திகம்பரனின் திகம்பரி அவள் 23

“என்னடா பேசிட்டிருக்க..?” கங்கா மகன் பேச்சில் கோவம் கொண்டு கலங்கி போனார். பல்லவிக்கோ அவன் வார்த்தைகள் மனதை கொய்ய, கண்ணீர் தேங்கிவிட்டது

ஈஷ்வர் பக்கத்தில் நின்ற விஷ்ணுவோ அவனை மிகவும் கண்டனத்துடன் பார்த்தவன், அவன் கை பிடித்து உள்ளே இழுத்து வந்தான்நரசிம்மன் மகனின் பேச்சில் ஆடி தான் போனார். உள்ளே வந்தவனை  மிகவும் துயரத்துடன் பார்த்தவர் நிற்க கூட முடியாமல் சோபாவில் அமர்ந்தார்

உன்கிட்ட இருந்து நான் இதை எதிர்பார்க்கல ஈஷ்வர், உங்களுக்குள்ள  ஆயிரம்  பிரச்சனை இருக்கட்டும்அதுக்காக நீ  மேலிருந்து கீழே குதிக்கிறேன் சொல்வியா..? உன் மனசுல அப்படி ஒரு எண்ணம் வரலாமா..? இதுக்கு தான் நாங்க உன்னை எருமை மாடு மாதிரி வளர்த்து விட்டிருக்கோமா..?”  அம்மாவாக கங்காவால் சிறிதும் தாங்க முடியவில்லை.

நெடு நெடுவென்று வளர்ந்து, மனதையும், கண்ணையும் நிறைக்கும் மகன் வாயில் இருந்து வந்த வார்த்தைகள், பெற்றவர்களை மிகவும் பாதித்தது. பல்லவிக்கு அவனை சட்டை பிடித்து கேட்கும் கோவமும், அழுகையும்

அங்கிருக்கும் எல்லோருக்கும் உயிரானவன் ஆயிற்றே அவன்மனதை தைத்தது. “இதுக்காகவா இத்தனை போராட்டம்..?” வீட்டில் இருந்த அத்தனை பேருக்கும் அந்த நொடி இது ஒன்று தான் தோன்றியது. ஈஷ்வரை தவிர

அவன் இன்னும் அடங்காத காளையாக பாய துடித்து கொண்டிருந்தான். “ஈஷ்வர்..”  விஷ்ணு அவன் தோள் தொட்டு பேச வர, ஆக்ரோஷமாக அவன் கையை தட்டி விட்டான்

ம்ப்ச் ஈஷ்வர்..”

பேசாத.. நீ மட்டும் இல்லை யாரும் என்கிட்ட பேச கூடாது.. போங்க, எல்லோரும் என்னை விட்டு போய் தொலைங்க..” கத்தியவன் பார்வையில் மகள் விழ, அப்படியே சுவற்றை சாய்ந்து நின்றுவிட்டான்

பார்த்த நரசிம்மனுக்கு, என்ன வாழ்க்கை இது..? விரக்தி வெளிப்படையாக தெரிந்தது. மகனின் வார்த்தைகளை ஜீரணிக்க முடியாமல் தளர்ந்து போய் விட்டார்

எல்லாம் என் தப்பு தான் போல..” குரல் ஓய்ந்து போய் வந்தது மனிதரிடம் இருந்து.

“நான் இவங்க.. ச்சு.. பிள்ளைங்க மனசுல என்ன இருக்கு, அவங்க வளர வளர எப்படி இருப்பாங்கன்னு எதுவுமே யோசிக்காம  சின்னதுல இருந்தே கனவை வளர்த்துக்கிட்டது என் தப்பு தான், ஒரு அப்பாவா என்னோட கடமையை மட்டும் நான் செஞ்சிருக்கணும், இதை செய்ங்கன்னு எதையும் உங்க மேல திணிச்சிருக்க  கூடாது, அது தான் இப்போ இப்படி வந்து நிக்குது, என்னை மன்னிச்சிடுங்க..” என்றுவிட

ப்பா..” முதல் சத்தம் ஈஷ்வரிடம் தான் வந்தது

இப்போ எதுக்கு இவர் இப்படி பேசிட்டு இருக்கார்..” அம்மாவிடம் காய்ந்தான்

உங்க அம்மாகிட்ட ஏன் கோவப்படுறீங்க..? அவ ஏற்கனவே நம்மால ரொம்ப பட்டுட்டா, இப்போ எங்க மருமகளுக்கும் அந்த நிலைமை, எனக்கே புரியுது.. ஆனா நான்..”

