இதுக்கு தான் சொல்றது பெரியவங்க பேச்சை கேட்கணும்ன்னு, இப்போ பட்டுட்டே இருக்க..”

ம்ப்ச்.. விஷ்ணு நீயும் அவளை மாதிரி பேசாத..”

அனு வந்தது தான் ரொம்ப சீக்கிரம்ன்னு உனக்கு  தோணல..”

விஷ்ணு..” இப்போதும் ஈஷ்வர் லேசான வெட்கத்துடன் தலை கோதி கொண்டான்

டேய்.. இப்போவும் நீ வெட்கப்படுறது பார்த்தா அனுக்கு தம்பி, தங்கச்சி ஏற்பாடு பண்ணாம விட மாட்ட போலயே..”

எங்க..? அவளுக்கு இந்த குடிகாரன் வேண்டாமாம்.. என் மூச்சு காத்து கூட பட கூடாதுங்கிறா.. ராட்சசி..”  உள்ளுக்குள் பல்லவியை  நொடித்து கொண்டிருக்க, பல்லவியே கையில் மகளுடன், ஷோல்டர் பேக்குடன் வெளியே வந்தாள்

எங்க மாமா வீட்டுக்கா..?” விஷ்ணு புருவம் சுருக்கி கேட்டான்ஈஷ்வர்  பல்லவியையே தீர்க்கமாக பார்த்து நின்றான்

அவளுடன் வந்த கங்கா காரை காட்ட, ட்ரைவர் கார் கதவை திறக்க, பல்வியோ அந்த காரை கடந்து நடந்தாள். ஈஷ்வர் அவளையே பார்த்து நின்றவன் அவனை கடக்கும் போது வழி மறைத்து நின்றான்

வழி விடு..” பல்லவி அடிக்குரலில் சொல்ல,  

பல்லவி எங்க போறம்மா..?” கங்கா அவளின் பின் வேகமாக வந்து கேட்டார்

எங்களுக்கு வீடு பார்த்திருக்கேன், அங்க தான்..” பல்லவி  சொல்ல, பின்னால் நின்றிருந்த மொத்த குடும்பமும் அதிர்ந்தது

என்ன..? என்ன சொல்ற நீ..? தனியா வீடு பார்த்திருக்கியா..? ஏன்..?” கங்கா கோவத்துடனே கேட்க, ஈஷ்வர் முகமோ மலர்ந்தது

எனக்கும், என் பொண்ணுக்கும் இருக்க வீடு வேணும்ன்னு பார்த்தேன்..” பல்லவி கணவனின் மலர்ந்த முகம் பார்த்து கோவத்துடன் சொன்னாள்

அதான் ஏன்..? நம்ம வீடு தான் இருக்கே..” கங்கா மேலும் கேட்க

நான் அங்க வரல..” என்றாள் பல்லவி.

ஏன் வரல, எங்க மேல என்ன கோவம்..?” கங்கா புரியாமல் கேட்க, பல்லவியோ அமைதியாக நின்றாள்

பல்லவி என்னம்மா இது..?  உன் மாமியார் வீட்டுக்கு  போ.. அதானே முறையும் கூட..” ரத்னா சொல்ல, அழுத்தமாகவே நின்றாள். அவள் போக மாட்டாள் என்பது எல்லோருக்கும் புரிந்தது. முக்கியமாக நரசிம்மனுக்கு.   

