அவ்வளவு ஜுரமா..? பதறி போனவன்,  “நீங்க அவளை பக்கத்துல இருக்கிற ஹாஸ்பிடல் கூட்டிட்டு போங்க, நான் வந்துடுறேன்..” என்றவன், பைக்கை விரட்டி கொண்டு ஹாஸ்பிடல் சென்றான்

பல்லவிக்கு குளுக்கோஸ் ஏறி கொண்டிருக்க, மிகவும் சோர்வாக படுத்திருந்தாள். உடன் இருந்த பெண் இவன் வரவும் கிளம்பிவிட, ஈஷ்வர் அவளின் பக்கத்தில் சென்று  நின்றான்

அவனின் சென்ட் வாசனைய உணர்ந்து கண் திறந்து பார்த்த பல்லவியின் கண்ணில் தானாகவே கண்ணீர் தேங்க, ஈஷ்வருக்கு மொத்த செல்லும் துடித்தது

இத்தனை  வருடங்கள் குடும்ப கூட்டுக்குள் பாதுகாப்பாக, சந்தோஷமாக, முக்கியமாக ஏன் என்று கேட்க உறவுகளோடு இருந்தவளுக்கு இந்த சில மாத தனிமை அதிகளவு வெறுமையை கொடுத்து விட்டிருந்தது.

ஈஷ்வர் மட்டும் இல்லையென்றால்.. நினைக்கவே நெஞ்சம் நடுங்கும் அவளுக்கு. ஏதோ அவன் போன் பேசுவது மட்டும் தான் அவளை கொஞ்சம் பாதுகாப்பாக, தனக்காக அவர் இருக்கார் என்ற தைரியத்தையும் கொடுக்கும்

மீதி நேர தனிமைகள் அவளை படுத்தி எடுக்கும். சரியாக தூங்காமல், சாப்பிடாமல் ஏதோ போல் ஒரு வாழ்க்கை. பிறந்ததில் இருந்தே இப்படி என்றால் அவளும் இதை எதிர் கொண்டு வாழ பழகியிருப்பாளோ என்னமோ, திடீர் தனிமை, யாருமில்லா நாட்கள், வீடு நினைவு என்று வெறுமையில் இருப்பவளுக்கு, நேற்று மூர்த்தி,கோமதி வார்த்தைகளை கேட்ட பிறகு விரக்தியின் உச்சத்திற்கு தான் சென்றுவிட்டாள்

அதிலும் இரவு ஜுரத்தில் கேட்க கூட யாருமில்லாமல்.. இப்போதும் அதை நினைத்து தான் ஈஷ்வரை பார்த்ததும் கண்ணில் நீர் வழிந்தது. அவளின் நிலையை அப்பட்டமாக காட்டிய அவளின் அழுகை, ஈஷ்வரின் கண்களை சிவக்க வைத்தது

எதுவும் பேச முடியாமல் அவளின் கை பிடித்து அமர்ந்துவிட்டான். குளுக்கோஸ் முடிஞ்சுதா என்று நர்ஸ் வர, பல்லவி கண்ணீரை ஈஷ்வர் துடைத்துவிட்டான்

அவங்களுக்கு சாப்பிட ஏதாவது வாங்கி கொடுங்க, ரொம்ப வீக்கா இருக்காங்க..” நர்ஸ் சொல்ல, ஈஷ்வர் வெளியே சென்று இட்லி வாங்கி வந்து ஊட்டினான்

நீங்க சாப்பிட்டீங்களா..?” இரண்டு இட்லி உள்ளே செல்லவும் கொஞ்சம் தெம்பாக கேட்டாள்

ம்ம்..” தலை மட்டும் ஆட்டியவன், டாக்டர் கொடுத்த மாத்திரைகளை கொடுத்தான். அடுத்த சில நிமிடங்களில் கிளம்ப சொல்ல, பல்லவிக்கு ஹாஸ்டல் செல்ல பிடிக்கவில்லை

ஆனா  அங்க தானே நீ போகணும் பல்லவி..?” மனதுக்குள் வெறுமையாய் உணர்ந்தவள், ஈஷ்வர் வரவைத்த காரில் ஏறி கண் மூடி கொண்டாள். ஈஷ்வரிடம் கேட்டால் உடன் வைத்து கொள்வான் தான்.

