலைந்து செல்ல, “ரோஹித் நில்லுப்பா” என்று அவனை நிறுத்தினார். அஜய்யையும் தியாவையும் பார்த்துக் கொண்டே அவன் நின்றான். தியா அஜய்யை பார்க்க, அவன் சாதாரணமாக நின்றிருந்தான்.

கண்ணா, எல்லா தோல்வியும் எப்போதும் தோல்வியிலே இருக்காது. நாம நம்ம வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டு போகணும். நம்ம தியா சந்தோசமா இருக்கணும். நீ இப்படி மூஞ்சிய தொங்க போட்டா அவ ரொம்ப கஷ்டப்படுவாப்பா.

“சரிங்க பாட்டி” என அவன் நகர்ந்தான். இப்பொழுது அவர் பார்வை மற்றவர்களை கிளம்ப சொல்ல, வினித்தை அழைத்துக் கொண்டு அஜய்யும் தியாவும் அறைக்கு சென்றனர்.

“என்னடாம்மா?” ராணிம்மா முக்தா தலையை ஆதூறமாக வருட, “பாட்டி” என கட்டிக் கொண்டு, “என்னோட காதலும் அவனிது போல ஆகிடுமா?” அவன் அதை தான் சொன்னான் என அழுதாள்.

“ஏன்டா?” எனக்கு உன்னை பற்றி தெரியும்டா. காதலிப்பது உங்கள் உரிமைன்னா நீங்க காதலிப்பவர்களை தொந்தரவும் செய்யக் கூடாது. உனக்கு புரியும்ன்னு நினைக்கிறேன் என்றார்.

ம்ம்..அதான் நான் வெளியே காட்டிக்கலை பாட்டி.

ம்ம்..தெரியும்டா. நம்ம வீட்லயே நீ தான் என் செல்லப்பட்டு. “அதுக்காக இப்படி உன் அண்ணா மீது கோபப்படலாமா?” நடப்பது தான் நடக்கும். யாராலும் எதையும் மாற்ற முடியாதுடா. பார்க்கலாம் என அவளை அழைத்து சென்றார்.

யுக்தா மாப்பிள்ளை வீட்டிற்கு சென்று விட, இரவு உணவை முடித்து விட்டு பாங்கை அருந்தினர் அனைவரும் உற்சாகத்துடன்.

சுற்றிலும் யாருமில்லாமல் இருக்க, வினித்திற்கு இதில் விருப்பமில்லாமல் வெளியே சென்றிருந்தான். தற்போது உள்ளே வந்தவன் கண்டது பாங் அருந்திய ஒருவனை முக்தா அவள் தோளில் போட்டு இழுத்து செல்வதை தான்.

ஏய் என வினித் சத்தமிட, அவனை திரும்பி பார்த்தாள் முக்தா. வினித் அவர்களிடம் ஓடி வந்தான்.

“பைத்தியமா நீ? இந்த நிலையில் இருப்பவனுடன் எங்க போற?”

இவர் என் அண்ணாவோட ப்ரெண்டு தான். அவருக்கு உதவி செய்யணும்ன்னு தான். என்னால இவரை பிடிக்க முடியல. “ப்ளீஸ் கெல்ப் பண்றீங்களா?” அவள் கேட்க, அவள் பிடித்திருந்தவனோ..நோ..முகி. நீ தான் என்னை அழைச்சிட்டு போகணும் என போதையில் அவன் பேசினான்.

அண்ணா..உங்கள என்னால தனியா இழுத்துட்டு போக முடியாது அவள் சொல்ல, அவள் முகத்தை பார்த்த அவன் முக்தாவை முத்தமிட அவள் இதழ்களிடம் நெருங்கினான்.

ஏ..ச்சீ..ச்சீ..உதவ பார்த்தால் எருமை மாடு..உனக்கு எங்க நினைப்பு போகுது. லூசுப்பயலே என முக்தா அவனை தள்ளி விட, வினித் அவளை முறைத்தான்.

அவன் முறைப்பதை பார்த்து, அவள் அண்ணன் ரோஹித்தும் கீழே விழுந்து கிடக்க, அவனை எத்தி..எழுந்திருடா. எல்லாம் உன்னால தான் என போதையில் இருந்தவனை உதைத்தாள்.

வினித் கையை கட்டிக் கொண்டு அவளை பார்க்க, கீழே விழுந்தவன் எழ முடியாமல் உருண்டு கொண்டிருந்தான்.

ப்ளீஸ்..என கண்ணை சுருக்கி வினித்தை பார்த்தாள்.

