திகம்பரனின் திகம்பரி அவள் 24

இத்தனை வருடங்களில் ஈஷ்வரை யாரும் இப்படி பார்த்ததில்லை. பல்லவிக்கு அவனை இப்படி பார்க்கவும் உயிர் வரை வலித்தது. எங்கு, யார் மீது தவறு, எப்படி இது எல்லாம் நடந்தது என்று  பேசி அலசி ஆராய்ந்ததின் விளைவு ஈஷ்வரின் கோவமும், வெறுமையும்.

இதுக்கு தான் நான் முதல்ல இருந்தே உங்ககிட்ட சொல்லிட்டிருந்தேன், இந்த ஐபிஸ் எல்லாம் விட்டு தள்ளுங்க, நம்ம மகனை பாருங்கன்னு, என் பேச்சை கொஞ்சமாவது கேட்டிங்களா..?”  ஈஷ்வரின் நிலைய பார்த்த கங்கா கணவரிடம் பாய்ந்தார்

நரசிம்மனுக்கோ மகனுடைய நிலை நெஞ்சுக்குள் குத்த, அவரால் அப்பாவாக தாங்க முடியவில்லை. “தண்ணி குடிங்க.. எல்லா தப்பும் என் மேல தான்..”  தானே தண்ணீர் பாட்டிலை நரசிம்மன் மகனுக்கு கொடுக்க அவன் வாங்கவே இல்லை

 ஈஷ்வரை  சுற்றி கங்கா, விஷ்ணு, நரசிம்மன் சூழ்ந்திருக்க பல்லவிக்கோ அவன் அருகில் கூட செல்ல முடியாமல் போக, தன் தோளில் முகம் புதைத்து தூங்க  ஆரம்பித்திருந்த, மகளை இறுக்கமாக பிடித்தபடி நின்றாள்தாங்கள்   அவனை மிகவும் வருத்திவிட்டது புரிந்தது

உங்களை கஷ்டப்படுத்தனும்ன்னு நான் எதுவும் பேசலங்க, என்னை புரிய வைக்கணும்ன்னு தான் நான்..”  நரசிம்மன் பேச, ஈஷ்வர் நிமிர்ந்து அவரை தீர்க்கமாக பார்க்க, அவர் பேச்சு தானாகவே நின்றது

முதல்ல இந்த முடிஞ்சு போனதை எல்லாம் பேசுறதை நிறுத்துங்க, இனி நடக்க வேண்டியதை பார்ப்போம்..” கங்கா கோவம் குறையாமல் பொரிந்து மகனை பார்த்தவர், “கிளம்பு.. உன் குடும்பத்தை கூட்டிட்டு கிளம்பு, நம்ம வீட்டுக்கு போலாம்..” என்றார். அவனோ டக்கென முகம் திருப்பினான்

அம்மா சொல்றது சரி தான், என்னோட தப்புக்கு நீங்க ஏன் கஷ்படனும், நீங்க நம்ம வீட்டுக்கு வாங்க..” மருமகளை பார்க்க, அவள் அமைதியாக நின்றாள். அதிலே அவளின் மறுப்பும் தெரிந்தது

நான் என்ன செஞ்சா உங்களுக்கு என்மேல உள்ள கோவம் போகும்..? நான்..” நரசிம்மன் திரும்ப பேச, ஈஷ்வரின் கட்டுப்படுத்தி வைத்த பொறுமை பறந்தது

போதும்.. இதுவரைக்கும் நீங்க எல்லாம் பேசினதே போதும், நிறுத்துங்க..” ஈஷ்வரின் கர்ஜனையில் அந்த  ஹாலில் அப்படி ஒரு மௌனம்

நான் தான் முதல்லே சொல்லிட்டேன் இல்லை, நீங்க எல்லாம் சரி நான் தான்  தப்புன்னு, இன்னும் என்ன..?” அப்படி ஒரு அதட்டல் ஆளுமையுடன் கேட்டான்

ஈஷ்வர்.. ப்ளீஸ் கோவப்படாதீங்க, முடிஞ்சது முடிஞ்சதாகவே இருக்கட்டும், இந்த ஐபிஸ் எல்லாம் போகட்டும், நீங்களும் மருமகளும் பேத்தியோட நம்ம வீட்டுக்கு வாங்க, அதுவே போதும் எனக்கு..” நரசிம்மன் மகனிடம் கெஞ்சலாக கேட்க, ஒரு நொடி தந்தையை பார்த்தவன் அடுத்த நொடி மிகவும் பெரிதாக சிரித்தான்

