தாரகை 34

ஸ்ரீநிதி ரிஷி அறைக்கு சென்று அவனை பார்த்தாள். அவன் படுக்கையில் குப்புற விழுந்து கிடந்தான்.

“ரிஷி” ஸ்ரீநிதி அழைக்க, சீற்றமுடன் திரும்பி அவளை பார்த்தான்.

கண்கள் சிவந்து கோபமுடன் முறைக்கும் அவனை பார்த்தாள்.

“எதுக்கு வந்த? அப்படியே அவன் வீட்டுக்கு போயிருக்க வேண்டியது தான?” கேட்டான்.

நான் எப்படி அவன் வீட்ல இருக்க முடியும்?

“அதான் நிச்சயம் செய்து மோதிரமெல்லாம் போட்டு விட்டிருக்கானே! தாலிய கழுத்துல்ல வச்சிட்டு எதுக்கு இந்த வேலையெல்லாம்? என்னை கொன்னுட்டு நீ எவனையும் கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தான?” சீறினான்.

“கொன்னுட்டா? நானா? உங்களையா?”

ஆமா, நான் செத்தா தான அவனை எளிதாக கல்யாணம் பண்ணிக்க முடியும்..

நான் மறுமணம் பண்ணனும்ன்னா நீ சாக தேவையில்லை. விவாகரத்து செய்து பண்ணிக்கலாம்.

“விவாகரத்தில் அன்று போல் மீண்டும் சைன் பண்ணீட்டியா?” மனம் வலிக்க வேதனையுடன் அவன் வார்த்தைகள் வந்தது.

“நான் சைன் எதுக்கு போடணும்? அதான் அவங்க போட்டுக்கிட்டாங்களே!” ஸ்ரீநிதி கண்ணீருடன் அவனை பார்த்தாள்.

ஸ்ரீநிதி அவனை பார்க்க, “நீ தான் நிச்சயம் பண்ணீட்டு வந்துருக்கேல்ல. போ” கோபமாக அவன் நகர, ஸ்ரீநிதி அவனை அணைத்து “நாம நீங்க சொன்ன மாதிரி ப்ரெண்ட்ஸா இருப்போம்”.

அவன் அவளை நகர்த்தி விட்டு, “என்ன சொன்ன?” மேலும் அவன் திட்டத் தொடங்கும் முன் ஷாலினிக்கு புகழ் மோதிரம் போடுவதை காட்ட,

புகழ் ஷாலினி….. “ஸ்ரீ ஷாலினிக்கு தாலி கட்டியவன் புகழ் தானா?” சிரித்தான். ஆனந்ததில் கண்ணீரும் வந்து விட்டது. ஸ்ரீநிதியை ரிஷி அணைத்தான்.

“நீங்க ஏதாவது என்னிடம் சொல்லணுமா?” கேட்டாள்.

“இல்லை” புன்னகையுடன் அணைத்தான். ஸ்ரீநிதி அமைதியாகி விட்டாள்.

புகழும் தன் வீட்டிற்கு சென்று விட்டான்.

ஒரு வாரத்திலே கோலாகலமாக புகழமுதனுக்கும் ஷாலினிக்கும் திருமணம் நடந்தது. இத்தனை நாள் எங்கு சென்றாலும் மாஸ்க்குடன் தான் இருந்திருப்பான் புகழ். இன்று அதை கழற்றி எறிந்து விட்டு அன்று அவன் தப்பியதையும் தன் குடும்பத்துக்காக மறைந்திருந்து உதவியதாக பத்திரிக்கையாளர்களை அழைத்து கூறினான்.

ரிஷி வாட்ச்சை கை காட்ட, புன்னகையுடன் நகர்ந்து விட்டான் புகழ்.

“என்னாடா?” ரிஷியும் ஜோவும் அவனிடம் வந்தனர்.

வேண்டாம்டா. இது தவறானவங்க கைக்கு சென்றால் நிக்கோலஸ், ஜேடு போல கொன்றுவானுக. இதை விட நானும் ஸ்ரீயும் சேர்ந்து செய்த ஆடை டிசைனிங் வொர்க் முடிந்து விட்டது. அதை போல ஏதாவது செய்யலாம் என்று கழன்று கொண்டான்.

நளினி ஷாலினியை நெருங்கி, “நிதுவை புகழ் இனி காதலிக்க வாய்ப்பில்லை. புகழை தப்பா எடுத்துக்காத” அவர் கூறிக் கொண்டிருக்க..