ம்மா.. இப்போ தான் இவ வார்த்தையாலே என்னை தூக்கி அடிச்சா, அடுத்து இவரா..? வேண்டாம்மா, பேச வேண்டாம் சொல்லுங்க..” ஈஷ்வர் இடையிட்டு நிறுத்த

என்னை பேச விடுங்க.. ப்ளீஸ்..” என்றார் நரசிம்மன் மகனை நேராக பார்த்து

என் மனசுல இருக்கிறதை பேச விடுங்க, நான் என்னதான் வெளியே படையோட, அஞ்சா நெஞ்சனா அரசியல் பண்ணாலும், வீட்ல நான் எப்போவும் உங்களுக்கு  ஒரு நல்ல அப்பாவா, நல்ல புருஷனா இருக்கேன்னு தான் நினைச்சி இத்தனை வருஷம் வாழ்ந்திருக்கேன்ஆனா அப்படி இல்லை போல, நானா என்னை அப்படி நினைச்சுக்கிட்டேன் போல..” அவர் பேச, ஈஷ்வர் கண் மூடி கொண்டான்

வீட்டை விட்டு வெளியே போய் நான் என்ன செய்ய போறேன், என்ன பேச போறேன், ஏன் அரசியல்ல எதாவது முக்கியமான முடிவு எடுக்க போறேன்னா  கூட இவரை வச்சு கலந்து பேசி தான் செய்வேன், என் மகன் எனக்கு இருக்கார்ன்னு அப்பாவா ஒரு தெம்பு, ஆதரவு..”

அவருக்கும்  அப்படி தான் நான் இருக்க நினைச்சேன், ஆனா..?”

கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி இவங்க ரெண்டு பேரையும் போலீஸ் அரெஸ்ட் பண்ணாங்க, இவங்களை என்ன எதுன்னு கூட விசாரிக்காம என் பசங்க தப்பு செய்ய மாட்டாங்கன்னு   சட்ட பூர்வமா ஜாமீன் எடுத்து இவங்களை  வெளியே கொண்டு வந்தேன்..”

அன்னிக்கு நைட் எப்போவும் போல கூப்பிட்டு உட்கார வச்சு  படிப்பு முக்கியம், படிக்கிற வயசுல போலீஸ் ஸ்டேஷன் எல்லாம் வேண்டாம்ன்னு பொறுமையா பேசினேன், அவரும் என்மேல நம்பிக்கை வைங்க, நான் உங்க ஆசையை நிறைவேத்துவேன் சொன்னாரு, சொன்னது போல நடந்துக்கவும் செஞ்சார்..”

காலேஜ் செகண்ட்  இயர்லே காதல்ன்னு வந்து நின்னார். அப்போவும், இதால உங்க படிப்பு கெட கூடாது, அதுக்கான வயசா இதுன்னு கூப்பிட்டு வச்சு கண்டிச்சேன், இவரும் என்னை நம்புங்க படிச்சு உங்க கனவை நிறைவேத்துவேன் சொன்னார்..”

நம்பினேன். இவரும் சொன்னது போல மருமகளை பார்க்காம, சுத்தாம, நல்லா படிச்சு காலேஜ் பெஸ்ட் ஸ்டூண்டா வெளியே வந்தார். வந்தவர் UPSC கோச்சிங் போவார்ன்னு பார்த்தா மாஸ்டர் எடுத்தார்..”

கேட்டதுக்கு என்னை நம்புங்க, நான் படிச்சு நல்ல நிலைக்கு வருவேன் சொன்னார், நானும் நம்பினேன். ஆனா காலேஜ் செகண்ட் இயர்லே நான் இல்லாத நேரம் பார்த்து கல்யாணம் முடிச்சிகிட்டார், அதை என்கிட்ட சொல்லவும் இல்லை..”

“ஒரு அப்பாவா என்னால அதை எப்படி ஏத்துக்க முடியும்..? முடியல, மருமகளை என் பாதுகாப்புல விடுங்க, இல்லை அவங்க வீட்லே பேசி அங்க விடலாம் கேட்டேன். ரெண்டுக்குமே முடியாது சொல்லிநான் மருமகளை பார்க்கவே கூடாது, பேசவே கூடாதுன்னு சொல்லி ரெஜிஸ்டர் மேரேஜ் நிறுத்திட்டார்..”

எனக்கு இவர் மேல இருக்கிற நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமா ஆட்டம் காட்ட ஆரம்பிச்சது. அதுக்கு ஏத்த மாதிரி இவரும் மாஸ்டர் எக்ஸாம் முடியவும், IPS படிக்க சொல்லி கேட்டா, முடியாது, எனக்கு அது வேண்டாம்ன்னு மொத்தமா என் தலையில இடியை இறக்கிட்டார்..”

