திகம்பரனின் திகம்பரி அவள் 22

“என்ன பேசிட்டிருக்க பல்லவி..?” கங்காவின் குரலில் எல்லோரும் திரும்பி பார்க்க, அவருடன் நரசிம்மனின் நின்றிருந்தார். பார்த்த பல்லவி குடும்பத்தாருக்கு கொஞ்சம் திக்கென்று தான் இருந்தது

அதிலும் கோமதிக்கு நரசிம்மன் பின் நின்றிருந்த படைய பார்க்க உள்ளுக்குள் லேசான அச்சம் எழுந்தது உண்மை. ஆனாலும் அதை மறைத்து அவரின் குணமான அதே திமிர் பார்வையில் பார்த்தார்

ஈஷ்வர் அம்மாவின் குரலில் திரும்பியவன், நரசிம்மனை பார்க்கவும் திரும்பவும் முகம் திருப்பி கொண்டான். “வாங்க.. உள்ள வாங்க..” ரத்னா முதலில் கொஞ்சம் தடுமாறி அவர்களை உள்ளே அழைக்க, “வாங்க..”  பரணியும் வாசலுக்கே சென்று அவர்களை கூப்பிட்டான். 

கங்கா, நரசிம்மன் இருவர் முகத்திலும் அதிருப்தி, கோவசாயலும் தெரிய உள்ளே வந்தனர். கங்கா நேரே மருமகள் முன்  சென்று நின்றவர், 

“என்ன பேசிட்டிருக்க நீ..? உனக்கும், என் பேத்திக்கும் நிக்க இடம் இல்லையா..? என் மருமக  நீ இப்படி சொல்லலாமா..? நான் இருக்கும் போது  உன் மனசுல இப்படி நினைப்பு வரலாமா..?” அவ்வளவு ஆதங்கத்துடன் கேட்டார் மாமியார். 

அவரின் உரிமையான கோவத்தில், கேள்வியில் பல்லவி கண்கள் கலங்க அவரை பார்த்தாள்.  “ச்சு.. என்ன நீ..?” கங்கா சிறிதும் தயங்காமல் அவளின் கை பிடிக்க, பல்லவி கண்களில் கண்ணீர் வழிந்து தான் விட்டது. 

இத்தனை வருடம் அவள் எதிர்பார்த்த அந்த தாய்மை அரவணைப்பு. ரத்னா கொடுக்க தவறியிருக்க, ஈஷ்வர் அதை உணராமல் இருக்க, கங்கா வந்து நின்றார் அவளுக்காக. 

“இங்க பாரு பல்லவி முன்ன பின்ன நானும் நீயும் பேசினதில்லை, பழகினது இல்லை, அதுக்கு முழு முதல் காரணம் இதோ இவன் தான். ஆனா இனி அப்படி இல்லை, எனக்கு தெரியும் அப்பா, மகன் ஆளுக்கொரு பக்கம் எப்படி மனுஷங்களை பந்தாடுவாங்கன்னு, அதனால எனக்கு உன்னை புரியுது..”

“நீ இவங்களை எல்லாம் விடு, உனக்கு நான் இருக்கேன், என் பேத்திக்கு பாட்டி வீடு இருக்கு, சொத்து இருக்கு, அவ என் வீட்டு ராணி, உங்க பிரச்சனையில் நீ இவளையும் சேர்த்து அலைக்கழிக்கிறது இனி முடியாது.. நீங்க மூணு பேரும் என்ன வேணா அடிச்சுக்கோங்க, எங்க வேணா போங்க, ஆனா அனு உங்களோட சேர்ந்து வரமாட்டா..”

“முக்கியமா உனக்கு தாண்டா இது, கொடுடா என் பேத்தியை..”  மகனிடம் இருந்து அனுவை பிடிங்கவே செய்தார் கங்கா. 

“ம்மா.. ஏன் இப்படி பிடுங்கிறீங்க, பேபி  பயப்படுறா பாருங்க..” ஈஷ்வர் மகளின் அரண்ட முகத்தை பார்த்து அம்மாவிடம் பாய்ந்தான். 

“எனக்கு தெரியும் என் பேத்தியை சமாதானம் செய்ய, நீ உன் வேலையை பாருடா..” கங்கா மகனுக்கு மேல் காய்ந்தவர், பேத்தியிடம் திரும்பினார். அவள் பல்லவியை பார்த்து பிதுக்கிய உதடுகளுடன் தாவ முயற்சி செய்து கொண்டிருந்தாள். 

“இதுல நீயும் அப்படியே உங்க அப்பனை மாதிரிடி, எப்போ பாரு லவி லவின்னு..” செல்லமாக, கொஞ்சம் ஆற்றாமையுடன் பேத்தியை கடிந்தவர், அவள் முடியை ஒதுக்கி முத்தம் வைத்தார். 

