ரிஷி பைக்கை ஸ்ரீநிதி முன் நிறுத்த, “நிது இரு” அவள் பைக்கில் ஏற உதவி, ஜோ இருவருக்கும் நடுவே அமர்ந்தான்.
சில நொடிகள் அமைதியாக செல்ல, ஜோ..சாஞ்சுக்கவா? ஸ்ரீநிதி கொஞ்சும் குரலில் அதே சமயம் சோர்வுடனும் கேட்டாள்.
ஜோ கையை விரிக்க, அவனை கட்டிக் கொண்டு அவன் முதுகில் முகத்தை புதைத்தாள்.
அக்கா, நாம நாளைக்கு கோவிலுக்கு போகணும். நினைவிருக்குல்ல?
ம்ம்!!
அம்மா சொன்ன பொருட்கள் எதுவுமே வாங்கலை.
வாங்கணும்..
அம்மாகிட்ட சொல்லி நாளைக்கு நான் உன்னோட இருக்க மட்டும் ஏற்பாடு செய்யேன்? ஜோ கேட்க, முகத்தை நகர்த்தி..எதுக்கு? நீ உன்னோட வொர்க்கை பார்க்கலாமே!
பார்க்கலாம்..ஆனால்..
என்னை நினைச்சு பயப்படுறியா?
ஜோ அமைதியாக இருந்தான்.
எதிலும் மூவ் ஆன் ஆகுறது கஷ்டம். ஆனால் நம்மை நேசிப்பவங்களுக்காக முயற்சிக்கலாம். நான் நாளை மட்டும் ஓய்வெடுத்துட்டு அவள் நிறுத்த, முகத்தை திருப்பி அவளை பார்த்து…அப்புறம்..
முடிக்காத விசயத்தை முடிக்கணும்டா..
முடிக்காததா? அவன் கேட்க, ம்ம்! கடைசி செம் இருக்கு. அப்புறம் எங்க கோர்ஸ் அவள் தொண்டை அடைக்க, அக்கா அவளது கையை அவன் ஆறுதலாக இழுத்து அவன் இடுப்பில் கட்டிக் கொண்டான்.
மீண்டும் அவன் தோளில் சாய்ந்து, நான் தனியே செய்ய வேண்டியதும் நாங்க பாதியிலே நிறுத்திய டிசைனிங்கையும் முடிக்கணும்.
உடனே வேண்டாமே! நீ இந்த வாரம் மட்டுமாவது ஓய்வெடுக்கலாமே!
“அதை விட இதுவரை எதையும் அவனில்லாமல் செய்ததில்லை. மனசு ஏதோ பண்ணுது” ஸ்ரீநிதி கண்ணீர் ஜோ தோளில் விழ, “ஒரு நிமிசம் பைக்கை நிறுத்துங்க” ரிஷியிடம் கூற, கேட்டுக் கொண்டே வந்தவன் பைக்கை நிறுத்தினான்.
வாட்டர் இருக்கா? ரிஷியை ஜோ பார்க்க, அவனும் பைக்கிலிருந்து எடுத்து கொடுத்தான்.
ஜோ இறங்கி அவளை பைக்கில் நேராக அவனை பார்ப்பதை போல் அமர வைத்து, “முதல்ல இதை குடி” தண்ணீரை கொடுக்க, மடமடவென குடித்தாள்.
நீ எதுக்கு தனியா பண்ணப் போற? புகழுடன் சேர்ந்து செய்ய வேண்டியதை வேறொருவருடன் செய்..
என்ன?
நம்ம கார்மென்ட்ஸ்ல்ல ஒரு பொண்ணு மீதமிருக்கும் துணியை வைத்து மாடர்ன் டைப்பிலே அழகா செய்தா. எல்லாருக்கும் அது பிடித்திருந்தது. அந்த பொண்ணை உனக்கு உதவிக்கு அழைச்சுக்கோ..
முடியாது. புகழ் இடத்தை யாராலும் சரி செய்ய முடியாதுடா.
அதுக்காக அவனா வர முடியும்? அக்கா..ப்ளீஸ் புரிஞ்சுக்கோ..
