“லவிப்ளீஸ்.. நீஎனக்குபேசவேண்டாம், மெசேஜ்பண்ணவேண்டாம், எதுவும்வேண்டாம், ஜஸ்ட்ஓகேவாஇருக்கியான்னுமட்டும்சொல்லுபோதும்..” வாய்ஸ்மெசேஜ்அனுப்பியவன், பைக்கிலே கை கட்டி அமர்ந்தான்.
சில நிமிடங்கள் சென்று அவனை கிராஸ் செய்த கார் பல்லவி வீடு முன் நின்றது. ஒரு இளைஞன் இறங்கி முன் பக்க கதவை திறந்துவிட கோமதி இறங்கினார். பின் பக்க கதவை திறந்து கொண்டு ரத்னா இறங்க, மறுபக்கம் பல்லவி இறங்கினாள்.
அந்த இளைஞன் சென்று அவளிடம் ஏதோ சொல்ல சிரித்தவள், அவனுடனே நடந்தாள். பார்த்த ஈஷ்வர் எப்படி உணர்ந்தான் என்று அவனுக்கே தெரியவில்லை.
புது மொட்டு மல்லி வைத்திருந்தவளின் பளிச் சிரித்த முகம், அந்த நொடி வரை பார்த்தே ஆக வேண்டும் என்று தவித்த முகம்.. பார்க்காமல் முகம் திருப்பினான்.
அவளின் கையில் இருந்த மொபைல் பார்க்க, பிடுங்கி உடைக்கும் ஆத்திரம். ரத்னா முன் பக்க கேட்டை திறந்து கொண்டிருக்க, அந்த இளைஞனுடன் பேசி கொண்டிருந்த பல்லவி ஏதோ தோன்ற டக்கென திரும்பி பார்த்தாள்.
சில அடி இடைவெளி உள்ள மரத்துக்கு அடியில் ஈஷ்வர் பைக்கில் அமர்ந்திருந்தான். ஹெல்மெட் கழட்டி வைத்திருக்க, அவன் முகம் நன்றாகவே தெரிந்தது. பார்த்த பல்லவி அதிர்ந்து தான் போனாள்.
“ஆங்..” என்றவள், அவன்கேட்டிற்குள்கைகாட்டஈஷ்வரைபார்த்துக்கொண்டே வீட்டிற்குள் சென்றவள், “நான் ரூம் போறேன்..” என்றுவிட்டு மெல்ல வீட்டின் மொட்டை மாடிக்கு தான் ஓடினாள்.
ஈஷ்வர் இன்னும் அங்கு தான் இருந்தான். கை கட்டி கண் மூடி பைக்கின் மேல் அமர்ந்திருந்தான். பல்லவி வேகமாக மொபைல் ஆன் செய்தவள், நெட்டையும் ஆன் செய்ய, மெசேஜ் வந்து குவிந்தது.
கடைசியாக அனுப்பிய வாய்ஸ் மெசேஜ் ஆன் செய்து காதுக்கருகில் வைத்து கேட்டாள். அவனின் குரல்.. அந்த தவிப்பு.. அப்படியே உணர, மிகவும் குற்ற உணர்ச்சி திகம்பரிக்கு.
அவனுக்கு காலே செய்துவிட்டாள். கண் திறந்த பார்த்த ஈஷ்வர் மொபைல் எடுத்து பார்க்க, இவள். நிமிர்ந்து அவள் வீட்டை பார்த்தவன், மாடியில் நின்ற பல்லவியை கண்டு கொண்டான்.
அவள் அங்கிருந்தே ப்ளீஸ்.. என்று மொபைல் காண்பிக்க, இவன் அவளையே தான் பார்த்தான். அவனின் பார்வையில் பல்லவியின் கண்கள் கலங்கி போக, கெஞ்சலாக பார்த்தாள்.
ஈஷ்வரோ இமை கூட சிமிட்டாமல் அவளை பார்த்தவன் பார்வை கேட்டது என்னமோ..? என்னை என்ன செய்ய பார்க்கிற..? என்ன தாண்டி வேணும் உனக்கு..? என்பதே.