அவன் சிரிப்பில் விஷ்ணுவை தவிர மீதி எல்லாம் திகைத்தனர். அவனின் வலிக்கான சிரிப்பு அது. விஷ்ணு அவனை ஆறுதலாக பார்த்தான்

சிரிப்புடனே  புருவம் தூக்கி தந்தையை பார்த்தவன், “என்ன திடீர்ன்னு..? உங்களுக்கு உங்களை நெஞ்சை நிமித்த வைக்கிற மகன் தானே வேணும்..?  அதுக்கு தானே இது எல்லாம்..? இப்போ மட்டும் என்ன..?” அவன் கேள்வியில் அப்படி ஒரு தீர்க்கம்

ஒரு அப்பாவா உங்க மகன் இப்படி வரணும், அப்படி பேர் எடுக்கணும்ன்னு உங்க ஆசை, கனவு, எதிர்பார்ப்பு எல்லாம் சரி, நானும் ஒரு மகனா உங்களுக்கு நியாயம் பண்ணலை தான், உங்களை நம்புங்க, நம்புங்கன்னு சொல்லி ஏமாத்திட்டேன், தப்பரொம்ப பெரிய தப்பு தான்இதுக்கு என்னால எந்த சமாதானமும் சொல்ல முடியாது, ஒத்துக்கிறேன்.. அதுக்கு  மன்னிப்பும் கேட்டுக்கிறேன்,   பட்..”  நிறுத்தி  நரசிம்மனை தீர்க்கமாகி பார்க்க, அவரோ மகனையே பார்த்தார்

பட்.. நீங்க எனக்கு பண்ணது, நான் உங்களை நம்பினேனே, அந்த நம்பிக்கைக்கு நீங்க பண்ணது..?”

புரியலையாப்பா.. அன்னிக்கு என்மேல சத்தியம் வச்சேனே இவளை பார்க்க கூடாது, பேச கூடாது, எந்த விதத்திலும் இவளை நீங்க கஷ்டபடுத்த கூடாதுன்னு.. அந்த சத்தியம் என்ன ஆச்சு..?”

என் அப்பா அதை காப்பாத்துவார்ன்னு நான் உங்கமேல வச்சிருந்தேனே அந்த நம்பிக்கை, அந்த நம்பிக்கைக்கு என்ன  பதில் சொல்ல போறீங்க..?”  ஒவ்வொன்றாக கேட்க, அதிர்ந்து நின்ற நரசிம்மன் என்ன சொல்வார்..?   

என் நம்பிக்கையை உடைச்சு  இதோ இந்த மேடத்தை பகடைக்காயா வச்சு உங்க காரியத்தை சாதிக்க நினைக்கலநீங்க உயிரையே வச்சிருக்கிறதா சொல்ற என் மேல வச்ச சத்தியம், அது உங்களுக்கு முக்கியம்  இல்லாம போயிடுச்சு இல்லை..”

“இதுலே தெரியலையா என்னை விட ஐபிஸ் தான் உங்களுக்கு முக்கியம்ன்னு..”  ஈஷ்வரின் மனது வெளியே வந்தது. அவர் மீதான அவனின் கோவமும் தெரிந்தது

நீங்க என்மேல வச்ச பாசத்துக்கு எந்தவிதத்துல நான் உங்க மேல வச்ச பாசம் குறைஞ்சிடுச்சுப்பா, உங்களுக்கு பிடிக்காத எந்த வேலையாவது  இதுவரை நான் செஞ்சிருப்பேனா, பதினெட்டு வயசுலே என் அக்கவுண்டுக்கு எவ்வளவு பணம் வர ஆரம்பிச்சுதுன்னு உங்களுக்கு தெரியும், அந்த பணத்தை வச்சு உங்க கௌரவம் கெடுறது போல எப்போவாவது நடந்திருப்பேனா..?”

இல்லை எங்கப்பா MLA, மினிஸ்டர்ன்னு வெளியே உங்க பவரை எப்போவாவது மிஸ் யூஸ் பண்ணியிருப்பேனா..? சொல்லுங்கப்பா.. என்ன பண்ணேன் நான்..”

உங்களை மனசுல வச்சு ஒழுக்கமா நடந்துக்கல, படிக்கல, அப்பாக்காகன்னு ஒரு மகனா எல்லாம் செஞ்ச நான் எனக்கே எனக்குன்னு ரெண்டு விஷயம் செஞ்சுட்டேன், ஒன்னு இதோ இவளை காதலிச்சதுஐபிஸ் படிக்க மாட்டேன் சொன்னது.. இது தான்இதுவே  நான் உங்களுக்கு நல்லா மகனா இல்லைன்னு உங்களை நினைக்க வச்சிடுச்சு இல்லை..”

