முடியாது இல்லை.. நடந்து முடிஞ்சதை உன்னால மாத்த முடியாது இல்லை.. அப்பறம் என்ன..? போடி..” அவளை விலக்கி நிறுத்த, பல்லவி மீண்டும் அவனிடம் வந்து நின்றாள். ஈஷ்வர் புருவம் உயர்த்தி பார்க்க

இதுக்கு என்ன முடிவு ஈஷ்வர்..? நம்ம லைப் இனி இப்படி தான் போகணும் நினைக்கிறீங்களா..? நான் ஏன் அன்னிக்கு அப்படி ஒரு முடிவு எடுத்தேன்னு கேட்க மாட்டிங்களா..?”

கேட்டிருப்பேன்.. நீ அன்னிக்கே எனக்கு போன் பண்ணி பேசியிருந்தா..”

ஈஷ்வர் அப்போ உங்க அப்பா சொன்ன வார்த்தைகள்..”

தப்பு தான். அவருக்கு நான் தான் உலகம், என்னை உயர்த்த அவர் யோசிக்காம பேசிட்டார், அதுக்காக நீ என்னை பத்தி கொஞ்சம் கூட யோசிக்காம பெட்டியை கட்டிடுவியா..?”

அதுவும் அப்போ நான் இங்க கூட இல்லை. அமெரிக்கால இருக்கேன், நீ என் போன் எடுக்கல, மெசேஜ் மட்டும் வருது..  

நீங்க என்னை தேட கூடாது, நான் பாதுகாப்பா, நல்லா தான் இருக்கேன்.. நீங்க உங்க அப்பா பேச்சு கேட்டு ஐபிஸ் படிங்க, இது நம்ம காதல் மேல சத்தியம்ன்னு..”

இது.. இவ்வளவு தான். இதுல நான் என்ன நினைக்கட்டும்..? சொல்லு என்ன நினைக்கட்டும்..?”

அப்போ சின்னு.. அவன் நிலைமை வேற.. முடியலடி.. பைத்தியம் பிடிச்ச மாதிரி அந்த ஒரு மாசம் போச்சு, அங்கிருந்து அவனை காப்பாத்தி இங்க  வந்து எல்லாம் விசாரிச்சு அப்பாகிட்ட போனா அவர்,

நீங்க  ஐபிஸ் படிங்க, மருமக என் கண் பார்வையில தான் இருக்காங்க, நான் என் பொண்ணு மாதிரி பார்த்துப்பேன் சொல்றார்.. நான் என்ன செய்யட்டும்..?”

என்னை புரிஞ்சுக்காம உங்க சுயநலத்துக்காக நீங்க ரெண்டு பேருமே முடிவு எடுத்திருக்கீங்க..”

ஆனா  அப்போ கூட அவர் தான் உன்னை ஏதோ பேசி கூட்டிட்டு போயிட்டார் நினைச்சேன், விசாரிச்சதுக்கு அப்பறம் தான் தெரிஞ்சது நீயா தான் போயிருக்கன்னு..”

அப்படி என்னடி என்னை விட, என் காதலை விட அப்பா பேசினது பெருசு உனக்கு..? நான் உனக்காக உன் காதலுக்காக வருஷ கணக்கா தவம் இருந்தது எல்லாம் உனக்கு மறந்து போச்சு இல்லை..”

இதுல நான் செஞ்ச தப்பை மட்டும் இவ்வளவு தூரத்துக்கு பிடிச்சு தொங்கிட்டு இருக்க.. போடி..”  அவளை தள்ளி நிறுத்தி எழுந்து செல்ல போக, பல்லவி அவன் கை பிடித்து நிறுத்தினாள்

“ஈஷ்வர்.. உண்மையிலே எனக்கு முடியல, நீங்க சொல்லும் போது என் தப்பு புரியுது, ஆனா.. நான்.. ம்ப்ச்.. இவ்வளுக்கு பிறகும் என்னால திரும்ப அதையே பேச முடியல விட்டுடுங்க..”  என்றவள் அவனை அணைத்தே விட்டாள்

