Advertisement
நீ நான் 1
விடிந்தும் விடியாமலும் பிறக்கும் அதிகாலை வேளை டெல்லி பணக்கார வர்க்கத்தினர் வசிக்கும் மாடர்ன் டவுனில் இருவர் நடந்து கொண்டிருந்தனர்.
ஹிந்தியில் பேசுவதை நாம் தமிழில் கேட்கலாம். வாருங்கள்.
மாமா, “இது என்ன?” இந்த ஏரியாவின் பெரிய மாளிகையாக இருக்கும் போலும். அலங்கார விளக்குகள் இந்த நேரத்தில் ஜொலிக்குது. “ஏதும் விசேசமா?” என ஒருவன் கேட்டான்.
ஆமா மாப்பிள்ள, நம்ம சுராஜ் கட் குடும்ப மாளிகை தான் இது. அவங்க பேத்திக்கு இன்று திருமணம் கோலாகலமாக நடக்கவுள்ளது.
“இவங்க ரொம்ப பணக்காரவங்களோ?”
ஆமா மாப்பிள்ள, முஹவ் சுராஜ் கட் இறந்துட்டார். அவர் மனைவி ராணியம்மா தான் குடும்பத்துக்கு எல்லாமே.
“ராணியம்மாவா? தமிழ்நாடோ!”
ஆமாப்பா. காதல் திருமணம் செய்தவங்க. முஹவ் சுராஜ் கட் இறந்த பின் ராணியம்மா தான் இந்த குடும்பத்துக்கு அச்சாணி. அவங்க இல்லாமல் துருவும் அசையாது. கண்டிப்பானவங்க. அவங்களுக்கு மூன்று பசங்கள். தொழிலுக்கு பேர் போன குடும்பம். எல்லாருமே தொழிலதிபர்கள். இவர்கள் வெளிநாட்டிலும் தொழில்கள் நடத்தி வருகின்றனர்.
மூத்தவருக்கு ஒரே பொண்ணு. திருமணம் முடிந்தது.
இரண்டாமவருக்கு இரண்டும் பசங்க. அதில் ஒருவருக்கு முடிந்தது. ஒருவருக்கு பார்த்துட்டு இருந்தாங்க. அவர் ஏழை பொண்ணை காதலித்தார்.
அச்சோ, என்னாச்சு?
ராணியம்மா குணத்தையும் ஒழுக்கத்தையும் தான் பெரியதா மதிப்பாங்க. அவங்களே அந்த பொண்ணை அவங்க வீட்டு மருமகளாக்கிட்டாங்க.
மூன்றாமவருக்கு இரண்டு பொண்ணும், ஒரு பையனும். மூத்தவர் ரோஹித் சுராஜ் கட். தொழிலதிபர் மாதிரி. நண்பர்களுடன் ஊர் சுற்றும் ரகம். வேலையை பார்க்க மாட்டார். அவர் அப்பா தான் அனைத்தையும் கவனிக்கிறார்.
இப்ப திருமணம் நடக்கப் போகுதே! அந்த பொண்ணு யுக்தா சுராஜ் கட்.
அவரின் தங்கை முக்தா சுராஜ் கட். குடும்பத்தோட கடைக்குட்டி. படு சுட்டி. கொல்லை அழகு.
மாமா, “ரொம்ப வர்ணிக்கிறீங்க?”
சத்தமா பேசாத. அவங்க பொண்ணுங்கல்ல உற்றுபார்த்தாலே ராணியம்மா காதுக்கு போயிரும். அவ்வளவு தான் தொலைஞ்சோம். அவங்க நல்லவங்களுக்கு நல்லவங்க. கெட்டவங்களுக்கு மோசமானவங்க என்றார்.
இது தான் அவங்க குடும்பம்.
இப்ப இரண்டு வருசமா இந்த வீட்ல புதுசா ஒரு பொண்ணு வந்துருக்கான்னு சொல்றாங்க. ஆனால் யாருன்னு சரியா தெரியலப்பா என்றார்.
“ஒரு வேளை ரோஹித்துக்கு பார்த்த பொண்ணோ?”
“யாராக இருந்தால் நமக்கென்ன?” யாரையும் பார்க்கணும்ன்னு இவங்க வீட்டு முன்னாடி நின்றாத. கொன்றுவாங்க என்று அவர் எச்சரித்தார்.
சரிங்க மாமா. “இப்ப இங்கேயா திருமணம் நடக்கப் போகுது?”
இல்ல இல்ல..பக்கத்துல்ல தான். பெரிய மஹால் தான் நடக்கும். இவங்க சொத்துக் கணக்கு. பன்னிரண்டு தலைமுறையினர் உட்கார்ந்து சாப்பிடலாம். இவங்க கை வைக்கும் தொழில் நலிய வாய்ப்பேயில்லை என்றார்.
வாங்க..போகலாம் என இருவரும் சென்றனர்.
முகி..முகி..எங்கடி இருக்க? என முக்தாவை தேடி உள்ளே வந்தார் அவள் அம்மா.
படுக்கை, குளியலறையில் தேடி விட்டு, ஹரே பகவான்..”இந்த பொண்ணு எங்க போனா?” என திரும்பியவர் முன் வந்து குதித்தாள் முக்தா. எப்பொழுதும் சிரித்த முகமாய் கண்ணில் காஜல் அழியாமல், உதட்டு சாயம் என பல ஒப்பனைகள் செய்து பேபி பிங்க் லெஹங்காவில் அழகிகளுக்கெல்லாம் அழகியாக இருந்தாள் முக்தா சுராஜ் கட்.
ஆ..அவள் அம்மா நெஞ்சை பிடித்து கத்த, மா..என அவரை அணைத்தாள்.
ஹா..ஹா..என மூச்சிறைத்து அவர் அமர்ந்தார்.
“என்னடி விளையாட்டு இது?” ஹப்பா..மூச்சே நின்னு போயிருக்கும். “படிப்பை முடித்தும் சிறுபிள்ளையாட்டம் இப்படி விளையாடிட்டு இருக்க?” அவர் கோபமானார்.