அப்போது கேட்டிற்கு வெளியே ஹார்ன் அடிக்க, பல்லவி ஈஷ்வரை ஒதுங்கி வெளியே வந்தவள், காத்திருந்த காரில் ஏறி கொண்டாள். ரூமிற்கு சென்ற போது டேக்சி புக் செய்திருக்கிறாள் புரிந்தது. ஈஷ்வர் சகஜமாக முன் சீட்டில் ஏறி கொண்டான்

நீங்க எதுக்கு வரீங்க, இறங்குங்க..” என்றாள் கணவனிடம் சீறலாக

நீங்க கார் எடுங்க..” ஈஷ்வர் ட்ரைவரின் மேப்பில்  அட்ரஸ் மாற்றி கொடுத்தான்

இது இல்லை சார்..” ட்ரைவர் சொல்ல

போங்க..” என்றான் ஈஷ்வர் கொஞ்சம் அதட்டலாகவே. அவர்கள் காருக்கு பின் நரசிம்மன், விஷ்ணு கார் பின் தொடர்ந்தது. சில நிமிடங்கள் பயணத்திற்கு பின் ஈஷ்வரின் சர்வீஸ் அபார்ட்மெண்ட் வந்தது

நான் கொடுத்த அட்ரஸ் இது இல்லை..” பல்லவி இறங்காமல் கொதிக்கஈஷ்வர் பணம் கொடுத்து பின் கதவை திறந்து அனுவை தூக்கி கொண்டான்

ஈஷ்வர் அனுவை கொடு..” பல்லவி காரில் இருந்தே கேட்க, அவளின் கை பிடித்து இறக்கியவன், பல்லவி மறுப்பை காட்ட, கண்டு கொள்ளாமல் லிப்டில் ஏறினான். கங்கா முகம் சிவக்க வரவிஷ்ணு, நரசிம்மனும் கார் நிறுத்திவிட்டு வந்தனர்

அவர்கள் இருந்த அதே வீடு.   வாட்ச் மேனும் அவர் மனைவியும் சுத்தம் செய்து கொண்டிருக்க, ஈஷ்வர் மகளுடன், மனைவி கை பிடித்து உள்ளே சென்றான். பல்லவிக்கு கால்களே வரவில்லை.  

முடிஞ்சது தம்பி..”  அடுத்த இரண்டாம் நிமிடம் அவர்கள் கிளம்ப, நரசிம்மன் வெளியே நிற்க, விஷ்ணுஅட வாங்க மாமா..” என்று கை பிடித்து  உள்ளே கூட்டி வந்தான்.  

பல்லவியோ  கோவமும், அழுகையும் கலந்து வீட்டை பார்க்க கூட செய்யாமல் பால்கனியை பார்த்து நின்றாள். காலிங் பெல் அடிக்க, ஈஷ்வர் மகளுடன் சென்று கதவு திறந்தான். காலை டிபன் வந்திருந்தது

பல்லவி.. அனுக்கு கொடு..” ஈஷ்வர் அவளின் கையில் உணவை வைத்தான். மகள் காலையில் இருந்து ஏதும் சாப்பிடாமல் இருக்க, பல்லவி மறுக்க முடியமால் சேரில் மகளை அமர்த்தி நின்று கொண்டே மகளுக்கு ஊட்டினாள்

ம்மா.. நீங்க சாப்பிட்டீங்களா..?” ஈஷ்வர் கங்காவிடம் கேட்க

இது ஒன்னு தான் குறை” .. என்றார் அவர் கொஞ்சம் கத்தலாகவே. பல்லவி அவரின் கோவத்தில் பார்க்க, அவர் கண்கள் கலங்க, கோபத்துடன் நின்றிருந்தார்

ம்மா.. இப்போ என்ன..?” ஈஷ்வர் கேட்க

இப்போன்னு இல்லை, எனக்கு உங்களால எப்போவும் கஷ்டம், வேதனை தான், பாரு இப்போ கூட என் மருமக என்கூட வீட்டுக்கு வர மாட்டேங்கிறா, என் மக வீட்டுக்கே வர மாட்டேங்கிறா, மகன் என்னை நினைச்சு கூட பார்க்கிறதில்லை.. யாருக்காக இந்த வாழ்க்கை நான் வாழுறேன்னு எனக்கே தெரியல..” என்றார் ஓய்ந்து போன குரலில்

ம்மா..”