“இது எல்லாம் கூட ஓகேப்பா.. ஆனா அனு..  என் பொண்ணு.. அவ இருக்கிறது உங்களுக்கே முதல்லே தெரிஞ்சிருக்கும் இல்லை. அப்போ கூட உங்களுக்கு அவங்களை இங்க கூட்டிட்டு வரணும்ன்னு தோணல இல்லை..”

ஏன்னா நான் அப்போ தான் ஐபிஸ் படிக்க ஆரம்பிச்சேன், இப்போ பல்லவி இங்க வந்துட்டா நான் ஐபிஸ் டிராப் பண்ணிடுவேன்னு பயம், அதான் என் பொண்ணை கூட என்கிட்ட இருந்து பிரிச்சிடுச்சு..”

அவ அப்பா நான் இங்க அவ வந்தது கூட தெரியமா சுத்திட்டிருக்க, அவ அங்க யாருமே இல்லாதவங்க போல யாரோட பராமரிப்பிலோ வளர்ந்திருக்கா.. அவளை விடவா, என்னை விடவா உங்க ஐபிஸ் பெருசு..”  அவனின் வார்த்தைகளில் கோவம் என்பதை விடவேதனை, வலி, வருத்தம், ஆதங்கம், ஏமாற்றம் தான் அதிகம் தெரிந்தது. நரசிம்மனுக்கோ மகன் கேட்டது ஒவ்வொன்றும் மறுக்க முடியாத உண்மை என்பது புரிய, பேச வார்த்தை இல்லாமல் நின்றார்

இதோ இப்போ நீங்க இப்படி நிக்கிறது கூட மகனா எனக்கு தாங்கல, என் அப்பா எங்கேயும் தலை நிமிர்ந்து தான் நிக்கணும்ன்னு நான் ஆசைப்படறேன்..”

ஆனா என்னால நீங்க நெஞ்சை நிமித்த முடியலங்கிறது தான் உங்களுக்கு பெருசா போச்சில்ல, நான் உங்கமேல வச்சிருக்கிற பாசம் சிறுசா போச்சில்லை..”   

“நான் சில விஷயங்கள்ல உங்களுக்கு பிடிக்காதது செஞ்சா கூட என்னிக்கும் உங்களை மனசார ஏமாத்த நினைச்சது இல்லை..”  அடைத்த குரலுடன் சொன்னவன், அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல்  ரூமுக்கு சென்றுவிட்டான்.

அவன் கலங்கியிருந்த கண்கள் பல்லவியை வேகமாக அவன் பின் செல்ல வைத்தது. விஷ்ணு காலடி எடுத்து வைத்தவன், பல்லவியை பார்த்து அப்படியே நின்றுவிட்டான்

ஈஷ்வர் அங்கு டேபிளில் ஏறி அமர்ந்திருந்தவன், அவன் கால்களை மிகவும் வேகமாக ஆட்டி கொண்டிருந்தான். அவன் முகம் மிகவும் சிவந்து இருக்க, கண்கள் ஓரிடத்திலே வெறித்திருந்தது

பல்லவி பெட்டில் மகளை படுக்க வைத்தவள், கதவை லேசாக சாய்த்துவிட்டு வந்தாள். இவள் அவன் முன் நின்றும் அவன் பார்வை இவள் மேல் இல்லை

ஈஷ்வர்..” பல்லவி அவன் கை பிடிக்க, அதே வெறித்த பார்வை தான். அவன் பார்வை முழுதும் மறைத்து நின்றவள் அவனின் கன்னத்தை, தலை முடிய வருடிவிட்டாள். இப்போது அவன் பார்வை இவள் மேல் தீர்க்கமாக நின்றது.

“என்ன திடீர் கரிசனம்..?” குத்தலாக கேட்டான்

பல்லவி கண் மூடி திறந்தவள், “வெளியே நீங்க சொன்னது தான் ஈஷ்வர், போதும், நிறைய பேசிட்டோம், நான் உங்களை பிரிஞ்சது, திரும்பி வந்த பிறகு நீங்க என்னை கட்டாயப்படுத்தினது, என்னை அவமானப்படுத்துற மாதிரி வார்த்தைகளை விட்டது, எல்லாம் முடிஞ்சு போயிடுச்சு..”

