உண்மையிலே அவனுக்கு அப்பாவை கஷ்டப்படுத்தும் வருத்தம். அவரிடம் அடிக்கடி வாக்குவாதம் செய்யும் சூழல். மகனாக பிடிக்கவில்லை தான். ஆனால் என்ன செய்ய..? ரூம் சென்றவன், முதல் வேலையாக பல்லவிக்கு போன் செய்து பேசிவிட்டே, அவன் ப்ராஜெக்ட் வேலை பார்க்க கிளம்பினான்

படிப்புல சரியா இருப்பீங்கன்னு இப்போவும் நம்புறேன்..” நரசிம்மன் மகன் கீழே வரவும் சொன்னார்

நம்புங்க.. ஏமாத்த மாட்டேன்..” என்றவன் கிளம்பிவிட்டான். அந்த ஒரு மாதம் முழுதும் படிப்பு, பல்லவி என்றே ஓடினான். அவன் ப்ரோஜெட்க் வொர்க் முடித்து நேரே பல்லவியிடம் தான் ஓடுவான்

சில நேரங்கள் இருவரும் கணவன், மனைவியாக வாழ தான் செய்தார்கள். இளவயது சுயகட்டுப்பாடு மீறும் நிலையில் தான் இருந்தது இருவருக்கும். பல்லவிக்கு மனது உறுத்த, பல நாட்கள் அவனை கட்டுப்படுத்தி விடுவாள். சில நாட்கள் அவளும் அவனை தேட, அங்கு ஊடலும், கூடலுமாக அந்த மாதம் முடிந்தது

ஒருவழியாக அப்பா, மகன் இருவரும் மிகவும் எதிர்பார்த்த, ஈஷ்வரின் மாஸ்டர் டிகிரியின் பைனல் எக்ஸாமும் முடிந்துவிட, நரசிம்மன் அன்று இரவே மகனிடம் பேச வேண்டும் என்று சொல்லியிருந்தார்

அன்று எக்ஸாம் முடிந்ததும் அவன்  நேரே பல்லவியிடம் தான் சென்றான். இருவரும் ஒன்றாக மதிய உணவை முடிக்க, அவளை அணைத்து சிறிது நேரம் படுத்தான்

அப்பா நைட் பேசுவார் போல, எனக்கு ஐபிஸ்ல விருப்பமில்லைன்னு  சொல்லிடனும்..” என்றே நினைத்து படுத்திருந்தவன், பல்லவி ஏதோ கேட்கவும் பதில் சொன்னான்

சில நிமிடங்கள் பேசி கொண்டிருக்க, ஈஷ்வர் சமிக்ஞையாக  பல்லவியின் உதடுகளை வருடினான்.   “ஈஷ்வர்..” அவள் புரிந்து  முறைக்க

எக்ஸாம் முடியற வரைக்கும் நோ சொல்லிட்டே, இப்போ தான் எக்ஸாம் முடிஞ்சிடுச்சே..” மிகவும் பாவமாக, கெஞ்சலாக கேட்டவன் அவளின் அமைதியில் அவன் வேலையை காட்ட தொடங்கினான்

இரவு தொடங்கிய பிறகே பல்லவியுடம் இருந்து வீட்டிற்கு கிளம்பினான். அதுவும் விருப்பமில்லாமல். “சாரிடி.. உன்னை இப்படி தனியா விட்டுட்டு போறது.. ம்ப்ச்.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு, சீக்கிரமே நாம ஒன்னாவே இருக்க வழி பண்றேன்..” முத்தம் கொடுத்து வீட்டிற்கு சென்றான்

நரசிம்மன் மகன்  வரவுமே,  “எக்ஸாம் முடிஞ்சிடுச்சு இல்லை, நாளையில இருந்து திரும்ப கோச்சிங் ஸ்டார்ட் பண்ணிடுங்க, அந்த சென்டர் வேண்டாம், நான் முன்னாள் IAS ஆபீசர்கிட்ட பேசியிருக்கேன், அவர் வீட்டுக்கே வந்து உங்களை கைட் பண்ணுவார்..” என, ஈஷ்வர் மூச்சை இழுத்துவிட்டான்.

