காரில்இருந்துஇறங்கியவளும்ஓரக்கண்ணால்இவனைபார்த்தபடிமாலிற்குள்நுழைந்தாள். அவள்நண்பர்களுடன்அவள்சேருவதைபார்த்தபிறகேஅந்தகார்அங்கிருந்துகிளம்ப, இவன் சில நிமிடங்கள் சென்று உள்ளே சென்றான்.
பல்லவி கேங் முதலில் ப்ளோர் ப்ளோராக சுற்றி வர, பெண்கள் உடை பார்க்க ஷாப்பிற்குள் சென்றனர். “எல்லாம் துணி எடுக்கிறேன்னு படம் பார்க்க லேட் பண்ணிடாதீங்க..” ஆண் நண்பர்கள் சொல்லி சென்றனர்.
“இந்த டாப் நல்லா இருக்கு இல்லை..” ரேகா சொன்னவள் முன் பார்த்து, “ஏய்.. பல்லவி ஈஷ்வர் அண்ணா வராங்க..” என்றாள் சற்று சத்தமாக.
“ஷ்ஷ்.. சத்தமா சொல்லாத..” என்ற பல்லவியோ பின்னால் திரும்பவே இல்லை. ஈஷ்வர் சாவகாசமாக பல்லவி முன் வந்து நிற்க, ரேகா தான் இருவரையும் கண் விரித்து பார்த்து கொண்டிருந்தாள்.
“எப்படி இருக்க ரேகா..? ஒரு வழியா ஸ்கூல் லைப் முடிஞ்சுடுச்சு போல..?” நேற்று தான் ப்ளஸ் டூ பைனல் எக்ஸாம் முடித்ததை கேட்டான் ஈஷ்வர்.
“ஹா.. ஆமா.. ஆமாண்ணா.. முடிஞ்சிடுச்சுண்ணா.. நேத்து தான் முடிஞ்சது, அதான் லாஸ்ட்டா ஒரு கெட் டூ கெதர் மாதிரி ப்ரண்ட்ஸ் எல்லோரும் படத்துக்கு வந்தோம்..” என்றாள்.
அவள் வரும் வரை அங்கு காத்திருக்க ஈஷ்வருக்கு ஆசை தான். ஆனால் முடியாதே. லன்ச்நேரம்வந்துகொள்ளலாம்என்று அங்கிருந்துகிளம்பமனமில்லாமல்பைக்எடுத்துகாலேஜ்கிளம்பினான்.