இத்தனை வருஷம் என்னை நம்புங்க சொன்ன மகன், முடியாதுன்னு சொல்லிட்டார். கேட்டா நான் அவர்மேல் வச்ச பாசம் சுயநலம்ன்னு சொல்லிட்டார். தாங்க முடியாம அடிச்சுட்டேன், அன்னிக்கு நைட் முழுசும் நான் தூங்கலை, எப்படி நீ அவரை அடிக்கலாம், பொறுமையா பேசினா புரிஞ்சுப்பார்ன்னு என்னை நானே திட்டிக்கிட்டு வீட்டுக்குள்ளே அடைஞ்சு கிடந்தேன்..”

ஆனா இவர்  மருமகளை பார்க்க கிளம்பிட்டார். இவருக்கு எல்லாத்தையும் விட மருமக தான் முக்கியமான்னு ஒரு அப்பாவா அதிருப்தி வந்தது உண்மை..”

அதுக்கேத்த மாதிரி அன்னிக்கு நைட் இவரும் விஷ்ணுவும் பேசுறதை கேட்டேன். தப்பு தான். ஆனா எனக்கு வேற வழி இல்லை, இவர் எதனால ஐபிஸ் வேண்டாம் சொல்றார் தெரிஞ்சுக்க தான் அன்னிக்கு மறைஞ்சு இருந்து இவங்க பேசினதை கேட்டேன்..”

அப்போ இவர், மருமகளை விட்டு வருஷ கணக்கா பிரிஞ்சிருக்க முடியாது, அவங்களோட இருக்கனும், தனியா கஷ்டப்படுறாங்க, எப்படி விட்டுட்டு ஐபிஸ் படிக்கன்னு விஷ்ணுகிட்ட கேட்டுட்டு இருந்தார்அப்போதான் எனக்கு இவர் மருமகளுக்காக தான் ஐபிஸ் படிக்க மாட்டேன் சொல்றார் தெரிஞ்சுது..” திரும்பி மகனை பார்த்தார்

அவரின் மனம் அவருக்குள் வெறுமையாக பேசியது. “அன்னைக்கு அந்த இடத்துல ஒரு அப்பாவா நான் தோத்துட்டேன், இத்தனை வருஷம் அப்பான்னு நம்பிக்கை கொடுத்த மகன், அந்த நம்பிக்கையை உடைக்கிறார், அதுவும் இப்போ வந்த பொண்ணுக்காகஅவரின் வாழ்க்கையின் மிகப்பெரிய தோல்வி இது..” உள்ளுக்குள் மடிந்தாலும் வெளியே சொல்லாமல் மகனை  பார்க்க, ஈஷ்வர் உணர்ந்து கண் திறந்து பார்த்தான்

அவரின் பார்வை அவனிடம் என்ன சொல்லியதோ, அவனின் உதடுகள் வெறுமையாக விரிய, தொண்டை குழி ஏறி இறங்கியது. நரசிம்மன் தன் பார்வையை திருப்பி, தொடர்ந்தார். 

அந்த நேரத்துல என் மனசுக்கு தோணுனது ஒன்னு தான், மருமகளை பிரிஞ்சு இவர் இருக்க மாட்டார், என்னால அவரை ஓர் அளவுக்கு மேல அவரை கட்டாயப்படுத்தவும் முடியாது, அவர் கேட்கவும் மாட்டார்அதான் சுயநலமா மருமகள் கிட்ட வந்தேன்..”

இவர் போகமாட்டார், மருமகளை அனுப்பிட்டா என்னன்னு என் அரசியல் மூளை என்னை தூண்டிவிட்டுச்சுஅது ரொம்ப தப்பு தான், எனக்கு புரியுது, என்னோட கனவுக்காக இவங்களை கஷ்டப்படுத்தற உரிமை எனக்கு இல்லை. ஆனா ஒரு அரசியல்வாதியா வெளியே என் மரியாதை, மதிப்பு என்னன்னு எனக்கு நல்லா தெரியும், நான் தான் இதுல வந்து விழுந்துட்டேன்..”

என் பிள்ளைங்களாவது  படிச்சு அவங்க சொந்த கால்ல பெரிய இடத்துல நிக்கணுங்கிற என்னோட ஆசை, என் பிள்ளைங்களை பாருங்கன்னு நாலு பேர் முன்னாடி நெஞ்சை நிமித்திர வெறி, இத்தனை வருஷம் எனக்குள்ள ஊறி போச்சு, அவ்வளவு சீக்கிரம் அதை என்னால வெளியே எடுக்க முடியல, அதனால் தான் அந்த இடத்துல இப்படி குறுக்கு வழில யோசிச்சு மருமககிட்ட வந்தேன்..”