“படித்து முடித்தால் விளையாடக் கூடாதா?” வாழ்க்கையை எஞ்சாய் செய்து வாழணும். உன்னை மாதிரியா?..போர் என்றாள்.
“போரா? போகிற இடத்துல்ல நீ எங்க மானத்தை வாங்காமல் விட மாட்ட போலவே!”
மா..என சிணுங்கினாள்.
உன்னோட அக்கா திருமணம் நடக்கப் போகுது. அவள் தயாராக உதவு. போ என்றார்.
ஏற்கனவே தியூ உதவிட்டு இருப்பாங்க.
சரிடி, அப்ப நீ ரதுவை பார்த்துக்கோ என்றார்.
போறேன்..போறேன்..எனக்கு வேலை சொல்லாமல் இருக்க முடியாதுல்ல மா என அவரை செல்லமாக முறைத்தாள்.
“அவளோட சேர்ந்து விளையாட இவ்வளவு சலிச்சுக்கிற?”
ஓ.கே மா..
நான் திட்டுறேன்டி..
ஓ.கே என துள்ளி குதித்து அவள் ஓட, பாட்டிய பார்த்துட்டு போடி. உன்னை பார்க்கணும்ன்னு சொன்னாங்க என்று சொல்ல, நின்று அவரை திரும்பி பார்த்த முக்தா மீண்டும் ஓடினாள்.
அய்யோ, “இவளை என்ன செய்றது?” என புலம்பினார் முக்தாவின் அம்மா.
சற்று நேரத்தில் அனைவரும் தயாராக, ஆன்ட்டி உங்களை ராணிம்மா அழைக்கிறார் என்று குட்டிப்பையன் கூற, அவனை எதிர்கொண்ட பெண்ணவளோ புன்னகையுடன் ஓ.கே சேட்டா..என படிகளில் ஏறினாள். அவளுக்கு எதிரே வெள்ளியையும் தங்கத்தையும் உருக்கியது போல் இருந்த குர்தாவுடன் வந்தான் ரோஹித் சுராஜ் கட்.
ஹே, வாவ்..அந்த வானுலக தேவதையே என் முன் வந்தது போல் இருக்கு அவன் அந்த பெண்ணின் அழகை வர்ணிக்க, சாரி சாப். எனக்கு வேலை இருக்கு என அந்த பெண் வேகமாக படிகளில் ஏறினாள். அவனோ அந்த பெண்ணை பார்த்தவாறு நின்று கொண்டிருந்தான்.
நீயும் அவளை உன் பக்கம் திருப்ப எவ்வளவோ முயல்கிறாய்..முடியலையா? என அவனின் இரண்டாவது அண்ணன் கேலியுரைக்க, அண்ணா..சீண்டாத. அடுத்து எங்களுடைய திருமணம் தான் நடக்கும். நடத்திக் காட்டுகிறேன் என்றான் சவலாக.
பேச்சு நல்லா தான் இருக்கு. பார்க்கலாம் என அவன் அண்ணன் சொல்லி நகர, எதிர்கொண்ட அனைவரையும் புன்னகையுடன் ஏறிட்டு வரவேற்றான் ரோஹித். பாவம் இன்னும் கொஞ்ச நேரத்தில் அவன் மனம் உடைந்து சுக்குநூறாகப் போவதை அறியாமல்..
ராணியம்மா அறையில் அந்த பெண் நுழைய, வாம்மா தியா..இது உனக்காக தான். இந்த ஆபரணமெல்லாம் உனக்காகவே செய்தது போல் இருக்கு என அவளிடம் கொடுத்தார்.
வேண்டாம்மா. எனக்கு இதே போதும்.
“எங்க வீட்டு பிள்ளையான பின் என்ன இது?” “ராணியம்மா சொன்ன சொல்” என நிறுத்தினார். “தட்டக் கூடாது” என்ற தியா முடித்து விட்டு புன்னகைத்தாள்.
“இன்னும் எத்தனை நாள் இதை சொல்லியே எல்லா காரியமும் சாதிப்பீங்க ராணியம்மா?” அவள் நேரடியாக கேட்க, அவர் சிரித்தார்.
அம்மாடி, “ஏற்பாடெல்லாம் எப்படி நடக்குது?”
எல்லாம் தயாரா இருக்கும்மா. வர்மா சார் பேமிலி உங்களை பார்க்க காத்திருக்காங்க. நீங்க இப்ப அவங்களிடம் பேசுவீங்கல்ல?
நான் அவர்களை சந்திக்க போகிறேன். நீ எல்லாவற்றையும் போட்டு விட்டு தான் வரணும் என்றார் கண்டிப்புடன். அவருக்கு புன்னகையை பதிலாக அளித்தாள் தியா.
எஸ், இந்த தியா நம்ம அஜய்யின் தியாவே தான். வாங்க வாங்க நடப்பதை பார்த்து குழப்பத்தை தீர்த்துக்கோங்க.
வரவேற்றுக் கொண்டிருந்த ரோஹித் கண்ணில் அவன் படவும் மகிழ்வுடன் அவனை அணைத்து, சாப் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். நீங்க பிசினஸ் நடத்தும் அழகோ அழகு. என் அக்கா திருமணத்திற்கு வந்ததற்கு நன்றி. உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி. உட்காருங்க வாரேன் என அவன் சொந்தங்களிடம் அவர் வந்திருக்கார் என புன்னகை முகமாக கூறியவனை வருத்தமுடன் பார்த்தார் ராணியம்மா.
மேளதாளங்கள் முழங்க, மாப்பிள்ளை வீட்டார் வரவும் குதுகலமும் கோலாகலமுமாய் வரவேற்றனர். பெண் வீட்டாரும் மணமகன் வீட்டாருடன் சேர்ந்து நடனமாட, மாப்பிள்ளையை ரோஹித் அழைத்து மணமேடையில் அமர வைத்து கீழே வந்தான். தியாவை தேடினான். அவள் மணப்பெண்ணின் அறையிலிருந்து அவளுடன் வந்து மேடை ஏறாமல் கீழே நின்று கொண்டாள்.