பேசவேண்டிய நேரம் வந்துவிட்டது. ஆனா அப்பா.. அவரோட ஆசை, கனவு, கண்டிப்பா ரொம்ப கஷ்டப்படுவார், நீயும் தப்பு தானே பண்ற ஈஷ்வர்.. புரியுது தான், எனக்கு பிடிக்கலையே..? உறுதியாக தந்தையை பார்த்தான்

நரசிம்மனுக்கு ஏதோ தவறாக பட, திரும்பி மனைவி, மகளை பார்த்தார். அவர்களும் டிவியை நிறுத்திவிட்டு ஈஷ்வரை தான் பார்த்திருந்தனர்

ப்பா.. உங்க ஆசை எல்லாம் நான் ஒரு நல்ல நிலையில இருக்கனுங்கிறது தானே..?” ஈஷ்வர் மெல்ல  ஆரம்பித்தான்

ஆமா.. என்ன புதுசா கேட்கிறீங்க..?” நரசிம்மன் மகனை கூர்மையாக பார்த்து கேட்டார்

இல்லைப்பா.. உங்க கனவு நிறைவேறுற மாதிரி நான் ஒரு பிளான் வச்சிருக்கேன்..” ஈஷ்வர்க்கு உள்ளுக்குள் அச்சம் எழுந்தாலும் தைரியமாகவே பேசினான்

பிளானா..? என்ன பேசுறீங்க நீங்க..? படிச்சு எக்ஸாம் எழுது போறதுல  என்ன பிளான்..?”

அது.. அது தான்ப்பா.. இந்த எக்ஸாம் எல்லாம் வேண்டாம்.. வேற..”

“எக்ஸாம் வேண்டாமா..? ஏன்..? உங்களால படிக்க முடியலையா..? கஷ்டமா இருக்கா..?”

அப்படி இல்லைப்பா..” கண் மூடி திறந்தான். ஈஷ்வர் ஓப்பனா பேசிமுடி, ஏன் இழுக்கிற..? 

எனக்கு இந்த ஐபிஸ்  எல்லாம் வேண்டாம்ப்பா, நான் வேற யோசிச்சிருக்கேன்..” பட்டென சொன்னான்

என்ன சொல்றீங்க..?” உடலும், மனமும் அதிர நரசிம்மன் அதிர்ச்சியுடன் கேட்டார்

ஆமாம்ப்பா.. பிஸ்னஸ் பண்ணலாம் இருக்கேன், அது உங்களுக்கு வேண்டாம்ன்னா, எதாவது கம்பெனிக்கு வேலைக்கு..”

நிறுத்துங்க.. நிறுத்துங்க.. என்ன பேசிட்டிருக்கீங்க..? கங்கா என்ன பேசுறாங்க..? ஐபிஸ் வேண்டாமாமே, வேலைக்கு.. என்னடி இது..?” மனைவியிடம் குமுறலாக கேட்டார்

இருங்க, இருங்க, நான் கேட்கிறேன்..” கணவனை அமைதிப்படுத்திய கங்கா, “ஈஷ்வர் என்ன பேசுறேன்னு யோசிச்சு பேசு, ஏன் இப்படி எல்லாம் உளறிட்டு இருக்க..” மகனை கடிந்து கொண்டார்

ம்மா.. நான் யோசிச்சு தான் பேசுறேன், எனக்கு ஐபிஸ் செட் ஆகும்ன்னு தோணல..” ஈஷ்வர் நரசிம்மனை பார்க்க முடியாமல் அம்மாவை பார்த்தான்

கங்கா அவரை நிறுத்த சொல்லு, ஏதேதோ சொல்லிக்கிட்டு..”

ப்பா..ப்ளீஸ்.. எனக்கு ஐபிஸ் வேண்டாம்.. நான் வேற ஏதாவது பண்றேன்..”

ஈஷ்வர்.. இதுக்கு மேல பேசாதீங்க, ரூம்க்கு போங்க, நாளைக்கு காலையிலே அவர் வந்துடுவார்..” நரசிம்மன் மகனை போக சொல்ல, அவனோ, என் விருப்பத்துக்கு முக்கியத்துவம் இல்லையா..? கோபத்துடன் நின்றவன்

ப்பா.. நான் ஐபிஸ் படிக்க மாட்டேன்.. அவர் வந்தாலும் வேஸ்ட் தான்..”   மேலேறிவிட்டான்

நரசிம்மன் தலையை பிடித்து அமர்ந்துவிட்டார். அவரின் மகன்.. ஓரே  வாரிசு.. அவனை வைத்து இத்தனை வருடங்களாய் என்னென்ன கனவுகள், ஆசைகள், எதிர்பார்ப்புகள்.. நெஞ்சு அடைத்தது மனிதருக்கு. அந்த இரவு முழுதும் அவர் ஒரு பொட்டு கூட தூங்கவில்லை

