என்னதான்இரவுநேரம்என்றும்பாராமல்வீட்டைவிட்டுஅனுப்பியமூர்த்திமேலஅளவுகடந்தகோவம், வேதனைஇருந்தாலும்மகளாகஅவர்களைதினம்தினம்தேடவேசெய்தாள். அதிலும்ரத்னா, பரணி நினைவு அதிகம்.
“அன்னிக்கு அம்மா என்னால திட்டு வாங்கி அழுதுட்டே இருந்தாங்க, நான் எங்க இருக்கேன் நினைச்சு கஷ்டப்படுவாங்க, அவங்களுக்காவது பேசலாமா..? அப்படியே அண்ணாகிட்டயும் பேச முடிஞ்சா பேசணும்..” மனதில் ஆசை இருக்க, தயக்கம் அவளை கட்டி போட்டது.
“ஒருவேளை என்மேல இன்னும் கோவம் இருந்தா..?”
“எப்படி இல்லாம இருக்கும் பல்லவி, நீ செஞ்சதும் தப்பு தானே, அவங்க கோபப்பட்டா கேட்டுக்கோ, திட்டுனா வாங்கிக்கோ, கோவப்பட்டா கூட ஓகே, பேசாம வச்சுட்டா..” தனக்குள்ளே மருகி தவித்தவள், இன்று பேசிவிட வேண்டும் என்ற முடிவுடன் மனதை தைரியப்படுத்தி வீட்டு லேண்ட் லைன் நம்பரை அழைக்க அவுட் கோயிங் கால் இல்லை என்றது.