பேசி  பேசி  என்ன ஆக போகுது, விடுங்க, இனியாவது இந்த தாடி, குடி எல்லாம் விட்டு ஒரு நல்ல வேலைக்கு போகலாம்.. நானும்..”  பல்லவி பேசி கொண்டே போக, அவள் உதடு மேல் விரல் வைத்து அவள் பேச்சை நிறுத்தினான்

பல்லவி அமைதியாகி அவனை பார்க்க, உதடு மேல் இருந்த விரல் எடுத்தவன் அவளை இழுத்து தன் கால்களுக்கு இடையில் நிறுத்தி அவளை ஆழ்ந்து பார்த்தவன்

நீ சொன்னது எல்லாம் சரி.. உன்கிட்ட நான் நடந்துக்கிட்டது ரொம்ப பெரிய தப்பு, உன் விருப்பத்தை மீறி உன்னை தொட்டது, உன்னை அவமானப்படுத்துற வார்த்தைகள் பேசினது எல்லாம்.. எல்லாமே தப்பு, அதுக்கு நான் உன்கிட்ட தலை தாழ்த்தி மன்னிப்பு கேட்டுக்கிறேன்..” என, அவன் திடீர் மாற்றத்தில் பல்லவி அதிர்ந்து நிற்க

பட்..” என்று நிறுத்தினான் திகம்பரன். அவன் பார்வை உள்ளுக்குள் சுவாச தடையை ஏற்படுத்த கண்ணை சிமிட்டாமல் கணவனை பார்த்தாள்

பட்.. நான் செஞ்ச தப்புக்கு  எல்லாம் நான் மனசார உன்கிட்ட சாரி கேட்டா முடிஞ்சுடும், நீ கேட்கிற மாதிரி நான் ஏதோ ஒரு வேலை பார்த்துகிட்டு உன்கூட என்னால் சந்தோஷமா இருக்க முடியும்.. ஆனா இதுல எனக்கு திருப்பி கிடைக்கவே கிடைக்காத சில விஷயங்கள் இருக்கே அதை நீ எப்படி எனக்கு திருப்பி கொடுப்ப..?” மிகவும் தீவிரமாக கேட்க, பல்லவி அதிர்ந்து பார்த்தாள்

என்ன புரியலையா..? நாலு வருஷத்துக்கு முன்னாடி உன் மாமனார் பேச்சை கேட்டு நீ இத்தனை வருஷம் என்னை பிரிஞ்சிருந்தியே, அத்தனை வருஷங்களையும் உன்னால எனக்கு திருப்பி கொடுக்க முடியுமா..?”

உன்னை நினைச்சு நான் ஒவ்வொரு நாளும் ஏங்கி அழுதுனே அந்த வலிய நிறைஞ்ச நாட்களை சந்தோஷமான நாட்களா உன்னால எனக்கு திருப்பி கொடுக்க முடியுமா..?”

என் மக.. என் ரத்தம்.. நீங்க அப்பாவாக போறீங்கன்னு பொண்டாட்டி புருஷனுக்கு சொல்ற அந்த ஒரு அபூர்வமான நொடி.. அதை எனக்கு கொடுக்காம என்னை விட்டு ஓடி போனியே அந்த சந்தோஷத்தை எனக்கு திருப்பி கொடுக்க முடியுமா..?”

என் பேபி  உன் கருவறையில ஒவ்வொரு நொடியும் வளர்ந்தாலே அதை பார்க்காம போன பாக்கியத்தை எனக்கு திருப்பி கொடுக்க முடியுமா..?”

அவ பிறந்தப்போ அப்பாவா அவளை கையில் ஏந்திக்கிற அந்த நொடி, என் பிறவி பலனை அனுபவிக்கிற அந்த நொடி, அந்த  பரவசமான நொடியை எனக்கு நீ திருப்பி கொடுக்க முடியுமா..?”

அவ தவழ்ந்து நடந்து வளர்ந்து பேசி சிரிச்சு அழுது.. எதுவும் எதுவுமே பார்க்காத அந்த பொக்கிஷ நாட்களை எனக்கு திருப்பி கொடுக்க முடியுமா..?”

சொல்லு.. இதுல எதை நீ எனக்கு திருப்பி கொடுக்க முடியும் சொல்லு.. சொல்லுடி..”  ஆறடிக்கும் உயர்ந்து நின்று நிறுத்தி நிதானமாக கேட்கும் கணவனை வார்த்தைகளின்றி பார்த்தாள் திகம்பரி.

“இவ்வளவு நேரம் நீயும் உன் மாமனாரும் வெளியே பட்டிமன்றம் நடத்தினீங்க இல்லை, இப்போ சொல்லு.. திருப்பி கொடுத்துடுவியா..?” வார்த்தைகள் அழுத்தத்துடன் வந்தது