“வா ஷாலூ, நாம நடனம் ஆடலாம்” அவளை கையுடன் இழுத்து சென்று நடனமாடி அவன் முத்தத்தை காதலாக பரிசளித்தான் புகழ். மனநிம்மதியுடன் ஷாலினி தன் அண்ணனை பார்த்தாள். அவர் கண்கலங்க தன் தங்கையை பார்த்தார்.

“தனு நாம மேரேஜ் பண்ணிக்கலாமா?” ஜோ தன்வியிடம் கேட்டான்.

“இப்ப முடியாது. வாடி” நளினி எப்போதும் போல இருவரையும் பிரித்து ஜோவை பார்த்து கண்ணடித்து சென்றார்.

இந்த ஆன்ட்டிக்கு இருந்தாலும் குசும்பு அதிகம் தான். சிரித்தான் அவனும்.

அனைவருக்கும் நாட்கள் நன்றாக சென்றது.

பவிதாவையும் ஜெய்யையும் சந்திக்க வைத்து அவர்களையும் சேர்த்து வைத்தான் புகழ்.

நளினியையும் மேக்ஸ் சாரையும் அடிக்கடி சந்திக்க வைத்தனர் ஜோ, தன்வி, தர்மேந்திரன். நளினியும் அவருடன் நன்றாக பேசி வந்தார்.

ரிஷிக்கான இறுதி கட்ட இசைப்போட்டி வந்தது.

அதிகாலையிலே கண் விழித்த ரிஷி தன்னை அணைத்து உறங்கிக் கொண்டிருக்கும் மனைவியை பார்த்து, “வர வர ரொம்ப நேரம் கழித்து தான் எழுந்திருக்கிற? சோம்பேறி ஆகிட்ட” கூறியவாறு அவளை நகர்த்த, அவள் அவனை இறுக்கமாக பிடித்திருந்தாள்.

ஸ்ரீநிதி நெற்றியில் முத்தமிட்டு அவளது கையை எடுக்க முயன்றான். ரிஷி அலைபேசி ஒலித்தது.

எடுத்து பார்த்து, “புகழா? இந்த நேரத்துல்ல கால் பண்ணி இருக்கான்?” சிந்தனையுடன் எடுத்தான். ஸ்ரீநிதிக்கு உறக்கம் களைந்தது.

ரிஷிக்கு வாழ்த்து கூறி விட்டு, “ரிஷி நீ இதில் வெற்றியடைந்தால் உனக்கு ஒரு சர்பிரைஸ் இருக்கு” என்றான் புகழ்.

“சர்பிரைஸா? என்னடா பண்ணப் போற?” ரிஷி கேட்க, “சிரிப்புடன் அது சஸ்பன்ஸ்” என்றான்.

“சரி. மூடிட்டு வை. நான் தயாராகணும்” ரிஷி புன்னகையுடன் அலைபேசியை வைத்து விட்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீநிதியை பார்த்தான்.

என்ன ஸ்ரீ?

“ஆல் தி பெஸ்ட் ரிஷி” மீண்டும் அவனுள் புதைந்து கொண்டாள் கண்ணீருடன்.

ஹே, நம்ம சென்னைல்ல தான் நடக்கப் போகுது. முடிந்தவுடன் வீட்டுக்கு வந்திருவேன். எதுக்கு அழுற?

சந்தோசம் தான். உங்க வாழ்க்கையின் முக்கியமான கட்டம். இதை கடந்து விட்டால் நீங்க விரும்பும், விரும்பப் போகும் அனைத்தும் கிடைக்கும்.

“எனக்கு எதுவும் வேண்டாம். நீ வருவேல்ல?” ரிஷி ஸ்ரீநிதியை பார்க்க, புன்னகைத்தாள்.

“குட் என்னோட வர்றீயா?”

இல்ல, புகழ் ஷாலூவோட வாரேன்.

“ம்ம்! நான் தயாராகிட்டு வாரேன்” உற்சாகமுடன் குளியலறைக்குள் புகுந்தான்.

ஸ்ரீநிதி கண்ணீருடன், “உங்களுக்கு பிடிக்காது எதுவும் உங்களுக்கு வேண்டாம்” அழுது கொண்டே தலையணையில் முகம் புதைத்தாள்.

“அவள் உறங்குகிறாள்” என்று எண்ணி அவன் கிளம்பி சென்று விட்டான். அவன் அறைக்கதவை சாற்றவும் எழுந்து குளியலறைக்கு சென்றாள்.