மிகவும் தளர்ந்து போயிருந்தாள் பெண். ஈஷ்வருக்கு அவளை புரிந்தது. புரியாமல் எப்படி இருக்கும்..? ஆனால் மனம் தான் சண்டி செய்தது. அவன் கைகள் அவளை அணைக்கவில்லை

பல்லவி விலகாமல் அணைத்தபடி அவனை அண்ணாந்து பார்த்தவள் பார்வையில் அவ்வளவு நிராசை, ஏக்கம். அப்போதும் ஈஷ்வர் கைகள் அவளை அணைக்கவில்லை

எட்டி அவன் டாலரில் முத்தம் வைக்க, ஈஷ்வர் கைகளை இறுக்கமாக மூடியவன், “அப்பறம் நான் உன்னை தொட்டா உன்னை கட்டாயப்படுத்தின சொல்வ இல்லை..” வார்த்தைகள் சுருக்கென வந்து விழுந்தது

இது என் காதல் ஈஷ்வர்..”

அப்போ அது காமமா..? நான் உன்னை தேடுறது காதல் இல்லையா..?”  தீவிர கேள்வி

இல்லை என்று பேச்சுக்கு கூட அவன் காதலை மறுக்க முடியாதே. தவிப்புடன் மீண்டும் அணைத்தவள், அவன் நெஞ்சில் கண்ணீர் விட்டாள். எப்போதும் அவள் தானே அவனின் பலவீனம். இப்போதும் அவள் கண்ணீர் அவனை வருத்தியது

ப்ளீஸ் ஈஷ்வர் ஹக் மீ..” வாய் திறந்து கேட்டேவிட்டாள்

இப்போ இல்லை பல்லவி..”

பல்லவி கூப்பிடாதீங்க..”  நிமிர்ந்து கோபத்துடன் படப்படத்தாள். அவன் அப்படியே நின்றான். அதற்கு மேலும அவனை அணைக்க முடியவில்லை. தானே தள்ளி நின்றுவிட்டாள்

“நான் வேண்டாம் இல்லை உங்களுக்கு..” கோவத்தில் கொதித்தாள் திகம்பரி

உனக்கு அப்படி தோணினா என் காதல்.. அது காதலே இல்லைன்னு அர்த்தம்..” ஈஷ்வர் நிதானமாக திருப்பி அடித்தான்

எனக்கு அது புரியறதுல தானே உங்கிட்ட வந்து நிக்கிறேன், போதும் ஈஷ்வர், சாரி, ரொம்ப டையர்டாகிட்டேன், எனக்கு ரெஸ்ட் கொடு..” அவள் சொல்லும் போதே அவள் சோர்வு புரிந்தது

அருகில் வந்து அவள் கை பிடித்து அழுத்தம் கொடுத்தவன், ஏதும் சொல்லாமல், மகளுக்கு முத்தம் வைத்து வெளியே வந்துவிட்டான். நரசிம்மன் மகனிடம் பேச வர, அவனோ வாசலுக்கு சென்றான்

ஈஷ்வர்..”  விஷ்ணு அவன் பின் வர

நோ.. இங்கேயே  இரு விஷ்ணு..” அவன் நெஞ்சில் கை வைத்து நிறுத்தியவன் தான் மட்டும் கிளம்பிவிட்டான்

அன்று இரவு வரை வரவில்லை. விஷ்ணு அதற்கு மேல் பொறுக்க முடியாமல் அவனை விடாமல் போனில் கூப்பிட செய்தான். ஒரு கட்டத்தில் ஈஷ்வரிடம் இருந்து மெசேஜ் மட்டும் வந்தது

நானா கூப்பிடுவேன்.. அதுவரைக்கும் வீட்லே அவங்களோடே இரு..” இது மட்டும் ஈஷ்வரின் பதிலாக  வந்தது

அப்படியென்னடா வெட்டி முறிக்கிற..” இவன் மெசேஜ் செய்த போதும் பதில் இல்லை

இரு மொத்த பேரையும் கொண்டு போய் கடல்ல தள்ளி விட்டுட்டு வந்துடுறேன் என் பேபி அனுவை தவிர..” திரும்ப கோவத்துடன் மெசேஜ் அனுப்ப, அதற்கும் பதில் இல்லை