“ம்மா.. அவ குழந்தை, அவளுக்கு அவங்க அம்மா தான் தெரியும், உன்கிட்ட எப்படி உடனே ஓட்டுவா..”  ஈஷ்வர் பல்லை கடித்து பேச, 

“அது அவ தப்பு இல்லை, நீங்க எல்லாம் தான் காரணம்.. உங்க பிரச்சனையில்  என் பேத்தி  எல்லார்கிட்டேயும் பேச்சு வாங்குறா..”  மருமகள், மகன், கணவன் மூவரையும் முறைத்தவர் திரும்பி கோமதியை பார்த்தார். 

கோமதி அவர் பார்வையை  அலட்சியமாக எதிர்கொள்ள, கடுப்பான கங்கா, “நீங்க வயசுல பெரியவங்க தானே, ஒரு குழந்தை வச்சுக்கிட்டு எப்படி பேசணும்ன்னு தெரியாதா உங்களுக்கு..? அதுவும் எப்படி நீங்க என் மருமகளை பேசலாம்..?”

“இதுக்கு தான் வந்தே ஆகணும்ன்னு எங்ககிட்ட சண்டை போட்டு பல்லவியை இங்க கூட்டிட்டு வந்தீங்களா..?” ரத்னா, பரணியையும் பார்த்து கேட்டார்.  அவர்கள் என்ன சொல்வார்கள்..? முதலில் என்ன சொல்ல முடியும்..? 

“ம்மா.. நீங்க இந்த வீட்ல எது பேசுறதும் வேஸ்ட், லீவ் இட்..”  ஈஷ்வர் தோளை குலுக்கி சொல்ல, 

“எப்படிடா விட முடியும்..? அவங்க என்னென்ன பேசுறாங்க.. இத்தனைக்கும் பல்லவிக்கு பாட்டி, இந்த வீட்டோட பெரிய மனுஷி அவங்க..”

“ஹாஹா.. பெரிய மனுசியா..?  யாரு  இவங்களா..?” ஈஷ்வர் சத்தமாக சிரித்தவன்,   “எதை வச்சு இவங்களை  பெரிய மனுசி சொல்றீங்க, ஓஹ்.. தலை முடி நரைச்சிருக்கிறதை பார்த்தா, இல்லை முதுகு கூனு விழுந்திருக்கிதை பார்த்தா..” நக்கலான கோவத்தில் கேட்க, கோமதிக்கு தீ பற்ற வைத்தது போல இருந்தது. 

“ஏய் என்ன பேசுற நீ..?”  ஈஷ்வர் மேல் எகிறினார்.

அவனின் சிரிப்பில் தெரிந்த கோவத்தில், ரத்னா மருமகனை சமாதானம் செய்ய முயன்றவராக, “மாப்பிள்ளை.. அத்தை பேசினது தப்..” ஆரம்பிக்க, கை தூக்கி காட்டி அங்கேயே  அவரை நிறுத்திவிட்டான் மருமகன்

இங்க பாருங்க நான் உங்களை பல்லவி பிறந்த நாள் அப்போ கோவில்ல வச்சு பார்த்தேன், அப்படி அழுதுகிட்டு இருந்தீங்க, அங்க இருக்குற சாமிகிட்ட மடி பிச்சை கேட்டுட்டு  இருந்தீங்க, எனக்கு புரிஞ்சது நீங்க பல்லவியை நினைச்சு  ரொம்ப ஏங்குறீங்கன்னு, அந்த ஒரு காரணத்துக்காக தான் நானும் உங்களோட திருப்பதி கோவிலுக்கு  வந்தேன், ஆனா..” 

மாப்பிள்ளை நான்..”

ப்ளீஸ்.. எதுவும் பேசாதீங்க, எனக்கு உங்களை புரியுது, பல்லவி மேல நீங்க வச்சிருக்கிற பாசம் என்னால உணர முடியுது, ஆனா  உங்களுக்கு தெரியும் இல்லை உங்க மாமியார் பத்தி, அவங்க குணம் பத்தி, அப்பறம் எந்த நம்பிக்கையில் உங்க மகளை இங்க கூட்டிட்டு வந்தீங்க..”

உங்களால உங்க மகளை நல்ல முறையில் பார்த்துக்க  முடியும்ன்னா மட்டும் தான் நீங்க அவளை இங்க கூட்டி வந்திருக்கணும்.. இப்படி பேச்சு வாங்க இல்லை..”

அண்ட் நீ அவளை கோவத்துல அடிக்க மட்டும் தான் அண்ணனா, அவளை நல்ல படியா பார்த்துக்கிற   கடமை உனக்கு இல்லையா..? இதே பல்லவி உன் மகளா இருந்தா இப்படி தான்  மத்தவங்களை பேச விட்டு வேடிக்கை பார்ப்பியா..?  தப்பு பண்ணா கண்டிக்க மட்டும் அண்ணா இல்லைஅப்பா ஸ்தானத்துல  நின்னு ஆதரச்சு  போறதுலயும் அண்ணனோட கடமை இருக்கு..” பரணியை பார்த்து தீர்க்கமாக கேட்டவன், அதோடு விடாது