“உன்னோட குடும்பம் எங்க?” வினித் கேட்க, எல்லாரும் சுருண்டுருப்பாங்க. இப்படியே இவனுக கிடந்தால் குடும்ப மானம் போயிடும். பாட்டி பேரு கெட்டுப் போகும் என்று அவள் சொல்லிக் கொண்டே ரோஹித்தை சோபா அருகே இழுத்து சென்று தூக்க முயன்றாள். ராணிம்மாவிற்கு முக்தா பற்றி வினித்திடம் சொன்னது அவனுக்கு நினைவில் வந்தது.

வினித் அவள் கையை பிடிக்க, அவள் அவனை பார்த்தாள்.

நீ விலகு. நான் பார்த்துக்கிறேன் என வினித் ரோஹித்தை இழுத்து சோபாவில் போட, அவன் ஏதோ முணங்கினான்.

இருங்க. அவன் என்ன சொல்றான்னு பார்க்கலாம் என்று காதை அவனிடம் நிறுத்த, ஏஞ்சல்..லவ் யூ என சொல்ல கேட்டவள் அதிர்ந்து வினித்தை பார்த்து, அண்ணா மட்டும் இதை கேட்டால் ஆத்தாடி..இவனை என்ன செய்யலாம் என அவனை பார்த்துக் கொண்டே மனதில் எண்ணினான்.

“என்ன?” வினித் கேட்க, அவனை இழுத்து அந்த அறையில போடுங்க. நான் இவனை கவனிச்சுக்கிறேன் என்றாள். வினித் தோளை குலுக்கி விட்டு அவனை இழுத்து சென்றான்.

அவன் சென்றதை உறுதிபடுத்திய முக்தா, சமையலறைக்குள் செல்ல, அங்கிருந்த ஆட்கள் “என்ன வேணும்மா?” என்று கேட்டனர்.

அதை காதில் வாங்காமல் ஐஸ் கட்டிகளை எடுத்து பெரிய பாத்திரத்தில் போட்டு சிறிய பாத்திரத்திலும் போட்டு, ஐஸ்கிரீம் ஒன்றை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.

சிறிய பாத்திரத்தில் உள்ள சில கட்டிகளை எடுத்து, ரோஹித் முகத்தில் அங்கங்கு வைத்தாள். சில மணி நேரத்திலே அவன் முகம் சுருங்க, மெதுவாக கண்களை விரித்தான். சட்டென அவளருகே இருந்த சிறிய பாத்திரத்தில் ஐஸ்ஸாக மாறிய நீரை அவன் மீது சல்லென ஊற்றி விட்டு, அவனுக்கு எதிரே இருந்த சோபாவில் கால் மீது கால் போட்டு அமர்ந்து கூலாக கையில் ஐஸ்கிரீமை எடுத்து சாப்பிட்டு கொண்டே விழிகளால் அவனை எறித்துக் கொண்டிருந்தாள்.

வினித் அவளை பார்த்துக் கொண்டே அவளை நோக்கி வந்தான். ரோஹித்திற்கு போதை கொஞ்சமாக தெளிந்திருக்க, அவன் அதே போதையில் எழ, வினித் அவனை பார்த்து நின்றான். ரோஹித் சினமாக முக்தாவை முறைப்பதை பார்த்தான் வினித்.

அவன் நகரும் முன் ஐஸ்கிரீமை கீழே வைத்து விட்டு, எழுந்து பெரிய பாத்திரத்தில் இருந்த ஐஸ்தண்ணீரை அவன் முகத்தில் வாரி இறைத்தாள்.

ஏய்..முகி..ரோஹித் குலறியவாறு சத்தமிட, அவன் முகத்தில் தண்ணீரை துடைக்கும் நேரம் அங்கிருந்த துணியால் அவன் முகத்தில் போட்டு சுற்றி அவனை சோபாவில் போட எண்ணினான்.

எல்லாம் செய்த அவளால் அவன் பலம் தாங்காமல் அவளும் அவள் அண்ணனுடன் கீழே விழுந்தாள். ஆனாலும் அவள் மேல் அமர்ந்து அவன் தலையிலே கொட்டினாள். வினித் அதிர்ந்து அவளை பார்த்தான்.

அவளை தள்ளி விட்டு எழுந்த ரோஹித், தலையில் அவள் போட்டிருந்த துணியை தூக்கி எறிந்து விட்டு..முகி..என கத்த, வினித்தை பார்த்த முக்தா..”வினு எனக்கு கெல்ப் பண்ணுங்க” என்று அவள் அவனிடம் வர, அவளது முடியை பிடித்து ரோஹித் இழுத்தான். ஆ…என நின்ற இடத்திலே முக்தா கத்தினாள்.