மக்கள் கூட்டம் அவ்வரங்கத்தை நிறைத்திருந்தது. நம் ரிஷியின் போட்டியாளன் தன் பாடலை பாடத் தொடங்கினான்.

பிரப்போர்சல் தீம் என்பதால் இன்றே என்னோட ஸ்ரீ மீதுள்ள காதலை பாடலாக பாடி அனைவர் முன்னும் தெரிவிக்கப் போகிறேன் என்று மகிழ்ச்சியுடன் இருந்தான் ரிஷி.

ரிஷி மேடை ஏறினான். திரையின் பின்னே ஸ்ரீநிதி, ரிஷி, அவர்களின் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படத்தை ஓட விட்டான் ஜோ.

இது என் மனைவி ஸ்ரீக்கான பாடல். அவளுக்காக நான் பாடல் பாடப் போகிறேன். எல்லாரும் கேட்க தயாரா?

ஸ்ரீ, நீ இங்க தான் எங்கிருந்தோ பார்த்துட்டு இருக்கன்னு தெரியும். உன்னிடம் நான் இதுவரை என் காதலை கூறியதில்லை. ஆனால் இன்று கூறப் போகிறேன்..

நீ எனக்காக என் கனவுக்காக உன் கனவு, ஆசை அனைத்தையும் துறந்தாய்.

“உனக்கான முதல் பரிசு…”

மைக் முன் நின்று கிதாரை ப்ளே செய்து பாடத் தொடங்கினான் ரிஷி.

 “இருவிழி பாதையில் காத்திருந்தேன்

  இந்த தாமதம் ஏனோ நிலவே!

தலையணை தூக்கத்தை நான் தொலைத்தேன்

  என் கண்களில் இல்லை கனவே!

  புல்வெளி கூட்டத்தில் நீ திரிந்தாய்

  ஓர் பூச்செடி போலே தனியே!

  இடம்பொருள் யாவுமே மறந்து விட்டேன்

   நீ எந்தன் உலகம் இனியே!

  இவன் போலே ஓர் இன்பதுன்பமோ யாரோ’

 மதில்மேலே பூனையாகிறேன் நானே!

    ………………………………………………

   ஒருநாள் நடந்ததெல்லாம் மீண்டும் வாராதோ..

   அருகே நீ இருந்தும் ஆசை தீரதோ..

  வெண்ணிறம் மேகம் தன்னாலே

  தூறலை பொழியுது உன்னாலே

    மீன்கள் கண்ணாலே

    தூண்டிலை திருடிப் போனாலே! …..ஏ…ய்..

தனியே உன்னை காணும் போது தலைமேல் அந்த வானமேது

விழியில் வந்து போன போது              விளக்கம் சொல்ல                     வார்த்தையேது

திரும்புமெல்லாம் திசையானாய் தித்திக்கின்ற விசமானாய்

நினைவால் எந்தன் வசமானாய் நெஞ்சுக்குள்ளே இசையானாய்

 என் கைரேகை

உன் கூந்தல்கீறல்கள் தானே!

மறவேனே..

உயிர் வாழும் நாள்வரை…

எந்தன் நெஞ்சம் பட்டாம்பூச்சி வட்டம்போடுதே

 உனை முதல் முதல் பார்த்த நொடியே

இரட்டை கண்ணும் கட்டிப் போட கட்டம் கட்டுதே

 உன் முகவரி என்ன அடியே!

மியூசிக்குடன் அழகான பாடல் வரிகளை முடித்து ரிஷி அக்கூட்டதை பார்த்து கையை நீட்டினான்.

அரங்கமே அதிரும் அளவு கரகோசம் எழுந்தது. அவன் கையை இறக்காமல் அப்படியே வைத்திருக்க ஜோ தன் அக்காவை தேடினான். ஸ்ரீநிதி அங்கே இல்லை..

அரக்கப்பறக்க வியர்த்து ஒழுகி மேடையை அடைந்த புகழமுதன் மூச்சை இழுத்து இழுத்து விட்டான்.

ரிஷி கையை இறக்கி அவனை பார்க்க, “புகழ் நீ வர்ற? நிது எங்க?” ஜோ கேட்டான்.

கண்கலங்க ரிஷியை பார்த்து, “அவ போயிட்டாடா” கத்தினான்.

போயிட்டாளா? ஜோ மேடையில் ஏறினான்.

“வீ ஜே” அவ்விடம் வந்தார்.