ஆனால் அவருக்கு எதுக்கு கஷ்டம்..? என்னை எங்க வச்சு பார்த்துக்க முடியும்..? அவங்க அப்பாக்கு ஏற்கனவே கோவம், இதுல என்னால இன்னும் எதுக்கு பிரச்சனை..?” நினைத்து கொண்டே வந்தவள் கார் நிற்கவும் பார்த்தால் அதே சர்வீஸ் அப்பார்ட்மெண்ட்

அந்த நொடி அப்படியே அவள் முகம் மலர, ஈஷ்வரை பார்த்தாள். “வா..” அவளின் கை பிடித்து இறக்கியவன், லிப்டில் கூட்டி சென்று, அன்று சென்ற வீட்டின் கதவை திறந்து உள்ளே அழைத்து சென்றான்.

“கொஞ்சம் நேரம் தூங்கு வா..” பெட் ரூம் உள்ளே கூட்டி செல்ல

நான் ஹாலிலே படுத்துகிறேன் ப்ளீஸ்..” என்றாள்

நின்று அவளை ஆழ்ந்து பார்த்தவன், சோபாவில் படுக்க வைத்தான். சில நொடிகள் முழித்து அவனை பார்த்திருந்தவள் தூங்கி போக, ஈஷ்வர் விஷ்ணுவிற்கு அழைத்து பேசினான்

சரி  ஈவினிங் கொண்டு போய் ஹாஸ்டல்ல விட்டுடு..” விஷ்ணு சொல்ல

இல்லை.. அவ சரியாகுற வரை இங்க என்கிட்ட தான் இருப்பா..” என்றான் ஈஷ்வர் மிக உறுதியாக

ஈஷ்வர்..”

விஷ்ணு எதுவும் பேசாத, அவளை நேர்ல பார்த்திருந்தா உனக்கு தெரிஞ்சிருக்கும், நான் இருக்கும் போது அவளுக்கு ஏண்டா இந்த கஷ்டம்..? அப்பறம் நான் இருந்து என்ன யூஸ்..?” 

புரியுது ஈஷ்வர்.. ஆனா நீ எப்படி அவளை பார்த்துக்கவ..?”

விஷ்ணு.. நீ அம்மாக்கு சொல்லிடு.. மகாவும் அத்தை வீட்ல தான் இருக்கா, அவளை அங்கயே தங்க சொல்லிடு..” முடித்து விட்டவன், பல்லவிக்கு உடை, உணவுக்கு ஏற்பாடு செய்தான்

மதியம் போல அவள் முழிக்க, ரிப்ரெஷ் செய்ய வைத்து உணவு கொடுத்தவன், மாத்திரை கொடுத்தான். மாலை போல மீண்டும் ஜுரம் அதிகமாக, ஈஷ்வருக்கு பயம் அதிகரித்தது.

விஷ்ணுவிற்கு போன் செய்து, “திரும்ப ஹைய்  பீவர், சரியாகிடும் சொன்ன, பாரு..” என்று  அவனை படுத்தி எடுத்துவிட்டான்

டாக்டர் சொல்ல தான் செஞ்சாங்க, பயப்படாதீங்க..”  பல்லவி தான் அவனுக்கு தைரியம் சொன்னவள் அவன் கொடுத்த பிரெட் சாப்பிட்டு மாத்திரை போட்டு படுத்தாள்

அடுத்த நாள் முழுதும் சென்று ஜுரம் கட்டுக்குள் வந்தது. மூன்றாம் நாள் காலை அவளே எழுந்து குளித்து வர, ஈஷ்வர் அந்த சத்தத்தில் முழித்து பார்த்தவன், “ஏய் எதுக்குடி குளிச்ச..?” பதறி போனான்