ஈஷ்வரும்  விடியற்காலையில் தான் தூங்கினான். ஆனால் அவன் செய்த வேலைகள்.. மறுநாள் காலை எல்லோருக்கும் பதட்டத்துடன் தான் விடிந்தது. கங்கா ஹாலில் அமர்ந்திருந்த கணவரை நெருங்க கூட முடியாமல் பார்த்திருந்தார். மகா என்ன நினைத்தாளோ இரவு விஷ்ணுவிடம் பேசிவிட்டே தூங்கினாள்.

 நரசிம்மன் போன் அடிக்க, எடுத்தவர், வாங்க.. என்று வைத்தார். அடுத்த சில நிமிடங்களில் ஒருவர் வந்தார். “கங்கா சாருக்கு காபி எடுத்திட்டு வா..” மனைவியை ஏவியவர், அவரை மரியாதையுடன் உட்காரவைத்து உபசரித்தார்

மகா.. அண்ணாவை வரசொல்லு..”  மகளிடம் சொல்ல, அவள் திகிலுடன் ஈஷ்வர் ரூம் கதவை தட்டி இப்படி என்று சொன்னாள்

ஈஷ்வர் அப்போது தான் முழித்திருந்தவன், “வரேன் சொல்லு..” என்றவன் குளிக்க சென்றான். தந்தையின் பிடிவாதம் அவனுக்கு மலைப்பையும், ஆற்றாமையையும் கொடுத்தது

ஈஷ்வர் இவர்தான் உங்களோட ட்ரைனர்..” மகன் வரவும் நரசிம்மன் அறிமுகம் செய்தார்

“ஹலோ சார்..” மரியாதையாக சொன்னவன், அப்பாவை பார்த்தான்

சாப்பிட்டு வந்துடுங்க.. கிளாஸ் ஆரம்பிக்கணும் இல்லை..” நரசிம்மன் மகனின் பார்வையை கவனிக்கதாவர் போல சொன்னார்

ப்பா.. ஏன் இப்படி..? எனக்கு இது வேண்டாம்..” தாழ்ந்த குரலில் உறுதியாக சொன்னான்

ஈஷ்வர்.. போய் சாப்பிட்டு வாங்க, போங்க..” அவர் அதையே சொல்ல, ஈஷ்வர் அவரை கண் சுருக்கி பார்த்தவன்

சார்.. சாரி, என்னால ஐபிஸ் படிக்க முடியாது.. எனக்கு இதுல விருப்பமில்லை..” என்றுவிட்டான் வந்திருந்த ட்ரைனரிடமே

ஈஷ்வர்..” நரசிம்மன் அதட்ட

ப்பா.. நான் உங்ககிட்ட நேத்தே சொல்லிட்டேன்..” அவன் நிமிர்ந்து நின்றான்

சார்.. நான் கிளம்புறேன், நீங்க பார்த்துட்டு சொல்லுங்க..” வந்திருந்தவர் ஈஷ்வரின் உறுதி பார்த்து கிளம்பிவிட்டார்

கங்கா..” நரசிம்மன் மனைவியை கத்த, அவருமே மகனின் செயலில் அதிர்ந்து போயிருந்தவர், கணவர் கோவமாக கூப்பிட, ஓடியே வந்தார்

இவர் என்ன நினைச்சிட்டு இருக்கார்ன்னு கேட்டு சொல்லு.. நான் பேசினா வேற மாதிரி ஆகிடும்..”  மகா பயந்து போனவள் விஷ்ணுவிற்கு இன்னும் என்ன பண்றீங்க, சீக்கிரம் வாங்க.. மெசேஜ் போட்டாள்

ஈஷ்வர்.. ஏண்டா இப்படி பண்ற..? அப்பா பேச்சை கேளேண்டா..” கங்கா மகனிடம் கெஞ்சவே செய்தார்

ம்மா.. உங்களுக்கு என்  ஆசை, விருப்பம் முக்கியமில்லையா..?” அப்பாவை பார்த்தே கேட்டான்

இதை கேட்க அவரால எப்படி முடியுது கங்கா, இதுவரைக்கும் அவரோட இஷ்டப்படி தான் எல்லாம் நடந்துட்டு இருக்குஏன் இருப்பத்தி ரெண்டு வயசில கல்யாணம் பண்ணது மறந்து போச்சாமா..?” நரசிம்மன் ஆத்திரத்துடன் கேட்க, ஈஷ்வர்க்கு குத்த தான் செய்தது