“வேண்டாம். நானே பார்த்துக்கிறேன்” நிது கூற, உன்னால அவ்வளவு பெரிய டிசனிங்க பண்ண முடியும். நீங்க கோர்ஸ் படிச்ச இடத்துல சொல்லீட்டு முதல்ல இருந்து ஆரம்பிக்கணும். அவங்க குடுக்கிற நேரத்துல்ல உன்னோட உடலும் மனமும் இருக்கும் கண்டிசன்ல்ல பண்ண முடியலைன்னா. பெயில் பண்ணிடுவாங்க..
எல்லாரும் எல்லாத்துலையும் வெற்றி வெற முடியாது ஜோ..
இல்லக்கா, நீ எதிலும் தோற்கக் கூடாது.
ஏற்கனவே நான் தோத்துட்டேன்டா. புகழ் முன்னாடி எல்லா விசயத்திலும் தோற்று விட்டேன்.
இப்ப என்ன பண்ணனும்?
“முதல்ல வீட்டுக்கு போகலாமா? இதை அப்புறம் பேசி முடிவெடுக்கலாம். எனக்கு ரொம்ப சோர்வா இருக்கு” ஸ்ரீநிதி கூற, போகலாம். வீட்டுக்கு போனவுடன் தூங்கணும்.
சரி ஸ்ரீநிதி ரிஷியை பார்க்க, அவன் பைக்கில் ஒரு பக்கமாக முகத்தை சாய்த்து இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தான்.
“ஹலோ, என்ன பாக்குற? பைக்கை எடு” ஜோ ஏற, அவர்களின் பைக் நேராக நிது வீட்டின் முன் வந்தது.
எல்லாரும் அங்கே இருக்க, ரிஷி பைக்கிலிருந்து இருவரும் இறங்கினார்கள்.
பனிமலர் அருகே நின்று கொண்டிருந்த சிறுமி ஓடி வந்து, ஜோ..உனக்கு லவ் லெட்டர் கொடுக்குறேன்னு ஒரு பொண்ணு கொடுத்ததுன்னு பக்கத்து வீட்டு சதீஸ் வந்து என்னிடம் கொடுக்கிறான். அம்மா என்னை பிச்சி எடுத்துட்டா..
“நீ லவ் பண்ண நான் தான் கிடச்சேனா? எத்தனை முறை சொல்லி இருக்கேன்? யாரோட லவ்வையும் ஏத்துக்காத. உனக்கு நான் சோறு போடுறேன்னு சொன்னா கேட்க மாட்டேங்கிற” திட்டியது பதினொரு வயது சிறுமி சஞ்சனா.
லவ் லெட்டரா? அனன்யா வண்டியிலிருந்து இறங்கி தன்வி அதை பிடுங்கி பார்த்தாள்.
“தனு அதை எதுக்கு நீ வாங்குற?” ஜெய் சத்தமிட, ஆமா உனக்கெதுக்குடி? நளினியும் சத்தம் போட்டார்.
இருங்கம்மா. இதெல்லாம் நல்லா இருக்கும் அவள் பிரிக்க, “தனு அதை கொடுத்துட்டு உன்னோட வேலைய பாரு” ஜோ அவளை நெருங்க அதை பிரித்து பார்த்து சிரித்தாள்.
கனவுக்கண்ணனா..அய்யோ..
இவனா கனவுக்கண்ணன்..
இது லவ் லெட்டர் இல்லைடா..
இது கவிதைன்னு கண்ணா.. பண்ணா.. புண்ணான்னு எதையோ எழுதி கொடுத்திருக்கா..புண்ணா இருக்காது பொன்னான்னு நினைக்கிறேன் தனு ஜோவை கேலி செய்ய, அவள் கையிலிருந்து பிடுங்கி “போடி” என்றான்.
டி சொல்லாதடா..
“நீ டா சொல்றேல்ல நான் டி தான் சொல்வேன் டி” ஜோ கூற,
“எவ்வளவு தைரியம் இருந்தால் என்னோட பொண்ணை டி சொல்லுவ?” நளினி அவனருகே வர, “அக்கா நீ வா. இவளுக்கும் இவளோட அம்மாவுக்கும் வேற வேலையே இல்லை” சந்திரமுகனை பார்த்து “உதவிக்கு தேங்க்யூ சார்” நகர்ந்தான் ஜோ.