இல்லைங்க ரெண்டு நாளா குளிக்காம பிடிக்கல அதான்..” என்றவள் அவன் திட்ட, திட்ட தானே காபி கலந்து அவனுக்கும் கொடுத்து, தானும் குடித்தாள். கோவமாக என்றாலும் அவள் முதல் முதலாக தனக்கு செய்ததை குடிக்கவே செய்தான்

இருவர் மட்டுமே.. பல்லவியின் முகத்தில் ஒரு பொலிவு. அவளின் தனிமை,வெறுமை, விரக்தி எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போக, ஈஷ்வரை உரிமையுடன் பார்த்தாள் பெண். அவனோ முகம் திருப்பி குளிக்க சென்றான்

காலை உணவு பார்சல் வர, வாங்கி சாப்பிட ஏதுவாக எடுத்து வைத்தாள். ஈஷ்வர் குளித்து வரவும், பரிமாற, அவனுக்கு இது மிகவும் பிடித்திருந்தது. “என் பொண்டாட்டி, எனக்கு செய்றா..” உள்ளுக்குள் ஐஸ் சில்லிப்பு. முகத்தில் அதே இறுக்கம்

கொஞ்சம் சிரிங்களேன் ப்ளீஸ்..” பல்லவி வாய் திறந்து கேட்க,  

நான் சந்தோஷமா சிரிக்கிற அளவு நீ என்னை வைக்கல..” என்றான் கோவம் தெரிய

ஜுரம் வந்ததுக்கு நான் என்ன பண்ணுவேன்..?” அவள் முனங்க

நீ என்ன பண்ணுவ பாவம் மழையில  மட்டும் தான் நினைஞ்ச, உன் தப்பு என்ன இருக்கு..?”  கேலியாக சொல்ல, ஹாஸ்டல் ஹெட் போட்டு கொடுத்திட்டாங்க போல

அது சும்மா வெளியே போனப்போ..”

பல்லவி..” ஈஷ்வர் அவளை தீர்க்கமாக பார்க்க, பொய் சொல்ல முடியவில்லை. அவளின் கனத்தை அவனிடம் இறக்கி வைத்தவள் தேம்ப, ஈஷ்வர்க்கு மூர்த்தி, கோமதி மேல் ஆத்திரம் பொங்கியது

பாட்டி அப்படி எல்லாம் பேசுவாங்கன்னு நான் நினைச்சு கூட பார்க்கல..”

லவி..”  அவளை அணைத்து கொண்டான். அவளும் அவனை இடையோடு அணைத்து கொண்டு அழுக, ஈஷ்வருக்கு அவளின் அழுகையை நிறுத்தவே போதும் போதும் என்றானது

இந்த தண்ணி குடி..” அவள் குடிக்க, தானும் குடித்து வைத்தான்

நான் அவங்களுக்கு பேசியிருக்க கூடாதா..?” அவன் முகம் பார்த்து கேட்க

முதல்ல உட்காரு..” அவளை கூட்டி சென்று சோபாவில் அமரவைத்து அவனும் பக்கத்தில் அமர்ந்தான். பல்லவி அவன் தோள் மேல் சாய்ந்து கொள்ள, ஈஷ்வருக்கு அவளின் வேதனை புரிந்தது. நன்றாக தோளோடு அணைத்து கொண்டவன், அவள் நெற்றியில் இதழ் பதித்தான்

என்மேல கோவம் போயிருக்கும் நினைச்சு தான் பேசினேன், அதுவும் அம்மா, அண்ணாகிட்ட பேசணும் தான் பண்ணேன்..” அவள் சொல்ல, ஈஷ்வருக்கு புரிந்தது

அம்மா, அண்ணாவை மிஸ் பண்றியா..?” கேட்டான்

ரொம்ப.. வீட்ல அவங்க ரெண்டு பேரும் தான் எனக்கு எல்லாம். அப்பா எப்போவும் பாட்டி பேச்சை கேட்டு எங்ககிட்ட டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ணுவார், அம்மா, அண்ணா எனக்கு எல்லாம் செய்வாங்க..” அவளின் வீட்டு நிலைய சொல்லி கொண்டிருக்க, ஈஷ்வர் கேட்டு அவளுக்கு ஆறுதல் சொன்னவன், அவளை கொஞ்சம் சகஜ நிலைக்கு திருப்பினான்.