ரிஷி ஸ்ரீ உன்னை விட்டு மொத்தமா போயிட்டா. பாரின் கிளம்பிட்டா. அவளுக்கு உன்னோட அப்பா தான் உதவி இருக்கார்.

“என்னடா சொல்ற?” ரிஷி புகழ் சட்டையை பிடித்தான்.

“புகழ் இங்க வந்ததுக்கு பதிலா அவளை தடுக்க போயிருக்கலாமே!” ஜோ சத்தமிட்டான்.

“தொலைக்காட்சி ஒளிபரப்பு போய்ட்டு இருக்கு சார்” அவர் கூற, “யோவ் இருய்யா” என்ற புகழ், அவ பிளைட் கிளம்பிடுச்சுடா..

எங்க?

“தெரியலடா” தலையை பிடித்தான் புகழ்.

ஜோவிற்கு அழைத்தார் சந்திரமுகன். தொலைக்காட்சி வழியாக அவர்களின் குடும்பத்தினரும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

“ஐய்யோ போச்சு! ஸ்ரீக்கு அவளது குழந்தை பற்றிய விசயம் தெரியாது” புகழ் கூற, “என்னடா சொன்ன?” ஏற்கனவே கோபத்தில் இருந்த ரிஷி சத்தமிட்டான்.

எல்லாம் உன்னோட தப்பு தான் ரிஷி. முன்பே அவளிடம் காதலை கூறி இருந்தால் அவ போயிருக்க மாட்டா. இப்ப குழந்தை..

குழந்தை தான் அன்றே கலைந்து விட்டதே!

ஆமா, ஒரு கருவுக்கு தான் பாதிப்பு. மற்ற கரு நல்லா தான் இருந்தது.

ரிஷி சினமுடன், ஏன்டா எங்களிடம் சொல்லவில்லை?

சொன்னால் உன் காதலுக்கு மதிப்பில்லாமல் போயிருக்கும். ஸ்ரீயோட காதல் எல்லாருக்கும் தெரியும். அவளே குழந்தைக்காக தான் கூடவே இருக்கன்னு உன்னை தப்பா நினைச்சிட்டு இருந்திருப்பா.

“மாமா அக்கா ஏர்ப்போர்ட்டுக்கு வரலையாம். அங்கிள் அக்காவை தேடிட்டு இருக்கார்” ஜோ சொல்ல, “என்னடா சொல்றீங்க? இவன் ஒன்று சொல்றான்? நீ ஒன்று சொல்ற?” சீறினான் ரிஷி.

அப்போது..

“என்ன தம்பி சௌக்கியமா?” குரலில் அங்கிருந்த அனைவரும் ஒலிப்பெருக்கியை பார்த்தனர்.

நெற்றியை தேய்த்த ரிஷி…. “ஏய் பாலா, எங்கடா என்னோட ஸ்ரீ?”

பரவாயில்லை உனக்கு எந்த விளக்கமும் தேவையில்லை. வா..உன்னோட ஸ்ரீயை பார்க்கணும்ன்னா வா..சீக்கிரம் வா..

அவ உயிரோட இருப்பா. உன் குழந்தை?

ஏற்கனவே சாவை பார்த்துட்டு திரும்பிருச்சு போலடா உன்னோட குழந்தை.

“அய்யோ பாவம்! மறுபடியும் சாகப் போகுது” அவன் சொல்ல, அரங்கமே அதிரும் வண்ணம் கத்தினான் ரிஷி.

ஸ்ரீ..ஸ்ரீ..புகழ் அழைக்க,

“அமுதா நீயும் வரணும் இல்ல உன்னோட பொண்டாட்டி பழைய நிலைக்கு தான் ஆகணும். அப்புறம் என்னோட சின்ன மச்சான் அங்க தான் இருக்கீங்கன்னு நினைக்கிறேன். நீங்களும் வந்திருங்க.

தனு, அன்று எல்லாரும் முன்னும் அவமானப்படுத்திட்டா. இப்ப நான் அவளை என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். பாவம் அவங்க எல்லாரும் மயக்கத்துல்ல இருக்காங்க…சீக்கிரம் வாங்க” சொல்லி பேச்சு நின்று விட்டது.

மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். கிஷோர் அழைக்க, புகழ் அலைபேசியை எடுத்தான் பதட்டமாக.

ஏற்கனவே நிது அலைபேசியில டிராக்கிங்க சிக்னல் வச்சிருந்தோம்ல்ல அது ஆன்ல்ல தான் இருக்கு என்று பொண்ணுங்க இருக்கும் இடத்தை கூற, மறுநிமிடம் மூவரும் பைக்கில் பறந்தனர்.