“பிளாஸ்டர், என் முடியில கை வைக்கிற” என அவன் கையிலே கடித்தாள். ஆவென..கத்திய ரோஹித், “என்னடி பிரச்சனை உனக்கு?” என போதை தெளிந்து அவளை விரட்டினான்.

வினித் அவன் முன் வந்து, “என்ன நடக்குது?” எனக் கேட்டான்.

“அதை நீ எதுக்குடா கேக்குற?” அவ என்னோட தங்கை. நாங்க சண்டை மட்டுமல்ல கொஞ்சிப்போம். “உனக்கென்ன?” எனக் கேட்டான்.

“கொஞ்சலா? இதுக்கு பேரா கொஞ்சல்?” என வினித் சீறலாக ரோஹித்திடம் பேசினான்.

வேண்டாம். அவனும் நானும் இப்படி தான் என முக்தா அவனை தடுத்தாள். அவளை பார்த்த வினித்..”சார் ஏதோ சொன்னாரே! என்ன சொன்னார்?” என வினித் கேட்க, அது வந்து..என அவள் இழுத்தாள்.

“நான் என்ன சொன்னேன்?”

என்ன சொன்னீயா? வினித் கோபமாக அவனிடம் செல்ல, நான் அவனிடம் பேசிக்கிறேன். ப்ளீஸ்..இருவரும் சண்டை போடாதீங்க என்று அவனை முன்னேற விடாமல் அவன் கையை பிடித்து தடுத்தாள்.

அவளை முறைத்த வினித், இதுக்கு மேல இவன் தியூவை லவ் பண்றேன்னு வந்தான்னா கொல்லாமல் விட மாட்டேன்.

அப்படி தான். லவ் பண்ணுவேன். அஜய் சார் முன்னாடியே சொல்லுவேன் என ரோஹித் திமிறாக சொல்ல, வினித் அவனை அடிக்க, அவன் இவனை அடித்தான்.

வினித்தை தள்ளிய முக்தா ரோஹித்தை பளாரென அறைந்தாள்.

முகி..அவன் அழைக்க, “தியூ அஜய் அண்ணாவை பார்த்து எவ்வளவு சந்தோசப்பட்டாங்க தெரியுமா?” நம் வீட்டில் அவங்களை அப்படி நான் பார்த்ததில்லை. அவங்களுக்குள்ள ஏதோ பிரச்சனை. அதனால் தான் பிரிஞ்சு வந்திருக்காங்க. உனக்கு ஏன் அவங்க காதல் புரியல. உன்னோட காதலையே நீ கட்டிக்கிட்டு அழு. உன்னிடத்தில் நான் இருந்தால் அவங்க சந்தோசத்தை தான் பெருசா நினைப்பேன்.

“அவங்க கழுத்துல்ல அண்ணா தாலி கட்டிய பின்னும் அவங்களை காதலிப்பேன்னு சொல்ற? இதுன்னால அவங்க வாழ்க்கையில பிரச்சனை வரும்ன்னு உனக்கு ஏன் தோணலை?” ஆதங்கமாக கத்தினாள் முக்தா.

இல்ல முகி, நான்..என்னால மறக்க முடியல ரோஹித்தின் வார்த்தைகள் தழுதழுத்தது.

ஆமா, உனக்கு உன்னோட சந்தோசம் தான முக்கியம்.  “அவங்க எக்கேடு கெட்டு போனா உனக்கென்ன?” சினமுடன் கேட்டு விட்டு அவள் சோபாவில் அமர்ந்தாள்.

“முக்தா” ராணியம்மா அழைக்க, “பாட்டி” என அவரை அணைத்துக் கொண்டாள்.

“உன்னோட அம்மா எங்க?” அவளது பெரியம்மா கேட்க, அவங்க அப்பாவோட என அவள் நிறுத்தினாள்.

ரோஹித், “என்னோட அறைக்கு வா” என ராணியம்மா அழைக்க, அவன் தள்ளாடிக் கொண்டு அவர் பின் சென்றான். முக்தாவும் அவள் பெரியம்மாவும் ரோஹித்தின் பெற்றோரை அழைக்க சென்றனர். வினித்தும் அவர்கள் பின் சென்றான்.

ரோஹித்தின் அம்மாவுக்கு விசயம் தெரிந்து பதட்டமாக வெளியே வந்தார். அவர்கள் ராணிம்மா அறைக்கு செல்ல, வினித்தும் அவர்கள் பின் சென்றான்.

உள்ளே ரோஹித்தும் சீமாவும் நின்று கொண்டிருந்தனர்.