ராணிம்மா மகிழ்வுடன் தன் பேரன், பேத்திகளையும், மணமக்களையும் பார்த்து உச்சி குளிர்ந்து கொண்டிருந்தார். தியா வருத்தமுடன் திருமணமேடையை ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
அதை பார்த்து அவளிடம் வந்த ராணியம்மா, “என்னம்மா, என் பேரனை கல்யாணம் பண்ணிக்கிறியா?” என அவர் கேட்க, அவள் அதிர்ந்து அவரை பார்த்தார்.
அவர் புன்னகைத்து, உன் பார்வையில் ஏக்கம் தெரியுதும்மா. வருத்தப்படாத எல்லாமே மாறிடும் என்றார்.
மாறாதும்மா..
“உன்னோட பிடிவாதம் இருக்கே!” என செல்லமாக தியாவை கடிந்தார்.
தியூ, மேல வாங்க முக்தா அழைக்க, நோ..முகி. நான் வரக் கூடாது என்று நகர சென்றவளை ரோஹித்தின் வார்த்தைகள் நிறுத்தியது.
திருமண ஜோடிகளுக்கு வாழ்த்தை கூறி விட்டு, எங்கும் நிறைந்து என் மனதை கொள்ளையடித்தவளே! என் வாழ்க்கை பயணத்தை உனக்காக அர்பணிக்க காத்திருக்கிறேன். “வில் யூ மேரி மீ?” என அனைவர் முன்னிலையிலும் ரோஹித் ரோஜாவை தியாவிடம் நீட்டினான். ஃபோகஸ் லைட் தியா மீது பட்டது. அவள் உடல் கூசி நின்றாள்.
அவள் வேகமாக நகர, மேடையிலிருந்து தாவி இறங்கிய ரோஹித்..ப்ளீஸ் ஏஞ்சல் என அனைவரையும் அவன் பார்த்து விட்டு தியாவை பார்க்க, அவள் கண்கள் கலங்கியது. அவள் மேலும் நகர எத்தனிக்க, அவளது கையை பிடித்து அவனருகே இழுக்க, கோபத்தில் அவள் கைகள் அவன் கன்னத்தை பதம் பார்த்து இருந்தது. அனைவரும் அதிர்ச்சியுடன் அவர்களை பார்த்தனர்.
அக்கூட்டத்தின் நடுவே இருந்த ஒரு ஜோடி கண்கள் மனம் உடைந்து கண்ணீரில் மிதக்க, மற்றுமொரு ஜோடிக் கண்களோ அனலாய் தகித்தது நடந்த நிகழ்வில்.
ரோஹித், ஏற்கனவே என்னோட பதிலை சொல்லீட்டேன். இதுக்கு மேல என்னை தொந்தரவு பண்ணாத.
ஏஞ்சல், “அவன் தான் உன்னுடன் இல்லையே! அப்புறம் என்ன? அவனுக்காக உன் வாழ்க்கையையே அழிச்சிக்கப் போறீயா?” சீற்றமுடன் ரோஹித் கேட்டான்.
ஆமா அவன் இல்லை. அவன் என்னை விரட்டவில்லை. நானாக தான் அவனை விட்டு வந்தேன். இதுக்கு மேல அவனை பத்தி நீ பேசாத என்றாள் அவளும் சீற்றமாக. தியாவின் கைகள் அனிச்சை செயலாக அஜய் கொடுத்த டாலரை பிடித்தது.
“யாரோ ஒருவனோட இருந்துட்டு முறையில்லாம வாழ்ற உனக்கு என் பிள்ளை வாழ்க்கை கொடுத்தால் கூட கசக்குதோ?” என முக்தா அம்மா கேட்க, தியா உடைந்து நின்றாள். ஆனால் அவள் கண்ணில் கண்ணீர் இல்லை. கட்டுப்படுத்தி வைத்திருக்கிறாள்.
மா..என கத்திய யுக்தா மாப்பிள்ளையையும் இழுத்துக் கொண்டு அவர் முன் வந்து, அவ என்னோட ப்ரெண்டு. “என்ன பேச்சு பேசுறீங்க? உங்க பையன் தான் அவள் முடியாதுன்னு சொல்லியும் வெட்கமில்லாமல் பின்னாடி சுத்துறான். அவள் என்ன செய்வாள்?” கோபமானாள்.
“பேப்” என்று சத்தமாகவும் நழுங்கிய குரலும் கேட்டு திகைத்து தியா சத்தம் வந்த திசையை நோக்க, அஜய் கண்கலங்க அவளை நோக்கி வந்தான்.
பேப்..என அவளிடம் வந்து அவளை அணைத்து, “என்னை எதுக்கு விட்டு போன? என்ன இதெல்லாம்?” என அஜய் பாவமாகவும் வலியுடனும் கேட்க, உறைந்து நின்ற தியா சுயம் வந்து அவனை தள்ளி விட்டு முறைத்தாள்.
“அஜய் சாரா?” என்று ரோஹித்தும் அவன் குடும்பமும் தியாவை பார்த்தனர். ரோஹித்தின் பலத்த வரவேற்பு அஜய்யையே சாரும்.
“பேப்” அவன் அழைக்க, என்னை அப்படி அழைக்காத. “உன்னை நான் என்ன செய்தேன்?” நான் பாட்டுக்கு என்னோட அப்பா நினைவுடன் அழுது கொண்டு தனியாகவே இருந்திருப்பேன். என்னை ஏமாத்திட்ட. “உனக்கு என்னை பார்த்தால் எப்படி தெரியுது? வேணும்ன்னா யூஸ் பண்ணவும் வேணாம்ன்னா தூக்கி எறியவும் நான் என்ன யூஸ் அன்ட் த்ரோ பொருளா?” என தியா அழுதாள்.