“ப்பா.. ப்ளீஸ் நான் சொல்ல வரதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க,   நான் பெரிய  பெரிய கம்பெனிஸ் எல்லாம் பார்த்து வச்சிருக்கேன்அதுலயும் என்னால பெரியா ஆளா வர முடியும்சாதிக்க முடியும், இல்லை வேண்டாம்ன்னா.. பிஸ்னஸ் பிளான்ஸ் வச்சிருக்கேன், எல்லாம் ரொம்ப யூனிக்கான பிஸ்னஸ், உங்க பேரை சொல்ற அளவுக்கு நான் சாதிப்பேன்.. என்னை..”

ஈஷ்வர் போதும் உங்க பினாத்தல், நம்மகிட்டேயே பெரிய அளவுல பிஸ்னஸ் போய்ட்டு தான் இருக்குநீங்க ஒன்னும் தூக்கி நிறுத்த தேவையில்லை..”

ப்பா.. ஓகே.. கம்பெனிஸ்..”

கம்பெனியா.. சொல்லுங்க உங்களுக்கு எத்தனை கம்பெனி வேணும் நான் வச்சு தரேன் உங்களுக்கு.. சொல்லுங்க..” அவர் கத்தவே செய்ய, சரியாக விஷ்ணு உள்ளே வந்தான்

வாங்க.. வாங்க.. எங்கடா இன்னும் காணலையே பார்த்தேன்..” அவனை பார்த்ததும் நரசிம்மன் எகிறியவர், “தெரியுமா உங்களுக்கு செய்தி, இவர் ஐபிஸ் படிக்க மாட்டராமா..? கம்பெனில வேலை பார்க்க போறாராமா..?” அவரின் கோவத்தில் அவ்வளவு வேதனையும், ஏமாற்றமும்

புரிந்த  விஷ்ணு திரும்பி ஈஷ்வரை முறைத்தான். அவனிடம் ஈஷ்வர் எதுவும் சொல்லவே இல்லை, பல்லவியிடமும்தான்

ஈஷ்வர் ஏன் அவசப்படுற..?”  விஷ்ணு கடிந்து கொள்ள

அவனோஇப்போ பேசலன்னா வேற எப்போ பேச..?  ஐபிஸ் முடிஞ்சதுக்கு அப்பறமா..?” என்றான் நக்கலான கோவத்தில்

“விஷ்ணு அவருகிட்ட சொல்லிடுங்க, போதும் இதுவரைக்கும் காதல், கல்யாணம்ன்னு  அவர் இஷ்டத்துக்கு அவர் ஆடினது போதும், இனியும் முடியாது.. அவரை ஒழுங்கா எக்ஸாமுக்கு படிக்க சொல்லுங்க..”

முடியாது, என்னோட விருப்பம் ஒண்ணுமில்லையா..?”

இத்தனை வருஷம் நான் இதுபத்தி பேசினப்போ எல்லாம் என்னை நம்புங்கன்னு சொல்லிட்டு இப்போ மட்டும் என்ன  உங்க விருப்பம்..?”

“அதான் தப்பு பண்ணிட்டேன்.. முதல்லே முடியாது சொல்லியிருக்கணும்..”

ஈஷ்வர் என்னோட பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கு.. ரொம்ப ஓவரா போறீங்க..”

ப்பா.. நீங்க தான் என்னை கட்டாயப்படுத்துறீங்க..”

என்ன கட்டாயப்படுத்திட்டேன்..?  உங்க வாழ்க்கைக்கு நல்லது சொன்னா தப்பா..?”

இல்லை நீங்க உங்க கனவை, ஆசையை என்மேல திணிக்கிறீங்க, அதுக்கு தான் உங்களுக்கு என்மேல இவ்வளவு பாசம் இந்த மரியாதை எல்லாம், முழு சுயநலம்..” என்றுவிட, நரசிம்மனால் தாங்கவே முடியவில்லை. பட்டென அவனை அறைந்துவிட்டார். யாரும் எதிர்பார்க்கவில்லை

மாமா..”  விஷ்ணு கோவமாக நர்சிம்மன், ஈஷ்வர் இடையில் வந்து நின்றான்.  

ஈஷ்வர் கண்கள் சிவந்துவிட்டது.