சீமா ராணியம்மாவின் மூத்த மகனின் திருமணமான பொண்ணு. சீமாவை ராணியம்மா லெஃப்ட் ரைட் வாங்கிக் கொண்டிருந்தார். அதில் நன்றாக வினித் காதில் விழுந்தது சீமாவின் தவறான போக்கு.

உனக்கு கணவனும் குழந்தையும் இருக்காங்க. மாப்பிள்ளை என்னிடம் வந்து டிவர்ஸ் பத்தி பேசுகிறார். ஒரு பொண்ணா இப்படி இருக்கவா உனக்கு நாங்க கத்துக் கொடுத்தோம். உனக்கு ஒரு வாரம் தாரேன். அவருடன் நல்லபடியாக குடும்பத்தை நடத்தப்பாரு.

அவரு எவ்வளவு பெரிய ஆள். உன்னை பற்றி ஏதாவது தவறாக வெளிய வந்தது. நீ இங்கேயும் இருக்க முடியாது. உன் புருசனுடனும் இருக்க முடியாது. நடுத்தெருவுல தான் நிக்கணும்.

நீ அஜய் கிட்ட மன்னிப்பு கேட்கணும். கேட்டு நாளையே உன்னோட வீட்டுக்கு போயிரு என சத்தமிட்டு, அவள் அம்மா அங்கே கலங்கி இருப்பதை பார்த்து,

ஏம்மா..பிள்ளை தப்பு செய்தால் உடனே கண்டிக்கணும். அதை சாதாரணமாக விட்டு இப்ப பாரு நம்ம குடும்பத்தையே கலங்கடிக்கிறா. இப்ப கூட நீ தான் வருத்தப்பட்டு கண்ணை கசக்குற? அவ பாரு திமிறா தான் நிக்கிறா அவர் சீற்றமுடன் அவளை முறைத்தார்.

சீமாவின் அம்மாவோ, அவளருகே வந்து இங்க பாருடி யுக்தா, முக்தாவும் உன்னோட தங்கைகள் தான். “அவங்ககிட்ட ஏதாவது குறை கண்டுபிடிக்க முடியுமா? சின்ன பிள்ளைகளை பார்த்தும் உனக்கு புத்தி வர மாட்டேங்குது? உன் பிள்ளைக்காகவாது பார்க்கலாம்ல்ல?” அவர் கோபமாக ஆரம்பித்து கெஞ்சலாக முடித்தார்.

“அவகிட்ட கெஞ்சிட்டு இருக்க?” ராணியம்மா சத்தம் போட, “எனக்கு இவளை எப்படி மாத்தண்ணு தெரியல அத்தை” என தலையில் அடித்தார்.

அதான பார்த்தேன். இன்னும் உங்க செல்லப் பேத்திகள் புராணத்தை ஆரம்பிக்கலையேன்னு நினைச்சேன் என சீமா முக்தாவை முறைத்தவாறு பேச, அமைதியாக இருந்த ரோஹித்..”ஹே முதல்ல பொண்ணா இருடி” என்றான்.

“ரோஹித்” ராணியம்மா சத்தமிட, அவன் அமைதியானான்.

ஹேய், “நீயெல்லாம் என்னடா என்னிடம் குரல உசத்துற?” என சீமா ரோஹித்தை அடிக்க பாய, அவளை பிடித்து தள்ளிய முக்தா..என்னோட அண்ணன் மேல கையை வச்ச கையை உடைச்சிருவேன். அவனை தொடும் அருகதை கூட உனக்கில்லை.

“என்னது?” எள்ளலாக அவள் சிரித்து விட்டு, உன்னோட அண்ணன் அந்த அன்னக்காவடியோட சுத்தினானே! அவள் நல்லா அவனை பயன்படுத்தீட்டு இப்ப அவ வேரொருவனோட போயிட்டா. அந்த பொண்ணு ரது..உண்மையிலே அந்த அஜய் குழந்தை தானா இல்லை என ரோஹித்தை கேவலமாக அவள் பார்த்தாள்.

அறையின் வாயிலில் நின்று கைகளை மடித்து இறுக்கிக் கொண்டிருந்த வினித்தை தாண்டி உள்ளே வந்தார் ரோஹித்தின் அப்பா.

ஏய், “யார பத்தி என்ன பேசுற? என் பிள்ளைய உன்ன மாதிரின்னு நினைச்சியா?” அவன் சொக்கத்தங்கம்டி. தியாவை அவனுக்கு பிடித்தது. அவ்வளவு தான். அவளை தவறான எண்ணத்தில் பேசியது கூட இல்லை.

ம்மா..ஒன்று இந்த வீட்டில் இவ இருக்கணும் இல்லை நாங்க இருக்கணும். முடிவு பண்ணுங்க என அவர் சீற்றமானார்.