“எல்லாரும் கிளம்புங்க. கூட்டம் போட்டால் என்னோட பட்டுக்குட்டி சஞ்சுவுக்கு கோபம் வந்துரும்” என்றான்.
பட்டுக்குட்டியா? தனு அவனை பார்க்க, “வாடி” அனன்யா அவளை இழுத்து அமர்த்தி வண்டியை எடுத்தாள்.
ஜோ, “எனக்கு பிரியாணி இல்லையாடா?” சஞ்சனா கேட்க, அடியேய் இந்த நேரத்துல்ல என்ன பிரியாணி? அவள் அம்மா சத்தம் உள்ளிருந்து கேட்க சஞ்சனா ஓடி விட்டாள்.
எல்லாரும் புன்னகையுடன் நகர, “பத்திரமா என் பிள்ளைங்கள அழைச்சிட்டு வந்ததுக்கு நன்றி” பனிமலர் ரிஷி பைக் அருகே வந்து அவன் முகத்தை கூட பாராமல் யாரிடமோ சொல்வது போல சொல்லி வீட்டிற்குள் சென்றார். ஸ்ரீநிதி அவனை பார்த்துக் கொண்டே வீட்டினுள் நுழைந்தாள். மற்றவர்கள் அவரவர் வீட்டிற்கு சென்றனர். ரிஷியும் கிளம்பினான்.
மங்கலகரமான விடியலில் எழுந்து தன் சமையல் வேலையை கவனித்தார் பனிமலர். ஸ்ரீநிதி எழுந்து தயாராகி வெளியே வந்தாள்.
சமையல் வேலைகள் முடிந்திருந்தது. பனிமலர் அவர் அறையில் தயாராகிக் கொண்டிருந்தார். ஜோ அவன் அறையில் தயாரானான். இருவரும் தயாராகி வரவும் சாப்பிட அமர்ந்தனர்.
பனிமலர் சினத்தில் ஸ்ரீநிதியிடம் பேசவேயில்லை. அவளும் ஏதோ தானோ என உணவுண்டு கொண்டிருந்தாள்.
அவனுக்கென்ன? அவன் தான் இல்லையே! சாப்பிடாமல் எழுந்து நகர்ந்தார்.
“அம்மா” ஸ்ரீநிதி அழைக்க, விடுக்கா..நீ சொல்லு?
அவனோட அறை அப்படியே தான இருக்கும்?
ம்ம்! எதுக்கு கேக்குற?
சும்மா தான் ஸ்ரீநிதியும் எழுந்தாள்.
பூஜைக்கு வேண்டிய எல்லாமே தயாரா தான இருக்கு?
ம்ம்! இருக்கும்மா என்ற ஜோ ஸ்ரீநிதியை மேலிருந்து கீழாக பார்த்து விட்டு அவனறைக்கு சென்று, “இதை மாத்திட்டு வா” என்றான்.
என்னதுடா இது?
என்னோட அக்காவிற்கு என் சம்பாதியத்தில் வாங்கியது என்றான்.
ஸ்ரீநிதி இதழ்கள் விரிய அவன் கையை பிடித்து, தேங்க்ஸ்டா..
“சீக்கிரம் மாத்திட்டு வா. நேரமாகுது” அவள் அம்மா அவளிடம் கூற, “அம்மா சாரி” அவரை அணைத்துக் கொண்டாள்.
“நேரமாகுது. ஆபிஸீக்கு போகணும்” என்றான் ஜோ.
“இப்ப வந்துடுறேன்” வேகமாக அறைக்கு சென்றாள்.
கதிர்வேலனை தரிசித்து விட்டு கருமாரியம்மனை தரிசிக்க வந்தனர் பனிமலர், ஜோ, ஸ்ரீநிதி.
அம்மனுக்கு புடவை, மாலை, பொட்டு, வளையல், தேங்காய், பழம் கொடுத்து கண்ணை மூடி தரிசித்துக் கொண்டிருந்தனர்.