வெற்றியாளராக ரிஷியை தான் அறிவித்தனர். அரங்கத்தின் மத்தியில் ஆரவாரம் எழுந்தது. அவன் தன் மனைவிக்காக தானே சென்றான். அதனால் அனைவரும் காத்திருந்தனர்.

இவர்களின் விசயம் மக்கள் மத்தியில் பேசப்பட்டது. குழந்தை இன்னும் உயிரோட இருக்காம். அந்த பொண்ணுக்கே தெரியல. எதுக்கு மறைச்சிருக்காங்க? பேச்சு நீண்டு கொண்டே சென்றது.

பசங்க கிஷோர் கூறிய இடத்திற்கு வந்தனர்.

பவிதா, தன்வி, நளினி, ஷாலினியை கட்டி போட்டு வைத்திருந்தனர். அடியாட்கள் அவர்களின் முன் நின்று கொண்டிருந்தனர்.

ரிஷியின் கண்கள் தன் மனைவியை தேட, மாடியின் மேலிருந்து

“வாடா….அது என்னமோ ஸ்ரீ என்னை கவர்ந்து விட்டாள். அவள் எனக்கு மனைவியாக வேண்டும்” என்றான்.

“பிளாஸ்டர்…வாட் த?” சினமுடன் கெட்ட வார்த்தை பேசிக் கொண்டே அவனை தாக்க ரிஷி முன்னே செல்ல, அவனை நான்கைந்து பேர் பிடித்தனர்.

புகழ் வந்தவுடன் ஷாலினியை தான் பார்த்தான்.

“மீண்டும் தவறாக நடந்தால் அவள் மனம் என்னவாகும்?” அவனும் அதற்காக தான் அவளை விட்டு தள்ளியே இருக்கிறான். அவள் தான் முதலில் விழித்தாள்.

“ஷாலூ” புகழ் அவளிடம் ஓட, அவனையும் பிடித்தனர்.

ஷாலினி தன்னோடு கட்டிட்டு மயங்கி இருந்தப்பவர்களை பார்த்தாள்.

“யாருடா நீங்க?” அவள் கேட்ட போது தான் அவளருகே பதட்டமாக அவள் கணவன் வருவதையும் அவர்கள் அவனை பிடிப்பதையும் பார்த்தாள்.

ரிஷியை “ஒத்துடா” மேலிருந்து குதித்து புகழ் அருகே வந்து, “அன்று கோவில்ல வச்சி என்னை அடிச்சது நீ தான?” புகழ் வயிற்றில் குத்தினான்.

“வேண்டாம் வேண்டாம்” அவரை விட்ருங்க பதறினாள் ஷாலினி.

பூபாலன் கண்டுகொள்ளவேயில்லை.

புகழை அவன் மேலும் அடிக்க, அவனிடம் பாய்ந்து கொண்டு வந்தான் ஜோ.

அவன் கழுத்தை பிடித்த பூபாலன், “பொடிப்பயன்டா நீ? நீ என்னை மிரட்டுறீயா? ஸ்ரீ உன்னோட அக்கானு தான் அமைதியா இருந்தேன்”.

ஸ்ரீ எங்கடா?ஸ்ரீ..ஸ்ரீ..ஸ்ரீ.. கத்தினான் ரிஷி.

“ரிஷி” அழைத்துக் கொண்டே ஷாலினி மேலே பார்த்தாள். கண்ணாடி அறையில் படுக்கையில் மயக்கத்தில் இருந்தாள் ஸ்ரீநிதி. அதை டீவியில் போட்டு காட்டினான் பூபாலன்.

சிவப்பான பொருட்கள் நிறைந்திருந்த அவ்வறையில் நிறைய சிவப்பு ரோஜாக்கள்..

“அவள விட்ரு” அப்பங்களாவை சுற்றி பார்த்தான் ரிஷி.

“விடணுமா? என்னோட சித்தி போல இவளை விட முடியாது. எனக்கு ஸ்ரீ வேண்டும்” பைத்தியம் போல கத்தினான் பூபாலன்.

பவிதா, தனு, நளினி விழித்தனர்.

“அவ உன்னை காதலிக்க மாட்டா. ஸ்ரீயை விட்ரு” புகழ் கூற, “காதலிக்க மாட்டாளா?” சத்தமாக சிரித்தான்.