சீமாவின் அம்மா தலைகுனிந்து, “அவ வெளிய போவா” என்றார் அமைதியாக.

மா..முடியாது. இது என் வீடு அவள் பிதற்ற,

என்னடி உன்னோட வீடு. உன்னோட வீடு இதில்லை. போ..உன் புருசன் வீட்டுக்கு போ. இனி எங்க யார் முன்னும் நீ வரவே கூடாது. உன் புருசனும் உன்னை சேர்த்துக்கலைன்னா..எங்காவது போய் செத்துடு என அவளை பிடித்து கீழே இழுத்து வந்து கதவின் வெளியே தள்ளி விட்டு, கேட்டை இழுத்து மூடுங்க. இனி இந்த சனியன் வீட்டுக்குள்ள வரவே கூடாது என பணியாட்களுக்கு ஆணை பிறப்பித்தார் முதன் முதலாக அந்த வீட்டின் மருமகள் என்ற மிடுக்குடன்.

பெரியம்மா, “அக்கா” என முக்தா வெளியே செல்ல முனைய அவள் கையை பிடித்து நிறுத்தினார் அவள் அப்பா.

ப்பா, “அக்கா” என கண்கலங்க கூறிய முக்தாவை அவளது பெரியம்மா வாரி அணைத்துக் கொண்டு அழுதார்.

“நீ ஏன்டி என் வயித்துல்ல பிறக்காம போன?” அவர் அழ, மனம் கேட்காமல் முக்தா அவளின் குறும்பான பேச்சால் மாற்ற எண்ணி, உங்க வயித்துல்ல இடம் இல்லை பெரியம்மா. “இப்ப வேணும்ன்னா உங்க வயித்துல்ல இடம் கொடுக்கிறீங்களா?” எனக் கேட்டாள். அனைவர் மனமும் ஆஸ்வாசமடைந்தது. ஆனால் ரணம் ஆறவில்லை.

சீமாவின் இந்த பேச்சு வினித்தை ஆட்டம் கண்டது. அஜய் ஏற்கனவே கோபத்தில் இருக்கிறான். “தவறான வார்த்தைகளால் தியாவை நோகடித்து விடுவானோ!” என கலக்கத்துடன் மரநாற்காலியில் தலையை பிடித்து அமர்ந்தான். அவன் யோசனை பலவாறாக செல்ல, மனம் பதைபதைக்க தொடங்கியது.

ராணியம்மா அவனருகே அமர்ந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தார். அவர் தோளில் அவரின் கடைசி மருமகள் கை வைக்க, அவர் தன் மூத்த மருமகளின் வலியை எண்ணி வேதனையுற்று, அவரை கவனிக்க சொல்லி கண்ணாலே சைகை செய்தார்.

முக்தா, நீயும் ரோஹித்தும் அவனறையில் இருங்க. நான் உங்களிடம் பேசணும் ராணியம்மா சொல்ல, வினித் அவர்களை நிமிர்ந்து பார்த்தான். அவன் கண்கள் சிவக்க கலங்கிய போராட்ட மனதை அங்கிருந்தவர்கள் புரிந்து கொண்டனர். முக்தாவும் ரோஹித்தும் அவனை பார்த்துக் கொண்டே சென்றனர்.

“என்னப்பா பயமா இருக்கா?” அவர் கேட்க, அவன் கண்கள் கலங்கியது.

எதுவாக இருந்தாலும் பேசுப்பா.

தியாவை அஜய்யும் சந்தேகப்பட்டு வார்த்தையை விட்டு விடுவானோன்னு பயமா இருக்கு. அவன் அவ்வாறு செய்பவன் இல்லை. ஏதாவது ஓர் நிலையில் வாய் தவறி வந்து விட்டால்..தியாவின் நிலை? என அவன் கேட்கும் போதே கண்ணீர் அவன் கன்னத்தில் விழுந்தது.

கவலைப்படாதப்பா. சீக்கிரம் எல்லாம் சரியாகும். ஒரு வேளை அப்படி நடந்தாலும் தியா கடந்து தான் வரணும். அதான் நியதி.. இதே போல் தான அஜய்க்கும் இருக்கும்? வலி எல்லாருக்கும் ஒன்று தான்ப்பா. ஆனால் அதை கடப்பதை, அதை எண்ணி வாழ்வை அழிப்பதும் அவரவர் செயலில் தான் உள்ளது.

அவங்களுக்குள் என்ன பிரச்சனை வந்தாலும் இனி பிரிய மட்டும் எண்ண மாட்டார்கள். பால் சுடும் என தெரிந்த பின் ஆற்றி தானே குடிக்கிறோம். அதே சூட்டோடு வாயில் வைப்பதில்லையே! என்றார்.

