“இன்னுமா உன் அண்ணன் கல்யாணம் முடியல..? எப்போ தான் சென்டர் வருவ..? நீ லீவ் எடுத்து ஒரு மாசமே ஆக போகுது லவி..” ஈஷ்வர் போனில் ஏக்கத்துடன் கேட்டான்.
“நாளையில் இருந்து வந்துடுவேன் ஈஷ்வர்.. மறுவீடு, விருந்து, ரிசப்ஷன் எல்லாம் முடிய தான் இவ்வளவு நாள்..” பல்லவி சமாதானமாக சொன்னாள்.
“ம்ப்ச்.. உன் வீட்ல அதை எல்லாம் பார்த்துக்க வேண்டியது தானே..? நீ எதுக்கு..?” அவன் பால்கனியில் நின்று பேசினான்.
“ஹான்.. என் அண்ணனுக்கு நான் ஒரே ஒரு தங்கச்சியாக்கும், அவனோட எல்லா பங்க்ஷன்லையும் நான் இருக்க வேண்டாமா..?” தங்கையாக பேசினாள் அவள்.
“க்கும்.. அண்ணனுக்கு தங்கச்சியா இருந்தது எல்லாம் போதும், இனி இந்த ஈஷ்வருக்கு மட்டும் லவியா இருக்க பாருடி என் தங்க கட்டி..” கொஞ்சவே செய்ய, பல்லவி முகம் முழுக்க வெட்கை புன்னகை தான்.
“என்னடி பதிலை காணோம்..?” அவளை உணர்ந்து காதலாக சீண்டினான் திகம்பரன்.
“என்ன பதில் வேணும் உங்களுக்கு..?” அவள் சிணுங்க, இவனுக்கு குளிர்ந்து.
“வேறென்ன ஐ லவ் யூ மாமா தான்..” இதுவரைக்கும் வாய் திறந்து காதலை சொல்லாத அவனின் குறையை நீக்க சொல்லி சிந்து பாடினான்.
“அதெல்லாம் நான் சொல்ல மாட்டேன்..” பல்லவி உடனே மறுத்தாள்.
“ஏன் சொன்னா என்ன..?”
“எனக்கு ஒரு மாதிரி இருக்கும்..”
“எப்படி இருக்கும்..? நான் தானே..?”
“நீங்க தானேன்னா..? உங்களை தவிர யார்கிட்ட சொல்ல போறேன், உங்ககிட்ட சொல்லத்தான் முடியல..”
“அதெப்படி சொல்லாம இருந்துடுவ, உன்னை மூச்சுக்கு முன்னூறு முறை ஐ லவ் யூ மாமான்னு சொல்ல வைக்கிறேன் இரு..” காதல் சபதம் மேற்கொண்டான்.
“அது அப்போ பார்த்துக்கலாம், இப்போ தூங்க போங்க, மணி பத்து ஆகிடுச்சு, நாளைக்கு காலேஜ் இருக்கு இல்லை..” பல்லவி சொல்ல, இங்கு ஈஷ்வருக்கோ கடுப்பு தான்.
“அதென்ன யார் பார்த்தாலும் காலேஜ் போ, படி இதையே தான் சொல்றீங்க..?” எரிச்சலை மறைக்காமல் கேட்டான்.
“ஏன் சொன்னா என்ன தப்பு..? படிக்க சொல்றதுல என்ன இருக்கு..? நம்ம வேலை இப்போ படிக்கிறது தானே..?”
“அப்போ நாம லவ் பண்ண கூட நேரம் எடுத்துக்க கூடாதா..?”
“இது அநியாயங்க, இப்போ எல்லாம் நாம நிறைய நேரம் ஸ்பென்ட் பண்றோம்..”
“எது நாப்பது பேர் இருக்கிற இடத்துல உட்கார்ந்து அரை மணி நேரம் பேசுறதா..?”
“போன்ல பேசுறது கூட பத்தலையா..”
“கடுப்பை கிளப்பாதடி.. பத்து நிமிஷம் பேசினாலே போதும்ன்னு வச்சிடுற..” அவன் கோவம் புரிய, பல்லவி மௌனம் கொண்டாள்.
அவளும் என்ன தான் செய்வாள் அவளால் முடிந்தது இது மட்டும் தான், வீட்டின் கண்காணிப்பில் இருந்து மீற முடியவில்லை. ஏற்கனவே காதல் என்ற இடத்தில் பெற்றவர்களை ஏமாற்றியாச்சு, இதில் இதற்கு எல்லாம் வாய்ப்பே இல்லை.
“எனக்கு தெரியும் லவி நீ நினைச்சா என்கூட நிறைய நேரம் இருக்கலாம், பேசலாம், ஆனா நீயேதான் மறுக்கிற, அதான் கோவமா வருது..” ஈஷ்வர் புரிந்து கொண்டதை சொல்லிவிட்டான்.
“ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க, என்மேல நம்பிக்கை வச்சு தான் நான் கேட்கிறதுக்கு எல்லாம் வீட்ல ஓகே சொல்றாங்க, இப்போ அந்த நம்பிக்கையை நான் உடைச்சிட்டேன், இதுல இப்படி எல்லாம் உங்களோட வெளியே வரது, போன் பேசுறது.. எனக்கு ரொம்ப கில்ட்டை கொடுக்குது..”
“ஓஹோ அப்போ உனக்கு என்னை காதலிக்கிறது குற்ற உணர்ச்சியை தான் கொடுக்குது இல்லை..”
“ ஈஷ்வர் அகைன் ஆரம்பிக்காதீங்க, இது பத்தி நாம ஏற்கனவே நிறைய பேசியாச்சு, சண்டை போட்டாச்சு..”
“அது தான் நானும் கேட்கிறேன் எப்போ பார்த்தாலும் அப்பா, அம்மா, அண்ணா நம்பிக்கை இதையே பேசிட்டிருந்தா என் காதல்.. அதுக்கென்ன இடம் இருக்கு..?”
“நான் வைக்கிறேன்..”
“வைச்ச நேர்லே வந்துடுவேன்..”
“இது தான் ஈஷ்வர் எனக்கு பயமா இருக்கு, ஒரு நேரம் என்னை புரிஞ்சுகிறீங்க, ஒரு நேரம் இப்படி பேசுறீங்க..?”
“எல்லா நேரமும் என்னாலயும் பொறுமையா இருக்க முடியாது லவி, எனக்கும் ஆசைகள் இருக்கு, நீன்னு வரும் போது நான் நானாவே இருக்க மாட்டேங்கற, நீ என்னை பைத்தியமா சுத்த விட்டு அப்பா, அம்மான்னு பேசிட்டு இருக்க, காதல் ஒன்னும் அவ்வளவு பெரிய தப்பு இல்லை..” ஈஷ்வர் சொல்ல,
“பெத்தவங்களை மதிக்கிறதும் அவ்வளவு பெரிய குத்தம் இல்லை..” பல்லவி பொறுமையாக சொன்னாள்.
“அப்போ அவங்களுக்காக என்னை தூக்கி போட சொன்னாலும் போட்டுடுவ இல்லை..” வார்த்தைகள் விட, பல்லவி அப்படியே கட் செய்துவிட்டாள். அங்கு ஈஷ்வர் கொதித்து போனான்.
அடுத்து ஒருமுறை முயன்றவன், என்ன நினைத்தானோ படுத்துவிட்டான். தூக்கம் விட்டு விட்டு இருக்க, பல்லவி தான் முழுதும். கனவில், எண்ணங்களில், ஒவ்வொரு செல்லில் முழுதும் அவனை ஆக்ரமித்து இருந்தாள்.
முழிப்பும், தூக்கமுமாக இரவை கடத்தியவன், மறுநாள் காலேஜ் சென்று சென்டர் சென்றான். பல்லவி முன்னமே வந்திருக்க, நேரே அவளின் பக்கத்தில் சென்று அமர்ந்தான். அவள் இவனை திரும்பியும் பார்க்கவில்லை.
திகம்பரியின் கோவம் அரிது. ஆனால் வந்துவிட்டால் திகம்பரனை விட மேல். கிளாஸ் ஆரம்பிக்க, ஈஷ்வருக்கு முடியவில்லை. அவளின் நோட் இழுத்து ‘சாரி’ என்று எழுத, அவளோ அதை ஒரு கோடால் அடித்துவிட்டு, அடுத்த பக்கத்திற்கே போனாள்.
“உனக்கும் வாய் அதிகம் தாண்டா.. “ தன்னை தானே குட்டி கொண்டவன், அவளை மலையிறக்க படாத பாடுபட்டான். அவள் இவன் முகம் பார்ப்பதற்கே ஒரு வாரம் தேவைப்பட்டது. பல முறைகளில் சாரி சொல்லி, கெஞ்சி, மிஞ்சி, கோவம் கொண்டு அவளை அவனிடம் பேச வைத்தான்.
இப்படியே மோதலும், காதலுமாக நாட்கள் சென்றது. அப்போது தான் அந்த நாள் வந்தது.
“ம்மா.. வண்டி இன்னும் வரலையா..? நான் எப்படி கிளாஸ் போக..?” பல்லவி நேரம் பார்த்து கேட்டு கொண்டிருக்க,
ரூமில் இருந்து வெளியே வந்த பரணி “என்ன ஆச்சு பாப்பா..?” என்று கேட்டான்.
“சர்வீஸுக்கு போன ஸ்கூட்டி இன்னும் வரலைண்ணா..” என,
“ஏன் ஈவினிங் கொடுத்துறேன்னு சொன்னாங்களே..”
“எஞ்சின் ஏதோ பிரச்சனையாம் பார்த்துட்டு நாளைக்கு தரேன் சொல்லிட்டாங்க..”