பேசாதடா, உனக்கு என் கஷ்டம் புரியாது, நேத்து வீடியோ கால்ல இவங்களை பார்த்துட்டு மனசு கேட்காம கையோடு கூட்டிட்டு போலாம்ன்னு வந்தேன், ஆனா உன் பொண்டாட்டி என்கூட வர மாட்டேங்கிறா, அவ பாட்டுக்கு டேக்சி புக் பண்ணி வாடகை வீட்டுக்கு போறா..”ஆதங்கத்துடன் பொரிந்து கொண்டிருக்க

பல்லவியோ   “எனக்கு யாரோட வருமானத்திலும், அடையாளத்திலும் இருக்க வேண்டாம்..” என்றாள்  பட்டென

நரசிம்மன் அதிர்ந்து போய் மருமகளை பார்த்தார். ஈஷ்வர் கண் சுருக்கி பல்லவியை பார்க்க, விஷ்ணு புருவம் தூக்கி நரசிம்மனை பார்த்தான்.  

பல்லவி என்ன பேசுற நீ..? எங்க மருமகளா இருக்கிறதும் இதுக்கும் என்ன சம்மந்தம்..? ஏன் இப்படி பேசுற..?” கங்கா கேட்க, பல்லவி பதில் சொன்னால்  இல்லை. மகளுக்கு ஊட்டி முடித்து தண்ணீர் குடிக்க வைத்தாள்

பல்லவி நான் உன்கிட்ட தான் கேட்கிறேன்..” கங்கா அவளின் அருகில் சென்று கேட்க

நான் சொன்னது சரி தான், உங்களோட வருமானத்தில வாழுற வாழ்க்கை, இன்னாருடைய மருமகள், பேத்திங்கிற அடையாளம் எங்களுக்கு வேண்டாம்..” என்றாள் மீண்டும்

இதென்ன புதுசா பேசுற பல்லவி, எங்க எல்லாம் உங்களுக்கு தானே..?”

இல்லை.. அப்படி இருந்திருந்தா அன்னிக்கு..” மேற்கொண்டு சொல்லாமல் வாயை மூடி முகம் திருப்பினாள்

ஏன் நிறுத்திட்ட சொல்லு பல்லவி..” கங்கா கேட்க

நரசிம்மனோஅப்போ இதுக்காக தான் வீட்டை விட்டு போனியாம்மா..?” அதிர்ச்சி, வருத்தத்துடன் கேட்டார்

ஈஷ்வர்க்கு எல்லாம் புரிய, வேகமாக பால்கனி சென்று நின்றான்

நீங்க என்ன பேசுறீங்க..? எனக்கு ஒன்னும் புரியல, ரெண்டு பேரும் கொஞ்சம் புரியற மாதிரி பேசுங்க..” கங்கா இருவரையும் பார்த்து வெடித்தார்

கங்கா தப்பு என்மேல தான், நான் அன்னிக்கு மருமகளுக்கு புரியனும்ன்னு தான் அப்படி பேசினேன், ஆனா அது மருமகளை காயப்படுத்தும்ன்னு நான் நினைக்கல..” நரசிம்மன் சொல்ல, பல்லவிக்கு வாய் துறுதுறுத்தது. முயன்று அமைதியாக நின்றாள்

என்ன பேசுனீங்க, எங்க வருமானத்துல, அடையாளத்துல  வாழுறீங்கன்னா..” கங்கா நம்ப முடியாமல் கேட்க

நான் அந்த அர்த்தத்துல கேட்கல கங்கா, எத்தனை நாளைக்கு இப்படி இருக்க முடியும், உங்களுக்குன்னு ஒரு நல்ல வேலை, அடையாளம் வேணும்ன்னு இல்லை தான் கேட்டேன்..”