வினித்திற்கு மனம் தெளிவாக, ரொம்ப தேங்க்ஸ்ம்மா..என வாஞ்சையுடன், எனக்கு இப்ப தான் மனசு லேசா இருக்கு என எழுந்தான்.

நேரமாகுது. போய் தூங்குப்பா என அவர் சொல்ல, அவரை புன்னகையுடன் பார்த்து அவன் செல்ல, நான் சொன்னதையும் யோசித்து பாருப்பா என அவர் சொல்ல, அவரை பார்த்து சிரித்து விட்டு வினித் சென்றான். அவருக்கு அவன் முக்தாவை ஏற்றுக் கொண்டதை போல் குதூகலமானது.

ரோஹித் அறைக்கு சென்ற ராணியம்மா அவர்களிடம் பேசி விட்டு, முகி ரது உன்னோட அறையில தான் இருக்கா. பார்த்துக்கோ என்று செல்ல, “குட் நைட் பாட்டி” என உற்சாகத்துடன் அவள் பதிலளிக்க, புன்னகையுடன் அவர் சென்றார்.

ஹய்யோ..என ரோஹித் அமர, அண்ணா..என அவன் கையை இழுத்து குதியாய் குதித்தாள். அவன் தலையில் அடித்துக் கொண்டு படுத்தான்.

அஜய் தன் மகளுடன் ஆசையுடன் தரையில் அமர்ந்து விளையாடுவதை கதவருகே நின்று பார்த்துக் கொண்டிருந்தாள் தியா. தியாவை பார்த்து..ம்மா பாப்பா அழைக்க, தியா அவளை துக்கி அஜய்யை பார்த்தான். அவன் படுக்கையில் அமர்ந்தான்.

அவள் அடுத்த பக்கம் அமர்ந்து மகளுக்கு பாலூட்ட, அஜய் வெளியே செல்ல எழுந்தான்.

“எங்க போறீங்க அஜூ மாமா?” தியா கேட்க, அவளது மாமாவில் அவளை பார்த்தாலும் அவன் மனம் அவளிடம் செல்லாதே என மறுத்தது.

நான் வெளிய இருக்கேன்.

அறையும் படுக்கையும் பெருசா தான் இருக்கு. நீங்க இங்கேயே படுத்துக்கலாம். பாப்பா..தூங்கிடுவா.

ம்ம்..அதான் அவள் முடித்த பின் வாரேன்.

அஜூ மாமா, “உனக்கு பயமா இருக்கா?” தியா சீண்ட, அவன் அவளை முறைத்துக் கொண்டே படுக்கையில் வந்து படுத்தான்.

ரது தூங்கவும் தியா மகளை தோளில் போட்டு சில மணிநேரம் உலாவினாள். கதவு தட்டும் சத்தம் கேட்டு, பாப்பாவுடன் தியா கதவருகே வந்தாள். அஜய் அவளிடம் வந்து, பாப்பா விழிச்சிருறாம. நான் பார்க்கிறேன் என கதவை திறந்தான்.

ராணியம்மாவும் அவரின் மூத்த மருமகளும் நின்று கொண்டிருந்தனர். வாங்க என அஜய் அவர்களை அழைக்க, முக்தாவும் அவ்விடம் வந்தாள்.

மூவரும் உள்ளே சென்றனர். தியா ரதுவை குடு. முதலிரவுக்கு நேரம் இப்ப சரியா இருக்கும் என ராணியம்மா பாப்பாவை வாங்க தியா அஜய்யை பார்த்துக் கொண்டே பாப்பாவை அவரிடம் கொடுத்தாள்.

“வழிய விடுங்க பாட்டி” என முக்தா முந்திக் கொண்டு உள்ளே வந்து அவளும் அவளது பெரியம்மாவும் கொண்டு வந்த பதார்த்தங்களை அங்கே வைத்து தயார் செய்ய, “இப்ப எதுக்கு இதெல்லாம்?” என அஜய் கேட்டான்.

சம்பிரதாயம்ப்பா என அவர் புன்னகையுடன் முக்தா, இங்க வாம்மா..”இதை உன் அண்ணன் அண்ணியிடம் கொடு” என்று அவர் சொல்லி ஒரு கவரை கொடுத்தார்.

முக்தா அதை வாங்கி தாம்பூலத்தில் அவர்களுக்கான ஆடையும் பூ பொட்டும் வைத்து கொடுத்தாள்.

இரும்மா என கவரை வாங்கிய அவள் பெரியம்மா, “என்ன பார்த்து எடுத்து வைக்கிற?” என கேட்டுக் கொண்டே உள்ளே இருந்த இரு நகைப்பெட்டியையும் வைத்தார்.