“நல்லது தானே பல்லவி, மெதுவா பார்க்கட்டும், இப்போ என்ன உனக்கு கிளாஸ் தானே, நான் கூட்டிட்டு போறேன்..” சரியாக வெளியே வந்து நின்றாள்.
“வேண்டாம்ண்ணா.. உங்களுக்கு பிளைட்க்கு நேரம் ஆகிடும்.. நான் ஆட்டோ, இல்லை பஸ்ல போயிக்கிறேன்..” அண்ணியின் பார்வையில் மனம் வருத்தம் கொண்டாலும் மறைத்து சிரித்த முகமாக சொன்னாள் பல்லவி.
இருவரும் சிங்கப்பூர் செல்ல தான் கிளம்பி இருந்தனர். மகிளாவின் அண்ணன் அங்கு இருக்க, மகிளாவின் பெற்றவர்களும் மகளின் திருமணம் முடித்து மகனுடன் தங்கிவிட்டனர். அவர்கள் அங்கு கூப்பிட்டுருக்க பரணி மனைவியுடன் அங்கு செல்ல கிளம்பியிருந்தான்.
“இது என்ன பாப்பா..? பிளைட்க்கு இன்னும் நேரம் இருக்கு, நீ கிளம்பு..” பரணி சொல்ல, பல்லவியிடம் முழு மறுப்பு.
மகிளா குணம் பற்றி தெரிந்ததால் இப்போதெல்லாம் முன் போல பரணியிடம் எதையும் உரிமையுடன் கேட்பதில்லை. என் புருஷன், அவர் பணம், அவர் வேலை, அவர் நேரம்.. என்று பிரித்து பிரித்து பேசுபவளிடம் பல்லவி தள்ளியே இருந்து கொண்டாள். இதோ இப்போதும் பரணி கேட்டு கொண்டிருக்கும் போதே ரூமில் இருந்து வெளியே வந்து பார்ப்பவளை என்ன சொல்வது..?
“பல்லவி சொல்றது தான் சரி பரணி நீங்க கிளம்புங்க, அவ ஆட்டோல போகட்டும், இல்லை இன்னிக்கு லீவ் கூட எடுத்துக்கட்டும்..” சின்ன பெண் பல்லவிக்கே புரியும் போது ரத்னாவிற்கு புரியாமல் இருக்குமா மகிளாவின் குணம்.
“ம்மா.. என்ன நீங்க..? பல்லவி நீ கிளம்பு, நான் அவளை டிராப் பண்ணிட்டு வந்தே ஏர்போர்ட் போயிக்கிறேன்..” பரணி பைக் எடுக்க வெளியே செல்ல,
“வரேன் அண்ணி.. ஹாப்பி ஜர்னி..” பல்லவி மகிளாவிடம் சொல்ல, அவளோ ம்ம்.. என்று உள்ளே சென்றுவிட்டாள்.
பல்லவி உள்ளுக்குள் வாடினாலும் அம்மாவிடம் சொல்லி கொண்டு அண்ணனுடன் சென்டர் வந்தாள். “ரிட்டர்ன் ஆட்டோ புக் பண்ணி வந்துடு பல்லவி, பத்திரம், நீ வரதுக்குள்ள நான் கிளம்பிடுவேன், ஏதா இருந்தாலும் எனக்கு போன் பண்ணு சரியா..? பத்திரம்..” தங்கையிடம் விடைபெற, ஏனோ பல்லவிக்கு தொண்டை அடைத்தது.
“சரிண்ணா..” என்று தலை ஆட்ட, அவனும் என்ன நினைத்தானோ அவளின் தலை தடவி விட்டவன்,
“உன் அக்கவுண்டுக்கு பணம் அனுப்பி விடுறேன், பத்திரம், பை..” என்று கிளம்பிவிட, பல்லவி சென்டர் உள்ளே வந்தாள்.
“என்ன ஒரே பாச போராட்டமா இருக்கு..” ஈஷ்வர் தூரத்தில் இருந்து கவனித்திருந்தவன் கேட்க,
“ஒன்னுமில்லை..” என்று தலை மட்டும் ஆட்டியவள் கிளாஸ் கவனிக்க ஆரம்பித்துவிட்டாள்.
“ஸ்கூட்டி இல்லை, ஆட்டோல தான் போகணும்.. நான் கிளம்பவா..?” என்றாள்.
“நான் டிராப் பண்றேன், இன்னிக்கு ஒரு நாள் மட்டும்..” ஈஷ்வர் கேட்க, பல்லவி அன்று அதிசயமாக ஏற்று கொண்டாள். அதிலே அவளின் அப்செட் புரிந்துகொண்டவன், காபி வாங்கி கொடுத்தான். குடித்து கொண்டே, பொதுவாக ஈஷ்வர் பேச, பல்லவி கொஞ்சம் நார்மல்க்கு வந்தாள்.
“இந்த இயர் எக்ஸாம் அப்ளை பண்றீங்களா..?” upsc எக்ஸாம் பற்றி கேட்டாள்.