நீங்க ரெண்டு பேரும் என்னை தேடி வந்து என்ன கேட்டீங்க எங்க மகளை எங்ககிட்ட கொடுத்துடுங்க, நாங்க பார்த்துகிறோம்ன்னு தானே, இது தான் நீங்க பார்த்துகிற லட்சணமா..? இதுக்கு தான் அவளை கம்பெல் பண்ணி இங்க கூட்டிட்டு வந்தீங்களா..?”  ரத்னா, பரணி இருவரையும் கேட்க, ரத்னா அழுகவே செய்துவிட்டார்

நீங்க என்னை கேட்கிறது  எல்லாம் ரொம்ப சரி மாப்பிள்ளை..” ரத்னா இயலாமையுடன் நின்றவர், “பல்லவி என்னை மன்னிச்சிடுடா, உனக்கு இப்படி எல்லாம்  நடந்ததுக்கு என்னோட  கையாலாக தனம் தான் காரணம். என்னால உனக்கு ஒரு நல்ல அம்மாவா இருக்க முடியல, இத்தனை வருஷம் புருஷன், மாமியார், குடும்பம்ன்னு சொரணை கெட்டே வாழ்ந்துட்டேன், அதனால தான் அவங்களை எதிர்த்து நிக்க முடியல போல, நானே இப்படி இருக்கும் போது உன்னையும் இங்க கூட்டிட்டு வந்தது தப்பு தான், முடிஞ்சா என்னை மன்னிச்சுடு..” அழுகையுடன் கேட்க

ம்மா.. உங்க நம்பிக்கையை உடைச்ச என்கிட்ட நீங்க ஏன் மன்னிப்பு கேட்கிறீங்க, என்மேலேயும் தப்பு இருக்கு..” மனதார சொல்ல, ரத்னா வேகமாக வந்து மகளை அணைத்து கொண்டார்

பார்த்திருந்த பரணி, மூர்த்தி இருவராலும் பல்லவி அருகில் செல்ல கூட கால்கள் வரவில்லை. மகிளா கையில் மகளுடன் எல்லாவற்றையும் ஒரு ஆராய்தலுடன் பார்த்திருந்தாள். எதுவும் ஆதரித்தும் பேசவில்லை, எதிர்த்தும் பேசவில்லை. 

“ரத்னா என்ன பண்ணிட்டிருக்க நீ..?” கோமதி மருமகளிடம் கத்த

ம்மா.. போதும், போதும்,  இதுக்கும் மேல பேசாதீங்க, இதுவரைக்கும் நான் பண்ணின தப்புக்கே எப்படி பிராயச்சித்தம் தேட போறேன் தெரியல, இதுலே நீங்க இன்னும் இன்னும் பேசி என் பொண்ணை மொத்தமா எங்களை விட்டு பிரிச்சிடாதீங்க..” மூர்த்தி கையெடுத்தே கும்பிட்டு விட்டார். அவரை பார்த்த ஈஷ்வர்க்கு இன்னும் வெறுப்பு மட்டுமே.

“கங்கா.. போதும், நாம இங்க வந்ததே நம்ம மருமகளையும், பேத்தியையும் அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போக தானே.. கூட்டிட்டு வா கிளம்பலாம்..” அதுவரை அமைதியாக இருந்த நரசிம்மன் சொல்ல

சரி தாங்க.. நீ வாம்மா.. நாம நம்ம வீட்டுக்கு போலாம்..” கங்கா பல்லவியை கூப்பிட, அவள் அப்போது தான்  கொஞ்சம் நிதானத்திற்கு வந்தாள். அவளின் அழுகை நின்றது. அவளின் மூளையும், மனமும் எங்கெங்கோ சென்றது.

திரும்பி கணவனை பார்க்க, அவனும் அவளை தான் பார்த்து நின்றான். இப்போ கூட என்னை கூப்பிட மாட்டீங்க இல்லை.. பார்வையாலே கேட்க, ஈஷ்வர் விரக்தியாக சிரித்தான்

பல்லவி கிளம்பும்மா..” கங்கா திரும்ப கூப்பிடரத்னாவிற்கு மகளிடம் இங்கேயே இரு என்று  வார்த்தைக்கு  கூட சொல்ல முடியவில்லை

“என் திங்ஸ் எடுத்துகிறேன்ம்மா..” பல்லவி  சொல்லிவிட்டு மேலேற, ஈஷ்வர் வெளியே வந்துவிட்டான்

அங்கு விஷ்ணு காரில் சாய்ந்தபடி நின்றிருக்க, புருவம் மட்டும் தூக்கியவன் அவன் பக்கத்தில் சென்று நின்றபடிஎப்போ வந்த..?” கேட்டான்

உங்க அப்பா அம்மா வரதுக்கு முன்னாடி..” சிரிப்பு மின்ன சொன்னவன், “உன் கல்யாண பஞ்சாயத்து  இன்டர்வலுக்கு அப்பறம் தான் இன்னும் ஜோரா போகுது போல..”  கிண்டலாக கேட்டு ஈஷ்வரிடம் இருந்து ஒரு குத்து வாங்கி கொண்டான்