என்ன பேசியிருக்கீங்க நீங்க..? உங்க ஆசைக்காக எது வேணும்ன்னாலும் பேசுவீங்களா..? அதுவும் வீட்டுக்கு வந்த மருமககிட்ட..” கங்கா ஆத்திரத்துடன் பாய்ந்தார்

கங்கா அதான் சொன்னேன் இல்லை, அவர் படிக்கணும்ன்னு தான் நான் அப்படி பேசினேன், வேற எந்த எண்ணத்திலும் நான் அப்படி பேசல..” நரசிம்மன் அவரை புரியவைக்க முயல

நீங்க சொன்னதுல எந்த தப்பும் இல்லை..” என்றாள் பல்லவி

நான் உங்க வீட்டுக்கு முறையா வந்த மருமக இல்லை, அதனால தான் உங்களால அப்படி என்கிட்ட பேச முடிஞ்சது போல.. இதே நான் நீங்க பார்த்து கட்டி வச்ச பொண்ணா இருந்தா கண்டிப்பா இப்படி பேசியிருக்க மாட்டீங்க, என் மகனை விட்டு கொஞ்ச வருஷம் தள்ளி இருன்னும் சொல்லியிருக்க மாட்டீங்க, அந்த இடத்துல உங்க மகனோட வாழ்க்கையை கெடுக்கிற  பொண்ணா தான் நீங்க என்னை பார்த்தீங்க, அதான் ரொம்ப ஈஸியா என்னை அவரை விட்டு விலகியிருக்க சொன்னீங்க..”  பல்லவி வெறுமையாக சொல்ல, 

பல்லவி.. அவருக்கு ஈஷ்வர் ஐபிஸ் ஆகணும்ன்னு அவன் பிறந்ததுல இருந்தே ஆசை, கனவு அதான் அப்படி பேசிட்டார்..” என்றார் கங்கா சமாதானமாக.

நான் அவரோட ஆசையை தப்புன்னு சொல்லவே இல்லைங்க, அதுக்காக என்னை போன்னு சொன்னது தான்  வலிச்சது, அதுவும் எனக்கு போக இடம் கூட இல்லைன்னும் போது..”  தைரியமாக பேசி கொண்டே இருந்தவள் குரல் டக்கென உடைந்தது. ஈஷ்வர் அங்கு பால்கனி கம்பியை இறுக்கமாக பிடித்து நின்றான்

பல்லவி..” கங்கா அருகில் வர, வேகமாக தண்ணீர் குடித்து தன்னை சமாளித்து கொண்டவள்

முடிஞ்சது முடிஞ்சதுங்க, நான் அடிபட்டு நிறைய பாடம் கத்துக்கிட்டேன், விடுங்கஎனக்கு இப்போ வேற சொல்லணும், நான் இந்த வீட்ல  இருக்கனும்ன்னா வாடகை கொடுத்துடுவேன், முடியாது சொன்னா நானும், என் மகளும் வெளியே வீடு பார்த்துகிறோம்..” என்றாள் உறுதியாக

பல்லவி இது உங்க வீடு, ஏன் வாடகைன்னு பேசிகிட்டு இருக்க.. என் பேத்தி இருக்க நான் வாடகை வாங்கணுமா..?” கங்கா ஒரு மருமகளின் வார்த்தையை தாங்க முடியாமல் கலங்கி போய் பேசினார்.  

“என் உழைப்பில என்னால என் மகளை வளர்க்க முடியும், யாரோட..”  பல்லவி அழுத்தமாக பேசி கொண்டே போக

போதும்டி.. பேசாத, இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசாத..” கத்தினான் ஈஷ்வர்

“நீ பேச பேச நான் இந்த உலகத்துலே இருக்கிறது வேஸ்ட்ன்னு தோணுது.. இப்படியே இந்த பால்கனியில் இருந்து குதிச்சிடலாம் போல இருக்கு..” ஈஷ்வர் கண்கள் சிவக்க கத்த, விஷ்ணு அடுத்த நொடி அவன் பக்கத்தில் நின்றான்

பல்லவியோ கண்ணீர் வழிய பார்த்தாள் திகம்பரனை.