பூசாரி அர்ச்சனை செய்து கொண்டே பூஜையை முடித்து, ஸ்ரீநிதி கையில் மாலை கொடுத்து, “போட்டுக்கோம்மா” பிரசாதத்தை கொடுக்க அவளும் மற்றவர்களும் வாங்கினார்கள்.
மாலையை அணிந்து கொண்டு குங்குமத்தை அவள் நெற்றியில் வைக்க, நிது என்ற சத்தத்தில் பொட்டு வைத்துக் கொண்டு சத்தம் வந்த திசையை நோக்கினாள் ஸ்ரீநிதி.
பிரகாரத்தை சுற்றி வந்து கொண்டிருந்தனர் மான்விழி, பாட்டி, நளினி, தன்வி, ரிஷி.
ஸ்ரீநிதி கழுத்தில் மாலை போடும் போதே பார்த்து விட்டாள் தன்வி. அவள் மனதில், “அதுக்குள்ள நிது யாரை கல்யாணம் பண்ணிக்க போறாங்க?” சிந்தனையுடன் இருந்தாள்.
சித்தம் கலைந்து நிதுவை அழைத்தாள். ஸ்ரீநிதி பார்த்தது ரிசாத்பவனை தான். அவனும் அவளை தான் பார்த்தான்.
சிவப்பும் நீலமும் கலந்த பட்டுப்புடவை. ஒப்பனையுடன் தலை நிறைய மல்லிகை சூடி, கழுத்தில் மாலையுடன் குங்குமம் வைத்துக் கொண்டிருந்தாள் அவன் பார்த்த போது…
ஆரஞ்சு நிற சர்ட்டும் நீலநிற கால்சாராயத்துடன் டக்கின் செய்து அவன் கேசம் காற்றில் ஆட, புருவங்கள் நெறிந்த வண்ணம்.. அவனை பார்த்தாள்.
“நில்லுடி. புடவையை உடுத்திட்டு ஓடாத. விழப் போற” நளினி கூற, காதிலே வாங்காமல் தன்வி துள்ளிக் குதித்து ஓடினாள். இரு குடும்பமும் சந்திக்கும் வேளை ஏற்றம் பார்க்காமல் சென்றதில் கீழே விழுந்தாள்.
ரிஷியும் அவன் குடும்பமும், மற்ற பக்கம் ஸ்ரீநிதி ஜோவும் ஓடி வந்தனர்.
ஸ்ரீநிதி அவளை தூக்கி விட, ஜோ அவள் தலையில் அடித்து, “உனக்கென்ன சின்னப் பொண்ணுன்னு நினைப்பா?” திட்டினான்.
பாவமாக இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த தன்வி, ஜோ திட்டவும் அழ ஆரம்பித்தாள்.
“திட்டாதடா” ஸ்ரீநிதி அவனை முறைத்து, “அடிபட்டிருக்கா தனு?” அவளை ஆராய்ந்து சிராப்புள்ள இடத்தில் ஊதிக் கொண்டிருந்தாள்.
சொல்லிக்கிட்டே இருக்கேன். நீ ஓடிக்கிட்ட இருக்க? நளினி தன்வியை இழுத்து அவர் பக்கம் திருப்பினார்.
“நள்ளூ பிறந்தநாள் அதுவுமா பிள்ளைய திட்டுற?” சௌபாக்கியம் நளினியை நகர்த்தி, “ஏடி இந்த புடவையை உடுத்துறதுக்குள்ள அப்படி உயிரை வாங்குன.. ஓடும் போது புடவையை துக்கிட்டு கூட ஓடத் தெரியல”
அத்த, “அவளுக்கு நீங்களே ஓட பிளான் போட்டு தருவீங்க போல?” நளினி சினமுடன் கேட்டார். ஜோ வாய்க்குள் சிரித்தான்.
அப்படியில்லை நள்ளூ..
“சும்மா இருங்க அத்த. இங்க வாடி” அவர் தன்வி கையை பிடித்து இழுத்தார்.