லவி.. போதும் பேசினது, மாத்திரை போடணும், சாப்பிட்டுக்கோ..” அவளின் கை பிடித்து எழுப்ப, பல்லவி முகம் கழுவி வந்தாள். ஈஷ்வர் அவளுக்கு உணவு எடுத்து வைத்திருக்க, “நீங்களே ஊட்டிவிடுங்க..” என்றாள் முன் இரண்டு நாட்களில் பழக்கமாக

ஈஷ்வர் ஆச்சரியத்துடன் புருவம் தூக்கியவன், மறுக்காமல் அவளுக்கு ஊட்டினான். “நீங்க சாப்பிடுங்க..” பல்லவி அவனுக்கு பரிமாற

நான் மட்டும் ஊட்டிவிடனும்..” என்றான் சீண்டலான முணுமுணுப்பாக. பல்லவி டக்கென பிளேட் எடுத்து ஊட்ட செய்ய, ஈஷ்வர்க்கு கனவு போல இருந்தது

நான் சும்மா தாண்டி கேட்டேன்..” என்றவன் அவள் ஊட்ட ரசிப்புடன் சாப்பிட்டான்அடுத்து மாத்திரை கொடுத்தவன் சோபாவில் அமர, பல்லவி தானே சென்று அவன் தோள் சாய்ந்தாள்

என்ன ஆச்சு என் பொண்டாட்டிக்கு..? ஒரே ஷாக் மேல் ஷாக் கொடுக்கிறீங்க..” தோளோடு அணைத்து கொஞ்சினான்

உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன்..”

என்னை மட்டுமா..?”

அம்மா, அண்ணா, உங்களை..”

ம்ம்.. அதானே பார்த்தேன்.. மேடம் நான் பார்க்க வர கேட்டா கூட விடவே இல்லை, இத்தனை மாசம் கழிச்சு இப்போதான் நேர்லே பார்க்கிறேன், இப்படி இருக்க..? இவ்வளவு மெலிஞ்சு..? ம்ப்ச்.. என்னமோ நான் உன்னை கூட்டி வந்து கஷ்டப்படுத்துற மாதிரி இருக்கு..” அவன் வேதனை கொள்ள, இந்த முறை இவள் அவனை சமாதானம் செய்தாள்

மாமா ஏற்கனவே நம்ம மேல ரொம்ப கோவமா இருக்கார், இதுல நாம மீட் பண்ணி இன்னும் எதுக்கு பிரச்சனை.. அதோட உங்க படிப்பும் இருக்கே..” என்றவள், “பாருங்க இப்போ கூட மூணு நாளா புக்கே எடுக்கல..” என

ம்ப்ச்.. ப்ராஜெக்ட் தான் போய்ட்டு இருக்கு, பார்த்துகிறேன்.. நீ கவலைப்படாத..” என, பேச்சு அப்படியே சென்றது. இடையில் கங்கா, விஷ்ணு போன் செய்து பேசினர்

கங்கா நாளை வந்துவிடுவோம் என, பல்லவிக்கு முகம் வாடி போனது, அவன் வீட்டுற்கு கிளம்பிவிட்டாள் தனக்கு திரும்ப ஹாஸ்டல் வாசம்.. அதே தனிமை. ஈஷ்வர் பார்க்க லேசாக சிரித்தாள். அவனுக்கு புரிந்தது அவளின் துயரம்