“மாட்டாளா? இப்ப எப்படி அவளே என்னிடம் வர்றான்னு பாக்குறீயா?” என்று ஷாலினியை நெருங்கிய அவனை பளாரென அறைந்தார் நளினி.

இங்க பாருங்க. நான் உங்க பக்கம் வரல..

“ஸ்ரீயை வலுக்கட்டாயமாக உன்னுடன் வைத்தால் அது காதலாகுமா?” அவர் சத்தமிட்டார்.

ஸ்ரீ என்னை காதலிப்பா. காதலிக்க வைப்பேன்..

டேய்..சீற்றமுடன் கர்ஜித்தான்.

சிலர் கையில் கத்தியுடன் வந்து நளினியை மிரட்டி அமர வைத்தனர். அதே சமயம் பூபாலன் ஷாலினி, தனு முடியை பிடித்து இழுத்து ஸ்ரீ இருக்கும் அறைக்கு எதிரே இருந்த அறைக்கு இழுத்து சென்றான்.

“பாலா தப்பு பண்ற? ஷாலு, தனுவை விட்ரு” ரிஷி சீறினான்.

“விடுடா” பெண்கள் பூபாலனை அடிக்க, தன்வியை ஓங்கி அறைந்தான் பூபாலன். தனு அவன் கையிலே மயங்கி சரிந்தாள்.

புகழும் ஜோவும் கொதித்தனர். அவர்களை பிடித்திருந்தவர்களை நகர்த்த இருவரும் போராடிக் கொண்டிருந்தனர்.

ஸ்ரீநிதிக்கு விழிப்பு தட்டியது.

மயங்கிய தனுவை தூக்கி தோளில் போட்டு, ஷாலினியை இழுத்து அவன் செல்ல, “புள்ளைங்கள விடுடா” சந்திரமுகன் சத்தமிட்டார்.

“வாங்க வாங்க..உங்களையும் எதிர்பார்த்தேன்” அவன் பேச, அதிரடியாக உள்ளே நுழைந்தனர் தர்மேந்திரனும் மேக்ஸ் சார் சுகிவர்தனும்.

தன் பொண்ணை பார்த்த தர்மேந்திரன் கீழே கிடந்த பாட்டிலை எடுத்து குறிவைத்து பூபாலன் மீது எறிந்தார். அது அவன் தலையில் பட்டு இரத்தம் கசிந்தது. அவன் ஷாலினி, தனுவை விட்டு தலையை பற்றி அலறினான்.

“டேய் எல்லாரையும் பிடிச்சி கட்டுங்கடா” பூபாலன் சத்தமிட்டான்.

ஆட்கள் எல்லாரையும் பிடித்து கட்டினார்கள். சுகி சார் நளினியை பார்த்ததும் கட்டை அவிழ்த்து விட்டுருப்பார். அவரையும் பிடித்து கட்டினார்கள்.

சந்திரமுகன் அவர்களை தடுத்து சண்டை போட, ஒருவன் அவரை கட்டையால் தாக்கி மயக்கமாக்கி விட்டான்.

ஸ்ரீநிதி எல்லாவற்றையும் திகைத்து பார்த்தாள்.

“நிது  நீ வெளிய வா. இங்கிருந்து போயிரு” ஷாலினி சத்தம் போட்டாள்.

பூபாலன் ஸ்ரீநிதியை பார்த்து விட்டு, அவன் காலில் சொருகி வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மேலே சுட்டு ஷாலினியை தன் பக்கம் இழுத்து அவளது நெற்றியில் துப்பாக்கியை வைத்து இழுத்து சென்றான்.

“ஷாலூ” புகழ் கண்ணீருடன் சத்தம் போட, “அவனோட வாயை உடைங்கடா” சத்தமிட்டு அவளை அறையில் தள்ளி கதவை அடைத்து ஒருவனிடம் கண்ணை காட்டினான்.

புகழை இரத்தம் சொட்ட சொட்ட சிலர் அடிக்க,

மற்றவர்கள் “வேண்டாம்” சத்தம் போட்டனர்.

பூபாலன் கண்ணை காட்டியதும் ஒருவன் ஷாலினியை வைத்திருக்கும் அறைக்குள் சென்றான்.

ஸ்ரீ, என்னை பாரேன். எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். நீ என்னோட மனைவியா வாழணும். எனக்கு நீ உனக்கு நான் போதும். வேற யாருமே வேண்டாம்.