எனக்கு இப்பவே கொடுக்கணும்ன்னு தெரியாது பெரியம்மா. “உங்க பொண்ணு, மருமகள கூப்பிட்டு இருக்கலாம்ல்ல?” என முக்தா கேட்க, “அவங்க சுயத்துல்ல இருந்தா சின்னப்பிள்ளையான உன்னை அழைத்திருக்க மாட்டோமே!” என்றார்.

அதுல என்னடி குறைஞ்சு போச்சு. என் பேத்தி கை வைக்கும் எல்லாமே நல்லா நடக்கும் என ராணியம்மா முக்தாவிற்கு சாதகமாக பேச, “ஆமா..என்னோட அண்ணா, அண்ணிக்கு நான் கொடுக்காமல் மத்தவங்கல்ல கொடுக்க விட்ருவேனா? என்ன அண்ணா சொல்றீங்க?” முக்தா கேட்க, அஜய் புன்னகையுடன் “நீ மாறவேயில்லை” என்றான்.

அடேங்கப்பா..”உங்களுக்கு என்னை நினைவிருக்கு போல?” முக்தா கேட்க, “இல்லாமல் இருக்குமா?” என அஜய்யும் எதிர் கேள்வி கேட்டான்.

“வாயாடாம இப்ப கொடு” என பெரியம்மா சொல்ல, முக்தா கொடுத்து விட்டு, “ஆல் தி பெஸ் அண்ணா, அண்ணி” என ஓடினாள்.

தலையில் அடித்த அவள் பெரியம்மா, “இப்படி நேரடியாகவா சொல்லீட்டு போவா?” எனக் கேட்க,

இது எல்லாருக்கும் தெரிந்தது தான. அவ சின்னப் பொண்ணு இல்லம்மா. அவள் படிச்சு முடிச்சுட்டா. அவளுக்கும் திருமண வயசு வந்துருச்சு என்றார் ராணியம்மா.

பெரியம்மா புன்னகைத்தவாறு, “இவகிட்ட யாரு வந்து மாட்டப் போறானோ?” என அவர் சொல்ல, ராணியம்மா வினித்தை எண்ணி புன்னகைத்துக் கொண்டார்.

தம்பி, நீங்க ஆடையை மாத்திக்கோங்க. வா தியா..என அவளை அவர்கள் அழைக்க, அவள் ஆடையை எடுத்துக் கொண்டு அவர்களுடன் சென்றாள்.

அஜய் குளித்து ஆடையை மாற்றி படுத்து விட்டான். தியாவை தயாராக்கி அஜய் இருக்கும் அறைக்கு அனுப்பி விட்டு தான் இருவரும் வீட்டிற்கு வந்து, முக்தா, ரோஹித் அலுச்சாட்டியங்களை பார்த்திருப்பார்கள்.

தியா அறைக்கதவை திறக்க, அஜய் படுத்தவாறு அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தான். தியா உள்ளே வருவதை பார்த்தும் பார்க்காதது போல் பேசிக் கொண்டிருந்தான்.

அவனை பார்த்துக் கொண்டே வந்த தியா கையை கட்டிக் கொண்டு அவனை மேலிருந்து கீழாக பார்த்தாள்.

சரியாக ஷேவ் பண்ணாத முகம், உடல் கட்டுமஸ்தாக இருந்தாலும் மெலிந்தது போல் உருவம், கண்ணில் எட்டாத புன்னகை, அடர்ந்த கேசம் என தியாவை விட்டு பிரிந்த துயர் அவனிடம் நன்றாகவே தென்பட்டது.  அவள் அவனை அளவெடுப்பது அவனுக்கு குறுகுறுக்க, அலைபேசியை துண்டித்து விட்டு அவளை பார்த்தான்.

இருவரின் விழிகளும் ஒன்றாக கலக்க சில நிமிடங்கள் கரைந்தது. அவனும் அவளை ஆராய்ந்தான். அவளது மேனி முழுவதும் இளைத்திருக்க, அவளது கண்களில் அவன் மீதான காதலை பார்த்த அஜய்யால் பொறுக்க முடியாமல் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு, ஓய்வெடு. காலையில கிளம்பணும் என பேச்சை முடிக்க எண்ணி கூறினான்.

அஜூ, “நான் உங்களிடம் பேசணும்” என்று அவனை நோக்கி அவள் வர, “நில்லு” என்று அவளை நிறுத்தி, இனி பேச ஏதுமில்லை. “என்னை நம்பாதவர்களிடம் பேசி என்ன ஆகப் போகிறது? நான் உன்னை திருமணம் செய்தது என் மகளுக்காக மட்டுமே!” அவளும் அம்மா பாசமில்லாமல் கஷ்டப்படக் கூடாது. அதனால் தான் உன்னை திருமணம் செய்தேன். எதையும் என்னிடம் எதிர்பார்க்காத என்று சுள்ளென வார்த்தையை உதிர்த்தான்.