தியூ, “அஜய் அண்ணாவா?” சொல்லவேயில்லை முக்தா மகிழ்வுடன் தியாவிடம் வந்தாள். அவள் முறைத்த முறைப்பில் முக்தா அங்கேயே நின்று விட்டாள்.
முகி, “உனக்கு அஜய் சாரை தெரியுமா?” அவள் அப்பா கேட்க, அய்யோ அப்பா..நம்ம யுகி, அஜய் அண்ணா, தியா எல்லாரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் தான் என்றாள்.
“என்ன?” ரோஹித் அதிர்ச்சியுடன் அவர்களை பார்த்தான்.
அதே நேரம் அஜய் கன்னத்தில் பளாரென அறை ஒன்று விழுந்தது. அஜய் சட்டையை பிடித்து, தியூவோட பொறுப்பு உன்னிதுன்னு நான் தெளிவா தான சொல்லீட்டு போனேன். உன் மேலிருந்த நம்பிக்கையில் தான் அவளை நீ காதலித்ததை சொல்லும் போது ஏற்றுக் கொண்டேன்.
“என்னடா பண்ண அவளை?” என மீண்டும் வினித் அவனை அடிக்க, அதிர்ந்த தியா மீண்டு..அவன் கை அஜய் மீது படாதவாறு பிடித்து வேகமாக தள்ளினாள்.
தியூ..நான்..வினு பேச, நீயும் என்னை ஏமாத்திட்டேல்ல டா என கோபமாக கத்தினாள்.
ஹேய், “இங்க என்ன நடக்குது?” எங்க பொண்ணு திருமணம் நடக்கணும். எல்லாரும் வெளிய போங்க என ராணியம்மாவின் பையன் கத்தினார்.
ராகுல்..என அவரை அடக்கிய ராணியம்மா அவர்களிடம் வந்து கொஞ்ச நேரம் பொறுங்க. பேசி தீர்த்துக்கலாம் என்றார்.
நான் இங்கிருந்து கிளம்பணும் என்றாள் தியா.
பேப், “நீயும் வினுவும் என்ன தான் பேசுறீங்க?” எனக்கு ஒண்ணுமே புரியலை அஜய் தலையை பிடித்தான்.
“பாஸ்” என அஜய் காரியதரிசி எமிலியும் வேலனும் வந்தனர்.
தம்பி, அமைதியா இருங்க. திருமணம் முடியட்டும் ராணியம்மா அஜய் கையை பிடித்து அழுத்தினார். அவன் அவரை பார்த்து விட்டு முகத்தை துடைத்தான்.
ம்மா..ம்மா..ம்மா..என குரல் வந்த திசையில் அவர் பார்வையும் செல்ல, தத்தி தத்தி அழகாக பார்பி டால் போல நடந்து வந்தாள் அஜ்ரதியா. அஜய்- தியாவின் ஒன்பது மாத குழந்தை.
குழந்தையை பார்த்த அஜய்யும் வினித்தும் அதிர்ந்து தியாவை பார்க்க, ம்மா..என மேலும் குரலுடன் ஒரு பெண்ணின் கையை பிடித்து அழகாக அரிசிபற்களை காட்டியவாறு வந்த குழந்தையை அள்ளி தூக்கி முத்தமிட்டு தியா நகர முனைந்தாள்.
“பேப்” அஜய் அழைக்க, ராணிம்மாவோ இது சரிப்படாது என அஜய், வினித், தியா கையை பிடித்து ஓரறையில் அடைத்து, நீங்க திருமணத்தை நடத்துங்க என அவரும் உள்ளே நுழைந்தார்.
பாட்டி, “தியா அஜய்” யுக்தா பதட்டமானாள்.
“நான் பார்த்துக்கிறேன் யுகி” என்று அவரும் உள்ளே சென்றார். எல்லார் கவனமும் மணமக்கள் மீது திரும்ப, முக்தாவும் ரோஹித்தும் மூடிய கதவை பார்த்துக் கொண்டிருந்தனர்.
தியூ..பாப்பா..என வினித் தியாவை கேள்வியுடன் நோக்க, “எங்க குழந்தை தான்” என்று தியா சொல்ல, அஜய் மனம் கனத்து போனது.
ப்பா..ம்மா..ப்பா..என குழந்தை அஜய்யிடம் தூக்க சொல்லி அவனை “அப்பா” என அழைக்க, அவன் துவண்டு போனான்.
அவனை பார்த்த தியா, குழந்தையை இறக்கி விட்டாள். கொஞ்ச நேரம் தான். பாப்பாவுடன் நேரம் செலவழித்துட்டு நீங்க கிளம்புங்க இல்லை நான் கிளம்பிடுவேன் என்றாள்.
“ஏம்மா என்ன பேசுற?” ராணியம்மா கோபமாக கேட்க,
அம்மா..ப்ளீஸ்..இவங்களெல்லாம் எப்போதும் திருந்தவே மாட்டாங்க என கோபமாக பேசினாள்.
தியா குழந்தையை இறக்கவும் அது தானாக தத்தி தத்தி வேகமாக அஜய்யிடம் செல்ல, அவன் பாப்பாவை தூக்கி முகமெங்கும் முத்தமிட்டான். பின் தியாவை பார்த்து, அவளிடம் வந்து மண்டியிட்டு, நீ பேசுறது புரியல என அஜய் சொல்ல, அவளது அலைபேசியை அவள் நீட்டினாள்.
அதில் அவர்களின் நிச்சய புகைப்படமும், அதன் பின் இருவரும் ஒன்றாக மகிழ்வுடன் சுற்றி திரிந்த புகைப்படங்களும் இருந்தது.
அவன் ஒவ்வொன்றாக புன்னகையுடன் பார்க்க, எரிச்சலான தியா அவன் கையிலிருந்த அலைபேசியை வெடுக்கென பிடுங்கி ஒரு வீடியோவை காட்ட, மற்ற மூவரும் அவளிடம் வந்தனர். அஜய் கையிலிருந்து அவள் பாப்பாவை வாங்கினாள்.
அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு, வீடியோவை பார்த்தவனுக்கு அதிர்ச்சி. கைகள் நடுங்க அலைபேசியை அஜய் தவற விட, வினித் அதை பார்த்து விட்டு சீற்றமுடன் அஜய்யை பார்த்தான்.
“பேப்” இது நானில்லை அஜய் கண்ணீருடன் சொல்ல, குழந்தையை ராணியம்மாவிடம் கொடுத்து விட்டு, அஜய்யின் சட்டையை பிடித்தாள். ராணியம்மா அமைதியாக வேடிக்கை பார்த்தார்.
“என் முன்னாடியே நீ அந்த திவ்யாவுடன் சுற்ற தான செய்த? அவளுக்கு அடிப்பட்டா வேற ஆளா இல்லை. சார் தான தூக்கிட்டு போவீங்க?” கண்ணீருடன் தியா அவனை பார்த்து, அவள் உன்னை கிஸ் பண்ணதை பார்த்தேன்.
“நீ மறுக்கலையே!” அவ தான் உன் பின்னாடி திரிந்தாள். அதை நான் மறுக்கலை. ஆனால் நீ நினைத்திருந்தால் அவள் உன் வாழ்க்கையில் வந்திருக்காமல் செய்திருக்கலாம். உனக்கு அவள் தான முக்கியமாக பட்டாள்.
அன்று நீ அவளிடம் அலைபேசியில் பேசிய போது நானும் அருகே தான் இருந்தேன். உன் அம்மாவும் அவளும் சேர்ந்து என்னை எவ்வளவு கேவலமாக பேசினாங்க தெரியுமா? உன்னோட பணத்துக்காக படுத்தவன்னு சொன்னாங்க. அதை நிரூபிப்பது போல் நீயும் அலைபேசியில், என்னை பயன்படுத்தி விட்டு அலுத்து விட்டால் தூக்கி போட்ருவேன்னு சொன்ன?
இல்ல..இல்ல..இல்ல..நாங்க சிறு வயதிலிருந்து வளர்ந்ததால் தான் உதவியாக அனைத்தும் செய்தேன். நான் என் பேப்பை பற்றி தவறாக பேசலை. இந்த வீடியோவிலிருப்பதும் நானில்லை என்று அஜய் அடித்து கூறினான்.
குடித்து விட்டு அவளுடன் படுக்கையில் என தியா முடிக்கும் முன் அவளை அஜய் அடித்தான். இப்பவும் சரி முன்னாடியும் சரி இனியும் சரி. நான் படுத்தேன்னா அது உன்னுடன் தான். அவள் திவ்யான்னு மட்டும் தான உனக்கு தெரியும். வேறென்ன தெரியும்? ஆவேசமாக கத்தினான்.
சோ..நீ என்னை நம்பலை. அவளுடன் நான் படுத்தேன்னு உனக்கு சந்தேகம்..இல்லை இல்லை உண்மையாக எண்ணிட்ட. அப்படி தான? அவன் கத்த, பாப்பா மிரண்டு அவனை பார்த்தாள்.
வெளியே எட்டி பார்த்து, “முகி பாப்பாவை வச்சிரு” என ராணியம்மா ரதுவை முக்தாவிடம் கொடுக்க, அழுது கொண்டிருந்த பிள்ளையிடம் பேசியவாறு தன் அண்ணனை பார்த்தாள் முக்தா.
“இதே போல் நீ யாரோடு இருப்பது போல் எனக்கு வீடியோ வந்தால் என்ன செய்திருப்பேன் தெரியுமா? வீடியோ அனுப்பியது யார்?” அவங்க சொல்றது உண்மையான்னு பார்த்திருப்பேன்.
அந்த கேடுகட்ட திவ்யா சொன்னதை நம்பி என்னை சந்தேகப்பட்டு, இந்த இரண்டு வருசமும் கொல்லாமல் கொன்னுட்ட. பைத்தியக்காரன் மாதிரி உன்னை தேடி சுத்திட்டு இருக்கேன். தெரியுமா?
எப்பொழுது நமக்கு நிச்சயம் வீட்ல வைத்து நடந்ததோ அன்றே என் குடிப்பழக்கத்தை விட்டுட்டேன். ஆனால் என்னை இவ்வளவு கேவலமா நினைச்சுட்ட? என கண்ணீருடன் வினுவை பார்த்து,
“நான் என்னடா அவளை செய்தேன்? என்னவென்று கூட கேட்காமல் எல்லார் முன்னும் அடிச்சிட்ட வினு. நம்ம ப்ரெண்ஷிப் அவ்வளவு தானா?” உனக்கு தெரியாதா அவளை பற்றி..சொல்லு உன்னோட தியூகிட்ட நீயே சொல்லு..என அஜய் இடிந்து தரையில் அமர்ந்தான்.
வினித் தியாவை பார்க்க, அஜய் அவனை கோபமாக பார்த்து வினித் சட்டையை பிடித்து, “எதுக்கு பாரின் போன? கம்பெனி வேலைக்காக மட்டும் தானா? சொல்லு?” என அவனை உலுக்கினான்.
அஜய் கையை நகர்த்தி விட்டு, ம்ம்..அஜய் சொல்றது சரி தான். உன்னால அஜய் எவ்வளவோ மாறிட்டான். என்று அஜய் அவன் அம்மாவை வீட்டை விட்டு போகச் சொன்னானோ! அன்றே திவ்யாவின் சூழ்ச்சி ஆரம்பமானது.
அஜய் உன்னை காதலிப்பதால் தான் நான் பாரின் போனேன்.
“என்ன உலறுற?” தியா கேட்க, ஆமா..திவ்யா எங்க சின்ன வயசு ப்ரெண்டில்லை என வினித் அஜய்யை பார்க்க, “எனக்கு தெரியும்” என்றான் அஜய்.
“உனக்கு தெரியுமா? எப்ப தெரியும்?” வினித் கேட்க, தியா என்னை விட்டு சென்ற பின் தான் தெரியும்.