“நீ ஒத்துக் கொண்டால் இவங்க எல்லாரும் முக்கியமாக அந்த பொண்ணு” என ஷாலினி அறைப்பக்கம் கையை காட்டி,

“அவ பத்திரமா அவ புருசன்கிட்ட போயிடுவா  இல்லை டேய்….” பூபாலன் சத்தம் கொடுக்கவும் ஷாலினி உடலில் இருந்த புடவை தூக்கி எறியப்பட்டது. அவள் கதறியவாறு அப்படியே அமர்ந்து புகழை அழைத்தாள். புகழுக்கு உயிரே போனது போல ஆனது..

“ஷாலூ” அவன் இரத்தமுடன் தன் மனைவியை பார்த்து துடித்தான்.

ஸ்ரீநிதி அழுது கொண்டே எல்லாரையும் பார்த்து தன் கணவன் ரிஷியை பார்த்தாள்.

“கண்ணாடியால் சூழப்பட்ட இப்பங்களாவில் தப்ப வழி கிடைக்குமா?” நோட்டமிட்டுக் கொண்டிருந்தான் ரிஷி.

“பொறுக்கி நாயே! சின்ன பொண்ணு மேல கையை வைக்கிற?” சினமுடன் பவிதா ஷாலினியை காக்க, மாடியேற அவளை இழுத்து தன் துப்பாக்கியை அவள் கழுத்தில் வைத்தான்.

“நீ ஓவரா பேசுற? நான் தான் என்னோட ஸ்ரீயிடம் பேசிட்டு இருக்கேன்ல்ல? சத்தம் போடுவ” அவன் துப்பாக்கியை அழுத்த,

“வேண்டாம். நான் ஒத்துக்கிறேன்” ஸ்ரீநிதி குரலில் அனைவரும் அதிர, வேதனையுடன் ரிஷி தன் மனைவியை பார்த்தான்.

அதுக்கு முன்னாடி நான் ரிஷிகிட்ட பேசணும்.

ரிஷி, நீங்க இதுவரை என்னிடம் காதலை சொல்லவே இல்லை. உங்களால வாழ்நாள் முழுக்க சொல்ல முடியாதுன்னு தான் அங்கிள் உதவியோட பாரின் போக எண்ணினேன்.

ஆட்டோவில் வைத்து உங்க நிகழ்ச்சியை பார்த்தேன். நீங்க எனக்காக பாடிய பாடல். எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்தது. என் ஆசை போல நீங்க காதலை சொல்லீட்டிங்கன்னு தான் போவதை விட்டு உங்க நிகழ்ச்சி நடக்குமிடத்துக்கு வர ஆட்டோவை திருப்ப சொல்லி வந்து கொண்டிருந்தேன். ஆனால் அதற்கு இவன் இடையில் வந்துட்டான்..

“சாரி ரிஷி. என்னால யாருக்கும் எந்த பாதிப்பும் வரக் கூடாது” ஸ்ரீநிதி சொல்ல, அழகி, பனிமலர், பாட்டி, மான்விழி வந்தனர்.

ஸ்ரீநிதி ரிஷியிடம் பேச தொடங்கும் போதே பூபாலன் அவளறை நோக்கி வர தொடங்கினான்.

“நிது, உங்க குழந்தை சாகலை. அங்கிருந்து தப்பிச்சி வா” ஜோ சத்தமிட, சந்திரமுகனும் தன்வியும் விழித்தனர்.

“அய்யோ, என்னாச்சுங்க?” மான்விழி தன் கணவரிடம் அழுது கொண்டே வர, ஜோ சொன்னதை கேட்டு பாட்டி அதிர்ந்து நின்று கொண்டிருந்தார்.

“குழந்தைக்கு ஒன்றுமில்லையா?” ஸ்ரீநிதி கண்ணீருடன் வயிற்றை தொட்டு பார்த்தாள்.

உங்க திருமணத்தின் பின் ரிஷிக்கு உன் மீது காதல் வந்திருக்கு. அவனுக்கே அது புரிய நேரமாகிடுச்சு. வாழ்க்கையில் ஜெயித்த பின் சொல்லலாம் என இருந்தான். அதான் இன்று கூறினான்.

கண்ணீருடன் ஆசையாக தன் வயிற்றை தடவினாள் ஸ்ரீநிதி.

அந்நேரம் தன் பாக்கெட்டிலிருந்த ஊசியுடன் அவளை நெருங்கினான் பூபாலன்.

“ஸ்ரீ அவன் வேண்டாம். அவன் குழந்தையும் வேண்டாம்” பூபாலன் சொல்ல திகைத்து அவனை பார்த்து ஸ்ரீநிதி, “வேண்டாம் என் குழந்தையை விட்ரு” பின் நகர்ந்தாள்.