கண்கள் கலங்க, அஜூ ப்ளீஸ்..புரிஞ்சுக்கோங்க என அழுதாள்.

வாயை மூடு..சும்மா அழுது என்னை மடக்க பார்க்காத.

அஜூ..என அவள் கண்ணீர் வடிந்தது.

எனக்கு உன்னை பார்த்தாலே, என் மீது எப்படி நம்பிக்கை வரும்ன்னு கேட்டதும், நான் உன்னை ஏமாத்திட்டேன்னு சொன்னது தான் நினைவுக்கு வருது. என்னை விட்ரு என கையை கூப்பினான்.

அஜூ..என அவள் மடிந்து அமர, அஜய் அவளை பார்க்காதவாறு திரும்பி படுத்துக் கொண்டான்.

என்ன தான் வெளி ஆட்களிடம் தன்னை விட்டுக் கொடுக்காமல் பேசினாலும் காதலித்த அவள் மனம் அவன் பேசாமல் விலகுவதை தாங்க முடியவில்லை.

உயிருக்கு உயிராய் காதலித்து நான் உங்களை விட்டு வந்தது தவறு தான். யார் என்ன செய்திருந்தாலும், ஏன் செத்தாலும் நான் அங்கேயே இருந்திருக்கணும். என் மீது தவறு தான் என வாய் விட்டு சொல்லிக் கொண்டே அழுதாள்.

“அழுறதை நிறுத்துறியா?” எனக்கு தொந்தரவா இருக்கு அஜய் கத்தினான்.

வாயை மூடிக் கொண்டு அவள் அழ, அவளை பார்த்த அஜய் திரும்பி படுத்தான். அவன் கண்களிலும் கண்ணீர் வடிந்தது.

சற்று நேரம் கழித்து விழித்த அஜய் அவன் பக்கம் பார்த்தவாறு கன்னத்தில் கண்ணீரின் தடயத்துடன் உறங்கிக் கொண்டிருந்த தியாவை பார்த்தான்.

சாரி பேப். உன் வார்த்தைகள் என்னை குத்து கிழித்துவிட்டது. என்னால உன்னை விடவும் முடியல. ஏத்துக்கவும் முடியல என்று அவள் எழாதவாறு அவள் தலையை மெதுவாக வருடி தன் கைகளை கோபமாக இழுத்துக் கொண்டு திரும்பி படுத்து தூங்கினான்.

காலை எழுந்த அஜய் அருகே தியா இல்லை. பெருமூச்சுடன் எழுந்த அஜய் தயாராகி வெளியே வந்தான். மேசையின் மீது ஏதோ நோட் ஒன்று இருந்தது. அதை கையில் எடுத்து பார்த்தான்.

உங்களால என்னை மன்னிக்க முடியலைன்னாலும் பரவாயில்லை. ஆனால் பேசாமல் மட்டும் இருக்காதீங்க. அப்புறம் நேற்று போலே எல்லார் முன்னும் என்னை விட்டுக் கொடுக்காதது போல் நடிங்க. எனக்காக இது மட்டும்.

ஆனால் என் நலனுக்காக இல்லை. இங்கே எனக்கு இத்தனை நாட்கள் பாதுகாப்பு கொடுத்த இந்த குடும்பத்திற்காக. இங்கிருக்கும் வரை மட்டுமே!  அப்புறம் நீங்க என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துகிறேன் என எழுதி இருந்தது.

“நேற்று நான் என்ன நடித்தேன்?” என சிந்தித்தான் அஜய். தியாவை பற்றி தவறாக பேசியதால் அவன் காதல் வெளியே வந்து உரையாடியது நினைவில் வந்தது.

ஏன்டி, “இது கூட நடிப்பாக தான் உனக்கு தெரியுதா?” என அவனுக்கு அவனாக புலம்பியவன் இரவில் அவன் விட்ட வார்த்தையை அப்பொழுது மறந்து தான் போனான்.

அனைவரும் அங்கொருவர் இங்கொருவருமாக அமர்ந்திருக்க, சாரலாக அஜய் கண்கள் தன் மனைவியையே தேடியது. முக்தா தியா கன்னத்தை பிடித்து சமாதானமாக பேச, தியா முகம் முழுவதும் வருத்தம். அதே போல் அங்கிருந்த அனைவர் முகமும் வாடி இருந்தது.

Advertisement