அஜய் சொத்தை பிடுங்க வந்த பிடாரிகளில் ஒருத்தி தான் திவ்யா என்ற வினித், தியாவை பார்த்து அவள் பொண்ணே இல்லை தியா என்றான்.
“என்ன?”
அவள் பணத்துக்காக கேடுகெட்ட வாழ்க்கை வாழ்பவள். பாரின்ல அப்படி தான் இருந்தாள். எப்படியும் நீ உன் காதலை அஜய்யிடம் சொல்லிடுவ. உங்க வாழ்க்கையை அவள் கெடுக்க வருவாள் என்று தான் பாரின் போனேன்.
“அதுக்கும் நீ பாரின் போனதுக்கும் என்ன சம்பந்தம்?” தியா வினவினாள்.
“அவளை கொலை செய்ய தான் போனேன்” வினித் சொல்ல, தியா அதிர்ந்து அவனை பார்த்தாள். அஜய் அவனை வெறித்து பார்த்தான்.
வினு, அப்படின்னா..”நம்ம பெற்றோர் கொலைக்கும் இவளுக்கும் சம்பந்தம் இருக்கா?” தியா கேட்க, அஜய்யும் வினித்தும் அவளை அதிர்ந்து பார்த்தனர்.
ஆமா வினு, அவங்க என்னை பேசியது; அஜய் பற்றிய வீடியோ, அவன் செயல்களில் எனக்கு வந்த பயம் தான். என் வீட்டிற்கு போக தூண்டியது. அம்மா டைரியை இதுவரை என் வீட்டில் நான் கண்டதில்லை. ஆனால் தற்பொழுது அம்மா புகைப்படத்தின் பின்னிருந்து விழுந்தது. அதை பார்த்து தான் என்னோட அம்மா, அப்பா. உன்னோட அம்மாவை கொலை செய்தாங்கன்னு தெரிய வந்தது.
அதுவும் அஜய் அம்மா தான் முதற்காரணம் என கனல் தெரிக்க அவனை பார்க்க, அவன் அவளை வெறித்து பார்த்தான்.
“உன்னோட அம்மா தான் எங்க வாழ்க்கையையே ஒன்றுமில்லாமல் பண்ணீட்டாங்க” என தியா அஜய் சட்டையை பிடிக்க, அவளை தள்ளி விட்ட அஜய்..காதம்பரி என்னோட அம்மா இல்லை. என்னை வைத்து என்னோட அப்பாவை மிரட்டி தான் கல்யாணம் கூட செய்யாமல் சொத்துக்காக எனக்கு அம்மாவா நடிச்சிட்டு இருந்திருக்கா எனக் கத்தினான்.
“என்ன? உன்னோட அம்மா அவ இல்லையா?” வினித் கேட்க, அஜய் கதறி அழுதான்.
இது முன்னாடியே தெரிந்திருந்தால் வினு பேச, “நீ என்ன செய்திருப்ப?” என்ற அஜய். உன் அப்பாவுக்கு முன்னாடியே இது தெரியும். உங்க அம்மாவை போல என்னோட அம்மாவையும் அவ தான் கொன்னுருக்கா. அப்பா சொல்லி தான் எனக்கு தெரியும் என அழுதான் அஜய். ஆனால் இப்ப கூட அவளை ஏதும் செய்ய முடியல என்று தரையில் ஓங்கி குத்தினான்.
“என்ன இதெல்லாம்? நான் தப்பு செய்துட்டேனே!” என தியா அழ, அஜய் அவளை வெறித்து பார்த்தான்.
அப்படின்னா, “உன்னோட அம்மா யாரு?” வினித் கேட்க, அவங்க பெயர் இளவேணி. அம்மா அவங்க குடும்பத்தை மீறி அப்பாவை காதலித்து கரம் பிடிச்சிருக்காங்க.
“அப்பாகிட்ட கேட்கலாம்ல்லடா?” வினித் கேட்க, அவர் சொல்ல மாட்டேங்கிறார். இன்னும் இதில் ஏதோ சிக்கல் இருக்கு. விசாரித்தவரை இது தான் தெரிய வந்தது.
என்னோட அப்பாவே என்னிடமிருந்து இதை மறச்சிட்டார்.
எல்லாரும் ரகசியம் வைத்து என்னை கஷ்டப்படுத்தீட்டீங்க என தியா அழுதாள்.
அஜய், நான் ஒரு முக்கியமான விசயம் சொல்லணும். தியா..நீ என்னை அடிக்க மாட்டேல்ல? வினித் பீடிகை போட்டான். அவள் அவனை முறைத்து பார்க்க, அஜய் சோர்ந்து அமர்ந்திருந்தான்.
அஜய்.. உன்னோட அப்பாவும், தியா.. உன்னோட அம்மாவும் உடன் பிறந்தவர்கள் என வினித் சொல்ல, ராணியம்மாவும் அதிர்ந்து பார்த்தார்.
“என்ன சொல்ற?” அஜய் சினமுடன் கேட்க, ஆமாடா..தியா உன்னோட சொந்த அத்தை மகள் தான். இருவரும் சொந்தம் தான் என்றான்.
தியா உணர்ச்சி வசப்பட்டு அஜய்யை அணைக்க வர, அவளை பிடித்து தள்ளினான் அஜய்.
என் பக்கத்துல்ல வர்ற வேலையெல்லாம் வச்சுக்காத. “எவ்வளவு கேவலமா என்னை நினைச்சிட்டு இருந்துருக்க? ச்சே..உன்னை போய் காதலித்தேனே!” என அவன் பெரிய குண்டாய் போட்டான்.
தியா கண்ணீருடன் சாரி அஜூ..என்னை விட்டு நீயும் போயிருவன்னு பயந்து தான் சந்தேகிக்கும்படி போனது என அழுதாள்.
அஜய் எழுந்து, “பாப்பா எங்க மேம்?” என ராணியம்மாவிடம் கேட்க, வெளியே அவர் கையை காட்டிக் கொண்டே பாவமாக தியாவை பார்த்தார்.