“எனக்கு இந்த குழந்தை பிடிக்கலை ஸ்ரீ. எனக்கு நீ மட்டும் போதும்” மென்மையுடன் கூறிக் கொண்டே அவளிடம் ஊசியை கொண்டு வந்தான்.

கண்ணாடி சுவற்றில் ஸ்ரீ ஒட்டி நின்று, இரு கையையும் கூப்பி அழுது கொண்டே “வேண்டாம்” தலையசைத்தாள்.

பூபாலன் கொஞ்சமும் இறங்காது அவள் கையில் ஊசியை குத்த வரும் நேரம் ரிஷி அவனை வேகமாக தள்ளி விட்டு ஸ்ரீ முன் வந்து நின்றான்.

“ஏய்…” அவன் கத்த, இருவருக்கும் சண்டை ஆரம்பமானது.

கிஷோர், அமரேசன், ராம் போலீஸூடன் உள்ளே வந்தனர்.

போலீஸ் துப்பாக்கியை மேல் நோக்கி சுட, கீழிருந்த ஆட்களை போலீஸார் பிடிக்க, “டேய் அவள விடாத” ரிஷியுடனான சண்டையினூடே பூபாலன் சத்தமிட்டான்.

ஷாலினி அறையிலிருந்தவன் அவளது ஆடையை கிழிக்க முற்பட, அவனிடமிருந்து தப்பி ஓடிக் கொண்டிருந்தாள் ஷாலினி.

புகழ், ஜோ, கிஷோர் வேகமாக அறையை நோக்கி ஓட, ஷாலினியின் கதறலை கேட்ட ரிஷி வேகமாக பூபாலனை தள்ளி விட்டு, ரிஷி அவன் ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து நேராக இருந்த ஷாலினி அறையை நோக்கி கண்ணை மூடிக் கொண்டு மூன்று முறை சுட்டான்.

ஷாலினியிடம் தவறாக நடந்து கொண்டிருந்தவன் இரு முறை தோட்டாவிலிருந்து தப்பி மூன்றாவது தோட்டா அவன் நெற்றியில் பட, அவன் இறந்து கீழே விழுந்தான். எல்லாரும் அதிர்ந்து ரிஷியை பார்த்தனர்.

ஷாலினி கதறிக் கொண்டே உடலை மறைக்க, புகழ் மட்டும் வேகவேகமாக மேலேறினான். அதே சமயம் “ரிஷி  கீழ வந்துருங்க” போலீஸார் சத்தம் கொடுத்தார்.

ரிஷி துப்பாக்கியை பூபாலனை நோக்கி நீட்ட, திகைப்பிலிருந்து மீண்ட ஸ்ரீநிதி “நோ ரிஷி” அவனிடம் வந்தாள்.

இவனிருந்தால் நம்மையும் நம்ம பேபியையும் சந்தோசமா வாழ விட மாட்டான்.

இவனை கொன்றால் நீங்க உங்க வாழ்க்கை கனவை தொலைச்சிருவீங்க. போலீஸ் உங்களை சிறையில் அடைச்சிருவாங்க அழுதாள்.

பரவாயில்லை ஸ்ரீ. இவன் போல இருப்பவன் உயிரோட இருந்து எல்லார் வாழ்க்கையையும் அழிப்பான். நான் உன்னையும் நம்ம குழந்தையையும் பாதுகாத்த நிம்மதியில் சந்தோசமா போயிடுவேன்.

“ரிஷி” அவனை அணைத்து, “வேண்டாம். என்னால நீங்க இல்லாம இருக்க முடியாது” அழுதாள்.

“சாரி ஸ்ரீ” அவளை ஓங்கி அடித்து மயங்க வைத்த ரிஷி மறுநிமிடம் துப்பாக்கியிலிருந்த மற்ற தோட்டாக்களை பூபாலன் மீது இறக்கினான்.

ஸ்ரீ விழித்து எல்லாரையும் பார்க்க, செத்து கிடந்தான் பூபாலன். அவ்வறையில் அனைவரும் சூழ்ந்திருந்தனர். ரிஷி கையில் கைவிலங்கு பூட்டி இருக்க, அனைவரும் அவனை அணைத்து அழுது கொண்டிருந்தனர். அவனோ ஏக்கமுடன் தன் மனைவியை பார்த்துக் கொண்டிருந்தான்.