இவனை என்று போன் செய்தால் ஸ்விட்ச் ஆப். அவ்வளவு தான். அதற்கு பிறகு எந்த மெசேஜும் இல்லை. காலும் இல்லை.  ஆயிற்று ஒருவாரம்.. ஈஷ்வர் எங்கு சென்றான், எங்கு இருக்கிறான், என்ன செய்கிறான் எதுவுமே யாருக்குமே தெரியவில்லை. நரசிம்மன் எவ்வளவு முயன்றும் மகன் இருக்கும் இடத்தை நெருங்க முடியவில்லை

விஷ்ணுவோ ஆள் இருந்தும் ஊமையாகி போனான். அவனை யாராலும்  நெருங்க முடியவில்லை. ஈஷ்வருக்கு மேல் காய்ந்தான் எல்லோரிடமும். “நீங்க எல்லாம் தான் பேசி பேசி  என் ஈஷ்வரை விரட்டிடீங்க..” நேரடியாக மொத்த குடும்பத்தையும் குற்றம் சாட்டியவன் ரூமிலே அடைந்து கிடந்தான்.  

அனு குரல் மட்டும் வீட்டில் ஒலிக்க, பேத்தியுடன் ஹாலில் இருந்த கங்கா டிவியை பார்த்து கண்களை விரித்தவர், “என்னங்க..” என்று கத்தினார். அவரின் சத்தத்தில் மொத்த பேரும் வெளியே ஓடி வந்தனர்

அங்கு டிவியில் ஈஷ்வர்.. அவனை பார்த்து எல்லார் கண்களும் விரிந்தது. நரசிம்மன் நெஞ்சை பிடித்து சோபாவில் விழுந்தார். பல்லவி கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் சுவற்றில் சாய்ந்து மடங்கி அமர்ந்தாள்.

அவர்கள் இருவரையும் தன் செயலால் பேச்சின்றி வைத்துவிட்டான். நரசிம்மனுக்கு அதிர்ச்சி ஆனந்த அதிர்ச்சியாகிவிட, பல்லவிக்கோ அவளின் வனவாசத்திற்கான பலன் கிடைத்த ஆனந்த அழுகை.  

வெளியே வந்த விஷ்ணுவிற்கும் இது புதிய செய்தி. மிகவும் பெருமையாக ஈஷ்வரை பார்த்திருந்தான். என் ஈஷ்வர்.. கர்வம் அவனிடம் வெளிப்படையாக தெரிந்தது.

“நேற்றிரவு நடந்த என்கவுன்டரில் பிரபல மாபியா கும்பலின் தலைவன் ********** க்ரைம் பிராஞ்ச்  DSP லிங்கேஷ்வரன் நரசிம்மனால்  சுட்டு கொல்ல  பட்டான்..”

“அவனை பிடிப்பதற்கான அண்டர்கிரவுண்ட் ஆப்பரேஷன் கடந்த இரண்டு வருடங்களாக மிகவும் ரகசியமாக  மேற்கொள்ளபட்டு நேற்றிரவு அவனை என்கன்டர் செய்தனர். இந்த தனிப்படை நேரடியாக கமிஷனர்சக்ரவர்த்தி’ தலைமையில் இயங்கியது என்பதும் இப்போது தெரிய வந்துள்ளது. இந்த என்கவுண்டர்  சென்னை போலீஸின் மிக பெரிய மைல் கல்லாக பார்க்க படுகிறது..” 