கங்கா வைக்கவும் இழுத்து நன்றாக அணைத்து கொண்டான். அன்று முழுதும் ஒருவர் அணைப்பில் மற்றவர். அதிலும் பல்லவி அவனை விட்டு விலகவே இல்லை. அவனை விட்டு தள்ளி இருக்கும் போது கூட மனதை கட்டு படுத்தி கொண்டவளுக்கு, அவன் உடன் இருக்கும் போது அவன் மீதான தேடல் கூடியது

இரவு உணவு முடித்துவிட்டு சோபாவில் அமர, பல்லவி நன்றாக அவனை அணைத்து கொண்டான். “லவி.. என்ன ஆச்சுடி..?” ஈஷ்வர் அவளை கட்டி கொண்டு கேட்க

உங்ககூட நெருக்கமா  இருந்துட்டா அப்பறம் உங்களை விட்டு பிரிஞ்சு இருக்க முடியாதுன்னு தான் உங்களை விட்டு தள்ளியே இருந்தேன்..” அவள் அவன் நெஞ்சில் சொல்ல, ஈஷ்வர் சிலிர்ப்புடன் அணைத்து கொண்டான்

நிமிடங்கள் சென்று நெருக்கம் கூட, “என்னவோ போல இருக்குடி.. புதுசா..” அவளின் முகம் நிமிர்த்தினான்

பல்லவி அவனை பார்க்க, அவளின் உதடுகள் அவனின் உதடுகளுக்கு மிக அருகில். “லவி.. முடியலடி..” என்றவன் அவள் சட்டையை பிடிக்க, சம்மதமாக எடுத்து அவளின் உதடுகளை தன் உதடுகளால் பிடித்து கொண்டான்

பிடித்ததை விடவே முடியவில்லை என்பது போல இருவரும் திரும்ப திரும்ப பிடித்து கொண்டனர். ஈஷ்வர் அவளை இழுத்து மடியில் அமர்த்தி கொள்ள, பல்லவி முதலில் டாலருக்கு தான் முத்தம் வைத்தாள்

ரொம்ப நாள் ஆசை..” என்று வாய் திறந்து சொல்லி மீண்டும் முத்தம் வைக்க, ஈஷ்வருக்கு உள்ளுக்குள் என்னென்னமோ பொங்கியது

ஏய் பொண்டாட்டி..” என்று உரிமையோடு அழைக்க, பல்லவி அவன் கழுத்தில் முகம் புதைத்தாள். ஈஷ்வர் அவளை தனக்குள் இழுத்து கொள்பவன் போல இன்னும் இன்னும் கட்டிக்கொண்டவன், கைகள் அவளின் இடையினை அளந்தது

ஈஷ்வர்..” அவனின் தொடுகை இன்னும் நெருக்கமாக மாற, பல்லவி விலக முயன்றாள்

லவி..” அவள் முகம் பார்க்க, அவனின் ஏக்கம் நன்றாக தெரிந்தது

பல்லவிக்கு அவனை மறுக்கும் எண்ணம் இல்லை, இன்னும் சொல்ல போனால் ஆசை தான். கணவன் மீதான காதல் தான். ஆனால் வயது, படிப்பு, கனவு, நரசிம்மன்  பல தடைகள் வரிசை கட்டி நிற்க, மறுக்க முயன்றாள்.  

இருவரின் நெருக்கமும், உணர்ச்சிகளும் இது எங்கு கொண்டு சென்று விடும் என்று தெரிய தயங்கினாள். அச்சம்  கொண்டாள்

இதுவே போதும் ஈஷ்வர்..”

எனக்கு போதலடி.. உன்கிட்ட விடு என்னை..” அனுமதியை அனுமதி இல்லாமல் கேட்டவன் அவளின் உதடுகளை திரும்ப பிடித்து கொண்டான்

பல்லவியின் மேலோட்டமான மறுப்புகள் அவளின் ஆழ்மனது காதலை வென்றுவிட, திகம்பரனின் பல வருட காதல் திகம்பரியை இன்னும் இன்னும் காதல் சுழலுக்குள் இழுத்து சென்றது.