அஜூ..பாப்பா..நான்..என திக்கியவளை கையை பிடித்து இழுத்து சென்றான். திருமணம் முடிந்து சடங்குகள் நடக்க, தியாவுடன் மேடையில் ஏறிய அஜய் பாப்பாவை தூக்கிக் கொண்டு, கொஞ்சம் நகருங்க என முக்தாவிடம் பாப்பாவை கொடுத்து விட்டு அவன் பாக்கெட்டில் வைத்திருந்த தாலியை எடுத்து தியா கழுத்தில் கட்டினான்.
ரோஹித் மனம் சில்லு சில்லாய் நொருங்க, முக்தாவிடமிருந்து பாப்பாவை வாங்கி விட்டு தியா கையை பிடித்து மேடையிலிருந்து இறங்கி அவன் நகர, அவனை வழி மறித்து நின்றார் ராணியம்மா.
“எங்கப்பா போற?”
நாங்க சென்னை போறோம்.
“மேடையில வச்சு தான தாலி கட்டுன?” எங்க சடங்குகளை நீங்களும் செய்யணும். முடிக்காமல் நீங்க போக முடியாது.
“உங்க குடும்பத்துக்கான சடங்கை நாங்க எதுக்கு பண்ணனும்?”
தியாம்மா..சொல்லு என்றார் அவர்.
தியா அஜய்யை பார்க்க, என்னால முடியாது என்றான் அவன்.
“ஏன்? சடங்கு தான முடிச்சிட்டு போகலாமே!” அஜய்க்கு தெரிந்த பிசினஸ் ஆள் ஒருவர் கேட்க, சார்..தியா என்னோட பொண்டாட்டி. இப்ப இல்ல முன்னமே என அவளது தாலிக்கு அடியில் இருக்கும் செயினை தூக்கி காட்டினான்.
அவளை பற்றி கேவலமா பேசின இடத்துல்ல நாங்க இருக்க மாட்டோம். அவ என்னோட படுத்தவ இல்லை. வாழ்ந்தவ. என்னோட உயிர் என்றான் உணர்ச்சி மிகுந்து.
ராணியம்மா புன்னகைக்க, வினித் அவன் முன் வந்து அவனை உற்று பார்த்து, “வாட் டிட் யூ சே? கம் அகென்?” என கேட்டான்.
அஜய் அவன் காதருகே வந்து, எனக்கு இருக்கிற கோபத்தில் உன்னை தூக்கி போட்டு மிதுச்சிருவேன். ஒழுங்கா என் வழியை விட்டு நகரு என்றான்.
அஜய் கோபத்தை பார்த்து அவன் தன்னை ஏத்துக்க மாட்டான் என எண்ணிய தியாவிற்கு அவன் தாலி கட்டியதே பெரியதாக தெரிய, என்ன தான் கோபம் இருந்தாலும் எல்லார் முன்னும் தியாவின் தன்மானத்தை விடாமல் காத்த தன்னவனை இமை சிமிட்டாமல் கண்ணீர் வடிய பார்த்தாள். அதில் அவள் காதலும் கலந்திருந்தது.
ரோஹித் அதை பார்த்து, இத்தனை நாட்களில் உன்னை ஒரு முறை கூட என்னை பார்க்க வைக்க முடியலையேன்னு கஷ்டப்பட்டேன். அதுக்கு காரணம் அஜய் மீதான உன் காதலா ஏஞ்சல் என மனதில் எண்ணியவாறு அவன் அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.
சார்..கங்கிராட்ஸ்..என எமிலி அஜய்க்கு கையை கொடுத்து விட்டு தியாவிற்கும் வாழ்த்து கூற, ஏம்மா..அவங்க என்ன பேசிட்டு இருக்காங்க. நீ என்னம்மா பண்ற? வேலன் கேட்க, அவன் கையை இழுத்து அவனை குனிய வைத்த எமிலி, நாமும் இவங்கள போல கல்யாணம் பண்ணிக்கலாமா? என கேட்டாள். அவன் அவள் கையை தட்டி விட்டு அவளை முறைத்தான்.
இங்க பாருப்பா. ஒரு நாள் தான்ப்பா. நாளை காலை விருந்தை முடித்து கிளம்புங்க. தியாவை சந்தோசமாக உன்னுடன் அனுப்பி வைக்கிறேன் என்றார் ராணிம்மா.
அஜய் யோசனையுடன் சரி..அதற்கு பதில்..என் மனைவியை பற்றி தவறாக பேசியவங்க அவகிட்ட மன்னிப்பு கேட்கணும் என்றான் அஜய்.
“என்னது?” என்று ரோஹித் அப்பா கோபமாக அஜய்யிடம் வந்தார்.
நில்லுடா..என தன் கடைசி மகனை தடுத்த ராணியம்மா, உன் மனைவி செய்த தவறுக்காக தான் மன்னிப்பு கேட்க சொன்னார். உனக்கு உன் மனைவி எப்படியோ அவருக்கு அவர் மனைவி என்றார் ராணியம்மா.
ரோஹித் அம்மாவை ராணியம்மா அழைக்க, வேண்டாம். இனி அவங்க யாரிடமும் இப்படி பேசாமல் இருந்தாலே போதும். மன்னிப்பெல்லாம் வேண்டாம். அவங்க பெரியவங்க..என்று தியா கூறினாள்.
“பார்த்தீங்களா? பிள்ளைங்க இப்படி இருக்கணும் என்ற ராணியம்மா..இப்ப என்னப்பா சொல்ற?” அவர் கேட்க, அஜய் அமைதியானான்.
முக்தா..ராணியம்மா அழைக்க, தன் கால்களை மறைத்த லெஹங்காவை தூக்கிக் கொண்டு அவர் முன் வந்தாள் முக்தா.
அவர் கண்ணை காட்ட, பாப்பாவை தூக்கி அஜய் அருகே நின்ற வினித்திடம் கொடுத்த முக்தா, அஜய் அண்ணா..”வெல்கம்” என அஜய், தியா இருவர் கையையும் பிடித்து மேடைக்கு அழைத்து சென்றாள்.