“ஈஷ்வர் என்றைழைக்கப்டும் லிங்கேஷ்வரன் *** மினிஸ்டர் நரசிம்மனின் மகன் என்பதும், அவர் ஐபிஸ் முடித்து வந்த இரண்டு ஆண்டுகளிலேயே இவ்வளவு பெரிய என்கவுன்டர் செய்தததும்  மிக பெரிய விஷயமாக பார்க்க படுகிறது. ஈஷ்வர் **** வருடத்தில் பிளஸ் டூ முடித்தவர், அவரின் மார்க்..” என்று அவன் கொடுத்திருந்த அவன் வாழ்க்கை வரலாறு மற்றொரு புறம் தொடர்ந்து ஓடி கொண்டிருக்க, குடும்பத்தினர் கண்களோ  வெளியே வந்து காருக்கு ஏறிய, ஈஷ்வரின் ஒரு நிமிட வீடியோவிலே இருந்தது

யூனிபார்ம்மில்.. போலீஸ் முடி வெட்டில், தாடி எல்லாம் எடுத்து, மீசையை முறுக்கிவிட்டபடிகம்பீரமாக நடந்து வந்து காரில் ஏறிய ஈஷ்வர். அவர்கள் ஈஷ்வர். மொத்த குடும்பத்துக்கும் கண்கள் கண்ணீர் மழையை பொழிந்தது.

“என்கவுன்டர் செய்யப்பட்ட அந்த மாபியா கும்பலின் தலைவன் போட்டோ இப்போது கிடைத்துள்ளது. இது தான் அவன்..”  என்று அவர்கள் ஒரு படம் பெரிதாக போட,  விஷ்ணு அந்த படத்தை பார்த்து அதிர்ந்தான்.

“ஏங்க அது அவன் தானே.. அவனே தான்.. நம்ம மகன்  ஈஷ்வர் அவனை கொன்னுட்டான்ங்க, கொன்னுட்டான்..”  கங்கா கண்கள் சிவக்க கத்த, விஷ்ணு  கண்கள் ஈஷ்வர் மீதும், சக்ரவர்த்தி மீதும், அவனின் மீதும் பதிய எல்லாம் புரிந்தது. புரிந்த நொடி நிற்க கூட முடியவில்லை அவனால். அப்படியே   மடங்கி சரிந்து கதறிவிட்டான்

அவன் அழுகையில் நரசிம்மன் வேகமாக அவனிடம் சென்றவர், அவனை ஆறுதல் படுத்த முனைய, விஷ்ணு முகம் நிமிர்த்தவே இல்லை. பல்லவி ஏதும் புரியாமல் அவன் அழுகையை, டிவியை மாறி மாறி பார்த்து கொண்டிருந்தாள்

வந்தான் அந்த நேரம் வந்தான் ஈஷ்வர். விஷ்ணு கதறலை பார்த்தபடி வந்தவன், அவன் தோள் மேல் கை வைத்து, “விஷ்ணு..”  என்ற நொடி, மின்னலாக நிமிர்ந்த விஷ்ணுபாய்ந்து அவனை கட்டி கொண்டான்

ஈஷ்வர் சில அடிகள் பின்னால் சென்று அவனை தாங்கி பிடித்தான். பல்லவியோ கம்பீரமாக நின்ற கணவனையே பார்த்து கொண்டிருக்க, மகா அந்த நேரம் அழுது சிவந்த முகத்துடன் ஓடி வந்தாள்

கங்கா மகளை பார்த்துமகா..” என்று கூப்பிட, அவளோ, “ண்ணா..” என்று அண்ணனிடம் ஓடி வந்து தேங்கி நின்றாள்

ஈஷ்வர் அவனின் ஒரு கை விரிக்க, ண்ணா.. என்று கதறி கொண்டே அவனை அணைத்தாள். விஷ்ணு, மகா இருவரையும் அரவணைத்து நின்றான் ஈஷ்வர்

விஷ்ணு, மகா, ஈஷ்வர் மூவரின்  இத்தனை வருட கஷ்டம் எல்லாம் அணு அணுவாய் உடைந்து சிதறியது. அழிக்கும் நாமகரனை சூடியிருந்தவன் அந்த பணிய செய்தே முடித்துவிட்டான்.

நரசிம்மனோ மகன் நின்ற தோரணையில், முழுதும் பேச்சு மூச்சு அற்று நிற்க, பல்லவிக்கோ கணவனை நெருங்க கூட முடியவில்லை. இருவரையும் பார்த்த ஈஷ்வர் முகம் மிகவும் அமைதியாக இருந்தது. அவன் என்ன நினைக்கிறான் என்று கூட  தெரியாத முகபாவனை.