“நீயே என்னை தள்ளி விட்டுருவ போல. போம்மா” அவர் கையை தட்டி விட்டு, ஸ்ரீநிதியை பார்த்து நிது “சேம் பின்ஞ்ச்”. நம்ம இருவர் ஆடையும் ஒரே போல இருக்கு. எனக்கு ஸ்வீட் வேணும்..
பர்த்டே பேபியா நீ? உதட்டை மடித்து அவளை பார்த்து ஜோ சிரித்தான்.
எதுக்குடா சிரிக்கிற?
“உனக்கு புடவையே பிடிக்காது. நல்லா தான் இருக்கு. டெக்ஸ்டைல்ஸ் கட பொம்மை மாதிரி” தன்வியை ஜோ கேலி செய்தான்.
பொம்மையா? நிது நல்லா இல்லையா?
ஸ்ரீநிதி ஜோவை இடித்து, சும்மா இருடா. தனு இது எனக்கு ஜோ அவனது சம்பாதியத்தில் முதலவாதாய் எடுத்து கொடுத்திருக்கான்.
ஹப்பாடா..இப்ப தான் நிம்மதி நிது. உங்களை பார்க்க அப்படியே கல்யாணப்பொண்ணு மாதிரி இருந்தது. யாரையும் கல்யாணம் பண்ணிக்கப் போறீங்களோன்னு தான் ஓடி வந்தேன்.
கல்யாணமா? ஜோ ஸ்ரீநிதியை பார்த்து புன்னகைத்து விட்டு பனிமலரிடம், “அம்மா இந்த ஐடியா கூட நல்லா இருக்கே! மாப்பிள்ள பார்க்கலாம்ல்ல?” அவன் கேட்க, தன்வி வீட்டில் அனைவரும் அதிர்ந்தனர்.
அதை விட ஸ்ரீநிதி விழி விரித்து ஜோவை பார்த்தாள்.
எதுக்கு அப்படி பாக்குற?
ஏம்மா, “நம்ம கிஷோர் ஓ.கே தான?” ஜோஜித் ரிஷியை பார்த்து விட்டு தன் அக்காவை பார்த்தான்.
“என்னடா பண்ணுவ?” அவனிடம் எகிறிக் கொண்டு அவனிடம் வந்து புடவை தட்டி அவன் மீது விழுந்தாள்.
“தனு” நளினி சத்தமிட, “ஜோ” பனிமலர் குரலை உயர்த்தி,
“தேவையில்லாமல் என்ன பேச்சு? உதவிட்டா நம்ம வேலைய பார்க்கணும்” அனைவரையும் முறைத்து ஜோவிடமிருந்து தனுவை நகர்த்தி விட்டு…
“முன் போல பழகணும்ன்னு நினைக்காத” தனுவிடம் கடுமையாக கூறி விட்டு அவர் ஜோ, ஸ்ரீநிதி கையை பிடித்து செல்ல, தனு கண்ணீருடன்..
ஆன்ட்டி, “யாரோ ஒருவருக்கு பர்த்டேன்னா கூட வாழ்த்து கூறி ஆசிர்வாதம் செய்து கையில பணம் கொடுப்பீங்க. நான் பழைய தனுவா வந்திருந்தா செஞ்சிருப்பீங்க தான! ரிஷியோட தங்கைன்னு தான உங்களுக்கு என்னை பிடிக்காமல் போச்சு” அழுது கொண்டே கேட்டாள்.
பனிமலர் நிற்க ஸ்ரீநிதி அவள் அம்மா கையை விட்டு தனுவிடம் ஓடி வந்து அவளை அணைத்து, “பிறந்தநாள் அதுவுமா அழுற. அம்மா கோபத்துல்ல இருக்காங்க” அவளை விட்டு ஸ்ரீநிதி கையிலிருந்த குங்குமத்தை அவளுக்கு வைத்து விட்டு, “ஹாப்பி பர்த்டே. என்னால இப்பதைக்கு இதான் முடியும்”.