சடங்குகள் நன்றாகவே நடந்து திருமணத்திற்கு வந்தவர்கள் கிளம்பி விட, சொந்தபந்தங்கள் மட்டுமே இருந்தனர். தியா அஜய் பற்றி உலகெங்கும் தெரிய வந்தது. அவர்கள் தான் அன்றைய தலைப்பு செய்தியாக இருந்தனர்.
வினித் பாப்பாவுடன் அமர்ந்திருக்க, ராணியம்மா அவனருகே வந்து அமர்ந்து, “அப்பா எப்படி இருக்காங்க?” என விசாரித்தார்.
“எங்க மேம்? நான் இன்னும் வீட்டுக்கே போகலை. என்ன செய்றார்ன்னு தெரியல” வருத்தமாக பேசினான்.
ஏப்பா, “உனக்கு அஜய் பிள்ள வயசு தான இருக்கும்?” என கேட்டார். ம்ம்..என்றவன் அவரை நிமிர்ந்து பார்த்தான்.
யுகிக்கு நல்ல பையனா முடிந்தது. அடுத்தது முக்தா இருக்கா. “அவளை கல்யாணம் பண்ணிக்கிறியா?” அவர் கேட்க, வினித் பட்டென எழுந்தான்.
“உங்களுக்கு என்னை பற்றி என்ன தெரியும்?” அவன் கேட்க, “ஏன் தெரியாது? எல்லாமே தெரியும்” என அவன் அப்பாவின் கம்பெனிகளையும், அவனுக்கு அஜய், தியாவுடனான நெருக்கம் பற்றியும் சொல்லி விட்டு, அவங்களுக்காக அந்த மோசமான பொண்ணை கொலை செய்யும் அளவு போயிருக்க. எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு. எங்க வீட்ல இருக்கும் மத்த பொண்ணுங்க மாதிரி எங்க முக்தா இல்லை.
“யுக்தாவை உனக்கு தெரிந்திருக்குமே!”
ம்ம்..தெரியும் என்றான்.
அவளை விட முக்தாவும் தியாவும் தான் க்ளோஸ். தியாவை முதல்ல எங்க வீட்ல யாருமே.. நானும் கூட ஏத்துக்கலை. பின் அவளை பற்றி விசாரித்த பின் தான் நான் ஏத்துக்கிட்டேன். ஆனால் முக்தாவிற்கு உங்க எல்லாரையும் முன்னாடியே தெரியும் என்பதால் தியா வந்தவுடன் அவளுக்கு உறுதுணையா இருந்தா.
விளையாட்டு பொண்ணாக இருந்தாலும் பொறுப்புணர்ந்து செயல்படுவா என்று அவர் கூற, “அவளுக்கு எங்களை எப்படி தெரியும்?” வினித் கேட்டான்.
விடுமுறைக்கு யுக்தா வரும் போதெல்லாம்..உங்களை பற்றி தான் பேசிட்டே இருப்பா. அதை விட முகி உங்க எல்லாரையும் முன்னமே நேரிலே பார்த்துருக்கா. அவளோட அம்மாவுக்கு உடல்நலமில்லாத போது ரொம்ப அழுதான்னு யுகியோட சென்னையில தான் ஒரு மாதம் இருந்தா. உங்களுக்கு நினைவில்லையா? அவர் கேட்க, வினித் சிந்தித்து..ஹா..அந்த சின்னப்பொண்ணா? எனக் கேட்டான்.
ம்ம்..அவ தான். என்ன சொல்றீங்க?
எனக்கு விருப்பமில்லை. எங்க கலாச்சாரம் வேற. உங்களுடையது வேற..என்றான்.
வேகமாக அவர்களிடம் ஓடி வந்த முக்தா மூச்சிறைத்து, பாட்டி..
அங்க..பிரச்சனை சண்டை போடுறாங்க என்று சொல்ல, இருவரும் எழுந்து உள்ளே சென்றனர்.
அஜய்யிடம் கையை ஓங்கிய ராணியம்மாவின் முதல் பேத்தி சீமா கையை பிடித்து அவளை உக்கிரமாக முறைத்துக் கொண்டிருந்தாள் தியா.
“சீமா” ராணியம்மா சத்தம் கேட்டு, தியா அவள் கையை விட்டு உன்னோட பேருக்கான அடையாளம் நீ இல்லை. உன்னோட அப்பா, புருசன், உங்க குடும்பத்து பேர் தான். ஆனால் என் அஜய்யின் அடையாளம் அப்படியில்லை. அவர் அடையாளம் அவர் உழைப்பில் வந்தது.
நீ சொன்ன மாதிரி அவர் படித்து முடித்து சில வருடங்கள் சுத்திக் கொண்டு இருந்தாலும், அவர் பிசினஸை கையில் எடுக்கவும் அவர் உயர தான் செய்திருக்கார். அவர் அப்பாவுக்கு இருந்த பெயரை விட இவருக்கு இப்ப ரொம்ப நல்ல பெயர் இருக்கு. இதுக்கு மேல ஏதாவது பேசுன? உன்னோட விசயம் வெளிய வரும் என்று கோபமாக அஜய் கையை பிடித்து, வாங்க அஜூ போகலாம் என்று அவனை அவனறைக்கு இழுத்து சென்றாள்.
“என்ன விசயத்தைடி அவ சொல்றா?” சீமா அம்மா அவளிடம் கேட்க, சீமாவை முறைத்துக் கொண்டே ராணியம்மா அஜய்யை பார்க்க சென்றார். வினித்தும் அவர் பின்னே சென்றான்.
“வேற என்னவாக இருக்கும்?” உங்க பொண்ணோட என சீமா கணவனை பார்த்துக் கொண்டு முக்தா ஏதோ சொல்ல வந்தாள். சீமா முகம் கலவரத்தை தத்தெடுத்தது.
முகி..என்ற ரோஹித் அவளை அவனறைக்கு இழுத்து சென்றான்.