தனு அவளை பார்த்து விட்டு, “ஆமா. நிது மனசு யாருக்கும் வருமா? எல்லாரும் அவங்க பிடிவாதத்துல்ல தான இருப்பாங்க. அப்படி பார்த்தால் உங்க பொண்ணும்” தனு கூறும் போதே ஓடி வந்து அவள் வாயை பொத்திய ஜோ…
“வாய மூடிரு. இப்ப தான் அம்மாவை அக்கா சமாதானப்படுத்தி இருக்கா. ஏதாவது உளறி கெடுத்து வச்சிறாத” அவன் சொல்ல,
“அவ வாயிலிருந்து கையை எடுத்துட்டு கூட இதை சொல்லலாம்” நளினி அவனை முறைத்தார்.
சரி, நான் பேசக் கூடாதுன்னா பர்த்டே பேபிக்கு நீயும் ஒன்னு தரணும்?
என்ன? அவன் பின் நகர, சட்டென அவன் முன் புடவையை தூக்கிக் கொண்டே மண்டியிட்டு, “எனக்கு கால்ப்பந்து விளையாட சொல்லித் தாங்க கோச்” என்றாள்.
என்னோட ப்ரெண்டு. கோச்அவன் முன் மண்டியிட்டால் தான் என்ன?
“கோச்சா? நானா?” ஜோ அதிர்ந்து கேட்க, ஆமா ஜோ நீ அந்த பிரதீப்பால தான கால்ப்பந்து விளையாட்டை விட்ட?
யாருடி பிரதீப்? நளினி கேட்க, எழுந்து..ஆமா…இப்ப நம்ம இந்தியாவுக்காக கால்ப்பந்து விளையாடப் போறானே அந்த ப்ராடை தான் சொல்றேன்..
ஜோ வேகமாக நகர, அவன் பின்னே புடவையை தூக்கிக் கொண்டே ஓடி, “சொல்லுடா” என்றாள்.
தனு என்னடா சொல்றா? ஸ்ரீநிதி கேட்க, “அம்மா வேலைய பார்க்கப் போகணும். யாரிடமும் எதுக்கு வெட்டிப் பேச்சு பேசிட்டு நிக்கணும். போகலாம். நிது வா” அவன் அழைக்க,
தனு அவன் கையை பிடித்து யாரிடமும் சொல்லாமல் போனால் விசயம் தெரியாதுன்னு நினைச்சியா? பிக்ப்பா விசாரிக்க நினைச்சா ஒருத்தரோட ஆணிவேர்ல்ல இருந்து தான் விசாரிப்பார்..
“என்ன சொன்ன?” சினமுடன் ஜோ திரும்ப, நீ என்னோட நண்பன்னு விசாரித்தாரு சமாளித்தாள்.
இப்ப என்ன? சீற்றமுடன் கேட்டான்.
ஏம்மா, “மாலையை வாங்கிட்டு பிரகாரத்தை வலம் வரணும். இன்னும் என்ன செய்றீங்க?” பூசாரி ஸ்ரீநிதியிடம் கேட்க, தலையசைத்து ரிஷியை பார்த்து விட்டு அவள் நகர, ஜோ தனு கையை உதறி விட்டு நகர்ந்தான்.
போ. இன்று மாலை நீ படித்த பள்ளியின் கால்ப்பந்து மைதானத்தில் காத்திருப்பேன். எனக்கு கோச் நீ தான் கத்தினாள்.
திரும்பி அவளை பார்த்த ஜோ, “முடியாது. போடி” என்றான்.
“மறுபடியும் என் பிள்ளையை டி போடுறான் பாருங்க அத்த” குறைப்பட்டார் நளினி.
அம்மா, இரு வாரேன்.
ரிஷி தனுவின் கையை பிடித்தான்.
“விடுடா. உன்னால தான் ஆன்ட்டி என்னிடம் பேச மாட்டேங்கிறாங்க” அவனை முறைத்து விட்டு ஜோ பின்னே ஓடினாள்.
“அத்த ஸ்ரீநிதி அம்மாவை சம்மதிக்க வைக்க முடியாதோ?” மான்விழி அமர்ந்து தாடையில் கை வைத்து கேட்டார்.
“நடக்கவிருப்பத்தை யாராலும் மாத்த முடியாதும்மா” பாட்டி கூறியவாறு தன் பேரன் ரிஷியை பார்த்தார்.
“நேரமாகுது. இன்னும் இவள காணோம்” நளினி கூறிக் கொண்டிருந்தார்.
“நான் பார்த்துட்டு வாரேன்” ரிஷி எழுந்து சென்றான்.
பிரகாரத்தை அடிபிரதச்சனம் செய்து கொண்டிருந்த ஸ்ரீநிதி தோளில் ஆடவன் ஒருவனின் கை படவும் சீற்றமுடன் அவள் முகம் மாற, கையை ஓங்கியவாறு திரும்பியவள் ரிஷியை பார்க்கவும், முகம் லேசாக கையை இறக்கி தளர்த்தினாள்.
கால்களை அப்படியே வைத்திருந்தவளின் கால்கள் தடுமாற, கீழே விழப் போனவள் கையை பிடித்தான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“நிது” என்ற சத்தத்தில் பதறி நிமிர்ந்து ரிஷி கையை விட்டு ஆடையை சரி செய்தாள்.
“இப்ப தான ஆன்ட்டியை கரெக்ட் பண்ணேன். பாவி இவன் என் வாழ்க்கையில் விளையாடாமல் போக மாட்டான் போல” தன்வி முணங்கியவாறு பனிமலர் பின்னே புடவையை தூக்கிக் கொண்டு வந்தாள்.
ஸ்ரீநிதி கன்னத்தில் ஓங்கி அறைந்தார் பனிமலர். அவள் கன்னத்தில் கை வைத்து, “அம்மா” அழைத்தாள்.
தலையை தட்டியவாறு ஓடி வந்தான் ஜோ.
அம்மா அக்காவை எதுக்கு அடிச்சீங்க?
ரிஷி எதுவும் பேசாமல் நகர, தன்வி அவனிடம் வந்து… “நீ பாட்டுக்கு போற? உன்னோட வழிக்கு கண்டிப்பா நிது வந்திருக்க மாட்டாங்க. நீ மட்டும் எதுக்கு பிரச்சனையாவே வந்து நிக்கிற?” சினமுடன் கத்தினாள்.
அவள் வீட்டினர் வர, “தனு என்ன பேசுற? அவரு நீ நினைச்சு என்னிடம் பேச வந்தார்” ரிஷிக்காக ஸ்ரீநிதி அப்பொழுதும் பேச, அவள் அம்மா சோர்வுடன் அங்கிருந்து செல்ல, “அம்மா” ஸ்ரீநிதி கண்கலங்க அழைத்தாள். அவர் அவளை பார்க்காமல் சென்றார்.
“நிது நீ முடி. நான் உன்னுடன் இருக்கேன்” ஜோ ரிஷியை சீற்றமுடன் பார்த்தான்.
ஸ்ரீநிதியை பார்த்து, “சாரி” கூறி ரிஷி நகர்ந்தான்.
“நிது நாளைக்கு கிஷோர் வருவான். அவனுக்கு ஓ.கேன்னா நாளை மறுநாள் அவங்க பெற்றோரை வரச் சொல்லலாம். நீ ஏதாவது பண்ண அம்மாவை சமாதானப்படுத்த முடியாது” ஜோ கூற, மான்விழி அதிர்ந்து “அத்தை” அழைத்தார்.
ஜோவை திரும்பி பார்த்துக் கொண்டே ரிஷி செல்ல, அவனை முறைத்து நின்றாள் தன்வி.
ஸ்ரீநிதி கண்ணீருடன் எட்டெடுத்து நடந்தாள்.
“இதுக்கு நான் முடிவை கொண்டு வாரேன்” மனதில் எண்ணியவாறு தன்வி தன் குடும்பத்துடன் நகர்ந்தாள்.
ஜோவும் ஸ்ரீநிதியும் வெளியே வந்தனர். அவள் நின்று கோவிலை பார்த்தாள்.
அக்கா..
புகழ் இருக்கிற மாதிரியே இருக்குடா..
“அக்கா நாம அவனோட நிறைய முறை சேர்ந்து வந்திருக்கோம். அதான் உனக்கு அப்படி தோணுது. வா அம்மாவை சமாதானப்படுத்தணும்” அவளை அழைத்து சென்றான். அவள் திரும்பி பார்த்துக் கொண்டே சென்றாள்.